-உஸ்தாத் SM . இஸ்மாயீல் நத்வி
யார் இந்த வஹ்ஹாபிகள்?
ஒரு முறை சவூதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல்யமான மார்க்க அறிஞரான டாக்டர் முஹம்மத் ஷுவையிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மொரித்தானியா நாட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது , வழியில் மொரோக்கோ நாட்டில் ஆறு நாட்கள் தங்குவதற்கு ஓர் சந்தர்ப்பத்தை பெற்றார்கள்,
அங்கு சிறந்த முறையில் ஷேக் ஷுவையிர் அவர்கள் மொரோக்கோ நாட்டின் உலமாக்களால் வரவேற்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டார்கள்,
அப்பொழுது முக்கியமான உலமாக்கள் மத்தியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த டாக்டர் அவர்களும் ஏனைய மற்ற முரோக்கோவின் உலமாக்களும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒரு அறிஞர் தங்களின் சவூதி அரசாங்கம் மிகச் சிறந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறது முழு உலகத்திலும் முஸ்லிம்களுக்கு பள்ளிவாயில்கள் கட்டித் தருவது இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற பல சேவைகளை செய்கிறார்கள் ஆனால் தங்களுடைய கொள்கையில் "வஹ்ஹாபிய", கொள்கையை மேற்கொள்கிறார்கள் அதை விட்டு விட்டால் சிறந்ததாக இருக்கும் என்ற ஒரு செய்தியை முன் வைக்கிறார்.
அப்பொழுது அங்கு பல மணி நேரங்கள் ஆரோக்கியமான சில உரையாடல்கள் தொடர்கின்றன, அதன் சுருக்கத்தை இங்கு பார்ப்போம் வாருங்கள் !!
டாக்டர் அவர்கள் கேட்கிறார்கள் இந்த அளவுக்கு வெறுப்பைக் கொண்டுள்ள நீங்கள் எதை முன் வைத்து வஹ்ஹாபிகள் வழிகேடர்கள் என்று கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது
அவர் மொரோக்கோ அரசாங்கத்தின் சார்பாக 13வாளியம்களில் மாலிகி மத்ஹபை தழுவிய இஸ்லாமிய மார்க்க சட்டங்களின் ஃபத்வா தொகுப்பு ஒன்று இலவசமாக அனைவருக்கும் வெளியிடப்பட்டிருப்பதை பற்றிச் சொன்னார் .
புத்தகத்தின் பெயர் அல்மிஃயாருல் முஃரப் பீஃ பஃதவா அஹ்லில் மஃரிப்
(المعيار المعرب على فتاوى اهل المغرب )
அஷ்ஷேக் அஹ்மத் பின் முஹம்மத் அல்வன்ஷுரைஸி என்பவர் தொகுத்திருக்கிறார், அதில் இமாம் அலி லுஹமி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது வஹ்ஹாபிகள் கட்டிய பள்ளிகளில் தொழுகலாமா ?
அதற்கு முப்ஃதி லுஹமி அவர்கள் இந்த பிரிவினர் காஃபிரான குழப்பவாதிகள் இவர்களின் பள்ளியை இடிக்க வேண்டும் இந்த சிந்தனை உடையவர்களை உடனே நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது.
இதை என்னிடம் அந்த மொரோக்கவைச் சேர்ந்த அறிஞர் ஆதாரம் காட்டி இந்த முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தியின் வஹாபிய கொள்கையை தானே உங்கள் சவுதி அரேபியாவும் பின்பற்றுகிறது என்று சொன்னார் ,
உடனே அதற்கு டாக்டர் அவர்கள் நிதானமாக பதில் சொன்னார்கள் முப்ஃதி லுஹமி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை அவர் மட்டுமல்ல ஏனைய அந்தலூசிய (ஸ்பெயின்),வட ஆப்பிரிக்க உலமாக்களும் பல காலங்களுக்கு முன்பே இந்த கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என்று அவர் சொன்ன பொழுது அவர்கள் ஆச்சரியத்துடன் என்னை பார்த்தார்கள் !!!
அவ்வாறு இருக்க ஏன் நீங்களும் உங்கள் அரசாங்கமும் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிய கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்று சொன்ன பொழுது டாக்டர் அவர்கள் அற்புதமான முறையில் பதில் கூற ஆரம்பித்தார்கள்...
நான் மறைக்கப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்றை உங்களுக்கு சொல்வதற்கு முன்பாக சற்று வருடங்களை நாம் கணக்கிட வேண்டும் என்று சொல்லியவர்களாக டாக்டர் அவர்கள் தொடர்ந்தார்கள்.....
இமாம் அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலம் ஹிஜ்ரி 1206 ம் ஆண்டு (கிபி 1791) .
இந்த பஃத்வா புத்தகத் தொகுப்பை தொகுத்த அஹ்மத் பின் முஹம்மத் அல்வன்ஷுரைஸி வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 914 ம் ஆண்டு சுமார் 212 வருடங்கள் அல்வன்ஷுரைஸி அவர்களுக்கும் நஜ்தி அவர்களுக்கும் மத்தியில் வித்தியாசம் இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் முப்ஃதி ஸாஹிப் வாழ்ந்து மறைந்த காலம் ஹிஜ்ரி 478 ம் ஆண்டு .
முப்ஃதி ஸாஹிபுகும் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களுக்கும் மத்தியில் நிகழும் கால அளவு 728 வருடங்கள் பழையது.
இவ்வளவு நீண்ட வருடங்களை கொண்ட ஆலிம் பெருமக்கள் எவ்வாறு பின்னால் வர இருக்கக்கூடிய நஜ்தி அவர்களை பற்றி வழிகேடர் காஃபிர் என்று ஃபத்வா தர முடியும் ?
இந்த கேள்வியை முன் வைத்தவுடன் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களும் வாய் மூடி போய்விட்டனர்.
அதற்குப் பிறகு டாக்டர் ஷுவையிர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் ரஸ்த்தும் என்ற அசலான வஹாபிய இயக்கத்தை தோற்றுவித்த அந்த வழிகேடரை பற்றிய செய்திகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இன்றும் நாம் கைவசம் இருக்கும் பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அங்கிருந்த நூலகத்திலிருந்து ஆதாரங்களை காட்டினார்.
ஆல்பஃரட்பில் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கீழேத்திய அறிஞர் (ஓரியன்டலிஸ்ட)
"வட ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய பிரிவினர்கள்"
(الفرق الاسلامية في شمال إفريقية )
என்னும் வரலாறு என்ற புத்தகத்தில் அப்துல் வஹ்ஹாப் பின்
அப்துர் ரஹ்மான் பின் ருஸ்துமைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பதையும் கூடுதலாக ஆதாரத்தை காட்டினார்.
அல்அஃலாமில் இமாம் ஸர்கலியும் இவர் ஹிஜ்ரி 190 ல் மறைந்தார் என்ற தகவலை குறிப்பிடுகிறார்.
(கட்டுரை பெரிதாக விடும் என்ற காரணத்தினால் புத்தகங்கள் குறிப்பை சுருக்கிக் கொள்கிறேன்)
ஹிஜ்ரி 2 ஆம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவில் அன்றைய (மேற்கத்திய மொரோக்கோ)
அப்துல்வஹ்ஹாப் பின் அப்துர்ரஹ்மான் பின் ருஸ்தும் என்பவரால்
"வஹாபிய இபாழிய்யா"
-الوهابية الإباضية
இயக்கத்தை தோற்று வைக்கப்பட்டது,
இவரின் அத்துமீறிய ஷரீஅதிற்க்கு முரண்பட்ட பல நடவடிக்கைகளால் அல்ஜீரியாவில் இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரை மக்கள் மன்றத்தில் கடுமையாக விமர்சித்தனர் ,
இவருடைய ஆட்சிக்காலத்தில் அல்ஜீரிய மக்களுக்கு ஹஜ் செய்வதை தடை செய்தார் தொழுகையை தடை செய்தார் மன இச்சையை மார்க்கமாக ஆக்கினார்.
இவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதை எந்த அளவுக்கு வெறுத்தாரோ அதற்கு நிகராக ஷிஆகளையும் வெருத்தார் , இவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக நஹர்வான் என்ற இடத்தில் போரிட்ட கவாரிஜுகள் ஆவர்,
இவரின் கொள்கை சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் தற்போதைய ஓமன் அரசாங்கமே இயங்கிக்கொண்டிருக்கிறது,
அன்றைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரைப்பற்றி மக்களிடத்திலே வஹாபிய வழிதவறிய இயக்கம் என்று கடிந்துறைத்தனர்.
ஹம்பலி மத்ஹப் சார்ந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீர்திருத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாத சமாதி வழிபாடுகளை செய்து கொண்டிருந்த ஷீஆக்கள் சவப்பெட்டிக்குள் அடக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த வஹாபிய வரலாறுகளை அவர் மீது சத்தியமான உலமாக்கள் கூறியிருந்த மார்க்க தீர்ப்புகளை கூடுதலாக புனைந்த கட்டுக்கதை தான் இந்த "வஹாபிசம்",
ஷீஆக்களின் கொள்கையை இம்மியளவும் பசங்காமல் பின்பற்றும் நமது இந்திய பரேல்விய பித்அத்வாதிகளும் இன்றளவும் சிறுக்கை பிதஹத்தை எதிர்க்கக்கூடிய உலமாக்களுக்கு சூட்டும் மாலை தான் இந்த "வஹாபிசம்",
இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒருமிகப் பிரபலமான அறிஞரான இந்தியாவைச் சேர்ந்த அல்லாமா அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இஸ்லாமிய சிந்தனை இன்னும் அழைப்பிதழின் நாயகர்கள்"
(Saviours of Islamic sprit )(رجال الفكر و الدعوة )
என்ற புத்தகத்திலும் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா மன்ஷுர் நுஃமானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
"دعايات مكثفة ضد الشيخ محمد بن عبد الوهاب
النجدي "
அஷ்ஷேக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அவர்களுக்கு எதிரான தவறான பரப்புதல்கள்" என்ற புத்தகத்திலும்,
"அநீதம் இழைக்கப்பட்ட சீர்திருத்தவாதி ",(المصلح المظلوم )
என்று இந்தியாவைச் சேர்ந்த மஸ்ஊத் ஆலம் நத்வி அவர்களும்
இமாம் அவர்களை பற்றி புகழ்ந்து அவரின் ஏகத்துவச் சீர்திருத்தங்களை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இமாமவர்கள் ஏகத்துவ கொள்கையை அன்றைய அரபு தீபகற்பத்தில் வேரூன்றினார்கள் இணைவைத்தல் ,சமாதி வழிபாடு போன்றவற்றை அறவே களைந்தெரிந்தார்கள் என்ற கால்ப்புணர்ச்சியில் யாரெல்லாம் அனாச்சாரங்களையும் இணைவைத்தல்களையும் ஏகத்துவத்தை உரக்கச் சொல்கிறார்களோ அவர்களுக்கு "வஹாபிகள் ", என்ற பெயர் இந்த ஷீஆக்களால் வைக்கப்பட்டு இன்றைய வழிகெட்ட பரேலவிகளால் மெருகூட்டப்பட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
சவுதி அரேபியாவில் பிறந்த டாக்டர் முஹம்மத் ஷுவையிர் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள்
تصحيح خطأ التاريخي حول الوهابية
"வஹாபிகள் சம்பந்தமாக வரலாற்றில் ஏற்பட்ட தவறின் திருத்தம்", என்ற புத்தகம்
112 பக்கங்கள் கொண்டது இதில் இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்.
இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்க விரும்புவோர் இந்த சுட்டியை சொடுக்கவும்
கூடுதலான தகவல்களுக்கு எனது யூடியூப் காணொளியை பார்க்கவும்
https://youtu.be/VwgrrN59X7c
பரேல்விகளும் & வஹ்ததுல் உஜுதும்(உள்ளமை ஒன்று)
பரேல்விகளின் வரலாற்று இருட்டடிப்புகளில் இவர்கள் ஏன் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாத விடயங்களை மார்க்கமாக மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
சத்தியம் எது? அசத்தியம் எது?
என்று தெளிவாக தெரிந்த பின்பும் சத்தியைத்தை பின்பற்றுவதற்கு முன்வராமல் இறுமாப்புடன் அசத்தியத்தில், நிலைகுலையாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றக்கூடிய ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கு இயல்பாகத் தோன்றும் ஒன்று,
இதற்கு அடிப்படையான காரணம் அவர்கள் கொண்டுள்ள வழிகேடான கொள்கைகள்தான்,
தங்களது ஷேகுமார்களை, அறிஞர்களை அல்லாஹ்விற்கு நிகராக கருதுவதும் அவர்கள் சொல்வதுதான் இறுதியான மார்க்கத் தீர்ப்பு என்று விளங்குவதும் தான்,
பரேலவிகளிடம் மரணித்த இந்த ஸாலிஹீன்களிடம் (வலிமார்கள்)நேர்ச்சை செய்வது துஆ செய்வது, வஸீலா தேடுவது கூடாது என்று நாம் சொன்னால் அவர்கள் பதிலுக்கு
நாங்கள் இறைநேசர்களையோ
எங்களது சேகுநாயகங்களையோ
நாங்கள் வணங்கவில்லை அவர்களிடம் துஆ தான் கேட்கிறோம் என்கிறார்கள் கீழ்காணும் நபிமொழி இதை வழிகேடு என்று தெளிவுபடுத்துகிறது.
அத்தி பின் ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எனது கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவையை தொங்கவிட்டவனாக வந்தேன் நபியவர்கள் இந்த வசனத்தை சொல்வதை செவிமடுத்தேன்
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்.
(அல்குர்ஆன் : 9:31)
அல்லாஹ்வின் தூதர் அவர்களே பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அவர்கள் (கிருத்தவர்கள்)வணங்க கூடியவர்களாக இல்லை என்றேன்,
அதற்கு ஆம் ,என்றாலும் அல்லாஹ் விலக்கி வைத்ததை ஆகுமாக்கி,அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கியதால் அவர்கள் (பாதிரிகளையும் சந்நியாசிகளையும்) வணங்கியவர்களாக கருதப்படுவார்கள்.
நூல்- ஸூனனுல் குப்ரா பைஹகி,
எண்-30350
தரம்- ஸஹீஹ்.
وعن عدي بن حاتمٍ رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم، وفي عُنقي صليبٌ من ذهبٍ، قال: فسمعته يقول: ﴿ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ﴾ [التوبة: 31]"، قال: قلت: يا رسول الله، إنهم لم يكونوا يعبدونهم، قال: ((أجل، ولكن يحلُّون لهم ما حرم الله، فيستحلونه، ويحرِّمون عليهم ما أحَلَّ الله، فيحرِّمونه؛ فتلك عبادتهم لهم))؛رواه البيهقي في "السنن الكبرى" (30350)، وصححه الألباني.
தங்களை அஹ்லுல் பைத் என்று சொல்ல சொல்லிக் கொள்ளும் ஷிஆக்களும் தங்களது 12 இமாம்களை முதன்மைப்படுத்தியதன் காரணமாக
இன்று அவர்கள் வழிகேட்டில் தாங்களும் பயணம் செய்து மற்றவர்களையும் வழிகேட்டின் பக்கம் இட்டுச் செல்கிறார்கள்,
ஆக இந்த தனி நபர் வழிபாடு மற்றும் ஷீஆக்களின் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஷீஆக்களை ஒரு ஷீஆவாக இருந்தே
எதிர்த்த ஒரு அறிஞரை பற்றியும் கூடுதலான தகவல்களை காண கீழ்க்காணும் எனது யூடியூப் சேனலின் சுட்டியை சொடுக்கவும்
https://youtu.be/p9tOvCfS4ec
இந்த ஷிஆக்களின் தத்துப் பிள்ளைகள் தான் இந்த வழிகெட்ட பரேல்விகள் இவர்கள் கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து தர்ஹாக்களையும் அரபுக் கல்லூரிகளையும் ,மதரசாகளையும் உலமாக்களையும் வழிகேடான கொள்கைகளின் பக்கம் பகிரங்கமாக அழைக்கத் தொடங்கி விட்டனர், அவர்களின் பகல் கனவு பலிக்காது இன் ஷா அல்லாஹ்.
எனவே சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விளக்குவதிலும் இவர்களின் பொய்யான போலி சுன்னத் ஜமாஅத் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தி விழிப்புணர்வுக்காக எனது இந்த பதிவுகளை பதிந்து வருகிறேன்,
الله هو المستعان و عليه التكلان
மரண இறுதிவரை உண்மையான கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்து மக்களை அதன் பக்கம் அழைத்து இறை பொருத்தத்தோடு அல்லாஹ்வை சந்திப்பதற்கு நம் அனைவருக்கும் அவன் தௌஃபீக் செய்திடுவானாக.
இந்த பரேல்விகளின் வழிகேடான ஒரு கொள்கை தான்
“ வஹ்தத்துல் வுஜூத்
(உள்ளமை ஒன்று ) ”
வழிகெட்ட தத்துவம்
(1165 -1240 பிறப்பு -இறப்பு)
இப்னு அரபி என அழைக்கப்படும் அபூ அப்தில்லா முஹம்மதி ப்னி அலி இப்னி முஹம்மதிப்னி அரபி
அல்-ஹாத்திமி அத்தாயிஈ ஹஃபரஹுல்லாஹ் (غفره الله ) அராபிய சூபி இறைஞானியும், மெய்யியலாளரும் ஆவார்.
சூபித்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இவர்
"பெரும் அறிஞர்" எனவும் உண்மையான ஞானி எனவும் போற்றப்பட்டவர் .
'வஹ்தத்துல் வுஜூத்'
(உள்ளமை ஒன்று) என்னும் அத்வைத ஞானம் பேசியவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக இவர் இருந்தார்.
காழி அபூபக்கர் இப்னுல் அரபி அல்இஸ்பீலி அல்மாலிகி ரஹிமஹுல்லாஹ் வேறு ஒரு அறிஞர் இவர்கள் பிரபலமான தப்சீர் புத்தகமான அஹ்காமுல் குர்ஆனை (احكام القرآن )
எழுதியவர்கள் , அல்அவாஸிமு மினல் கவாஸிமி (العواصم من القواصم )
என்ற இஸ்லாமிய வரலாற்று துறையில் சிறந்த புத்தகத்தை வழங்கினார்கள்.
இவர் தப்ஸீர் ஹதீஸ் ,ஃபிக்ஹு கலையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்.
சிலர் அபூபக்கர் இப்னுல் அரபியையும்,முஹையுத்தீன் இப்னு அரபியையும் தங்களது ஆய்வுகளில் குழப்பிக் கொள்கிறார்கள்.
நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போவது ஸுஃபி இப்னு அரபியை பற்றித்தான்,
இவர் 400 க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள்
'அல் புதுஹாத்துல் மக்கியா',
الفتوحات المكية
فصوص الحكم புஸுசுல் ஹிகம்', 'மபாதிஹுல் கைப்' مبادي الغيب', 'முஹாளறதுல் அப்றார்
'محاضرة الأبرار ومسامرة الأخيار
ஆகியவை மிகப் பிரபலமானவையாகும்.
லாஇலாஹ இல்லல்லாஹ் (-لااله الا الله ) என்ற ஏகத்துவத்திற்கு எதிராக
லா மவ்ஜூத இல்லல்லாஹ் (لا موجود الا الله ) என்ற அத்வைத கொள்கையை இஸ்லாமிய உலகத்திற்கு ஏகத்துவ சாயலில் கிரேக்க தத்துவங்களை அதாவது "யாவும் இறைவனே ,இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் " என்ற முற்றுலும் தவ்ஹீதுக்கு (ஏகத்துவத்திற்கு ) முரணான அபாயகரமான கொள்கையை பரப்பியவர்.
தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தக் கொள்கையை கொண்டவர்கள் மிக தைரியமாக பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தங்களது வழிகேடான கொள்கைகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வதை நாம் கண்டு வருகிறோம், தயவுகூர்ந்து இவர்களை இனம் கண்டு இவர்களுடைய நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளோ அல்லது எந்த உதவிகளையும் நீங்கள் செய்யாதீர்கள் ,அசத்தியம் மிகைக்கும் பொழுது சத்தியம் தனது இரும்புக் கரத்தால் அதை அடக்கி ஒழிக்கும்
என்பதற்கு சான்றாக....
சமீபமாக திருச்சி ஜமாஅத்துல் உலமா சார்பாக இந்த அத்வேத கொள்கை உடைய பரேல்விகளை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், சேலம் மஸாஹிருல் உலூம், லால்பேட்டை மன்பவுல் அன்வார் திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள் வழிகேடர்களாக மார்க்கத் தீர்ப்பை
வழங்கி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள், புத்தகம் தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
வடநாட்டில் இவர்கள் செய்த அழிச்சாட்டியத்தின் காரணமாக
தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி பீடம் மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்து இவர்களின் கொட்டங்களை அடக்கியது,
இன்றும் அங்கு மேல்படிப்பு படிப்பதற்காக செல்லும் ஆலிம்கள் தங்களது பாடத்திட்டத்தில் இந்த வழிகெட்ட பரேல்விகளை பற்றிய ஒரு ஆய்வு வகுப்பாக படிக்கிறார்கள், ஒர்க்ஷாப்புகள், செமினார்களும் நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதனால்தான் தேவ்பந்தி, நத்வி, காஷிஃபி, தாவூதி, மன்பஃஈ, யூசுஃபி, ஹசனி,இர்ஷாதி ,அன்வாரி போன்ற பட்டங்கள் பெற்று களமிறங்கும் ஆலிம் உலமாக்களை கண்டு இந்த பரேலவிகள் "வஹாபிகள்",
என்று அவ்வப்பொழுது சமூகவலைதளங்களில் உரக்க சப்தமிட்டு கொண்டிருக்கின்றார்கள்,
اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ
“அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்”
(அல்குர்ஆன் : 41:14)
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில்
لا معبود بحق الا الله
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று தான் நாம் கூறுகிறோம்.
من قال بالحلول فدينه معلول، وما قال بالاتحاد إلا أهل الإلحاد
—محيي الدين ابن عربي
"இறைவன் மனிதனின் மீது ஊடுருவுவான் என்று கூறுபவரின்
மார்க்கம் சந்தேகத்துக்கு உரியது
உள்ளமையை வாதிடுபவன் நாத்திகனாக தான் இருக்க முடியும்", என்று முஹ்யுத்தீன் இப்னு அரபி கூறியதாகவும் சில புத்தகங்களில் ஆதாரங்கள் இல்லாமல் பதியப்பட்டிருக்கிறது இதை வைத்துதான் எங்கள் இமாம் இப்னு அரபி இவ்வாறு கூறவில்லை என்று சொல்கிறார்கள்.
இவரின் கொள்கை உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விட்டும் சற்று சந்தேகத்துக்குரியதாகவே காட்சியளிக்கிறது.
فصوص الحكم', புஸுசுல் ஹிகம்'
என்ற இவரின் புத்தகம் இவருடைய காலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி அந்த காலத்தில் வாழ்ந்த உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் இவரை கடுமையாக எதிர்த்தனர்.
இவரின் சிந்தனையகளால் ஈர்க்கப்பட்ட இப்னு அல் பாரில் ,அல் தலசமானி போன்ற அறிஞயர்களும் இந்த வழிகேட்டின் பக்கம் மக்களை அழைக்க தொடங்கினர்
நாளை மறுமையில் வெற்றி பெறும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின் அடிப்படையில்
"ஏக இறைவனான அல்லாஹ் ஏழு வானத்திற்கு மேல் தனது அர்ஷில் இருக்கிறான் என்பதும், அவனின் சக்தியும் வல்லமையும் முழு அகில உலகத்தையும் வியாபித்து இருக்கிறது என்பதுதான் .
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 7:54)
மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).
பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான். இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாரியா என்ற அடிமைப் பெண்ணைப் பார்த்து “அல்லாஹ் எங்கே இருக்கிறான்” என்று கேட்ட போது அந்தப் பெண் ” அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்” என்று கூறினார். உடனே நபியவர்கள் எஜமானனைப் பார்த்து “இவரை விடுதலை செய்யுங்கள். இவர் ஒரு முஃமினாவார்” (முஸ்லிம்)
என்று கூறினார்கள்.
திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக்(ரஹ்) தாரமி.
இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் எனது ரப்பு வானத்தில் இருக்கிறானா ? அல்லது பூமியில் இருக்கிறானா ? எனக்கு தெரியாது என்று சொன்னால்
அவர் காஃபிராகி விடுவார்,
அதே போல் அல்லாஹ் அர்ஷில்தான் இருக்கிறான் ஆனால் அர்ஷு வானத்தில் இருக்கிறதா பூமியில் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது என்று சொன்னாலும் அவரும் காஃபிராகி விட்டார்.
நூல்கள்-
ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺃﺑﻮ ﺣﻨﻴﻔﺔ : ﻣﻦ ﻗﺎﻝ ﻻ ﺃﻋﺮﻑ ﺭﺑﻲ ﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ ﻓﻘﺪ
ﻛﻔﺮ، ﻭﻛﺬﺍ ﻣﻦ ﻗﺎﻝ ﺇﻧﻪ ﻋﻠﻰ ﺍﻟﻌﺮﺵ، ﻭﻻ ﺃﺩﺭﻱ ﺍﻟﻌﺮﺵ ﺃﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ .
( ﺍﻟﻔﻘﻪ ﺍﻷﺑﺴﻂ ﺹ49 ، ﻣﺠﻤﻮﻉ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﻻﺑﻦ ﺗﻴﻤﻴﺔ ﺝ5 ﺹ 48، ﺍﺟﺘﻤﺎﻉ ﺍﻟﺠﻴﻮﺵ
ﺍﻹﺳﻼﻣﻴﺔ ﻻﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺹ 139 ، ﺍﻟﻌﻠﻮ ﻟﻠﺬﻫﺒﻲ ﺹ 101 ، 102، ﺍﻟﻌﻠﻮ ﻻﺑﻦ ﻗﺪﺍﻣﺔ
ﺹ 116 ، ﺷﺮﺡ ﺍﻟﻄﺤﺎﻭﻳﺔ ﻻﺑﻦ ﺃﺑﻲ ﺍﻟﻌﺰ ﺹ 3)
வல்ல இறைவன் நமக்கு சரியான இஸ்லாமிய கொள்கையை பின்பற்றுவதற்கு தவ்பீக் செயவானாக .
கபர்ஸ்தானில் பாஃதிஹா ஓதலாமா?
இன்று சடங்கு, சம்பிரதாயம், ஊர் வழக்கு ,குடும்ப வழக்கு என்ற வாதத்தை முன் வைத்து நமது சமூகத்தில் பல மூட நம்பிக்கைகள் மார்க்க லேபிளில் வலம் வருகின்றன ,
இதில் ஆலிம் , உலமாக்கள்,இயக்க சகோதரர்கள் என்று யாரும் விதிவிலக்கு இல்லாமல் அனைவரும் தினமும் கடந்துசெல்லும் அனாச்சாரங்கள் பல ,
மார்க்கத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் நமக்கு எந்த அக்கறையும் இல்லை ,ஊருடன் ஒத்துப்போக வேண்டும் என்ற வாதம் மிகவும் வலுவாக இன்று நமது சமூகத்தில் முன் வைக்கப்படுகிறது
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ
அதற்கவர்கள் "இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்துகொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவைகளை ஆராதனை செய்கிறோம்)" என்றார்கள்.
(அல்குர்ஆன் : 26:74)
மேல் காணும் வசனத்தில் மூட நம்பிக்கைகளை தங்களது சமூக வழக்காக ஆக்கி கொண்ட அரபு குறைஷிகளை நோக்கி இறைத்தூதர் ﷺ அவர்கள் இறை அழைப்பு பணி செய்யும் பொழுது எங்கள் மூதாதையர்கள் எதை செய்தார்களோ அதையே நாங்கள் மார்க்கமாக பெருவோம் என்று சொன்ன வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகிறது.
இன்றும் நம்மில் மார்க்கம் தெளிவாகச் சொல்லப் பட்ட பின்பும் "ஊர் வழக்கு " என்ற இதே கருத்தைதான் சமூகம் முன்வைக்கிறது .
பின் வரும் நபிமொழியில்
"மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்ட விடயங்கள் மறுக்கப்பட வேண்டியவையாகும்" என்ற செய்தியை நாம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஊடாக நாம் ஆதாரப்பூர்வமான நபிமொழியாக ஸஹீஹுல் புகாரியில் பெறுகிறோம்
مَن أَحْدَثَ في أَمْرِنَا هذا ما ليسَ فِيهِ، فَهو رَدٌّ
الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم : 2697 | أحاديث مشابهة | خلاصة حكم المحدث : [صحيح
குர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள் தெளிவாக கூறப்பட்டிருந்தாலும் சங்கையான மத்ஹபுகளை முன்வைத்து சிலர் தவறான புரிதல்களை கொண்டு அனாச்சாரங்களை மார்க்கமாக மக்களுக்கு மத்தியில் பரப்ப முயற்சி செய்கிறார்கள் மக்களே உஷார்!!!
குறிப்பாக ஹனபி மத்ஹபை முன்வைத்து மண்ணறையில் மையித்தை ஸியாரத் செய்யும்பொழுது திருக் குர்ஆன் ஓதலாம் (ஸூரா அல்ஃபாதிஹா ,யாஸீன்) அதனூடாக
ஈஸால் தவாஃப் (நன்மையே எத்தி வைத்தல்) செய்யலாம் என்ற கருத்து வலுவாக சிலர்களால் முன் வைக்கப்படுகிறது .
மரணத்தவர்களுக்காக திருக்குர்ஆனை, தானே ஓதி(இமாம்களை அழைத்து வந்து ஓதச் சொல்வது அல்ல) அவர்களுக்கு நன்மையை சேர்த்து வைப்பது பற்றி கண்ணியமான நான்கு மத்ஹபுகளின் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தவிர ஏனைய இமாம்களான அபூ ஹனீபா, ஷாஃபிஈ,இமாம் அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் அனைவரும் மரணித்த ஒரு இறை நம்பிக்கையாளருக்காக திருக்குரான் ஓதப்பட்டு நன்மைகள் எத்தி வைக்கப் படுவது என்பது மார்க்கத்தில் இல்லை அதற்கு ஆதாரங்களும் மிகவும் குறைவு என்று கூறுகின்றனர்.
ஹனபி மத்ஹபின் இமாமான முல்லா அலி அல்காரி அல்ஹனஃபி ரஹிமஹுல்லாஹ் "அல்ஃபிக்ஹுல் அக்பர்", என்ற புத்தகத்தில் 511 ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
மண்ணறைகளில் திருக்குர்ஆனை ஓதுவது இமாம் அபூஹனீபா ,இமாம் அஹ்மத் அவர்கள் இடத்தில் வெறுக்கப்பட்ட ஒன்றாகும், (தடைசெய்யப்பட்ட ஒன்று) காரணம் மார்க்கத்தில் நூதனமாக புகுத்தப்பட்டு நபியவர்களால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும் .
(ஒரு அறிவிப்பில் ஓதுவது கூடாது என்றும்-வேறொரு அறிவிப்பில் (தஃபன்) அடக்கப்படும் போது மட்டும் குர்ஆன் ஓதலாம் வேறு சந்தர்ப்பங்களில் மண்ணறைகளில் ஓதக்கூடாது என்றும் உள்ளது)
இதே கருத்தை இஹ்யா உலூமித்தீன் என்ற புத்தகத்தின் விரிவுரையாளர் மூன்றாம் பாகம் 285 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
ஹனஃபி மத்ஹபின் ஃபத்வா :
ஹனபி மத்ஹபின் இமாமான அல்பர்கவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது புத்தகமான "அத்தரீகா அல்முஹம்மதிய்யா", ல் மூன்றாம் பகுதியில் அசத்தியமான, பித்அத்தான விடயங்களில் மக்கள் நாடப்பட்ட நன்மைகுரிய விடயங்கள் என்று கருதி மும்முரமாக செயல்படுகிறார்கள்,
எந்த அளவுக்கு என்றால் இறந்த நாள் அன்றும் அதற்கடுத்த நாட்களும் உணவு தயாரித்து வழங்குவது , மையத்திற்காக காசுகளைக் கொடுத்து ஓதவைப்பது தஸ்பீஹ்கள் செய்ய வைப்பது போன்ற விடயங்கள் மறுக்கப்பட வேண்டிய பித்அத்துகளாகும்,
இவ்வாறு ஓதுவதற்கு பணம் வாங்குவதும் பணம் கொடுப்பதும் ஹராமாகும், உலக ஆதாயத்திற்காக ஓதுவது பாவமான காரியமாகும்,
ஸஹீஹுல் புகாரி நபிமொழி கிரந்தத்தின் விரிவுரையாளர் அல்லாமா பதுருதீன் அல்அய்னி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்....
