ஜம்உ - கஸ்ர் தொழுகை பற்றி அறிந்து கொள்ளுவோம்

பயணம் என்பது ஒரு வேதனையின் ஒரு பகுதி ஆகும்! அதில் நமக்கு கஷ்டம் நெருக்கடி உடல் அசதி அலச்சல் என அனைத்தும் ஏற்படும் இது போன்ற நேரத்தில் தொழுவது பலருக்கு கடினமான இருக்கும்!

பயணத்தில் போக கூடிய இடத்தில் தொழ கூடிய வசதி இருக்காது அல்லது சூழ்நிலை இருக்காது இதனால் தான் அல்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு ஜம்உ கஸ்ரை கடமையாக்கினான்!

ஜம்உ கஸ்ர் தொழுகை என்பது நாம் பயணத்தில் தொழுகையை சேர்த்தோ அல்லது சுருக்கியோ அல்லது தொழுகையை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுவது ஆகும்!

ஜம்வு என்றால் சோ்த்தல் என்று பொருள் ஆகும்! அதாவது பயணத்தில் ளுஹரையும், அஸரையும் சோ்த்து தொழுவது அதே போன்று மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவது ஆகும்! 

கஸா் என்றால் சுருக்குதல் என்று பொருள் ஆகும்! அதாவது பயணத்தில் நாம் நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர் - அஸர் - இஷா) இரண்டு ரக்ஆத்துகளாக சுருக்கி தொழுவது ஆகும்!

உதாரணமாக : லுஹர் 4 ரக்அத்தை இரண்டு ரக்ஆத் ஆக சுருக்கி தொழுவது ஆகும்!

பயணத்தில் உள்ளவர்கள் அல்லது பயணம் செய்ய கூடியவர்கள் கட்டாயம் ஜம்உ - கஸ்ர் செய்ய வேண்டும் என்று கிடையாது! அவர்களுக்கு இடம் சூழ்நிலை நேரம் ஏற்றதாக இருந்தால் அவர்கள் முழுமையாக தொழுகலாம்!

கஸா் (சுருக்கி தொழுதல்) :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும் போது நான்கு ரக்அத்களாகவும்,பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்!

(நூல் : முஸ்லிம் : 1223)

நாம் ஊரில் இருக்கும் பொழுது தொழுகை சுருக்கி தொழ கூடாது! பயணத்தில் மட்டுமே தொழுகையை சுருக்கி தொழ வேண்டும்!

அதாவது லுஹர் - அஸர் - இஷா இந்த மூன்று தொழுகைகளில் ஏதேனும் ஒன்று அல்லது மூன்றையும் பயணத்தில் தொழ நேரிட்டால் நாம் 2 ரக்ஆத்களாக தொழுது கொள்ளலாம்!

(நூல் : முஸ்லிம் : 1220)

ஆனால் பஜ்ர் மற்றும் மஹ்ரிப் தொழுகையை மட்டும் அவ்வாறு சுருக்கி தொழ கூடாது! இருப்பதை அப்படியே தொழ வேண்டும்!

கடமையான தொழுகைகளின் முன் மற்றும் பின் சுன்னத் தொழுகையை சுருக்கி தொழலாமா?

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் பர்ளு தொழுகைகள் (லுஹர் - அஸர் - இஷா) ஆகிய தொழுகைகளை மட்டுமே சுருக்கி தொழுது உள்ளார்கள்!

இவற்றின் முன் - பின் சுன்னத் தொழுகைகளை நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தொழுதது கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 1227)

பஜ்ர் முன் சுன்னத் மற்றும் லுஹர் முன் சுன்னத் 2 ரக்அத் மற்றும் வித்ரு வாஜிப் ஆகிய மூன்று உபரியான தொழுகையை மட்டும் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் கூட தொழுது உள்ளார்கள்!

(நூல் : அபூதாவூத் : 1222)

எவ்வளவு தூரம் பயணம் செய்தால் இந்த கஸ்ர் தொழுகை நமது மீது கடமை ஆகும்?

