ஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு


ஸஜ்தா திலாவா என்பது ஓதலிற்கான ஸுஜூத் என்று பொருள்படும். ஸுஜூத் செய்வதை சிலாகித்துச் சொல்லும் வசனங்கள் வரும்போது ஸுஜூது செய்வதை இது குறிக்கிறது. குர்ஆனில் ஸுஜூதை சிலாகித்து எந்த வசனங்கள் வந்தாலும் நாம் ஸுஜூது செய்யலாம். இந்த ஸஜ்தாவை நபிகளார் காலம் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடின்றி இப்படித்தான் புரிந்துள்ளார்கள். நபியவர்கள் ஸுஜூது செய்ததாக நேரடியாக செய்திகள் உள்ள வசனங்கள் மட்டும்தான் ஸஜ்தாவுடைய வசனங்கள் என்று யாரும் புரிந்துகொள்ளவில்லை. இந்த ஸஜ்தாவிற்கு வுழூ தேவையில்லை. தக்பீர் இல்லை. ஸலாம் சொல்ல வேண்டியதில்லை. அதே நேரம் தொழுகையில் இந்த ஸஜ்தாவை செய்யும்போதும் எழும்பும் பொழுதும் தக்பீர் சொல்லலாம் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

 البخاري 785 – عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ «يُصَلِّي بِهِمْ، فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ، وَرَفَعَ»، فَإِذَا انْصَرَفَ، قَالَ: إِنِّي لَأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூ ஹுரைரா(ரலி) தொழுகை நடத்திவிட்டு ‘நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டினேன்’ என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஸலமா ஆதாரம்:புகாரி-785

ஒரு ஸஜ்தா மாத்திரமே. தொழுகையின் போது ஸுஜூதில் ஓதும் எந்த துஆக்களையும் இந்த ஸுஜூதின் போது ஓதிக்கொள்ளலாமஇந்த ஸஜ்தாவிற்கென் வந்திருக்கும் துஆக்களை மாத்திரம்தான் ஓத வேண்டும் என்பது தவறு. காரணம் நபியவர்கள் ஸுஜூதில் குர்ஆன் ஓதுவதை மாத்திரமே தடை செய்துள்ளார்கள் மற்ற எந்த அவ்றாதுகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் தடையில்லை.

      எந்த வசனங்கள் ஸுஜூதை சிலாகத்துச் சொல்லும் வசனங்கள் என்ற கருத்து முரண்பாடு நபித்தோழர்கள் காலம் தொட்டே இருந்து வருகிறது. நபியவர்கள் எந்த வசனங்களுக்கு ஸுஜூது செய்ததாக நேரடி ஆதாரம் இருக்கின்றன எந்த வசனங்களுக்கு அவ்வாறு இல்லை என்பதுவோ அல்லது இது அல்லாத வசனங்களுக்கு ஸுஜூத் செய்யக் கூடாது என்பதுவோ அதற்குக் காரணமாக இருக்கவில்லை. மாற்றமாக ஸஜ்தா பற்றிய ஆர்வமூட்டல வந்ததற்காக ஸுஜூது செய்ய வேண்டிய வசனங்கள் எவை என்று முடிவெடுப்பதே இதற்குக் காரணமாக அமைந்தது.

எல்லா வசனத்திற்கும் ஸஜ்தா

பொதுவாக குர்ஆனில் எந்த வசனத்தை ஓதினாலும் ஸஜ்தா செய்யலாம்.

أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا . مريم: 58

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும்இ நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும்இ இப்ராஹீம்இ இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர் வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுதவர்களாகஇ ஸஜ்தாவில் விழுவார்கள். .19:58

அல்லாஹ்வுடைய வசனங்கள் ஓதப்படும் போது உணர்ச்சி பெற்று உருக்கமான மனோ நிலையில் ஸுஜூது செய்வது நல்லோரது பண்பு என்று அல்லாஹ் சிலாகித்துச் சொல்கிறான்.அல்குர்ஆனின் எந்த வசனத்திற்கு ஸஜ்தா செய்யலாம் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக இருக்கிறது. ஆனால் ஸஜ்தாவடைய வசனங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட வசனங்களில் மாத்திரம்தான் தொழுகையிலும் ஸுஜூது செய்யலாம். ஸஜ்தாவுடைய வசனங்களுக்குள் வராதவைகளில் தொழுகையில் ஸுஜூது செய்ய முடியாது.

