பிஜே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல

- முஃப்தி உமர் ஷரீஃப் 

பிஜே அவர்களோடு நமக்கு தனிப்பட்ட எந்த பகைமையும் இல்லை. அவரின் தனிப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் நாம் பொது வெளியிலோ தனிப்பட்ட முறையிலோ விமர்சனம் செய்தது இல்லை. அல்லாஹ் என்னை அதிலிருந்து பாதுகாப்பானாக!

அவர் உருவாக்கிய அவரின் இயக்க வாதிகள் அவரை, கேட்க காது கூசும் அளவிற்கு விமர்சனம் செய்தார்கள். இன்னும், அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்கு யாருடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேச அனுமதி இல்லை. ஆகவே நாம் பேச மாட்டோம் இன் ஷா அல்லாஹ்.

தப்லீக் ஜமாத்தில் செல்பவர்கள் உலகத்தில் இஸ்லாமை பாதுகாத்தது தப்லீக் இயக்கம்தான் என்றும் தப்லீக் இயக்கத்தால்தான் எனக்கு நேர் வழி கிடைத்தது என்றும் தப்லீக் இல்லை என்றால் நான் நேர்வழி பெற்றிருக்க மாட்டேன் என்றும் கூறுவார்கள். அவர்கள் உண்மையில் யாரென்றால் தப்லீக்கை வணங்க கூடியவர்கள். தப்லீக்கை ஒரு அமைப்பாக மட்டும் பார்க்காமல் அதற்கு மேலாக அதை புனிதமாக பார்ப்பதால்தான் அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் தப்லீக்குடைய தவறுகளை ஒப்புக்கொள்ள தயாரில்லை. மேலும், யாராவது தப்லீக் பற்றி குறை சொன்னால் கொதித்து விடுவார்கள். அப்படியே அவர்களின் குணமே தலைகீழாக மாறிவிடும். யார் தப்லீக்கை ஒரு அமைப்பாக மட்டும் பார்க்கிறார்களோ அவர்களுக்கு அதன் தவறுகள் தெரிய வரும்போது நேர்வழியாகிய ஸுன்னாவின் பக்கம் வந்து விடுவார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

அப்படித்தான் பிஜேவை ஓர் அழைப்பாளராக மட்டும் பார்க்காமல் அதற்கு மேல் அவரை புனிதப்படுத்திவிட்டதால்தான் அவர் தவறு செய்வார் என்று ஏற்க மறுக்கிறார்கள். அவர் சொல்வதை எல்லாம் சரி என்று ஈமான் கொண்டு விடுகிறார்கள். அவருடைய கொள்கையைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால், அதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் அவரை தரம் தாழ்ந்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். 

நாமோ அவர்களின் கொள்கையை பற்றி பேசினால் அவர்களோ எனது ஆடை, எனது அலுவலகம், எனது நூல்களின் விற்பனை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். 

இதற்கு காரணம் அவர்கள் பிஜேவை ஒரு நபியுடைய கண்ணியத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஒரு நபிக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை அவருக்கு கொடுக்கிறார்கள். அவரை ஒரு நபியுடைய தரத்துக்கு கொண்டு சென்றுவிட்டதால் அவரின் மூலம் தவறே நிகழாது என்றும் அவர் கூறுவது அனைத்தும் மார்க்கம் என்றும் அவர்கள் ஈமான் கொள்கிறார்கள். 

பிஜே உருவாக்கிய இயக்கவாதிகள் அவரின் தனிப்பட்ட குணத்தால் அவரை வெளியாக்கிவிட்டு அவரின் இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் மோசமான விமர்சனம் செய்து கொள்கின்றனர். 

ஆனால், இத்தகைய மோசமான குணம் உள்ளவர் உருவாக்கிய கொள்கை எப்படி நேர்வழியாக இருக்கும் என்பதை சிந்திக்க மறுக்கின்றனர். அதே நேரத்தில் அந்த இயக்கத்தை விட்டு அவர் வெளியேற்றபப்ட்ட பின்னர் அவர் விமர்சிக்கிற ஹதீஸ்களை அந்த இயக்க வாதிகள் விமர்சிப்பதில்லை. அந்த ஹதீஸை மறுப்பதில்லை.

ஆனால், அவர் உருவாக்கிய புதிய இயக்கத்தில் உள்ளவர்கள் அந்த ஹதீஸ்களை மறுக்கின்றனர். ஆகவேதான் நாம் சொகிறோம், நீங்கள் பிஜேவை தக்லீத் செய்கிறீர்கள். அல்லது அதற்கும் மேலாக அவரை புனிதமாக்கி அவரை வழிப்படுகிறீர்கள். ஒருவரை கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவது என்பது நபிமார்களுக்கு உள்ள கண்ணியம். அந்த கண்ணியத்தை பிஜேவுக்கு தந்துவிட்டீர்கள்.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். பிஜே உடைய எந்த ஒரு தனிப்பட்ட காரியத்தை பற்றி நான் பேசியதே இல்லை. அல்லாஹ் இறுதி வரை என்னை பாதுகாப்பானாக!

இன்னொரு பக்கம், ஒரு முக்கியமான செய்தி!

அவர் ஐங்கால தொழுகைகளை ஜமாத்தோடு தொழுவதில்லை. அப்படி உள்ளவரை எப்படி நீங்கள் மார்க்க வழிகாட்டியாக ஏற்கிறீர்கள் என்று 2004 ல் ஒரு மேடையில் கேட்டேன். உடனே அவரின் பக்தகோடிகள் இது அவரின் தனிப்பட்ட காரியம், நீ எப்படி கேள்வி கேட்கலாம் என்று என்னை திட்டினார்கள். நான் கூறினேன், ஆண்களுக்கு ஜமாத் தொழுகை என்பது மிக முக்கியமான ஒன்று. இது வரை பல ஆண்டுகளில் ஒரு முறை கூட எந்த மஸ்ஜிதுலும் ஐங்கால தொழுகையில் நான் பார்த்ததில்லை. அல்லது முஸ்லிம்களில் யாரும் பார்த்ததாக தெரியவில்லை என்று கூறினேன்.

அப்போது கூட அவரின் பக்தகோடிகளில் யாரும் அவர் வீட்டில் தொழுவார், எங்களோடு தொழுவார் என்று சொல்ல வில்லை. இது தனிப்பட்ட விஷயம் என்று சொல்லிதான் சமாளித்தனர்.

பிறகு சிறிது காலத்தில் அவர் தாமுமுக வை விட்டு பிரிந்த உடன் அதன் நிர்வாகிகள் அவர் ஐங்காலத் தொழுகையை தொழுவதே இல்லை என்று கூறினர்.

பின்னர் பிஜேவிடமிருந்து பாக்கர் அவர்கள் விலகி ஐ என் டி ஜே என்று ஓர் இயக்கம் பாக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வுடன் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொது வெளியில் பேசியதாவது, பிஜே தொழுவதே இல்லை என்றுதான். இத்தனை காலமாக் நாங்கள் அவர் மீதுள்ள மதிப்பில் இதை வெளியில் சொல்லாமல் இருந்தோம். இன்னும், அவர் அறவே தொழ மாட்டார் என்ற குற்றத்தை முன் வைத்தனர்.

இப்போது அவரின் சொந்த இயக்கமாகிய டி என் டி ஜேவினர் இத்துடன் இன்னும் பல அசிங்கங்களை அவர் மீது குற்றம் சுமத்தினர்.

ஸஹாபாக்களை அசிங்கமாக பேசிய யாரும் அல்லாஹ்வினால் பழிவாங்கப்படாமல் விடப்பட மாட்டார்கள். அவர்கள் திருந்த வில்லை என்றால் இன்னும் பல கேவல்ங்களை இம்மையிலோ அல்லது மறுமையிலோ கண்டிப்பாக சந்திக்க வேண்டியது வரும்.

பிஜேவை சத்தியத்திற்கு அளவுகோலாக ஆக்கியதன் விளைவுதான் இன்று அவரின் வழிகேட்டிற்கு அவரின் முகல்லிதுகள் வக்காலத்து வாங்குவது. தான் சொல்ல்கிற கருத்தை அப்படியே கக்குகிற  தாயிகளின் ஒரு கூட்டத்தை இப்போதும் அப்போதும் உருவாக்கி வைத்துக் கொண்டு தனது வழிகேடுகளை அவர் மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டு இருக்கிறார்.