நபி (ஸல்) அவர்கள் மூன்று ஃபா்ஸக் தூரம் அளவுக்கு பயணத்தில் செய்தால் தொழுகையை சுருக்கி தொழுது உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1230)

ஒரு ஃபா்ஸக் என்பது மூன்று மையில்களாகும். மூன்று ஃபா்ஸக் என்பது ஒன்பது மையில்களாகும். அதாவது கிட்டதட்ட இருபது கிலோ மீட்டா் துாரமாகும்!

அதே போன்று இந்த கஸ்ர் தொழுகை தொழ ஊர் எல்லையை தாண்டி தான் தொழ வேண்டும் என்று எந்த நிபத்தனையும் கிடையாது! நபி (ஸல்) அவர்கள் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்பே கஸ்ர் செய்து உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1231)

தூரம் பற்றி நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன! ஒரு இடத்திற்கு அல்லது ஒரு வேலையின் காரணமாக ஒரு இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொள்ள போகிறோம் என்றால் அப்போது நாம் ஜம்உ கஸ்ர் செய்து கொள்ளலாம்! 

எத்தனை நாட்கள் நாம் சுருக்கி தொழுகலாம் :

இவ்வளவு நாட்கள் தான் தொழுகையை சுருக்கி தொழ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எந்த நிபந்தனையும் நமக்கு வகுக்க வில்லை!

நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தா்பத்தில் மக்காவில் 10 நாட்கள் தங்கி போது 10 நாட்களும் கஸ்ர் செய்துள்ளா்ர்கள் அதே போன்று மற்றொரு முறை 19 நாட்கள் தங்கியதற்காக 19 நாட்களும் கஸா் செய்துள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1233)

எனவே நாம் எவ்வளவு நாட்கள் பயணம் செய்கிறோமோ அத்தனை நாட்களும் நாம் தொழுகையை சுருக்கி தொழகலாம்!

வேலைக்காக ஏதேனும் ஒரு ஊரில் நாம் தங்கி வருடக்கணக்கில் வேலை செய்ய போகிறோம் என்றால் அந்த இடத்தில் நாம் தொழுகையை சுருக்கி தொழ வேண்டிய அவசியம் கிடையாது! ஏன் என்றால் தங்கி உள்ள இடத்திலேயே நாம் தொழுது கொள்ளலாம்!

அதே போன்று நாம் தங்கி இருக்கும் இடத்திலிருந்து 20 கிலோமீட்டர்க்கு விட அதிகம் பயணம் செய்தால் மட்டும் நாம் தொழுகையை சுருக்கி தொழுகலாம்!

பயணத்தில் ஜமாத் உடன் தொழ நேரம் கிடைத்தால் ஜமாத் உடன் தொழ வேண்டும்! அந்த நேரத்தில் கஸ்ர் செய்ய கூடாது!

பயணிகள் மட்டும் ஜமாத் தொழுகை நடத்தினால் அப்போது அவர்கள் சுருக்கி தொழுது கொள்ளலாம்!

ஜம்உ (சேர்த்து தொழுதல்) :

நாம் ஏதேனும் பயணத்தில் இருந்தால் அல்லது அவசர பயணம் செல்ல போவதாக இருந்தால் பர்ளு தொழுகை தவறி விடும் அல்லது தொழ முடியாத சூழ்நிலை என்றால் அந்த நேரத்தில் நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்!

அதே போன்று தகுந்த காரணம் அல்லது நிர்ப்பந்த சூழ்நிலை இருந்தால் ஊரிலயே நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்!

அதாவது லுஹர் நேரத்தில் அஸரையும் அல்லது அஸர் நேரத்தில் லுஹரையும் நாம் சேர்த்து நமது பயணத்திற்கு ஏற்றால் போல் தொழுது கொள்ளலாம்!

அதே போன்று மஹ்ரிப் நேரத்தில் இஷாவையும் அல்லது இஷா நேரத்தில் மஹ்ரிப்பையும் சேர்த்து நமது பயணத்திற்கு ஏற்றால் போல் தொழுது கொள்ளலாம்!

(நூல் : அபூதாவுத் : 1220 & முஸ்லிம் : 1266)

அதவாது பயணியின் வசதிக்கு ஏற்றவாறு தொழுகையை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ தொழுகலாம்!

