கேள்வி : இஸ்லாத்தில் தொழுகையின் நிலை என்ன?
பதில் : தொழுகை இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாவதாகும்.
கேள்வி : கியாம நாளில் ஒரு அடியான் எதைப் பற்றி முதல் விசாரிக்கப்படுவான்?
பதில் : தொழுகையாகும்.
கேள்வி : தொழுகையின் விட்டவனின் சட்டம் என்ன?
பதில் : காபிர்.
கேள்வி : இதற்கான ஆதாரம் என்ன?
பதில் : (அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைப்பு, இறைமறுப்பு இவற்றிக்கிடையில் ( உள்ள வித்தியாசமாக) தொழுகைவிடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர), நூல்கள் : முஸ்ம் (134),திர்மிதீ (2543), நஸயீ (460), அபூதாவூத் (4058), இப்னுமாஜா (1068), அஹ்மத் (14451), தாரமீ (1205)
நமக்கும் அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். யார் அதை விட்டுவிடுவாரோ அவர் காபிராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ர), நூல் : நஸயீ (459), திர்மிதீ (2545),இப்னுமாஜா (1069),அஹ்மத் (21859)
கேள்வி : நபி ஸல் அவர்கள் மரணிக்கும் தருவாயில் செய்த உபதேசம் என்ன?
பதில் : தொழுகையைப் பற்றியும் அடிமைகளைப் பற்றியும் ஆகும்.
கேள்வி : செயல்களில் சிறந்தது எது?
பதில் : தொழுகையாகும்.
கேள்வி : தொழுகையை அதன் நேரத்தை விட்டு தாமதமாக தொழுபவனின் நிலை என்ன?
பதில் : கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவான்.
கேள்வி : இதற்கான ஆதாரம் என்ன?
பதில் : தொழுகையில் கவனமற்றிருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடு உண்டாகட்டும். அல் குர்ஆன்.
கேள்வி : இந்த வசனத்தில் கூறப்பட்ட ஸாஹீன் என்பதின் அர்த்தம் என்ன?
பதில் : தொழுகையை அதன் நேரத்தை விட்டு தாமதமாக்குதல் என்று பொருளாகும்.
கேள்வி : முனாஃபிக்களுக்கு சுமையாக இருக்கின்ற தொழுகைகள் ஏது?
பதில் : : சுப்ஹு மற்றும் இஷாவாகும்.
கேள்வி : நபி ஸல் அவர்கள் சுப்ஹு மற்றும் இஷா தொழுகையின் சிறப்பை பற்றி என்ன கூறினார்கள்.?
பதில் : சுப்ஹு மற்றும் இஷா தொழுகையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள் என்றால் தவழ்ந்து கொண்டாவது வந்துவிடுவீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதின் சட்டம் என்ன?
பதில் : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவது வாஜிபாகும்.
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதின் சிறப்பு என்ன?
பதில் : ஒருவர் தன்னுடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு சிறப்பானதாகும்.
கேள்வி : இஷா தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதால் என்ன சிறப்பு?
பதில் : யார் இஷா தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுகிறாரோ அவர் இரவில் பாதி நின்று வணங்கியவரைப் போன்றவர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
கேள்வி : சுப்ஹு தொழுகையை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவதால் சிறப்பு என்ன?
பதில் : யார் சுப்ஹு தொழுயை ஜமாத்தோடு சேர்ந்து தொழுவாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணக்கம் செய்தவரைப் போன்றவர்,
கேள்வி : ஜமாத்தோடு சேர்ந்து தொழாதவர்களை நபி ஸல் அவர்கள் என்ன செய்ய நாடினார்கள்.
பதில் : அவர்களுடைய வீடுகளை நெருப்புகளை கொண்டு எரிக்க நாடினார்கள்.
கேள்வி : தொழுகையை பேணி வந்தால் ஏற்படும் நன்மை என்ன?
பதில் : தொழுகையை பேணிவந்தால் கியாம நாளில் அவருக்கு ஆதாரமாகவும் ஒளியாகவும் ஆகும்.
கேள்வி : தொழுகையை பேணாதவரின் நிலை என்ன?
பதில் :கியாம நாளில் காருன், பிர்அவ்ன், உபை பின் கலஃப் போன்றவர்களோடு நரகத்தில் எழுப்பப்படுவான்.
கேள்வி : தொழுகையை பேணுவதின் சிறப்புகளில் சிலதை கூறு?
பதில் : சுவர்க்கம்.
மானக்கேடான அருவருப்பான செயல்களை விட்டும் தடுக்கும்.
பாவங்களை அழிக்கும்
ஈமானை அதிகரிக்கும்
செல்வத்தை அதிகப்படுத்தும்
காரியங்கள் லேசாகும்.
கேள்வி : தொழுகையை விடுவதின் தீங்கு என்ன?
பதில் : நரகம்.
கியாம நாளில் முகம் கருப்படைதல்.
காரியங்களை சிரமாகுதல்
உள்ளம் நெருக்கடியாகுதல்.
கேள்வி : தொழுகை எங்கே கடமையாக்கப்பட்டது? எப்போது?
பதில் : தொழுகை மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்டது.
கேள்வி : ஒரு நாளில் எத்தனை வக்து தொழுகை கடமையாகும்.
பதில் : ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகை கடமையாகும்.
கேள்வி : சுப்ஹுக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : இரண்டு ரக்அத்கள்.
கேள்வி : லுஹருக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : அஸருக்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : மஃரிபிற்கு எத்தனை ரக்அத்கள்.
பதில் : மூன்று ரக்அத்கள்.
கேள்வி : இஷாவிற்கு எத்தனை ரக்அத்கள்?
பதில் : நான்கு ரக்அத்கள்.
கேள்வி : முஸ்லிம்கள் தங்களின் தொழுகையில் எதை முன்னோக்குகின்றார்கள்?
பதில் : முஸ்லிம்கள் தங்களின் தொழுகைகளில் சவூதி அரேபியா, மக்காவில் உள்ள ஹரமை முன்னோக்குகின்றார்கள்.
இந்த கேள்வி பதில்கள் கிதாபுஸ்ஸலாத்தி திப்ல் முஸ்லிமி (அரபு) என்ற புத்தகத்திருந்து எடுக்கப்பட்டவையாகும்.
வெளியீடு : இப்னுகுஸைமா கல்வி பிரிவு.
மொழியாக்கம். : எஸ். யூசுப் பைஜி.