ஆக்கம்: முஜாஹித் இப்னு ரஸீன்
அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவையும் மட்டும் அடிப்டையாகக் கொண்டுள்ள தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகேடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது எதுவெனில் குறிப்பிட்ட ஓர் அல்குர்ஆன் வசனத்தை, ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தை விளங்கி ஏனைய ஹதீஸ்களையும் அல்குர்ஆன் வசனங்களையும் முறையாக விளங்காமல் அவற்றை அக்கருத்துக்குக் கிளைகளாக ஆக்கி விளங்க முற்பட்டமைதான் என்பதை இஸ்லாமிய வரலாற்றை ஆராயும் போது அறியமுடிகின்றது. ‘அமீருக்கு பைஅத் செய்வதே இஸ்லாத்தின் அடிப்படை, பைஅத் செய்யாதவன் முஸ்லிம் அல்ல’ என்ற வழிகெட்ட கொள்கையும் இந்த அடிப்படையிலேயே தோற்றம் பெற்றது .
صحيح مسلم 4899 – جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ حِينَ كَانَ مِنْ أَمْرِ الْحَرَّةِ مَا كَانَ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ فَقَالَ اطْرَحُوا لأَبِى عَبْدِ الرَّحْمَنِ وِسَادَةً فَقَالَ إِنِّى لَمْ آتِكَ لأَجْلِسَ أَتَيْتُكَ لأُحَدِّثَكَ حَدِيثًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَقِىَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ لاَ حُجَّةَ لَهُ وَمَنْ مَاتَ وَلَيْسَ فِى عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً
யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லாமல் மரணிக்கின்றாறோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4899
இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்றும், எனவே இந்த ஹதீஸ் எல்லாக்காலத்தையும் பைஅத்தின்றி ஒருவர் முஸ்லிமாகவே முடியாது என்றும் சிலர் வாதிடுவதைக் காண்கிறோம். இது மேலுள்ள குறிப்பிட்ட ஒரு ஹதீஸை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட தவறான விளக்கமாகும். இது பற்றிய ஏனைய ஹதீஸ்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த தவறான முடிவு பெறப்பட்டிருக்காது.
صحيح مسلم – 282 – عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ يُحَدِّثُ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « أَتَانِى جِبْرِيلُ – عَلَيْهِ السَّلاَمُ – فَبَشَّرَنِى أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ». قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ. قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ
‘உமது உம்மத்திலே யார் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் மரணிக்கிறாறோ அவர் சுவனம் நுழைந்தார். என ஜிப்ரீல் எனக்கு நன்மாராயம் கூறினார்.’ என்று நபியவர்கள் கூறினார்கள் ‘அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா’ எனக் கேட்டேன். ‘ஆம் அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரழி)
ஆதாரம்: முஸ்லிம் 282
صحيح البخاري – 25 – عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الْإِسْلَامِ وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ
மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 25
புஹாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் வருகின்ற மேல் குறிப்பிடப்பட்ட இரு ஹதீஸ்களும் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்‘ என்ற கலிமாவை கூறியவர் சுவனம் நுழைந்து விடுவார் என்பதைக் கூறுகின்றன. இன்னும் சில ஹதீஸ்களில் ”லாஇலாஹ இல்லல்லாஹ்’ (என்றகலிமா)வை மட்டும் ஒருவர் கூறி நல்லமல்கள் எதுவும் செய்யாமலிருந்தாலும் சரியே’ என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவை போன்ற ஏராளமான ஹதீஸ்கள் வருகின்றன. இந்த அனைத்து ஹதீஸ்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற வார்த்தையில் ஒருவர் உறுதியாகவிருந்து நல்லறங்கள் ஏதும் அவர் செய்யாதிருந்து அதன் காரணமாக அவர் நரகம் நுழைந்தாலும் அவருக்கு நரக விடுதலையிருக்கிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் இதை அவர்கள் ஏற்கமறுப்பர். காரணம் ‘பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார்’ என்ற ஹதீஸுக்குக் கொடுக்கின்ற அதே அழுத்தத்தை மற்றைய ஹதீஸ்களுக்கும் அல்குர்ஆன் வசனங்களுக்கும் அவர்கள் கொடுக்காமலிருந்தமையும் குறிப்பிட்ட ஓரிரு ஹதீஸ்களை மாத்திரம் அவர்கள் தமக்கு அடிப்படையாகக் கொண்டமையுமே. ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற வார்த்தையைச் சொன்னவருக்கு நரக விடுதலையுண்டு என்று நேரடியான ஹதீஸ்கள் வந்தாலும் பைஅத் பற்றிய குறிப்பிட்ட ஓரு ஹதீஸில் அவர்கள் தமது அடிப்படையை அமைத்து விட்டதனால் இந்த ஹதீஸ்களுக்கு அவர்கள் மாற்று விளக்கம் சொல்லி தமது தவறான கொள்கையை நிருவ முற்படுகின்றனர்.
வரலாறு நெடுகிலும் வழிகேடுகள் தோன்றியமைக்கு ஹதீஸ்களை விளங்குவதில் காட்டிய பாரபட்சமே அடிப்படைக் காரணம் என்பதை நீங்கள் காணலாம்.
உதாரணத்திற்கு ஓரிரு செய்திகளைப் பாருங்கள். மூஸா (அலை) அவர்கள் நபியாக வந்த போது அப்போதைய மக்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்.
وَلَقَدْ جَاءَكُمْ يُوسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنَاتِ فَمَا زِلْتُمْ فِي شَكٍّ مِمَّا جَاءَكُمْ بِهِ حَتَّى إِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَبْعَثَ اللَّهُ مِنْ بَعْدِهِ رَسُولًا كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُرْتَابٌ غافر : 34
முன்னர் யூஸுப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் ‘இவருக்குப்பின் எந்த தூதரையும் அல்லாஹ் அனுப்பமாட்டான்’ எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித்தான் வழிகெடுக்கின்றான். (அல் முஃமின்: 34)
இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து ‘இனி நபிமார்கள் வரமாட்டார்கள் என்று சொல்வது தவறு’ என்று காதியானிகள் கூறினார்கள். இதுவும் முறையற்ற விளக்கத்தால் விளைந்த தவறான முடிவாகும். அப்படியாயின் சரியான விளக்கம் எதுவென்று தேடுவோமானால் இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவிலிருந்து ஒன்று சேர்க்க வேண்டும். இவற்றுள் எதையும் அடிப்படையாக ஆக்கிவிடாமல் ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றினைத்து மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தையும் கீழே வரும்
صحيح البخاري 3455 – سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي…………..
. எனக்குப்பின்னால் எந்த நபியும் வரமாட்டார்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : புஹாரி 3455
என்ற ஹதீஸையும் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் காதியானிக் கொள்கை உருவாகியிருக்காது.
இன்னுமொன்றை உதாரணத்தைப் பாருங்கள்:
அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு வர்ணிக்கின்றான்.
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ الحديد : 3
அவனே முதலானவன் முடிவானவன் வெளிப்படையானவன் அந்தரங்கமானவன் ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்
(அல் ஹதீத் : 03)
மற்றோரிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் .وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى الأنفال : 17
நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். (அல் அன்பால் : 17)
இவ்விரு வசனத்தையும் அடிப்படையாக வைத்து சிலர் எல்லாமே அல்லாஹ்தான் என்ற தவறான முடிவுக்கு வந்தார்கள். இக்கொள்கைக்கு முரண்படும் சூறத்துல் இஹ்லாஸ் போன்ற ஆதாரங்களையும் ஏனைய ஆதாரங்களையும் நாம் அவர்களிடம் முன்வைத்தாலும் அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள் அவற்றுக்கு வலிந்துரை செய்து மாற்று விளக்கம் கொடுக்க விளைவார்கள். குறிப்பிட்ட அவ்விரு வசனங்களை மட்டும் தமக்கு அடிப்படையாகக் கொண்டதுதான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாகும்.
வழிகேடுகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு சொல்லிக்காட்டுகின்றான். هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ آل عمران : 7
(முஹம்மதே) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தரும் வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும் அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்…………’ (ஆலு இம்ரான் : 17)
அல்குர்ஆன் அஸ்ஸுன்னவைப் பின்பற்றுவோரிடத்தில் வழி கேடுகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை இந்த வசனத்தில் தெளிவாகவே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
ஆகவே குறிப்பிட்ட சில வசனங்களை அடிப்படையாக வைத்து உருவாகிய எந்தப் பகுதியினராகவிருந்தாலும் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாகிய அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும்தான் அவர்களுக்கு இனிப்பாகவுள்ளதையும் விருப்பமாகவுள்ளதையும் காணலாம்.
ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்ற கொள்கையை உடையவர்களுக்கு ‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்’. என்ற ஹதீஸ் இனிப்பது போன்று லாஇலாஹ இல்லல்லாஹ்’ (என்றகலிமா)வைச் சொன்னவர் சுவனம் நுழைந்தார்’ என்ற ஹதீஸ் இனிப்பதில்லை.
وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ (31) مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ الروم : 31 ، 32
தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணைவைப்போரில் ஆகிவிடாதீர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர். என்ற வசனம் அவர்களுக்கு விருப்பமாக இருப்பதைப்போல
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ النحل : 36 ‘அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று (எடுத்துரைக்க) ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (அந்நஹ்ல் : 36) என்ற வசனம் அவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை.
அதனால்தான் பித்அத்வாதிகள் சிலர் சில குர்ஆன் வசனங்களைப் பார்த்து ‘இவை வராமலிருந்திருக்கக் கூடாதா’ என்றெண்ணுவர். ஆகவே வழிகேடுகள் தோன்றியதற்கான அடிப்டை எதுவெனில் குர்ஆன் ஹதீஸ் என்று கூறிக்கொண்டு சில ஹதீஸ்களை அடிப்படைகளாக்கி மற்றைய ஹதீஸ்களையெல்லாம் இரண்டாம் தரமாக்குவதுதான் என்பதை விளங்கலாம். இத்தகைய வழி தவறிய கொள்கைகளிலிருப்போர் யாரும் ஹதீஸ்களை இரண்டாம் தரமாகக் கருத நினைப்பதில்லையென்றாலும் ஒரு தலைப்பட்சமான அவர்களின் பார்வையின் காரணமாக அவர்களையறியாமலேயே இவ்வாறான சிந்தனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றனர் என்பதுவே இங்கு நடைபெறுகிறது எனலாம்.
ஒரு தலைவருக்கு பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் ஜாஹிலிய்ய (அறியாமைக் கால) மரணத்தைத் தழுவியவராவார் என்ற கொள்கையை உடைய ஜமாஅத்துல் முஸ்லிமீன் என தங்களைக் கூறிக்கொள்ளும் சகோதரர்கள் நாம் மேற்சொன்ன அடிப்படையில்தான் தமது தவறான கொள்கையைக் கட்டியெழுப்பினார்கள் என்பதை இன்னும் சற்று ஆழமாக அறிந்து கொள்வோம்.
‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.’ ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமாயின் அவர் பைஅத் (உடன்படிக்கை) செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதன் பின்னால் அவருக்கிருக்கும் கடமைகளுள் ஒன்றைப் பற்றியே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பதை எளிதாய் விளங்கலாம். ஆனால் இந்த ஹதீஸ் இவர்களுக்கு அடிப்படையாகிவிட்டதனால் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டுமெனில் அதற்கு பைஅத்துத்தான் அடிப்படை என்பதில் உறுதியாகி விட்டனர். அதனால் இதை விட தெளிவாக வரும் பல ஹதீஸ்களையும் இவர்கள் ஏற்க மறுக்கின்றனர். உள்ளத்தில் கடுகளவு ஈமானிருந்து நற்காரியங்கள் எதையும் செய்யாதிருந்தவர்களுக்கும் நரகவிடுதலையுண்டு. எனவே ஒருவர் சுவனம் செல்ல அடிப்படை ஈமான் மட்டுமே தவிர பைஅத் அல்ல என்பதை கீழ்வருகின்ற நீண்ட ஹதீஸிலிருந்து தெளிவாக அறியலாம்.
صحيح مسلم – 472…….. لإِخْوَانِهِمُ الَّذِينَ فِى النَّار يَقُولُونَ رَبَّنَا كَانُوا يَصُومُونَ مَعَنَا وَيُصَلُّونَ وَيَحُجُّونَ. فَيُقَالُ لَهُمْ أَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ. فَتُحَرَّمُ صُوَرُهُمْ عَلَى النَّارِ فَيُخْرِجُونَ خَلْقًا كَثيرًا قَدْ أَخَذَتِ النَّارُ إِلَى نِصْفِ سَاقَيْهِ وَإِلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَقُولُونَ رَبَّنَا مَا بَقِىَ فِيهَا أَحَدٌ مِمَّنْ أَمَرْتَنَا بِهِ. فَيَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا أَحَدًا مِمَّنْ أَمَرْتَنَا. ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا مِمَّنْ أَمَرْتَنَا أَحَدًا. ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِى قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ نَذَرْ فِيهَا خَيْرًا ». وَكَانَ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ يَقُولُ إِنْ لَمْ تُصَدِّقُونِى بِهَذَا الْحَدِيثِ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا) « فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَفَعَتِ الْمَلاَئِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلاَّ أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ………
‘…………..நரகிலிருக்கும் தமது சகோதரர்களுக்காக அவர்கள் அல்லாஹ்விடம் ‘எங்களின் இரட்சகனே அவர்கள் எங்களோடு நோன்பு நோற்றார்கள், தொழுதார்கள், ஹஜ் செய்தார்கள் என்று கூறி மன்றாடுவார்கள். (அப்போது) ‘நீங்கள் அறிந்தவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்படும். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். அவர்களில் கரண்டைக் காலின் அரைவாசி வரைக்கும் நரகம் தீண்டிவர்களும் முழங்கால் வரை நரகம் தீண்டியவர்களும் இருப்பார்கள். (பின்னர்) ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். அப்போது அல்லாஹ் ‘யாருடைய உள்ளத்தில் ஒரு தீனார் அளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். அதன் பின்னர் ‘யாருடைய உள்ளத்தில் அரை தீனார் அளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள். ‘யாருடைய உள்ளத்தில் அணுவளவேனும் நன்மையுள்ளதோ அவனையும் (நரகிலிருந்து) மீட்டெடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். அதிகமானோரை நரகிலிருந்து அவர்கள் வெளியேற்றுவார்கள். பின்னர் ‘எங்களின் இரட்சகனே நீ ஏவியவர்களில் ஒருவரேனும் (நரகில்) மிஞ்சவில்லை’ என (அந்த நல்லடியார்கள்) கூறுவார்கள்……………………………… அப்போது அல்லாஹ் ‘மலக்குகள் சிபாரிசு செய்து விட்டார்கள். நபிமார்கள் சிபாரிசு செய்து விட்டார்கள். முஃமின்களும் சிபாரிசு செய்து விட்டார்கள். கருணையாளர்களில் மிகப் பொரும் கருணையாளன் மட்டுமே மிஞ்சியுள்ளான் என்று கூறி நரகிலிருந்து ஒரு பிடிபிடித்து ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளியெடுப்பான் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள்…………….’
அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 472
‘யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லையோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.’ என்ற ஹதீஸில் ‘அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்’ என்று வரும் வாசகம் எதைக் குறிக்கின்றது? அதன் சரியான விளக்கம் என்ன? என்ற கேள்வியெழுகிறது. எனவே மனித கருத்துக்களையெல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு மற்றைய ஹதீஸ்களையும் அதனோடு ஒன்று சேர்த்து சரியான விளக்கத்தைப் பெற முயற்சிக்கவேண்டும்.
ஆகவே மேலே நாம் பார்த்த ஸஹீஹ் முஸ்லிமில் வரும் நீண்ட ஹதீஸில் இடம் பெரும் நரகிலிருந்து ஒரு பிடிபிடித்து ஒரு கூட்டத்தை அல்லாஹ் வெளியெடுப்பான் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள்…………….’ எனும் வாசகத்திலிருந்து இந்த சர்ச்சைக்கு நமக்கு மிகத்தெளிவான விளக்கம் கிடைக்கின்றது. அது யாதெனில் உள்ளத்தில் கடுகளவு ஈமானுள்ளவரென்றாலும் அவரும் நரகிலிருந்து வெளியேற்றப்படுவார்.; முஸ்னத் அஹ்மதில் வரும் மற்றோர் அறிவிப்பில் அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் தௌஹீதைத் தவிர என்று மிகத்தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே பைஅத்துச் செய்யாமலிருப்பது ஒரு பாவமாயினும் அதனால் ஒருவர் நிரந்தர நரகவாதியாகிவிடப் போவதில்லை. ஆகவே பைஅத்துச் செய்யாதவர் நிரந்தர நரகவாதியில்லை என்பதை விளங்க இந்த ஸஹீஹான ஹதீஸ் தாரளமாகப் போதுமெனலாம்.
இந்த ஹதீஸில் குளறுபடிகள் ஏதும் கிடையாது. இடைச்சொருகல் எதுவும் கிடையாது. இது வரலாறுமல்ல. இவ்வளவு தெளிவாக தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்பட்டிருந்தும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று கூறிக்கொள்ளும் அந்த சகோதரர்களால் இதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இதை அவர்களிடம் முன்வைத்தால் இதுவும் பைஅத்துக்குப் பின்னர்தான் என்று தவறான விளக்கம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைப் போல பைஅத் செய்யாதவர் நிரந்தர நரகவாதி என்று சொல்வதென்றால் மேலே நாம் பார்த்த ஹதீஸில் தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதைப் போன்று பைஅத்தைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் பைஅத் செய்தவர்களாக இருப்பார்கள் என்று ஏதாவது ஒரு ஹதீஸில் கூறப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தௌஹீதைத் தவிர அவர்கள் எந்த நற்காரியங்களையும் செய்திருக்க மாட்டார்கள் என்ற ஹதீஸுக்கு அவர்கள் சரியான விளக்கமளிக்க வேண்டும். சுருங்கக் கூறுவதென்றால் பைஅத் பற்றி மூடலாக வருகின்ற ஹதீஸ் அவர்களுக்கு அடிப்படையகி விட்டதனால் தௌஹீதைத் தவிர என்று தெளிவாக வரும் ஹதீஸை அவர்களால் சரியாக விளங்க முடியவில்லையென்பது தெளிவாகின்றது.
குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும்தான் பின்பற்றுகிறோம். என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட சில செய்திகளோடு தமது கொள்கையை வரையறுத்துக் கொண்டமையே இந்த வழிகேட்டிற்குக் காரணம் என்பதைப் புரிய இன்னும் சில சான்றுகளை அவதானிப்போம்.
صحيح مسلم – 287عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِى شَيْبَةَ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى سَرِيَّةٍ فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ فَأَدْرَكْتُ رَجُلاً فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَطَعَنْتُهُ فَوَقَعَ فِى نَفْسِى مِنْ ذَلِكَ فَذَكَرْتُهُ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَقَتَلْتَهُ ». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنَ السِّلاَحِ. قَالَ « أَفَلاَ شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لاَ ». فَمَازَالَ يُكَرِّرُهَا عَلَىَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّى أَسْلَمْتُ يَوْمَئِذٍ. قَالَ فَقَالَ سَعْدٌ وَأَنَا وَاللَّهِ لاَ أَقْتُلُ مُسْلِمًا حَتَّى يَقْتُلَهُ ذُو الْبُطَيْنِ. يَعْنِى أُسَامَةَ
‘ஒரு யுத்தத்துக்கு நபியவர்கள் எங்களை அனுப்பினார்கள். ஜுஹைனா என்ற இடத்தில் ஹுரகாத் என்ற பகுதியில் நாம் காலையை அடைந்தோம். (அங்கு) நான் ஒரு நபரைச் சந்தித்தேன் அவர் (என்னைக் கண்டதும்) லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார். (நான் அதைக் கவனிக்காமல்) அவரைக் கொலை செய்து விட்டேன். (என்றாலும்) அது என் மனதை உறுத்தியது. எனவே அதை நபியவர்களிடம் கூறினேன். (அதைக் கேட்ட நபியவர்கள்) ‘லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரையா நீர் கொலை செய்தீர்’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே ஆயுதத்துக்குப் பயந்துதான் அவர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்.’ என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான் கூறினார் என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’ என்று கூறினார்கள்……………’
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 287
இந்த ஹதீஸ் பைஅத் செய்யாமல் மரணித்தவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவராவார் என்ற ஹதீஸை விளங்க உதவியாக இருக்கிறது. லாஇலாஹ இல்லல்லாஹ் என்று மட்டுமே அந்த மனிதர் சொன்னார்.இஸ்லாத்திற்குள் நுழைய பைஅத் செய்வது கட்டாயமாக இருந்தால் நபியவர்கள் அதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை அங்கு குறிப்பிடவில்லை. அந்நபர் கலிமாவை மொழிந்தாரா இல்லையா என்பதைத்தான் நபியவர்கள் ‘அதை அவர் அதற்குத்தான் கூறினார் என நீ தெரிவதற்கு அவருடைய உள்ளத்தை பிளந்து பார்த்தீரா’ என்ற வினாவின் மூலம் சொல்லியிருக்கிறார்கள் என்பது இங்கே புலனாகின்றது. எனவே ஒருவர் இஸ்லாத்துக்குள் நுழைய லாஇலாஹ இல்லல்லாஹ்தான் அடிப்படையேயன்றி பைஅத் அல்ல என்பதை இதை விடத் தெளிவாக எப்படித்தான் விளங்கப்படுத்தலாம்?
கத்தம் கொடுப்பதற்கு ஆதாரம் என்னவென்று மாற்றுக்கருத்துள்ளோரிடம் நாம் கேட்கும் போது தர்மம் பற்றிய ஹதீஸ்களையும், உணவளிப்பது பற்றிய ஹதீஸ்களையும் அதற்கு ஆதாரமாக அவர்கள் முன்வைப்பதைப் போல அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் மார்க்க விடயம் ஒன்றுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் போது சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் கொண்டு வந்து சம்பந்தப்படுத்தக் கூடாது. குறித்த விடயம் தொடர்பாக வருகின்ற அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்து அவற்றிலிருந்துதான் சரியான முடிவொன்றைப் பெற முடியும். இதுவே அறிவுபூர்வமானதும், சரியானதுமான ஒரு முடிவாகும்.
இன்னுமோர் அம்சத்தை நாம் இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஐந்து நேரத் தொழுகைகளை முறையாக யார் நிறைவேற்றுகின்றாரோ அவர் சுவனம் நுழைந்து விட்டார் என்று சொல்லப்பட்டால் உடனே நாம் அதனோடு ‘அவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமலிருந்தால் சுவனம் நுழைவார்’ என்பதையும் சேர்த்து அதை விளங்குகிறோம்.