ஜம்உ (சேர்த்து தொழுதல்)  எப்போது நமது மீது கடமை ஆகும்?

ஜம்உ நாம் மூன்று காரணங்களுக்கு தொழுகைகளை சேர்த்து தொழுகலாம்!

1)  பயணம்

2)  அச்சம்

3) மழை 

(நூல் : முஸ்லிம் : 1272)

இந்த மூன்று காரணங்களும் இல்லாமல் கூட நாம் நமது ஊரில் ஜம்உ செய்து கொள்ளலாம்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்! மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்த காரணம் :  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறினார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1272)

உதாரணமாக : இப்போது நமது ஊரில் ஏதேனும் முக்கிய  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மஃரிபு தொழுகைக்கு நேரம் ஒதுக்குவது பின்பு மீண்டும் இஷாவிற்கு ஒரு நேரம் ஒதுக்குவதால் இதனால் நிகழ்ச்சி நீண்டு கொண்டு போகும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது! 

மஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழுது விட்டால் அல்லது இஷா நேரத்தை பிற் படுத்தினால் அனைவருக்கும் இது இலகுவாக அமைந்து விடும்!

அதுமட்டுமல்ல பலர் நிகழ்ச்சி முடிந்து களைப்போடு வீட்டிற்கு சென்று இஷாவை தொழாமலே உறங்கி விடுவார்கள்! இப்படியான சூழ்நிலையில் நாம் ஜம்உ செய்து கொள்ளலாம்! ஆனால் சுருக்கி தொழ கூடாது!

ஜம்உ - கஸ்ர் : பாங்கு இகாமத் உண்டா?

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) கூறினார்கள் : 

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள். 

(நூல் : புகாரி : 2848)

பயணத்தில் இருக்க கூடியவர்கள் தமக்கு கேட்கும் அளவுக்கு பாங்கு கூறி தொழுகலாம்!

ஜம்உ - கஸ்ர் செய்வதாக இருந்தால் ஒரு பாங்கு கூறி ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் கூறி சுருக்கி தொழுது கொள்ளலாம்!

உதாரணமாக :

பொதுவாக ஒரு பாங்கு கூறி இகாமத் கூறி லுஹர் 2 ரக்ஆத் தொழுது விட்டு பின்பு மீண்டும் இகாமத் கூறி அஸர் 2 ரக்ஆத் தொழுது கொள்ள வேண்டும்! 

பயணத்தில் கிப்லாவின் பக்கம் தெரியவில்லை என்றால் :

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கழுதையில் இருந்தவாறு தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்!

(நூல் : முஸ்லிம் : 1253)

நாம் வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது முன் பின் சுன்னத், நபில், வாஜிபு ஆகிய தொழுகைகளை வாகனத்தில் இருந்தவரே வாகனம் இருக்கம் திசையிலேயே நாம் தொழுகலாம்!

ஆனால் கடமையான தொழுகை நேரம் வந்தால் வாகனத்தை நிறுத்தி கிழே இறக்கி தான் தொழ வேண்டும்! நிர்பந்த சூழ்நிலை அவ்வாறு தொழ முடியாது என்றால் மட்டும் நாம் வாகனத்தில் தொழுது கொள்ளலாம்!

(நூல் : புகாரி : 1000)

அதே போன்று வாகனம் செல்லும் திசையிலேயே நாம் அமர்ந்த வாறு அல்லது நின்ற நிலையில் நாம் தொழுது கொள்ளலாம்!

பயணத்தில் கிப்லா திசை தெரியவில்லை என்றால் நாம் ஏதேனும் ஒரு திசையில் தொழுகலாம்!

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்!

(அல்குர்ஆன் : 2:115)

பயணத்தில் உள்ளவர்கள் அல்லது வெளியூருக்கு செல்ல கூடியவர்களுக்கு காபாவின் திசை தெரியாத சூழ்நிலையில் அவர்கள் எந்த திசையில் வேண்டும் என்றாலும் தொழுகலாம் அவர்கள் தொழுகை கூடும்!

-அல்லாஹ் போதுமானவன்
أحدث أقدم