யார் இந்த ஸுரூரீய்யாக்கள்

-உஸ்தாத் எம் எஃப் அலீ


ஸுரூரீ (سُرُوْرِي) என்பவர்கள் முஹம்மது இப்னு நாயிஃப் ஸைனுல் ஆபிதீன் அஸ்ஸுரூர் என்பவரின் சிந்தனையில் இருப்பவர்கள். இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். 1938 இல் பிறந்தவர். இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். சஊதி அரேபியாவில் இக்வானிகளின் கிளர்ச்சியைக் கண்ட பிறகு சிரியாவிலிருந்து வெளியேறி சஊதிக்கு வந்துவிட்டார். புரைதாவில் உள்ள மஅஹத் அல்இல்மியில் ஆசிரியராக இருந்தார். இவரது மாணவர்களில் ஒருவர்தான் ஸல்மான் அல்அவ்தா. பின்பு சஊதியை விட்டும் வெளியேறி, குவைத்திற்கும் UKவுக்கும் சென்றுவிட்டார். அங்கு பல அமைப்புகளை நிறுவினார். பர்மிங்காமில் உள்ள மர்கஸ் திராசத்திஸ்ஸுன்னா அந்நபவ்வியா மற்றும் லண்டனில் உள்ள அல்முன்ததா அல்இஸ்லாமி ஆகியன இவர் நிறுவியவையே. அஸ்ஸுன்னா என்ற இதழையும் நடத்தினார். இதன் மூலமாகத் தனது சிந்தனையைப் பரப்பிக்கொண்டிருந்தார். ஷெய்க் முக்பில் (ரஹ்) கூறினார்கள்: ஸுரூரிய்யாவைப் பொறுத்தவரை, அது சிரியாவைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது ஸுரூரின் போக்கில் இயங்குவது. உண்மையில் தொடக்கத்தில், அவரது நிலை சரியானதாகவே தெரிந்தது. ஹிஸ்பீ (பிரிவினைவாதி)யின் நிலைமை இப்படித்தான் இருக்கும். அவர்கள் தங்களின் பலம் அதிகரிக்கும் வரை தங்களிடம் உள்ளதை மறைக்கிறார்கள்; வெளிப்படுத்தமாட்டார்கள். எப்போது தாங்கள் செய்கின்ற விமர்சனங்கள் தங்களைப் பாதிக்காது என்று அறிகிறார்களோ, அப்போதிருந்து தங்களிடம் உள்ளதைப் படிப்படியாக வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். (அல்மஜ்மூஉஸ்ஸமீன் மின் அக்வால் அந்நசிஹ் அல்அமீன்)

ஸுரூரின் போக்குகள் பின்வருமாறு இருந்தன: 
1. ஸலஃபீ கொள்கையின் முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகச் சொல்வதோடு, இக்வானுல் முஸ்லிமீனுடைய போக்கில் (மன்ஹஜ்) செயல்படுதல். 
2. சையித் குதுபின் வழிமுறையை உறுதிப்படுத்துதல். 
3. தவ்ஹீதின் மூன்று வகைகளை வெளிப்படையாக உறுதிப்படுத்திக்கொண்டே ஸலஃபீ அறிஞர்களால் நிராகரிக்கப்பட்ட தவ்ஹீதுல் ஹாகிமிய்யா என்பதையும் ஒரு கூடுதல் வகையாகப் பிரசாரம் செய்தல். 
4. தவ்ஹீதின் பக்கம் அழைப்புவிடுக்கின்ற தஅவா பணிகள் அனைத்திலும் அரசியல் உள்நோக்கத்தை ஒரு நிகழ்ச்சி நிரலாக அமைத்துக்கொண்டு இயங்குதல். 
5. அகீதாவைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமைக்கான அழைப்புவிடுத்தல். 
6. பொய்யான சந்தேகங்கள் மற்றும் ஆவேசமான வார்த்தைகள் மூலம் ஸலஃபீ அறிஞர்களைக் குறைத்து மதிப்பிட்டு மட்டந்தட்டுதல். 
7. இக்வானுல் முஸ்லிமூன் போன்று தங்களைப் பின்பற்றுபவர்களை ஓர் இரகசியக் குழுவாக ஒழுங்கமைத்து, அவர்களையெல்லாம் ஒரு ‘குடும்பம்’ என்று அழைத்தல். பிறகு அவர்களுக்குள் பைஅத் (உறுதிப்பிரமாணம்) வாங்குதல். உதாரணமாக, சோமாலியாவின் இத்திஹாதுல் இஸ்லாமியைச் சொல்லலாம். இவர்கள் ஸுரூர் உடைய அல்முன்ததா அமைப்பின் மூலம் வழிநடத்தப்பட்டவர்கள். 
8. பெரும் பாவத்தைச் செய்தவர்களை துரோகிகள் என்று ஸுரூர் அறிவித்தார். 
9. குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களைத் தொகுத்தளிக்கின்ற அகீதா (கொள்கை) நூல்களெல்லாம் வரட்சி நிறைந்த மொக்கை நூல்கள் என்று மிகவும் பிழையாக விமர்சித்தார். 
10. ‘தவ்ஹீது அறிஞர்களெல்லாம் ‘அடிமையின் அடிமைகளான அடிமைகளின் அடிமைகள். அவர்களின் ஆகப்பெரிய எஜமானர் ஒரு கிறிஸ்தவர். அதாவது ஜார்ஜ் புஷ்’ என்று மிக இழிவாகப் பேசினார். 
11. தவ்ஹீதைப் போதிக்கும் அறிஞர்களை ‘பொய்யர்கள், நயவஞ்சகர்கள், ஒற்றர்கள்’ என்றும் ஏசினார். 
12. ஹஸன் துராபியைப் புகழ்ந்தார். இந்தத் துராபிதான் கிறிஸ்தவத்திற்கும் யூத மதத்திற்கும் முஸ்லிம்கள் மதம் மாறுவது தவறல்ல என்றவர். காரணம், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நம்பிக்கையாளர்களாகத்தான் நாம் ஏற்க வேண்டும் என்று நம்பினார் துராபி. இப்படிப்பட்டவரை ஸுரூர் புகழ்ந்தார். 
13. ஹிஜாபை ‘ஒரு கூடாரம்’ என்று கேலி செய்த முஹம்மது அல்கஸ்ஸாலீயையும் ஸுரூர் புகழ்ந்தார்.


أحدث أقدم