உலக ஆதாயத்திற்காக ஓதுவது தடுக்கப்பட்ட ஒன்றாகும், இதற்காக பணம் வழங்குபவர் வாங்குபவர் இரண்டு பேரும் குற்றவாளிகளாவர்,
ஹனஃபி மத்ஹபின் மிகப் பிரபலமான புத்தகமான அல்ஹிதாயாவின் விரிவுரையாளர் தாஜுஷ் ஷரீஆ அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு ஓதுவது என்பது
அந்த ஓதும் நன்மையாகிறது ஓதுபவருக்ககோ மையத்திற்கோ போய் சேராது.
مذهب أبى حنيفة:
قال في كتاب الفقه الأكبر للإمام ملا علي القاري الحنفي (ص 115) : "ثم القراءة عند القبور مكروهة عند أبى حنيفة ومالك وأحمد رحمهم الله في رواية. لأنه محدث لم ترد به السنة" وكذلك قال شارح الإحياء (ج 3 ص 285) (1) 1.
فتوى المذهب الحنفي: قال الإمام البركوي في كتابه (الطريقة المحمدية) في الفصل الثالث في أمور مبتدعة وباطلة أكب الناس عليها على ظن أنها قرب مقصودة ... إلى أن قال: "ومنها الوصية من الميت باتخاذ الطعام والضيافة يوم موته أو بعده ولإعطاء دراهم لمن يتلو القرآن لروحه ويسبح أو يهلل له، وكلها بدع منكرة باطلة والمأخوذ منها حرام للآخذ وهو عاص بالتلاوة والذكر لأجل الدنيا" انتهى ملخصا. وقال الإمام العلامة العيني شارح البخاري: "ويمنع القاريء للدنيا، والآخذ والمعطى آثمان" وقال تاج الشريعة في (شرح الهداية) من كتب الحنفية: "إن القراءة بالأجرة لا يصل ثوابها لا للميت ولا للقاريء.
இவ்வளவு தெளிவாக மார்க்கத்தில் கூறப்பட்டு இருந்தும் மரணித்தவர்கள் வீட்டில் மையத்திற்கு பாத்திஹா ஓதுதல், மூன்றாம் நாள் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடப் பாத்திஹா , ஜனாஸாவிற்கு பின் கபர்ஸ்தானிலிருந்து வெளிவந்த பின்பு கூட்டு துஆக்கள் இன்னும் எத்தனையோ சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இஸ்லாம் அவமதிக்கப்படுகிறது, பித்அதுகளும், அனாச்சாரங்களும் மதிப்பு மரியாதை களுடன் அரங்கேற்றப்படுகின்றன.
வாருங்கள் இந்த அனாச்சாரங்களை எடுத்துரைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸுன்னாவை பாதுகாத்து பித்அதை ஒழிப்போம்.
முன் சென்ற மத்ஹபுகளின் சத்திய இமாம்களும் பின் வந்த மத்ஹபுகளின் பெயரில் அரங்கேற்றும் அசத்தியவாதிகளும்:
சித்தாந்தங்கள், கொள்கை கோட்பாடுகள் உருவாகிய பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிற்காலத்தில் தோன்றும் அதே சித்தாந்தத்தை பேசக்கூடிய சிலர்களால் அவைகள் வேறுபட்ட கோணத்தில் மாற்றி அமைக்கப்படும், சீர்குலைக்கப்படும் .
இது அரசியல் ,பொருளாதாரம் வணிகம் ,அறிவியல், போன்ற துறைகளுக்கு வேண்டுமென்றால் பொருத்தமான ஒன்றாக , இயல்பான ஒன்றாக அமையும் ,ஆனால் மார்க்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய
கொள்கைக் கோட்பாடுகள் என்பது
சீர்குழையாமல் , மாற்றி அமைக்கப் படாமல் தூயவடிவில் மாசு அடையாமல் இருந்தால்தான் அவைகள் இஸ்லாமியக் கொள்கைகளாக தொடர்ந்து நிலைக்க முடியும்.
ஸஹாபாக்கள் இறைத்தூதர் ﷺ அவர்களை நன்கு புரிந்து , இறைச்செய்தியான வஹியின் பின்னணிகளையும் காலச் சூழ்நிலைகளையும் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்கள் , அவர்கள் சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர்களின் மாணவர்களாகிய தாபியீன்களின் காலகட்டங்களில் இஸ்லாமிய கொள்கைகள் மிகப்பெரிய சவாலை சந்தித்து , பல வழிகெட்ட பிரிவுகளும்
தோன்றியது இந்த சூழ்நிலையில் மார்க்கத்தை (உசூல்கள் என்ற (அகீதா-عقيدة) இஸ்லாமிய கொள்கைகள் , ஃபுரூஆதுகள் (فقه) இஸ்லாமிய கிளை சட்டங்கள் ) முறையாக பாதுகாப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் தோன்றிய பல அறிஞர்கள் தங்களது முழு முயற்சியையும் எடுத்து இஸ்லாமிய கொள்கைகளை , மார்க்க கிளை சட்டங்களை ஆவணப்படுத்தினார்கள், புத்தக வடிவில் கொண்டு வந்தார்கள்,
காலப்போக்கில் பின் வந்த சில அறிஞர்கள் தங்களது ஆசிரியர்களான மத்ஹபுகளின்
(Fiqh School of thoughts- மார்க்கசட்ட சிந்தனை பள்ளிகள்) இமாம்களின் கொள்கைகள் கோட்பாடுகளை தங்களுடைய சுய புரியுதல்களினால், சுய சிந்தனைகளால் மாற்றி அமைத்தனர் இதுவே பிறகு மத்ஹபுகள் தேவை இல்லை என்ற சிந்தனைகளை முன்னோக்குவதற்கு காரணமாக அமைந்தது,
நேரடியாக மார்க்கத்தை குர்ஆன் ஸுன்னாவில் இருந்து விளங்குவோம் இஜ்மாஃ,கியாஸ் தேவை இல்லை என்ற முயற்சியில்
நான்கு மத்ஹபுகள் தேவையில்லை என்று சொன்னவர்கள் ஐந்தாவது மத்ஹபை உருவாக்கி....
இன்று பல குழுக்களாக பிரிந்து நிற்கின்றனர், மத்ஹபுகளின் பெயர்களில் அரங்கேற்றப்படும் மார்க்கத்திற்கு புறம்பான விடயங்கள் எந்த அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டுமோ அதே போன்று மத்ஹபுகள் தேவையில்லை என்ற வாதத்தின் அடிப்படையில் மார்க்கத்திற்கு புறம்பாக செய்யப்படுகிற பல விடயங்களும் கண்டிக்கப்பட வேண்டும்.
குர்ஆன் ஸுன்னாவிற்கு நெருக்கமான இமாம்களின் ஆய்வுகளான இஜ்திஹாதுகளை ஓர் அளவுகோலாக வைத்து பின்பற்றுவது தவறு இல்லை,
ஆனால் தங்களது மத்ஹபுகளின் வழிமுறைதான் சரி மற்றவர்கள் வழிமுறை வழிகேடு என்று நினைப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.
தங்களுடைய ஆய்வு சத்தியத்திற்கு நெருக்கமானது என்று நினைப்பதே உகந்தது( المذهب الاقرب الى السنة)
சங்கையான இமாம்களான அபூ ஹனீபா, மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் தங்களுக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட கொள்கைகளையும் இஸ்லாதிற்கு மாறுபட்ட வழிமுறைகளையும் தங்களுக்காக அவர்கள் அமைத்து அதை மற்றவர்கள் பின்பற்றச் சொல்லவில்லை.
இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர்களின் காலங்களில் தங்களை குறிப்பிட்ட மத்ஹபுகளின் பெயர்களில் அவர்கள் அழைத்து கொண்டதில்லை , பின்வந்த அறிஞர் பெருமக்கள் அந்தந்த இமாம்களின் மார்க்க சட்ட ரீதியான வழிமுறைகளை , சட்டம் இயற்றப்படுகின்ற விதிமுறைகளை
மத்ஹபுகளாக தோற்றுவித்தனர்.
காரணம் அவர்கள் காலத்து வழிகெட்ட பிரிவினர்களில் இருந்து தங்களை நேரான பாதையில் பயணிக்கக் கூடிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சேர்த்தவர்கள் என்ற அடையாளத்தை காட்டுவதற்காக தங்களின் பெயர்களுக்கு பின்பு ஹனஃபி,ஷாஃபிஈ,மாலிக்கி, ஹம்பளி
என்று இட்டுக் கொண்டார்கள்.
மார்க்க கிளை சட்டங்களில் தங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இஸ்லாமிய கொள்கை சட்டங்களில்(அகீதா) அனைவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர், அதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளாக தோன்றியது.
இந்த அழகான கட்டமைப்பை உடைப்பதற்காக ஷீஆக்களும் அவர்களின் சீடர்களான பித்அதுவாதிகளான, பரேல்விகள்
போலி சுன்னத் ஜமாஅதை கட்டமைத்து உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதாக இன்று மக்கள் மன்றத்திலே காட்டிக் கொண்டு தங்களின் வழிகேடான கொள்கைகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
அதன் விளைவாக சங்கையான இமாம்களின் பெயரில் மார்க்கம் கூறியதாக பல அணாச்சாரங்களை
கட்டவிழ்த்து விட்டனர், பொதுமக்கள் இவர்களின் வழிகேட்டிற்கு பலியாகி இன்று இதுவே சரியான இஸ்லாமிய கொள்கை என்ற விதத்தில் மார்க்கமாக, அவைகள் தான் மத்ஹபுகளாக கல்வி ஞானம் இல்லாத பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு நல்ல உதாரணம் தான் அரபு மொழியில் ஆய்வு புத்தகமாக பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நூலை அறிமுகம் செய்ய விரும்புகிறேன், அரபு மொழி தெரிந்த அறிஞர்கள் இதை தங்களது ஆய்வுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்,
அஸீஸா பின்தி முபாரக் அல்கல்பானி
என்ற இஸ்லாமிய பெண்ஆய்வாளர்
المسائلُ العَقَديَّة التي خالف فيها بعضُ فُقَهاء الشافعيَّة أئمَّة المذهب
"ஷாஃபிஈ மத்ஹபின் சிலர் இஸ்லாமிய கொள்கை விடயத்தில்
தங்களது இமாம்களுக்கே மாறு செய்தார்கள் "
என்ற தலைப்பில் ஒரு ஆய்வு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
நபிமார்கள்,இறைநேசர்கள், வலிமார்களிடம் (அல்லாஹ்விடம் கேட்பது போன்று) துஆ கேட்பது (இஸ்திகாஸா,வஸீலா) என்று ஆரம்பித்து மார்க கிளை சட்டங்களில்
அவசியமாக்கப்படாத சில விடயங்களை வாஜிபுகளாக ஆக்கிய விடயங்கள் வரை துறை சார்ந்த நிபுணர்களின் நூல்களை மேற்கோள் காட்டி மிக நேர்த்தியான முறையில் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
இந்த புத்தகத்தின் சுருக்கத்தை அரபு மொழியில் படிக்க கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்.
இந்த புத்தகத்தை முழுவதுமாக அரபு மொழியில் டவுன்லோட் செய்து படிப்பதற்கு கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்
யார் இந்த பரேல்விகள் ?
பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ 14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார்.
உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்று பிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான். தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர் வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு “ரிளாகானிய்யத்” என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி “பரேலவிய்யத்” என்றும் கூறுவர்.
காதியானியிடம் ஆரம்பக் கல்வி:
இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர்,இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
ஐயமும் & தெளிவும்:
ஐயம்: ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றி விட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்பு கொடுப்பதற்குக் காரணம் என்ன?
தெளிவு: நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறிய வேண்டுமெனில்,பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்திய முஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வித்தியாசங்கள்:
பரேலவிகள் தோன்றுவதற்கு முன்பே பித்அத், அனாச்சாரங்கள் இருந்து வந்த போதிலும் பரேலவிகளுக்கும் அதற்கு முந்தைய பித்அத்வாதிகளுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.
முதல் வித்தியாசம்:
பரேலவிகளுக்கு முன் எந்த ஆலிமும் பித்அத்தை இஸ்லாத்தின் போதனையாகவோ,மார்க்கத்தின் ஓர் அங்கமாகவோ கூறியதில்லை. இந்த பரேலவிகள்தான் முதன் முதலில் பித்அத்திற்கு இஸ்லாமிய வடிவம் கொடுத்து, இஸ்லாத்தின் ஓர் அங்கம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தினார்கள்.
இரண்டாவது வித்தியாசம்:
பித்அத்தைக் கண்டித்து சுன்னத்தை நிலைநாட்டும் உண்மையான உலமாக்களை முதன் முதலில் காஃபிர்கள் என்று முத்திரை குத்தியது பரேலவிகள் தான்.
இதன் விளைவு தயக்கத்துடன், வெட்கத்துடன் செய்யப்பட்டு வந்த பித்அத்கள் புண்ணியமானதாகவும்,நன்மைக்கு உரியதாகவும் கருதப்பட்டு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பகிரங்கமாக அரங்கேற்றம் பெறத் துவங்கின.
முன்பு, கவலையுள்ள ஆலிம்கள் பித்அத்தின் தீய விளைவுகளை எடுத்துக் கூறினால் தவ்பாச் செய்து சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நிலை மக்களிடம் இருந்தது. ஆனால் பரேலவிகள் தலையெடுத்த பின், பித்அத்தை எதிர்த்து நபிகளாரின் சுன்னத்தைப் பேணும் உண்மையான நல்லடியார்களை காஃபிர்கள் என எண்ணும் நிலை உருவானது. இதனால் ஷிர்க்கிற்கு நெருக்கமான பித்அத் என்ற இப்பெரும்பாவத்திலிருந்து பெரும்பாலோருக்கு தவ்பாச் செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
ஆங்கிலேயர்களாவது அந்த உண்மையான தியாகசீலர்களை வஹ்ஹாபிகளாகத் தான் ஆக்கினார்கள். ஆனால் பித்அத்தை மார்க்கமாக்கிய தீய ஆலிம்களோ அவர்களை காஃபிர்களாகவே ஆக்கி விட்டார்கள்.
எந்த உண்மையான உலமாக்கள் வந்திருக்காவிட்டால் இந்தியாவில் இஸ்லாமே அழிந்திருக்குமோ அந்தப் புண்ணியவான்களை, இஸ்லாத்திற்காக இன்னுயிரை நீத்த தியாகச் செம்மல்களை காஃபிர் என்றால் வேறு யார் தான் முஸ்லிமாக இருக்க முடியும்?
இப்போது புரிகிறதா பித்அத்தும், பரேலவியிஸமும் எவ்வளவு கொடூரமானவை என்று?
ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வாவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன?
தினமும் ஏதேனும் ஓர் உண்மையான ஆலிமையோ, ஒரு குழுவையோ காஃபிர் என்று மொத்தமாகவும் சில்லரையாகவும் ஃபத்வா கொடுக்காவிட்டால் ரிளாகான் பரேலவிக்கு அன்றைய பொழுது கழியாது.
இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்களை, தீனுக்காகத் தமது வாழ்நாளை மனத் தூய்மையோடு அர்ப்பணித்த தியாக சீலர்களை அசிங்கமான,கொச்சையான வார்த்தைகளால் வசை பாடியது மட்டுமின்றி, காஃபிர் என்று கூறிய முதல் மனிதர் ரிளாகான் பரேலவி தான்.
ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வா ஒரு வரலாற்றுப் பார்வை:
இந்தியாவில் முன்பிருந்தே ஆலிம்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் பல பாகங்களில் பிரிந்து வட்டார அளவில் மட்டும் தம் பணிகளைச் செய்து வந்தார்கள். கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் எழுச்சி ஒரு புறம், மறுபுறம் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் எல்லா மட்டத்திலும் முஸ்லிம்களின் வீழ்ச்சி. இதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பல பாகங்களில் பிரிந்து கிடக்கின்ற பல்வேறு சிந்தனை கொண்ட அனைத்து உலமாக்களும் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயல்படலாம் என்று முடிவானது.
நத்வத்துல் உலமா:
இதனடிப்படையில் மௌலானா முஹம்மது அலீ மூங்கீரி (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியால் (கி.பி. 18ம் நூற்றாண்டு பிற்பகுதி) ஹிஜ்ரீ 1311ல் கான்பூரில், நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பல்வேறு சிந்தனை கொண்ட முக்கிய உலமாக்கள் கூடினார்கள். இந்த அமைப்பிற்கு நத்வத்துல் உலமா (உலமாக்கள் சங்கம்) என்றும் பெயரிடப்பட்டது. அநேகமாக இந்திய வரலாற்றில் அதற்கு முன்பு இவ்வாறு அனைத்து உலமாக்களும் கூடிய சரித்திரம் இல்லை.
வெளிநடப்பு:
அனைத்து உலமாக்களும் ஓரணியில் திரண்ட பின் இனி இந்திய முஸ்லிம்களுக்குப் பிரகாசமான எதிர்காலம்தான் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அந்த முதல் கூட்டத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் ஏதோ காரணம் கூறி வெளிநடப்புச் செய்து,கூட்டத்தைப் புறக்கணித்தார். அவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி.
புறக்கணித்தது மட்டுமன்றி நத்வத்துல் உலமாவின் அனைத்து ஆலிம்களையும் காஃபிர் ஃபத்வா கொடுத்து, சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடி நூலுக்கு மேல் நூல் எழுதினார். கிட்டத்தட்ட நூறு நூல்கள் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு விநியோகித்தார்.
ஆங்கிலேயரின் மனசாட்சி:
இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹ் இஸ்மாயீல் தெஹ்லவீ அவர்களுக்கும்,அவர்களது படைக்கும் வஹ்ஹாபிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது ஆங்கிலேயர்கள் தான். அதே பெயரை ரிளாகானும் பயன்படுத்துகின்றார்.
மேலும் இந்தியாவின் அனைத்து உலமாக்களும் சேர்ந்து ஆரம்பித்த நத்வத்துல் உலமா அமைப்பை ரிளாகான் என்ற ஒரு தனிநபர் மட்டும் எதிர்த்து நூல் எழுதவும், அந்த அமைப்பையே இல்லாமல் செய்யவும் முடிந்தது என்றால் ஆங்கிலேயருடன் அஹ்மது ரிளாகான் பரேலவிக்கு ஆங்கிலேயரின் மனசாட்சியாகச் செயல்படும் அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நத்வத்துல் உலமா அமைப்பு மட்டும் துவங்கிய வீரியத்தோடு செயல்பட்டு இருந்தால்,இந்தியாவின் சரித்திரமே மாறி முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக மாறி இருப்பார்கள்.
ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் காலம் காலம் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த அஹ்மது ரிளாகான் பரேலவி முஸ்லிம்களின் எதிரி என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?....
இதே ரிளாகான் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலமாக்களும் முஸ்லிம்களும் போரிட்டு வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேளையில், இந்தியா தாருஸ்ஸலாம் - இஸ்லாமிய நாடு தான்; முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என வலியுறுத்தினார். அதற்காக ஆங்கிலே யரைப் புகழ்ந்தும்,ஆங்கிலேயருக்கு எதிரான போரைக் கண்டித்தும் பல நூல்களை எழுதி ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்.
ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்த மௌலானா அப்துல் அஜீஸ் அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் - இறை மறுப்பாளர் என்று ஃபத்வா கொடுத்தார்.
இப்போது சொல்லுங்கள். பரேலவிய்யத் ஆங்கிலப் பிள்ளையா? இல்லையா?
தனது ரிளாகான் என்ற பெயரை அப்துல் முஸ்தபா என்று மாற்றிக் கொண்டார்.
இத்தகைய தவறான கோட்பாடுகளையும், சிந்தனையும் கொண்ட இவராலும் இவரது சீட கோடிகளாலும் பரப்பப்பட்டதே பரேலவிய்யத் ரிளாகானிய்யத்.
இவர்களின் கொள்கைகளில் சில...
1. அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல் அவ்லியாக் களிடமும் கேட்கலாம்.
2. இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்யலாம்.
3. நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும் ஆஜராகின்றார்கள். அனைத்தையும் பார்க்கிறார்கள். இறைவனுடன் பொருத்திப் பார்க்கும் அபாயகரமான நம்பிக்கை இது
4. சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு ஆஜராகும் தன்மைகள் உள்ளன.
5. மறைவான ஞானம் (இல்முல்கைப்) நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.
6. தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மை தரும் செயல்களாகும்.
7. ஷைக் - ஞான குருவின் காலில் விழலாம். ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் - ஒப்பந்தம் செய்யலாம்.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அனைத்திற்கும் புறம்பான இது போன்ற பல தவறான கொள்கைகளைப் பரப்பி இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்றளவும் பல பிளவு ஏற்படக் காரணமானவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி என்பதைப் புரிந்து கொள்வோம்.
ரிளாகான் பரேலவியின் இது போன்ற தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. நாம் எச்சரிக்கையாக இருப்போம்.
(நன்றி: மனாருல் ஹுதா அக்டோபர் & நவம்பர் 2006)
வழிகெட்ட பரேல்விகளும் அவர்களின் குருநாதர்களான ஷீஆக்களின் பார்வையில்
ஹதீஸ் " கதீர் கும்"
"حديث غدير خم " அதன் உண்மை நிலையும்
ஷீஆக்கள் வசிக்கும் பகுதிகள்:
ஈரான், ஈராக், லெபனான் ,லிபியா இந்தியா போன்ற பல நாடுகளில் அதிகமாக வசித்து வருகின்றனர் , இந்தியாவில் ஹைதராபாத்திலும் ,லக்னோவிலும் இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்
ஷீஆக்களின் சமூகநிலையும், தங்களது 12 வகையினரும், அரசியல் செல்வாக்கும்:
பெரும் செல்வந்தர்களாக வியாபாரிகளாகவும் மிக ஒற்றுமையுடனும் தங்களது சமூகத்தை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் நகர்த்தி கொண்டு செல்பவர்கள், போராஹ் முஸ்லிம்கள் என்று அங்கு அழைக்கப்படுகின்றனர், தங்களது 12 இமாம்களை முதன்மைப்படுத்தியே அவர்களின் இஸ்லாம் பயணிக்கிறது,
இந்த வழிகெட்ட 12 கூட்டங்களில்
நுஸைரி என்ற ராஃபிழாக்கள் தங்களது கொள்கைகளை அரங்கேற்றுவதற்காக
மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்வதற்கும் துணிந்தவர்கள் ,இந்தக் கொள்கையை கொண்டவர்கள் தான் ஸிரியா நாட்டின் அதிபர் பஷ்ஷார் அசதும் அவர் சிரியா நாட்டில் கொத்துக்கொத்தாக மக்களை படுகொலை செய்வதும் , கடந்த காலங்களில் பேரழிவு ஏற்படுத்திய அவரது தந்தையும், ஈராக்கில் ஷஹீத் சதாம் உசேனுக்கு எதிராக சதி திட்டம் செய்தவர்களும் இந்தவகை நுஸைரி ஷீயாக்கள் தான்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
மக்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தியாவில் கூட காவி கயவர்கள் உடன் இவர்கள் கை கோர்த்திருக்கிறார்கள்,
இந்தியாவில் பிஜேபி அரசு இவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஷீஆக்களின் மார்க்க சட்டங்களும் நிலைப்பாடுகளும்:
தங்களது பாங்குகளில் "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்",
என்ற வார்த்தைகளுக்கு பின் " அன்ன அலியன் வலியுல்லாஹ்", அதாவது அலி அல்லாஹ்வின் வலியாக (இறை நேசராக) இருக்கிறார்கள் என்று ஆதாரமே இல்லாமல் ஐந்து நேர தொழுகைகளிலும் கூறுபவர்கள் ,
அவர்கள் தொழுகும் பொழுது இறைத்தூதரின் பேரரான இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட அந்த கர்பலா மண்ணில் இருந்து சில மண் கட்டிகளை செய்து அதன் மீது தான் ஸஜ்தா செய்வார்கள்,
தொழுகையின் கியாமில்( நிலையில் )நெஞ்சில் தக்பீர் கட்ட மாட்டார்கள் "இர்ஸால் " , என்ற அடிப்படையில் கையை கீழே தொங்க விட்டு விடுவார்கள்,
ஃபிக்ஹு சட்டங்களில் ஜஃபரி மத்ஹபை ( المذهب الجعفري) பின்பற்றுகிறார்கள், தங்களது உலமாக்களை "முஜ்தஹிதீன்கள் ", என்று அழைக்கிறார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதை போன்றே இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை வகுக்க
அல்குர்ஆன் ,ஸுன்னா ,இஜ்மாஃ,
அகல் என்ற நான்கு அடிப்படையான அம்சங்களை கடைபிடிக்கிறார்கள்.
ஷீயாக்களூம், பித்அதுகளான அனாச்சாரங்களும்:
முஹர்ரம் மாதத்தில் தங்களைத் தானே வருத்திக் கொண்டு மார்க்கத்தில் சொல்லப்படாத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பெயரில் அரங்கேற்றுபவர்கள், குறிப்பாக ஷிர்க் வைக்கக் கூடிய விதத்தில் சமாதி வழிபாடுகளை இவர்கள்தான் தோற்றுவித்தனர்,
"முத்ஆ", என்னும் தற்காலிக திருமணம் நபியவர்களால் தடுக்கப்பட்டு இருந்தும் , இன்னும் அவர்களின் சமூகத்தில் அதை அமல் படுத்தி வருகிறார்கள்.
இன்று இஸ்லாத்தில் இருக்கும் அனைத்து மூட நம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் பித்அதுகளையும் தோன்றுவதற்கு காரணமானவர்கள், இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இவர்களைப் பற்றி கூறப்படும் தவறான வாதம் , நபியவர்களை அத்துமீறி விரும்புபவர்கள் அவர்கள் கூறாத பல நபிமொழிகளை கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இந்த சமூகத்திற்கு வழங்கியவர்களும் கூட,
ஷீஆக்கள் என்பதற்கு வரலாற்று ரீதியான விளக்கம்:
அலி, முஆவியா ரழியல்லாஹு அன்ஹீம் ஆகிய இருவருக்கும் மத்தியில் நடந்த போர்களில் அலி அவர்களுக்கு துணையாக நிற்கிறோம் என்று சொன்னவர்கள் தான் இந்த ஷீஆக்கள் , அரபு மொழியில் துணை புரிபவர்கள் என்று அர்த்தம் ,
இஸ்லாத்தை அழித்தொழிக்க பாடுபட்ட யூதர்கள் நயவஞ்சகர்களாக இருந்தும் சாதிக்க முடியாத விடயங்களை ஷீஆக்கள் என்ற பெயரில் பின்னர் சாதித்தனர் ,
இவர்கள் முஸ்லிம்களா இல்லையா என்ற விடயத்தில் நமது உலமாக்கள் இவர்கள் வழிகெட்ட பாதையில் பயணிக்கும் முஸ்லிம்கள்தான் என்று கூறுகின்றனர் , ஷீஆக்கள் பற்றி மேலும் தமிழில் படிக்க இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷைய்க் இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின்
யார் இந்த ஷீஆக்கள்? என்ற புத்தகத்தை வாசிக்கவும், சவுதி அரேபியா தாவா சென்டரில் இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கிறது.
"حديث غدير خم " ,"ஹதீஸ் கதீர் கும்"
என்பதன் விளக்கமும் ஷீஆக்களின்
இழிவான அரசியலும்:
"கும் ", "خم" ، என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய ஜுஹ்ஃபா எனும் பகுதியில் உள்ள ஓர் தண்ணீர் தடாகத்தின் பெயர், இந்த நபிமொழி மிகப் பிரபலியமானது , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரும், ஷீஆக்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய அங்கீகாரம் பெற்ற ஒரு நபிமொழியும் கூட,
ஹதீஸ் "حديث غدير خم " ," கதீர் கும்" என்ற இந்த நபிமொழியை பற்றி ஷீஆக்கள் கூறும்பொழுது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் மறைத்து விட்டதாகவும் அதே நேரத்தில் இந்த நபிமொழியை ஷீஆக்கள் தவறாக விளங்கி இறைத்தூதர் ﷺ அவர்களின் மரணத்திற்கு பின்பு ஸய்யதுனாஅபூபக்கர் ,உமர் ,
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹீம் போன்ற தலைசிறந்த ஸஹாபாக்களின் கிலாபதுகள் முறையற்றது என்றும் அவர்களை அவமதிக்கும் வகையில் இறைத்தூதர் அவர்கள் தங்களின் வாழும் காலத்திலே மேற்குறிப்பிட்ட இந்த நபி மொழியை மையமாக வைத்து தனது மருமகனார் அலி
ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத்தான் விலாயதை வழங்கினார்கள்,
(கிலாபத் எனும் ஆட்சி அதிகாரம்) என்று தவறுதலாக புரிந்து இன்றுவரை அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் மிகப்பெரிய ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டார்கள்,
ஷீஆக்களும் ஆங்கிலேயர்களும்:
காலனிய ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் இந்த பிரிவினையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள் , இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷீயா-ஸுன்னி என்ற மிகப்பெரிய சுவற்றை எழுப்பி அதிகமான பிணக்குகளை ஏற்படுத்துவதற்கு "முஸ்தஷ்ரிகீன்களை ",
ஓரியண்ட்லிஸ்ட்களை (முஸ்லிமல்லாத மேற்கத்தியர்கள் இஸ்லாத்தை முறையாக படித்து நிபுணத்துவம் பெற்றவர்கள்)
தயாரித்து , இன்று மத்திய கிழக்கு பகுதிகளில் பல குழப்பங்களை உலக அளவில் அரங்கேற்றி வருகின்றனர்.
"தகிய்யா " என்பதின் விளக்கம்:
கீழே காணும் நபி மொழியில் வழமையைபோன்று "தகிய்யா" (இஸ்லாம் அனுமதித்திருக்கும் இக்கட்டான நிலையில் சத்தியத்தை பாதுகாப்பதற்காக பொய்யுரைப்பது) என்ற கொள்கையை தங்களுக்கு
சாதகமாக ஆக்கி எதிர்கருத்து உடைய மக்களை வழி கெடுப்பதற்காக தங்களது சொந்த கருத்துக்களை புகுத்தி ,சத்திய சஹாபாக்களை தரக்குறைவாக இன்றுவரை பேசிக் கொண்டிருக்கும் "கதீர் கும்" நபிமொழி தான் இது ,
ஸெய்யதுனா அலியும் , விலாயதும்:
இதை புரிந்து கொள்ளாமல் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பரேல்விய சிந்தனை கொண்டவர்களும்
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத்தான் "விலாயத்", இருக்கிறது தரீக்காக்களின் சங்கிலித்தொடர்
ஸெய்யதுனா அலி அவர்களை மட்டும்தான் சென்றடைகிறது என்று ஷீஆக்களுக்கு தங்களது மறைமுகமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்,
இதை புரிந்துகொள்ளாமல் சில உலமாக்களும் இந்த நபிமொழியை மக்களிடத்திலே தவறாக கொண்டு சேர்க்கின்றனர் ,இந்தக் கருத்தை பல பயான்களில் கூறியும் வருகின்றனர் இதன் உண்மை நிலை என்ன வாருங்கள் சற்று ஆய்வு செய்வோம்.
ஷீஆக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக தவறாக மாற்றி அமைத்த நபிமொழிகளும்:
وروى الإمام مسلم في صحيحه عن زيد بن أرقم أنه قال: قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة، فحمد الله وأثنى عليه ووعظ وذكر ثم قال: أما بعد ألا أيها الناس، فإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب، وإني تارك فيكم ثقلين، أولهما كتاب الله فيه الهدى والنور، فخذوا بكتاب الله واستمسكوا به - فحث على كتاب الله ورغب فيه- ثم قال: وأهل بيتي، أذكركم الله في أهل بيتي، أذكركم الله في أهل بيتي.
ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபிமொழி ஜெய்து பின் அர்கம் அவர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருக்கும்
" கும் ", என்று சொல்லக்கூடிய ஒரு தண்ணீர் தடாகத்தில் உபதேசத்தை செய்கிறார்கள், அல்லாஹ்வைப் புகழ்ந்து தங்களது உபதேசத்தை ஆரம்பிக்கிறார்கள் ...
மக்களே !!
