வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

 – முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா) –


வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்’ (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள்.

கணவனுக்கு பகரமாக பெண் வீட்டார் விருந்தளிக்கலாமா?

கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம் அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை

عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ

صحيح البخاري5182

ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) கூறினார், அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்

கணவன் ஒரு விருந்தும் பெண் வீட்டார் ஒரு விருந்தும் கொடுக்கலாமா?

நபித்தோழர்கள் வாழ்வில் இவ்வாறு எந்த நிகழ்வும் இல்லாதால் இதனை நாம் தவிர்க்க வேண்டும். வீண் விரயாமாக்கப்படும் இப்பணத்தை எழை எளியவர்களுக்கு உணவழித்து அல்லாஹ்-வின் கூலியை எதிர்பர்ப்பது இதை விடச்சிறந்நது.

கணவன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்துச் செல்வது தான் இஸ்லாமியத் திருமணமா?

இது இஸ்லாமியத் திருமணம் பற்றிய அறிவில்லாதவர்களின் கண்டுபிடிப்பு. அல்-குர்ஆனிலோ ஸுன்னாவிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மாற்றமாக நபியவர்களுக்கும் ஸைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நபியவர்களே ஸைனப் (ரழி) வீட்டிற்குச் சென்றுள்ளார்கள் (முஸ்லிம் 1425)

இது விருந்து யார் வீட்டில் வைப்பது என்பதைப்பற்றிய விளக்கமே தவிர சீதன வீடு பற்றியதல்ல. சீதன வீடு ஒரு பகற்கொள்ளை என்பதில் எந்த ஐயமும் இல்லை

திருமண விருந்து எப்போது கொடுக்கப்படவேண்டும்?

கணவன், மனைவி உறவிற்குப் பிறகுதான் வலீமா என ஸுன்னாவில் எந்த நிபந்தனையும் கிடையாது. திருமண உடன்படிக்கை நடந்தது முதல் திருமண விருந்தளிக்கலாம்.

திருமண உடன்படிக்கையின் போது பயான் செய்வது நபிவழியா?

எந்த ஒரு நல்ல காரியமாயினும் (خطبة الحاجة) குத்பதுல் ஹாஜா-வைக் கொண்டு ஆரம்பிப்பதே நபி வழி. ஆகையால் இதை கொண்டு العقد – – அக்-தை நடத்துவதே சிறந்ததாகும். ஆனால் அதன் பின்னால் உரை நிகழ்த்துவது நபி வழியல்ல. நபியவர்கள் நடத்தி வைத்த எந்தத் திருமணத்திலும் எந்த உரையும் நிகழ்த்தியதில்லை.

العقد – – அக்தை பள்ளியில் நடத்துவது சிறந்ததா?

العقد அக்-தை விரும்பிய இடத்தில் நடத்தலாம். பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்பதாக வரும் திர்மிதீ (1088) ஹதீஸ் பலஹீனமானதாகும்.

திருமணம் முடிந்த பிறகு தம்பதியர்களுக்காக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?

1. بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير) أبوداود 1819)
2. بارك الله لك) البخاري 4758)
3. بارك الله فيكم وبارك عليكم) النسائي 3318)

أحدث أقدم