ஏனெனில் அல்லாஹ் அதைத் தெளிவாக அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ النساء : 48 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் அதற்குக் கீழ் நிலையிலுள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.(அந்நிஸா : 48)
இணை வைத்தவர் சுவனம் நுழையமாட்டார் என்ற அடிப்படையை நாம் சரியாக விளங்கியுள்ளதால் ஒருவர் எந்த நற்காரியங்களைச் செய்திருந்தாலும் அவர் இணை வைக்காமலிருந்தால் தான் அவரால் சுவனம் செல்ல முடியும் என்பதைப் போலவே பைஅத் செய்யாமல் மரணித்தவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவராவார் என்ற ஹதீஸையும் ஓர் அடிப்படையாக விளங்கி வைத்துள்ளோம். இணைவைத்தலைத் தவிர மற்றைய அனைத்தையும் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதைப் போல பைஅத்துக்குச் சொல்லப்படவில்லை. ஆகவே இணை வைப்பைப் போன்று பைஅத்துக்கு நாம் அழுத்தம் கொடுக்கின்றோம் என்பதை ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் சகோதரர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் முஸ்லிமாவதற்கு பைஅத்துச் செய்வதே அடிப்படை என்ற கொள்கை தவறானது என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்தும் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.
صحيح البخاري -4339عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ
நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு ‘அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. எனவே, அவர்கள் (தங்களின் வழக்குப்படி) ‘ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்” என்று சொல்லானார்கள். உடனே காலித்(ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன். மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, ‘இறைவா! ‘காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : புஹாரி 4339
இந்த ஹதீஸில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு அடிப்படையாக எது அமைகிறது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த மக்கள் பைஅத் செய்தார்களா இல்லையா என்பது பற்றி நபியவர்கள் காலித் பின் வலீதிடம் விசாரிக்கவில்லை. ‘இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்’ என்று அவர்களுக்குத் தெரிந்த மொழியில் அம்மக்கள் சொல்லிய பின்னாலும் ஏன் அவர்களை நீ கொலை செய்தாய் ஆகவே நீ செய்த இந்தச் செயலுக்கு நான் பொறுப்பல்ல இதை நான் அல்லாஹ்வின் பொறுப்பில் விடுகின்றேன் என்ற கருத்தில்தான் நபியவர்கள் ‘இறைவா! ‘காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து வெளிப்படையாக விளங்க முடிகின்றது.
இவ்வளவு தெளிவாகவும், நேரடியாகவும் ஹதீஸ்கள் வந்திருந்தாலும் பைஅத் பற்றிய ஹதீஸ் ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் சகோதரர்களின் உள்ளங்களில் ஆழமாய் வேரூன்றிவிட்டதனால் அவர்களால் இந்த யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இவர்களின் கொள்கை தவறானது என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்தும் தெளிவாக விளங்கலாம்.
صحيح البخاري – 1283عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ فَقَالَ اتَّقِي اللَّهَ وَاصْبِرِي قَالَتْ إِلَيْكَ عَنِّي فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي وَلَمْ تَعْرِفْهُ فَقِيلَ لَهَا إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ فَقَالَتْ لَمْ أَعْرِفْكَ فَقَالَ إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى
கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!” என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. ‘நான் உங்களை (யாரென) அறியவில்லை” என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரழி)
ஆதாரம் : புஹாரி 1283
இந்த ஹதீஸை அவர்களிடம் முன்வைத்தால் அப்பெண்மணி ஆரம்பத்தில் வேறொரு முறையில் பைஅத் செய்திருக்கலாம் அதனால் நபியவர்களை அவளுக்குத் தெரியாமலிருந்திருக்கலாம் எனக் கூறி பைஅத் என்ற வட்டத்துள்ளிருந்தே ஹதீஸுக்கு விளக்கமளிக்கின்றனர்.
இதை இன்னும் தெளிவாய் விளங்கிக் கொள்வதற்கு கீழ்வரும் மற்றொரு ஹதீஸை அவதானிப்போம்.
صحيح مسلم -2942 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ يَوْمَ خَيْبَرَ « لأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ ». قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا أَحْبَبْتُ الإِمَارَةَ إِلاَّ يَوْمَئِذٍ – قَالَ – فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا – قَالَ – فَدَعَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلِىَّ بْنَ أَبِى طَالِبٍ فَأَعْطَاهُ إِيَّاهَا وَقَالَ « امْشِ وَلاَ تَلْتَفِتْ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْكَ ». قَالَ فَسَارَ عَلِىٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ فَصَرَخَ يَا رَسُولَ اللَّهِ عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ قَالَ « قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ
‘அல்லாஹ்வும் அவன் தூhரும் விரும்பக்கூடிய, அல்லாஹ் வெற்றியைக் கொடுக்கக் கூடிய ஒருவரின் கையில் அந்தக் கொடியை நான் கொடுப்பேன்’ என்று நபியவர்கள் ஹைபர் தினத்தன்று கூறினார்கள். ‘அன்றைய தினம் தலைமைக்கு நான் ஆசைப்பட்டது போன்று வேறெப்போதும் ஆசை வைத்ததில்லை. ஆகையால் அதற்கு நான் அழைக்கப்பட வேண்டுமென்று ஆவல்கொண்டிருந்தேன் என உமரிப்னுல் கத்தாப் கூறினார். நபியவர்கள் அலீ (ரழி) அவர்களை அழைத்து கொடியைக் கொடுத்து ‘அல்லாஹ் உனக்கு வெற்றியை வழங்கும் வரை நடந்து செல்வீரா திரும்பிப் பார்க்கவேண்டாம்’ எனக் கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு நின்று திரும்பிப்பார்க்காமல் ‘அல்லாஹ்வின் தூதரே எதற்காக மக்களுடன் நான் போர் செய்ய வேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘வணக்கத்துக்குரிய கடவுள் அல்லாஹ்வையன்றி யாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என அவர்கள் சாட்சி சொல்லும் வரை அவர்களோடு போராடு அதை அவர்கள் செய்துவிட்டால் தங்களின் இரத்தங்களையும், சொத்துக்களையும் உரிமையில்லாமல் நாம் எடுப்பதை விட்டும் காத்துக் கொண்டனர். அவர்களின் கணக்கு அல்லாஹடவிடமே’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : புஹாரி 2942
வணக்கத்துக்குரிய கடவுள் அல்லாஹ்வையன்றி யாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என அவர்கள் சாட்சி சொல்லும் வரைக்கும் மக்களுடன் போர் புரிய வேண்டும். அதை அவர்கள் செய்துவிட்டால் தங்களின் இரத்தங்கள், சொத்துக்கள் என்பன உரிமையில்லாமல் எடுக்கப் படுவதை விட்டும் காத்துக் கொண்டனர். ஆகவே இஸ்லாத்துக்குள் நுழைய லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதன் ரஸுலுல்லாஹ்தான் அடிப்படையே தவிர பைஅத் அல்ல என்பது இந்த ஹதீஸிலிருந்து மிகத்தெளிவாகின்றது.
இந்த ஹதீஸையும், وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ‘அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ என்று (எடுத்துரைக்க) ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (அந்நஹ்ல் : 36) என்ற வசனத்தையும், நரகவாசிகளைப் பார்தது மலக்குமார்கள் உங்;களுக்கு எச்சரிக்கை செய்வோர் வரவில்லையா? என்கின்ற வசனங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது அல்லாஹ்வை வணங்குங்கள் தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்ற ஒரே நோக்கத்துக்காகவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். அதற்காகத்தான் நபியவர்கள் காலத்திலும், அதற்கடுத்த காலங்களிலும் போர்களும் இடம் பெற்றுள்ளன என்பதை மிகத் தெளிவாக விளங்க முடிகின்றது. என்றாலும் பைஅத் பற்றிய தவறான விளக்கம் இந்த சகோதரர்களை மயக்கி விட்டதனால் இந்த உண்மைகளை அவர்களால் விளங்க முடியவில்லை.
இவர்களின் கொள்கை தவறானது என்பதை மென்மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு கீழ்வருகின்ற ஹதீஸ் மேலும் துணையாகவுள்ளது.
صحيح البخاري – 2943عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَزَا قَوْمًا لَمْ يُغِرْ حَتَّى يُصْبِحَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ بَعْدَ مَا يُصْبِحُ فَنَزَلْنَا خَيْبَرَ لَيْلًا
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி 2943
நபியவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் அவர்கள் முஸ்லிம்களா இல்லையா என்பதை அறிய துணை நின்றது அதான் ஓசை தானே தவிர பைஅத் அல்ல. முஸ்லிமில் வரும் இதுபற்றிய ஹதீஸ் கீழ்வருமாறு இடம்பெறுகிறது.
صحيح مسلم – 873عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُغِيرُ إِذَا طَلَعَ الْفَجْرُ وَكَانَ يَسْتَمِعُ الأَذَانَ فَإِنْ سَمِعَ أَذَانًا أَمْسَكَ وَإِلاَّ أَغَارَ فَسَمِعَ رَجُلاً يَقُولُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَلَى الْفِطْرَةِ ». ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خَرَجْتَ مِنَ النَّارِ ». فَنَظَرُوا فَإِذَا هُوَ رَاعِى مِعْزًى
காலை நேரமாகிவிட்டால் தாக்குதல் நடத்துவார்கள். மக்களிடையே தொழுகை அழைப்பான அதான் ஓசை கேட்கின்றதா என்பதை அவதானிப்பார்கள். அவ்வாறு அதான் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். அதான் ஓசையைக் கேட்காவிட்டால் தாக்குதல் நடத்துவார்கள். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று ஒருவர் சொல்வதை நபியவர்கள் கேட்டார்கள். ‘அவர் இஸ்லாத்திலிருக்கின்றார்’ என்று அதற்கு பதிலளித்தார்கள். பின்னர் அந்த மனிதர் ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார். அதற்கு நபியவர்கள் ‘நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’ என்று சொன்னர்கள். (சத்தம் வந்த இடத்தின் பால் நபித்தோழர்கள்) பார்த்தார்கள். ஆடு மேய்ப்பவராக அந்த மனிதர் காணப்பட்டார்’
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 873
யாரோ ஒருவர் ஏகத்துவ வார்த்தையைச் சொல்ல அவரைப் பார்த்து நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’………என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து கீழ்வரும் விடயங்களை அவதானிக்கலாம்.
1- ஏகத்துவ வார்த்தையைச் சொன்ன மனிதர் யார் என்பது நபியவர்களுக்கோ, நபித்தோழர்களுக்கோ தெரியாது. பைஅத்துச் செய்துதான் முஸ்லிமாக வேண்டுமென்றால் கட்டாயம் அந்த மனிதர் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்டிருப்பார்.
2- அல்லாஹு அக்பர் என்று அந்த மனிதர் சொன்னதும், ‘அவர் இஸ்லாத்திலிருக்கின்றார்’ என்று நபியவர்கள் பதில் சொன்னதிலிருந்து ஒருவர் முஸ்லிம் என்பற்கு அடையாளம் லாஇலாஹ இல்லல்லாஹ்தான் பைஅத் அல்ல என்பது உறுதியாகின்றது.