நான் ஒரு மனிதனாக இருக்கிறேன் என்னிடத்தில் மிக விரைவில் இறை தூதுவர் (வானவர்)ஒருவர் வருவார் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும், நான் உங்களுக்கு இரண்டு முக்கியமான விடயங்களை விட்டுச் செல்கிறேன்
முதலாவது அல்லாஹ்வின் வேதம் அதில் நேர்வழியும் ,பிரகாசமும் இருக்கிறது,
அல்லாஹ்வின் வேதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றி ஆர்வம் ஊட்டினார்கள் பிறகு சொன்னார்கள் என்னுடைய குடும்பத்தினர்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
(இவ்வாறு மூன்று தடவைகள் கூறினார்கள்)
இந்த அறிவிப்பு அங்கீகாரம் பெற்றதாக நமது உலமாக்கள் கூறுகின்றனர் ஷீஆக்கள் கூறும் நபி மொழி இட்டுக்கட்டப்பட்ட அந்தஸ்தில் இருக்கிறது என்று நமது அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு முஸ்லிம் இறைத்தூதர் அவர்களை முழுமையாக நேசம் கொள்ளாமல் நம்பிக்கை கொள்ளாமல் ஒரு பரிபூரணமான முஃமினாக ஆக முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,
இறைத்தூதரை விரும்புவதும் அவர்கள் குடும்பத்தினரை நேசிப்பதும் நமக்கு மார்க்கம் கற்றுத்தந்த அடிப்படையான விடயங்களில் ஒன்று என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை,
அதனால்தான் நாம் நம்முடைய பிரார்த்தனைகளில் கூட இறை தூதுவர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லும்பொழுது அவர் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வுடைய அருள் இறங்குமாறு துவா செய்கிறோம்,
ஆனால் இந்த ஷீஆக்கள் காலம் காலமாக இந்த நபிமொழியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் இறைத்தூதரின் மரணத்திற்கு பின்பு கலீஃபாவாக ஆகுவதற்கு முற்றிலும் தகுதியானவர் ஸெய்யதுனா அலி இன்னும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே என்கின்றனர்,
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் தங்களின் நபிமொழியில் அல்லாஹ்வுடைய வேதத்தையும் தனது குடும்பத்தையும் பற்றிபிடிக்குமாறு கூறினார்கள் என்று முறைகேடா க வியாக்கியானம் செய்து அதிகாரம் பெற்ற நபிமொழிகளில் வந்துள்ள சுவனத்தில் முதலில் பிரவேசிக்கும் தகுதி உடையவர் ஸெய்யதுனா அபூபக்கர் , அடுத்ததாக உமர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹீம் போன்ற தலைசிறந்த சஹாபாக்களை இழிவு படுத்துகிறார்கள் , அன்னை ஆயிஷா ,முஆவியா ரலியல்லாஹு அன்ஹும் அவர்களையும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சைப்படுத்துகிறார்கள்.
ஸெய்யதுனா அலி அவர்கள் இறைத்தூதர் அவர்களின் காலத்திற்கு பின்பு இறைத்தூதரால் மிகவும் மதிக்கப்பட்ட இந்த மூன்று சஹாபாக்களுக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்தார்கள் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒன்று,
மேலும் ஒரு நபிமொழியில் அவர்களின் வழமையான இருட்டடிப்புகளையும் பொய்யான கருத்துக்களையும் மார்க்கமாக சொல்லி மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்,
கீழ்க்காணும் நபிமொழியிலிருந்தும்
ஸெய்யதுனா அலி மட்டுமே ஆட்சியாளராக ஆக தகுதியானவர் என்று பிழையாக கூறுகின்றனர்
وأخرج الإمام أحمد وغيره عن بريدة قال: غزوت مع علي اليمن فرأيت منه جفوة فلما قدمت على رسول الله صلى الله عليه وسلم، ذكرت عليا فتنقصته فرأيت وجه النبي صلى الله عليه وسلم يتغير، فقال يا بريدة: ألست أولى بالمؤمنين من أنفسهم؟ قلت: بلى يا رسول الله، قال: من كنت مولاه فعلي مولاه. قال الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين
இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற நபிமொழி
புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் எமன் தேசத்தில் அலியுடன் போர் புரிந்தேன்,
நான் அங்கு அவரிடம் முறைகேடை கண்டேன், நான் எப்பொழுது அல்லாஹ்வின் தூதர் இடத்தில் திரும்பி வந்தேனோ அலியைப் பற்றி சற்று குறையை சொன்னேன் நபியவர்களின் முகம் சற்று மாறுவதை கண்டேன்,
புரைதாவே நான் இறைநம்பிக்கையாளர்களில் தலை சிறந்தவன் இல்லையா ? என்று கேட்டார்கள் நான் ஆம் என்று சொன்னேன்,
"நான் யாருக்கு எஜமானனாக இருக்கிறேனோ அவர்களுக்கு அலியும் எஜமானராக இருக்கிறார் ",
இந்த நபிமொழியின் பின்னணி என்ன என்று பார்த்தால் ஹஜ்ஜுடைய காலகட்டத்திலே சில ஸஹாபாக்களுக்கு அல்லாஹ்வின் தூதுவர் ஒரு சில நாடுகளில் இறை அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிட்டு அனுப்பியிருந்தார்கள் அங்கு ஒரு சில சஹாபாக்கள் ஸெய்யதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தவறாக புரிந்து கொண்டு நபியவர்கள் இடத்தில் தொடர்ந்து புகார் செய்து கொண்டிருந்தார்கள்,
தொடர்ந்து புகார் சொல்லப்பட்ட விடயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த இறைத்தூதர் அவர்கள் தக்க தருணத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கலாம் என்று கருதி தனது ஹஜ்ஜை முடித்தபின்பு துல்ஹிஜ்ஜா பதினெட்டு அன்று மக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் இடையில் "கும் - خم "என்ற தண்ணீர் தடாகத்தில் தங்களது உபதேசத்தை வழங்குகிறார்கள்,
இறைத்தூதர் ﷺ அவர்கள் ஸெய்யதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை
பற்றி தவறாக கூறாதீர்கள் அவர்கள் செய்தது சரி அவர்கள் தங்களது உரிமைகளை எடுத்துக் கொண்டார்கள், என்று கூறி அலி இன்னும் தங்களது குடும்பத்தினரை பற்றிய மதிப்பை மரியாதையை எனது மரணத்திற்குப் பின்பும் நீங்கள் வழங்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு ஜக்காத் பணத்தில் இருந்து உண்பது ஹராம் என்ற கருத்தையும் குறிப்பிடுகிறார்கள்,
இது தான் அல்லாஹ்வின் தூதர் ﷺ ஸெய்யதுனா அலி இன்னும் தங்களின் குடும்பத்தினரை பற்றி கூறிய உண்மையான நிலைபாடு,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கண்ணோட்டத்தில் சஹாபாக்களும் ஷியாக்கள் வழியில் பயணிக்கும் பரேல்விகளும்:
ஸெய்யதுனா அபூபக்கர் ,உமர் உஸ்மான், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹீம் போன்ற சஹாபாக்கள் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் பத்ரில் கலந்துகொண்ட சஹாபாக்களை இறைவன் மன்னித்து விட்டதாகவும் அவர்களுக்கு சுவனம் கட்டாயமாக்கப்பட்டு விட்டது என்ற பல அங்கீகாரம் மிக்க நபிமொழியையும் நாம் காணமுடியும்.
ஒவ்வொரு நபித்தோழருக்கும் தனி சிறப்புகள் இருக்கின்றன , ஸெய்யதுனா அலி அவர்களுக்கும் தனி சிறப்புகள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் மட்டுமே நேர்மையானவர்கள் அவர்கள்தான் முஸ்லிம்களை ஆட்சி செய்வதற்கு தகுதியானவர்கள் மற்றவர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்று சொல்வது முறைகேடான ஒரு விடயமாகும்,
கீழ்காணும் இறைவசனத்தில் நபித்தோழர்களுக்கு அல்லாஹ் வழங்கி இருக்கக் கூடிய அங்கீகாரத்தை காண முடிகிறது.
لَقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ
அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 48:18)
வழிகெட்ட ஷீஆக்களும் , இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற அத்வேத கொள்கையுடைய பரேல்விகளும் கூறுவதைப் போன்று இந்த நபிமொழி மறைக்கப்பட்ட ஒன்றல்ல இது நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய ஒரு நபிமொழி அதை அவர்கள் தவறாக விளங்கிக் கொண்டு இன்றுவரை அரசியல் ரீதியான முரண்பாட்டை கையாளுகிறார்கள் அவர்களின் பாதையை பின்பற்றும் அத்வேதக் கொள்கை உடைய பரேல்விகளும் இந்த தவறான கருத்தை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மக்கா ஹரம் ஷரீஃபின் மீது தொடரும் தாக்குதல்களும், பரேல்விகளின் சதி வலைகளும்:
கடந்த 30/03/2021ம் செவ்வாய்க்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் பயங்கர ஆயுதத்துடன் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை சப்தமாக முழங்கிக் கொண்டு அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களை அச்சுறுத்திய ஒருவர் இறுதியாக ஹரம் ஷரீஃப் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டார் ,
இந்த செய்தி ஸஃஊதி அரசாங்கத்தால் அதிகாரபூர்வமான தகவல் தான் என்று கீழ்காணும் டிவிட்டர் சுட்டியை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது,
https://twitter.com/security_gov/status/1378428426332336133?s=19
இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருவதை நாம் செய்தித்தாள்களிலும் டிவியிலும் கண்டு வருகிறோம்,
உடனே வஹாபிகளின் கோட்டையான சவுதி அரேபியா ,
ஆல ஸஃஊது அரசாங்க குடும்பத்தினர் புரியும் அட்டூழியங்களும் அநீதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றது அதனால் அவர்கள் இறை அதிருப்தியை பெற்றுவிட்டனர் என்றெல்லாம் கூறி பொய்யான நபிமொழிகளையும் சொல்லி மக்களிடையே தவறான கருத்துக்களை சிலர் பரப்பும் முயற்சி செய்கின்றனர்,
இதேபோன்று வரலாற்றிலே யாரும் மறக்க முடியாத ஒரு சம்பவம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் 1979ம் ஆண்டில் நடைபெற்றது,
ஸஊதி பிரஜை ஜுஹைமான் அல்உதைபி என்பவன் பயங்கரமான ஆயுதங்களுடன் ஹரம் ஷரீபில் நுழைந்து முற்றுகையிட்டது தான்.
ஜுஹைமான் அல்உதைபியை
பற்றி அறிவதற்கு முன், இவரை பற்றி - உலக அறிஞர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கவும் .
பொதுவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் ஒருவரின் புத்தகத்தை மேற்கோள் காட்டினால் இந்த பரேலவிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பொய் பித்தலாட்டம் என்று சொல்வார்கள்அதனால் வரலாற்று ஆசிரியர்கள் ஊடாக இந்த வாதம் வைக்கப்படுகிறது.
The Meccan Rebellion
By Thomas hegghammer &
Stephane Lacroix
https://youtu.be/Qysx_ku3plk
The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited (written by Thomas Hegghammer & Stephen Lacroix
Published by Amal Press
Few people are familiar with the event of the hijacking of the Kaaba in November 1979, but you may have heard the odd conversation that a group of Muslims hijacked the Kaaba, sealed the doors and held Muslims hostage for a period of time. This event, which sounds conspiratorial, has been shrouded in mystery and cover-ups, and when it did occur, there was a media blackout. In the book, “The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited” Thomas Hegghammer & Stephen Lacroix, investigate through interviews how this event came to pass.
https://muslimology.wordpress.com/2011/11/19/book-review-the-meccan-rebellion/
Amal press என்ற பதிப்பகம் "தி மெக்கன் ரெபில்லியன் "
மக்கத்து போராளி -என்ற புத்தகத்தை, மேற்கத்திய ஆய்வாளர்கள் Thomas Hegghammer & Stephen Lacroix எழுதியதை வெளியிட்டிருக்கிறது .
அதில் கிடைத்த சில தகவல்கள் :-
# ஜுஹைமான் அல் உதைபி என்ற ஸவூதி பிரஜை, 18 வருடங்கள் சவூதி தேசிய பாதுகாப்பு படையில் பணி செய்தவர் .
# இவர் மக்காவிலும் , மதீனாவிலும் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை முறையாக படித்தவர்.
# தன் சகோதரியின் கணவர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி உடன் சேர்ந்து, இரகசிய உடன்படிக்கை செய்கிறார்.
# நடப்பில் இருக்கும் அரசாங்கம்,
குரைஷி வம்சத்தினர் இல்லை. எனவே, இந்த அரசு, அல்லாஹ்வின்
ஷரீஅத்திற்கு மாற்றமானது. இவர்கள் காஃபிர்கள்.
நாம் இந்த அரபு உலகை அநீதியிலிருந்து விடுதலை பெறச்செய்து, நாம் ஆட்சி செய்வோம் என்று கூறி, தன் மைத்துனர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி தான் எதிர் பார்க்கப்பட்ட "மஹதீ" என்றார்.
#"இனி அவரைத்தான் அமீராக
பையத்து செய்தாக வேண்டும்" என்று இரகசியமாக, பல ஆயிரக்கணக்கில் மக்களை அரசிற்கு
எதிராக கிளர்ச்சி செய்ய தூண்டினார்.
# எனவே, 1400 வது ஹிஜ்ரி
1979 /11/20 ல் புனித காபாவை முற்றுகை இட்டு, அங்கிருந்த பலரை பணயக்கைதியாக ஆக்கி, தவாப் இன்னும் தொழுகையையும் நடத்த விடாமல் தடுத்தனர். அரசாங்கம், பல நாட்கள் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லை. இறுதியாக, உள்ளிருந்த மக்களை
மீட்பதற்காக, கமாண்டோ தாக்குதல் நடத்தி, பொய்யன் முகம்மது பின் அப்துல்லா அல் கஹ்தானி -(மஹதியை)
(?) கொலை செய்தனர். இதனால், இவர் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தி இல்லை என்ற உண்மை நிலையை அறிந்த ஜுஹைமான் அல்உதைபியும் அவரின் 61 சகாக்களும், சரண்டைந்து, பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
ஆனால் இந்த பயங்கரவாத சதியை ஆதரித்து தவறாக எழுதி ஸஊதி அரசாங்கத்தை மக்கள் மன்றத்தில்
குற்றவாளியாக மாற்றுகின்றார்
, "மக்கா படுகொலை" என்ற புத்தகத்தின் ஆசிரியர் அறிஞர் ஷபர் பங்கஷ்,"ஷீஆக்களை போன்று " நடந்தேறிய உண்மைகளை மறைத்திருக்கிறார் !!!
அறிஞர் ஷபர் பங்கஷ், பிரபல்யமான டொரன்டோவின் இஸ்லாமிய அறிஞரும், இன்னும் ஒரு பத்திரிகையாளரும் கூட.
ஈரானிற்கு, தனது ஆதரவை தந்து வருபவர் என்பது,
யாருக்கும் தெரியாத ஒன்று அல்ல.
https://youtu.be/UOUUjlL51F4
ஈரானிய தொலைக்காட்சி press tv க்கு இவர் கொடுத்த பேட்டியை பாருங்கள்
அவர் "ஜுஹைமான் அல்உதைபியை - சவூதி அரசாங்கத்தின் தவறை சுட்டிகாட்டியவர்கள். அதனால் அவர்களின் மூதாதையர்கள் கொல்லப்பட்டனர். அவரும், அவர் கூட்டாளிகளும், ஹரமில் தஞ்சம் புகுந்தனர். இருந்தும், சவூதி அரசாங்கம் ஈவு இரக்கமின்றி அவர்களை கொலையும் ,சிறைவாசமும் அளித்தது" என்றெல்லாம் வரலாற்று இருட்டடிப்பு செய்து, மேலும் படிப்பவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, - "ஹரம் ஷரீஃபின் கண்ணியத்தை போக்கினார்" - என்றெல்லாம் கூறியது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே ....!!!
இவரைப் பற்றி, மேலும் அறிய,
******************
"Support for the Iranian Government "
*******************
Bangash is a staunch supporter of the 1979 Islamic revolution in Iran and has called for Islamic revolutions in other countries, stating that "Muslims must strive to overthrow the oppressive systems in their societies through Islamic revolutions, and not by participating in fraudulent elections organized by the elites operating through various political parties that actually divide the people. Tarek Fatah describes him as the "unofficial spokesperson" for the Iranian regime in Canada. However, Bangash has denied being an advocate of creating an Islamic theocracy telling the Toronto Star "I am suggesting not necessarily an Iranian-style theocracy but I am advocating that people in the Muslim world should get rid of their corrupt regimes in the same way as the people of Iran got rid of the corrupt regime of the shah, of course."
https://en.m.wikipedia.org/wiki/Zafar_Bangash
மேலும் இவர் தனது புத்தகத்தில் 1987 ல் நடந்த படுகொலை சம்பவம்
என்று பல வரலாற்று
பின்னணியில் பொய்களை எழுதி இருக்கிறார், ஆனால், நடந்தது என்ன என்று தாங்களே கீழ்க் கண்ட தகவலை படித்துப் பாருங்களேன் .
"Los Angels times " என்ற பத்திரிகையில் வந்த தகவல் - 02/08/1987 அன்று
CHARLES P. WALLACE | Times Staff Writer
என்ற பத்திரிகையாளர் எழுதி இருக்கிறார்.
அது என்ன ?
"பல நூற்றுக்கணக்கான ஈரானியர்கள், இன்னும் பல மற்ற நாட்டவர்களும், அதிலும் பல சவூதி பிரஜைகளும் இந்த ஈரானிய ஹாஜிக்களின் கால்களுக்கு கீழ் உயிரிழந்தனர். ஆனால், ஒரு தோட்டா கூட சவூதி பாதுகாவலர்கள் இவர்கள் மீது பயன்படுத்தவில்லை".
The Riyadh government, as quoted on Saudi television, disputed the Iranians' version. The broadcast quoted Information Minister Ali Hassan Shaer as saying that "not a single bullet was fired" by police at the demonstrators. Rather, he said, "hundreds of Iranians and pilgrims of other nationalities, as well as Saudi citizens, died under the feet of the Iranian pilgrims."
Saudi television also showed a 15-minute film of the violence in which Iranians were seen throwing stones at Saudi security men equipped with riot shields separating the Iranians from other pilgrims, Reuters news service reported from Bahrain.
The Iranians then charged, and the cordon of security men broke, running into crowds of other pilgrims.
http://articles.latimes.com/1987-08-02/news/mn-971_1_saudi-arabia
மேலும், 1987 ல் ஹஜ்ஜில் ஸஃஊதி அரசாங்கத்தால் திட்டமிட்டு ஈரானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று நடந்த இந்த விபத்தை படுகொலையாக சித்தரித்தவர்களின் உண்மைகளை தெரிய விரும்புவோர்,
கீழ்க்கண்ட தகவல்களையும் படியுங்கள். உண்மை நிலையை அறியுங்கள் .
1-Khamene’i’s message, Radio Tehran, 28 June 1990, quoted in FBIS, 2 July 1990.
" Khomeini’s message, Radio Tehran, 20 July 1988, quoted in FBIS, 21 July 1988. Abu Sufyan was a member of the Prophet Muhammad’s tribe who had originally opposed Muhammad. His son, Yazid, was responsible for the killing of the Imam Husayn. Another son, Mu’awiya, founded the Umayyad dynasty. The family and the dynasty are deemed usurpers in the Shi‘ite reading of early Islamic history."
2-On the bombing incident, see Reinhard Schulze, “The Forgotten Honor of Islam,” MECS 13 (1989): 182-84.
3-Al-Alam (London), 16 May 1992.
4-Sa‘ud al-Faysal quoted by Radio Tehran, 30 September 1990, quoted by FBIS, 1 October 1990.
5-Nateq-Nuri’s interview, Middle East Insight, July-August 1993.
இன்னும் பல.........
சமாதி வழிபாட்டை ஒழித்து பிதுஅத்துகளையும் அனாச்சாரங்களையும் அடியோடு துடைத்து எறிந்த இந்த ஸஃஊதி அரேபியா மீது இந்த ஷீஆ சிந்தனையாளர்கள் கக்கும் இந்த அபாயகரமான விஷங்களை முறியடிப்பதற்காக தான் இந்த செய்திகள் உங்களுக்கு தரப்படுகின்றன,
இந்தப் புத்தகத்தை, படித்த பிறகு, தயவு கூர்ந்து, இவரைப் பற்றிய தெளிவான பின்னணியையும், எதற்காக, இந்த புத்தகத்தை எழுதினார் என்பதனையும் படிக்க தவறாதீர்கள்.
இல்லையேல், ஷீஆக்களின் நோக்கமாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மக்களை இழிவு படுத்தவேண்டும் என்ற அந்த அபாய
வலையில் - நீங்களும் விழுந்து பலியாகி விடுவீர்கள்.
அதிலும், ஸவூதி அரேபிய அரசாங்கம் இன்னும் அவர்களுக்கு இவர்கள் (ஷிஆக்கள் ) வைத்த "வஹ்ஹாபிகள் " என்ற பட்டத்தை, நாம் அறியாமலேயே, நம்மீது
சுமத்தி - இந்த உம்மத்தின் பிரிவினைக்கு ஆளாகி விடுவோம்.
வஹாபிகளின் பெயரில் மாற்றுக் கருத்துடையவர்கள் புனைந்த கட்டுக்கதைக்கு மறுப்பாக உண்மையை அறிய விரும்பினால் கீழ்காணும் இந்த யூடியூப் சுட்டியை சொடுக்கவும்
https://youtu.be/VwgrrN59X7c
எனவே, வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டாம். மேலும், பிரிவினை வாத சிந்தனைகளை களைந்து, அதற்கு எப்பொழுதும் துணை போக வேண்டாம்.
ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம், இன்னும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானன்.
(அல்குர்ஆன் : 5:2)
அசத்தியவாதிகளான பரேல்விகளை இனம்கண்டு கொள்ள இதோ சில அடையாளங்கள் !!!
1- பித்அதைப்பற்றி மறந்தும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள்.
2- நபி நேசத்தை ஹுப்புர் ரஸூல் - என்று கூறாமல் "இஷ்குல் ரசூல் ", என்று சொல்பவர்கள்.
3-ஸுரா அல்அஹ்ஸாபில் இடம்பெற்றிருக்கும் (33:56) வசனத்தை வைத்து ஸலவாத்து சொல்வது ஒரு இபாதத் ,அல்லாஹ் எந்த ஒரு இபாதத்தையும் செய்வதில்லை அவன் மஃபூத் ஆனால் தனது நபியின் மீது சொல்லும் ஸலவாத்தை தானே முன்வந்து செய்கிறான் என்று தவறாக அல்லாஹ்வே இந்த இபாததை செய்வதாக சொல்பவர்கள்.(அல்இயாது பில்லாஹ்)
4-நபியவர்களை புகழ்வதில் எந்த வரையறையும் இல்லை எல்கையும் இல்லை என்று சொல்பவர்கள்.
5-மௌலூதை ஓதாதவர்கள் நபி நேசத்தை அடைய முடியாது என்று சொல்பவர்கள்.
6-மீலாது விழா கொண்டாடுபவர்கள்
தான் நபி ﷺ அவர்களின் ஷஃபாதுக்கு உரியவர்கள் என்று சொல்பவர்கள்.
7-ஸலவாத்தை சப்தமாக ஜமாத்து தொழுகைக்கு பிறகு சொல்பவர்கள்
8- நீளமான தொப்பியை அணிவதில் கவனம் செலுத்துபவர்கள் நபியவர்களின் உறுதிசெய்யப்பட்ட சுன்னத்தான தாடியை முழுமையாக வைக்காதவர்கள்.
9-ஆடையை கரண்டை காலுக்கு கீழ் உடுத்துபவர்கள்.
10-பச்சை நிறத்தை புனிதமாக கருதுபவர்கள், பச்சை நிறத்தில் ஆடை அணிவது ,தலைப்பாகை கட்டுவது, தொப்பி அணிவது அதை
நபியவர்களின் உறுதிசெய்யப்பட்ட சுன்னதாக கருதுபவர்கள்.
11- வஹ்ததுல் உஜுத் என்ற வழிகேடான கொள்கையை தவ்ஹீதாக கருதுபவர்கள்
13- மறைமுகமான அறிவு இரைநேசர்களுக்கும், அவர்களின் ஷைகுமார்களுக்கும் இருக்கிறது என்று ஷீஆக்களைப் போல் நம்புவார்கள்
14- மனிதனால் இயலாத விடயங்களில் (கஷ்டத்தை போக்குவது நோயை நீக்குவது மழையை தருவது)அல்லாஹ் அல்லாதவர்களிடம் இஸ்திகாஸா (உதவி தேடுதல்) கூடும் என்று கூறுவார்கள்
15-யா அல்லாஹ் என்று அழைப்பதற்கு நிகராக தங்களின் ஷேஹூமார்களையும் இறைநேசர்களையும் அழைப்பார்கள்.
16-மார்க்கம் வரையறுத்த வஸீலா விடயத்தில் உயிர் நீத்த ஸாலிஹீன்களின் ஊடாகவும் துஆ கேட்கலாம் என்று சொல்வார்கள்.
17- இறைநேசர்களும் நபிமார்களும் மரணத்திற்கு பிறகும் வருகை தருவார்கள் உதவி புரிவார்களா என்று நம்புவார்கள்.
18- அல்பாஃதிஹா என்று சப்த்தமாக கூறி மஜ்லிஸில் சூரா அல்பாஃதிஹாவை ஓதி துஆ செய்வார்கள்.
19- தர்காக்களை வழிபாட்டுத் தலமாக
ஆக்கிக் கொள்வார்கள்.
20- பித்அத் செய்யக்கூடாது, சமாதி வழிபாடு கூடாது என்று சொன்னால் வஹ்ஹாபி என்று சொல்வார்கள்.
21- இறைத்தூதர் ﷺ அவர்களின் பெயரைக் கேட்டால் ஸலவாத்துச் சொல்லாமல் இரு விரல்களை இரு கண்களில் வைத்து முத்தமிட்டு கொள்வார்கள்.
22- மார்க்கத்தில் அனுமதிக்க படாத ராத்திபு, ஷிர்க்கான ஸலாதுன் நாரியா ,கதம் பாஃதிஹா , மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றால் காபிஃர்கள் என்று சொல்வார்கள்.
23- வஹ்ஹாபிகளின் பின் நின்று தொழுகக்கூடாது என்று சொல்வார்கள்
இன்னும் பல.....
தர்காஹ் கலாச்சாரம்:
உஸுல் ஃபிக்ஹு (மார்க்கச் சட்ட அடிப்படை கலை) அடிப்படையில் அல்லாஹ்வும், அவனுடையதூதரும் எதை நமக்கு மார்க்கமாக ஆக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்களோ அது தான் மார்க்கம்,
اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்)
(அல்குர்ஆன் : 5:3)
என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த சட்டம் இமாம்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
الأصل في العبادة التوقيف
دراسة وتحقيق قاعدة الأصل في العبادات المنع
என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தராத வணக்க வழிபாடுகள் பெயரில் பின் வந்தவர்கள் ஏற்படுத்திய அனைத்து காரியங்களும் வழிகேடுகளே பிதத்அதுகளே அனாச்சாரங்களே
عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ) رواه البخاري ومسلم ، وفي رواية لمسلم : ( من عمل عملاً ليس عليه أمرنا فهو رد ) .
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்
"யார் நமது மார்க்கத்தில் நூதனமாக( மார்க்கமாக) ஒரு விடயத்தை புதியதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியது
நூல் ஸஹீஹுல் புகாரி
தரம் :(ஸஹீஹ்)ஆதாரமிக்கதுது
فالحديث رواه البخاري ومسلم وغيرهما عن أبي هريرةرضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: "لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجد الرسول صلى الله عليه وسلم، ومسجد الأقصى."
ஸஹீஹுல் புஹாரியிலும் முஸ்லிமிலும் இடம்பெறும் ஆதாரபூர்வமான நபிமொழி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊடாக அறிவிக்கப்படுகிறது
(நன்மைகளை நாடி வணக்க வழிபாடுகள் சிந்தனையில்) மஸ்ஜிதுல் ஹராம் ,மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா, இந்த மூன்று பள்ளிகளிலத் தவிர உங்களது வாகனங்களை தயார் செய்துகொண்டு பயணிக்காதீர்கள்
இந்த நபிமொழியிலிருந்து காலம்காலமாக அறிஞர் மக்களிடத்திலே கருத்து வேறுபாடு நிலவிக் கொண்டிருக்கிறது இஸ்லாத்திற்கு முரணாக கப்ருகள் உயர்த்தப்பட்டு , பூச்சு பூசப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு ,கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வணக்க ஸ்தலமாக ஆக்கப்பட்டு இருந்தால்,
சங்கையான நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களின் கூற்றின் அடிப்படையில் அங்கு செல்வது கூடாது கபுரு என்ற ரீதியில் மறுமையின் நினைவு ஏற்படுத்திக் கொள்வதற்காக அனாச்சாரங்கள் இல்லாத கபுருகளுக்கு ஸியாரத் செய்வது தடை இல்லை,
மேல் கூறப்பட்ட நபி மொழி ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்று இருக்கிறது அதற்கு விளக்கம் எழுதும் விதத்தில் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் , இமாம் அபூ முஹம்மத் அல் ஜுவைனை, இமாம் காழி இயாழ்
போன்ற ஷாபி ,மாலிகி மத்ஹப் உடைய இமாம்களும் தனிநபர் கபுருகள் மார்க்கம் சொல்லப்படாத விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தால் அங்கு செல்வது கூடாது என்ற கருத்தையே தெளிவாக சொல்கிறார்கள்,
இந்த விளக்கத்தை கூறும் இமாம் அஸ்கலானி அவர்கள் ஷாபி மத்ஹபில் நன்மையை நாடி வேற ஒரு பள்ளியில் தொழுதாலும் நன்மைகள் கிடைக்கும் ஆனால் மேல் கூறப்பட்ட இந்த மூன்று பள்ளிகளில் நன்மைகளை அதிகம் என்ற கருத்தை குறிப்பிடுகிறார்கள்
இதைத்தான் தர்கா ஸியாரத் கூடும் என்று சொல்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு தர்கா ஸியாரத் கூடும் என்று இமாம்கள் கூறுகிறார்கள் என்ற தவறான கருத்தை குறிப்பிடுகிறார்கள்,
மேல் கூறப்பட்ட நபிமொழியின் விளக்க தொடரில் அபூ பஸரா அல்கஃப்பாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து மூசா நபியின் தூர் மலைக்கு சென்று ஸியாரத் செய்தேன் என்று அபூஹுரைரா அவர்கள் கூறிய பொழுது எனக்கு முன்பு தெரிந்து இருந்தால் உங்களை தடுத்து இருப்பேன் என்று மேற்கூறிய ஹதீஸை முன்வைத்து சொன்னதாக அபூதாவூத் திர்மிதி போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இமாம் இப்னு தைமியா அவர்கள் காலத்திலும் அவர்களின் கொள்கையில் பயணித்த அவர்களின் மாணவர்களாகிய இமாம் இப்னுல் கையும் இமாம் தஹபி இமாம் இப்னு கஸீர் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (ரஹிமஹுமுல்லாஹ்) அவர்களும் தங்கள் காலத்தில் மார்க்கத்திற்கு முரணாக இருந்த கப்ருகளின் அளவை சரி செய்தார்கள்,
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எமன் தேசம் சென்று ஒரு ஜானுக்கு மேல் உயர்த்தப்பட்டிருக்கும் கபுருகளை அனைத்தையும் இடிக்க வேண்டும் என்ற கட்டளையையும் இட்டிருந்தார்கள் அதேதான் சங்கையான இமாம்களும் செய்தார்கள்,
இந்தத் தூய எண்ணத்தில்தான் சவுதி அரேபிய அரசாங்கமும் அமைந்திருக்கிறது,
இதைப் பிடிக்காத ஷியாக்கள் தான் பல சூழ்ச்சிகளை செய்து மக்களிடம் மீண்டும் தர்ஹா கலாச்சாரத்தை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.
ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் மாலிகி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள்,
சங்கையான இமாம்கள் கீழ்க்காணும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ اِنَّ اللّٰهَ جَامِعُالْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ
நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 4:140)
தர்காக்களில் அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுகின்றன பரிகசிக்கப்படுகின்றன, அதனால் அங்கு உண்மையாகவே ஸாலிஹான நல்லடியார்கள் அடங்கியிருந்தாலும் அங்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் இவைகள் அனாச்சாரங்கள் தான் என்ன செய்ய முடியும், அதை தடுக்க வேண்டும் அதே நேரத்தில் ஸியாரத் செய்யாமல் இருக்க முடியுமா என்று சொல்லி சென்றால் அந்தப் பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு,
மண்ணறைகளை ஸியாரத் செய்ய நபியவர்கள் தடுக்க வில்லையே என்று நீங்கள் கேட்டால் முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றிருக்கும் ஸஹீஹான நபி மொழியான
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அவர்கள் இறை தூதரிடம் கேட்கிறார்கள் மண்ணறைகளை கடந்து சென்றால் என்ன செய்வது, நபியவர்கள் ஸலாம் சொல்லி கடந்து செல் என்றார்கள்,
ஏதாவது சொந்த வேலைக்காக இதுபோன்ற தர்ஹாக்கள் இருக்கும் இடங்களை கடந்து செல்வதாக இருந்தால் கடந்து செல்லும்போது சலாம் சொல்லி செல்வது ஸுன்னத்தாகும் , அங்கு இறங்கி அனாச்சாரங்களை கொண்ட தர்ஹாவில் நுழைந்து சலாம் சொல்வது வழிகேடாகும்.
இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்த சில மார்க்க அறிஞர்கள் கூட தங்களது முகநூல்களில் மிகப் பெருமையாக நாங்கள் இந்த தர்கா சென்றோம் என்று செல்பிகளை எடுத்து பதிவிட்டு மக்களை தவறான பாதையில் அழைப்பது மிகவும் வருத்தமான விடயம்,
உமையாக்கள் ஆட்சிக்கு பின்பு வந்த ஷீஆக்கள் தலைமையில் கிலாஃபத்தை பிடித்த பாதிமியா அரசர்கள் தான் , எகிப்தில் முதல் முதலில் தர்கா கலாச்சாரத்தையும்
மீலாது மௌலூது ஃபாத்திஹா போன்ற பல வழிகேடுகளுக்கு வித்திட்டார்கள்,
இமாம் இப்னு கஸீர் அவர்கள் தங்களது புத்தகமான பிதாயாயாவில் குறிப்பிடுகிறார்கள்,
வரலாற்று நாயகர் எதிரியிடமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டு முஸ்லிம்களிடத்தில் தந்த ஸலாஹுதீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவரின் அமைச்சரும் முதன்முதலில் இந்த வழிகேடுகளை எதிர்த்து முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்
என்பது வரலாறு,
இந்த வழிகேடை மார்க்கமாக மாற்றிய ஷீஆக்களை பின்தொடர்ந்து இந்தியாவில் பரேல்விய சிந்தனை உடைய
நபர்கள் அனாச்சாரங்களை கட்டமைத்தனர்,
இதனை எதிர்ப்பதற்காக தான் வட இந்தியாவில் தாய் மதரஸாவாக கருதப்படக் கூடிய தாருல் உலூம் தேவ்பந்து , அரபு நாட்டில் தோன்றிய இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஆகியோரின் முயற்சியினால் தர்காஹ் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இதை பொறுத்துக்கொள்ள முடியாத வழிகெட்ட ஷீஆக்களும் அவர்கள் வழியில் நடைபோடும் பரேல்விகளும்
உண்மையானஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில்
பயணிக்கும் இந்த தர்கா கலாச்சாரத்தை எதிர்க்கும் உலமாக்களுக்கு வஹாபிகள் என்ற பெயரை புனைந்து மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்,
ஆனால் வஹாபிகள் என்ற ஒரு பெயரை சூட்டியது சத்தியத்தை எடுத்துக் கூறும் அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தான்
அந்தக் காலத்தில் மொரோக்கோவில் வழிகெட்ட இபாலியா கொள்கையைச் சேர்ந்த
கொடுங்கோல் அரசன் அப்துல் வஹாப் பின் ருஸ்தும் என்பவன் ஹஜ்ஜை தடை செய்த காரணத்தினால் நமது உலமாக்கள் இவர்களுக்கு "வஹ்ஹாபி" என்று அழைத்தார்கள்,
இது உண்மையான வரலாறாகும்
"வஹாபிகள் பற்றிய தவறான ஒரு வரலாறு"
تصحيح خطأ التاريخي حول الوهابية
என்ற புத்தகத்தில் மொரோக்கோ நாட்டிற்கு சென்று ஆய்வு செய்து எழுதிய மிகப்பிரபலமான மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மத் அஷ்ஷுவைஅர் அவர்கள்
மேற்கூறப்பட்ட தங்களின் புத்தகத்தில் இந்த வரலாற்றை குறிப்பிடுகிறார்கள்.
தர்கா கலாச்சாரம் போதிக்கும் போதனைகள்...
1-"இஸ்திகாஸா பி ஹைரில்லாஹ்"
அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மரணித்தவர்கள் இடம்) துஆ கேட்பது
அல்லாஹ் அல்லாதவர்களிடம்
(மரணித்தவர்களிடம்) உதவி கேட்பது கூடாது ,
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)
2-மறைமுகமான விடயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் தெரியும் என்று கருதுவது .
3- மரணித்தவர்களிடம் வசீலா கேட்பது கூடும்.
4- மரணித்தவர்கள் வருகை தருகிறார்கள் நம்மை பார்க்கிறார்கள் என்று கருதுவது
5- இஸ்லாத்துக்கு முரணான பித்அதுகளான சந்தன கூடு எடுப்பது கொடி ஏற்றுவது கப்ரின் மீது போர்வை போற்றுவது கபூரை ஒரு ஜானுக்கு மேல் உயர்த்துவது விளக்கு ஏற்றுவது ஆண்கள் பெண்கள் மார்க்கம் சொல்லாத முறையில் ஒன்றிணைவது, அங்கு சென்று நேர்ச்சை செய்வது சஜ்தா செய்வது
6-பாத்திஹா மௌலிது மீலாது போன்ற அனாச்சாரங்களை மார்க்கமாக கருதுவது
இவைகள் அனைத்தும் வழிகேடுகளே
இதைப் பற்றி பல வருடங்களாக வழிகெட்ட பரேல்விகளிடத்தில் நாம் பல தடவை விவாதம் செய்தும் அதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை உள்ளங்கள் உடைந்தன ஒற்றுமைகள் சிதைந்தன ,வார்த்தைகள் தடித்தன காபிர் என்று ஃபத்வா நமக்கு வழங்கினார்கள் பரேள்விகள்.
சில சகோதரர்கள் இன்னுமா பரேல்விய அசத்தியவாதிகள் தங்களது கட்டுக்கதைகளை பொதுமக்களிடம் கூறி வழிகெடுத்து கொண்டிருக்கிறார்கள் !!!
வெகு நாட்களுக்கு முன்பாகவே அவர்களின் முகவரி இல்லாமல் அவர்களின் தாகூதுகளை(அசத்திய கொள்கைகளை) தாபூதில் (சமாதிப் பெட்டிகளில்) அறைந்து புதைக்கப்பட்டு விட்டானவே என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள்!!!!
ஆம் கிட்டத்தட்ட 100 வருடத்திற்கு முன்பாக வட இந்தியாவில் இருந்து வந்த தன்னை நபி என்று வாதிட்ட அஹமத் குலாம் காதியானியின்
வளர்ப்பு குழந்தையான அஹமது ரிழா கான் பரேல்வி (غفره الله ) போன்றோரின் குப்பை சிந்தனைகள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு அது இலங்கை வரை தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் இடத்தில் மிகப்பெரிய ஒரு வழிகேட்டை வளர்த்து சமாதி வழிபாடுகளையும், ஷிர்குகளையும்,
பித்அதுகளையும் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்றுத்தள்ளி "போலி சுன்னத் ஜமாத்தை" கட்டமைத்தனர்.
இந்த வழிகெட்ட பரேல்விகளின் சில கொள்கைகள்......
1)மரணித்தவர்களிடம் துஆ (பிரார்த்தனைகள்) செய்யலாம்
2) மறைமுகமான ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இருக்கிறது.
3) மரணித்தவர்கள் நம்மை பார்க்கலாம் நம்மிடம் வருகை தரலாம்
நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தரலாம்.
4) வசீலாவை மரணித்தவர்களிடம் கேட்கலாம்
5) பாத்திஹா ,மௌலிது, ஸலாத்துன் நாரியா, தர்கா கலாச்சாரம்,ஒடுகத்து புதன்.... இன்னும் பல....
6) மேல் கூறிய வழிகெட்ட ஷீஆக்களின் அனைத்துக் கொள்கைகளையும் "அஹ்லுல்பைத்" என்ற லேபிளில் தூய இஸ்லாமாக இறக்குமதி செய்வதற்கு முயற்சி செய்வது.
இது தங்களின் அழைப்பு பணியாக ,தங்களின் கொள்கையாகவோ தங்களின் உயிர்மூச்சாகவோ கூட கருதி அதை செய்துவந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக விக்ரக வழிபாட்டை செய்யும் முஷ்ரிகுகளை நாம் கண்டுகொள்ளாமல் நமது பணியை செய்து கொண்டிருப்பது போல் நாம் இருந்திருப்போம், நமக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை,
ஆனால் அப்பாவி பொதுமக்களிடத்திலும் , மருந்துக்கும் கூட புத்தகத்தை வாசிக்காத சில அரைகுறை ஆலிம்களிடத்திலும்
தாங்கள்செய்துகொண்டிருக்கின்ற
இந்த திருகுதாளங்களை
"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் ",
என்று கூறி இந்த வழி கேடுகளை நமது முன்னோர்களான சத்திய சஹாபாக்களும் , தாபியீன்களும், சங்கையான ஃபிக்ஹு துறை இமாம்களும் இதைத்தான் செய்து வந்தனர் என்ற இருட்டடிப்புகளை பொய்யான கருத்துக்களை அவர்களின் பெயரிலேயே கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள்,
இதைத்தான் நாம் நமது விழிப்புணர்வு தொடர்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம், நமது கட்டுரையை முழுமையாக வாசிக்காத சிலர் நமது முகநூல் பக்கங்களின் கீழ் அவ்வப்பொழுது நானும் கருத்துக்களை பதிவு செய்கிறேன் என்று பொய்யான ஐடிகளில் வந்து கம்பு சுற்றிக் கொண்டு செல்கிறார்கள், அவர்களுக்கு நாம் பதில் கொடுத்து நேரத்தை வீணாக்காமல், அவர்கள் முன்வைக்கும் வழிகேடான கருத்திற்கு மறுப்பு தெரிவிப்போம் என்ற விதத்தில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!!
இந்த வழிகெட்ட அமைப்பின் கொள்கைகளை இந்தியாவில் வேரோடு பிடுங்கி சாய்த்ததில் தாருல் உலூம் தேவ்பந்த்
இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் இந்த வழி கேடுகளுக்கு முழுமையான முறையில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சத்தியத்தை உரக்கச் சொன்ன
பாக்கியாத்தின் நிறுவனரான அஃலா ஹழ்ரத், அல்லாமா அமானி ஹழ்ரத், மௌலானா யாகூப் காஸிமி , மௌலானா கலீல் அகமது கீரனூரி, புரசைவாக்கம்
மௌலானா நிஜாமுத்தீன் மன்பயீ
ரஹிமஹுமுல்லாஹ் போன்ற பல உலமாக்கள் ஹைஅதுஷ் ஷரீஅத், ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை என்ற பெயர்களில் மக்களிடத்திலே பல விழிப்புணர்வுகளை செய்து அசத்திய வாதிகளின் வழிகேடுகளை தோலுரித்து மக்கள் மன்றத்தில் சிந்தனைத் தெளிவை கொண்டு வந்தனர்,
ஆனால் இன்று மிகக் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த சத்திய உலமாக்கள் இடத்தில் பயின்ற அதிகமான ஆலிம் உலமாக்கள் உண்மைகளை உரக்கச் சொல்ல தயங்குகிறார்கள், நாம் இதைச் சொன்னால் நமது பணி என்ன ஆகும் ?
நம்மை மக்கள் வஹ்ஹாபிகள் என்று சொல்வார்களே என்ற சிந்தனைகளால் வாய்மூடி மௌனம் காக்கின்றனர் (!!!!)
சத்தியத்தை உரக்கச் சொன்ன அந்த அறிஞர்களின் காலத்தில் எந்த பரேல்விய கோமாளிகளோ, அசத்திய ஹுத்ஹுத் பறவைகளோ,ஷைத்தானிய குருவிகளோ தமிழகத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டவில்லை வாளை சுருட்டி வைத்துக் கொண்டிருந்தனர்,
தப்லீக் ஜமாஅத், ஜம்மியத்துல் உலமா ஹிந்த், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், இந்த சிந்தனை பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மற்ற ஏனைய அமைப்புகளையும் "வஹ்ஹாபிகள்", என்று மக்களிடம் இந்த வழிகெட்ட பரேல்விகள் விமர்சித்து அவர்களை திசைதிருப்பி மூளை சலவை செய்து வருகின்றனர் .
இந்த வரிசையில் தமிழகத்து பரேல்விகளில் சிலர் பொய்யுரைத்து நமது சங்கையான இமாம்களை அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் முஷ்ரிகாகவும் காஃபிராகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதை நாம் அவ்வப்பொழுது ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் விளக்கி அவர்கள் முகத்திரையை கிழித்து உண்மை சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த விதத்தில் சமூக வலைதளங்களில் பின்வரும் செய்தி பதியப்பட்டு இருந்தது ...
////இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஷ்ரிக்கா?////
என்ற தலைப்பில் வழமையான அவர்களின் பாணியில் கேளிக்கூத்துகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்கள்
////)இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்வதை பாருங்கள்...
தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு வருகிறார்கள்...
عن أبي بكر المقري قال:
அபூபக்ருல் முக்ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
كنت أنا والطبراني وأبو الشيخ في حرم رسول الله صلى الله عليه وسلم،
நானும் தப்ரானீ இமாமும், அபூ ஷேய்ஹும் நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்களின் புனித ஹரமில் இருந்தோம்,
وكنا على حالة فأثر فينا الجوع،
நாங்கள் அந்த நிலையில் இருந்த போது கடுமையான பசி எங்களுக்கு ஏற்பட்டது,
فواصلنا ذلك اليوم،
அந்த நாள் முழுக்க அப்படியே நாங்கள் தொடர்ந்தோம்,
فلما كان وقت العشاء حضرت قبر رسول الله صلى الله عليه وسلم،
இஷாவுடைய நேரம் வந்ததும் நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புனித மண்ணறைக்கு வந்தேன்,
وقلت: يا رسول الله الجوع الجوع،
நான் சொன்னேன் : யாரசூலல்லாஹ் ! கடுமையான பசி ! பசி !
وانصرفت، فقال لي الطبراني
நான் திரும்பி வந்தேன் அப்பொழுது இமாம் தப்ரானி என்னிடத்தில் கூறினார்கள்
اجلس، فإما أن يكون الرزق أو الموت،
உட்கார்ந்து கொள்,
ஒன்று உணவு வரட்டும் அல்லது மரணம் வரட்டும்.
فقمت أنا وأبو الشيخ،
நானும் அபூ ஷேய்ஹும் எழுந்து விட்டோம்,
فحضر الباب علوي ففتحنا له
அலியாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார் எனவே அவருக்காக நாங்கள் கதவைத் திறந்தோம்,
فإذا معه غلامان بقفتين فيهما شيء كثير،
அவருடன் சில குழந்தைகள் 2 பாத்திரங்களுடன் அதில் நிறைய பதார்த்தங்களுடன் வந்தார்கள்,
وقال: شكوتموني إلى النبي صلى الله عليه وسلم،
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் முறையிட்டீர்கள் (போலும்)...
رأيته في النوم فأمرني بحمل شيء إليكم "
அன்னாரின் நான் கனவில் கண்டேன் எனவே இதை உங்களுக்கு கொடுக்கச் சொல்லி என்னை ஏவினார்கள்....
ابن الجوزي في "الوفا بأحوال المصطفى" (2/559)
இமாம் இப்னுல் ஜவ்ஸியுடைய அல் வஃபா பிஅஹ்வாலில் முஸ்தஃபா 2/559.
الذهبي في "تاريخ الإسلام" (8 / 525)
"سير أعلام النبلاء" (16 / 400)،
و"تذكرة الحفاظ" (3 / 121)
இமாம் தஹஃபியுடைய மூன்று நூல்கள்
ஸியரு அஃலாமிந் நுபலா 16/400
தாரீஹுல் இஸ்லாம் 8/525
ததுகிரதுல் ஹுஃப்பாழ் 3/121./////
வழமைபோன்று இவர்கள் முன் வைத்திருக்கும் இந்த கருத்திற்கு நீண்ட நெடிய விளக்கங்கள் தேவையில்லை அதை அவர்களின் பதிவில் " என்னப்பன் புதருக்குள்", என்ற பழமொழிக்கு ஏற்ப தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டு ,
நாம் தற்பொழுது பதிய இருக்கிற மறுப்பை தாங்களே கூறி நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள், அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக!!!
மேல் கூறப்பட்டிருக்கும் இந்த சம்பவங்கள் மிகப்பிரபல்யமான வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்றிருந்தாலும்,
அதை தலைசிறந்த இமாம்கள் கூறியிருந்தாலும் " உஸுலுல் ஹதீஸ்"
என்ற ஹதீஸ் கலை துறையின் அடிப்படை சட்டத்தின் அடிப்படையில்
"ஸீகதுத் தம்ரீழ்", (صيغة التمريض)
அதாவது இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற "துகிர,ருவிய", (ذكر- روي) என்ற வார்த்தைகளால் எந்த ஒரு அறிவிப்பு வருமோ அதை நம்பகத்தன்மையை இழந்து விடும் இது இமாம் புகாரி முஸ்லிம் ரஹிமஹுமுல்லாஹ் தங்களின் புத்தகங்களில் அங்கீகாரம் பெற்ற நபி மொழிகளுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் வரைவிலக்கணம்.
وفي صحيح البخاري بعض ذلك ، إلا أنه قليل جدا ، وقد يسلم هذا القليل أيضا .
انظر : "كتاب الإلزامات والتتبع" لأبي الحسن الدارقطني ، "ميزان الاعتدال" (4/39-40) ، "مقدمة الفتح" (344) ، "شرح مسلم للنووي" (1/27) ، "سلسلة الأحاديث الضعيفة" (1/142) (2/471-475) (5/218) .
இதன் காரணமாக இமாம் புகாரி முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு சில நபிமொழிகள் கூட பலவீனமானது என்பதை அவர்களுக்குப் பின் வந்த இமாம் தாரகுத்னீ தங்களின் புத்தகமான
كتاب الإلزامات والتتبع
என்பதில் கூறியதாக கீழ்காணும் புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது
"ميزان الاعتدال" (4/39-40)
"مقدمة الفتح" (344) ، "شرح مسلم للنووي" (1/27) ، "سلسلة الأحاديث الضعيفة" (1/142) (2/471-475) (5/218) .
இந்த அடிப்படையான ஹதீஸ்கலை சட்டத்தை கூட அறியாத இந்த பரேலவிகள்!! இமாம் அபுல்ஃபரஜ் அல்ஜவ்ஸி, இமாம் தஹபி ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் தங்களது புத்தகத்தில்
அல்லாவின் தூதர் அவர்களின் மண்ணறையில் இஸ்திகாஸா & வஸீலாவை நான் தபரானி ரஹிமஹுல்லாஹ் செய்ததாகவும் அது தங்களின் கொள்கையாகவும் இருந்தது என்று கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
மரணித்தவர்கள் இடத்தில் துஆ செய்வது கூடும் என்று வாதிக்கும் ஷிஆ கொள்கையைச் சேர்ந்த அறிஞர்கள் எப்பொழுதும் அவர்கள் புத்தகங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை முன்வைத்து மேற்கோள் காட்டுவார்கள்.
இந்த அறிவிப்பை அறிவிக்கும் அபுர்
ரபீஃ ஸீலைமான் பின் ஸாலிம் அவர்கள் ஹிஜ்ரி 281 ல் மரணித்து விட்டார்கள்... இவரிடமிருந்து அறிவிப்பதாக கூறப்படும் இமாம் தஹபி அவர்கள் ஹிஜ்ரி 748 ல் மரணித்தவர்கள் இருவருக்குமிடையில் 467 வருடங்கள் இடைவெளி இருக்கிறது.
இவர்களுக்கு மத்தியில் இருக்கும் அறிவிப்பாளர்கள் யார்? அவர்கள் விபரங்கள் என்ன? என்பது இந்த பரேல்விகள் தெளிவுபடுத்தவில்லை
ஆகையால் இவர்கள் முன் வைத்திருக்கும் இந்த அறிவிப்பு நம்பகத்தன்மையை இழந்து ஆதாரம் அற்றதாக ஆகிவிடுகிறது.
لا طاعة للمخلوق في معصية الخالق
"இறைவனுக்கு மாறு செய்து படைப்பினங்களுக்கு அடிபணிய கூடாது"
இது நமது முன்னோர்களாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் மிக ஆணித்தரமாக அனைவரின் தலையிலும் அடிக்கப்பட வேண்டிய ஒரு கொள்கை.
ஒரு மனைவி கணவனுக்கு கட்டுப்படுகிறேன் என்று சொல்லி அவனுக்கு சேவகம் செய்கின்றேன் என்ற பெயரில் தொழுகை போன்ற வணக்கங்களை விடுவது அதை அதற்கு காரணமாகச் சொல்வது அல்லாஹ்விற்கு மாறு செய்வதாகும்
தாய், தந்தையர்களுக்கு கட்டுப்படுகிறேன் என்று சொல்லி அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு அவர்களின் மக்கள் மாறு செய்வதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து ஆதாரமாக எடுத்துள்ளனர் நமது முன்னோர்களான இமாம்கள்.
وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ
நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்யக்கூடாது
(அல்குர்ஆன் : 60:12)
ஸாலிஹீன்களின் கப்ரை ஜியாரத் செய்வது நபி வழி தானே என்று சொல்லிக்கொண்டு அங்கு சென்று அவர்கள் இடத்தில் துஆ கேட்ப்பதும் அவர்களிடத்தில் தேவைகளைக் கேட்பதும், போர்வை போர்த்துவதும் விளக்கேற்றுவதும் ஸஜ்தா செய்வதும், ஆண், பெண்கள் கலப்பதும், இவ்வாறு அல்லாஹ்வுக்கு மாறு செய்வது என்பது இணை வைப்பதே ஆகும்,
ஒரு இறை நம்பிக்கையாளர் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது.
தவ்ஹீதுர் ரூபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, தவ்ஹீது அஸ்மாயி வஸ்ஸிஃபாதி இவைகளை முறையான கொள்கையாக ஏற்காதவர்களுக்கு ,
மரணித்த நல்லடியார்களிடத்தில்
வசீலா கேட்பதும் உதவி கேட்பதும் சர்வ சாதாரண விடயமாக மட்டுமே தெரியும், இன்னும் கூடுதலாக சொன்னால் அதை ஒரு வழிபாடாகவே இபாததாகவே கருதுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு போதித்தது "பிரார்த்தனை என்பது ஒரு இபாதத்", வழிபாடு, அந்த நபிமொழி முஸ்னத் அஹ்மதில் அங்கீகாரமிக்க நபி மொழியாக இடம்பெற்றிருக்கிறது.
இவ்வாறு இருக்க அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய ஒரு வழிபாட்டை இவ்வாறு படைப்புகளோடு ஒப்பிட்டு களங்கப்படுத்துவது முறையா??
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)
என்ற வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து.
திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஸஹீஹான நபிமொழி
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக
கூறுகிறார்கள் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள் உதவி பெற நாடினால் அல்லாஹ்விடமே பெறுங்கள்
حديث ابن عباس رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم قال : إذا سألت فاسأل الله ، وإذا استعنت فاستعن بالله
رواه الترمذي (2516) ، وأحمد (1/303) ، وهو في « صحيح الترمذي » للألباني (2516)
இந்த நபிமொழிக்கு முற்றிலும் மாறுபடுகிறது.
இதுபோன்ற ஆதாரங்களை முன்வைத்தால் நம்மை பிஜேயின் மறு உருவம் என்றும் குழப்பவாதிகள் என்றும் , தவ்ஹீத்வாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர்,
உண்மையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதினர் தான் ஷிர்கையும்,பித்அதையும் முன்னின்று எதிர்க்க வேண்டும்,
தவறிய காரணத்தினால் வழிகெட்ட கொள்கை உடையவர்கள் இதை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் கொள்கையையும் அதில் புகுத்தி மக்களை வழி கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக இதோ மத்ஹபுகளின் சங்கையான இமாம்கள் கூறும் கருத்துக்களைக் கேட்போம்
ஹம்பளி மத்ஹபைச் சேர்ந்த அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் அல்காஸிம் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் தங்களது புத்தகத்தில் "அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ கேட்பது சம்பந்தமாக வந்திருக்கும் குர்ஆன் ஸுன்னாவின் ஆதாரங்களைப் போல நிராகரிப்பிலும் முர்தது ஆகுவது தொடர்பாக கடுமையான எந்த ஒன்றும் மார்க்கத்தில் இடம்பெறவில்லை, இந்த காரியத்தை செய்பவரை நிராகரிப்போர் என்றும் நரகத்தில் நிரந்தரமாக தங்கி விடுவார் என்ற அச்சுறுத்தலும் வந்திருக்கிறது.
(அஸ்ஸெய்ஃபுல் மஸ்லூல் அலா ஆபிதிர் ரஸுல்-24 )
قال الشيخ عبد الرحمن بن قاسم رحمه الله : لا نعلم نوعاً من أنواع الكفر والردة وَرَدَ فيه من النصوص مثل ما ورد في دعاء غير الله ، من النهي والتحذير عن فعله ، وكُفر فاعله ، والوعيد عليه بالخلود في النار
« السيف المسلول على عابد الرسول » ، ص 24 .
ஹனபி மத்ஹபின் பிரபல்யமான புத்தகமான துர்ருல் முக்தார் என்ற புத்தகத்தின் விளக்க உரையான தவாலிவுள் அன்வார் என்ற புத்தகத்தை எழுதிய அஷ்ஷேக் முஹம்மத் ஆபித் அஸ்ஸின்தி அல்ஹனஃபி கூறுகிறார்
கபுரில் அடங்கி இருப்பவரே !!
இறைநேசரே!!
தனது தேவையை நிறைவேற்றி தாருங்கள்!!
அல்லது எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அல்லது எனக்காக அல்லாஹ்விடத்தில் ஷஃபாஅத் செய்யுங்கள் என்று கூறக்கூடாது
மாறாக யாருடனும் இணைவைக்க
முடியாதவனே அல்லாஹ்வே என்னுடைய தேவையை பூர்த்தி செய் என்று கேட்க வேண்டும்
وقال الشيخ محمد عابد السندي الحنفي في كتابه « طوالع الأنوار شرح تنوير الأبصار مع الدر المختار » ما نصه :
ولا يقول : يا صاحب القبر ، يا فلان ، إقض حاجتي ، أو سلها من الله ، أو كن لي شفيعا عند الله ، بل يقول : يا من لا يشرك في حكمه أحدا ؛ اقض لي حاجتي هذه .
« سيف الله على من كذب على أولياء الله » ، باختصار ، (ص 15-16) ، الناشر مدار الوطن للنشر .
இதே கருத்தைதான் பின்வந்த பிரபலமான ஹனஃபி இமாம்களான இமாம் அஹ்மத் ஸர்ஹின்தி, இமாம் அஹ்மத் ரூமி,ஸிஜான் அல்பக்ஸ், முஹம்மத் பின் அலீ தானவி, முகமது இஸ்மாயில் தஹ்லவி, அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுமுல்லாஹ்வும்
கூறியிருக்கிறார்கள்
وبهذا قال من أئمة الحنفية المتأخرين الإمام أحمد السرهندي ، والإمام أحمد الرومي ، والشيخ سجان بخش الهندي ، ومحمد بن علي التهانوي ، ومحمد إسماعيل الدهلوي ، والشيخ أبو الحسن الندوي ، وشدد في ذلك
((المجموع المفيد في نقض القبورية ونصرة التوحيد)) ، ((ص 412))
அர்பஃஊன நபவியா என்ற புத்தகத்தில் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுமுல்லாஹ்
அவர்கள் குறிப்பிடுகிறார்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்பவர் நிராகரிப்பவர் ஆகும்.
இவ்வாறு தான் இமாம் ஷவ்கானியும் "அத்துரர் நழீத்" , என்ற புத்தகத்தில்கூறுகிறார்
ஷாம் தேசத்தின் ஹதீஸ்கலை வல்லுநர் இமாம் அபூ ஷாமா அவர்களும்
« الباعث على إنكار البدع والحوادث » :
என்ற புத்தகத்தில் இதே கருத்தை தான்குறிப்பிடுகிறார்.
وأما كلام الشافعية ؛ فقال ابن حجر الشافعي في « شرح الأربعين النووية » : من دعا غير الله فهو كافر .
نقله الشوكاني عنه في « الدر النضيد » .
وقال الإمام محدث الشام أبو شامة في كتاب « الباعث على إنكار البدع والحوادث » :
ஷேகுல் இஸ்லாம் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹிமஹுமுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளையான ஷஹீத் ஷாஹ் இஸ்மாயில் தஹ்லவி தங்களின் பிரபலமான புத்தகமான
"தக்வியதத்துல் ஈமான்", ல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ செய்வதும் உதவி கேட்பதும் ஷிர்காகும்,
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நமது இந்திய உலமாக்களாகிய ஷஹீத் இமாம் அஹ்மத் பின் இர்ஃபான் & இமாம் ஷஹீத் ஷாஹ் இஸ்மாயில் தஹ்லவி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களை திட்டமிட்டு பரேல்வியவிய குள்ளநரிகள் பாலக்கோடு என்ற அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் சீக்கியர்களுடன் கைகோர்த்து ஷஹீதாக்கினார்கள்.
காரணம் அவர்கள் எழுதிய "தக்வியதுல் ஈமான் ", என்ற புத்தகத்தின் தாக்கம் வழிகெட்ட பரேல்விகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியதுதான் , இதன் மூல புத்தகம் ஃபார்ஸி மொழியில் இருந்து இவர்களின் பாட்டனார் ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி அவர்களால் எழுதப்பட்டு இமாம் அவர்களால் உருதுவில் மொழிபெயர்க்கப்பட்டது
இந்த புத்தகத்தைத் தான் பின்னர் இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுமுல்லாஹ் அரபு மொழியில் " ரிஸாலதுத் தவ்ஹீத் ",
என்று எழுதினார்கள் இது அவர்களின் காலத்தில் அரபு நாட்டில் ஷிர்கையும் , சமாதி வழிபாடையும் துடைத்தெரிந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களின் புத்தகமான கிதாபுத் தவ்ஹீதுக்கு
நிகரானது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ولهذا الدهلوي الشهيد في تلك الرسالة عدة تصريحات بشرك من دعا غير الله واستغاث به
رسالة التوحيد للدهلوي: (141-142)، والفتاوى الخيرية: (1/182).
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவரின் அருகில் நின்று கொண்டு நபியவர்களுக்காக துஆ செய்யவதை வெறுத்தார்கள்
கீழ்காணும் இந்த புத்தகங்களை பார்க்கவும்
إن مالكاً -رحمه الله- كره الوقوف عند قبر النبي صلى
الله عليه وسلم للدعاء له أو الدعاء عنده
الشفا للقاضي عياض: (2/ 671)، نقلاً عن المبسوط لإسماعيل القاضي، والمنتقى للباجي: (1/ 296)، والرد على الأخنائي: (46، 104)، والجواب الباهر: 59، 65، والصارم: 125..
மதீனாவாசிகள் தொடர்ந்து சென்று நபியவர்களின் கபுரில் ஸலாம் கூறுவதையும், நபியவர்களின் கப்ரை ஜியாரத் செய்தோம் என்று சொல்வதையும் வெறுத்தார்கள்
கீழ்காணும் புத்தகங்களை பார்க்கவும்
، وكره لأهل المدينة التردد للسلام عليه، كما كره أن يقال: زرنا قبره صلى الله عليه وسلم
العتبية: (18/444)، والشفا: (676)، والمنتقى: (1/296)، والرد على الأخنائي: (46، 96).الشفا: (2/667)، والجواب الباهر: (58)، والصارم: (263، (271-279)، ومجمع البحار: (2/444).
இமாம் பைஹகி ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் அல்லாஹ் தஆலா மூலம் பாதுகாவல் தேட கூடிய சில நபிமொழிகளை கூறியபின் கூறுகிறார்கள், படைப்புகள் மூலம் படைப்புகள் பாதுகாப்பு தேடுதல் என்பது கூடாது.
- அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் - இமாம் பைஹகி-241
فهذا الإمام البيهقي ذكر بعض أحاديث الاستعاذة بكلمات الله تعالى، ثم قال: (ولا يصح أن يستعيذ بمخلوق من مخلوق)
الأسماء والصفات للبيهقي: (241).
ஹதீஸ் கலை வல்லுநராகவும் சிறந்த மார்க்க சட்ட வல்லுநராகவும் இருந்த இமாம் இப்னு குஸைமா ஷாபி மத்ஹபைச் சார்ந்தவராக கருதப்படுகிறார் அவர் கூறுகிறார் ஒரு ஆலிம் இவ்வாறு பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி கொடுப்பதை நீங்கள் கேட்டால் அதாவது படைப்புகளின் தீங்கிலிருந்து கஃபதுல்லாவின் மூலமாக பாதுகாப்பு தேடுகிறேன், அல்லது இவ்வாறு கூறுவதற்கு அனுமதிக்கிறார் அதாவது ஸஃபா மர்வா மலைக் குன்றுகளை கொண்டு பாதுகாப்புத் தருகிறேன் அரஃபாத்,மினா போன்ற இடங்களை கொண்டு படைப்பின் தீமைகளிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என்று
இவ்வாறு கூறவும் மாட்டார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் இதுபோன்ற வார்த்தைகளை அனுமதிக்கவும் மாட்டார்,
அல்லாஹ்வுடைய படைப்பின் மூலமாக ஒரு முஸ்லிம் படைப்பினங்களின் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடுவது இயலாத ஒன்று என்று கூறினார்
கிதாபுத் தவ்ஹீத் -(1/401-402)
فمنهم إمام الأئمة ابن خزيمة أحد كبار فقهاء المحدّثين ويعد من الشافعية فإنه قال: (هل سمعتم عالماً يجيز أن يقول الداعي: أعوذ بالكعبة من شر خلق الله؟ أو يجيز أن يقول: أعوذ بالصفا والمروة، أو أعوذ بعرفات ومنى من شر ما خلق؟
هذا لا يقوله ولا يجيز القول به مسلم يعرف دين الله، محال أن يستعيذ مسلم بخلق الله من شر خلقه
كتاب التوحيد: (1/ 401- 402).
இன்று சர்வ சாதாரணமாக சிலர் மார்க்கத்தை தெளிவில்லாமல் அரைகுறையாக விளங்கி நபிமார்கள் மரணித்த நல்லடியார்கள் இவரிடம் சென்று இஸ்திகாஸா, வசீலா கேட்பது எனது கொள்கை
இதுதான் ஸுன்னத் வல் ஜமாஅதின் கொள்கையும் கூட என்று மிக தைரியமாக கூறுகிறார்கள்,
எனது முந்தைய தொடர்களை படித்தால் அவர்கள் ஆதாரமாக காட்டிய அனைத்து சம்பவங்களும் பொய்யானது என்பது உங்களுக்கு தெரியும்,
தங்களோடு மட்டும் இந்த பெரும் பாவத்தை நிறுத்திக்கொள்ளாமல் பொதுமக்களையும் பலியாக்குகிறார்கள், கவனம் தேவை சகோதரர்களே!!
*இஸ்திகாஸா- استغاثة*
அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மரணித்த ஸாலஹீன்களிடம்) பிரார்த்தனை செய்யலாம் உதவிகள் கேட்கலாம் என்பது பரேல்விகளின் வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று.
இந்த வழிகேட்டை நியாயப்படுத்தி
நாங்கள் பரேல்விகளும் அல்லர், அவர்களின் தலைவரான அஹ்மத் ரிழா காண் பரேல்வியின் சிந்தனை வாதிகளும் அல்லர்,
நாங்கள் சங்கையான இமாம்களை ஏற்றுக்கொண்ட சத்திய சஹாபாக்களின் பாதையில் செல்பவர்கள் என்று கூறி
கீழ்க்காணும் ஒரு சம்பவத்தை முன்வைப்பார்கள் , இந்த சம்பவத்தின் ஊடாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் உதவி கேட்பது தவறில்லை என்ற வழிகேடான வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள் ,
சற்று கேளுங்கள்....
கீழ்காணும் இந்த சம்பவம் (اثر) முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதியப்பட்டு இருக்கிறது
அதாவது செய்துனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஒரு மனிதர் பஞ்சம் தொடர்ந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறைக்கு வந்து அல்லாஹ்வின் தூதரே எங்களுக்காக மழை பொழிய செய்யுமாறு வேண்டுங்கள், மக்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவரின் கனவில் வந்து உமருக்கு சலாம் சொல்லுங்கள் உங்களுக்கு மழை பெய்யும் என்று கூறினார்கள்.
இந்த சம்பவத்தை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் ஸஹீஹானது அங்கீகாரமிக்கது என்று எழுதியிருப்பதாக பரேல்விகள் கூறியிருக்கும் அனைத்து ஆதாரங்களும் பிழையானது
هذا الأثر رواه ابن أبي شيبة في "مصنفه" (6/ 356) والبخاري في "التاريخ الكبير" (7/304) - مختصرا - والبيهقي في "الدلائل" (7/47) ، وابن عساكر في "تاريخه" (44/345) من طريق أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكِ الدَّارِ، قَالَ:
أَصَابَ النَّاسَ قَحْطٌ فِي زَمَنِ عُمَرَ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، اسْتَسْقِ لِأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَى الرَّجُلَ فِي الْمَنَامِ فَقِيلَ لَهُ : " ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلَامَ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مسْقِيُّونَ وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسُ ، عَلَيْكَ الْكَيْسُ "، فَأَتَى عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ : يَا رَبِّ لَا آلُو إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ . .
அதாவது இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அபூ ஸாலிஹ் ஸம்மான் என்பவர் வரைதான் சங்கிலித்தொடர் அங்கீகாரம் மிக்கது என்று கூறுகிறாரே தவிர கூறப்பட்டிருக்கும் அனைத்து சங்கிலி தொடரும் சரியானது என்று சொல்லவில்லை
என்ற கருத்தினை ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் தஹபி "அஸ்ஸியரு ", என்ற புத்தகத்தில் இரண்டாம் வாலியம் 412வது பக்கத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அதாவது இப்னு ஹஜர் அவர்கள்
இந்த நபிமொழி ஸஹீஹானது என்றோ பலவீனமானது என்றோ
இங்கு குறிப்பிடவில்லை சங்கிலித் தொடரை மட்டும்தான் சொல்லி இருக்கிறார், அதனால் தான் இந்த அறிவிப்பு அங்கீகாரம் மிக்கதாக இப்னு அபீ ஷைபா கூறுகிறார்கள் என்று கூறப்படவில்லை கவனிக்க வேண்டிய ஒன்று.
அந்த சம்பவத்தில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கப்ருக்கு வருகிறார் என்று மூடலாக தெளிவில்லாமல் வந்திருப்பதும் இதில் "நகாரத்" இருக்கிறது
என்றும் இந்த அறிவிப்பாளர் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதி அற்றது என்றும் பல அறிஞர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்
இவ்வாறு இருக்க எவ்வாறு இந்த பரேல்விகள் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் சொல்லாத கருத்தை சொன்னதாக சொல்கிறார்கள் இதுவே அவர்களின் நீதமின்மையை ஆய்வில் காண்பிக்கிறது,
أما قول الحافظ رحمه الله في " الفتح " (2/ 495) :
" رواه ابن أَبِي شَيْبَةَ بِإِسْنَادٍ صَحِيحٍ مِنْ رِوَايَةِ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ مَالِكٍ الدَّارِ "
فمقصوده أنه صحيح الإسناد إلى أبي صالح فقط ، ولم يحكم على جميع الإسناد بأنه صحيح ، ولذلك لم يقل : رواه ابن أبي شيبة بإسناد صحيح ، كما هي العادة في تصحيح الأخبار .
وأيضاً : قول الذهبي رحمه الله في " السير" (2/412) : " وقال الأعمش عن أبي صالح عن مالك الدار ... فإنه لم يحكم بصحته ولا بضعفه وإنما ذكر الإسناد فقط .
இந்த சங்கிலித் தொடரில் இடம் பெற்றிருக்கும் மாலிகுத்தார் என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் அறியப்படாதவராக கருதப்படுகிறார் என்று கீழ்காணும்
جرح و تعديل
புத்தகத்தில் கூறப்படுகிறது
அல்ஹாபிழ் அல்முன்திரி தர்ஹீப் என்ற புத்தகத்தில்
الترغيب (2/41- 42)
இமாம் ஹைதமி அவர்கள் மஜ்மஃஉ ஜவாயிதிலும்
مجمع الزوائد (3/125)
وهذا علم دقيق لا يعرفه إلا من مارس هذه الصناعة، ويؤيد ما ذهبت إليه أن الحافظ المنذري أورد في "الترغيب" (2/41-42) قصة أخرى من رواية مالك الدار عن عمر ، ثم قال: "رواه الطبراني في "الكبير"، ورواته إلى مالك الدار ثقات مشهورون، ومالك الدار لا أعرفه ".
وكذا قال الهيثمي في "مجمع الزوائد (3/125) .
ஸஹீஹான தரத்திற்கு
مصطلح علم الحديث
என்ற கலையின் அடிப்படையில் அறியப்படாத நம்பகத்தன்மை இழந்த அறிவிப்பாளர்கள் இருந்தால் அந்த சம்பவம் ஆதாரம் அற்றது என்பதே ,
இதுபோன்ற வலுவிழந்த ஆதாரமற்ற சம்பவங்களை வைத்து அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்கலாம் இதை சங்கையான இமாம்களும் கூறியிருக்கிறார்கள் என்று எவ்வாறு பரேலவிகள் இட்டுகட்ட முடியும் !!!
அடியேன் எங்களது கல்லூரியில் திர்மிதீ கிரந்தத்தை படித்துக் தருவதற்கு முன்பாக இமாமவர்களின் علل الصغير
என்ற புத்தகத்தை படித்து கொடுப்பது வழக்கம் அதில் இமாம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
இல்முல் இலல் என்ற துறை மிக சில அறிஞர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் எல்லா ஹதீஸ் கலை வல்லுனர்களாலும் அறிந்துகொள்ள முடியாது,
அந்த அளவிற்கு பார்ப்பதற்கு அங்கீகாரம் பெற்று நபிமொழிகளை போன்று தெரியும் ஆனால் துறை சார்ந்த சில குறைகளால் அந்த நபிமொழி ஆதாரமற்ற ஒன்றாக மாறிவிடும்.
கூடுதலாக சில ஆதாரங்களையும் அடியேன் குறிப்பிடுகிறேன்
மாலிகுத்தார் பலவீனமானவர், அவர் அறிவிப்புகள் ஆதாரத்திற்கு தூரமானது
என்று இமாம் அபூ ஹாத்திம் அவர்கள்
ஜரஹ் தஃதீல் என்ற புத்தகத்தில் 278/4 ல் கூறுகிறார்கள் என்று இருக்க பிறகு எப்படி இமாம் புகாரியும் இப்னு கஸீர் அவர்களும் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி கேட்கலாம் என்று இந்த சம்பவத்தை ஆதாரமாகக் காட்டி சரி கண்டிருப்பார்கள்!!!!
قال ابن أبي حاتم "ضعيف" [الجرح والتعديل 4/ 278]
தஹ்தீபுத் தஹ்தீபில் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்
இமாம் இப்னு ஹப்பானும் இமாம் ஹாகிமும் ,பிலால் பின் ஹாரிஸ் என்பவர்தான் நபி அவர்களின் மண்ணறைக்கு வந்த ஒரு மனிதர் ஜீன்தீக் நாத்திகர் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள் !!!!
" ورماه ابن حبان والحاكم بالزندقة " [تهذيب التهذيب 4/ 295]
தாரீகுல் கபீரில் இமாம் புகாரி அவர்கள் உமர் என்ற வார்த்தை வரை தான் சொல்லியிருக்கிறார்கள் ஒரு மனிதர் கபுர் அருகில் வந்தார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடவே இல்லை,
இது முறைகேடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
البخاري اقتصر على قول عمر " ما آلو إلا ما عجزت عنه " [التاريخ الكبير 7/ 304 رقم 1295]. ولم يذكر مجيء الرجل إلى القبر. وهذه الزيادة دخلت في القصة وهي زيادة منكرة
மேலும் ஒரு செய்தியை கூறிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன் இந்த அறிவிப்பு வரும் " அல்அஃமஷ் ",
என்பவர் தத்லீஸ் செய்பவர்களில் பிரபலமானவர் என்று இமாம் தாரகுத்னீ, இமாம் நஸஃஈயும் கூறுகிறார்கள், ஆக இந்த சம்பவம் ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது என்பது மிகத்தெளிவாக ஆகிறது.
பார்க்க-
கீழ்காணும் ஆதாரங்களை
عنعنة الأعمش، فهو من المشهورين بالتدليس المكثرين منه، وصفه بذلك الكرابيسي والنسائي والدارقطني وغيرهم،التبيين لأسماء المدلسين 1/ 105لسبط العجمي، وجامع التحصيل 1/ 188 للعلائي، وطبقات المدلسين1/ 33لابن حجر.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ, உதவி கேட்கலாம் என்ற வழிகேடான கொள்கையை யாராவது இந்த சம்பவத்தை முன் வைத்துச் சொன்னால் இந்த ஆதாரங்களை அவர்களுக்கும் காண்பியுங்கள்,
இஸ்லாமிய கொள்கை ரீதியாக குர்ஆனும் ஸுன்னாவும் நமக்கு வழங்கியிருக்கிற அனைத்து ஆதாரங்களும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன மார்க்கப் பெயரில் இணைவைத்தல் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை,
ஷிர்க்,குஃப்ர் பத்வாவை வழங்குவதுதான் இந்த வஹாபிகளின் பணி என்று பித்அத்வாதிகளே நீங்கள் மக்கள் மன்றத்தில் உரக்க சத்தமிடுவதினால்,
சத்தியத்தை உங்களால் இனி மறைக்கவோ அவர்களை இனி மடையர்களாக்கவோ முடியாது என்பதை மட்டும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
பீஜே போன்றவர்கள் தவ்ஹீதை முன்வைத்து ஆரம்பகட்ட காலத்திலே செய்த மிகப்பெரிய புரட்சி இன்று மக்கள் மன்றத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் பெற்றிருப்பதை யாராலும் மறுக்க முடியாது,
அதே நேரத்தில் பிஜேயின் அடிச்சுவடுகளை அப்படியே தக்லீது செய்யும் அவர்களின் முரீதுகள்
வழிகேட்டை நோக்கி பயணிக்கின்றனர் என்பதையும் நாம் காலம் காலமாக விமர்சித்து தான் வருகிறோம்,
இந்தச் சூழலில் இஸ்லாம் நமக்கு போதித்த ஏகத்துவத்தை, எச்சரித்த இணைவைத்தலை யாராவது உரக்கச் சொன்னால் அவர்களையும் பீஜேயின் அணியில் சேர்த்து வைத்து விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல.
நமது தொடர்களில் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
கொள்கைகளுக்கு முரணாக முன்வைக்கப் படும் போலி ஸுன்னத்வல் ஜமாதினரின் பொய்யான வாதங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்
வரிசையில் கீழ்க்காணும் ஒரு சம்பவமும் முன்வைக்கப்படுகிறது
அதாவது இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நபியவர்களை ஜியாரத் செய்யும் பொழுது கிப்லாவை முன்னோக்காமல் , நபியவர்களின் மண்ணரையை முன்னோக்கி துவா செய்ய வேண்டும் என்று கூறியதாக பல வலைதளங்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது அதன் உண்மை நிலை என்ன என்று பார்ப்போம்!!
///////ஹஜ்ரத் இமாம் மாலிக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சமயம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அப்பாஸியர்களின் இரண்டாவது கலீபா மன்சூர் என்பவர் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரௌழா ஷரீபுக்கு வருகை தந்தார். அவர் ஹஜ்ரத் இமாம் அவர்களிடம், நான் கிப்லாவை (கஃபாவை) முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? அல்லது நபிகளார் அவர்களை முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? என விசாரித்தார். அதற்கு இமாம் அவர்கள்,
ولم تصرف وجهك عنه وهووسيلتك ووسيلة ابيك آدم الى الله تعالى بل استقبله واستشفع به فيشفّعه الله فيك
உனக்கும் உன் தகப்பனார் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவான கருணைக் கடல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவ pட்டும் ஏன் உன் முகத்தைத் திருப்பப் போகின்றாய்? வேண்டாம். நீ அவர்கள் பக்கமே திரும்பிக் கேள். அவர்கள் பொருட்டால் அல்லாஹ் உன்னை மன்னித்திடுவான் என்றனர்.
நூல்: அஷ்ஷிஃபா 2:33 ////////
இச்சம்பவத்தை கூறும் பரேல்விகள் கூறுவதுபோல் புத்தகத்தின் பெயர் அஷ்ஷிஃபா அல்ல அவர்கள் கூறும் பக்க எண்களும் தவறு
(நூல்: அஷ்ஷிஃபா 2:33)
மேலே கூறப்படும் இந்தச் சம்பவம்
இமாம் தகியுத்தீன் ஸுபுகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஷிஃபா அஸ்ஸிகாம் என்ற புத்தகத்தில் 283 ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார் இந்த புத்தகம் ஷீஆ ஆன்லைன் லைப்ரேரி என்ற ஒரு இணையதளத்தில் காணப்படுவதே இந்த பரேலவிகளின் குருநாதர்களான ஷியாக்களின் வழிகாட்டல்கள் என்பது மிக தெளிவாக விளங்குகிறது.
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் போன்ற சங்கையான மத்ஹபுகளின் இமாம்களின் பெயர்களில் இட்டுக்கட்டும் இந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் இந்த பரேல்விகள் ,
எனது தொடரின் நோக்கமே இவர்களைப்போன்ற சிந்தனை உடையவர்களின் வழிகேடான கொள்கைகளை இமாம்கள் கூறியதாக புனைகிறார்களல்லவா அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான்!!!
பரேல்விகள் ஆதாரமாக காட்டியுள்ள இந்த சம்பவத்தை அறிவிக்கும்
முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் பொய்யர் என்று அறியப்படுபவர்,
ஸாலிஹ் பின் முஹம்மத் அல்ஆஸிலி என்ற ஹதீஸ் கலை வல்லுனர் முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்பவர் பொய் சொல்வதில் மிகவும் தைரியமானவர் என்று கூறி இருப்பதுடன் ,இமாம் நஸஃஈ, இப்னு ஹப்பான் ,அபூ ஸுர்ஆ,இப்னு வாரா ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அனைத்து ஹதீஸ் கலை வல்லுனர்களும் இந்த அறிவிப்பாளர் பொய்யர் என்ற கருத்தையே குறிப்பிடுகின்றனர்
அதுமட்டுமல்லாமல் அப்பாஸிய கலிஃபா அபூ ஜஃபர் அல் மன்சூர் மக்காவில் ஹிஜ்ரி 158 ல் மரணமானவர், இமாம் மாலிக் ஹிஜ்ரி 179 ல் மரணமானார், முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்ற இந்த அறிவிப்பாளர் மரணித்தது ஹிஜ்ரி 248 இவர் அவருடைய காலத்தில் இமாம் மாலிக்கை சந்தித்தற்கு எந்த வாய்ப்பும் இல்லை,
பின்வந்த மாலிக்கி மத்ஹப்புகளின் இமாம்கள் இந்த சம்பவத்தை சரிகண்டு நபியவர்களிடம் வஸீலா தேடலாம் என்ற தவறான கருத்தை கூறி விட்டார்கள்,
ஆக இவர்கள்கள் முன்வைத்து இருக்கும் இந்த ஆதாரம் வலுவிழந்தது மட்டுமல்ல இமாம்கள் மீது அவர்கள் பொய் சொல்கிறார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் எனது புதிய ஐந்தாவது தொடரை சற்று படிக்கவும் அதில் அவர்களைப் போன்றவர்கள் செய்த குளறுபடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளேன்,
இணைவைத்தலை கடுமையாக சாடிய நமது முன்னோர்கள் இமாம்கள் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறையின் அருகில் நின்று துஆ செய்வதையே வெறுத்து இருக்கிறார்கள் ,ஜியாரத் செய்தோம் என்று பெருமிதமாக கூறுவதையும் வெறுத்து இருக்கிறார்கள் ,என்று தான் மாலிக்கி மத்ஹபுகளின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது கீழே காணவும்
துஆ என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்பட வேண்டிய ஒரு வணக்கம், இவ்வாறு இருக்க மண்ணரைகளை நோக்கி துஆ செய்வதாக பரேல்விகள் வழங்கியிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானது என்பது தெளிவாகிறது
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவரின் அருகில் நின்று கொண்டு நபியவர்களுக்காக துஆ செய்யவதை வெறுத்தார்கள்
கீழ்காணும் இந்த புத்தகங்களை பார்க்கவும்,
إن مالكاً -رحمه الله- كره الوقوف عند قبر النبي صلى
الله عليه وسلم للدعاء له أو الدعاء عنده
الشفا للقاضي عياض: (2/ 671)، نقلاً عن المبسوط لإسماعيل القاضي، والمنتقى للباجي: (1/ 296)، والرد على الأخنائي: (46، 104)، والجواب الباهر: 59، 65، والصارم: 125..
மதீனாவாசிகள் தொடர்ந்து சென்று நபியவர்களின் கபுரில் ஸலாம் கூறுவதையும், நபியவர்களின் கப்ரை ஜியாரத் செய்தோம் என்று சொல்வதையும் வெறுத்தார்கள்
கீழ்காணும் புத்தகங்களை பார்க்கவும்
، وكره لأهل المدينة التردد للسلام عليه، كما كره أن يقال: زرنا قبره صلى الله عليه وسلم
العتبية: (18/444)، والشفا: (676)، والمنتقى: (1/296)، والرد على الأخنائي: (46، 96).الشفا: (2/667)، والجواب الباهر: (58)، والصارم: (263،
(271-279)، ومجمع البحار: (2/444).
"சமநிலை", தவறும் பொழுது நிகழும் தவறுகள்:
ஏற்றத்தாழ்வு என்பது மனிதனின் இயல்பான செயல் என்று ஏற்றுக்கொண்டாலும், மார்க்க விடயங்களில் சமநிலையற்ற இந்த ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெரிய பாதிப்பை சில நேரங்களில் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்தும்,
அரபு மொழியில் إفراط و تفريط
"இப்ஃரஆத் வ தபஃரீத்",
என்பதாக சமநிலையற்ற ஏற்றத்தாழ்வுக்கு சொல்வார்கள்.
இந்த ஒரு நிலை நமது பொது வாழ்விலும் சரி !!
தனி நபர் ஒழுக்கத்திலும் சரி !!
கொஞ்சம் கொஞ்சமாக நமது அறிவை மழுங்கச் செய்து அகல பாதாளத்தில் நம்மை அதில் தள்ளிவிடும்.
என்ன கொடுமை என்று சொன்னால் நம்மால் அப்பொழுது உணர்ந்து கொள்ள முடியாது!!
நாம் சரி காண்கிற மார்க்க விடயமாக இருந்தாலும் உலக விடயமாக இருந்தாலும் அது சமநிலை சிந்தனை பெற்றுள்ளதா அல்லது ஏற்றத்தாழ்வு உள்ளதா என்ற பக்குவத்தை நம்மால் எட்ட முடியாது.
இதன் இறுதிநிலை நாமும் அறியாமையில் மூழ்கி சமூகத்தையும் அறியாமையில் தள்ளி விடுவோம்.
அல்லாஹ் திருமறையிலே சமநிலை சிந்தனையை பற்றி சொல்லும் பொழுது இவ்வாறு கூறுகிறான்....
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا
நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்
(அல்குர்ஆன் : 2:143)
தப்ஃஸீர் இப்னு கதீரில் "நடுநிலையான சமுதாயத்தினராக ", என்பதற்கு நீதமான சமுதாயத்தினராக என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.
நடுநிலையான சமுதாயம் என்பவர்கள் நீதமானவர்களே , நீதமானவர்கள் நடுநிலையான ,சமநிலை சிந்தனை கொண்டவர்களே என்பதை நம்மால் விளங்க முடிகிறது.
"விடயங்களில் நடுநிலையானதே சிறந்தது",
خير الامور اوسطها
என்ற நபிமொழி பொதுவாக நடுநிலை சிந்தனைக்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது ஆனால் இது ஆதாரப்பூர்வமான நபிமொழி அல்ல என்று
ஹாபிழ் இராகி இஹ்யாவின் விரிவுரையிலும், இப்னு அப்துல் பர் இஸ்தித்காரிலும் கூறியுள்ளார்கள்.
அது அறிஞர் பெருமக்களின் ஹிக்மதான ஒரு சொல், நபிமொழி அல்ல.
ஆக அடியேன் இங்கு சொல்ல வரும் நோக்கம் மார்க்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும் அல்லாஹ் நமது அமல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு முஸ்லிமான இறை நம்பிக்கையாளரின் கனவாகும்.
ஆனால் நாம் புரிந்து வைத்திருக்கும் மார்க்கத்தை முறையாக அல்லாஹ்வும் தூதரும் சொல்லி இருக்கிறார்களா ? அதை சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நமக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை கவனிக்க தவறும் பொழுது சமநிலை தவறக்கூடிய ஒரு சூழல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமல் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சில சமயம் நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் அதி தீவிரமாக செயல்பட செய்து வழிதவறச் செய்கிறது.
உதாரணமாக
துஆவில் சலவாத்து ஓத வேண்டும்
என்ற பல சிறப்புகள் ஆதாரப்பூர்வமான
நபி மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது.
அபுதாவூத் கிரந்தத்தில் பதியப்பட்டிருக்கிற அதிகாரப்பூர்வமான நபிமொழி ஒன்றில் ஒரு நபர் துவா செய்யும் பொழுது அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமல் நபி அவர்கள் மீது ஸலவாத் சொல்லாமல் ஓதுகிறார் நபியவர்கள் அவரை அழைத்து அவசரப்பட்டு விட்டார், உங்களில் ஒருவர் துவா செய்தால் தனது ரப்பை கண்ணியப்படுத்தி கொள்ளட்டும் அவனைப் புகழ்ந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லட்டும் பிறகு அவர் விரும்பிய விஷயத்தை துவா செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
سمعَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ رجلًا يَدعو في صلاتِهِ لم يُمجِّدِ اللَّهَ تعالى ولم يُصلِّ علَى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ عجِلَ هذا ثمَّ دعاهُ فقالَ لَهُ أو لغيرِهِ إذا صلَّى أحدُكُم فليَبدَأ بتَمجيدِ ربِّهِ جلَّ وعزَّ والثَّناءِ علَيهِ ثمَّ يصلِّي علَى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ثمَّ يَدعو بَعدُ بما شاءَ
الراوي : فضالة بن عبيد | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1481 | خلاصة حكم المحدث : صحيح
التخريج : أخرجه أبو داود (1481)
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது சிலர் ஸலவாத்தை ஓத வேண்டும் என்று விரும்புபவர்கள் சற்று அதிகமாக நபி அவர்கள் மீது நேசம் கொள்கிறோம் என்ற பெயரில் மார்க்கம் சொல்லாத விதத்தில்
துஆவிற்கு பிறகு சப்த்தமாக மூன்று தடவை ஓதுவதை நாம் பள்ளிகளில்
பார்க்கின்றோம்.
நபி மொழிகளில் வந்திருக்கும் துஆவில் சலவாத்தை ஓத வேண்டும் என்பதை தவறாக விளங்கிக் கொண்டு துவாவிற்கு பின்பு சப்தமாக ஓதுகிறார்கள் , இவ்வாறு சப்த்தமாக ஓதுவது அவர்கள் மிக முக்கியத்துவம் அளித்து பின்பற்றும் ஹனபி மத்ஹபுக்கு எதிரானது என்பதையும் அவர்கள் அறிவதில்லை!!
இது ஒரு புறம் இருக்க, குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஸலவாத்து ஓத வேண்டும் என்று ஆழமாக புரிந்து கொண்டவர்கள் கூட சப்த்தமாக ஓதப்படுகிற ஸலவாத்து பித்அத் அதை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து ஸலவாத் ஓதி துஆ செய்யும் பழக்கத்தையே அடியோடு மறந்தே விட்டனர்,
மௌலிது,ஸலாத்துன்னாரியா பித்அத் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் கூட தங்களுது துஆவில் ஸலவாத் முறையாக ஓத வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஆக ஸலவாத் சொல்வதில் சமநிலை & நடுநிலையான சிந்தனையை பேணாததால் சமூகம் இரண்டாக பிரிந்து
நின்று ஏற்றத் தாழ்வை மார்க்கமாக கருதுகின்றனர்.
இது ஒரு உதாரணம் இது போன்று
கூட்டு துவா ஐந்து நேர தொழுகைக்கு பின்பு ஓதுவது பித்அத் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்ற சிந்தனையில் ஐந்து நேர தொழுகைக்குப் பின்பு தனியாக அமர்ந்து பொறுமையாக துவா செய்யும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டு பாய்ந்து எழுந்து சென்று விடுகின்றனர்,
இன்னும் பல உதாரணங்கள் நம்மால் சொல்ல முடியும்.
ஆக சமநிலை பேணுவோம் மார்கத்தை முறையாக பின்பற்றி நடைமுறை படுத்துவோம் வாருங்கள்!!!
இதோ உங்களின் அசத்திய கொள்கையான அல்லாஹ் அல்லாதவர்களிடம் மரணித்தபின் உதவி தேடுவது
(இஸ்திகாஸா - استغاثة بغير الله )கூடாது நிராகரிப்பை அது ஏற்படுத்திவிடும் என்பதற்குரிய சங்கையான நான்கு மத்ஹபுகளின் கருத்துக்களை பதிவு செய்கிறேன்..
1- ஹனஃபி மத்ஹப்-
~~~~~~~~~~~~~~~~~~
அஷ்ஷேக் சனவுல்லா பின் சனவுல்லா அல் ஹலபி அல் ஹனஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்
முஸ்லிம்களுக்கு மத்தியில் சில குழுவினர் இறை நேசர்களுக்கு அவர்களின் மரணத்திற்கு பின்பாக உதவி செய்யக்கூடிய சக்தி இருக்கிறது கஷ்டமான நேரங்களிலும் துன்பங்களிலும் அவரிடத்தில் உதவி கேட்கலாம் துயரங்கள் நீங்கும் அவர்களின் மண்ணரைக்கு வந்து தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு கேட்பது இறைநேசர்களின் கராமாதாகும் என்று கருதுகிறார்கள்.
இது முறை இல்லாத பேச்சும் நிரந்தரமான அழிவையும் நரக தண்டனையையும் பெற்றுத்தரும் காரணம் இதில் தெளிவான ஷிர்க் இணைவைத்தல் இருக்கிறது.
நூல்-இறைநேசர்களின் மீது பொய்யுரைப்பவர்களை அழிக்கும் அல்லாஹ்வின் வாள்-பக்கம் -15 -16
وقال الشيخ صنع الله بن صنع الله الحلبي الحنفي رحمه الله ما نصه :
هذا وإنه قد ظهر الآن فيما بين المسلمين جماعات يدَّعون أن للأولياء تصرفات في حياتهم وبعد الممات ، ويستغاث بهم في الشدائد والبليات ، وبهم تنكشف المُهمات ، فيأتون قبورهم وينادونهم في قضاء الحاجات ، مستدلين على أن ذلك منهم كرامات !
وهذا كلام فيه تفريط وإفراط ، بل فيه الهلاك الأبدي والعذاب السرمدي ، لما فيه من روائح الشرك المحقق
« سيف الله على من كذب على أولياء الله » ، باختصار ، (ص 15-16) ، الناشر مدار الوطن للنشر .
மேலும் கூடுதலான ஹனஃபி மத்ஹபுகளின் கருத்துக்களை இந்த தலைப்பில் பெற விரும்பும் ஆய்வாளர்கள் டாக்டர் ஸம்சுதீன் அல்அஃப்கானி அவர்கள் எழுதிய
"ஜுஹுது உலமாயில் ஹனஃபிய்யதி
ஃபீ இப்தாலி அகாயிதுல் குபூரிய்யதி"
جهود علماء الحنفية في ابطال عقائد القبورية
(கபூரு கொள்கையை அழிப்பதில் ஹனஃபி உலமாக்களின் முயற்சி)
1831 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாகிஃபிய்யா போன்ற வலைத்தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
2-மாலிகி மத்ஹப்-
~~~~~~~~~~~~~~
மாலிகி மத்ஹபின் இமாமாகிய
அபூபக்கர் தருதூஷி அவரது புத்தகமான
"அல்ஹவாதிஸ் வல் பிதஃ" ல்
"தாது அன்வாத் ", என்று சொல்லப்படும் மரத்தை மக்கள் கண்ணியம் செய்பவர்களாக நீங்கள் பெற்று நோய் நொடிகளுக்கு தீர்வாக அதில் ஆணிகளை அடிப்பதும் துணிகளை தொங்க விடுவதுமாக நீங்கள் கண்டால் அதை வெட்டி விடுங்கள்.
நூல்- அல்மஜ்மூவுல் முஃபீது ஃபீ நக்ழி
அல்குபூரிய்யதி வ நுஸ்ரதி அத்தவ்ஹீதி- பக்கம்-39
وأما كلام المالكية ؛ فقال أبو بكر الطرطوشي في كتاب « الحوادث والبدع » لما ذكر حديث الشجرة المسماة بذات أنواط : فانظروا رحمكم الله أينما وجدتم سدرة أو شجرة يقصدها الناس ، ويُعظمون من شأنها ، ويرجون البُرء والشفاء لمرضاهم من قِبَلِها ؛ وينوطون بها المسامير والخرق ؛ فهي ذات أنواط ، فاقطعوها
«المجموع المفيد في نقض القبورية ونصرة التوحيد - ص -٣٩ » ،
3- ஷாஃபி மத்ஹபு
~~~~~~~~~~~~~~
இமாம் இப்னு ஹஜர் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல் அரபிவூனன் நபவிய்யாவின் ஷரஹில் அல்லாஹ் அல்லாதவர்களை யார் பிரார்த்தனை செய்வாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று கூறுகிறார்கள்
நூல்- இமாம் ஷவ்கானி இந்தக்கருத்தை "அத்துர்ரு அந்நுழைது ", அந்த புத்தகத்தில் கூறுகிறார்கள்.
وأما كلام الشافعية ؛ فقال ابن حجر الشافعي في
« شرح الأربعين النووية » : من دعا غير الله فهو كافر
نقله الشوكاني عنه في « الدر النضيد » .
