சிலருக்கு தினமும் *தஹஜ்ஜுத் ஸலாத்துக்கு* நள்ளிரவில் எழும் திறன் இருக்கும், ஆனால் சிலரால் அதிக முயற்சி செய்தாலும் எழுந்திருக்க முடியாது.
இருப்பினும், அவர்கள் ஆண்டு முழுவதும் *திங்கள் மற்றும் வியாழன்களில்* நோன்பு இருப்பார்கள்.
மற்றவர்கள் மேலே சொன்ன இரண்டையும் அவர்களால் செய்ய முடியாது, ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும், *யாசகர்களுக்கு தாராளமாக* கொடுப்பார்கள்.
சிலருக்கு கூடுதல் இபாதாவைச் செயல்படுத்த பலம் இருக்காது, ஆனால் எப்போதும் சக மனிதர்களிடம் *தூய இதயத்தையும் சிரித்த முகத்தையும்* கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் *குழந்தைகளை சந்திக்கும்போதெல்லாம் அவர்களை மகிழ்ச்சியாக வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள்*
*இதிலிருத்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?*
*நீங்கள் செய்வதை செய்யாதவர்கள், உங்களை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லது வழங்குவதற்கு அவர்களிடம் எதுவும் இல்லாதவர்கள் என்று நினைக்காதீர்கள்.*
*உங்கள் நன்மையான செயல்கள் மற்றவர்களை விட சிறந்தவை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்*.
*உங்கள் இறையச்சம் உங்களுக்குள் நுட்பமான பெருமையை வளர்க்க அனுமதி்காதீர்.*
*உங்கள் பெருமை உங்களை உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் நண்பர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.*
*உங்கள் வம்சாவளி, செல்வம், புலமைத் திறன்கள், தோல் நிறம், போர்க்களத்தில் வலிமை ஆகியவை உங்களின் பக்திக்கு அளவுகோல் அல்ல.*
*ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, சீனா மற்றும் உலகின் பிற நாடுகளில் உங்களை விட அல்லாஹ்விடம் நெருக்கமாக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உங்களை விட அதிக கஷ்டங்களை தாங்கி, சோதனைகளை சமாளிக்கும் நிலையில் வைக்கிறார்கள்.*
*உங்கள் தோற்றமும், அணியும் ஆடையும் உங்களின் பக்திக்கு அளவுகோல் அல்ல.*
*சாதாரணமானவர்களாக இருந்தாலும், சாதாரணமானவர்களாக தோன்றினாலும், அல்லாஹ்வின் அருளின் அருகில் இருப்பவர்கள் உலகில் பலர் உள்ளனர்.*
*எந்த ஒரு ஜமாஅத் அல்லது எந்த ஒரு சமூக சேவை நிறுவனத்துடன் நீங்கள் இணைந்திருந்தாலும், அது உங்கள் அகங்காரத்தையும் பெருமையையும் வளர்க்கும் ஒரு கருவியாக இருக்க விடாதீர், மற்றவர்களை நீங்கள் தாழ்வாகப் பார்க்கக் கூடாது.*
*மேற்கூறிய எந்த நன்மையான விஷயத்திலும் தொடர்பில்லாவிட்டாலும், இதயம் தூய்மையாக இருக்கும் பலர் உள்ளனர்.*
*இஹ்லாசோடு, தூய எண்ணத்தோடு செய்யப்படாத நற்செயல்கள் சொர்க்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் தானியங்கி பாஸ்போர்ட்கள் அல்ல.*
*நாயின் தாகத்தைத் தணித்தன் மூலம் ஒருவர் சொர்க்கத்தை பெற்றார். மற்றொருவர் தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அனைவரையும் மன்னிப்பதன் மூலம் சொர்க்கத்தைப் பெற்றார்.*
*அவர்களிடம் வெளி உலகத்திற்கு காட்டுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது அல்லாஹ்வுக்கு முக்கியமானது.*
*நாம் வாழும் பூமியில் முக்கியமற்றவர் என்று பலரால் கருதப்பட்ட ஒருவர், சொர்க்கத்தின் வாயில்களை எளிதாக அடையலாம். அதிகமான நற்செயல்களை செய்த சிலர், தங்கள் ஆணவம் மற்றும் பெருமையினால் அழிந்து போகலாம்.*
*நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நபர், எங்களை சொர்க்கத்தின் நுழைவாயில் வழியாக அழைத்துச் சென்றால் அதற்காக நாங்கள் ஆச்சரியப்பட தேவையில்லை.*
*எப்போதும் பிறரிடம் உள்ள நல்லதையே பார்ப்போம்*