3-அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்று அம்மனிதர் சொன்னதும் அவரைப்பார்த்து நபியவர்கள் ‘நீ நரகிலிருந்து வெளியேறிவிட்டாய்’ என்று சொன்னதிலிருந்து ஒருவர் சுவனம் செல்ல லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா ஷஹாதா தான் அவசியமே தவிர பைஅத் அல்ல என்பது உறுதியாகின்றது.
நபியவர்களைத் தெரியாமலேயே அன்று முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் சில பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தெரியாமலேயே நபியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்றால் இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் தலைவரைச் சந்திக்க வேண்டும் அவருக்கு பைஅத் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த நிபந்தனைகளும் அன்றிருக்கவில்லை. இஸ்லாத்தின் செய்தி கிடைத்ததும் கலிமாவைச் சொன்னார்கள் முஸ்லிம்களானார்கள். என்பதையே இது போன்ற ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. பைஅத்துத்தான் இஸ்லாத்துக்கு அடிப்படை என்று அவர்களாகவே முடிவுகட்டிவிட்டதனால் இனிமேல் எத்தனை ஹதீஸ்களைத் தான் அவர்களுக்கு நாம் எடுத்துக் காட்டினாலும் பைஅத்தை மையமாக வைத்தே அவற்றுக்கு சுய விளக்கம் சொல்லிவிடுகின்றனர்;. எனவே விளக்கக் குழப்பம்; இந்தப்பு ள்ளியிலிருந்துதான் இவர்களில் உருவாகின்றது என்பது உறுதியாகின்றது.
ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொண்டு ஏத்தாளையிலிருக்கும் இயக்கத்தில் பைஅத் செய்து சேர்ந்தால் தான் ஒருவர் முஸ்லிமாகலாம் என்று வைத்துக் கொண்டால் உகண்டாவிலிருக்கும் ஒருவர் எப்படி இஸ்லாத்துக்கு வருவது? அவர் கடிதத்தின் மூலம் இவர்களைத் தொடர்பு கொள்வதா? அப்படியாயின் ஒரு நாளில் அவரால் இஸ்லாத்துக்கு வரமுடியாது பல நாட்கள் அவருக்குத் தேவைப்படும் என்று சொல்லப் போகிறார்களா? இவ்வாறான தூர பிரதேசங்களிலுள்ளோருக்கு இவர்கள் என்ன பதிலைக் கூறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுவதாகக் கூறினாலும் மனோ இச்சையின் காரணத்தால் குறிப்பிட்ட சில செய்திகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து அவற்றுக்கு முரண்படும் ஏனைய ஆதாரங்களை இரண்டாம் பட்சமாக்கி புதிய கருத்தொன்று எவ்வாறு உருவாகின்றது என்பதற்கு கீழ்வரும் உதாரணத்தைப் பாருங்கள்.
سنن أبى داود – 492عَنْ أَبِى سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- – وَقَالَ مُوسَى فِى حَدِيثِهِ فِيمَا يَحْسَبُ عَمْرٌو – أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْحَمَّامَ وَالْمَقْبُرَةَ
குளியலறை, அடக்கஸ்தலம் ஆகியவற்றைத் தவிர பூமி முழுவதும் ஸுஜுது செய்யுமிடமாக (பள்ளியாக) ஆக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூஸஈத் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத் 492
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து குளியலறை, அடக்கஸ்தலம் போன்றவற்றைத் தவிர பூமியின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழலாம் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அவ்விரண்டு இடங்களே தொழுவதற்குத் தடை செய்யப்பட்டவை இவையல்லாத தொழத் தடைவிதிக்கப்பட்ட வேறு இடங்கள் எதுவுமில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். தனது இந்த நிலைப்பாடு சரியானதுதான் என்றாலும் ஒரு மௌலவியிடம் இது பற்றி விளக்கம் கேட்டுப்பார்ப்போம் என்ற நோக்கில் ஒரு மௌலவியை நாடுகிறார். குளியலறை, அடக்கஸ்தலம் போன்றவற்றில் தொழுவதற்கு தடை வந்துள்ளதைப் போன்று ஒட்டகம் கட்டும் இடத்திலும் தொழ வேண்டாம் என்றும் தடை வந்துள்ளது என அந்த மௌலவி இவருக்கு பதில் கூறுகிறார். உடனே இவர் ஒட்டகம் கட்டும் இடத்திலும் தொழ வேண்டாம் என்று ஹதீஸில் தெளிவாக உள்ளதா? அந்த ஹதீஸ் ஆதாரபூர்மானதா? என்றெல்லாம் வினாக்களைத்தொடுத்துக் கொண்டு போவார். ஆம் அந்த ஹதீஸ் பலமானதுதான். தடை அந்த ஹதீஸில் தெளிவாகவே உள்ளது என்று பதில் சொன்னாலும் இரண்டு இடங்களே தடுக்கப்பட் இடங்கள் என்ற கருத்தை இவர் பலரிடத்தில் சொல்லி விட்டதால் கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்துக் கொண்டே போவார். தனது கருத்துத்தான் சரியானது என்ற மனோ இச்சையுடன் கலந்த பிடிவாதமே இவரின் இந்நிலைக்குக் காரணமாகின்றது. இஹ்லாஸோடு நடப்பவராயின் இது போன்ற குறுக்கு வாதங்களை வைக்காமல் தனது கருத்துப் பிழையானது என்று ஒப்புக்கொண்டு சரியனதை ஏற்றுக்கொள்வார்.
தவாறான மார்க்க விளக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் இன்னொரு ஹதீஸை அவதானியுங்கள்.
صحيح البخاري – 3610عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْسِمُ قِسْمًا أَتَاهُ ذُو الْخُوَيْصِرَةِ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اعْدِلْ فَقَالَ وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ قَدْ خِبْتَ وَخَسِرْتَ إِنْ لَمْ أَكُنْ أَعْدِلُ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي فِيهِ فَأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ دَعْهُ فَإِنَّ لَهُ أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مَعَ صَلَاتِهِمْ وَصِيَامَهُ مَعَ صِيَامِهِمْ يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنْ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ الرَّمِيَّةِ……….’
நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது ‘பனூ தமீம்’ குலத்தைச் சேர்ந்த ‘துல் குவைஸிரா’ என்னும் மனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகுவாய் நஷ்டமடைந்து விடுவாய்” என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது………..’
அறிவிப்பவர் : அபூஸஈத் (ரழி)
ஆதாரம் : புஹாரி 3610
வேறு அறிவுப்புக்களில் ‘இவர்கள் முஸ்லிம்களோடு போர் புரிவார்கள் ஆனால் சிலை வணங்கிகளை விட்டுவிடுவர்கள்.’ என்று வருகின்றது. அல்குர்ஆனையும், ஸுன்னாவையும்தான் பின்பற்றுவதென்றாலும் விளக்கங்கள் மாறினால் இது போன்ற தவறான முடிவுகள்தான் ஏற்படும் என்பதையே இந்த ஹதீஸிலே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலே நாம் முன்வைத்த அனைத்துத் தகவல்களிலிருந்தும் சில முக்கியமான முடிவுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1- அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவையும் மட்டும் பின்பற்றுவதாகக் கூறி குறிப்பிட்ட ஓர் அல்குர்ஆன் வசனத்தை, ஒரு ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தைத் தவறாக விளங்கி ஏனைய ஹதீஸ்களையும் அல்குர்ஆன் வசனங்களையும் முறையாக விளங்காமல் அவற்றை அக்கருத்துக்குக் கிளைகளாக ஆக்கி விளங்க முற்பட்டமைதான் இஸ்லாமிய சமூகத்தில் வழிகேடுகள் ஏற்படக் காணமாக அமைந்தது.
2- பைஅத் செய்தல், குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டும் விஷேட கவனமெடுத்து குர்ஆன் போன்று திருப்பித்திருப்பி வாசித்தல் போன்ற அம்சங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் எனக் கூறிக் கொள்ளும் வழிகெட்ட பிரிவினர் போன்றோரின் பிரதான அடையாளமாக உள்ளது. சமகாலத்தில் மார்க்கத்தின் பெயரால் தோன்றியுள்ள பெரும்பாலான வழிகெட்ட பிரிவுகளில் பைஅத், சில புத்தகங்களை மட்டும் விஷேட கவனமெடுத்து திருப்பித்திருப்பி வாசித்தல் ஆகிய அம்சங்கள் அதீத செல்வாக்குச் செலுத்திக் காணப்படுகின்றன.
இத்தகைய பிரிவுகள் பற்றியும், இவர்களின் இவை போன்ற அடையாளங்கள் பற்றியும் நபியவர்கள் ஹதீஸ்களிலே எச்சரித்துள்ளதால் இலகுவில் இந்த வழிகேடுகளை இணம் காணமுடிவதுடன், அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் மார்க்க விடயம் ஒன்றுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் போது சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் கொண்டு வந்து சம்பந்தப்படுத்தி தீர்வுகாண முயலாமல் குறித்த விடயம் தொடர்பாக வருகின்ற அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்து அவற்றிலிருந்துதான் சரியான முடிவொன்றைப் பெற முயற்சிக்க வேண்டும். இதுவே அறிவுபூர்வமானதும், சரியானதுமான ஒரு முடிவாகும் என்பதும் இவற்றின் மூலம் தெளிவாகின்றது.
ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இன்று தங்களைக் கூறிக்கொள்வோரிடத்தில் காணப்படும் பாவிகளுக்கான அடையாளங்கள்
1- ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இன்று தங்களைக் கூறிக்கொள்வோரிடத்தில் நரகவாசிகளுக்குரிய முதற் பண்பாகக் காணப்படுவது (குப்ர்) இறை மறுப்பாகும். அது எவ்வாறெனில். பைஅத்துச் செய்யாத மனைவிமார்களோடு இவர்களில் பலர் குடும்பம் நடாத்துகின்றனர். பைஅத்துச் செயய்யாதவர்கள் காபிர்களென்றால் இவர்களின் மனைவிமார்களும் காபிர்களே. அப்படியாயின் காபிரான பெண்களோடு திருமண உறவு வைத்திருக்க முடியாது இதை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு தடை செய்துள்ளான்.
وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ الممتحنة : 10
ஏக இறைவனை (மறுக்கும் பெண்களுடன்) (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். (மும்தஹினா : 10)
இந்த வசனத்தின் அடிப்படையில் காபிரான பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ள முடியாது. பைஅத்துச் செயய்யாதவர்கள் காபிர்களென்றால் இவர்களின் மனைவிமார்களும் காபிர்களே. அப்படியாயின் காபிரான தமது பெண்களிடம் ஹிஜாப் அணியுமாறு எந்த அடிப்படையில் இவர்கள் கூறுவார்கள்? முஃமினான பெண்களைத்தானே ஹிஜாப் அணிய வைக்குமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான். ‘உங்களையும், உங்களுடைய குடும்பத்தையும் நரகை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். காபிரான பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ள முடியாது என்றும் அல்லாஹ் தீர்ப்பளித்துள்ளான். ஆகவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவன் காபிராகும் அதை கீழ்வரும் வசனம் விளக்குகின்றது.
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ المائدة : 44
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்மாயிதா : 44)
எனவே அல்லாஹ்வின் தீர்ப்புக்கு மாற்றமாக காபிரான தமது மனைவியரோடு திருமண உறவை இவர்கள் தொடருவதனால் குப்ரில் (இறை மறுப்பில்) விழுந்து விட்டார்கள்.