ஸஹீஹான ஹதீஸ்களை அவர் மறுக்கும்போது சனதுகளின் படி மறுப்பதில்லை. மாறாக, அது அறிவுக்கு பொருந்த வில்லை, அறிவியலுக்கு பொருந்த வில்லை, யதார்த்த உண்மைக்கு பொருந்த வில்லை என்று கேவலாமக விமர்சனம் செய்துவிட்டு அந்த ஹதீசை மறுக்கிறார். இதுதான் அவரை அவர் ஒரு முர்தத் என்று நாம் சொல்வதற்குரிய காரணங்களில் முக்கியமான ஒன்று. அல்லது முர்தத் உடைய தரத்தை விட மோசமான தரமாகிய ஸிந்தீக் என்ற தரத்தில் உள்ளவர் அவர்.

ஸகாத் ஒரு பொருளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை கொடுத்தால் போதும் என்று அவர் கூறியதை விடவா வேறு ஒரு ஆதாரம் தேவை அவர் இஸ்லாமை விட்டு வெளியேறிவர் என்று சொல்வதற்கு?! 

அவரின் பக்தகோடிகள், என்னிடம் எதற்கெடுத்தாலும் விவாதத்திற்கு வா, விவாதத்திற்கு வா என்கின்றனர். நான் கேட்கிறேன், ஏன் விவாதம் செய்ய வேண்டும்? அவரோ ஒரு மட்டமான ஜாஹில். ஜாஹில்கள் பேசினால் அவர்களிடம் ஸலாம் கூறி விலகி விட வேண்டும் என்றே அல்லாஹ் வழிகாட்டுகிறான். அவருக்கு இப்போது தேவை சரியான கல்வி. அந்த சரியான கல்வி அவருக்கு தேவை என்று அவர் உணர்ந்தால் முதலில் ஒழுங்கான ஆசிரியர்களிடம் அகீதா, மன்ஹஜ் சம்பந்தமான கல்விகளை கற்கட்டும்.  அதற்கு நாம் வழிகாட்டுகிறோம் இன் ஷா அல்லாஹ்.

ஒரு குதர்க்க வாதியை, ஒரு மூன்றாம் தர மேடை பேச்சாளரை, ஸுனனாவை விட தனது சுய அறிவை நம்புகிற மதிக்கிற குஃப்ரித்துட்டைய சிந்தனை வாதியை எப்படித்தான் மார்க்க வழி காட்டி என்றும் மூதறிஞர் என்றும் அவரின் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ!! அந்தோ பரிதாபம்!! 

அல்லாஹ்வே! எங்கள் உள்ளங்களை கோனலாக்கி விடாதே எங்களுக்கு நீ நேர்வழிகாட்டிய பின்னர். உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை தா! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி!

பிஜே ஸஹாபாக்களை கிண்டல் கேலி செய்தபோதும் ஹதீஸ்களை விமர்சனம் செய்தபோதும் வராத கோபம் இதை எல்லாம் செய்கிற பிஜே வழிகேடர் என்று சொல்லும்போது வருகிறது.  இது இஸ்லாமிய பற்றா அல்லது பிஜே பற்றா? 

நானோ பிஜேவின் கருத்தை விமர்சிக்கிறேன். சிலர் எனது ஆடையை விமர்சிக்கிறார்கள். நான் அவரின் கொள்கையை விமர்சிக்கிறேன்.  அவர்கள் எனது எழுத்துப் பணியை விமர்சிக்கின்றனர்.  இஸ்ரவேலர்களுக்கு காலை கன்றின் மோகம் உள்ளத்தில் ஏறியது போன்று பலருக்கு பிஜேயின் மோகம் உள்ளத்தில் ஏறி விட்டது. பிஜேதான் தங்களுக்கு நேர்வழி காட்டினார் என்று அவர்கள் நம்பியதுதான் இதற்கு காரணம். 

பிஜேவின் பேச்சை மட்டுமே கேட்டு அந்த போதை தலைகேரியதால் அவர் முன்வைக்கிற அனைத்தும் உங்களுக்கு அழகாக தெரிகிறது. பிஜேவின் போதையையிலிருந்து வெளியே வந்து பாருங்கள் அவர் எத்தகைய வழிகேடர் என்பது புரியும்!

பிஜே ஸஹாபாக்களை கிண்டல் கேலி செய்தபோதும் ஹதீஸ்களை விமர்சனம் செய்தபோதும் வராத கோபம் இதை எல்லாம் செய்கிற பிஜே வழிகேடர் என்று சொல்லும்போது வருகிறது.  இது இஸ்லாமிய பற்றா அல்லது பிஜே பற்றா? 

வாரத்திற்கு ஒரு ஸஹீஹான ஹதீஸை விமர்சனம் செய்து மறுத்து வருகிறார் பி.ஜே. 

பேங்கில் வட்டிக்கு பணம் வாங்குவது கூடும் என்கிறார்.  

அல்லாஹ்வின் தன்மைகளை அறிவிக்கும் ஹதீஸ்களை அறிவியலுக்கு முரண் என்று கூறுகிறார். 

குர் ஆனை எழுதுவதில் தவறு நிகழ்ந்துள்ளது என்று கூறுகிறார். 

இப்படிப்பட்டவரை வழிகேடர் என்று சொல்லும்போது சிலருக்கு கோபம் வருகிறது. 

2000 க்கு முன்பு வரை பிஜே சரியான பாதையில் இருந்தார் என்பதற்காக இப்போது அவருடைய வழிகேடுகளை சரி காணுவது அல்லது வாய்மூடி இருப்பது மிகப் பெரிய தவறு.

எங்களை நாங்கள் ஈமான் கொள்ளும்படியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றும்படியும்தான் அல்லாஹ் கட்டளை இட்டிருக்கிறான்.

மார்க்கத்தை எடுத்து சொல்வதுதான் அதை கற்றவர் மீது கடமையே தவிர வழிகேடர்களிடம் விவாதம் செய்வது இல்லை.

பிஜே உடைய வழிகேட்டின் ஆரம்பமே வழிகேடர்களிடம் அவர் விவாதம் செய்ததிலிருந்துதான் ஏற்பட்டது. 

நாங்கள் குர்ஆனை நம்பிக்கை கொள்கிறோம். ஸஹீஹான எல்லா ஹதீஸ்களையும் நம்பிக்கை கொள்கிறோம். ஸஹாபாக்களின் புரியுதல் படி மார்க்கத்தை விளங்க வேண்டும் என்று கூறுகிறோம்.  அவர்களை விமர்சிக்க கூடாது என்று கூறுகிறோம். கண்ணியமான இமாம்களின் ஆய்வுகளை மதிக்கிறோம். அவர்கள் இஸ்லாமிற்காக செய்த தியாத்தை மதிக்கிறோம். அவர்களில் ஒருவரை மட்டும் தக்லீத் செய்யும்படி கூற மாட்டோம்.  ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும்போது அதையே பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறோம். 

குர்ஆன் ஸுன்னாவில் வந்துள்ள அல்லாஹ்வின் தன்மைகள் அனைத்தையும் மறுக்காமல் மாற்றாமல் உவமை கற்பிக்காமல் விளக்கம் கூறாமல் அப்படியே நம்புகிறோம். அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய வழிமுறையின் படி மார்க்கத்தையும் மறைவான விஷயங்கள் அனைத்தையும் எந்த புரட்டும் இல்லாமல் நம்பிக்கை கொள்கிறோம். 

இதுதான் தாபியீன்கள், இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்களின் வழி முறையாகும்.  இதை விட்டு விலகியவர்கள், இதை புறக்கனிப்பவர்கள் வழிகேடர்கள் என்று நம்புகிறோம். 

விரும்பியவர்கள் இதை ஏற்கட்டும். விரும்பியவர்கள் இதை மறுக்கட்டும். நமது கடமை எடுத்துரைப்பதுதான். விவாதம் செய்வதோ யாரையும் நிர்ப்பந்திப்பதோ அல்ல. 

கப்ரு வாதிகள் ஸஹாபாக்களை மதிப்பார்கள். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.  

பி.ஜே உருவாக்கிய தவ்ஹீது வாதிகள் ஸஹாபாக்களை மதிக்கவும் மாட்டார்கள், பின்பற்றவும் மாட்டார்கள். 

ஸூஃபிச வழிகெட்ட கூட்டங்கள் பொய்யான ஹதீஸ்களை பரப்புவர்கள், அவற்றின் படி தங்கள் கொள்கைகளை அமைத்துக் கொள்வார்கள். 

பி.ஜேவும் அவரின் முகல்லிதுகளும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து விட்டு அவர்களின் புத்தி கூறுவதை கொள்கையாக அமைத்துக் கொள்வார்கள். 

