யார் இந்த சூபிகள்.?ஷீயாக்களுக்கும் சூபிகளுக்கும் என்ன தொடர்பு.?

சூஃபிசம் என்ற சொல் சஃபா (தூய்மை) என்ற மூலச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் ஏனென்றால் இந்த சூஃபிச கொள்கை என்பது ஒரு மர்மமான, பழமையான இஹ்வானுஸ்ஸஃபா என்ற இயக்கத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை தீர்கமாக அறிய முடிகிறது. இஹ்வானுஸ்ஸஃபா என்ற இயக்கத்தை உருவாக்கியவர் யார் என்பதையும், எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதையும் அறியமுடியவில்லை பல வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சி செய்து இதில் தோல்வியே அடைந்துள்ளனர்.

இந்த கொள்கையின் அடிப்படை என்னவென்றால் உள்ளத்தூய்மை. அதாவது வெளிப்படையான வணக்கங்களின் மூலம் தூய்மையடைவதை விட உள்ளத்தை தூய்மை படுத்தி, அதன் மூலம் உள்ளத்தில் இருக்கும் மனக்கண்ணை திறந்தால் மட்டுமே மறைவான ஞானங்கள் வெளிப்பட்டு, அதை விளங்க முடியும் என்பதே.

உள்ளத்தை தூய்மைபடுத்தி மனக்கண் திறப்பத்தின் மூலம் மறை ஞானம் அடைவதை ஒருவரால், ஒரு சராசரி மனிதரால் தனியாக செய்ய முடியாது அதை செய்வதற்கு உதவியாக குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள் அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக அதன் சங்கிலித்தொடரில் வருபவர்கள். அவர்களால் மட்டுமே உள்ளத்தை தூய்மை படுத்தி, பக்குவப்படுத்தி மறைவான ஞானங்களை புலப்படச் செய்யமுடியும் ஆகவே அவர்களிடம் முரீது வாங்கி அவர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் சொல்வழி நடந்தால் மட்டுமே அந்த மெஞ்ஞானங்களை அடையமுடியும் என்பது தான் சூஃபியிசத்தின் அடிப்படைக் கொள்கை.

அதிலும் ஒரே அடியாக அந்த மறைஞானம் கிடைத்து விடாது அதற்கென்று படித்தரங்கள் இருக்கிறது. அந்த படித்தரங்கள் தான் ஷரியா, தரீகா ஹகீகா, மஃரிஃபா என்பன.  ஷரியா என்றால் நேரடியான அர்த்தம் சாதாரண மனிதர்கள், அந்த சாதாரண மனிதர்கள் ஒரு தரீகாவின் வழியாக ஹகீகா என்ற குர்ஆனின் மறைமுக அர்த்தம் தெரிந்து, மஃரிஃபா என்ற மறை ஞானம் அடைவதே சூஃபிசத்தில் காதிரிய தரீகா, நக்ஷ்ஷபந்தி தரீகா போன்ற பல தரீக்காகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரு இடத்திலே வந்து சங்கமிக்கும் என்பதே சூஃபிகளின் நம்பிக்கை. அதாவது வழிகள் வேறாக இருந்தாலும் வந்து சேரும் இடம் ஒன்றே என்பதுதான்.

இந்த சூஃபிச கொள்கை என்பது மிகவும் பழமையான கொள்கை நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த கொள்கை இருந்திரிக்கிறது. பெயர்கள் மாறினாலும் கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் ஒரு போன்றே இருந்து வருகிறது. ஆயினும் இது நபி (ஸல்) அவர்களின் சமுதாயமான முஸ்லிம்கள் மத்தியில் அப்பாசியர்களின் ஆட்சி காலத்திலேயே வெளிப்படையாக வெளி வர ஆரம்பித்தது.
 
தூ நூன் அல் மிஸ்ரி (796-859) என்ற எகிப்தியர் மற்றும் பயாஸித் அல் பஸ்தாமி (804-878), சஹ்ல் அல் துஸ்தரி (818-896) போன்ற ஈரான் நாட்டை சேர்ந்தவர்களால் வெளிவந்த இந்த சூஃபிச கொள்கையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர்கள் ஜூனைத் அல் பக்தாதி (835-910) , மன்ஸூர் அல் ஹல்லாஜ் (858-922 ) அபு அல் ஹஸன் அல் ஹரகானி (963-1033) இமாம் கஸ்ஸாலி (1058-1111), அஹ்மத் கஸ்ஸாலி (1061-1123) மற்றும் ஜலாலுதீன் ரூமி (1207-1273) போன்ற ஈரான் நாட்டவர்களால் இந்த கொள்கை மிகவும் பிரபலமடைந்தது.