2- இவர்களிடம் ரித்தத் எனும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறுதலின் அடையாளமுள்ளது. ஐந்து நேரத் தொழுகையை மூன்று நேரம்தான் தொழ வேண்டுமென ஒருவர் கூறினால் அவரை நாம் மதம் மாறியவர் என்போம். மக்காவை நிருவகிப்பவர்கள் இவர்களின் பார்வையில் காபிர்கள் என்பதால் இவர்கள் ஹஜ் செய்வதில்லை. ரமழானில் உம்ரா செய்தால் அது ஒரு ஹஜ்ஜுக்கு சமனாகும் என்று கூறி ஹஜ்ஜை விட்டுவிட்டனர். தொழுகை இருக்கிறது ஆனால் இப்போது தொழ முடியாது. நோன்பு இருக்கிறது ஆனால் இப்போது அதை நோற்க முடியாது….. என்று ஒருவர் கூறினால் நாம் அவரை மதம் மாறியவர் என்போம் ஆகவே இதுவும் ரித்தத்தின் ஒரு வகைதான்.
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டம வெளியாகிய பின்னரும் ஹஜ் நடைபெறும் என்பதை பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
صحيح البخاري ت – (4 112)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.
எனவே நபியவர்கள் காலம் முதல் மறுமை நாள் வரையிலும் ஹஜ் வணக்கம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் என்ற விடயம் இதிலிருந்து உறுதியாகின்றது. ஆனால் இந்தப் பாக்கியம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அரபா தினத்தன்று அல்லாஹ் முதல் வானத்துக்கு இறங்கி வருகின்றான், தனது அடியார்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குகின்றான், என்றெல்லாம் ஹஜ்ஜுடைய சிறப்புக்கள் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. பைஅத் எனும் மாயையில் இவர்கள் சிக்குண்டிருப்பதனால் இந்த சிறப்புக்கள் எதையுமே பெறமுடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
3- இவர்களில் ஜாஹிலிய்யத் (அறியாமை) காணப்படுகின்றது.
صحيح البخاري ت – (9 136)
حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ
மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)’ என்று பதிலளித்தார்கள். 124 நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்.’ என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். 127 நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹ{தைபா இப்னுல் யமான் (ரழி)
ஆதாரம் : புஹாரி
இந்த ஹதீஸில் ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என
ஹுதைபா இப்னுல் யமான் (ரழி) கேட்பதிலிருந்து கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லாதிருந்தாலும் முஸ்லிம்கள் அக்காலத்தில் இருப்பார்கள் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. முஸ்லிம்களுக்கு ஜமாஅத் இருப்பதும் அனைவருக்கும் தெரியக் கூடியதாகவிருக்கும். ஜமாஅத் இல்லாமற் போவதும் அனைவருக்கும் தெரியக் கூடியதாகவிருக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆனால் இவர்களின் ஜமாஅத்தோ இருக்கின்றது ஆனால் ஒருவருக்கும் அதரியாமல் ஒளிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறன ஒரு ஜமாஅத்தை நபியவாகள் எங்கும் குறிப்பிடவில்லை. ‘அனைவரும் காபிர்கள் நாங்களே முஸ்லிம்கள் எங்களுக்கே அனைவரும் பைஅத் செய்ய வேண்டும்’ என இவர்கள் சொல்கிறார்கள் ஆனால் உகண்டாவிலுள்ளவர்களுக்கோ, கரிபியன் தீவுகளிலுள்ளவர்களுக்கோ இந்த ஜமாஅத்தைப் பற்றி எதுவும் தெரியாது. இதில் வேடிக்கை என்னவெனில் இலங்கையிலுள்ளவர்களுக்கே இவர்களைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியாது என்பதுதான். ஆகவே இத்தகைய இலட்சணத்திலிருக்கும் இவர்கள் எவ்வாறு முழு உலகுமே பின்பற்றத் தகுதியான ஜமாஅத்துல் முஸ்லிமீனாகலாம் என்ற கேள்வியெழுகிறது.
இன்னொன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். நபியவர்களிடம் ஜின்கள் வந்து இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற செய்திகளை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம். ஜாஹிலிய்யத்திலுள்ளவர்கள் பைஅத் செய்து முஸ்லிமாக வேண்டுமென்றால் மனிதர்களைப் போலவே ஜின்களும் உமர் அலி அவர்களிடம் வந்து பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்கவேண்டும்.
அப்படியாயின் ‘இதுவரை எத்தனை ஜின்கள் இவ்வாறு உங்கள் அமீரிடம் வந்து பைஅத் செய்துள்ளார்கள?; என்று இவர்களிடம் கேட்டால் ‘குறிப்பிட்ட சிறு தொகை ஜின்கள் வந்து பைஅத் செய்துள்ளார்கள்’ என்று சில வேளை இவர்கள் பதில் கூறலாம். அப்படியென்றால் ஜின்களில் சிறு தொகையினரே பைஅத் செய்து முஸ்லிம்களாகவுள்ளார்கள் மற்றறைய அனைத்து ஜின்களும் காபிர்களாகவுள்ளார்கள் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இதை எந்த அடிப்படையில்தான் ஏற்றுக் கொள்ளலாம்?
4- இவர்களிடம் பித்அத் காணப்படுகின்றது. அது பற்றி சற்று ஆராய்வோம். அல்லாஹ் சூட்டிய பெயரையே நாம் எமக்கும் சூட்டியுள்ளோம். அந்த அடிப்படையில்தான் நாம் நமது அமைப்பை ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்றழைக்கின்றோம் என்று கூறி இவர்கள் பெருமை பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ் அல்குர்ஆனிலே
هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ الحج : 78
அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்ஹஜ்:78) என்றுதான் கூறியுள்ளான். எனவே முஸ்லிமூன் (முஸ்லிம்கள்) என்றுதான் இவர்கள் தமக்குப் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ அல்லாஹ் சூட்டிய பெயரோடு ‘ஜமாஅத்’ என்று இன்னொன்றையும் சேர்த்திருக்கின்றனர். இதில் இவர்கள் பல தவறுகளை இழைத்துள்ளனர் அவயாவன
1- அல்லாஹ் சூட்டிய பெயரோடு ‘ஜமாஅத்’ என்ற சொல்லையும் சேர்த்ததன் மூலம் அல்லாஹ் வைத்த பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.
2- இவ்வாறு பெயர் சூட்டித்தான் முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றொரு சட்டம் குர்ஆனிலோ ஸுன்னாவிலோ கூறப்படவில்லையெனும் போது இத்தகு புதியதொரு சட்டத்தைத் மார்க்கத்தின் பெயரால் திணித்துள்ளனர்.
3-இத்தகைய ஓரு ஜமாஅத்தை உருவாக்க வேண்டுமென அல்லாஹ்வோ, தூதரோ சொல்லாத போது அதை மீறி மார்க்கத்தின் பெயரால் ஓரமைப்பை இவர்கள் துவங்கியுள்ளனர்.
ஆதாரமற்ற இவையனைத்துமே மறுதலிக்கப்பட வேண்டியவைகளாகும். இதை கீழ் வரும் நபி மொழி கூறுகின்றது.
صحيح البخاري ت – (7 36)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்:ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி
இதில் நாம் இன்னும் சில அம்சங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது அல்லாஹ் அல்குர்ஆனில் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்ஹஜ்:78) என்று சொல்லியுள்ள போது அல்லாஹ் முஸ்லிமூன் எனும் அந்தப் பெயரோடு ஏன் ‘ஜமாஅத்’ என்பதைச் சேர்த்தார்கள்?
அல்லாஹ் அல்குர்ஆனில் ‘நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகின்ற விததத்தில் அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்.’ (ஆலஇம்ரான் : 102) என்றுதான் கூறியுள்ளான்.
‘ஜமாஅத்துல் முஸ்லிமாகவேயன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்’ என எங்கும் சொல்லவில்லை. எனவே இதனோடு ‘ஜமாஅத்’ என்பதையும் எவ்வாறு இவர்கள் சேர்த்தார்கள்?
பிற முஸ்லிம்களுக்குத் தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தராதவரே முஸ்லிம் என்பதுதான் ஒரு முஸ்லிமுக்கு நபியவர்கள் கூறிய இலக்கணமாகும்.
ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தராதவரே முஸ்லிம் என்று நபியவர்கள் எங்கையும் கூறவில்லை. சுவனம் செல்வதற்கு ‘ஜமாஅத்’ என்பது நிபந்தனை என்றால் அல்லாஹ்வும், தூதரும் அதைச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு எங்கையுமே சொல்லப்படவில்லையெனும் போது அதை நிபந்தனையாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
ஆகவே அல்லாஹ் ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டிருக்கும் போது நபியவர்கள் ‘முஸ்லிமூன்’ என்று அழைத்திருக்கும் போது அவற்றுடன் ‘ஜமாஅத்’ என்பதை எந்த அடிப்படையிலே இவர்கள் இணைத்தார்கள்?
இவர்களுடைய பள்ளி வாசலுக்கு மஸ்ஜிதுல் முஸ்லிமீன் என்று பெயரிட்டுள்ளார்கள், பாடசாலைக்கு மத்ரஸதுல் முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளார்கள் இங்கு ‘ஜமாஅத்’ என்பதை விட்டுவிட்டார்கள். ஆனால் கொள்கையென்று வரும் போது அதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். ஜமாஅத் என்பது ஒரு பண்பு என்பதனை நன்றாய் அவர்கள் விளங்கியுள்ளதால்தான் இவ்வாறு செய்கின்றார்கள். எனவே முஸ்லிமூன் என்பது பெயராகும். ‘ஜமாஅத்’ என்பது மஸ்ஜித் மத்ரஸா என்பவற்றைப் போன்று ஒரு பண்பாகும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றார்கள்.
உமர் அலி அவர்கள் வந்தார்கள் என்றால் அது ஒருவரையே குறிக்கின்றது. இதையே ஒருவர் ‘உமர் வந்தார், அலி வந்தார்; என்று சொன்னாரென்றால் அதை நாம் பிழையென்போம் ஏனென்றால் உமர் அலி என்பது ஒரு பெயராகும். அதில் உமரை வேறாகவும், அலியை வேறாகவும் பிரிக்க முடியாது. இதைப் போலவே அவர்களின் வாதப்படி ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது ஒரு பெயராகும் எனவே அதையும் இரண்டாகப் பிரிக்க முடியாது. ஆனால் நபித்தோழர் ஹுதைபா இப்னுல் யமான் (ரழி) அவர்கள் ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என நபியவ்களிடம் கேட்டதன் மூலம் முஸ்லிமூனை(முஸ்லிம்கள்) வேறாகவும், ஜமாஅத்தை வேறாகவும், இமாமை வேறாகவும் பிரித்து விட்டார்கள். ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ என்பது ஒரு பெயரில்லையென்பதால்தான் அவர்கள் இவ்வாறு பிரித்துள்ளார்கள் என்பதை நன்றாக இதிலிருந்து விளங்கலாம்.
இவர்கள் கூறுவதைப் போல ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ அல்லாஹ் சூட்டிய ஒரு பெயராகவிருந்து அதைக் கொண்டுதான் முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்த வேண்டுமென்றிருந்தால் நபித்தோழர் ஹுதைபா அவர்கள் வேறு வேறாய் பெயரைப் பிரிக்கும் போது நபியவர்கள் தடுத்திருப்பார்கள். நபியவர்கள் அவ்வாறு தடுக்காமல் விட்டதிலிருந்து இந்தப் பெயருக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லையென்பது தெளிவாகின்றது. ஆகவே ‘ஜமாஅத்தல் முஸ்லிமீன்’ என்பது ஒரு பெயரென்பதற்கும் அந்தப்பெயரிலிருந்து ‘ஜமாஅத்’ என்பதைப் பிரிப்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
பித்அத் இவர்களிடம் காணப்படுகின்றன என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய அம்சங்கள் உறுதி செய்கின்றன.