ஸஜ்தாவை சிலாகித்துச் சொல்லும் வசனங்களில் ஸஜ்தா

صحيح مسلم ـ 254 – عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِى يَقُولُ يَا وَيْلَهُ – وَفِى رِوَايَةِ أَبِى كُرَيْبٍ يَا وَيْلِى – أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِىَ النَّارُ ».

‘ஆதமின் மைந்தன் (மனிதன்) ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே ‘ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்குச் சுவர்க்கம். ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) ஸஜ்தா செய்யும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நான் மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்’ என்று கூறியபடி விலகிச் செல்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).ஆதாரம்:முஸ்லிம்-254

صحيح البخاري 1079 – عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ السُّورَةَ الَّتِي فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ، وَنَسْجُدُ مَعَهُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ»

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா வரும் ஸூரத்தை ஓதும் போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். புகாரி: 1079.

‘ஸுஜூத் உள்ள ஸூராக்களில்’ நபியவர்கள் ஸுஜூத் செய்திருக்கிறார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. சில ஹதீஸ்களில் நபியவர்கள் ஸுஜூத் செய்த சில ஸூராக்களும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அளவுகோல் அந்த ஸூராவில் ஸுஜூது சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பகிரங்கமாக நபித் தோழர்களுக்கு மத்தியில் ஸூரா நஹ்லை ஓதி அதன் ஸஜ்தா வசனத்தில் ஸுஜூது செய்தார்கள் நபித் தோழர்களும் ஸுஜூ செய்துள்ளார்கள்.

صحيح البخاري1077 – عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ، فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ حَتَّى إِذَا كَانَتِ الجُمُعَةُ القَابِلَةُ قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ، فَقَدْ أَصَابَ وَمَنْ لَمْ يَسْجُدْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ وَلَمْ يَسْجُدْ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ» وَزَادَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ»

ரபீஆ இப்னு அப்தில்லா அறிவித்தார். உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள். ஆதாரம்:புகாரி-1077

. எனவே அளவுகோல் அந்த ஸூராவில் ஸுஜூது சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதே இல்லையெனில் சில தவறான முடிவுகளை நாம் பெற வேண்டி வரும். அதேவேளை வெறுமனே ஸஜ்தா என்ற சொல் இடம் பெறுவதால் அதனை ஸஜ்தா என்று சொல்ல முடியாது. இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது.

صحيح البخاري3422 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «لَيْسَ ص مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»

‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் உள்ள இறை வசனத்திற்கு சுஜூது செய்வது, அழுத்தம் கொடுக்கப்பட்ட சுஜூதுகளில் ஒன்றல்ல. ஆயினும்இ நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (திருக்குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி). புகாரி: 3422.

அழுத்முள்ள சுஜூதுகளில் ஒன்றல்ல. என்ற வசனம் ஸுஜூத் என்ற பொருள்படும் சொல் இடம் பெறும் வசனமெல்லாம் ஸஜ்தாவுடைய வசனமல்ல என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. குர்ஆனின் எந்த வசனத்தை ஓதும் போதும் உணர்ச்சி பெற்று ஸஜ்தா செய்வதும் ஸஜ்தா அழுத்தமுள்ள இடங்களில் ஸஜ்தா செய்வதும் என இரு வித நிலைகளை நபியவர்களின் செயற்பாடுகளில் காண முடிகிறது. ஷாபிஈ மாலிக் மத்ஹபினருக்கும் ஹனபி மத்ஹபினருக்கும் இந்த ஸாத் உடைய வசனத்தில்தான் கருத்து முரண்பாடு வந்தது. ஹனபிகள் இதை ஸஜ்தாவுடைய வசனம் என்றார்கள் ஷாபிஈயாக்கள் இது நன்றிக்காக ஸுஜூத் செய்த இடம் என்றனர். அவர்களது முரண்பாட்டில் ஒரு ஞாயம் இருப்பதை உணரலாம். ஆனால் ஷாபிஈ தரப்பினர் அந்த வசனத்தில் ஒருவர் ஸுஜூது செய்வதை மறுக்கவில்லை. ஸஜ்தா திலாவா என்ற வகைக்குள் வராது என்றே சொன்னார்கள். அதாவது தொழுகையில் இந்த வசனம் ஓதப்பட்டால் ஸுஜூது செய்யமாட்டார்கள்.