ஸஹாபாக்களை விமர்சனம் செய்பவர், அவர்களின் கருத்துகளை ஏற்க மறுப்பவர் என்னதான் தஹ்வீது பேசினாலும் ஷிர்க்கை எதிர்த்தாலுக் குர் ஆன் ஹதீஸ் பேசினாலும் அவர் நேர்வழியின் வாடையைக் கூட நுகர முடியாது. 

ஸஹாபாக்களை புறக்கனித்து விட்டு குர்ஆன்  ஹதீஸை பின்பற்ற யார் நினைத்தாலும் அவர் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வழிகெடுவார்.  

நேர் வழி ஸஹாபாக்களில் இருக்கிறது. அவர்கள் நேர்வழியில் இருக்கிறார்கள்.  ஆகவே அவர்களை விமர்சிக்கிறவர், அவர்களை புறக்கனிப்பவர் யாராக இருந்தாலும் அவர் வழிகேடர்தான். அவர் போதிக்கிற கொள்கையும் வழிகேட்டில்தான் முடியும்.

கப்ருகளை வணங்கிக் கொண்டு, மவ்லித் என்ற ஷிர்கான கவிதளை பாடிக்கொண்டு, இறை நேசர்களுக்கு இறைத் தன்மையை கற்பிக்கிறவர்கள் வழிகேடர்கள். அவர்கள் உண்மையில் சுன்னத் வல்ஜமாத்தினர் இல்லை. 

சமாதி வழிபாட்டை எதிர்த்துவிட்டு, பிறகு ஹதீஸ் மறுப்பு கொள்கையில் சென்றுவிட்டவர்கள் உண்மையில் தவ்ஹீது வாதிகள் இல்லை. 

குர் ஆன் ஸுன்னாவை ஸஹாபாக்களின் வழிமுறைப்படி பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வழிகேடர்களே! அவர்கள் பித்அத் வாதிகள்தான்.  

பிஜேவும் அவரின் ஹதீஸ் மறுப்பு கருத்துகளையும் அவர் கண்டுபிடித்த நவீன கொள்கைகளையும் சரி காணக்கூடியவர் யாராக இருப்பினும் அவர்கள் நேர்வழியை விட்டு வெளியேறிவர்களே!

அவ்லியாக்களை வணங்குகிறவர்கள் வழிகேடர்கள்.  அவ்வாறே ஸஹாபாக்களை பின்பற்றாத பிஜேவும் அவரின் முகல்லிதுகளும் வழிகேடர்களே!

சுன்னத் ஜமாத் என்ற பெயருக்கும் இன்று அதை உரிமை கொண்டாடுகிறவர்களுக்கும் எப்படி அறவே சம்பந்தம் இல்லையோ அப்படித்தான் தவ்ஹீத் என்ற பெயருக்கும் அதை சூட்டிக்கொண்டவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

தக்லீதுகளில் மோசமான தக்லீதை போலி தவ்ஹீத் வாதிகள் செய்துகொண்டு நாம் ஸஹாபாக்களை பின்பற்றுவதை விமர்சிக்கின்றனர். 

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் ஸஹாபாக்கள், தாபியீன்கள் மீதுள்ள மதிப்பை விட தவ்ஹீது வாதிகளுக்கு பிஜே மீதுதான் மதிப்பும் நம்பிக்கையும் அதிகம். 

கொள்கையாளும் வழிகெட்ட, குணத்தாலும் வழிதவறிய, இஸ்லாமிய கடமைகளை பாழாக்கிய ஒருவரை தங்கள் இமாமாக ஏற்றுக் கொண்ட கூட்டம் எப்படி நேர்வழி பெற முடியும்? 

இஸ்லாமிய வரலாற்றில் உருவான எல்லா வழிகெட்ட கூட்டங்களின் கொள்கைகள் அனைத்தும் ஒரு கூட்டத்தில் இருக்கின்றன என்றால் அது பிஜே உருவாக்கிய போலி தவ்ஹீத் ஜமாத்துகளில்தான் இருக்கின்றன. 

உண்மையான தவ்ஹீதும் உண்மையான ஸுன்னாவும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் கப்ரு வாதிகளை நீங்கள் எதிர்த்தால் மட்டும் போதாது.  மாறாக வழிகேட்டில் அவர்களை விட கொஞ்சமும் குறைவில்லாத பிஜேவின் கூட்டங்களையும் நீங்கள் எதிர்க்க வேண்டும். 

தரீக்கா வாதிகள் பலவீனமான பொய்யான ஹதீஸ்களை பரப்புகிறார்கள். எனவே அவர்கள் வழிகேடர்கள். 

இந்த நவீன தவ்ஹீது வாதிகள் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.  ஆகவே இவர்களும் வழிகேடர்களே. 

ஹதீஸை விட்டுவிட்டு ஸஹாபாக்களை பின்பற்றுங்கள் என்று எந்த முட்டாளும் சொல்ல மாட்டான். ஹதீஸுக்கு சுய விளக்கம் கொடுக்காதீர்கள். ஸஹாபாக்கள் புரிந்ததை வைத்து புரியுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

ஹதீஸில் இல்லாத விஷயங்களுக்கு உங்கள் சுய ஆராய்ச்சியை விட ஸஹாபாக்களின் கூற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். 

நீங்கள் ஸஹாபாக்களை புறக்கனித்த காரணத்தால்தான் பி.ஜேவின் வழிகேட்டில் சிக்கி வழிகெட்டு அலைகிறீர்கள்.  பிஜேவின் சுய அறிவை நீங்கள் பின்பற்றியதால் ஸஹீஹான ஹதீஸ்களில் அவர் மறுக்கிற ஹதீஸ்களை நீங்களும் மறுக்கிறீர்கள்.  நீங்கள் சுய புத்தி இல்லாத செம்மறி ஆட்டு கூட்டமாக திருகிறீகள்.

காஃபிர்களில் சங்கிகள் எப்படியோ முஸ்லிம்களின் பெயரில் உள்ள சங்கிகள் பிஜேவும் அவரின் முஹிப்பீன்களும் முரீதீன்களும் முகல்லிதுகளும் பக்தர்களும். 

தான் சொல்வது பொய் என்று தெரிந்தே துணிந்து பொய் சொல்கிற ஒரு பாதரியாரை போல பிஜேவும். நன்கு தெரிந்து கொண்டே வழிகேட்டை பரப்புகிற, நன்கு நடிக்கத் தெரிந்த ஒரு பொய்யன். 

அவருடைய பழைய புதிய பேச்சை சுய புத்தியோடு அல்லாஹ்வையும் நபியையும் நம்பிக்கை கொண்டு கேளுங்கள், அவர் சொல்கிற பொய்கள் வழிகேடுகள் உங்களுக்கு புரிய வரும். நீங்கள் பிஜேவை நம்பிக்கை கொண்ட நிலையில் கேட்டால் அவர் மறுக்கிற ஹதீஸை மறுப்பீர்கள். குர்ஆனுக்கு அவர் கூறுகிற தப்பான விளக்கத்தை நம்புவீர்கள். 

உலகத்திலேயே தான் உருவாக்கிய மாணவர்களாலும் பக்த கோடிகளாலும் கேவலமாக இழிவோடு விரட்டி அடிக்கப்பட்ட முதல் குரு நாதர் பிஜே அவர்கள்தான்.  

இப்போது சில புதிய பக்த கோடிகள், அபிமானிகள், முரீதுகள், முகல்லிதுகள் அவருக்கு உருவாகி இருக்கிறார்கள், நித்யானந்தாவிற்கும் பல சாமியார்களுக்கும் புதிய பக்தர்கள் உருவானது போல. 

முதலில் ஜாக்கிலிருந்து, பிறகு தமுமுகவிலிருந்து, பிறகு டிஎண்டிஜேவிலிருந்து அவரின் குணத்தால் துரத்தப்பட்டவர்தான் பிஜே அவர்கள்.

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை கொண்டு நம்பிக்கை கொண்ட பின்னர் ஏமனில் உள்ள பலர் பொய்யன் முசைலமாவை நம்பிக்கைக் கொண்டு,  வழிகெட்டதை போன்றுதான் இன்று பல முஸ்லிம்கள் அல்லாஹவையும் ரஸூலையும் ஈமான் கொண்டதற்கு பின்னர் பிஜே பின்னால் சென்று வழிகெட்டு போகின்றனர். 

அது என்ன, அவர் புத்திக்கு புரியாத ஹதீஸ் அறிவியலுக்கு முரண் என்று அவர் சொல்லும்போது நீங்களும் ஆமாம் ஆமாம் என்று மண்டை ஆட்டுகிறீர்கள்? இது கண்மூடித்தனமான தக்லீத் இல்லையா? 