4-ஹம்பழி மத்ஹபு-
~~~~~~~~~~~~~~
நபிமார்கள்,ஸாலிஹீன்கள் விடையத்தில் யார் சற்று மிகைப்படுத்தி, அவர்களிடத்தில் இறைத்தன்மை இருக்கு என்று கருதுவாரோ உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து
என்னவரே எனக்கு உதவுங்கள் எனக்கு நன்மையை தாருங்கள் நீங்கள் எனக்கு போதுமானவர் என்று கூறுபவர் இணைவைத்த வராகவும் வழிகேட்டில் உள்ளவராக இருக்கிறார், இவ்வாறு சொன்னவர் தவ்பாச் செய்ய வேண்டும் இல்லை என்றால் மரண தண்டனை வழங்க வேண்டும்.
நூல்கள்-
مختصرا من « الرسالة السنية » ، وتقع كاملة في « مجموع الفتاوى » (3/363-430) ، والمنقول مختصر من الصفحات 383- 400 .
فكل من غلا في نبي أو رجل صالح ، وجعل فيه نوعاً من الإلهية ، مثل أن يدعوه من دون الله ، بأن يقول : (يا سيدي فلان أغثني ، أو أجرني ، أو أنت حسبي ، أو أنا في حسْبك) ؛ فكل هذا شرك وضلال ، يستتاب صاحبه ، فإن تاب وإلا قتل .
ஆக நான்கு மத்ஹபுகளின் கருத்துக்களின் அடிப்படையில் தவ்பாச் செய்து, கலிமாவை மீண்டும் சொல்லி இஸ்லாத்திற்கு வரவும்.
எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழக உலமாக்களின் நிலை ?
ஒரு காலம் இருந்தது மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களை (பித்அதுகளை) மார்க்கமாக கருதி செய்தால் இது தவறு, இருந்தாலும் எனது பொருளாதார நிலை என்னை இந்த தவறை செய்ய வைக்கிறது என்ற குற்ற உணர்வுடன் பித்அதை செய்த சில உலமாக்கள் !!!
இன்று சிலர் பித்அதுகளை உரக்க கூறி மார்க்க லேபிளில் அனுமதிக்கின்றனர், மண்ணறைகளில் சென்று ஸஜ்தா செய்வது , பாத்திஹா மௌலூது போன்ற அனாச்சாரங்களை பொதுமக்களிடம் செய்ய தூண்டுகின்றனர் ,பொதுமக்களுக்கு தவறான வழிகேடுகளை மார்க்கமாக சொல்லிக் கொடுக்கின்றனர்,
அல்லாஹ் திருமறையில் சத்தியமான பாதையில் பயணிக்கும் உலமாக்களை பற்றி இவ்வாறு கூறுகின்றான் .
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 35:28)
அல்லாஹுத்தஆலா இங்கு அரபி மொழியில் "அல்உலமா", (கல்விமான்கள்) என்று குறிப்பிட்டு அவர்கள் தான் இறையச்சம் உடையவர்கள் என்று கூறி இருக்கிறான், இந்த வசனத்திற்கு விரிவுரையாளர்கள் குறிப்பாக தப்சீர் இப்னு கஸீரிலும் கீழ் காணும் விளக்கத்தை பெற முடிகிறது....
அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தக்வா(تقوى) ஃகஷ்யத்(خشية) ،ஃகவ்ஃப் (خوف ) என்ற பதங்கள் இறையச்சத்திற்கு நிகராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இமாம் இப்னு கய்யிம் அல்ஜவ்ஸிய்யா ரஹிமஹுல்லாஹ்
தனது புத்தகமாகிய
மதாரிஜுஸ் ஸாலிகீனில்
(مدارج السالكين )
இதற்கான விளக்கம் ஒன்றை எழுதுகிறார்கள் ,
அல்குர்ஆனில் ஃகஷ்யத்(خشية) என்ற வார்த்தை 23 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது,
அதிகம் வினைச்சொல்லிலும், பெயர்ச் சொல்லில் குறைவாகவும் வந்திருக்கிறது.
வினைச் சொல்லுக்கு يَخْشٰى யஃஷா உதாரணம்...
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.
(அல்குர்ஆன் : 20:44)
ஃகஷ்யத் خَشْيَةَ பெயர்ச் சொல்லுக்கு உதாரணம்...
وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.
(அல்குர்ஆன் : 17:31)
ஃகஷ்யத்(خشية) என்ற வார்த்தையில்
அல்லாஹ் பயன்படுத்தியிருந்தால் அதற்கு ஞானத்தோடு சேர்ந்த அச்சம் என்ற கருத்தை வழங்குவதுடன் பயம் ஏற்பட்ட பின்பு உள்ளம் நிம்மதி அடையும் என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 35:28)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம்.
என்று குறிப்பிட்டிருக்கிறான்
மாஷா அல்லாஹ் சத்தியத்தை அறிந்தவர்கள் பலர் நமது உலமாக்களில் இருக்கிறார்கள் ஆனால் இதைச் சொன்னால் நம்மை வஹ்ஹாபிகள் என்று சொல்லிவிடுவார்களோ !!
தவ்ஹீத் ஜமாத் நஜாத் என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வாய் மூடி விடுகின்றனர்.
பித்அத்துக்களை எதிர்க்க வேண்டிய உலமாக்கள் நீங்கள் பின் வாங்கியதால் ஜாஹில்கள் இன்று பித்அத் மாநாடு நடத்துகிறார்கள் !!!
இதைவிட மிகவும் கவலைக்குரிய விடயம் இன்றைய காலத்தில் ஆலிம் பட்டம் பெரும் உலாமாக்களில் வாசிப்பு பழக்கம் என்பது அறவே இல்லாமல் போய்விட்டது, அவ்வாறு வாசிப்பு பழக்கம் உடையவர்கள் தமிழிலும் உருதுவிலும் மட்டுமே தங்களை தேக்க நிலையில் வைத்துக் கொள்கிறார்கள்,
மூலமொழியில் அரபு மொழியில் வாசிப்பது மிகவும் குறைவு,
அரபுக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கும் மூத்த அறிஞர்கள் வரை தாங்கள் நடத்தும் புத்தகங்களுக்கு கூடுதலாக விளக்க உரைகளை படிப்பதற்காக மட்டுமே அரபு மொழியை பயன்படுத்துகிறார்கள்,
இவ்வாறு இருந்தால் எவ்வாறு சத்தியம் பொதுமக்களிடம் வந்து சேரும் அசத்தியும் எவ்வாறு வீழ்ச்சி அடையும் !!
அடியேனுக்கு விபரம் தெரிந்த வரை
சத்தியத்தை உரக்கச் சொல்லி பிதஹத்தை கண்டித்த நமது முன்னோர்களில் சமகால அறிஞர்களான அல்லாமாகளான யாகூப் காஸிமி விஷாரமி, கலீல் அகமது கீரனூரி, புரசைவாக்கம் நிஜாமுதீன் மன்பஈ, பள்ளப்பட்டி அப்துர் ரஹீம் அர்ரஷாதி ரஹிமஹுமுல்லாஹ் போன்ற உலமாக்கள் பல இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் வழிகாட்டினார்கள் அவர்கள் எந்த இயக்கத்திலும் உறுப்பினர்களாக ஆகவில்லை,
குறிப்பாக ஜமாத்துல் உலமாவில் அடியேன் அறிந்து அவர்களில் சிலர் உறுப்பினராக பங்கு கொள்ளவில்லை, காரணம் இன்று சர்வ சாதாரணமாக பித்அத்துகளையும், ஷிர்கையும் ஆதரிக்கும் சில அறிஞர்கள் இந்த அமைப்பில் இருக்கின்றனர் அதை சத்திய சிந்தனையுடைய உலமாக்கள் அந்த அமைப்பில் இருந்தாலும் கண்டிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை.
அல் பாத்திஹா என்ற சப்தத்துடன் ஒரு மஜ்லிஸ் ஓதி துவக்கப்பட்டால் அதை ஓதிய அந்த அறிஞர் உடன் எந்த தொடர்பையும் எதிர்காலங்களில் தொடராத கொள்கை பிடிப்பில் அசத்திய கொள்கையுடன் சமரசம் செய்து கொள்ளாத உலமாக்களிடம் மண்டியிட்டு படித்துவிட்டு இன்று சத்தியத்தை உரக்க சொல்வதை மறந்து விட்டனர்,
சில சந்தர்ப்பங்களில் கவலையுடன் ஏன் உஸ்தாத் நீங்கள் தானே எங்களுக்கு முன்னோடி என்று கேட்டால் நாங்கள் எந்த அனாச்சாரங்களையாவது செய்கின்றோமா இல்லை தானே ஒதுங்கி தானே இருக்கிறோம் என்று பதில் கூறுகிறார்கள்,
நீங்கள் பித்அத் செய்யவில்லை என்பதனால் தான் உங்களை நாங்கள் எங்களது ஆசிரியராக இன்று வரை மதிக்கிறோம் ஆனால் சமூகத்தில் ஜமாத்துல் உலமாவின் சில உலமாக்களின் சார்பாக நடத்தப்படும் எத்தனையோ அனாச்சார மேடைகளில் அது தடுக்காமல் நீங்களும் கலந்து கொள்கிறீர்கள் , சத்தியத்தை மட்டுமே எடுத்துக் கூறப்பட்ட நமது மதரஸாக்களின் பட்டமளிப்பு விழாவில் பித்அத்வாதிகளை அழைத்து அழகு பார்க்கிறீர்கள் !!!
அதை தவறு என்று என்றாவது நீங்கள் கண்டித்துள்ளீர்களா ?
என்று அடியேன் பலமுறை மனக்கவலைகளை கொட்டி இருக்கிறேன்.
நமது ஆசிரியர்கள் ஹதீஸ் கிரந்தங்களை படித்து தரும் பொழுது கூறுவார்கள் அசத்தியத்தை கண்டு வெகுண்டெழாத உலமாக்கள் தீய உலமாக்கள் علماء الشر என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அருளால் உலமாக்களில் சிலர் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும் இன்று வரை
பொருளாதார வீழ்ச்சியிலும் சரி முன்னேற்றத்திலும் சரி, அவர்கள் வறுமை நிலையில் இருந்தாலும் யாரிடமும் தங்கள் தேவையை கேட்காதவர்களாகவும், அனாச்சாரங்களுக்கு ஆதரவாக என்றும் பேசியது இல்லை எழுதியதில்லை ஆதரித்ததில்லை இன்றும் எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்களிடம் உலக மதிப்பு குறைவாகவும் மறுமை உடைய மதிப்பு மிகவும் அதிகமாகவும் இன்றும் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.
இறுதி மூச்சு வரை சத்தியத்தில் நிலைத்து அசத்தியத்தை எதிர்த்து களம் காணும் "அல்உலமாக்களாக" அல்லாஹ் நம் அனைவருக்கும் வலிமையை தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம்....
اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 35:28)
வானவர்களிடம் உதவி கேட்கலாமா ?
வழக்கமாக அசத்தியவாதிகளான பரேல்விகள் (பித்அதிகள்) தங்களின் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான நச்சு கருத்தைகளை வலுப்படுத்துவதற்காக சில சந்தர்ப்பங்களில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதின் சிறந்த இமாம்களை அவர்களின் மன இச்சைகாக பலியாக்குவது வழக்கம், அப்பொழுதுதான் பொதுமக்கள் இவர்கள் பேச்சை மறுக்காமல் கேட்பார்கள் என்ற யுக்தி,
இதை அடியேன் தனது தொடர்களில் தொடர்ந்து எழுதி வருகிறேன், இது போன்ற அசத்திய கருத்துக்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாக எனது எழுத்துக்கள் ஊடாக வீடியோக்கள் மூலம் விளக்கங்கள் & மறுப்புகள் தெரிவித்தும்
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்வதை போல் தங்கள் கருத்தில் நிலையாகவே இருந்து வருகின்றனர், அல்லாஹ் அவர்களுக்கு மிக விரைவாக நேரான வழியை ஹிதாயத்தை காட்டுவானாக , நம்மை அதில் நிலைக்கச் செய்வானாக!!
கீழ்காணும் இந்த முகநூல் பதிவில் அசத்தியவாதிகள் இவ்வாறு தங்கள் கருத்தை அவர்களுக்கே உரித்தான ஒரு நடையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
https://m.facebook.com/groups/1654631744635806/permalink/6408385085927091/?sfnsn=wiwspmo&ref=share&mibextid=VhDh1V
அதாவது இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஜ் உடைய பயணத்தில் வழி தவறி சென்ற பின் வானவர்களிடம் வழி காண்பிக்குமாறு கேட்டு வழி பெற்றார்கள்
என்ற கருத்தை முன்வைத்து வானவர்களிடம் உதவி கேட்கலாம் என்று ஸலபுஃ உலமாக்கள் கூறியதாகவும் அதை ததஜவினர் மறுத்தார்கள் என்று கோர்த்து விடுகின்றனர்,தவறான ஒரு வழிகாட்டுதலை சமூகத்திற்கு தர முயற்சி செய்திருக்கிறார் , எனது சில மாணவர்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்ட பெயரில் அதற்குரிய மறுப்பை அடியேன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே வகுப்பாக எடுத்து யூட்யூபில் பதிவு செய்திருக்கிறேன், இதோ அதன் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது முழுவதுமாக
வகுப்பை கேட்கவும்.
https://youtu.be/Fu1dJA-DkLw
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்
உதவி கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள் என்று தெளிவாக நபி மொழிகளில் கூறி இருக்கிறார்கள்,
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய விடயங்களை அல்லாஹ் அல்லாத நல்லடியார்களிடம் வானவர்கள் ,ஜின்களிடம் கேட்பது இணைகற்பித்தலாகும் , ஷிர்க்.
குர்ஆன் ஹதீஸை முறைகேடாக பயன்படுத்தும் இவர்கள் , சற்று வரம்பு மீறி இவர்களின் வாய்மையற்ற இந்தக் கொள்கைகளை வாழ்க்கை முழுவதும் தவ்ஹீதிலும் ஏகத்துவத்திலும் நிலைத்திருத்த உலமாக்களை ஆதாரமாக கூறி பலியாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
“إنه قد انقطع الوحي وتم الدين، أينقص وأنا حي؟!
வஹி முற்றுப்பெற்று ,மார்க்கம் முழுமை அடைந்த விட்டது , நான் உயிரோடு இருக்கும் பொழுது மார்கம்
நலிவடையமுடியுமா ?
இந்த ஈமானிய ,உயிரோட்டமுள்ள வார்த்தைகளை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர்களும் ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும்,
ஆம் அந்த வார்த்தைகளை ஸெய்யதுனா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பின்பு ரித்தத் போரின் போது ஜகாத்தை மறுத்தவர்களை நோக்கி மிகத் தெளிவாக சொன்ன வார்த்தை,
இந்த வார்த்தைகளை கேட்ட ஸெய்யதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுடன் மிருதுவாக நடந்துகொள்ளலாமே என்று சொன்னபொழுது பதிலளித்தார்கள் (ஸெய்யதுனா அபூபக்கர் சித்தீக்
அவர்கள் உமராகவும் , ஸெய்யதுனா உமர் அபூபக்கராகவும் மாறிய தருணங்கள் என்றே சொல்லலாம்....)
உமரே நீங்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் கடுமையானவராகவும் இஸ்லாத்தில் கோழையாகவும் ஆகிவிட்டீர்களா ? என்று கடிந்து கொண்டதை இன்று நாம் அனைவரும் சற்று நினைவுகூரக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஸெய்யதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த சம்பவத்தை சொல்லி அழ ஆரம்பித்தார்கள் .
குறிப்பாக நபி அவர்களுடன் குகையில் இருந்தபொழுது பொந்துகளை தங்களது கால்களால் மறைத்து பாம்பால் கொத்தப்பட்டு , அதை தாங்கிக் கொண்டு நபியவர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என்ற ரீதியில் அசையாமல் இருந்த அபூபக்கர் அவர்களின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் துளிகள் தனது மடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் நபி அவர்களை விழிக்கச் செய்தது ,நபியவர்கள் தங்களது முபாரக்கான உமிழ்நீரை அந்த காயத்தில் இட்ட பொழுது உடனே குணமானார்கள் , அந்த இரவில் அபூபக்கர் அவர்கள் பெற்றிருந்த பாக்கியத்திற்கு உமர் அவர்கள் தனது அனைத்து நாட்களையும் சமமாகக் கருதினார்கள்.
நூல் - மனாகிபு அபூபக்கர் ரழியல்லாஹீ அன்ஹு ,மிஸ்காதுல் மஸாபீஹ் - 9/3890
அப்படிப்பட்ட ஸெய்யதுனா அபூபக்கர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
"வஹி முற்றுப்பெற்று ,மார்க்கம் முழுமை அடைந்த விட்டது , நான் உயிரோடு இருக்கும் பொழுது மார்கம்
நலிவடையமுடியுமா ? ",
என்ற வார்த்தைகளை ஒவ்வொரு மார்க்க அறிஞரும் ஆழமாக உணர வேண்டும், சத்தியத்தை உரக்கச் சொல்லி கொடுத்த தாய் மதரசாக்களான தாருல் உலூம் தேவ்பந்த்,ஸஹரான்பூர்,நத்வதுல் உலமா,பாகியாதுஸ் ஸாலிஹாத் மற்றும் பல இஸ்லாமிய கலாச்சாலைகளிலிருந்து ஆலிம் ஸனது பெற்ற உலமாக்களே சற்று விழித்துக் கொள்ளுங்கள், இந்த கல்வி ஸ்தாபனங்களில் நீங்கள் பெற்ற உறைமோர் உங்களிடம் கொஞ்சமாவது இருக்குமே அது எங்கு போனது ???
அன்று மார்க்கம் கேள்வி குறியாக்கப்பட்ட பொழுது ,சத்திய சஹாபாக்கள் நபியவர்களின் மரணத்தினால் தாங்க முடியாத துயரத்தில் வீழ்ந்திருந்த அந்த தருணத்தில் அபூபக்கர் அவர்களின்
வார்த்தைகள் வரலாற்று ஏடுகளில் தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாக இஸ்லாத்தை மீண்டும் புத்துணர்ச்சியுடன் இயங்கவைத்தது ,
இன்று மார்கத்தின் பெயரில் அரங்கேற்றப்படும் மௌலூது,மீலாது போன்ற அனாச்சாரங்கள் நீங்கள் உயிரோடு இருக்கும் பொழுது வளர விடலாமா ? மார்க்கமாக்க விடலாமா ?
இறைக் கட்டளைகளை இறைதூதரிடமிருந்து முறையாக நம்மிடம் சேர்த்தவர்கள் இந்த சஹாபாக்கள் தான், அவர்களை விடவா நாம் இறைத்தூதரை அதிகமாக நேசிக்கிறோம் ???
இந்த ரபீயுல் அவ்வல் மாதத்தில்தான்
மூன்று முக்கியமான சம்பவங்கள் நடந்தது நபியவர்களின் ஹிஜ்ரத், மரணம் , பிறப்பு (இந்த நாளில் என்பது ஆதாரமில்லை என்று இருந்தாலும் ஒரு வாதத்திற்கு)
நபியவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் நபியவர்களின் பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை ???
ஹிஜ்ரத் நாளை நினைவு கொண்டு ஏன் கொண்டாடவில்லை ???மரணத்திற்குப் பின்பு ஏன் அவர்கள்
துக்கம் கொண்டாடவில்லை ???
ஸஹாபாக்களின் காலத்திலும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் காலத்திலும் ,
சங்கையான 4 மத்ஹபுகளின் இமாம்களும் மீலாது விழா கொண்டாடப்படவில்லை!!!
ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் தான் இந்த அனாச்சாரம் மார்க்க நிறம் பூசப்பட்டது.
இதை இமாம் அல் மக்ரீஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல்கிதது (الخطط) என்பதில் 2/436 ல் கூறுகிறார்கள்.
மீலாதை மார்க்கமாக பார்க்க நினைக்கும் இவர்கள் முன்வைக்கும் வசனம்தான் இது
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், (உம்மீது புரிந்துள்ள) உமதிரட்சகனின் அருட்கொடையைப்பற்றி (அவனுக்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு) அறிவித்துக் கொண்டிருப்பீராக!
(அல்குர்ஆன் : 93:11)
நபியவர்கள் பிறந்தது அருட்கொடை தானே என்று கேட்டு ஆம் என்று பதில் சொன்னால் மீலாது விழா கொண்டாட அல்லாஹ்வே அனுமதி அளித்துள்ளான் என்று மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத ஒரு ஆதாரத்தை சொல்வார்கள்.
மேலும் அந்த நாளன்று நபியவர்களின் வாழ்க்கை வரலாறு பேசப்படுகிறது என்ற காரணத்தினால் மீலாது விழாவை கொண்டாடுவதற்கு பல அறிஞர்கள் அனுமதி அளித்துள்ளார்கள் என்ற மார்க்கத் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டுவார்கள்,குழம்பி விடாதீர்கள் தெளிவாக இருங்கள்.
நபி அவர்கள் பிறந்த பொழுது சந்தோசத்தின் மிகுதியால் அபூலஹப்
தனது அடிமைப் பெண்ணான துவைபா அல்அஸ்லமிய்யாவை உரிமை விட்டார்கள் அதனால் அவருக்கு மறுமையில் வேதனை குறைக்கப்படும் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் காபிரான அபூலஹப் அவனின் பெயரில் ஒரு வசனமே அவனை இழிவுபடுத்தி இறங்கியிருக்கிறது
تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّ
அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!
(அல்குர்ஆன் : 111:1)
அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தையாக இருந்தால் உயிரோடு புதைப்பார்கள் ஆண் குழந்தையாக தனது சகோதரன் மகனாரான நபியவர்கள் பிறந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர மீலாது கொண்டாடுவதற்கு காஃபிரான ஒரு மனிதரை வைத்து ஆதாரமாக எடுக்கக்கூடாது.
மீலாது விழா கூடும் என்று அவர்கள் முன்வைக்கும் மற்றுமோர் ஆதாரம் இமாம் பைஹகீ அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஊடாக அறிவிக்கிறார்கள்
நபியவர்கள் தனக்குத்தானே நுபுவ்வதுக்கு பின் அகீகா கொடுத்துக் கொண்டார்கள், அதேபோல் அபூதாலிப் அவர்களும் நபியவர்கள் பிறந்த உடன் அகீகா கொடுத்தார்கள் எனவே ஒவ்வொரு வருடமும் சந்தோஷத்தில் மீலாது விழாவை கொண்டாடலாம் என்று ஆதாரம் எடுக்கிறார்கள்.
இந்த நபி மொழியை அறிவித்த இமாம் பைஹகி இது "முன்கர்", ஹதீஸ் வகையைச்சேர்ந்தது என்றும் இமாம் நவவி அவர்கள் "அசத்தியமானது" என்று தங்களின் புத்தகமான ((المجموع)) (8/431) அல்மஜ்மூவிலும் ,
இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள்
((الفتح)) (9/509):
அல்ஃபதஹிலும் "ஆதாரத்திற்கு தகுதி இல்லாதது ", என்றும் குறிப்பிடுகிறார்கள்.
أنَّهم يَستدِلُّون على جوازِ الاحتفالِ بيومِ مولدِ النبيِّ صلَّى اللهُ عليه وآله وسلَّم بما رواه البيهقيُّ في سُننه، عن أنسٍ رضِيَ الله عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم عقَّ عن نفْسِه بعدَ النُّبوَّة، ويقولون: هذا رسولُ الله قد عقَّ عن نفْسِه فرَحًا بمولدِه، مع أنَّ أبا طالبٍ قد عقَّ عنه يومَ وِلادتِه، وفي ذلك دَليلٌ على جوازِ تَكرارِ الفرحِ مَرَّةً بعدَ مرَّةٍ.
وهذا الحديثُ كما ذَكر البيهقيُّ نفْسُه عَقِبَه: (حديثٌ مُنكَر)، وقال النوويُّ في ((المجموع)) (8/431): (باطلٌ). وقال ابنُ حَجرٍ العسقلانيُّ في ((الفتح)) (9/509): (لا يَثبُت)؛ فسَقطَ الاحتجاجُ به أصلًا، على أنَّه لو ثبَتَ لم يكُن فيه دليلٌ أيضًا لهم؛ لاختِلافِ ما بين هذا الفِعلِ وما بَينَ الاحتِفالِ بالمولِدِ كلَّ عامٍ؛ فهو قياسٌ مع الفارِقِ.
இறை தூதர் (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வள் மாதம் 12 ல் பிறந்தார்களா ?
நபியவர்களின் பிறந்த தினம் குறித்து வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன,ஆனால் இவர்களின் இறந்த தினம் ரபீயுல் அவ்வல் 12 என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது ,
அவர்களின் உறுதி செய்யப்படாத பிறந்த தினத்தை முன் வைத்தா? அல்லது உறுதி செய்யபட்ட இறந்த தினத்தை முன் வைத்தா ?
பிறகு நாம் எதை முன்வைத்து சந்தோஷமாக கொண்டாடுகின்றோம்?
அல்லாமா இப்னு கதீர் (ரஹ் )
அவர்கள்
தங்களின் புத்தகமாகிய அல்பிதாயா வன் னிஹாயாவில் ,
நபியவர்கள் பிறந்த நாள் 2 ரபீயுள் அவ்வள் ,17 ரபீயுள் அவ்வள்,என்று குறிப்பிடுகின்றார்கள் ,ரமலான் மாதமும் பிறந்த தினமாக கூறப்படுவதும் கூட ஆச்சிரியத்தை அளிக்கின்றது என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் இப்னு கதீர்
கூறுகின்றார்கள்.
பார்க்க -
*அஸ்ஸீரதுன் நபவிய்யா -இப்னு ஹிஷாம் ,பக்கம் -128
*அத்தபகாத் -இப்னு ஸஃத் ,பக்கம் -47
ابن كثير في البداية والنهاية ذكر جميع هذه الأقوال في تحديد هذا اليوم ومنها 2 ربيع الأول- 17 ربيع الأول – وقيل ولد في شهر رمضان أيضاً واستغربه ابن كثير؛ وينظر : ابن هشام، السيرة النبوية، ص128؛ ابن سعد، الطبقات، ص 47.
பாதிமியாக்கள் தான் முதன் முதலில் (எகிப்து ,ஷாம் தேசத்தின் ஷியாக்களின் ஒரு பிரிவு ,அப்பாஸி கிலாபத்தை வீழ்த்தியவர்கள் ) நான்கு வகையான பிறந்த தினங்களை கொண்டாடியவர்கள்-
1-நபிகளாரின் (ஸல்) பிறந்த தினம்
2-அலி பின் அபீதாலிப் (ரலி)
பிறந்த தினம்
3-அவர்களின் இரு புதல்வர்கள்
ஹசன் ,ஹுசைன் பிறந்த தினங்கள் .
இவர்கள்தான் முதலில் இந்த அனாசாரங்களை ஏற்படுத்தியவர்கள் என்று அல்முக்ரிஸி என்ற அறிஞர் கூறுகின்றார் ,
பாதிமியாக்களின் அரசரான முஸ்தஃலா பில்லாஹி உடைய அமைச்சர் பத்ருல் ஜமாலி என்பவர் அமைச்சராக பதிவியேற்கும் வரை இந்த பித்அதான மீலாது பண்டிகை நடந்தேறியது ,ஏனென்றால் இந்த அமைச்சர் நபிவழியை (சுன்னாவை ) பின்பற்றுவதில் மிகவும் கவணமானவராக இருந்தார்,ஆட்சி பொருப்பில் வந்தவுடன் ,முதலில் இந்த அனைத்து பிறந்த தின விழாகளை
இரத்து செய்தார்,இவருடைய மரனதிற்க்கு பின் மீண்டும் இந்த மீலாது விழா அனாசாரங்கள் தொடர்ந்தது ,மாவீரர் மன்னர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) (பாலஸ்தீனத்தில் கைப்பற்றப்பட்ட பைதுல் முகத்திஸை யூதர்களின் கரத்திலிருந்து முஸ்லீம்களுக்கே மீட்டு கொடுத்த குர்திய மாவீரர் ) அவர்கள். மிகவும் சுன்னாவை பேணுபவராக இருந்தார்கள் ,தங்கள் முழு அய்யூபிய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் இராஜியங்களில் இந்த மீலாதுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்,ஆனால் அவரின் தங்கையின் கணவர் அரசர் முஸப்பர் மட்டும் ஏற்க மறுத்தது மட்டுமல்ல,அவருடைய நாட்டில்
மீலாது விழா லுஹருல் இருந்து மருநாள் பஜர்
வரை நடத்தப்பட்டது அதில் பல ஸூபிகள் கலந்து கொண்டனர் ,
அதில் அவர் மூன்று இலட்சம் பொற்காசுகள் செலவு செய்தார் .
நூல் -அல்பிதாயா வன் நிஹாயா-
ஆசிரியர் -இமாம் இப்னு கதீர்
(ரஹ்)
பக்கம் -186,
வால்யம் -7
சம்பவம் -ஹிஜ்ரி 630 .
وقد احتفل الفاطميون بأربعة موالد : مولد النبي صلى الله عليه وسلم ، وعلي بن أبي طالب وولديه الحسن والحسين -رضي الله عنهم- جميعا . فهم أول من أحدث ذلك كما ذكر المقريزي وغيره . وظلت هذه البدعة يعمل بها حتى جاء ( بدر الجمالي ) الوزير الأول للخليفة الفاطمي ( المستعلي بالله ) وكان هذا الوزير شديد التمسك بالسنة ، فأصدر أمرا
بإلغاء هذه الموالد ، وما أن مات ( بدر الجمالي ) حتى عادت البدعة من جديد .
واستمر الأمر على هذا الحال حتى جاء عهد صلاح الدين الأيوبي ، وكان أيضا من المتمسكين بالسنة ، فألغى هذه الاحتفالات ، وتم تنفيذ هذا الإلغاء في كل أنحاء الدولة الأيوبية ، ولم يخالف في ذلك إلا الملك المظفر الذي كان متزوجا من أخت صلاح الدين .
وقد ذكر المؤرخون أن احتفالات الملك المظفر بالمولد كان يحضرها المتصوفة حيث يكون الاحتفال من الظهر إلى الفجر ، وكان ما ينفق في هذا الاحتفال يزيد عن ثلاثمائة ألف دينار(انظر البداية والنهاية-ابن كثير –ج7-ص186-حوادث سنة630 هـ) .
من مقال ( البدع وأثرها في انحراف التصور الإسلامي ) للدكتور الشيخ صالح بن سعد السحيمي حفظه الله تعالى.
نشر في مجلة البحوث الإسلامية - (15 / 157) (الجزء رقم : 16، الصفحة رقم: 160-161) نسخة المكتبة
الشاملة
இமாம் இப்னு கஸீர் அவர்கள் மேற்கோள் காட்டும் இதே சம்பவத்தை தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டதை வழிகெட்ட இந்த பரேலவிகள் முறைகேடாக இமாமவர்கள் தங்களது நூலான அல்பிதாயா வன் நிஹாயாவில் மீலாது விழா நடந்ததாக ஆதாரமாகக் கூறி வரலாற்று இருட்டடிப்பை செய்கிறார்கள்.
நம்முடைய சான்றோர்கள் பித்அத் (அனாசாரம்) விடயத்தில் மிகவும்
கவனமாகமும்,பேணுதலாகவும் இருந்தனர் ஆனால் இன்று வழிகெட்ட பரேல்விகள் இந்த தூய இஸ்லாதின் கொள்கை ,கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பது மட்டுமின்றி அவர்களின் வழி கெட்ட கொள்கைகளை இஸ்லாமாக மாற்ற முயலுகின்றனர் ,இந்த உம்மதின் எழுச்சி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதில் மட்டுமே இருக்கின்றது ,மன இச்சைகளை மார்கமாக ஆக்க முயன்றால் இவ்வுலகிலே இழிவையும் ,மறுமையில் வேதனையும் காண்போம்.
இஸ்திகாஸா ஓர் பார்வை
இன்று முஸ்லிம்களுடைய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன, இதைப் பற்றிய விவாதங்கள் செய்ய யாரும் இல்லை அதற்கு தீர்வு அளிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை,
இதைப்போன்ற தேவையில்லாத சர்ச்சைகளை ஏன் நீங்கள் செய்கிறீர்கள் ?என்ற கேள்வியை சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.
இஸ்லாமியர்களின் பொருளாதார பிரச்சனை அரசியல் ரீதியான பிரச்சனை சமூக ரீதியான பிரச்சனை எந்த அளவுக்கு அது பற்றி விவாதம் செய்வது தீர்வு காண்பது மிக முக்கியமோ அதைவிட கொள்கை ரீதியான குழப்பங்களில் தெளிவு பெறுவது மிக அவசியம்.
இன்று பலருக்கு இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்றால் என்ன என்பது
அரவே தெரிவதில்லை, ஆனால் தங்களை இஸ்லாமிய விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் மார்க்கத்தை ஆழமாக அறிந்தவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு முஸ்லிமின் நற்கருமங்கள் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மறுக்கப்படுவதற்கு அவன் கொண்டுள்ள கொள்கைகள் தான் ஒரு அடிப்படையான அளவுகோல்.
நாளை மறுமை நாளில் இறைவனை முறையாக சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் இறைவனுக்கு யாரையும் இணை கற்பித்திருக்கக் கூடாது, ஷிர்க் செய்திருக்கக் கூடாது.
