சாலிஹ் அல் ஃ பவ்ஸான் ஹபிலஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் :
நோன்பின் ஆரம்பம் எனபது பாங்கு சொல்லும் முஅத்தினோடு சம்மந்தப் பட்டது அல்ல ஃபஜ்ர் உதயத்தோடு சம்மந்தப் பட்டது . அல்லாஹ் கூறுகிறான் : இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், 2:187 பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; முஅத்தினின் அதானை பொறுத்த மட்டில் வித்தியாசம் ஏற்படும் . சில முஅத்தின்கள் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஃபஜ்ர் உதயமாகுவதற்கு முன் பாங்கு சொல்கிறார்கள். பாங்கிற்கும் சூரியன் உதயமாகுவதற்கு மத்தியில் சாப்பிடுவதோ குடிப்பதோ குற்றமாகாது .சில முஅத்தின்கள் வழமையான முஅத்தின்களைப் போன்று ஃபஜ்ர் உதயமாகும் வரை பிற்படுத்துகின்றார்கள். பாங்கு முற்படுத்தப் படுகிறது என்று யாருக்கு தெரிகின்றதோ அவர் பாங்கிற்கு பிறகு ஃபஜ்ர் உதயமாகும் வரை சாப்பிடுவது கூடும் . நபி (ஸல் ) கூறுகிறார்கள் நிச்சயமாக பிலால் இரவிலே பாங்கு சொல்கிறார் இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். இப்னு உம்மி மக்தூம் கண்தெரியாத மனிதராக இருந்தார் . காலையை அடைந்து விட்டீர் காலையை அடைந்து விட்டீர் என்று சொல்லப்படுகின்ற கின்ற வரை பாங்கு சொல்ல மாட்டார் . ஃபஜ்ர் உதயமானதை தெரிந்துதான் முஅத்தின் பாங்கு சொல்கின்றார் என்று தெரிந்தால் அந்த அதானுக்கு பிறகு உண்பதோ குடிப்பதோ கூடாது .
தமிழில்:யாஸிர் ஃபிர்தௌஸி
அல் ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம்