அஸருடைய தொழுகைக்குப் பின் தூங்குவதால் புத்தி பேதலித்துவிடும். அவ்வாறு ஏற்றபட்டால் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்.
இந்த செய்தி ஆதாரபூர்வமானதா ?
இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்பதனை இமாம் இப்னுல் ஜௌஸீ அவர்கள் தனது
அல் மௌழூஆத் ( 3/69 ) எனும் கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
அதே போன்று இமாம் ஸுயூதி அவர்கள் தனது அல்லஆலி அல்மஸ்னூஆ பில் அஹாதீஸில் மௌழூஆ
( 2/279 ) எனும் கிரந்தத்திலும் கூறியுள்ளார்கள்.
இதனை இமாம் தஹபி அவர்களும் தமது தர்தீபுல் மௌழூஆத் (839) எனும் கிரந்தத்தில் கூறியுள்ளார்கள்.
-முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி