- அஷ்-ஷெய்க். முஹம்மது பின் ஹிஸாம் அல்-யமானி حفظه الله
அல்லாஹு தஆலா அர்ஷின் மீது உயர்ந்துள்ளான்.
அல்லாஹ் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளான் என்பது அசத்தியமான கொள்கையாகும்; மேலும் இது (வழிகெட்ட) ஸுஃபிய்யாஹ், அஷாயிரா, முஃதஸிலா ஆகியோரின் கொள்கையாகும்.
அல்லாஹு தஆலா கூறுவதாவது :
ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ
வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.
(அல்குர்ஆன் 67:16)
ٱلرَّحۡمَٰنُ عَلَى ٱلۡعَرۡشِ ٱسۡتَوَىٰ
அர்-ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் 20:5)
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِ...
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்...."
(அல்குர்ஆன் 7:54)
அல்லாஹ்வுடைய அறிவு அனைத்தையும் சூழ்ந்துள்ளது; அவன் யாவற்றையும் அறிந்தவன்.
"உயர்ந்திருத்தல்'' என்ற பண்பானது அவனது ذات எனும் உள்ளமையோடு தொடர்புடையது.
நபி ﷺ அவர்களது இஸ்ரா வல்-மிஃராஜ் நிகழ்வானது அல்லாஹு தஆலா மேலே இருக்கிறான் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.
இந்த பூமியிலுள்ள அசுத்தமான இடங்களில் இருப்பதை விட்டும், அவனது படைப்பினங்களோடு கலந்திருப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
(நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கின்றான்.) பின்னர், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவித்து (அதற்குரிய கூலியைக் கொடுக்கின்றான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 58:7)
- மேற்கண்ட இறை வசனத்தின் விளக்கம் என்னவென்றால், "அல்லாஹ் அவர்களுடன் அவனது அறிவு, பார்வை, மற்றும் கண்காணித்தலுடன் இருக்கிறான்'' என்பதாகும்; இப்படித்தான் ஸஹாபாக்களும், தாபியீன்களும் விளக்கம் அளித்துள்ளார்கள்.