எப்பொழுதும் இதுமாதிரியான சாத்தானிய கொள்கைகள் ஒரே அடியாக இஸ்லாத்திற்குள் நுழைந்து விடாது படிப்படியாகத்தான் ஊடுருவும் அந்த வகையில் ஜலாலுதீன் ரூமி என்பவர் தர்வேஷ் என்ற ஒரு கொள்கையை சூஃபிசத்தில் கொண்டுவந்தார் அந்த கொள்கை என்னவென்றால் ஒருவர் வேகமாக தன்னை தானே சுத்தும் பொழுது ஆத்மாவானது சுத்தக்கூடிய வேகத்தில் வெளியில் கழன்று செல்லும் அப்பொழுது தான் ஆத்மாவிற்கு அதிக சக்திகளும் மறை ஞானங்களும் தென்பட ஆரம்பிக்கும் என்பதே அந்த கொள்கை.  இப்படி இஸ்லாத்தில் சூஃபிசம் என்ற சாத்தானிய கொள்கையை ஊடுருவச்செய்தவர்கள் இவர்கள் தான். இதில் பயாஸித் பஸ்தாமி மற்றும் மன்ஸூர் அல் ஹல்லாஜ் ஆகியவர்களின் தத்தாமார்கள் ஜோராஸ்திரிய மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தவர்கள்.

ஏகத்துவத்தை, தவ்ஹீதை அது மூசா நபி, ஈஸா நபி இப்படி யார் கொண்டு வந்ததாயினும் எகிப்து, ஈரான், ஈராக் ஆகிய மூன்று நாடுகளும் அதை அழிப்பதில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

இந்த சூஃபிச கொள்கையில் நிறைய தரீக்காக்கள் இருக்கின்றது காதிரியா தரீகா, ஷாதிரியா தரீகா, நக்ஷ்ஷபந்தி தரீகா, சிஸ்தியா தரீகா இப்படி பல தரீக்காக்கள் இருக்கின்றது. ஒவ்வொரு தரீக்காவிற்கும் ஒவ்வொரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அது முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக வரும் சங்கிலித்தொடர் அதில் வேறுபாடுகளும் இருக்கிறது. எல்லா சங்கிலித்தொடரிலும் முதல் நபராக முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இரண்டாவது நபராக அலியும் இருப்பார்கள். அதன் பிறகு வரிசை மாறுபடும். இது ஏறக்குறைய ஷியாக்களின் கொள்கையாகும். அதாவது கொள்கை இங்கு ஒன்று பெயர்கள் தான் மாறுபடுகிறது. இப்படி யூதர்கள் அழகாக பிரிவுகளை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் மரணத்திற்குப்பின் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவு என்பது அரசியல் பிளவாகவே இருந்தது ஆனால் அப்துல்லாஹ் இப்ன் சபா என்ற யூதன் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவி ஏற்படுத்தியது தான் கொள்கை ரீதியான பிளவுகள். மேலும் இந்த சூஃபிச கொகையின் தரீக்காகளில் நிறைய சங்கிலித்தொடர்கள் இருக்கின்றன அதில் ஓன்று முஹம்மத் நபி (ஸல்) – அலி (ரலி) – ஹசனுல் பசரி – ஹபீபுல் அஜ்மானி (இவன் ஒரு மர்மநபர் பிறப்பு, வளர்ந்தது எங்கு என்பதற்கு கட்டுக்கதைகளைத் தவிர, ஆதாரப்பூர்வமான பதிவுகள் இல்லை. இவனின் தொழில் வட்டித்தொழில், இவன் யூதனாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) – தாவூத் தாயி (மர்மநபர்) – மஃரூப் கற்கி (கிறிஸ்தவ பின்னணியிலிருந்து வரும் நபர்) - சாரி சக்காதி – ஜூனைத் அல் பக்தாதி.
 