5- மார்க்க விடயங்களில் வளைந்து, நெளிந்து போகும் தன்மை இவர்களிடம் காணப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கே தொழுகை கடமையென அல்லாஹ் கூறுகின்றான். பைஅத்துச் செய்தால்தான் ஒருவர் முஸ்லிமாகலாம் எனக் கூறும் இவர்களின் பள்ளிக்கு பைஅத்து செய்யாதவர்கள் தொழச் சென்றாலும் அவர்களையும் தொழுகையில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆகவே காபிர்களையும் தம்முடன் தொழுகையில் சேர்த்துக் கொள்கின்றனர். காபிர்களுக்கு தொழுகை கடமையில்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியென்றால் ஏன் இவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள் என்றால் மார்க்கத்தைச் சொல்வதற்கு இவர்களுக்கு தைரியமில்லை. அதனால்தான் ஆட்களுக்கேற்ப இவ்வாறு நெலிந்து, வலைந்து போகின்றார்கள்.
நாம் பினான்ஸுக்கு வாகனம் கொள்வனவு செய்தால் அதை வட்டி என்கிறார்கள். அவர்களிலொருவர் பினான்ஸுக்கு வாகனமொன்றை வாங்கினால் அதை நிர்ப்பந்தம் என்கின்றனர். ஏதாவதொரு பிரச்சினைக்காக நாம் காவல் துறையினரிடம் சென்றால் தாகூத்திடம் நாம் செல்வதாய் கூறுகிறார்கள். அவர்களிலொருவர்; அவ்வாறு சென்றால் அதை நிர்ப்பந்தம் என்கின்றனர். மார்க்க விடயங்களில் இவர்கள் எப்படியெல்லாம் வலைந்து கொடுக்கின்றார்கள் என்பதை இவற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமது கொள்கையில் இவர்கள் உறுதியாகவிருந்தால் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல பைஅத் செய்யாமலிருக்கும் தமது மனைவிமார்களை இவர்கள் விவாகரத்துச் செய்ய வேண்டும். அதுவே உண்மையான கொள்கையுறுதியாகும். ஆனால் இவர்கள் அவ்வாறு தமது மனைவிமார்களை விவாகரத்துச் செய்வதில்லை. செய்யவுமாட்டார்கள். இதைக் கேட்டால் நிர்ப்பந்தம் என்று கூறி நழுவப் பார்க்கின்றனர். பிலால் (ரழி) அவர்களை டு மணலில் போட்டுப் புரட்டியதைப் போல தமது மனைவிமார்களை விவாகரத்துச் செய்தால் இவர்களுக்கும் ஏதும் கொடுமைகள் ஏற்பட்டு விடுமோ? அப்டியெல்லாம் ஒன்றுமே நடைபெறப் போவதில்லை. அற்ப உலக இன்பத்துக்காக அல்லாஹ்வின் சுவனத்தையே இவர்கள் தாரைவார்க்கப் பார்க்கின்றனர். மார்க்க விடயங்களில் இவர்களிடம் காணப்படுகின்ற நழுவற் போக்கைக் கண்டுகொள்ள இதுவொன்றே போதுமெனலாம்.
6- முஃமின்களின் பாதையை விட்டு இவர்கள் வழி தவறிச் செல்கிறார்கள்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا النساء : 115
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறு செய்து, நம்பிக்கைகொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரைக் ருகச்செய்வோம் தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அந்நிஸா : 115)
முஃமின்களுக்கென்ற பொதுவான பாதையொன்றிருக்கும் என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் உத்தரவாதப்படுத்தியுள்ளான். அப்படியென்றால் கடந்த ஆயிரத்து நாநூரு வருடங்களாக அந்தப் பொதுவான பதையில் முஃமின்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது அந்தப் பொதுவான பதை கடந்த ஐம்பது வருடங்களுக்குள்தான் உருவாகியுள்ளது. ஏனென்றால் இவர்களின் மஸ்ஊத் அஹ்மத் என்பவர் உருவாக்கிய இந்த இயக்கத்துக்கு இதுவரை ஐம்பது வருடங்களே கழிந்துள்ளன. அதற்கு முன்னர் இந்த இயக்கம் இருக்கவில்லை இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹுதைபா (ரழ) அறிவிக்கும் ஹதீஸை பார்க்கும் போது ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு;……..’ என்றுதான் அதில் கூறப்பட்டுள்ளதேயன்றி புதிதாக ஒரு ஜமாஅத்தை ஆரம்பிக்கும் படி எங்கையுமே கூறப்படவில்லை. ஆகவே இப்படியொரு ஜமாஅத்தைத் துவங்கியதே மிகப்பெரும் தவறாகும்.
7- இவர்களிடம் தனிமனித வழிபாடு காணப்படுகின்றது.
அது எப்படியென்றால் பாடசாலை செல்வதற்காக சிலருக்கு மாத்திரம் அமீர் அனுமதி கொடுப்பார் அவர்கள் செல்வார்கள். இன்னும் சிலருக்கு அனுமதி கொடுக்கமாட்டார். அவர்கள் செல்லமாட்டார்கள். சிலருக்கு பகிரங்கமான பைஅத் என்று அமீர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் சிலருக்கு இரகசியமான பைஅத் என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள். சிலரை ஆற்றுக்குப் போக வேண்டாம் என்று அமீர் சொன்னால் அவர்கள் போகமாட்டார்கள். இதை மீறி யாரேனும் ஆற்றுக்குச் சென்றால் அவரிடமிருந்து நஷ்டயீடு அறவிடுவார்.
அல்லது நாற்பது நாட்களுக்கு அவரை ஒதுக்கி வைத்து விட்டு கஃபிப்னுமாலிக் என்ற நபித் தோழரை நபியவர்கள் இப்படித்தான் ஒதுக்கி வைத்தார்கள் என்று சொல்வார். கஃபிப்னுமாலிக்கை நபியவர்கள் ஒதுக்கி வைத்தபோது அல்லாஹ் வஹீயை இறக்கி அவரை மன்னித்ததைப் போன்று இவர்களுக்கும் வஹீ இறக்கப்படுகின்றதோ என்றெண்ணத் தோன்றுகின்றது.
ஆன்மீக பைஅத் எடுக்கும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே
நபித்துவத்தை எடுத்துக் கொள்வதற்கான அடையாளமே பைஅத் என்பதாகும்.
அல்குர்ஆனிலிருந்து இதை மிகத்தெளிவாக விளங்கலாம்.
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ الفتح : 10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். (அல்பத்ஹ் : 10)
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ الفتح : 18
அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் அகாண்டான். (அல்பத்ஹ் : 18)
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ الممتحنة : 12
‘நபியே நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ‘அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்……….’ (அல் மும்தஹினா :12)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களிலும் ‘உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர்’, ‘உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது’, உம்மிடம் வந்து அவர்கள் உறுதி மொழி எடுத்த போது’ என்று வரும் வார்த்தைகள் பைஅத் நபியவர்களிடம் எடுக்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாய் சுட்டிக்காட்டுகின்றன. ஹதீஸ்களும் இதை அழகாக எடுத்துச் சொல்கின்றன.
صحيح البخاري – (18 146)
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْمَنْشَطِ وَالْمَكْرَهِ
இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளையைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நாங்கள் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தோம்.
அறிவிப்பவர் : உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரழி)
ஆதாரம் : புஹாரி
صحيح البخاريح- 5288 قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ إِلَّا بِمَا أَمَرَهُ اللَّهُ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ قَدْ بَايَعْتُكُنَّ كَلَامً
அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக் கொண்டேன்’ என்று வார்த்தை மட்டுமே கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி 5288
நபியவர்கள் தனது விடயங்களில் யாரிடமும் பைஅத் செய்யவில்லை. வஹியின் விடயத்தில் மட்டுமே மக்களிடம் பைஅத் பெற்றார்கள் என்பது இந்த தீஸிலிருந்து தெளிவாகின்றது.
سنن أبي داود 3025 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ عَقِيلِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا عَنْ شَأْنِ ثَقِيفٍ إِذْ بَايَعَتْ؟ قَالَ: اشْتَرَطَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ لَا صَدَقَةَ عَلَيْهَا، وَلَا جِهَادَ، وَأَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ يَقُولُ: «سَيَتَصَدَّقُونَ، وَيُجَاهِدُونَ إِذَا أَسْلَمُوا(
ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்களிடத்தில் ஸகீப் கோத்திரத்தினர் நபியவர்களிடத்தில் பைஅத் செய்த போது நடந்த நிகழ்வைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஜாபிர் அவர்கள் ‘நாம் தர்மமோ ஜிஹாதோ செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.’அதற்கு பின் நபியவர்கள் ‘இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் தர்மம் செய்வார்கள் இன்னும் ஜிஹாதும் செய்வார்கள்’ என்று சொல்வதைக் கேட்டேன் என்று ஜாபிர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் கூறினார்கள். அபுதாவுத்:3025
இஸ்லாத்தின் மிக முக்கியமான சில கடமைகளைக் கூட செய்யமாட்டோம் என்று தகீப் கோத்திரம் நபியவர்களுடன் உடன்படிக்கை செய்த போது ‘இஸ்லாத்தை ஏற்ற பின்பு அவர்கள் அக்கடமைகளையெல்லாம் செய்வார்கள்’ என்று நபியவர்கள் சொல்லி அவர்களின் உபன்படிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்ற இந்த ஹதீஸை வைத்து இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய அமீரால் அவரோடு பைஅத் செய்யும் ஒருவருக்கு தகீப் கோத்திரத்துக்கு நபியவர்கள் வழங்கியதைப் போன்று சலுகை வழங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நபியவர்களுக்கு மட்டுமே அந்த அதிகாரரமுண்டு. அவர்களுக்குப் பின்னால் வந்த எவருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. எனவே ஒருவரிடம் ஆன்மீக பைஅத் எடுக்கும் தகுதியும், தகைமையும் நபியவர்களுக்கு மட்டுமே உரியதாகும் என்பதை இலகுவாய் விளங்க முடிகிறது.