ஸஜ்தாவுடைய வசனங்கள்.

நம்மை ஸுஜூத் செய்யத்; தூண்டும் அழுத்தம் இல்லாத வசனங்கள் என பின்வரும் வசனங்கள் போன்றவைகளைக் குறிப்பிடலாம். 3:113 – 7:12- 15:30- 15:33- 7:120 – 15:98 -16:48 17:61- 20:70 – 25:60 – 26:46- 38:73- 38:75 – 55:6 – 68:43 – 76:26 மலக்குமார்கள் ஆதமிற்குச் செய்த ஸுஜூ பற்றி பேசக் கூடிய வசனங்கள். யூத கிறிஸ்துவர்களில் நல்லவர்களின் ஸுஜூது பற்றி வரக் கூடிய வசனங்கள்.இவ்வாறு ஒரு சொற்ப வசனங்களே காணப்படுகின்றன. இது போன்ற வசனங்கள் ஸுஜூதுடைய அழுத்தம் உள்ள வசனங்களல்ல அந்த வசனங்களைப் படிக்கும் போதே நீங்கள் புரிந்துகொள்ளலாம். இது அல்லாமல் ஸுஜூது செய்யத் தூண்டும் அளவில் உள்ள வசனங்கள் மொத்தம் 15 என்பதை நாமே இளகுவாகக் காணலாம். அந்த 15 வசனங்களும் பின்வருமாறு:
1-7:206 
2-13:15 
3-16:50 
4-17:109 
5-19:58 
6-22:18 
7-22:77 
8-25:60 
9-27:26 
10-32:15 
11-38:24 
12-41:38 
13-53:62 
14-84:21 
15-96:19

ஸஜ்தாவுடைய வசனங்களில் உடன்பாடும் முரண்பாடும்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் 10 வசனங்களில் எந்த ஒரு முரண்பாடும் இருந்ததில்லை. 7 13 16 17 19 22:18 25 27 32 41 என்ற இலக்கத்திலுள்ள அத்தியாயங்களே அவைகள். ஸூரா ஸாத், ஸூரா ஹஜ்ஜில் இரண்டாவது ஸஜ்தா வரும் 77ம் வசனம் ஸூரா இன்ஷிகாக் ஸூரா நஜ்ம் ஸூரா அலக். என்ற இந்த 5 இடங்களில் அறிஞர்களுக்கு மத்தியில் இவைகள் ஸஜ்தாவுடைய வசனங்களா என்பதில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இறைவனுக்க ஸுஜூத் செய்யுங்கள் அல்லது காபிர்கள் ஸுஜூத் செய்யமாட்டார்கள என்று கட்டளை வடிவில் வந்த வசனங்கள்; ஸுஜூதை சிலாகித்துச் சொல்லும் வசனங்களல்ல பொதுவாக இறைவனுக்கு ஸுஜூது செய்பவனாக மனிதன் இருக்க வேண்டும் என்றே அந்த வசனங்கள் சொல்கின்றன என சில அறிஞர்கள் புரிந்து கொண்டதனால் அந்த வசனங்களின் போது ஸுஜூது செய்யத் தேவையில்லை என்று முரண்பட்டனர். மேற் கூறப்பட்ட 5 வசனங்களும் அந்த வடிவில் அமைந்தனவே. ஆனால் இந்த முரண்பாடு ஏற்கத்தக்கதல்ல.

ஸூரா நஜ்ம்:

صحيح البخاري 1067 – عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ‘ قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ – فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا ‘، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.  புகாரி: 1067.

صحيح البخاري 1071 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ بِالنَّجْمِ، وَسَجَدَ مَعَهُ المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ وَالجِنُّ وَالإِنْسُ»

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர். புகாரி: 1071.

ஸூரா இன்ஷிகாக்:

صحيح البخاري 1074 – عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ بِهَا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ أَلَمْ أَرَكَ تَسْجُدُ؟ قَالَ: «لَوْ لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ لَمْ أَسْجُدْ»

அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேனே என்றேன். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் ஸஜ்தாச் செய்திருக்க மாட்டேன்’ என்று விடையளித்தார்கள். . புகாரி: 1074.

صحيح البخاري 1078 -عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ»

அபூ ராபிவு அறிவித்தார். நான் அபூ ஹுரைரா(ரலி) உடன் இஷாத் தொழுதேன். அவர்கள் இதஸ்ஸமாவுன் ஷக்கத் என்ற அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். இது என்ன? என்று கேட்டேன். அதற்கு ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இந்த வசனத்திற்காக நான் ஸஜ்தாச் செய்துள்ளேன்.அவரை சந்திக்கும்  நான் செய்து கொண்டே இருப்பேன்’ என்று அபூ ஹுரைரா(ரலி) விடையளித்தார்கள். புகாரி: 1078.

ஸூரா அலக்:

صحيح مسلم ـ 1329 – عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَجَدْنَا مَعَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فِى (إِذَا السَّمَاءُ انْشَقَّتْ) وَ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ

அபுஹுiரா அறவிவத்தார். நாம் நபியவர்களுடன் இதஸ்ஸமாஉன் ஷக்கத் என ஆரம்பிக்கம் ஸூராவிலும் இக்ரஃ பிஸ்மி என ஆரம்பிக்கும் ஸூராவிலும் ஸஜ்தா செய்தோம். ஆதாரம் முஸ்லிம்:1329

ஸூரா ஸாத்:

صحيح البخاري 4807 – عَنِ العَوَّامِ، قَالَ: سَأَلْتُ مُجَاهِدًا، عَنْ سَجْدَةٍ فِي ص، فَقَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ: مِنْ أَيْنَ سَجَدْتَ؟ فَقَالَ: أَوَمَا تَقْرَأُ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ}. {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} ஜالأنعام: 90ஸ «فَكَانَ دَاوُدُ مِمَّنْ أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْتَدِيَ بِهِ، فَسَجَدَهَا دَاوُدُ عَلَيْهِ السَّلاَمُ، فَسَجَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

. அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார். நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம் ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார் ‘மேலும் இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்’ என்று தொடங்கி ‘(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்…’ என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு ‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே (நபி தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள். புகாரி: 4807

صحيح البخاري3422 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «لَيْسَ ص مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»

‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் உள்ள இறை வசனத்திற்கு சுஜூது செய்வது அழுத்தம் கொடுக்கப்பட்ட சுஜூதுகளில் ஒன்றல்ல. ஆயினும் நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி). புகாரி: 3422.

سنن النسائي 957 – ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي ص وَقَالَ: «سَجَدَهَا دَاوُدُ تَوْبَةً، وَنَسْجُدُهَا شُكْرًا»

இப்னு அப்பாஸ் அறிவித்தார் நபியவர்கள் ஸாத் ஸூராவில் ஸஜ்தா செய்துவிட்டு ‘நபி தாவூத் பாவமன்னிப்பிற்காக இந்த ஸுஜூதை செய்தார். நாம் நன்றி செலுத்து முகமாக இந்த ஸுஜூதை செய்கிறோம்’

நபியவர்கள் இதனை நன்றிக்காகச் செய்தார்கள். இது ஸஜ்தா திலாவாவில் சேராது என ஷாபிஈயாக்கள் சொல்வதற்கு இதுவே காரணம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இந்த இடத்தில் ஸுஜூது செய்யமாட்டார்கள்(அப்துர் ரஸ்ஸாக்-5873)

நபியவர்கள் ஸுஜூது செய்ததனால் நாமும் ஸுஜூது செய்வோம் ஆனால் இது ஸஜ்தா திலாவாவில் அடங்குமா என்ற கருத்து முரண்பாடு வலுவானது.