அவர், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண் என்று கூறி மறுத்தால் நீங்களும் ஆமாம் ஆமாம் என்று கூறுகிறீர்கள்.  இது என்னவகையான ஈமான் என்று சொல்லுங்கள்!! 

வழிகெட்டுப்போன ஷீஆக்களும் கிருத்துவ மிஷினரிகளும் இண்டெர்னெட்டில் ஹதீஸ் மீது செய்கிற ஆட்சேபனைகளை கேட்டுவிட்டு அந்த ஹீஸ்களை அதே விமர்சனங்களை கூறி அப்படியே மறுக்கிற மோசமான மூடன்தான் பிஜே என்பது உங்களுக்கு தெரியுமா? 

எப்போதுமே திரைமறைவு வாழ்க்கை வாழக்கூடிய பிஜேவுக்கு இஸ்லாமிய எதிரிகளின் தொடர்பு இருக்கும் என்று அவரின் முன்னாள் ஆதரவாளர்கள் பலர் உறுதியாக நம்புகிறார்கள். 

அவரின் அப்பாவி முகல்லிதுகளே! கொஞ்சம் நீங்கள் சிந்தித்தால், பிடிவாதத்தை விட்டால், அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால் கண்டிப்பாக அல்லாஹ் உங்களை நேர்வழிபடுத்துவான்.  

பல ஆண்டுகளுக்கு முன்னர் விருது நகரிலிருந்து ஒருவர் என் பயானை கேட்டுவிட்டு, அண்ணன் அவர்களே! அலிஃப்லாம் மீமுக்கு அர்த்தம் இல்லை என்று நீங்கள் சொல்வது படி பார்த்தால் டி.என்.டி.ஜேவுக்கும் அர்த்தம் இருக்கக்கூடதுதானே, பி.ஜே.வுக்கும் அர்த்தம் இருக்கக்கூடாதுதானே என்று உமர் ஷரீஃப் பயனில் கேட்கிறார், அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு அவரை மர்கசிலிறுந்து கடுமையாக துரத்தி விட்டார்கள். நீ எப்படி அவரின் பயானை கேட்டாய் என்று அவரை விரட்டி அடித்தார்கள். 

தப்லீக் மக்கள், அந்த இயக்கத்துடைய உலமாக்களின் பயானை மட்டுமே கேட்டு புத்தி சூனியம் ஆகி இருப்பார்கள். அப்படித்தான் பிஜேவின் முகல்லிதுகளாகிய நீங்களும் அவரின் பேச்சை மட்டுமே கேட்டு புத்தி மலுங்கி விட்டீர்கள். 

குர்ஆன் ஹதீஸைத்தானே பின்பற்ற வேண்டும், அப்படித்தானே? அப்படி நீங்கள் கூறுவது உண்மை என்றால் அவரை தூர வைத்து விட்டு நீங்களே குர் ஆன் ஹதீஸை ஆராய்ந்து பின்பற்ற வேண்டியதுதானே?? ஏன் செய்வதில்லை.  

ஸஹாபாக்களை ஏற்க வேண்டும் என்று கூறுகிற நாங்கள் ஹதீஸுக்கு எதிராக எந்த ஸஹாபியையும் பின்பற்றுவதில்லை.  ஆனால் நீங்களோ பிஜேவின் உளர்கள் படி பல ஹதீஸ்களை மறுப்பதுடன் எல்லா ஸஹீஹான ஹதீஸ்களையும் சந்தேக கண்ணோடத்துடன்யே பார்க்கிறீர்கள்.  

மத்ஹபுவாதிகள் மீதும் தரீக்காவாதிகள் மீதும் கப்ருவாதிகள் மீதும் என்னென்ன குற்றசாட்டுகளையும் ழிகேடுகளையும் அவர்கள் சுமத்தினார்களோ அவை அனைத்தையும் ஒன்று விடாமல் அவர்கள் பிஜே விஷயத்தில் பின்பற்றுகிறார்கள்.  கேள்வி கேட்க்கப்பட முடியாத ஒரு இமாமாகவும் ஸூபிகளிடம் இருப்பது போன்று புனிதத்தனமை வாய்ந்த ஒரு மகானாகவும் வழிபடப்படுகிற ஒரு தெய்வமாகவும் ஆக்கி விட்டார்கள்.  அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன் 

அல்லாஹ்வே எங்களை உனக்கு விருப்பமான பாதையில் நிலைத்திருக்க வை! உனக்கு வெறுப்பான பாதையிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களை பாதுகாத்துக்கொள்!! ஆமீன். 

உனக்கே எல்லாப் புகழும்.

ஒரு அறிஞர் சரியான ஹதீஸ் என்று கூறியதை மற்றொரு அறிஞர் அதை மீளாய்வு செய்து அதில் பலவீனமான அறிவிப்பாளர் இருப்பதை ஔட்டிக்காட்டி அந்த ஹதீஸை பலவீனமான ஹதீஸ் என்று சொல்வது வேறு. இதை நாம் மறுக்கவில்லை. ஆக, சனத் பலவீனம் என்று ஒரு ஹதீஸை பலவீனமாக்குவது வேறு. ஸஹீஹான ஒரு ஹதீஸ் அறிவுக்கு | அறிவியலுக்கு | குர்ஆனுக்கு | இஸ்லாமிய அடிப்படைக்கு முரண்படுகிறது என்று கூறி அதை மறுப்பது வேறு. முதலாவது கல்வி. இரண்டாவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் இன்னும் ஹதீஸ்கலை அறிஞர்களும் ஸலஃபிகளாகவே இருந்து வந்துள்ளார்கள். அதாவது, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஸஹாபாக்கள், மற்றும் தாபியீன்களுடைய விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதை தங்கள் நூல்களில் ஹதீஸ்களுக்கு இடையில் பதிவு செய்தார்கள்.  ஹதீஸ் நூல்களில் குர்ஆன் விளக்க உரை என்ற அத்தியாயத்தில் ஸஹாபாக்கள் தாபியீன்கள் கூறும் விளக்கத்தை பதிவு செய்துள்ளார்கள்.  அது போக பல பாடங்களில் பல மசாயில்களில் ஹதீஸ் கிடைக்க வில்லை என்றால் அந்த மசாயில்களில் ஸஹாபாக்கள் தாபியீன்களின் கருத்து என்ன என்பதை பதிவு செய்துள்ளார்கள். 

ஆக, பிஜேவும் அவரின் முகல்லிதுகளும் சொல்வதை போன்று பார்த்தால் ஹதீஸ்களை ஒன்று திரட்டி தொகுத்த அந்த அறிஞர்கள் எல்லாம் வழிகேடர்கள் என்று வரும். 

இப்போது நமது கேள்வி இவர்களிடம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நேரான (?) கொள்கையில் இருந்த  முன்னோர் யாராவது தொகுத்த ஹதீஸ்களைத்தானே ஏற்க வேண்டும்! ஏன், ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கத்தில் ஏற்றுக்கொள்கிற கொள்கையை உடைய அறிஞர்களின் ஹதீஸ் தொகுப்பை ஏற்கிறீர்கள்? அது வழிகெட்ட கொள்கை ஆகிற்றே. 

அடுத்து ஸஹாபாக்கள் தடம் புரண்டு விட்டார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஸஹாபாக்கள் நீங்கள் மறுக்கிற எல்லா ஹதீஸ்களையும் ஏற்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் ஓதிக்காட்டிய குர்ஆனை எப்படி நம்புகிறீர்கள்?? உங்கள் கொள்கையை உடைய யாராவது அறிவித்த குர்ஆனோ, ஹதீஸ் தொகுப்போ உங்களிடம் உள்ளதா? 

சூனியம் உண்டு என்று சொல்கிற இமாம் முஷ்ரிக் என்றும் அவரின் பின்னால் தொழக்கூடாது என்றும் சட்டம் சொல்கிற நீங்கள் அந்த ஹதீஸை பதிவு செய்த முஷ்ரிக்கான அறிஞரிடமிருந்துதானே உங்கள் தொழுகையின் சட்டங்களை உடைய ஹதீஸ்களை எடுக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிதா? 

தான் பெரிய புத்திசாலி என்று அறிவு பேசிய இப்லிஸை போன்று அறிவு என்று பேசி குஃப்ரில் சென்றுகொண்டு இருக்கிறீகளே,   நீங்கள் எதையும் சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்கள் அறிவில்தான் திரை போடப்பட்டுள்ளதா!! 

பிஜேவிற்கு பரிந்து பேசும் அன்பர்களே! பிஜேவை முதலில் ஐந்து வேளை நியமமாக ஜமாத்துடன் தொழ சொல்லுங்கள்.

அவர் பேசிய பழைய வீடியோக்களே அவருக்கு பதில் சொல்ல போதும். நான் அவருடன் விவாதம் செய்து புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

தூங்கக்கூடியவனை எழுப்பலாம். நடிப்பவனை எழுப்ப முடியாது.

தான் சொல்வதும் செய்வதும் தவறு என்று பிஜேவிற்கு தெரியாமல் இல்லை. கண்டிப்பாக தெரியும். 

பல மூத்த அழைப்பாளர்கள் ஆரம்பத்தில் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது. அதாவது பிஜேவின் அண்ணன் மர்ஹூம் அலாவுத்தீன் இறக்கும் போது என் தம்பியை தயவு செய்து பின்பற்றி விடாதீர்கள் என்று கூறினார் என அவருடன் வாழ்ந்த பலர் கூறியதை நான் கேட்டுள்ளேன்.  

பிஜே ஒரு நல்ல புத்தியுடைய மார்க்க பற்றுள்ளவராக இருந்தால் முதலில் ஐந்து நேர தொழுகைகளை ஜமாத்தோடு தொழுவார். அவர் ஒரு ஆலிமாக இருந்தும் இது நாள் வரை எங்கும் ஒரு முறை கூட ஜமாத் தொழுகை நடத்தியதில்லை. 

குர்ஆனில் எத்தனை அத்தியாயங்களை மனனம் செய்துள்ளார்? 

எத்தனை ஹாஃபிழ்களை உருவாக்கி இருக்கிறார்? 

அவர் குதர்க்கவாதிகளையும் தர்க்கவாதிகளையும் மூடர்களையுமே உருவாக்கினார். இறுதியில் அவர்கள் மூலமே அல்லாஹ் அவருக்கு தக்க பதிலை தந்துவிட்டான். ஒரு ஆலிமை பற்றி இப்படி கேவலமான வீடியோக்கள் ஆடியோக்கள் அவரின் முகல்லிதுகளால் பரப்பபட்டிருக்கிரது என்றால் அந்த பெருமை பிஜே அவர்களுக்கு மட்டும்தான் உண்டு. பொது வாழ்க்கையிலும் மார்க்கத்திலும் பொய் பேசக்கூடியவர் என்று உறுதி செய்யப்பட்டவர்தான் பிஜே. அதுபோக ஒழுக்கத்தை பற்றி ஊரே அறியும். இத்தகைய ஒருவரை ஒரு சிறிய பள்ளியில் கூட இமாமாக வைக்க மாட்டார்கள்.  ஆனால், நீங்கள் எப்படி இவரை இமாம்களுக்கு எல்லாம் மேலான இமாமாக, ஸஹீஹான ஹதீஸ்களையே தரம் பிரிக்க கூடிய மார்க்க வல்லுனராக கருதுகிறீர்களோ!! 

அவர் பேசினால் பொய், ஆபாசம், கெட்ட வார்த்தைகள், மூடத்தனமான குதர்க்கங்கள், கேலி, கிண்டல், நையாண்டி, பரிகாசம் இதைத்தவிர அவரிடம் என்ன இருக்கிறது?!! 

இன்னும் நேரம் இருக்கிறது.  அவர் தவ்பா செய்து திருந்த வில்லை எனில் அல்லாஹ்வின் பிடி மிக கடுமையாக இருக்கும். 

அல்லாஹ்வே! உன் பக்கமே நாங்கள் மீள்கிறோம். எங்களை வழிகேட்டில் இருந்து பாதுகாப்பாயாக. வழிகெடுக்கும் ஒவ்வொரு வழிகேடனிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.

ஒரு ஸஹீஹான உறுதியான ஸனதுடைய ஹதீஸை மறுப்பதுவே மிக ஆபத்தானதும் நிராகரிப்புக்கு நெருக்கமானதும் ஆகும். பிஜேவோ பல ஸஹீஹான உறுதியான சனதுடைய பத்துக்கணக்கான ஹதீஸ்களை மறுக்கிறார்.  இந்த நிலையில் இவரை முஸ்லிம் என்று ஏற்பதே முடியாத போது இவரை எப்படி ஒரு மார்க்க அறிஞராக இவர்கள் நம்புகிறார்களோ!!??  பல சாமியார்கள் பின்னால் அவர்கள் கயவர்கள் என்று தெரிந்தே பலர் செல்வது போலத்தான் இவருக்கு பின்னால் செல்கிறவர்கள் விஷயத்திலும் சொல்ல வேண்டியது இருக்கிறது. 

உறுதியான ஹதீஸ்களின் சந்தேகத்தை கிளப்பி, குழப்பங்களை செய்து அவற்றை மறுப்பது, ஸஹாபாக்களை வழிகெட்டுவிட்டார்கள் என்று இவர் சொல்வதுமே போதும் இவர் ஒரு முர்தத் உடைய நிலைக்கு வந்துவிட்டார் என்பதற்கு. 

மக்களுக்கு கல்வி கற்இக்கொடுக்காமல் தனது பயானுக்கு மட்டுமே அடிமையாக ஆக்கி வைத்ததன் விளைவுதான் இப்படி ஒரு முரீது கூட்டம் அவருக்கு உருவாகி இருப்பது. 

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் அவர்களை போன்ற  இன்னும் பல ஆயிரம் இமாம்கள் சரிகண்ட, அறிவிப்பாளர் தொடர் மிகச் சரியாக உறுதியாக உள்ள பல ஹதீஸ்களை மிக துணிச்சலாக இவர் மறுப்பது, அவற்றை விமர்சிப்பது பற்றி முஸ்லிம்களே உங்களுக்கு ரோஷம் வரவில்லையா? உங்களுக்கு கோபம் வரவில்லையா?

அதற்கு பதிலாக அவரின் வழிகேடுகள் பற்றி நான் சொல்லும்போது என் மீது கோபப்படுகிறீர்களே!!

நமது நபியின் ஸஹீஹான (சரியான) கவிய்யான (பலமான) பல பல ஹதீஸ்களை மறுப்பவர் மீதும் அந்த நபியின் உத்தம தோழர்களை கேவலப்படுத்துபவர் மீதும் உங்களுக்கு கோபம் வருவதில்லையே!! 

தவ்ஹீதின் பெயரால் உங்களை நவீன குஃப்ரில் தள்ளுகிறார், உங்களுக்கு புரியவில்லையா? ஹதீஸ்கலை இமாம்களை விடவா நீங்கள் ஹதீஸ்களை பின்பற்றுவதில் முன்னேறிவிடப் போகிறீர்கள்?? அவர்கள் ஏற்றுக்கொண்ட ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் கூற்றுகளை மறுத்துவிட்டு என்ன மார்க்கத்தை நீங்கள் பின்பற்ற போகிறீர்கள்??!! நீங்கள் பின்பற்றுவது அல்லாஹ் இறக்கிய மார்க்க்த்தை அல்ல. நீங்கள் பின்பற்றுவது பிஜேவின் புத்தியை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வஹ்யி மார்க்கம் என்று சொல்கிற நீங்கள் ஹதீஸை வஹ்யாக ஏற்கிறீர்களா இல்லையா? அப்படி என்றால் ஒரு ஹதீஸ் ஸஹீஹாஹ கவிய்யாக இருக்கும்போது அது வஹ்யாக இருப்பது உறுதியாகி விட்டது. பிறகு அதை எப்படி அதற்கு முரண்படுகிறது இதற்கு முரண்படுகிறது என்று மறுக்க உங்களுக்கு துணிவு வருகிறது??!  

சிந்தியுங்கள்!! 

“”பிஜேவோடு விவாதம் செய்ய வாருங்கள்! நீங்கள் இருவரும் விவாதம் செய்வதிலிருந்து நாங்கள் பொது மக்கள் உண்மையை புரிந்து கொள்வோம்.”” இப்படி பலர் செய்தி அனுப்புகிறார்கள். 

எந்தளவு அவர் உங்களை முட்டாள்களாகவும் மூடர்களாகவும் ஆக்கி இருக்கிறார் என்று யோசியுங்கள்!