ஹுதைபியா உடன்படிக்கையின் போது உத்மான் (ரழி) அவர்களுக்காக நபியவர்கள் தனது கையை வைத்து உடன்படிக்கை செய்தார்கள் என்ற செய்தியை வைத்து இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய அமீருக்கு இன்னொருவர் சார்பாக பைஅத் பெறலாமா? எனும் கேள்விக்கு இவர்கள் என்னதான் சொல்லப் போகிறார்கள்?? நபியவர்களால் மட்டுமே ஆன்மீக பைஅத் பெற முடியும் என்பதைத்தான் இவ்வாறான செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து ஒருவரை இஸ்வாத்துக்கு வரவழைப்பதையே நபித்தோழர்களும் செய்தார்கள். இதன் போது எந்த நபித் தோழராவது யாரிடமாவது பைஅத் பெற்றதாக ஒரு செய்தியைக் கூடக் காட்ட முடியாது. யாராவது மரணித்தால் ஓலமிட்டு அழக் கூடாது என நபியவர்கள் பெண்களிடம் பைஅத் பெற்றார்கள் இதையடிப்படையாக வைத்து இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய அமீருக்கு பெண்களிடம் பைஅத் பெறமுடியுமா? அவ்வாறு முடியுமெனில் நபியும் உமரலியும் ஒன்றென்றாகிவிடும். ஆகவே ஆன்மீக பைஅத் பெறும் உரிமை நபியவர்களுக்கு மட்டுமே சொந்தமாகும். தௌஹீத் கருத்திலுள்ளவர்கள் பல பிரிவுகளாகப்பிரிந்துள்ளதாகவும் நபியவர்கள் கூறிய 73 கூட்டம் அதுதான் எனவும் சொல்கிறார்கள். நபியவர்கள் கூறியதை சிநந்தளையிறங் கொள்ளமல் அவர்களுக்கு தோன்றியவாறெல்லாம் பிரிக்கமுனைந்ததால் விளைந்ததே இதுவாகும். அவர்கள் சொல்வதைப் போல பிரித்தால் இலங்கையில் மாத்திரம் 700 பிரிவுகளைக் காட்டலாம். எதுவாயினும் நபியவர்கள் கூறிய 73 கூட்டத்தில் இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனும் உள்ளடங்குகின்றது என்பது உறுதியாகின்றது. நினைத்தவாறெல்லாம் ஒருவரைப் பார்த்து ‘காபிர்’ என்று சொல்வது எவ்வளவு பயங்கரமானது என்பதைக் கீழ்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
صحيح البخاري6105 – عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ………وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ
இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.
அறிவிப்பவர் : தாபித் பின் லஹ்ஹாக்
ஆதாரம் : புஹாரி6105
இது போன்ற இன்னும் சில ஹதீஸ்களுள்ளன. அவையனைத்தும் நபித்தோழர்கள் நபியவர்களிடம் செய்த பைஅத் முறைமைகளை விவரிக்கின்றன. தன்னிடம் பைஅத் செய்தோருக்கு சுவனம் கிடைப்பதாக நபியவர்கள் வாக்களித்தார்கள். இந்த வாக்குறுதியை இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய அமீரால் வழங்க முடியுமா என்ற கேள்விக்கு அவர்கள் எப்படி பதில் சொல்லப் போகின்றார்கள்? சுவனம் நுழையும் உத்தரவாதத்தை தங்களின் அமீரால் வழங்க முடியுமென இவர்கள் சொன்னால் நபியும், நாமும் ஒன்றென்று சொன்ன குற்றத்துக்கு ஆளாகிவிடுவர்கள். ஆகவே பைஅத் எடுக்கும் அதிகாரம் நபியவர்களுக்கு மத்திரமே. களவெடுக்கக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, தொழுகையை விடக் கூடாது, இவையனைத்தையும் பேணினால் உங்களுக்கு சுவனம் கிடைக்கும் என்று கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களோ, அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர்களோ மக்களிடம் பைஅத் எடுத்தார்களா என்று பார்த்தால் அவ்வாறு எதையும் காண முடியாது. ‘நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன் அதற்காக எனக்கு பைஅத் செய்யுங்கள’; என்றுதான் அபூபக்கர் (ரழி) அவர்கள் மக்களிடம் பைஅத் பெற்றார்களே தவிர இஸ்லாத்துக்காக அவர்கள் மக்களிடம் பைஅத் பெறவில்லை என்பதை மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும். ‘நானும் அநாதைகளைப் பராமரிப்பவனும் சுவனத்தில் நெருக்கமாகவிருப்போம்,’ ‘நானும் மறுமையும் இரு விரல்கள் போல மிகவும் நெருக்கமாகவுள்ளோம்’ என நபியவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு வேறு யாராலும் சொல்ல முடியாது. எனவே சுவனம் செல்லும் நபியவர்களாலேயே சுவனம் பற்றி வாக்களிக்க முடியுமே தவிர வேறெவராலும் அவ்வாறு வாக்குறுதியளிக்க முடியாது. உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் என்று அல்குர்ஆனில் பல இடங்களில் நபித்தோழர்கள் நபியவர்களிடம் பைஅத் எடுப்பது பற்றிக் கூறும் அல்லாஹ் இவற்றில் எந்த இடத்திலாவது ஒரு நபித்தோழரைக் குறிப்பிடவில்லை. ‘நபியவர்களிடம் நாம் பைஅத்செய்தோம்’ என நபித்தோழர்கள் கூறுவதிலிருந்தே ஆன்மீக பைஅத் என்பது நபிவர்களுக்கு மட்டுமே என்பது தெளிவாகின்றது. (………………)
ஆன்மீக பைஅத் என்பது நபிவர்களுக்கு மட்டுமே என்பதைப் போன்று ஆட்சியாளர்களிடம் குடிமக்கள் செய்ய வேண்டிய மற்றொரு பைஅத் முறையும் உள்ளது. ஆனால் இந்த பைஅத்தைக் கூட எடுக்கும் உரிமை இவர்களுக்குக் கிடையாது. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
صحيح البخاري 3455 عَنْ فُرَاتٍ الْقَزَّازِ قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘பன} இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்க விருக்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்(ரஹ்)
ஆதாரம் : புஹாரி 3455
ஆகவே ஆன்மீக பைஅத்துக்கு அடுத்தபடியாகவுள்ளது ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் பைஅத்தாகும். நாங்கள் தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று கூறிக்கொண்டு மக்களிடம் பைஅத் எடுக்கும் இவர்கள் நபியாக இருக்க வேண்டும். அல்லது ஆட்சியாளராக இருக்க வேண்டும். இவ்விரு பைஅத் முறைகளல்லாத இன்னொரு பைஅத் முறையும் இருக்கின்றது என்று அவர்கள் சொன்னால் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். ஆனால் அவர்களால்; ஒருபோதும் அதற்கு ஆதாரம் காட்ட முடியாது. அப்படியாயின், அவர்களாகவே ‘ஜமாஅத்துல் முஸ்லிமீன் ‘பைஅத்என்று உருவாக்கிக் கொண்டு நாடகமாடுகின்றார்கள். அதில் வெறும் பெயர்க் கவர்ச்சி மட்டுமே உள்ளது வேறெதுவுமில்லையென்பது புலனாகின்றது.
நபியவர்கள் காலம் முதல் இன்றைய காலம் வரை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நீரோட்டம் எவ்வாறு காணப்படும். அதனிடையே ஏற்படும் ஆட்சி மாற்றமானது எத்தகையதாவிருக்கும் என்பது பற்றிய கண்ணோட்டத்தைப் பின்வரும் ஹதீஸிலே நாம் அவதானிக்கக் கூடியதாவுள்ளது.
مسند أحمد18406 – عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ قَالَ حُذَيْفَةُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللَّهُ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ
அல்லாஹ் நாடிய காலம் வரை உங்களிலே நபித்துவம் காணப்படும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்னர் நபித்துவத்தின் வழிகாட்டலில் கிலாபத் ஆட்சி அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். பின்னர் ஒர் இருக்கமான ஆட்சியொன்று வந்து அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்பு ஒரு கொடுங்கோள் ஆட்சியொன்று வந்து அல்லாஹ் நாடிய காலம் வரை இருக்கும். பின்னர் அல்லாஹ் அதை உயர்த்த நாடினால் உயர்த்தி விடுவான். அதன் பின்னர் நபித்துவத்தின் வழிகாட்டலில் கிலாபத் ஆட்சியொன்று இருக்கும்.
அறிவிப்பவர் : ஹுதைபா இப்னுல் யமான் (ரழி)
ஆதாரம் : அஹ்மத்18406
‘அதன் பின்னர் நபித்துவத்தின் வழிகாட்டலில் கிலாபத் ஆட்சியொன்று இருக்கும்.’ என்ற வாசகத்தின் மூலம் ஆட்சிக்கு பைஅத் பெறும் கலீபாக்கள் வருவார்கள் என்பது உறுதியாவதைப் போன்று இஸ்லாத்துக்கு பைஅத் எடுக்கும் நபி வரமாட்டார் என்பதும் உறுதியாகின்றது. எனவே யாரெல்லாம் இவ்வாறு இஸ்லாத்தின் பெயரால் பைஅத் எடுக்கின்றார்களோ அவர்களெல்லாம் வழிகேட்டிலுள்ளார்கள் என்பது இதலிருந்து தெளிவாகின்றது. ‘எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை’ என்று நாம் முன்னர் எடுத்துக்காட்டிய ஹதீஸிலும் நபியவர்கள் கூறியிருப்பதும் இஸ்லாத்துக்காக பைஅத் எடுக்கும் எந்த நபியும் எனக்குப் பின்னர் வரமாட்டார் என்பதையே. எனவே நபியவர்கள் எடுத்த பைஅத் போன்று அவருக்குப்பின்னால் வரும் எவராலும் எடுக்க முடியாது. ஆட்சியாளர்களுக்கு செய்யப்படும் பைஅத் பற்றி பின்வரும் ஹதீஸிலும் நபியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
صحيح مسلم 4905 عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا بُويِعَ لِخَلِيفَتَيْنِ فَاقْتُلُوا الآخَرَ مِنْهُمَا ».
இரு கலீபாக்களுக்கு பைஅத் செய்யப்பட்டால் இரண்டாமவரைக் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்4905
‘இரு கலீபாக்களுக்கு பைஅத் செய்யப்பட்டால்’ என்ற நபியவர்களின் கூற்று ஆட்சியாளர்களுக்கு செய்யப்படும் பைஅத் பற்றிக் குறிப்பிடுவதாகவுள்ளது. ஆகவே இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய தலைவருக்கு எதுவித ஆட்சியதிகாரமும் இல்லையென்பதனால் அவருக்கு எவ்வகையிலும் பைஅத் செய்ய முடியாது என்பது நிச்சயமாகின்றது.
صحيح البخاري 7053 – عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنْ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً
‘தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
ஆதாரம் : புஹாரி 7053
தலைவரென்பவர் அதிகாரமுள்ளவரே என்பதை இந்த ஹதீஸில் வரும் சுல்தான் எனும் பதத்தின் மூலம் நபியவர்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
صحيح البخاري 7054 – عَنْ الْجَعْدِ أَبِي عُثْمَانَ حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ إِلَّا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً
தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
ஆதாரம் : புஹாரி 7054
صحيح مسلم 4897 – وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا الْجَعْدُ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ الْعُطَارِدِىُّ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ عَلَيْهِ فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَ النَّاسِ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا فَمَاتَ عَلَيْهِ إِلاَّ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً.
யார் தம் ஆட்சித்தலைவரிடமிருந்து ஏதாவதொரு விடயத்தை வெறுக்கின்றானோ அதைப் பொறுத்துக் கொள்ளட்டும். எனெனில் ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அறியாமைக்கால மரணத்தைச் சந்திப்பார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4897
மேலே நாம் பார்த்த ஹதீஸ்கள் அனைத்தும் அதிகாரமுள்ள ஆட்சித்தலைவரை விட்டு ஒருவர் வெளியேறலாகாது என்பதை அழகாக எடுத்துச் சொல்கின்றன. எனவே இவற்றிலிருந்து சாரம்சமாக கீழ்வரும் விடயங்களை சுடடிக் காட்டலாம்.
1- தலைவரென்பவர் அதிகாரமுள்ளவராகும்.