சூஃபிசத்தின் முக்கிய புள்ளியாக இருந்தவர் ஜூனைத் அல் பக்தாதி (835-910) இவருடைய முக்கியமான மாணவர் மன்ஸூர் அல் ஹல்லாஜ் (858-922 ) தன்னுடைய ஆசிரியரின் கொள்கையை வெளிப்படையாக மக்கள் மத்தியில் அறிவித்தவன் இந்த ஹல்லாஜ்.
 
வஹ்ததுள் உஜூத் என்பது இவனின் கொள்கை அதாவது எல்லாம் ஒன்றிலிருந்து வந்தது எல்லாம் ஒன்றிலே மீண்டும் ஒன்றுசேரும் இதன் விளக்கம் அல்லாஹ் தான் பிரிந்து அனைத்துமாக இருக்கிறான் (அல்லாஹ் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்). நான் அல்லாஹ், நீங்கள் அல்லாஹ் இருக்கின்ற அனைத்தும் அல்லாஹ். இது அனைத்தும் மீண்டும் ஓன்று சேரும் அதை ஒன்று சேரசெய்வது இந்த சுஃபிசகொள்கை. அனல் ஹக், அனல் ஹக் என்று கூறியவனும் இவன்தான் அதாவது நான்தான் சத்தியம், நான்தான் அல்லாஹ் என்பது. இவனுடைய சித்தாந்தத்தின் கொடூரம் தாங்க முடியாமல் ஆட்சியில் இருந்த அபாசியர்களே மன்ஸூர் அல் ஹல்லாஜ்ஜுக்கு மரண தண்டனை கொடுத்து கொலை செய்தார்கள். ஹல்லாஜூடைய பூர்விக மதம் ஜோராஸ்திரியநிசம்.

ஜோராஸ்திரியநிசம் என்ற மத்தில் ஈஸா நபியின் காலத்திற்கு முன்னர் ஒரு நபி வந்தாராம் அவர் பெயர் சரத்துஸ்ரா. இவர் கொண்டு வந்ததுதான் ஜோராஸ்திரியநிசம் என்ற மதம். இந்த உலகில் இரண்டு வகையான மார்க்கங்கள் மட்டுமே இருக்கிறது. அதில் ஒன்று ஓர் இறைக்கொள்கை, மற்றொன்று பலதெய்வ கோட்பாடு. இதில் ஓர் இறைக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட மார்கங்கள், இஸ்லாம், கிறித்தவம் மற்றும் யூத மதம். ஆனால் ஏக தெய்வ கொள்கைக்கு உலகிலேயே பழமையான மதமாக ஆய்வாளர்களால் கருதப்படுவது இந்த ஜோராஸ்திரியநிசம் என்ற மதம் தான்.
 
ஆனால் எப்படி ஒவ்வொரு நபிமார்கள் வந்த பின்னரும் பல தெய்வ கோட்பாடுகளை கொண்ட ஆரியர்கள் அந்த மதத்தில் ஊடுருவி பல தெய்வ வணக்கங்களை சிறிது சிறிதாக நுழைத்தார்களோ அது போல இந்த ஜோராஸ்திரிய மதத்திலும் ஆரியர்கள் ஊடுருவி மாற்றங்கள் செய்து இன்று அந்த மதத்தினரை சாத்தானை வணங்குபவர்களாக மாறச்செய்துள்ளனர். ஜோராஸ்திரியர்கள் இன்றைய காலத்தின் ஈராக்கின் குர்திஷ் இன மக்கள் என்று அறியப்படுகிறார்கள். இப்படி ஆரியர்களால் மாற்றம் செய்யப்பட்ட மதங்களே யூத மதம், கிறித்தவ மதம், ஷியா, சூஃபி மதங்கள்.
 
பலதெய்வ, ஜாதிய வேறுபாடுகளை கொண்ட கோட்பாட்டிற்க்கு மிகவும் பழமையான மதமாக கருதப்படுவது எகிப்திலிரிந்த பாரோ மன்னர்களின் பிராமிண மதம்.