ஸூரா ஹஜ்:

இந்த ஸூராவின் 18வது வசனத்தை ஒதும் எவரும் ஸுஜூது சிலாகித்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காண முடியும். அதனால் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் யாரும் கருத்து முரண்பாடுகொள்ளவில்லை. ஆனால் இந்த ஸூராவின் 77வது வசனத்தில் கட்டளை வடிவில் வரும் வசனத்தில் ஸுஜூது செய்வதில் கருத்து முரண்பாடு உள்ளது. இதில் நபியவர்கள் ஸுஜூது செய்துள்ளதாக எந்த ஸஹீஹான அறிவிப்பும் இல்லை. ஆனால் நபித் தோழர்கள் காலம் தொடக்கம் இந்த வசனத்தில் ஸுஜூது செய்வது இருந்து வருவது நபியவர்கள் இந்த வசனத்தில் ஸுஜூது செய்ய வழிகாட்டிள்ளார்கள் என்பதற்கான ஆதாரமாகும்.

موطأ مالك 699 – مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ؛ أَنَّهُ قَالَ: رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، يَسْجُدُ فِي سُورَةِ الْحَجِّ، سَجْدَتَيْنِ

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸூரா ஹஜ்ஜில் 2 ஸுஜூதுகள் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு தீனார். ஆதாரம்: முவத்தா-699

مصنف عبد الرزاق الصنعاني 5894 – عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِسَجْدَتَيْنِ»

இரண்டு ஸுஜூதுகளைக் கொண்டு ஸூரதுல் ஹஜ் சிறப்புப்படுத்தப்பட்டுள்ளது என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அப்துர் ரஸ்ஸாக்-5894

இந்த செய்தி வடிவத்தில் நபித் தோழர் இப்னு அப்பாஸுடைய வார்த்தையாக இருந்தாலும் இது நபிகளாரிடமிருந்து பெற்ற செய்தியே. இவ்வகையான செய்திகளை ‘பீ ஹுக்மில் மர்பூஃ’ என ஹதீஸ் கலையில் வழங்கவார்கள். இதில் இப்னு அப்பாஸுடைய இஜ்திஹாதிற்கு வாய்ப்பு இல்லை.

மேற் கூறப்பட்ட ஆதாரங்களிருந்து 15 வசனங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்ட 5 வசனங்களிலும் ஸுஜூது செய்வதே சரியானதாகும். இவைகளில் 4 வசனங்கள் ஸஜ்தா திலாவாவில் அடங்கும் ஸூரா ஸாது ஸஜ்தா திலாவாவில் அடங்குமா என்பதில் கருத்து முரண்பாடு இருந்தாலும் அதை ஓதி பல சந்தர்ப்பங்ளில் நபியவர்கள் ஸுஜூது செய்துள்ளதால் ஸஜ்தா திலாவாவில் அடங்கும் என்பதே சரியானது.

சுருக்கம்:

குர்ஆனில் எந்த வசனங்களை ஓதி உணர்வு பெற்றாலும் நாம் ஸுஜூது செய்யலாம். ஸஜ்தா சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ள வசனங்களுக்காக ஸஜ்தா செய்வதைதே ஸஜ்தாதிலாவா என்ற வணக்கம். வெறுமனே ஸஜ்தா எனும் சொல் இடம் பெறுவது அதனை ஸஜ்தாவுடைய வசனமாக்கிவிடாது. அதில் ஸஜ்தா சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான 15 வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அவைகளில் 10 வசனங்கள் நபிகளார் காலம் தொடக்கம் கருத்து முரண்பாடின்றி ஸஜ்தா வசனங்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள். 5வசனங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டன. அவைகளில் 4கு வசனங்கள் ஸஜ்தா வசனங்கள் என்பதே ஆதாரங்கள் மூலம் தௌவாகின்றன. அதில் 5வது ஸூராவான ஸாதில் நபியவர்கள் நன்றிக்காக ஸுஜூ செய்தார்கள். என்பதனால் சில அறிஞர்கள் அதனை ஸஜ்தா திலாவாவில் சேர்க்கவில்லை. நபியவர்கள் அந்த ஸூராவை ஓதிய பல சந்தர்ப்பங்களில் ஸுஜூது செய்துள்ளதால் அதுவும் ஸஜ்தா திலாவாவில் அடங்கும் என்பதே சரியானது. அல்லாஹ் அறிந்த இந்த ஸுன்னாவை அமுல்ப்படுத்தி அவனை தூய்மையாக சிரம் பணிந்த மக்களில் எம்மை ஆக்குவானாக.
أحدث أقدم