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا
(நபியே!) நீர் கூறுவீராக, “நிச்சயமாக, நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீமூலம் அறிவிக்கப்படுகிறது, ஆகவே, எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 18:110)
இஸ்திகாஸா பி கைரில்லாஹ் - استغاثة بغير الله -அல்லாஹ் அல்லாத பிறரிடம் உதவி தேடுதல் என்று அர்த்தம்,
அல்லாஹ்விடம் உதவி தேடுவதை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ
நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
(அல்குர்ஆன் : 8:9)
அறிஞர்கள் இந்த வசனத்தில் இடம் பெற்றிருக்கும் இஸ்திகாஸா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான துஆவை சேர்ந்தது என்றும் மனிதர்களால் நமது தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத துஆ அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டும் அந்த இஸ்திகாஸா ஒரு இபாதத் என்கிறார்கள், நிச்சயமாக பிரார்த்தனை என்பது அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டிய ஒன்று.
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)
மனிதரிடம் உதவி கேட்பதும் இருக்கிறது அல்லாஹ்விடம் உதவி கேட்பதும் இருக்கிறது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணீரில் மூழ்கி கொண்டிருக்கும் ஒருவன் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்துகிறான் என்று வைத்துக் கொள்வோம், இல்லை இல்லை உதவி என்பது அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று நாம் காப்பாற்றாமல் விட்டுவிடுவோமா ??
நமக்கு சக்தி இருந்தால் அவரை காப்பாற்றுவோம் அல்லவா?
இந்த வகையான உதவிகள் அதாவது மனிதர்கள் மனிதர்களுக்கு செய்ய முடிந்த உதவிகள் ஷிர்க் அல்ல குஃப்ர் அல்ல, அவ்வாறு இருந்தால் அல்லாஹ்வும் தூதரும் நமக்கு தெளிவு படுத்தி இருப்பார்கள்,
இதை வைத்துதான் மாற்றுக் கருத்து உடையவர்கள், பரேலவிகள் மனிதர்களிடம் நாம் உதவி கேட்பது கூடும் என்றபோது மனிதர்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் இறைநேசர்கள் அவர்களிடத்தில் நமது பிரச்சினையை சொல்லி உதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
என்பதாக "கியாஸ் ", சட்டம் எடுக்கிறார்கள், இந்த வகையான கியாஸ் சட்டத்திற்கு உஸீலுல் ஃபிக்ஹில் (ஃபிக்ஹு துறையின் அடிப்படையான விதிமுறைகள் ) கியாஸ் மஃஅல் ஃபாரிக் (قياس مع الفارق)
என்று சொல்வார்கள் இது ஒரு தவறான அணுகுமுறையும் ஆகும்.
ஆக தான் சக்தி பெறாத விடயங்களில் உதாரணமாக உடல் ஆரோக்கியத்தை கேட்பது, மழை பெய்யச் சொல்லி கேட்பது, கவலைகளை போக்க சொல்லி கேட்பது, வியாபாரத்தில் அபிவிருத்தியை கேட்பது, ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமோ அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடமோ எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பது இணை வைத்தலாகும்.
எதிர் கருத்து உடைய பரேல்விகள் அந்தளவுக்கு மார்க்கத்தில் ஞானம் இல்லாதவர்களா என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம், நியாயமான ஒரு கேள்வியை தான் முன் வைத்திருக்கிறீர்கள் , முதலாவது பதில் அவர்களுக்கு உண்மையாகவே மார்க்கத்தில் ஞானம் மிகக் குறைவு,
அல்லாஹ்வும் ரசூலும் எந்த முறையில் மார்க்கத்தைச் சொன்னார்களோ அதை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது சேஹுமார்களும் , வலிமார்களும்
எதைச் சொல்லி இருக்கிறார்களோ அது தான் மார்க்கம் இது அவர்களின் ஒரு அறியாமை.
இரண்டாவது பதில் ஷாபி மத்ஹபில்
பின் வந்த சில அறிஞர்கள் இமாம் ரமலி,இமாம் இப்னு ஹஜர் ஹைதமி
ரஹிமஹுமுல்லாஹ் போன்றோரிடத்தில் , நபியவர்கள் நமக்காக பரிந்துரை செய்வதும் (ஷஃபாஅதும் ),வஸீலா தேடுவது, இஸ்திகாஸா இவைகளுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை, அவர்களிடத்தில் இஸ்திகாஸா இந்த அடிப்படையில் கூடும், இது பிழையான இஜ்திஹாத் ஆகும்,
لا مصاغ الاجتهاد في النصوص
லா முஸாக அல்இஜ்திஹாது ஃபின் நுஸுஸ்
தெளிவான ஆதாரங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட பின்பு யாருக்கும் இஜ்திஹாத் செய்வதற்கு அனுமதி இல்லை என்ற அடிப்படையான உஸுலை அலட்சியப் படுத்துவதால் ஏற்படும் விளைவுகளே இவைகள்,
நமது காலத்திலும் சில அறிவிலிகள்
குர்ஆன் ஸுன்னாவில் தெளிவாக ஒரு விடயத்தைப் பற்றி சொல்லப்பட்டு இருந்தும் சுய ஆய்வு செய்கிறேன்(இஜ்திஹாத்) என்ற அடிப்படையில் வழிகேட்டிற்கு செல்கிறார்கள் அதையும் நாம் பார்க்கிறோம், புத்திக்கு பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்வோம் இல்லையென்றால் அது சரியான ஆதாரம் மிக்க ஒரு நபிமொழி ஆக இருந்தாலும் மறுப்போம் என்ற ஒரு வழிகேடு இதனடிப்படையில்தான் ஏற்படுகிறது.
ஷாபி மத்ஹபின் முன்சென்ற இமாம்கள் இஸ்திகாஸா கூடாது என்று சொல்கிறார்கள், பின் வந்த சில அறிஞர்கள் தான் இதை அனுமதிக்கிறார்கள்.
இதுதான் சற்று சர்ச்சைக்கு வழிவகுக்கிறது, மாற்றுக் கருத்துடைய பரேல்விகளிடத்தில்
வசீலா தொடர்பாக வந்திருக்கும் நபிமொழிகளை இஸ்திகாஸாவாக
பார்ப்பார்கள், கண் தெரியாத ஒரு நபித்தோழர் நபியவர்கள் காலத்தில் கேட்ட வஸீலா இதற்கு நல்ல உதாரணம்,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி கீழ்க்கண்ட முறையில் வஸீலா தேடலாம் ...
1) ஸாலிஹான நல்ல அமல்கள் ஊடாக துஆ கேட்பது
2) உயிருடன் இருக்கும் ஸாலிஹான இறைநம்பிக்கையாளர் ஊடாக துஆ கேட்பது
3) அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு கேட்பது
வசீலா பற்றிய கூடுதலான தகவலுக்கு எனது தனி தொடரை படிக்கவும்,
இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி அஷ்ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் இமாம் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களை காபிர் என்று கூறினார்கள், இமாம் இப்னு தைமிய்யா அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையில் மரணித்தவர்கள் இடத்தில் துஆ கேட்பது கூடாது என்றார்கள்,
இந்த மார்க்க தீர்ப்பை கொடுத்த உடனேயே பல மூத்த உலமாக்கள் இப்னு ஹஜர் ஹைதமி அவர்களை விமர்சித்ததும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது,
நாஸிருத்தீன் திமிஸ்கி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா காபிர் என்று தவறாக நினைத்தவர்களுக்கு மறுப்பு என்ற பெயரிலும் புத்தகம் வெளியிட்டார்.
"அர்ரத்து அல்வாஃபிர் அலா மன் ஸஃஅம பி அன்ன மன் ஸம்மா இப்னு தைமிய்யா ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா காபிர்",
"الرد الوافر على من زعم بأن من سمّى ابن تيمية شيخ الإسلام كافر"
அன்றைய காலகட்டத்திலே இருந்த ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த பிரபலமான இமாம் பதுருதீன் அல்ஐனி அல்ஹனஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நாஸிருத்தீன் திமிஸ்கி அவர்களின் புத்தகத்தை சிறந்த புத்தகமாக சொல்லி இருக்கிறார்கள்.
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களை பற்றி கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் யூடியூப் லிங்கில் பார்க்கவும்
https://youtu.be/jIaWUFKTnRU
மரணித்தவர்கள் இடத்தில் அல்லாஹ்விடம் கேட்கப்படக்கூடிய
துஆக்களை போன்று கேட்கலாம் என்ற இந்த அசத்தியமான கொள்கை தவ்ஹீதுக்கு முரணானது இது ஷிர்க்கையும் , குஃப்ரையும் உண்டாக்கிவிடும்.
இன்று அசத்திய கொள்கைகள் பல நமது சமூகத்தில் இஸ்லாமிய பெயரில் நுழைந்துவிட்டது, அதை சரியாக இனம்கண்டு கொள்ள வேண்டும் என்பதே நமது தொடர் கட்டுரைகளின் நோக்கம், ஆலிம்களாக இருப்பதால் அல்லாஹ் நம்மை மருமையில் இந்த வழி கேடுகளுக்கு மறுப்பாக ஆலிம் என்ற விதத்தில் என்ன செய்தாய் என்று கேட்பான் என்ற எண்ணமே இந்த கட்டுரைகள்.
மரணித்த நல்லடியார்களிடம் நேரடியாக துஆ கேட்கும் இஸ்திகாஸாவும் (استغاثة بغير الله ) இவர்களின் பொருட்டால் அல்லது இதன் பொருட்டால் என்று துஆவில் கேட்கப்படும் வஸீலாவும் வேறு வேறு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் புரிந்து கொள்ள சிரமப்படும் பரேல்விய நண்பர்களுக்கு சற்று திறந்த மனதுடன் அடியேன் கூறும் அறிவுரை,
சத்தியத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் ஆழமாக கொள்ளுங்கள், எதிர் கருத்தில் சத்தியம் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுங்கள்,
நாம் விளங்கிய கொள்கை நாம் படித்த கொள்கை நமது ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த கொள்கை எமது மதரஸா எனக்கு படித்துக் கொடுத்த கொள்கை என்று இல்லாமல் சத்தியத்தை பின்பற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள் மட்டும் எனது தொடர்களை படிக்கவும் மற்றவர்கள் தாராளமாக தங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தை மரணம் வரை விளங்கி பின்பற்றும் பாக்கியத்தை வழங்கி விடுவானாக !!
வஸீலா & தவஸ்ஸுல் - மரணித்த நல் அடியார்களின் ஊடாக துஆ கேட்பது பற்றி மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மூன்று கருத்துகளை முன் வைக்கின்றனர்.
💥முதலாவது:
மரணித்த நல்லடியார்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஊடாக யா அல்லாஹ்!!
இந்த நல்லடியாரின் ஊடாக இந்த தேவையை நிறைவேற்றிக் கொடு என்று கேட்பது போல் கேட்பது அறவே கூடாது.
அது நபி அவர்களாக இருந்தாலும் சரியே,இந்தக் கருத்தை முன்வைப்பவர்கள் இமாம் அபூ ஹனிபாஃ மற்றும் அவர்களின் மாணவர்கள் ரஹிமஹுமுல்லாஹ்,இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இந்த கருத்தைப் பற்றி தனது புத்தகமான
قاعدة جليلة في التوسل والوسيلة كتاب من تأليف ابن تيمية يتحدث فيه عن التوسل وأحكامه من منظور أهل السنة والجماعة.
"காயிதா ஜலீலா பீஃத் தவஸ்ஸுலி,வல் வஸீலா ",
இந்த புத்தகத்தில் இந்தக் கருத்தை சிறந்த கருத்தாகவும் ஏகத்துவத்திற்கு நெருக்கமான கருத்தாகவும் , இறைத்தூதர் ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதில் மார்க்கம் காட்டித் தந்த வரைமுறைகளுக்குள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ,
நபியவர்கள் காலத்திலும் அவர்கள் மரணத்துக்கு பின்பும் அவர்களின் ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நபியவர்களின் ஊடாக துஆ கேட்டதற்கு சான்றுகள் இல்லை இதற்கு பல மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் அவர்கள் தங்கள் புத்தகத்தில் ஒன்று திரட்டி இருக்கிறார்கள்.
நபி அவர்களின் ஊடாக நமது அமல்களையும் இபாதத்துகளையும் மார்க்க விடயங்களையும் அமைத்துக் கொள்வது கூடுமா கூடாதா என்ற கேள்விக்கு அப்பால் அவர்களை முழுக்க முழுக்க பின்பற்றுவதும் அவர்கள் காட்டித் தந்த வழியில் நாம் பயணிப்பதும் நமக்கு அவசியம் இதுதான் இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த வழிமுறை இந்த முறையான வஸீலா ஜாயிஸ் (கூடும்) என்பது மட்டுமல்ல வாஜிபாகும்.
ஆனால் அவர்களின் வாழ்வில் அவர்களிடம் நேரடியாக வசிலா கேட்பது கூடும் , அவர்களின் மரணத்திற்கு பின்பு கூடாது ,உதாரணமாக நபியவர்களே எங்களுக்காக துஆ செய்யுங்கள் , எவ்வாறு நாம் நல்லடியார்கள் என்று கருதும் உயிருடன் இருக்கும் பெரியார்களிடம் எனக்காக துஆ செய்யுங்கள் என்று கூறுகிறோம் இது கூடும் ,அவர்களின் மரணத்திற்குப் பின்பு அவர்களின் ஊடாக துஆ கேட்பது கூடாது அது இணைவைத்தலை கற்பித்து விடும்.
இந்த கருத்தை அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
💥இரண்டாவது:
மரணித்த நல்லடியார்கள் யாரின் ஊடாகவும் வசிலா கேட்கக் கூடாது ஆனால் இறைத்தூதர் ﷺ அவர்கள் ஊடாக வஸீலா கேட்கலாம் இந்த கருத்தை இமாம்
இஸ் பின் அப்துஸ் ஸலாம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
💥மூன்றாவது:
நபி அவர்களை வைத்து துஆ கேட்பது மரணத்திற்கு பின்பு கூடும் என்ற கருத்து இருப்பதினால் ஏனைய இறை நேசர்கள் நல்லடியார்கள் அவர்களையும் துஆவில் வஸீலவாக தேடலாம்.
ஆனால் அல்லாஹ் ஒருவனே தீமையை தடுப்பதற்கு நன்மை வழங்குவதற்கும் சக்தி பெற்றவன் என்ற ஈமானுடன் நல்லடியார்களின் பொருட்டால் வசீலா கேட்கலாம் இந்தக் கருத்தை இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் தங்களது புத்தகத்தில் துஹ்பஃதுத் தாகிரீன் -
- تحفة الذاكرين
ல் கூறுகிறார்கள்.
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இந்த கருத்தை கூறுகிறார்கள் என்று இமாம் தகியுத்தீன் அஸ்ஸுபுகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் .
திர்மதியின் விளக்க உரையான துஹ்பஃதுல் அஹ்வதியில் تحفة الأحوذي
அதன் ஆசிரியரான அஷ்ஷைக் முபாரக்பூரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கருத்து வேறுபாடுகளை கூறுகிறார்கள்.
ஆக நபியவர்களின் மரணத்துக்கு பின்பு அவர்களின் ஊடாக துவா கேட்கலாம் என்று முன்வைக்கப்படும் மாற்றுக் கருத்தினரின் நபிமொழிகள் அனைத்தும் ஆதாரங்கள் அற்றதாகவும் இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளாக இருக்கின்றன.
அசத்தியவாதிகளான பிதஃஅத்வாதிகள்
பொதுவாக அவர்களின் வலைதளங்களில் சத்தியத்தை எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் கொண்டிருக்கும் சித்தாந்தங்களுக்கு பொய்யான கற்பனை கதைகளை நேர்த்தியான முறையில் ஆதாரங்களாக எழுதி பொதுமக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பகட்ட காலத்தில் இவர்கள் நமக்கு எதிராக பல சத்தியமான கருத்துக்களை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து வைப்பார்கள் என்று எண்ணினேன் ,
போ போக இவர்கள் கூறும் கட்டுக்கதைகளை நாம் ஒவ்வொரு தொடரிலும் விளக்கிக் கொண்டிருக்கிறோம், சில சந்தர்ப்பங்களில் சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்களின் பெயர்களில் இவர்கள் அரங்கேற்றிய கற்பனைக் கதைகள் ஒரு புறம்.
இறுதியாக ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது பரேல்விகளாகிய இவர்கள் கொண்டிருக்கும் கால் புணர்ச்சியின் உச்சக்கட்டம் அவர் நிராகரிப்பாளர் (காபிஃர்)என்று எழுதினார்கள்.
இவைகள் அனைத்திற்கும் எனது தொடர்புகளில் விளக்கங்களையும் மறுப்புகளையும் எழுதி வருகிறேன்,
அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்து அதன் உண்மை நிலையை பொதுமக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறுகிறேன்.
பள்ளப்பட்டி இளம்உலமா பேரவை
என்ற முகநூல் பகுதியில் கீழ்காணும் தலைப்பில் ஒரு கட்டுரை வழமைப் போல் கற்பனைகள் கலந்த சம்பவத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது
////ஷஃபாஅத்தும் இஸ்திஹாஸாவும் ஒன்றே ! வெவ்வேறு அல்ல !
இப்னு அதாயில்லா vs இப்னு தைமிய்யா .
ஹிகம் எனும் ஞான பெட்டகத்தை இந்த உம்மத்துக்கு அளித்த மிகப் பெரும் சூஃபி மகானாகிய இப்னு அதாயில்லாஹ் சிக்கந்தரி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களுக்கும் இப்னு தைமியாவுக்கும் மத்தியில் நடந்த அருமையான விவாதம்...////
இவர்களின் திருகுதாளங்களை நாம் ஒவ்வொரு தடவையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்,
நமது விளக்கமும் மறுப்பும் !!!
முதலாவது அசத்தியவாதிகள் நேரடியாக குர்ஆனிலிருந்தும் ஸஹீஹான நபி மொழியிகளில் இருந்தும் ஆதாரத்தை முன்வைக்க மாட்டார்கள்.
கட்டுக்கதைகளையும் மக்கிய குப்பைகளையும் தான் ஆதாரங்களாக முன்வைப்பார்கள்.
இப்னு அதாயில்லாஹ் இஸ்கந்தரி ,இப்னு தைமிய்யா ரஹிமஹுமுல்லாஹ்
ஆகியோருக்கு மத்தியில் நிகழ்ந்த
அவர்கள் கூறும் " அருமையான விவாதம்",
ஒரு கற்பனையே எந்த ஆதாரமும் இல்லை.
கீழ்காணும் வரலாற்று அரபு புத்தகங்களில் இப்னு அதாயில்லாஹ் இஸ்கந்தரி ரஹிமஹுல்லாஹ் பற்றிய பல அறிய தகவல்கள் காணமுடிகிறது ஆனால் இவர்களின் கற்பனைச் சம்பவத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.
وله ترجمة في:
• "حسن المحاضرة"؛ للسيوطي، (1: 524).
• "خطط مبارك" (7: 69).
• "دائرة المعارف الإسلامية"، (1: 240).
• "الدرر الكامنة"؛ لابن حجر، (1: 291).
• "الديباج المذهب"؛ لابن فرحون، (70).
• "شذرات الذهب في أخبار مَن ذهب"؛ لابن العماد، (6: 18).
• "طبقات الشافعية"؛ للسبكي (5: 176).
• "طبقات المفسرين للداوودي"؛ (1: 77).
• "العِبر في خبر من غبر"؛ للذهبي، (271).
• "الرحلة العياشية"، (1: 357).
• "كشف الظنون"، (675).
• "معجم المطبوعات"، (184).
• "المنهل الصافي والمستوفى بعد الوافي"؛ لابن تغري بردي، (1: 38).
• "النجوم الزاهرة"؛ لابن تغري بردي، (8: 280).
ஒரு வாததிற்க்கு எடுத்துக் கொண்டாலும் குறைந்தபட்சமாக ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கூறும் கீழ் காணும் வரலாற்று புத்தகங்கள் கூட இந்த இருவருக்கும் மத்தியில் இவ்வாறு ஒரு விவாதம் நடந்ததாக எந்த தகவலும் கூறவில்லை ???
أما من ترجموا لابن تيمية فخلقٌ كثير، منهم:
• ابن عبدالهادي في "العقود الدرية في مناقب ابن تيمية".
• ابن كثير في تاريخه.
• أبو المظفر ابن الوردي في تاريخه.
• الذهبي في: "تذكرة الحفاظ"، "المعجم المختص بالمحدثين"، "سير أعلام النبلاء"، "ذيل تاريخ الإسلام".. إلخ.
• الحافظ أبو حفص البزار في: "الأعلام العلية في مناقب ابن تيمية".
• المقريزي.
• ابن رجب في "الذيل على طبقات الحنابلة".
• مرعي الكرمي في "الكواكب الدرية في مناقب ابن تيمية".
• الشهادة الزكية في ثناء الأئمة على ابن تيمية.
• السخاوي في: "الإعلان بالتوبيخ لمن ذم التاريخ".
அவர் எழுதி இருக்கும் ஆதாரம் என்ற நூல்கள் குர்ஆனிய வசனங்களோ,நபிமொழிகளோ அல்ல கீழ்காணும் புத்தகங்கள் தான்...
1)ஆதார நூல் : இப்னு தைமிய்யா அல் ஃபகீஹுல் முஅஃத்தபு,
ஆசிரியர் : அப்துர் ரஹ்மான் அஸ்ஸர்காவீ,
பக்கம் : 202.
2) நூல் : முனாலராத்து இப்னி தைமிய்யா மஅ ஃபுகஹாயி அஸ்ரிஹி,
ஆசிரியர் : அஸ்ஸய்யிதுல் ஜமீலி ஹஃபிழஹுல்லாஹ்.
பக்கம் : 12.
இந்த கட்டுரை எழுதியவர் கோடிட்டு காட்டிருக்கும் இரண்டாம் புத்தகத்தின் ஆசிரியர் அஸ்ஸய்யிதுல் ஜமீலி
அவர்கள் தனது புத்தகத்தில் ஆதாரமாக காண்பித்திருப்பது இவர் முதலாவது ஆதாரமாக காண்பித்த புத்தகத்தை தான்
அதாவது அப்துர் ரஹ்மான் அஸ்ஸர்காவீ என்பவர்
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்
பற்றி எழுதிய புத்தகத்தில் இருந்துதான்.
அப்துர் ரஹ்மான் அஸ்ஸர்காவீ என்ற இந்த நபரைப் பற்றி நாம் ஆய்வு செய்த பொழுது இவர் பெரிய பஃகீஹ் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு துறை சார்ந்த நிபுணரோ ,மார்க்க அறிஞரோ,
அல்லது ஹதீஸ்களை வல்லுனரோ இல்லை, அவர் ஒரு கவிஞர் அரபு இலக்கிய சிந்தனைவாதி.
அப்துர் ரஹ்மான் அஸ்ஸர்காவீ இந்த இரண்டு இமாம்களுக்கும் மத்தியில் நடைபெற்ற விவாத சம்பவத்தை ஆதாரமாக முன்வைத்துக் கூறி இருக்கும்
இரண்டு முக்கியமான வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான இப்னுல் அஸீர் ரஹிமஹுல்லாஹ் இப்னு தைமிய்யா அவர்கள் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
இவர் இறந்ததற்கும் சம்பவம் நடந்த வருடத்திற்கு மத்தியில் நூறு ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது (!!!!)
பாருங்கள் எவ்வாறு நேர்த்தியாக கற்பனை கதையை எழுதுகிறார்கள் கற்பனை கதை அரபு மொழியில் எழுதியிருந்தால் அது உண்மையாகி விடுமா அதை ஒருவர் தமிழாக்கம் செய்து இஸ்லாமிய சமூகத்தில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கண்ணியத்தை போக்க நினைக்கிறார்கள்.
இரண்டாவது வரலாற்று ஆசிரியர் இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ்
இவரும் தன்னுடைய வரலாற்று புத்தகங்களில் எங்குமே இந்த சம்பவத்தை பதிவு செய்யவில்லை (!!!!)
இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ்
ஹிஜ்ரி 707 ஏழாம் ஆண்டு எகிப்து நாட்டில் இருக்கும் அல்ஜபல் கோட்டையில் இருந்த சிறைச்சாலையில் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இருந்தார்கள் அன்று எதிர் கருத்து உடையவர் பலர் விவாதங்கள் புரிந்தனர் மறு நாளில் இருந்து எந்த எதிர் கருத்துடைய உலமாக்களும் இமாம் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் மறைந்து விட்டனர் எனவே அங்கு அமீராக இருந்த ஹுஸாமுத்தீன் அல்முஹன்னா
என்ற அரசர் இமாம் அவர்களைப் பற்றிய கண்ணியத்தை நாடு முழுவதும் பரப்பினார்கள்.
இந்த அளவு தான் இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆனால் அப்துர் ரஹ்மான் அஸ்ஸர்காவீ அவர்கள் வழமையை போன்று உண்மைக்கு புறம்பான தகவல்களை எழுதி இருக்கிறார்.
இவரைப் பற்றி எகிப்திய பல அறிஞர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்,
ஆரம்ப கட்ட காலத்தில் இவர் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனை வாதியாக இருந்தார்,
பின்னர் இஸ்லாமிய வரலாற்றை எழுதுகிறேன் என்ற பெயரில் தனது அரபு இலக்கிய திறனை சற்று சேர்த்துக் கொண்டு பொய்யான பல கருத்துக்களை எழுத ஆரம்பித்தார்,
குறிப்பாக இறைத்தூதர் ﷺ அவர்கள் வானவர் தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கவே இல்லை கனவில் தான் எல்லா விடயங்களும் நிகழ்ந்தன என்று கூறியிருப்பது இந்த நபரின் மார்க்கப்பற்றை நமக்கு தெளிவுபடுத்தலாம்.
இந்த நபரின் திருகுதாளங்களை பற்றி கூறினால் கட்டுரை நீண்டு விடும்.
இந்த அளவிற்கு மார்க்க அறிவு இல்லாத ஒரு நபரின் புத்தகத்தை ஆதாரமாக காட்டி மக்களை ஏன் வழி கெடுக்க வேண்டும் !!!?
ஆக சத்தியத்தை உரக்கச் சொல்லும் அறிஞர்களை இழிவு படுத்துவதும் அவர்கள் மீது குற்றம் சாட்டுவது மட்டுமே இந்த பரேலுவிகளுக்கு வேலையாக விட்டது.
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புத்தகத்தை பரேல்விகள் அவ்வப்பொழுது ஆதாரமாக சுட்டிக்காட்டி தங்களின் வழிகேடான கருத்துக்களை திணிக்க பார்ப்பார்கள் சற்று விழிப்புடன் இருங்கள் பொதுமக்களே,
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்"
اقتضاء الصراط المستقيم
பக்கம் எண்- 297 ல் கீழ்க்காணும் விதத்தில் மீலாது விழா கொண்டாடுவதை ஆதரித்து இருக்கிறார்கள் என்ற கருத்து பரேல்விகளின் முகநூல் பதிவுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது,
///சிலர் மீலாது விழாவை கண்ணியப்படுத்தும் விதத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார்கள்,
, அவரின் நோக்கம் நல்லதாக இருப்பதனாலும்
இறைத்தூதர் ﷺ அவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதில் மகத்தான நற்கூலி அவர்களுக்கு இருக்கிறது///
இவர்கள் சொல்லி இருக்கும் 297 வது பக்கத்தையும் போட்டிருக்கிறேன் அவர்கள் கூறும் கருத்து எங்கு இருக்கிறது??? அவ்வாறு எதுவும் அங்கு இல்லை.!!!!
இதுதான் பரேல்விகளின் வரலாறு காணாத இருட்டடிப்புகள் யாராவது எதையாவது எழுதினால் அதை அவ்வாறே காப்பி பேஸ்ட் பண்ணுவது சிந்திப்பதற்கு அல்லாஹ் நமக்கு பகுத்தறிவை கொடுத்திருக்கிறான் என்ற எண்ணமே வருவதில்லை!!
இந்த புத்தகம் என்னிடத்தில் இருக்கிறது திருச்சி வருபவர்கள் தெரிவிக்கவும் நேரடியாக காண்பிக்கிறேன்,
ஏன் இவ்வாறான இருட்டடிப்புகள் பொய் பித்தலாட்டங்கள் ???
அசத்தியவாதிகளின் இருட்டடிப்புகள் என்ற எனது புத்தகத்திற்கு பக்கத்தை அதிகமாக்கி கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்"
اقتضاء الصراط المستقيم
பக்கம் எண்- 252 ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்
////இவ்வாறு சிலர் (முஸ்லிம்கள்)கிறிஸ்தவர்களை பின்பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவருடைய பிறந்த நாளுக்கு அவர்கள் செய்வதைப் போன்றே நபி ﷺ அவர்கள் மீது அன்பையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தி பிறந்தநாள் காண முயற்சி செய்கிறார்கள்,
இவர்கள் செய்த இந்த செயலுக்கு சில சமயம் அல்லாஹ் இவர்களின் முயற்சிக்கும், நேசத்திற்கும் கூலி கொடுக்கக் கூடும், ஆனால் இவர்கள் செய்யும் பித்அத் (அனாச்சாரம்) என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைக்காது,
மீலாது விழா கொண்டாடுவதற்கு நேரடியான தடை வரவில்லை என்று கருதி யார் நபியவர்கள் ﷺ பிறந்த தினத்தை கருத்து வேறுபாடுகள் இருப்பதுடன் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வார்களோ !!!
இது போன்ற செயல்களை நமது முன்னோர்கள் (ஸஹாபாக்கள் )செய்யவே இல்லை (என்று அவர்கள்அறிந்து கொள்ளட்டும்),
இதை செய்வதில் சிறப்பும் உயர்வும் இருந்திருந்தால் நமது முன்னோர்களான சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அதிக உரிமை பெற்றிருப்பார்கள் காரணம் அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்தார்கள்./////
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மரணம் இறுதிவரை அனாச்சாரங்கள் பித்அத் புரிபவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்திருக்கிறார்கள் ,
இந்த வழிகேடர்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த புத்தகத்தை தங்களின் வழிகெட்ட கருத்துக்கு வளைப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
வழிகெட்ட பரேல்விகள் தொடர்ந்து
புரிந்து வரும் மத்ஹபுகளின் சங்கையான இமாம்கள் பெயரில் வரலாறு காணாத வரலாற்று இருட்டடிப்புகளை மிக கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.
"இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் ",
என்ற இமாம் இப்னு தைமியா அவர்களின் புத்தகத்தில் இமாமவர்கள் சொல்லாததும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணான தகவலை அதாவது நபியவர்கள் ﷺ பிறந்தநாளை இமாம் அவர்கள் ஆதரித்ததாக ,இந்த பரேலவிகள் இன்று அல்ல பல காலமாக அவர்களின் புத்தகத்திலிருந்து மேற்கோள்காட்டி சொல்லிக்கொண்டு வருகிறார்கள்,
அதற்கு மறுப்பாக அரபு உலமாக்கள் அந்த காலத்திலேயே அந்த அரபு ஸுஃபித்துவ பித்அத் வாதிகளுக்கு தக்க பதிலை வழங்கி அசத்தியத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள், அதை மீண்டும் தோண்டி எடுத்த இந்திய பித்அதிகளான இந்த பரேல்விகள் நமது போர்வாளுக்கு மீண்டும் இறையாகிப் போனார்கள் ,
வழிகேடான பித்அத்தை எதிர்ப்பதற்காக முழு வாழ்க்கையையும் கழித்த இமாம் இப்னு தைமியா அவர்கள் மீதே நேர்த்தியான முறையில் இட்டுக்கட்டி இருப்பது தான் இங்கு மிக சுவாரசியமான விஷயம்,
இவர்கள் சங்கையான இமாம்களின் மீது சுமத்தும் பழிகளை வரலாற்று இருட்டடிப்புகளை அவ்வப்பொழுது தக்க ஆதாரத்துடன் மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்துவதால் காழ்ப்புணர்ச்சி உடன் வழமைபோல் தங்களது அராஜக செயல்பாடுகளினாலும், கேலி கிண்டல்களை அவர்களின் பதிவில்
இறைத்து நம்மை திசை திருப்ப பார்க்கிறார்கள் இந்த பரேல்விய குள்ளநரிகள், அல்லாஹ் அவர்களை நேர்வழிப்படுத்தட்டும்.