இந்த ஜோராஸ்திரிய மதம் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்காவில் இருந்தது. காபாவில் 360 சிலைகைளை வைத்து வணங்கியவர்களும் இவர்கள் தான். பலதெய்வ வழிபாட்டாளர்கள் எப்பொழுதும் ஒரு கடவுள் கொள்கையில் ஊடுருவி அதை முக்கடவுள் கொள்கையாக மாற்றி பின் அதை பலதெய்வ கொள்கையாக மாற்றுவார்கள் உதாரணத்திற்கு அன்றைய காலத்தில் மக்காவில் இருந்த மக்கா காஃபிர்கள் லாத்து – தாய், உஜ்ஜா – தந்தை, மனாத் – குழந்தை போன்றவற்றை வணங்கினர். அதுபோன்று ஹிந்து மதத்தில் பிரம்மன், விஷ்ணு, சிவன். ஷியா மதத்தில் அலி, பாத்திமா, ஹுசைன். கிறிஸ்தவ மதத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போன்ற அனைத்து முக்கடவுள் கொள்கையும் ஆரியர்களால் உருவாக்கப்பட்டவையே.

அதாவது இந்த ஜோராஸ்திரிய மதத்தை சார்ந்தவர்கள் நேரடியாக சாத்தானை வணங்குகின்றனர் அதை போன்று இரகசியமாக இயங்கக்கூடிய சில ஐரோப்பிய ஆரியர்களும் சாத்தானையே வணங்குகின்றனர். அது போன்று ஈரானிய ஆரியர்களாகிய ஷியாக்களும் மறைவாக சாத்தானையே வணங்குகின்றனர். ஜோராஸ்திரிய மதத்தில் சாத்தானின் அவதாரமாக மயிலை வணங்குகின்றனர்.  இவர்களை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் சூஃபி என்ற மதம் முஸ்லிம்கள் மத்தியில் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை நிறுவுவதற்கே.
 
அது போன்று சூஃபிஸ மதத்தில் ஷைத்தானை எவ்வாறு புகழ்கின்றனர் என்பதை பாப்போம். சூஃபிகளின் மற்றொரு கொள்கை, இந்த உலகிலே உண்மையான தவ்ஹீத் யாரென்றால் அது நபி (ஸல்) அவர்களையும் விட ஷைத்தான் தான். ஏனென்றால் அல்லாஹ் ஆதம் நபிக்கு மலக்குகளையும் ஜின்களையும் சுஜூத் செய்ய சொன்னான் அனைவரும் சுஜூத் செய்தனர் ஆனால் ஷைத்தான் சுஜூத் செய்யவில்லை, அல்லாஹ்வே கூறினாலும் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் சுஜூத் செய்ய மாட்டேன் என்ற உறுதி ஷைத்தானுக்கு மட்டுமே உண்டு ஆகவே அவன் மட்டும் தான் உண்மையான தவ்ஹீத். இந்த நிகழ்சிகளை அல்லாஹ் செய்தது ஷைத்தானின் உறுதியை பரிசோதிக்கவே அந்த பரிட்சையில் ஷைத்தான் வெற்றி பெற்று விட்டான். இருந்தாலும் ஷைத்தான் அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் அல்லாஹ் மீது ஷைத்தான் கொண்டுள்ள காதலினால் தான். ஆகவே இந்த உலகில் அன்பின் பிறப்பிடத்திற்கு உரியவன் அல்லாஹ்வை விட ஷைத்தான் தான் என்பது சூஃபிஸ கொள்கை.
 
மன்ஸூர் அல் ஹல்லாஜ் கூறும் போது இந்த உலகில் சிறந்த தவ்ஹீத் நபி (ஸல்) அவர்களை விட ஷைத்தான்தான் ஏன் இன்னும் சொல்லப்போனால் அல்லாஹ்வை விட ஷைத்தான் ஒரு படி மேல் ஏனென்றால் அல்லாஹ் ஷைத்தானிடம் கோபித்த பிறகும் கூட ஷைத்தான் அல்லாஹ்விடம் கோபித்துக்கொள்ள வில்லை மேலும் அல்லாஹ் ஷைத்தானை நரகில் போடுவான் என்று ஷைத்தானுக்கு தெரிந்திரிந்தும் ஷைத்தான் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டுள்ளான் இதை வெளிப்படையாக கூறியவன் ஹல்லாஜ்.  இந்த கொள்கையை தலையில் தூக்கி கொண்டுவந்தவர் தான் அஹ்மத் கஸ்ஸாலி (1061-1123) என்பவர் அவர் கவிஞ்ஞராக இருந்தார். இந்த அஹ்மத் கஸ்ஸாலி தன்னுடைய ஒரு கவிதையில் கூறும்போது.

