இஸ்லாமிய வரையறைக்குட்பட்டு குறும்படங்கள் சினிமாக்கள் எடுப்பது எவ்வாறு?

இஸ்லாமிய குறும்படம் கூடும் என்று கூறுபவர்கள் , அந்த குறும்படம் இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தால் அது கூடும் தானே என்கிறார்கள்..

ஆம் இஸ்லாமிய வரையறைக்குள் இருந்தால் அது கூடும் என்று சில அறிஞர்கள் கூறுவது உண்மை தான். அந்த வரையறைகள் என்ன என்பதை கீழே தருகிறோம்..

1.மலக்குகள் மற்றும் ஷைத்தான்கள் போன்று நடிக்கக் கூடாது.

2. மலக்குகள் மற்றும் ஷைத்தான்கள் போன்ற மறைவான விடையங்களை காட்சி படுத்தக் கூடாது.

3.முஸ்லிம் அல்லாதவர் போல் வேசமிட்டு நடிக்கக் கூடாது.

4. மிருகங்கள் போன்று நடிக்கக் கூடாது.

5. நபிமார்கள் ஸஹாபாக்கள்,  போன்று நடிக்கக் கூடாது.

6. பெண் வேடமிட்டு ஆண் நடிக்கக் கூடாது. ஆண் வேடமிட்டு பெண் நடிக்கக் கூடாது.

7.அல்லாஹ்வையோ , நபியையோ, இஸ்லாத்தையோ ஒருவர் கிண்டல் செய்வதை போன்ற வசனமோ நடிப்போ இருக்ககூடாது. அது இஸ்லாத்தை கற்றுக் கொடுக்கம் நோக்கில் இருந்தாலும் சரியே. 

8. இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஹராமான பேச்சுகளை ஒருவர் பேசுவது போன்று நடிக்கக் கூடாது. உதாரணமாக ஒருவர் பொய் சொல்வது போன்றும் புறம் பேசுவது போன்றும் கெட்ட வார்த்தைகளை பேசுவது போன்றும் நடிக்கக் கூடாது.  நீளமான ஆடைகளை அணிவது போன்றும் நடிக்கக் கூடாது.

9. அமல்களை தவறாக செய்து காண்பிப்பதை போன்று நடிக்கக் கூடாது. உதாரணமாக, தவறாக தொழுதுவது போன்றோ தவறாக உளு எடுப்பதை போன்றோ நடிக்கக் கூடாது.

10. தீய அல்லது ஒழுக்கக்கேடான காதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது.

11. முஸ்லிம் உம்மத்தால் மதிக்கப்படும் இமாம்களை போன்று நடிக்கக் கூடாது.

12. தொடர்ச்சியாக இது போன்ற குறும்படங்களை எடுப்பதும் கூடாது. தொடர்ச்சியாக எடுத்து தாவா செய்வதும் கூடாது.

Link :



அதாவது இஸ்லாம் ஹராம் என தடுத்தவைகளை செய்து காட்டி நடிக்க கூடாது என்பது தான் இதன் ஊடாக நாம் தெரிந்துக்கொள்வது..

உதாரணமாக, இஸ்லாம் தடுத்த 

இசையை பயன்படுத்தியும் 
(புஹாரி 5590)

மது அருந்துவது போன்றும்,
(குர்ஆன் 2:219)

தந்தை அல்லாதவரை தந்தை என சொல்வது போன்றும்,
(புஹாரி 3509)

காவி ஆடை அணிவது போன்றும்,
(முஸ்லிம் 4218)

ஒப்பாரி வைப்பது போன்றும்.
(புஹாரி 1306)

இன்னும் இதுபோல இஸ்லாம் தடுத்த விடயங்களை கொண்டு நடித்துக் காட்டக் கூடாது.

குறும்படம் எடுப்பதற்கான இந்த  நெறிமுறைகள் தாண்டி எடுக்கப்படும் அனைத்து குறும்படங்களும்  ஹராம் தான்.
أحدث أقدم