2- அதிகாரமுள்ள தலைவருக்கே பைஅத் செய்ய வேண்டும் அவ்வாறு பைஅத் செய்யாதவர் அறியாமைக்கால மரணத்தைச் சந்திப்பார்.
3- ஜமாஅத் என நபியவர்கள் கூறுவது பொதுவான முஸ்லிம் கூட்டமைப்பைத்தான்.
கிலாபத்தைப் பொறுப்பேற்றவர் வீடுவீடாகச் சென்று பைஅத் பெறுவதில்லை. மக்கள் மன்றில் எல்லோக்கும் முன்னிலையில்தான் பைஅத் பெறுவார். இஸ்லாமிய வரலாற்றில் அரியனை ஏறிய கலீபாக்களும் இவ்வாறுதான் பைஅத் பெற்றுள்ளார்கள் என்பதை வரலாற்றில் காண்கின்றோம். தனித்தனியாக பைஅத் பெறுவது நுபுவ்வத்துக்கு மட்டுமே சொந்தமாகும். ஏனெனில் அது இஸ்லாத்துக்காக எடுக்கப்படும் பைஅத் ஆகும். அது நபியவர்களோடு முற்றுப் பெற்றுவிட்டது. ஆகவே இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமூன் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும்; கூட்டத்தின் தலைவர், வீடுவீடாகச் சென்று பைஅத் பெறுவதைப் போல தனித்தனியாகவே தனது அணிக்கு ஆள் திரட்டுகின்றார். அவரை ஏற்க மறுப்போருக்கு எதிராக மேலுள்ள ஹதீஸ்களையே வைக்கின்றார் என்பதன் மூலம் கிலாபத் என்பதற்கு அப்பால் நுபுவ்வத்திலேயே தனது கையை அவர் வைத்து விட்டார் என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதெனலாம். இன்னோர் அம்சத்தை நாம் கீழை அவதானிப்போம் .
صحيح مسلم 4910 – عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُنَابِذُهُمْ بِالسَّيْفِ فَقَالَ « لاَ مَا أَقَامُوا فِيكُمُ الصَّلاَةَ وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلاَتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ فَاكْرَهُوا عَمَلَهُ وَلاَ تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ ».
‘உங்களுடைய சிறந்ததலைவர்கள் எத்தகையோரென்றால் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள் அவர்கள் உங்களை விரும்புவார்கள். அவர்களுக்காக நீங்கள் பிராத்திப்பீர்கள் உங்களுக்காக அவர்கள் பிராத்திப்பார்கள். உங்களுடைய கெட்ட தலைவர்கள் எத்தகையோரென்றால் நீங்கள் அவர்களைக் கோபமூட்டுவீர்கள். அவர்கள் உங்களைக் கோபமூட்டுவார்கள். அவர்களை நீங்கள் சபிப்பீர்கள் உங்களை அவர்கள் சபிப்பார்கள்’ என்று நபியவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே நாங்கள் அவர்களோடு போர் செய்யட்டுமா’ எனக் கூறப்பட்டது. அதற்கவர்கள் ‘தொழுகையை உங்களில் அவர்கள் நிலைநாட்டும் வரைக்கும் அவர்களுக்கெதிராக நீங்கள் போராட வேண்டாம்’ (அதிகாரமுள்ள) உங்கள் தலைவரிடம் வெறுக்கத்தக்க ஒரு விடயத்தை நீங்கள் கண்டால் அவருடைய (அந்தச); செயலை வெறுத்து விடுங்கள் (அவருடைய) கட்டுப்பாட்டிலிருந்து (உங்கள்) கையைக் களைந்து விட வேண்டாம்.
அறிவிப்பவா: அவ்பிப்னு மாலிக் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4910
ஜமாஅத்துல் முஸ்லிமூனுடைய தலைவர் மக்கள் விரும்பக்கூடியவராக நல்லவராகவே இருப்பார். நபியவர்கள் இந்த ஹதீஸிலே கூறவது ஆட்சியளர்களைப் பற்றியேயன்றி ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய தலைவரையல்ல. ஏனென்றால் அட்சியாளர்களோடுதான் மக்கள் கோபிப்பார்கள். இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய தலைவரோடு அவருக்கு பைஅத்துச் செய்திருக்கும் யாரும் கோபிப்பதில்லை. அவரை மானசீக குறுவாகவே மதிக்கின்றார்கள். அவர் மீது அன்பைச் சொரிகின்றார்கள். அன்பை மாத்திரம் நபியவர்கள் சொல்லியிருந்தால் பராவாயில்லையெனலாம். ஆனால் அதற்கு மாற்றமாக அந்த ஆட்சியாளர்களோடு மக்கள் கோபிப்பார்கள் என்று நபியவர்கள் சொல்கிறார்கள். இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனுடைய தலைவரோடு யாராவது கோபித்தாலோ, சண்டை பிடித்தாலோ அவரை தலைவர் முர்தத் என்று சொல்லித் துரத்திவிட்டு விடுவார். ஆகவே அதிகாரமுள்ள ஆட்சியாருக்குத்தான் மக்களிடம் பைஅத் பெறும் தகைமையுண்டு உன்பதை அடித்துக் கூறலாம்.
صحيح مسلم 4899 – عَنْ نَافِعٍ قَالَ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ حِينَ كَانَ مِنْ أَمْرِ الْحَرَّةِ مَا كَانَ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ فَقَالَ اطْرَحُوا لأَبِى عَبْدِ الرَّحْمَنِ وِسَادَةً فَقَالَ إِنِّى لَمْ آتِكَ لأَجْلِسَ أَتَيْتُكَ لأُحَدِّثَكَ حَدِيثًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ لَقِىَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ لاَ حُجَّةَ لَهُ وَمَنْ مَاتَ وَلَيْسَ فِى عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً »
யஸீதுப்னு முஆவியாவுடையய காலத்தில் (அவருடைய ஆட்சியில் அதிருப்தியடைந்து) ஹர்ரா எனுமிடத்தில் அப்துல்லாஹிப்னு முதீஃ ஒதுங்கியிருந்த போது அவரிடம் அப்துல்லாஹிப்னு உமர் வந்தார் அபூ அப்துர்ரஹ்மானுக்கு தலையணையைக் கொடுங்கள் என்று அப்துல்லாஹிப்னு முதீஃ கூறியதும் ‘நான் உங்களிடம் அமர வரவில்லை. நபியவர்களிடமிருந்து கேட்ட ஒரு ஹதிஸை சொல்லவே வந்தேன் என்று அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) அவர்கள் சொல்லி விட்டு ‘யார் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைக் களைந்து கொள்கின்றானோ அவனுக்கு சார்பான ஆதாரமில்லாமலேயே அல்லாஹ்வை மறுமையில் அவன் சந்திப்பான். யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லாமல் மரணிக்கின்றாறோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு உமர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4899
இஸ்லாம் இல்லையென்பதற்காக அப்துல்லாஹிப்னு முதீஃ ஒதுங்கியிருக்கவில்லை. ஆட்சி சரியில்லையென்பதற்காகவே அவர் ஒதுங்கியிருந்தார். எனவேதான் யஸீதுப்னு முஆவியாவுடைய ஆட்சிக் கொதிராகவிருந்த அப்துல்லாஹிப்னு முதீஃ ஒதுங்கியிருப்பது தவறு என்பதை அவருக்கே விளங்கப்படுத்திய நபித்தோழர் அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) அவர்கள் ‘யார் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைக் களைந்து கொள்கின்றானோ அவனுக்கு சார்பான ஆதாரமில்லாமலேயே அல்லாஹ்வை மறுமையில் அவன் சந்திப்பான். யாருடைய கழுத்திலே பைஅத் (உடன்படிக்கை) இல்லாமல் மரணிக்கின்றாறோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவியவனாவான். என நபியவர்கள் சொன்ன செய்தியைக் குறிப்பிடுவதிலிருந்து நபியவர்களுக்கு அடுத்ததாக கிலாபத்தில்தான் பைஅத் எடுக்கப்படல் வேண்டும். அதை விட்டொதுங்குவதே அறியாமைக் கால மரணத்தைத் தரக் கூடியதாகும் என்பது தெளிவாகவுள்ளது.
صحيح البخاري 7111 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ قَالَ لَمَّا خَلَعَ أَهْلُ الْمَدِينَةِ يَزِيدَ بْنَ مُعَاوِيَةَ جَمَعَ ابْنُ عُمَرَ حَشَمَهُ وَوَلَدَهُ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُنْصَبُ لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ وَإِنَّا قَدْ بَايَعْنَا هَذَا الرَّجُلَ عَلَى بَيْعِ اللَّهِ وَرَسُولِهِ وَإِنِّي لَا أَعْلَمُ غَدْرًا أَعْظَمَ مِنْ أَنْ يُبَايَعَ رَجُلٌ عَلَى بَيْعِ اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُنْصَبُ لَهُ الْقِتَالُ وَإِنِّي لَا أَعْلَمُ أَحَدًا مِنْكُمْ خَلَعَهُ وَلَا بَايَعَ فِي هَذَا الْأَمْرِ إِلَّا كَانَتْ الْفَيْصَلَ بَيْنِي وَبَيْنَهُ
மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, ‘மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்” என்றார்கள
அறிவிப்பவர் : நாபிஉ(ரஹ்)
ஆதாரம்: புஹாரி 7111
ஆட்சித்தலைமையிடம்தான் மக்கள் பைஅத் பெறவேண்டும் என்பதையே இந்த ஹதீஸிலும் நபித் தோழர் அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பைஅத் என்பது ஆட்சித்தலைமையிடமே பெறப்படும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ் இன்னும் தெளிவாய் கூறுகின்றது.
صحيح البخاري 7203 – حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ قَالَ شَهِدْتُ ابْنَ عُمَرَ حَيْثُ اجْتَمَعَ النَّاسُ عَلَى عَبْدِ الْمَلِكِ قَالَ كَتَبَ إِنِّي أُقِرُّ بِالسَّمْعِ وَالطَّاعَةِ لِعَبْدِ اللَّهِ عَبْدِ الْمَلِكِ أَمِيرِ الْمُؤْمِنِينَ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ مَا اسْتَطَعْتُ وَإِنَّ بَنِيَّ قَدْ أَقَرُّوا بِمِثْلِ ذَلِكَ
அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் நான் இப்னு உமர்(ரலி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், ‘நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்’ என்று எழுதித் தந்தார்கள
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்)
ஆதாரம்: புஹாரி 7203
நபித்தோழர்களின் பார்வையில் பைஅத் என்பது நபியவர்களுக்குப் பின்னால் கிலாபத்துக்கு மாத்திரம்தான் இஸ்லாத்தைச் சொல்வதாகக் கூறும் எந்த அமைப்புக்கும் நபித்தோழர்கள் பைஅத்தைக் கொடுக்கவில்லை. பைஅத் விடயத்தில் முஃமின்களுடைய பாதை இவ்வறுதான் காணப்பட்டது. எனவேதான் முஃமின்களின் பாதையை விட்டும் விலகியதாக இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீன் கருதப்படுகின்றது. எனவே பைஅத் என்பது இரு வகைப்படும் அதில் முதலாவது ஆன்மீக பைஅத்தாகும் இது நபியவர்களோடே முற்றுப் பெற்று விட்டது. அடுத்ததாகவுள்ளது ஆட்சிக்கான பைஅத்தாகும் இது கலீபாக்களிடமேயே பெறப்படும். இதிலிரண்டிலுமே இன்றுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீன் இல்லை.