இஸ்லாம் உடைய முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு நபியுடைய ஸஹீஹான ஹதீஸுக்கு எதிராக அறிவியலையும் சுய புத்தியையும் அவரின் சுய விளக்கத்தையும் வைத்து ஒருவர் மார்க்கத்தில் அறியப்பட்ட ஹதீஸ்களை கண்மூடித்தனமாக மறுக்கிறார். இது வழிகேடு என்று அறிவதற்கு உங்களுக்கு விவாதம் தேவை என்றால் உங்களை விட முட்டாள்கள் இந்த உலகத்தில் யார் இருப்பார்கள்.  மார்க்க கல்வி அற்றவர்கள் நீங்கள். மார்க்கத்தின் அடிப்படை ஈமான் உடைய அறிவு கூட இல்லாத மூடர்கள் நீங்கள்.  உங்களிடத்தில் நாங்கள் ஏன் விவாதம் செய்ய வேண்டும்? 

அறியப்பட்ட மார்க்கத்திலிருந்து பிஜேவின் வழிகெட்ட கொள்கைக்கு பின்னால் கண்மூடித்தனமாக சென்ற நீங்கள் நேர்வழிக்கு திரும்பவாருங்கள். 

உங்களுக்கு உண்மையில் நேர்வழி தேவை என்றால் அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள்.  அவன் உங்களுக்கு புரிய வைப்பான்.  அவனது குர் ஆனை திறந்து நம்பிக்கையோடு படியுங்கள். ஸஹீஹான ஹதீஸ்களை இறையச்சத்தோடு படியுங்கள். 

இறையச்சம் உள்ளவர்களுக்கே குர்ஆன் வழிகாட்டும்.

கிப்லா மாற்றப்பட்ட போது முஸ்லிம்களுக்குள் ஊடுருவி இருந்த பல முனாஃபிக்குகளின் உண்மை முகம் வெளிப்பட்டது.

அப்படித்தான் இன்று பிஜே என்ற ஒரு மடையன் சரியான பலமான பல ஹதீஸைகளை விமர்சனம் செய்கிறபோது நபியின் மீது நம்பிக்கை கொண்ட முஃமின்கள் யார், நபியின் மீது சந்தேகம் உள்ள நயவஞ்சகமுடைய குதர்க்கவாதிகள் யார் என்பது தெளிவாகி விடுகிறது. 

 ஒவ்வொரு கெட்ட சோதனையிலும் ஒரு நன்மை இருக்கும்.

அப்படித்தான் இந்த பிஜே என்ற வழிகேடனின் வழிகேட்டின் சோதனையும்.

இந்த சோதனையில் ஹதீஸ்களை நம்பிக்கை கொண்ட முஃமின்கள் யார்? அதை மறுக்கக்கூடிய நிராகரிப்பாளர்கள் யார் என்பது வெளிப்படையாகி விடுகிறது.

ஸல்மான் ருஷ்தியை விடவும் தஸ்லிமா நசுரீனை விடவும் ரஷாத் கலீஃபாவை விடவும் ஆபத்தானவன் பிஜே. அவர்கள் எல்லாரும் இஸ்லாமிற்கு வெளியிலே சென்று  இஸ்லாமையும் நபியையும் விமர்சனம் செய்தார்கள். இவனோ இந்த பிஜே என்ற மூடனோ குர் ஆன் ஹதீஸ் தூய மார்க்கம் என்று சொல்லியே மக்களை வழிகெடுக்கிறான். 

குழம்பிபோன இவனுடைய குறுகிய புத்திக்கு புரியாத ஹதீஸ்களை ஒட்டு உம்மத்தும் மறுக்க வேண்டும் என்று ஊளை இடுகிறான் இந்த முட்டாள். 

முன்னுக்கு பின் முரணாக பேசுகிற இவனுக்கு என்னை விட அறிவாளி வேறு யார் இருக்க முடியும் என்ற பெருமை தலைக்கு உச்சத்தில் ஏறி இருக்கிறது.  இதே பெருமைதான் இப்லீஸை வழிகெடுத்தது.  அதே பெருமைதான் இந்த பிஜேவை குஃப்ரில் தள்ளிக் கொண்டு இருக்கிறது. 

(அல்லாஹ்விற்கும் நபிக்கும்) செவிற்றோம், கீழ்ப்படிந்தோம், செவியுற்றோம் நம்பிக்கை கொண்டோம் என்று சொல்லுங்கள் என குர் ஆன் சொல்கிறது.   இவனோ ஒரு புதிய கொள்கையை உம்மத்தில் புகுத்துகிறான், புரிந்தால் தான் நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் என்று. 

ஓஷேவிற்கு பின்னாலும் ஜக்கிக்கு பின்னாலும் நித்யானந்தாவிற்கு பின்னாலும் படித்தவர்கள் செல்வது எப்படியோ அப்படித்தான் இந்த பிஜேவிற்கு பின்னால் முஸ்லிம்கள் செல்வதும்.  புத்தி இருந்தால் அதை பயன்படுத்தாமல் சாமியார்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் செல்வதை போன்றுதான் நேர்வழி கிடைத்திருந்தும் பிஜேவிற்கு பின்னால் சென்று ஒரு கூட்டம் வழிகெடுகிறது.  

நாமோ நம்பிக்கையின் பக்கம் அழைக்கிறோம். பிஜேவும் அவனது அடிவருடிகளோ நிராகரிப்பின் பக்கம் அழைக்கிறார்கள்.  நாமோ ஹதீஸ்களை கண்ணியப்ப்டுத்த அழைக்கிறோம். முட்டாள் பிஜேவோ ஹதீஸ்களை விமர்சிக்கவும் இழிவுபடுத்தவும் அழைக்கிறான்.  

மூஸா நபியை விட்டு மக்களை வழிகெடுத்த பிர்அவ்ன் சொன்னான், நான் உங்களுக்கு நேர்வழிதான் காட்டுகிறேன் என்று. அப்படித்தான் ஹதீஸ்களை மறுப்பதின் மூலம் நபியை விட்டு உங்களை வழிகெடுக்கிற பிஜே சொல்கிறான் அவன் உங்களுக்கு மார்க்கத்தை சரியாக போதிக்கிறான் என்று. 

இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்பட்ட அத்தனை குற்றவியல்  தண்டனைகளுக்கும்  முழு தகுதி உள்ள, ஹதீஸ்களை மறுக்க தூண்டுகிற இந்த பிஜேவை நீங்கள் பின்பற்றுவது எப்படி என்றால் நபியின் காலத்தில் பலர் நபியை விட்டுவிட்டு அப்துல்லாஹ் இப்னு உபை என்ற நயவஞ்சகனுக்கு பின்னால் செம்றது போன்றுதான்.  அன்று அந்த நயவஞ்சகர்கள் நபியை விட்டு இப்னு உபை பின்னால் சென்றார்கள். இன்று இந்த முட்டாள்கள் ஸஹீஹான ஹதீஸ்களை விட்டு பிஜே என்ற கிருக்கனுக்கு பின்னால் செல்கிறார்கள். 

உலகத்தில் வழிகெடுப்பவர்களும் பொய்யர்களும் தோன்றி கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு பின்னால் செல்லப்போகிறீர்களா? இல்லை, நபிக்கு பின்னால் வரப்போகிறீர்களா? 

பிஜே உங்களுக்கு நம்பிக்கைக்கு பதிலாக நிராகரிப்பை போதுக்கிறான்.  ஒழுக்கத்திற்கு பதிலாக கெட்டதை போதிக்கிறான்.  அவனது வேலை ஷைத்தானின் வேலைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை. 

ஆபாச விமர்சனங்களின் தந்தை பிஜே. ஈமானுக்கு பதிலாக குஃப்ரை பரப்புகிற, குஃப்ரின் பக்கம் அழைக்கிற நரகத்தின் அழைப்பாளன் பிஜே. விஷம் கலக்கப்பட்ட தேனை அல்லது பாலைபோலதான் பிஜேவின் பேச்சுகளும் எழுத்துகளும். ஷிர்க்கையும் பித்அத்தையும் எதிர்த்தல் என்ற தேனோடு ஸஹீஹான ஹதீஸ்களை சந்தேகித்தல் அல்லது மறுத்தல் என்ற குஃப்ரை உங்களுக்கு போதிப்பவன்.  

ஜஹ்மிய்யா, கதரிய்யா, ஜப்ரிய்யா, காரிஜிய்யா, முஃதஸிலா, முர்ஜிஆ, ஷீஆ, ராஃபிழா ஆகிய வழிகெட்ட கூட்டத்தின் கலப்படமான ஒரு புரடக்‌ஷந்தான் பிஜேவின் சிந்தனை சரக்குகள். குர் ஆனில் வர்ணிக்கப்பட்ட ஒவ்வொரு வழிகேடனின் குணங்களும் பண்புகளும் அப்படியே பிஜேவிற்கும் அவனின் அடிவருடிகளுக்கும் முற்றிலிம் சரியாக பொருந்தும்படி இருக்கும். சிந்தித்து பருங்கள்.  