சினாய் மலையடிவாரத்தில் மூசா நபி ஷைத்தானை சந்தித்தாரம் அப்போது மூசா நபி ஷைத்தானிடம் கேட்டாராம் ஓ... இப்லீஸ் நீ ஏன் தோட்டத்தில் ஆதமுக்கு தலைவணங்க வில்லை என்று அப்போது இப்லீஸ் சொன்னானாம் தோட்டத்தில் ஒரு கண்டிப்பான சட்டம் இருக்கிறது அது அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் தலை வணங்கக் கூடாது. நடந்த நிகழ்வுகள் நான் வெற்றி பெறுவதற்காக வைக்கப்பட்ட ஒரு பரீட்சை, அதில் நான் மட்டுமே வெற்றி பெற்றேன் (ஜவாப் நூற் பக்ஷ்/ இப்லீஸ் தி கிரேட் ஷைத்தான் ஆங்கில பதிப்பு பக்கம் 13) அது போன்று அவர் கூறுகிறார் எவன் உண்மையான தவ்ஹீதை இப்லீசிடம் கற்றுக்கொள்ள வில்லையோ அவன் காஃபிர் என்று.
 
இந்த சூஃபிஸ கொள்கை ஈராக்கிலிருந்து ஸ்பெயின்னுக்கு ஊடுருவியது அதை செய்தவர் முஹம்மத் இப்ன் மஸ்ஸாரா (883-931) வரை வாழ்த்தவர் இவரும் ஒரு மர்மமனிதர். இவரை பின்பற்றிய இரண்டு நபர்கள் சொலமன் இப்ன் கபிரோல்-யூதர், இப்னு அரபி இவர்கள் இருவரும் முஹம்மத் இப்ன் மஸ்ஸாராவிடம் பாடங்கள் படித்துக் கொண்டு பிரிந்து சென்று விடுகின்றனர். சொலமன் இப்ன் கபிரோல் சென்ற பிறகு ஒரு புதிய கொள்கை வழிகெட்ட யூத மதத்தில் உருவாகிறது அதன் பெயர் ஜூவிஸ் கப்பாலா அதாவது ஹகீகா, மரிப்பாவை (மறை ஞானத்தை) அடிப்படையாக கொண்ட கொள்கை எப்படி முஸ்லிம்களிடத்தில் சூபிமோ அது போன்று.
 
இந்த நேரத்தில் தோரா – மூஸா நபியால் கொண்டு வந்தாக கருதப்படுகிறது, தல்மூத் என்ற புத்தகம் மூஸா நபி சினாய் மலையில் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க சென்ற போது அவரை பின்தொடர்ந்து சென்ற சில முதியவர்கள் மலையின் பாதி வரை சென்றார்களாம் அதற்கு மேல் செல்ல முடியவில்லையாம் அப்போது மூஸா நபிக்கு இறங்கிய வஹியின் தாக்கத்தில் சில வஹிகள் சில சிதறுண்டு இந்த முதியவர்கள் மீதும் வந்ததாம் இது தான் தல்மூத். ஆகிய யூத மதத்தின் இரண்டு புத்தகங்களுக்கு இடையில் புதிதாக ஒரு புத்தகம் வெளியிடப்ப்படுகிறது அது zohaar இந்த புத்தகத்தின் கரு என்னவென்றால் இசக்கியேல் என்ற தீர்கதரிக்சி ஒரு கனவு கண்டாராம் அதில் அல்லாஹ் தன் அரியணையில் இருப்பது போன்று கண்டாராம் அதன் வியாக்கியானங்களும் விளக்கங்களும் அடங்கியது தான் இந்த புத்தகம் அதில் ஆதம் நபி அவர்களை அல்லாஹ் வெளியேற்ற வில்லையாம் ஆதம் நபி தான் அல்லாஹ்வை வெளியேற்றினாராம் தற்போது நாம் வசிக்கிற பூமிதான் தோட்டமாம். அல்லாஹ் வெளியேறும்போது வெடித்து சிதருண்டு வெளிஏறினானாம் அவனை ஒன்றுபடுத்துவதற்கு தானாம் இந்த மறைவான ஞானங்கள் அனைத்தும்.
 
இப்படி ஆரம்பம் முதலே வழிகெட்ட ஷியாக்களும், யூத கபாலாக்களும், சுன்னி சூபிகளும் வேறு வேறு பெயர்களில் இருந்தாலும் கொள்கையில் ஓன்று பட்டவர்களே...
Previous Post Next Post