கஃபாவின் வலது பக்கமாக இருக்கும் ஷாதர்வான் இடம் பற்றிய சுருக்கக் குறிப்பு.

شوذر
இது ஷோதர் என்ற பாரசீகச் சொல்லில் இருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும்.

அதன் பொருள் வேட்டி போன்ற ஆடை என்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புனித கஃபாவின் அடிச் சுவரின் நுணியை அது மறைத்து பலப்படுத்தி ஹாஜிகளின் கண்களுக்குப்படாதவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்த பெயர் வந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிறப்பு:
மகாமு இப்ராஹீமுக்கு முன்னால்   கஃபாவின் ஓரத்தில் இருக்கும் இந்த இடத்தில்தான் வானவர் ஜிப்ரீல் (அலை) மூலமாக 
நபி (ஸல்) அவர்களுக்கு ஐவேளைத் தொழுகை முறை நேரம் பற்றி விளக்கப் பாடம் இரு தடவைகள் போதிக்கப்பட்டது என்பது இதன் முக்கிய சிறப்பாகும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் மக்களவை ஆட்சி செய்த காலத்தில் இதனை அடையாளப்படுத்தி கட்டினார்கள். அதில் பதிக்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க
Alabaster வகை சார்ந்த வெண்ணிற மாபிள்களால் இது உண்டாக்கப்பட்டிருப்பதுடன்,
பல்வேறுபட்ட நிறங்களைக் கொண்ட 
 பெறுமதிமிக்க  மாணிக்க  கற்கள் எட்டுத் துண்டுகள் இதில் பதிக்கப்பட்டுள்ளது. அது 
 கிட்டத்தட்ட 800 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதாகும்.

அவை அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்மன்சூரால் அன்பளிப்பு செய்யப்பட்டதாகும்.

குறிப்பு: 
-------
நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் புனித கஃபாவைக் கட்டிய போது கட்டடக் கலவை குழைத்ததைக் காரணம் காட்டி அதற்கு معجن #மஃஜன்  என்று வரலாற்றில் கூறப்பட்ட போதும் நாம் எடுத்தெழுதியதே  சரியான கருத்தாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

அழகிய நமது வரலாற்றினை நாம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?


தமிழில்: எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி


 கீழ் உள்ள படத்தில் விபரம் உண்டு.



أحدث أقدم