முதலில் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது புத்தகத்தில் முதலாவது பாகத்தில் 297 வது பக்கம் மீழாது விழாவை ஆதரித்து தங்களது கருத்தை தெரிவித்ததாக சொன்ன அவர்கள்
(பார்க்க ஸ்க்ரீன் ஷாட்டை ), நாம் அவர்கள் முகத்திரையை நமது மறுப்பின் ஊடாக கிழித்த உடன்,
இப்பொழுது இரண்டாவது பாகத்தில் 126 பக்கத்தில் இருப்பதாக கூறி டிராக் மாறுகிறார்கள் ,இதுவே இவர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையை சிதைத்து விடுகிறது, சரி போகட்டும் புத்தகங்கள் பொதுவாக வெளியிடப்படும் பொழுது ஒவ்வொரு வெளியீட்டாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஒரே பாகமாக அல்லது இரண்டு பாகமாக வெளியிடும்பொழுது இந்த பிரச்சினைகள் வருவது இயல்பு என்று ஏற்றுக் கொண்டாலும்,
இவர்கள் செய்திருக்கும் வரலாறு காணாத மோசடியை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை வாருங்கள் தொடர்வோம்,
கூடுதலான இவர்களின் இருட்டடிப்பு களுக்கு கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்...
https://m.facebook.com/story.php?story_fbid=4595912190451974&id=100000997148534&sfnsn=wiwspmo
அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில்
பின்வருமாறு கூறுகிறான்
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ
எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான்.
(அல்குர்ஆன் : 107:4)
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை)விட்டும் பராமுகமாக இருப்போர்.
(அல்குர்ஆன் : 107:5)
இந்த வசனத்தில் வரும் தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்று தவறாக விளங்கி , இதற்கு அடுத்துள்ள வசனத்தை சரியாகப் படிக்காமல் போனால் வரும் விபரீதத்தை தான் இவர்கள் செய்திருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு கிறித்தவர்களுடன் ஆரோக்கியமான உரையாடலை செய்யும் பொழுது இதே முறைகேடைத் தான் அவர்கள் இந்த வசனத்தை சுட்டிக்காட்டி,
பாருங்கள் திருக்குர்ஆனே அதன் வழிகாட்டலுக்கு முரண்படுகிறது,
தொழுகை சுவனத்தின் திறவுகோல் என்ற நபிமொழிக்கு முரண்படுகிறது, தொழுதால் கேடு உண்டாகும் என்று கூறுகிறது என்பதாக தங்களின் அறியாமையால் நம்முடன் விவாதித்தது நினைவுக்கு வருகிறது,
பரேல்விகள் குறிப்பிட்ட அந்த
اقتضاء الصراط المستقيم
என்ற கிதாபின் பிரதியை இதோ இந்த லிங்கைத்
தொட்டு பெற்றுக் கொள்ளலாம்.
https://drive.google.com/file/d/16Ji-BuV7PHqVjxvcdx_giw_63rqIS4ZL/view?usp=drivesdk.
இதேபோல்தான் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் (இவர்கள் சுட்டிக் காட்டி இருக்கும்) தங்களின் புத்தகத்தில் 126 ம் பக்கத்தில் கீழ்க்காணும் விதத்தில் மீலாதை ஆதரித்ததாக பரேல்விகள் கூறுகிறார்கள்....
//////
فتعظيم المولد واتخاذه موسما قد يفعله بعض الناس ويكون له فيه أجر عظيم، لحسن قصده وتعظيمه لرسول الله
நபியவர்களின் பிறந்தநாளை கண்ணியப்படுத்தி அதை கொண்டாட்டமாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்,இந்த அழகான நோக்கத்தினாலும், நபியவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது.
/////
என்ற வரிகளை மட்டும் சொல்லிவிட்டு அடுத்த வரிகளை மேற்கோள் காட்டாமல் , அதை மறைத்து இருட்டடிப்பு செய்து எஸ்கேப் ஆகி விட்டார்கள் இந்த பரேல்விகள் (هداهم الله) ,
அந்த புத்தகத்தில் அவ்வாறு என்ன உண்மையை அவர்கள் மறைத்து விட்டார்கள் !!! வாருங்கள் பார்போம்!!!
இவர்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கம் எண் 126 க்கு முன்பாக பக்கம் எண் 125 ல் இமாமவர்கள் இறை அழைப்புப் பணியில் பேணவேண்டிய இரண்டு முக்கியமான விடயத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்
1) நபிவழியை முறையாக அகத்திலும் புறத்திலும் பின்பற்ற வேண்டும்
2) முடிந்த அளவுக்கு சரியான நபிவழியை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக இமாமவர்கள் தெளிவு படுத்திக் கொண்டு வரும்பொழுது வணக்க வழிபாடுகளில் புகுத்தப்பட்ட அனாச்சாரங்களை மறுப்பவர்கள் நபிவழியை பேணுவதில் குறை உடையவர்களாக இருக்கிறார்கள்
நபிவழியை விட்டு விட்டு அனாச்சாரங்கள் பக்கம் திரும்பி விடுகிறார்கள், எனவே நன்மையை முறையாக ஏவி தீமையை முறையாக தடுக்க வேண்டும்,
(என்று தொடர்ந்து கூறி இப்பொழுது பரேல்விகள் மோசடியாக முன்வைத்த கருத்து வருகிறது....)
நபியவர்களின் பிறந்தநாளை கண்ணியப்படுத்தி அதை கொண்டாட்டமாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்,இந்த அழகான நோக்கத்தினாலும், நபியவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது
என்று சிலர் கூறுவதை உனக்கு நான் சொன்னதைப் போல் மெய்யான இறைநம்பிக்கையாளர் எதை வெருப்பாரோ (பித்அதினால்) அதை சிலர் அழகு படுத்தி காண்பிக்கின்றனர்.
இந்தவகை அரபு இலக்கிய நடைக்கு அரபு மொழியில் "இஸ்தித்ராத்", استطراد
என்று சொல்வார்கள்
قال الجرجاني: "الاستطراد: سَوقُ الكلام على وجهٍ يَلزم منه كلامٌ آخرُ، وهو غير مقصود بالذات، بل بالعَرَض
كتاب التعريفات؛ لعلي بن محمد بن علي الزين الشريف الجرجاني (المتوفى: 816هـ)
இந்த வார்த்தைகளைத்தான் இந்த பரேலவிகள் மறைத்துவிட்டு தொழுகையாளிகளுக்கு கேடு இருக்கிறது என்று அல்குர்ஆனே முரண்படுவது போன்ற பாவனையை ஏற்படுத்தி இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.
சுருக்கமாக பக்கம் 125 லிருந்து 138 க்கும் அதிகமான பக்கங்களில் இமாமவர்கள் நோக்கமான நபிவழியை விட்டுவிட்டு நோக்கமில்லாத வேறு சில விடயங்களை கவனம் செலுத்துவது
வழிகேட்டை ஏற்படுத்தும் உதாரணமாக நபியவர்களின் மீது நேசம் இருக்கிறது என்ற விதத்தில் அவர்களாலோ அவர்களின் தோழர்களாலோ காட்டி தரப்படாத பிறந்ததினத்தை கண்ணியப்படுத்தி அவர்களை பின்பற்றாமல் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடுவது என்ற கருத்தில் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
அதே பக்கத்தில் ஒரு உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்கள் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆய்வில் திருக்குர்ஆன் அலங்கரிக்கப்படுவது வெறுக்கத்தக்க விடயமாகும்,
திருக்குர்ஆனை நேர்த்தியாக அலங்கரித்து விட்டு அதை ஓதாமல் விட்டு விடுவது தவறான வழிமுறையாகும்.
அனாச்சாரங்களை மார்க்கமாகக் கருதி செய்பவர்களை கண்டிப்பதற்கே இமாமவர்கள் இந்த புத்தகத்தை எழுதினார்கள்,
மீலாது விழா ஒரு அனாச்சாரம் பித்அத் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இவர்கள் மேற்கோள் காட்டி இருக்கும் இதே புத்தகத்தில் பக்கம் எண் -123 ல் இமாமவர்கள் மீலாது விழாவை கண்டித்து பின்வருமாறு கூறுகிறார்கள்
////இவ்வாறு சிலர் (முஸ்லிம்கள்)கிறிஸ்தவர்களை பின்பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவருடைய பிறந்த நாளுக்கு அவர்கள் செய்வதைப் போன்றே நபி ﷺ அவர்கள் மீது அன்பையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தி பிறந்தநாள் காண முயற்சி செய்கிறார்கள்,
இவர்கள் செய்த இந்த செயலுக்கு சில சமயம் அல்லாஹ் இவர்களின் முயற்சிக்கும், நேசத்திற்கும் கூலி கொடுக்கக் கூடும், ஆனால் இவர்கள் செய்யும் பித்அத் (அனாச்சாரம்) என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைக்காது,
மீலாது விழா கொண்டாடுவதற்கு நேரடியான தடை வரவில்லை என்று கருதி யார் நபியவர்கள் ﷺ பிறந்த தினத்தை கருத்து வேறுபாடுகள் இருப்பதுடன் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வார்களோ !!!
இது போன்ற செயல்களை நமது முன்னோர்கள் (ஸஹாபாக்கள் )செய்யவே இல்லை (என்று அவர்கள்அறிந்து கொள்ளட்டும்),
இதை செய்வதில் சிறப்பும் உயர்வும் இருந்திருந்தால் நமது முன்னோர்களான சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அதிக உரிமை பெற்றிருப்பார்கள் காரணம் அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்தார்கள்./////
ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம் அதாவது இமாம் இப்னு தைமியா அவர்கள் பக்கம் எண் 126 ல் மீலாது விழா கூடும் என்று சொல்லிவிட்டு 123 ல் கூடாது என்று சொல்லி ஏன் தானே முரண்பட வேண்டும் ???
இதுதான் இவர்களின் இருட்டடிப்புகளின் வழக்கம், தயவுகூர்ந்து இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் இல்லையென்றால் வழிகேட்டில் போவீர்கள்.
இவர்களின் முகநூல் பதிவில் இதைப்பற்றி யூடியூப் சேனலில்
https://youtu.be/NK2TYX8jAHs
https://youtu.be/pSF609hNQqM
சில அரபு அறிஞர்கள் (முகத்தில் முழுமையான சுன்னத்தான தாடி கூட இல்லை) கூறியதாக இவர்கள் போட்டிருக்கும் அதே லிங்கின் கமேண்டுகளில் "அஹ்மத் பின் தாஹா அபூ அப்துல்லாஹ் அல்பன்ஹாவி ",
ஸெய்ஃபு (سيف ) என்ற பெயர்களிலும்
இவர்கள் செய்த இந்த இருட்டடிப்பு களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் அரபு மொழி தெரிந்தவர்கள் இந்த கமேண்டுகளையும் சேர்த்தே படிக்கவும்.
أحمد بن طه أبو عبد الله البنهاوي
هل الإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أجاز الاحتفال بمولد النبي صلى الله عليه وآله وسلم في ربيع الأول من كل سنة؟!!!
سُئِل َفي مجموع الفتاوى (25/298):
عَمَّنْ يَعْمَلُ كُلَّ سَنَةٍ خَتْمَةً فِي لَيْلَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ ذَلِكَ مُسْتَحَبٌّ؟ أَمْ لَا؟
சிறுபிள்ளைத்தனமாக ஹுத்ஹுத் பறவைகள் ஏவும் அம்புகள் அனைத்தும் தங்களின் இலக்கை அடையாமலே
காணாமல் போய்விடுகிறது, இனியாவது மறுப்பு தெரிவிக்கிறேன் என்று சொல்லி முறைகேடான ஆய்வுகளை செய்யாதீர்கள் ,சத்தியம் உங்கள் புறத்தில் இருப்பின் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை, அசத்தியத்தை மார்க்க லேபிளில் விற்பனை செய்ய முயற்சி செய்யாதீர்கள் !!!
இன்று நமது வாலிபச் சகோதரர்கள் சிலர் பல தடவை கீழ்காணும் கேள்விகளை கேட்ட வண்ணமாக இருக்கிறார்கள் அதற்கு அடியேன் சுருக்கமான சில பதில்களை எழுதி இருந்து இதோ உங்களின் பார்வைக்கு...
இஸ்லாமிய கொள்கை ரீதியாக ஹம்பளிகளுக்கும் ,அஷ்அராவினருக்கும் கருத்து மோதல்கள் என்ன ? மாதுருதியனருக்கும் அஷ்அராவினருக்கும் வேறுபாடு உள்ளதா ?
கட்டுரையை முழுவதுமாக வாசித்து தங்கள் கருத்துக்களை பதியுங்கள் அரைகுறையாக வாசித்து இக்களத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற வேண்டும்.
இந்த கருத்துக்களை விரும்பாதவர்கள் தயவு செய்து கடந்து சென்று விடவும்.
அடியேன் அகீதா துறையில் மாணவன் என்ற உரிமையில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன் அகீதா துறையில் கடந்த சில வருடங்களாக எமது மாணவர்களுக்கும் நடத்தியும் வருகிறேன், இன்னும் கூடுதலாக வாசித்தும் வருகிறேன்.
சிலர் கூறுவதைப் போல ஹம்பலிகளின் வாதம் மட்டுமல்ல முழு அஹ்லுஸ் ஸுன்னத்து வல் ஜமாத்தின் ஒருங்கிணைந்த பார்வை அல்லாஹ்வின் திருநாமங்களும் அவருடைய பண்புகளையும் எவ்வாறு தானும் தனது இறை தூதரும் அறிவித்திருக்கிறார்களோ அதை அவ்வாறே எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல், ஒப்புவோமே செய்யாமல், பண்பு நலன்களை இல்லாமல் ஆக்காமல், குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்திருப்பது போன்று ஈமான் கொள்வது இறை நம்பிக்கையாளர்களின் மீது கடமை.
இது ஒரு சில எழுத்துக்களால் அல்லது சிறிய பதிவால் விளக்கமளிக்க கூடிய விடயம் அன்று, இதற்கு முன்பாகவும் அகீதா விடயத்தில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு எனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன் இது எளிதாக கடந்து போய் விடுகிற ஒரு விடயம் அல்ல கவனங்கள் குவிக்கப்பட வேண்டிய ஒரு சப்ஜெக்ட்.
மார்க்க சட்டங்களை விளங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சொன்ன செயல்படுத்திய ஆமோதித்த நபி மொழிகளை வைத்து சட்டம் இயற்றும் பொழுது ஒன்றிற்கும் பல கருத்துக்கள் வருவதற்கு இடம்பாடு இருக்கிறது எனவே அங்கு பல பிக்ஹு கலாச்சாலைகள் மத்ஹபுகள் தேவைப்படுகின்றன.
இதைப்பற்றி வேறு சில சந்தர்ப்பங்களில் விரிவாக விளக்க முயற்சி செய்கிறேன்,
ஆனால் அகீதா (Doctrine & Principles) கொள்கை சித்தாந்தத்தில் எந்தவித பிரிவமோ அல்லது சிந்தனை கலாச்சாலையமோ( மத்ஹபோ ) கிடையாது, மேலே சொல்லி இருப்பது போல மார்க்க கிளை சட்டங்களை வழங்குவதற்கு மத்ஹபுகளின் அவசியம் தேவைப்படுகின்றன.
அஷ்அரி என்ற முறையிலோ மாத்துரிதி என்ற முறைகளோ நாம் அகீதாவை கூறு போட முடியாது.
காரணம் அகீதாவின் அடிப்படைகள் குர்ஆனும் சுன்னாவும் மட்டும்தான்.
தாங்கள் சொல்வதைப் போன்று அஷ்அரியாக்களுக்கும் ,மாத்துரிதியாக்களுக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்வது ஏற்புடையது அன்று.
இன்னும் அதிகமாக வாசியுங்கள் விளக்கங்கள் கிடைக்கும்.
அபுல் ஹசன் அஷ்அரி ரஹிமஹுல்லாஹ்
ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பது எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அவர் கடந்து வந்த முக்கியமான மூன்று பாதைகள் இருக்கிறது.
முதலாவது அபுல் ஹசன் அஷ்அரி உடைய ஆசானான அபூ அலி அல்ஜுபாயி சென்ற பாதையில் ஒரு முஃதஸிலாவாக பயணித்தார்.
முஃதஸிலாக்கள் அறிவை முற்படுத்தி குர்ஆன் சுன்னாவை பிற்படுத்துவார்கள்
இந்த அடிப்படையில் இந்த கொள்கையை நிறுவிய வாஸில் பின் அதா என்பவர்
இமாம் ஹசனுல் பஸரியின் ரஹிமஹுல்லாஹ் சபையிலிருந்து பிரிந்து வந்த சம்பவம் மிகவும் பிரபலமான ஒன்று
அதனால்தான் இவர்கள் பிரிந்து வந்தவர்கள் முஃதஸலாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர் தோற்றுவித்த முதல் அமைப்பு தான் நீதமும் தவ்ஹீதும் (حركة العدل و التوحيد)
இன்றைய அறிவு ஜீவிகள் என்று கருதும் தவ்ஹீத் பெயரில் வலம் வரும் சிலரை நமக்கு நினைவூட்டுகிறது.
ஆக இமாம் அபுல் ஹசன் அவர்கள் இந்த வழிகேடான கொள்கையில் இருந்து வெளிவந்த பின்பு தங்களுடைய ஆசனாக இப்னுல் குல்லாபை (அப்துல்லாஹ் பின் ஸஃஈது பின் குல்லாப்) பின்பற்றத் தொடங்கினார் இவரும் இல்முல் கலாமை அதிகம் பேசியதால் இவரிடமும் சரியான இஸ்லாமிய கொள்கை காணப்படவில்லை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கு மாற்று கருத்துக்களை இவர் கூறினார்.
இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால் இன்று யார் தன்னை சுன்னத்துல் ஜமாத் என்று சொல்லிக் கொள்கிறார்களோ அவர்களிடம் யார் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் என்று கேட்டால் சரியான பதில் கிடைப்பதும் இல்லை.
காரணம் மதரஸாக்களில் ஆரம்ப வருடத்தில் இருந்து முறையாக அகீதா போதிக்கப்படுவதில்லை.
எங்கள் காலங்களில் "அகீதா பதுல் ஆமாலி", என்ற புத்தகத்தின் ஊடாக கவிதையாக போதிக்கப்பட்டது , ஆனால் இன்றைய காலத்தில் மதரசாக்கலில் இந்த புத்தகமும் கூட போதிக்கப்படுவதில்லை, இறுதியாக பட்டம் வாங்கும் மாணவர்களுக்கு அகீதா நஸஃபிய்யா என்ற புத்தகமும் சில இடங்களில் அகீதா தஹாவியும் போதிக்கப்படுகிறது ஆனால் கவலைக்குரிய விடயம் படித்து தருபவரும் சரி படிப்பவர்களும் சரி கவனம் இல்லாமல் இந்த துறை வெற்றிடமாகவே விடப்படுகிறது.
ஆக இமாம் அபுல் ஹசன் அவர்கள் மூன்றாம் நிலையில் வருகிறார்கள் அதுதான் சரியான நிலைபாடும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும் அவர்களை உறுதிப்படுத்தியது ஆனால் அவர்களின் மரண இறுதியில் தங்கள் புத்தகமான அல்இபானாவில் (الإبانة عن أصول الديانة)
இஸ்லாமிய கொள்கையில் இமாமுஸ் ஸுன்னா என்று அழைக்கப்படும் இமாம் அஹமத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ்வை நான் சேர்ந்து இருக்கிறேன் என்று எழுதி இருக்கிறார்கள்
தனது பழைய கருத்துக்களை விட்டு திரும்பி விட்டதாக அதில் கூறுகிறார்கள்.
ஆனால் சமகால சில அறிஞர்கள் இமாம் அபுல் ஹசன் ரஹிமஹுல்லாஹ் இறுதிவரை சரியான கொள்கையில் திரும்பவில்லை என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.
இங்குதான் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யார் தங்களை அஷ்அரிஆக்கல் என்று சொல்கிறார்களோ அவர்கள் பெரும்பாலும் இப்னுல் குல்லாபின் கொள்கையில் இருப்பவர்கள்.
அல்லாஹ்வின் பண்புகளுக்கு விளக்கம் அளிப்பவர்கள் மாற்று கருத்துக்களை கூறுபவர்கள் இவர்கள்தான்.
ஷியாக்களும் முஃதஸிசீலாக்களும் தான்
அல்லாஹ்விற்கு உடல் இருக்கிறது என்பதை வாதிட்டவர்கள் இவர்கள்தான் முஜஸ்ஸிமாக்கள், ஹம்பலி உலமாக்கள் மீது இந்த ஷியாக்களால் பலி சுமத்தப்பட்ட பின்பு அனைவரும் ஹம்பலியாக்கள் முஜஸ்ஸிமாக்கள் என்று அழைக்க தொடங்கினர்.
இப்னுல் குல்லாபிடம் ஒரு கொள்கை இருந்தது யார் அல்லாஹ்வின் சிபாத்துகளை (பண்புகளை)மாற்றுக்கருத்துக்கள் சொல்லாமல் (தஃவீல்- تاويل) விளங்குவாரோ அவர் ஷிர்க் வைத்து விட்டார் என்ற வழிகேடான கொள்கை
கொண்டிருந்தார் இவரின் பாதையில் வந்த ஒரு சிலர் இன்னும் திருக்குர்ஆனில் அல்லாஹ்வின் பண்புகள் எங்கெல்லாம் வந்திருக்கிறதோ அதை மாற்றி விளக்கம் அளித்து தங்களை உண்மையான அஷ்அராக்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
இது வாசிப்பின்மையையும் கண்மூடித்தனமான பின்பற்றுதலையும் குறிக்கிறது.
அஷ்அரியாக்களுக்கும் ,மாத்துரிதியாக்களுக்கும் வித்தியாசங்கள் இல்லை என்று சொல்வது உகந்ததல்ல , அவர்கள் இருவருக்கும் ஷிபாத்துகளில் ஏழு எட்டு விடயங்களில் மாற்று கருத்துக்கள் இருக்கின்றன.
உதாரணமாக அபூ மன்ஸுர் ரஹிமஹுல்லாஹ் மாதுரிதியாவின் இமாம் அவர்கள் அல்லாஹ்வுடைய சிப
த்தில் (பண்புகளில்)குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்று கூறுகிறார்கள் அதேபோன்று அஷாஅராக்களும் குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அதற்கு எந்த சப்தமோ வடிவமோ இல்லை என்று கூறுகிறார்கள்.
மாதுரிதியாக்கள் இல்லை குர்ஆன் அதற்கு சத்தமும் வடிவமும் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
ஆக முஃதஸலாக்கள் கூறும் குரான் ஒரு படைப்பு என்ற வாதத்தை நமது சங்கையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் மறுத்து அதற்காக பல தண்டனைகளையும் அனுபவித்திருக்கிறார்கள் அதற்கு நல்ல உதாரணம் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ்.
சிலர் இதை மிக லேசாக எடுத்துக் கொள்கிறார்கள் இதில் எந்த பிரச்சினையுமே இல்லை தேவையில்லாமல் இந்த ஹம்பலிகள் இதை பெரிசு படுத்துகிறார்கள் என்று கடந்து விடுகிறார்கள் ஆனால் மிகவும் தவறான ஒரு கருத்து.
குர்ஆன் படைக்கப்பட்ட ஒன்று என்ற வாதம் மிகவும் அபாயகரமான ஒன்று இதை ஏற்றுக் கொண்டால் பின்னால் சொந்த கருத்துக்கள் திணிக்கப்படலாம் ஏனைய வேதங்களைப் போன்று குர்ஆனும் மாற்றம் அடையலாம் எனவே நமது உலமாக்கள் குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கலாம் படைக்கப்பட்ட ஒன்று அல்ல அருளப்பட்டது என்று தெளிவாக உறுதியாகச் சொல்லி வந்தார்கள்.
ஆனால் இப்னுல் குல்லாபின் இந்த வழிகேடான கொள்கையை சுமந்திருக்கும் இன்றைய அஷாராக்கள்
தலை சுற்றி மூக்கை தொடும் விதத்தில்
குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் ஆனால் அதற்கு எந்த எழுத்துக்களோ சப்தமோ இல்லை என்று மறுத்து வழிகேடர்களான முஃதஸிலாக்களின் கொள்கையில் வந்து சேர்கின்றனர்.
எனவே தான் அன்றைய காலத்தில் மாத்துருதியாக்கள் இவர்களை எதிர்த்து மறுத்தனர்.
சுருக்கமாக அல்லாஹ்வின் பண்புகள் ஏழோ அல்லது எட்டோ அல்லது 99 மட்டுமோ அல்ல
எதையெல்லாம் அல்லாஹ் தனது பண்பாக குர்ஆனிலும் சுன்னாவிலும் அறிவித்திருக்கிறானோ அல்லது தானே மறைத்து வைத்திருக்கிறானோ அல்லது அந்த பண்புகள் தனக்கு இல்லை என்று மறுத்து இருக்கிறானோ அவைகள் அனைத்தையும் இறை நம்பிக்கையாளர்கள் மாற்றுக் கருத்துக்கள் சொல்லாமல் படைப்புகளுடன் ஒப்பு உவமை செய்யாமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வதுதான் ஒரு தூய்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
கொள்கையாகும்.
இன்று தங்களை அஷ்அராக்கள் , மாத்துருதியாக்கள் என்று சொல்லும் சிலர் தவறான சில கொள்கைகளை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்று வாதிடுகிறார்கள் கவனம் தேவை.
அந்த காலத்தில் குழப்பம் ஏற்படுத்திய வழிகேடர்களான முஃதஸிலாக்களை
எதிர்த்த நபர்கள் தங்களை அடையாளப்படுத்த வேண்டி இருந்ததால்
அஷ்அராக்கள் , மாத்துருதியாக்கள் என்று
சொல்லிக் கொண்டார்கள்.
காரணம் அன்றிருந்த அனைத்துக் கூட்டமும் தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிவந்தது.
வேறொரு சந்தர்ப்பத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் யார் என்ற தலைப்பில் விரிவாக பேசுகிறேன்.
அஷ்அராக்கள் , மாத்துருதியாக்களும் உண்மையான குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கையில் தங்கள் வாதத்தை முன் வைத்தால் அவர்களும் முறையான கொள்கையில் உடையவர்கள் என்று அர்த்தம் ஏழு அல்லது எட்டு என்ற எண்ணிக்கையில் அல்லாஹ்வின் பண்புகளை எண்ண ஆரம்பித்தார்கள் என்றால் அப்பொழுது அவர்கள் வழி தவறுகிறார்கள் என்று அர்த்தம்.
நமது முன்னோர்களான சஹாபாக்களும் அவர்களின் பாதையில் பயணித்த தாபியீன்கள் சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் இஸ்லாமிய கொள்கை விடயத்தில் அல்லாஹ்வின் ஷிபாத்துகளான பண்புகளில் எந்தவிதமான மாற்றுக் கருத்துகளோ பண்புகளை இல்லாமல் ஆக்குவதோ படைப்பினங்களுடன் ஒப்புவோமே செய்வதோ இல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.
உதாரணமாக இமாம் மாலிக் ரஹிமஹுமுல்லாஹ்
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)
என்ற வசனத்திற்கு கீழ் வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
அர்ஷில் ரஹ்மானின் இஸ்திவா -சமமாகுதல் / உயர்தல் / அமர்தல் என்பது இந்த வசனத்தின் மூலம் அறியபட்டிருக்கின்றது
ஆனால் எவ்வாறு சமமாகுதல் என்பது அறியப்படாததாக இருக்கின்றது ,ஆனால் அல்லாஹாவின் இஸ்திவா என்பதை நம்புவது (ஈமான் கொள்வது) அவசியம் (வாஜிப்) அது எவ்வாறு என்று கேள்வி கேட்பது அனாச்சாரம் (பித்அத்).
شرح لمعة الاعتقاد للمحمود -6/9
நூல் -இப்னு குஸைமா
பகுதி -ஏகத்துவம்
பக்கம் -105
இன்னும்
நூல் -பைஹகீ
பகுதி -அஸ்மா வா சிபாத்
பக்கம் -401
இது போன்ற நமது முன்னோர்களின் புத்தகங்களில் இவ்வாறு தான் நாம்
அல்லாஹ்வின் ஷிஃபாத்துகளிலும் பண்புகளிலும் கொள்கையை கொண்டிருக்கிறோம்.
இறைவன் பண்புகளில் குர்ஆனிலும் ஹதீஸிலும் தன்னை பற்றி சொல்லும் பொழுது அதை மாற்றுக்கருத்து கூறி விளக்கப்படுத்தாமல் அவ்வாறே விளங்க வேண்டும் என்ற கொள்கையில் நமது இமாம்களும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் ....
இமாம் அபூ ஹனீஃபா ரஹிமஹுமுல்லாஹ் கூறுகிறார்கள் இறைவனின் கரம் என்று எங்கு வந்திருக்கிறதோ அதை வலிமை என்றும் அருட்கொடை என்றும் சொல்லக்கூடாது அவ்வாறு சொன்னால் அல்லாஹ்வின் ஒரு பண்பை இல்லாமல் ஆக்கியதாக கருதப்படும் இது வழிகேடர்களின் செயலாகும்.
பார்க்க - அல்ஃபிக்ஹுல் அக்பர்- 203
قال الإمام أبو حنيفة: ولا يقال إن يده قدرته أو نعمته لأنَّ فيه إبطال صفة، وهو قول أهل القدر والاعتزال.
[الفقه الأكبر ص302]
வேடிக்கையான விடயம் என்னவென்றால் அசத்தியவாதிகளான பரேல்விகள் இது இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன கருத்தல்ல இடை சொருகுதல் என்று சத்தியத்தை மறுக்கிறார்கள்.
நம்மிடத்தில் சங்கையான 4 மத்ஹபுகளின் இமாம்கள் இறை பண்புகள் விடயத்தில் எந்த கொள்கையில் இருந்தார்கள் அன்பருக்கு எக்கச்சக்கமான ஆதாரங்கள் இருக்கின்றன அனைத்து இங்கு கூறுவது இயலாது ஒன்று.
இதோ ஹனபி மத்ஹபின் சிறந்த அறிஞராக இருக்கக் கூடிய உள்ள அலீ காரி ரஹிமஹுல்லாஹ் மிஷ்காத்துல் மஸாபீஹ் நபி மொழி கிரந்தத்திற்கு விளக்க உரையாக மிர்காதுல் மபாஃதீஹில் 8 வது வால்யத்தில் 152 ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்...
இமாம் மாலிக் அவர்களின் கூற்றான அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பது தெளிவாக ஆகிறது நான் எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை என்ற இந்த பிரபலியமான கூற்றுக்கு விளக்கம் சொல்லும் பொழுது நமது மகத்துவமிக்க இமாமாகிய அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இந்த கூற்றையே தெரிவு செய்திருக்கிறார்கள், திருக்குர்ஆனில் இருந்தும் நபிமொழிகளில் இருந்தும் வரக்கூடிய கரம் கண் முகம் போன்ற இறைவனின் பண்புகளை வந்திருப்பது போன்றே விளங்க வேண்டும் எவ்வாறு என்று கேட்கக் கூடாது படைப்பினங்களோடு ஒப்பிடக்கூடாது,
இறைவன் தனது பண்புகளை தானே முன்வந்து திருக்குர்ஆனில் நபி மொழிகளில் கூறி இருப்பதை மாற்றி அமைத்து விளக்கம் கூறாமல் பண்புகளை இல்லாமல் ஆக்காமல் இவ்வாறு அவ்வாறு என்று விளக்கம் சொல்லாமல் உதாரணங்கள் ஒப்புவுவமை சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதுதான் பிரயோஜனம் அளிக்க கூடிய பாதுகாப்பான ஒரு விடயமாகும்.
قال الملاَّ علىُّ القاري بعد ذكره قول الإمام مالك: "الاستواء معلوم والكيف مجهول…" : اختاره إمامنا الأعظم - أي أبو حنيفة - وكذا كل ما ورد من الآيات والأحاديث المتشابهات من ذكر اليد والعين والوجه ونحوها من الصفات. فمعاني الصفات كلها معلومة وأما كيفيتها فغير معقولة؛ إذْ تَعقُّل الكيف فرع العلم لكيفية الذات وكنهها. فإذا كان ذلك غير معلوم؛ فكيف يعقل لهم كيفية الصفات. والعصمة النَّافعة من هذا الباب أن يصف الله بما وصف به نفسه، ووصفه به رسوله من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل، بل يثبت له الأسماء والصفات وينفي عنه مشابهة المخلوقات، فيكون إثباتك منزهاً عن التشبيه، ونفيك منزَّهاً عن التعطيل. فمن نفى حقيقة الاستواء فهو معطل ومن شبَّهه باستواء المخلوقات على المخلوق فهو مشبِّه، ومن قال استواء ليس كمثله شيء فهو الموحِّد المنزه. [مرقاة المفاتيح شرح مشكاة المصابيح ج٨ ص٢٥١]
--------
عقيدة الأئمة الأربعة في الأسماء والصفات - المجلد 1 - الصفحة 5 - جامع الكتب الإسلامية
https://ketabonline.com/ar/books/10090/read?page=5&part=1#p-10090-5-1
இது போன்ற இன்னும் பல இமாம்களின் கருத்துக்களை ஒன்று திரட்டினாலும் அசத்தியவாதிகள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை.
ஆக நமது கட்டுரை சற்று நீண்டு விட்டது,
இஸ்லாமிய கொள்கையில் இன்னும் அதிகமாக வாசிப்புகளும் ஆய்வுகளும் தேவை என்பது கசப்பான ஒரு உண்மை.