பிஜே அண்ணனின் கொள்கை தம்பிகளுக்கு!!

மார்க்கத்தில் குர் ஆன் ஹதீஸுக்கு நபியவர்களின் மாணவர்களாகிய, அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகிய,  சொர்க்க வாசிக்ஃள் என்று சான்றளிக்கப்பட்டவர்களாகிய, நேர்வழி பெற்றவர்கள் குர் ஆனின் வாயிலாக உறுதி செய்யப்பட்டவர்களாகிய ஸஹாபாக்கள் சொல்கிற விளக்கத்தை ஏற்கவேண்டும் என்று நாங்கள் சொன்னால் எங்களை வழிகேடர்கள் என்று கூறுகிறீர்கள். ஸஹாபாக்கள் மார்கத்தில் யார் என்று கேட்கிறீர்கள்.  

ஆனால், அதே நேரம் உங்கள் அண்ணனின் அற்புதமான(?) அறிவுரையை கேட்டு ஆதரப்பூர்வமான ஹதீஸ்களே மறுக்கிறீர்கள்.  உங்கள் அண்ணன் எத்தகையவர் என்பதை அவரின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டறியுங்கள். மார்க்கம் சொல்ல தகுதியற்றவர் என்று தனது கொள்கைவாதிகளால் கேவலமாக விரட்டியடிக்கப்பட்ட அவர் மார்க்கத்தில் குர் ஆன் ஹதீஸுக்கு விளக்கம் உங்களுக்கு சொல்லலாம்.  அதை நீங்கள் நம்புவீர்கள். ஆனால் ஸஹாபாக்களின் விளக்கதை நம்ப மாட்டீர்கள். வழிகேடன் என்று அவரின் கொள்கைவாதிகளாலும் அவர் உருவாக்கிய மாணவர்களாலும் உறுதி செய்யப்பட்ட அவர் உங்களுக்கு மார்க்கத்தில் முன்னோடி, அவர் கூற்றை வைத்து ஸஹீஹான ஹதீஸை கூட நீங்கள் மறுக்கிறீர்கள். அல்லாஹு ம் ரஸூலும் சான்று கொடுத்த ஸஹாபாக்கள் உங்களுக்கு முன்னோடிகள் இல்லை. அவர்களின் விளக்கம் உங்கள் பார்வையில் வழிகேடு என்று ஆகிவிட்டது. 

என்னே விந்தையாக இருக்கிறது உங்கள் மார்க்க அறிவு!!

ஸஹாபாக்களின் மார்க்க விளக்கமானது அவர்களின் சுய கருத்து! ஆனால், உங்கள் அண்ணன் பிஜேவின் விளக்கம் மார்க்கத்திற்கு உண்மையான விளக்கம்!!! 

உங்களை விட புத்தி குழம்பியவர்கள் உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். சங்கியாக இருப்பவனுக்கு புத்தி வேலை செய்யாது என்பது போல பிஜேவிற்கு முகல்லிதாக ஆகிவிட்டால் புத்தி வேலை செய்யாது போலும். 

ஸஹாபாக்களுக்கு அல்லாஹ்வும் ரஸூலும் அங்கீகாரம் கொடுத்தார்கள்.  உங்கள் அண்ணனுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தது? சொல்லுங்கள்.  

முன்பு உங்கள் அண்ணன் உங்களை ஸஹீஹான ஹதீஸின் பக்கம் அதை பின்பற்ற அழைத்தார். இப்போது ஸஹீஹான ஹதீஸை மறுக்க அழைக்கிறார்! உங்களுக்கு அறிவு இருந்தால் சிந்தித்து பாருங்கள்.

பி.ஜேவின் வக்கீல்களிடம் சில நிமிடம்!

ஒருவருக்கு நீங்கள் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கும்போது, "நான் இஸ்லாமை ஏற்கிறேன். ஆனால், ஹதீஸ்களில் எனது அறிவுக்கு புரியாததை நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் அவருக்கு ஷஹாதா சொல்லிக் கொடுப்பீர்களா? அல்லது, இப்படி சொல்வீர்களா, அதாவது, இப்போது மறுக்காதே, நீ முதலில் இஸ்லாமை முழுமையாக நம்பி ஏற்றுக்கொள். பிறகு, நீ ஒரு மதரஸாவில் பல வருடம் படி, பிறகு பல வருடம் தஹ்ஹீது பிரச்சாரம் செய், ஷிர்க்கையும் பித்அத்தையும் எதிர்த்து பல ஆண்டு பிரச்சாரம் செய், அதற்கு பிறகு, ஸஹீஹான ஹதீஸ்களில் எது உனது அறிவுக்கு ஒத்துவரவில்லையோ, எது உனது அறிவின் படி அறிவியலுக்கு முரன்படுகிறது என்று முடிவு செய்கிறாயோ, எது இஸ்லாமிய அடிப்படைக்கு முரண்படுவதாக நீ புரிகிறாயோ அந்த ஸஹீஹான ஹதீஸ்களை நீ மறு, நாங்களும் உன்னோடு சேர்ந்து அந்த ஹதீஸைகளை மறுப்போம்" இப்படி நீங்கள் சொல்வீர்களா? இதுதானே இன்று பி.ஜே உடைய விஷயத்தில் நீங்கள் செய்கிறீர்கள். 

ஒருவர் அறிவை முன்னிறுத்தி, இஸ்லாமை ஏற்பேன், என் அறிவுக்கு புரியாத ஹதீஸ்களை நான் மறுத்துவிடுவேன் என்று சொன்னால் அவரை இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்க மறுக்கும் நீங்கள் ஒருவர் தனது சுய புத்திக்கு ஏற்ப ஒரு காரணத்தை கூறி ஸஹீஹான ஹதீஸை மறுக்கிறார், அவரை உங்கள் மார்க்க வழிகாட்டி என்று எப்படி ஏற்கிறீர்கள்?? புத்தி இல்லையா உங்களுக்கு? 

அல்லது இத்தனை ஆண்டுகாலம் அவர் மார்க்க கல்வி படித்தார், மார்க்க பிரச்சாரம் பல ஆண்டுகள் செய்தார், ஷிர்க்கிற்கு எதிரான கடுமையான பிரச்சாரம் செய்து தவ்ஹீதின் பக்கம் மக்களை பல ஆண்டுகளாக அழைத்து வந்தார், ஆகவே, இப்போது அவருக்கு அபரிவிதமான மிகப்பெரிய ஞானம் வந்துவிட்டது, ஆகவே அவர் எதை சொல்கிறாரோ அதைத்தான் ஹதீஸ் என்று நாங்கள் நம்பிக்கை கொள்வோம், இப்போது அவருக்கு ஸஹீஹான ஹதீஸ்களை அவை உண்மையில் சரியா தவறா என்று பிரித்தரியும் அளவிற்கு மிகப்பெரிய கல்வி கிடைத்து விட்டது. எனவே, அவர் மறுக்கும் ஹதீஸ்கள் எல்லாம் ஹதீஸாக இருக்க முடியாது என்று நம்பிக்கை கொள்கிறீர்களா? உங்கள் புத்திக்கு என்ன நேர்ந்தது? இதுதான் நீங்கள் புரிந்து கொண்ட இஸ்லாமா? உங்கள் இறை நம்பிக்கை இதைத்தான் போதிக்கிறதா?

உறுதியான நம்பத்தகுந்த மிகப்பெரிய கல்வியாளர்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்கள் ஹதீஸ்கள் விஷயத்தில் கடைபிடிக்காத பேனுதலை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது, ஸஹாபாக்கள், தாபியீன்கள், ஹதீஸ், பிக்ஹ் கலை அறிஞர்கள் ஆகிய இவர்கள் அனைவரையும் விட உங்கள் அண்ணனுக்கு அறிவும் தக்வாவும் பேனுதலும் அதிகம் என்று சொல்ல வருகிறீர்களா?  

செம்மறி ஆட்டு மந்தைகளாக இருக்காதீர்கள்! நீங்கள் உண்மையில் நபியை விட பிஜேவை உயர்வாக நம்பிக்கை கொண்டு விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வழிகேடுகளும் நிராகரிப்புகளும் பலவிதம். ஷைத்தான் உங்கள் கொள்கையை உங்களுக்கு அலங்கரித்து அதை அறிவாக காட்டுகிறான். அறிவு என்பது அல்லாஹ்வும் ரஸூலும் சொல்வதில்தான் இருக்கிறது. குர்ஆனை விட்டும் ஸுன்னாவை விட்டும் அறிவு பிரிந்து விட்டால் அது அறிவாக இருக்காது. அது வழிகேடாக ஆகிவிடும். அல்லாஹ்விடம் இரண்டுதான் இருக்கிறது. ஒன்று நேர்வழி, இன்னொன்று வழிகேடு. எதை தூதர் சொன்னாரோ அதுதான் நேர்வழி. யார் தூதர் சொன்னதை மறுக்கிறாரோ அது வழிகேடுதான்.

அல்லாஹு தஆலா கூறுவதை கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள்!

யா சீன். ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர். நேரான பாதையின் மீது இருக்கிறீர். (36:1-4)

இன்னும், (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கமே அழைக்கிறீர். (23:73)

(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது, உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.) இன்னும், அவர், மன இச்சையால் பேச மாட்டார். இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை. (53:1-4)

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-மார்க்கத்தை எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். இன்னும், தூதர் மீது கடமை இல்லை, (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர. (24:54)

அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர். யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவாரோ; இன்னும், அல்லாஹ்வை பயப்படுவாரோ; இன்னும், அவனை அஞ்சி நடப்பாரோ அ(த்தகைய)வர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்.  (24:51-52)

ஸஹீஹான ஹதீஸ்களை சகட்டுமேனிக்கு கண்மூடித்தனமாக மனம்போனபோக்கில் மறுக்கக்கூடிய நீங்கள், “நபியவர்களை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள் என்று சொல்வதும் நபியவர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்கள் என்று சொல்வதும்” மிக மிக வேடிக்கையாக இருக்கிறது.

ஸஹாபாக்களின் கூற்றுகள் ஹதீஸுக்கு மாற்றமாக இல்லை என்றால், அல்லது ஹதீஸுக்கு ஸஹாபாக்கள் விளக்கம் சொன்னால் அதை ஏற்கலாம் என்று நாங்கள் சொல்வதால் எங்களை ஹதீஸ்களை பின்பற்றாதவர்கள், ஸஹாபாக்களின் முகல்லிதுகள், ஸஹாபாக்களை மூன்றாவது ஆதராமாக ஆக்கிவிட்டீர்கள் என்று விமர்சனம் செய்கிறீர்களே, கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள்! நீங்களோ உங்கள் அண்ணன் சொன்னார் என்பதற்காக பல ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்துள்ளீர்களே, இன்னும் பல ஹதீஸ்களை வருங்காலத்தில் மறுக்க தயாராக இருக்கிறீர்களே உங்களுக்கு என்ன பெயர் சொல்வது?? நிங்கள் செய்கிற, நீங்கள் பேசுகிற பேச்சின் விபரீதம் தெரியாமல் நீங்கள் இருக்கிறீர்கள். அல்லது உங்கள் உள்ளத்தில் நயவஞ்சமும் குஃப்ரும் குடிகொண்டு விட்டன.

பி.ஜேவிற்கு நாம் மறுப்பு தெரிவிக்கும்போது கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்கிற மேதாவிகள் சிந்திக்க மாட்டார்களா? மூத்த அறிஞர் தவ்ஹீதின் புரட்சியாளர் பிஜே அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களையும் ஸஹாபாக்களயும் இமாம்களையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து அந்த உரைகளை யூடியூபிலும் பேஸ்புக்கிலும் பரப்பியபோது உங்களுக்கு கோபம் வரவில்லை, ஆவேசம் வரவில்லை, வருத்தம் வரவில்லை.  உங்கள் இமாம் பிஜேவின் அந்த அயோக்கியத்தனமான கருத்துகளுக்கு நான் மறுப்பு தெரிவிக்கும்போது மட்டும் நாகரிகம் பேச வந்துவிட்டீர்கள், அவருக்கு வக்காலத்து வாங்க குதித்து விட்டீர்கள், உங்களுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது, ஆவேசம் அணையை உடைத்துக்லொண்டு பாய்கிறது, கோபம் தலை உச்சிக்கு ஏறுகிறது. என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆசுவாசப்படுகிறீர்கள். அண்ணனின் மடமை வெளிப்பட்டு விட்டதை நினைத்து பொங்குகிறீர்கள். 

உண்மையில் உங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஈமான் இருந்திருந்தால், குர்ஆன் தவறாக எழுதப்பட்டுள்ளது என்று அவர் சொன்னபோது உங்களுக்கு கோபம் வந்திருக்கும்! உங்களுக்கு அப்போது கோபம் வரவில்லை. ஏனெனில் உங்கள் ஈமான் உங்கள் இமாம் அண்ணன் பி.ஜேவின் மீதுதான் இருந்தது. 

உண்மையில் உங்களுக்கு நபியின் மீது ஈமானும் அன்பும் மதிப்பும் இருந்திருந்தால், ஸஹீஹான ஹதீஸ்களை அவர்  சகட்டு மேனிக்கு விமர்சித்தபோதும் மறுத்தபோதும் ஸஹாபாக்களை தரக்குறைவாக பேசியபோதும் வந்திருக்கும்.  ஆனால், உங்களுக்கு அப்போது கோபம் வரவில்லையே! ஏன்? ஏனெனில் உங்களுக்கு நபியின் மீது ஈமானில்லை. உங்கள் அண்ணனின் மீதுதான் ஈமான் அதிகம். ஆம், நபிக்கு தெரியாத நுணுக்கமான ஷிர்க்கை கூட பேரறிஞர் அண்ணன் தானே உங்களுக்கு காண்பித்து கொடுத்தார்! அதனால் அவர் மீதுதானே உங்களுக்கு ஈமான் அதிகமாக இருக்கும். நபியை விட அண்ணன் மீது அன்பு அதிகம் இருப்பதால்தான் அண்ணனின் கூற்றுகள் விமர்சிக்கபடும்போது உங்களுக்கு கோபம் ஆவேசம் பொத்துக் கொண்டு வருகிறது. 

மொத்தத்தில் சுருக்கமாக சொல்கிறேன், நீங்கள் வேறு உம்மத், நாங்கள் வேறு உம்மத். நாங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத். நீங்கள் பி.ஜே உடைய உம்மத். 

அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் துரோகம் செய்த கூட்டம் நீங்கள்! 

பிரிந்து போன ஒவ்வொரு கூட்டமும் ஒரு போதும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள்.  தங்கள் தலைவர்களுக்குத்தான் அந்த கூட்டம் கீழ்ப்படிவார்கள். 

தப்லீக் ஜமாத் கூட்டம், டெல்லி ஹஜ்ரத் ஜீ சொன்னால்தான் எதையும் செய்வார்கள். 

தரீக்கா கூட்டம், தங்கள் ஷைக்குகளுக்கு மட்டும்தான் செவி சாய்ப்பார்கள்.  ஷைக் சொல்வதுதான் அவர்களுக்கு மார்க்கம். அதை தவிர யார் சொன்னாலும் அதற்கு செவி கொடுக்கவே மாட்டார்கள்.  

அப்படித்தான் பிஜே உருவாக்கிய இந்த (போலி) தவ்ஹிது கூட்டமானது ஒரு போதும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்ப்படியவே மாட்டார்கள். பிஜே தான் அவர்களுக்கு எல்லாம். குர்ஆன், ஸுன்னா எல்லாம் பிஜே சொன்னால்தான். 

பிஜே இன்றி மார்க்கமில்லை. பிஜே சொன்னால்தான் அது ஹதீஸ், பிஜே சொன்னால்தான் அது மார்க்கத்திற்கும் குர்ஆனுக்கும் விளக்கம். முன்னோரில் வேறு எத்தகைய உயர்வான மார்க்க அறிஞர் எவ்வளவு ஆதாரத்துடன் கூறினாலும் அது இவர்களின் காதுகளில் விழவே விழாது. 

இவர்கள் பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதற்கு பிஜே சொல்கிற ஒவ்வொன்றும் சரி என்று இவர்கள் ஒப்புக்கொள்வதே போதுமானதாகும். 

தவ்பா செய்யுங்கள்! இல்லை என்றால் இழிவடைவீர்கள். 

அல்லாஹ்வே எங்களை நேர்வழியில் செலுத்து. எங்களை வழிகேடுத்து விடாதே! வழிகேடனுக்கு பின்னால் எங்களை விட்டுவிடாதே. உனது அருள் இல்லை என்றால் நாங்கள் வழிகேட்டு விடுவோம்.  எங்கள் உள்ளங்களை நேர்வழியில் உறுதிபடுத்து.  ஆமீன்.




أحدث أقدم