ஆரம்ப காலத்தில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் ஸலபுகளின் வழிமுறையில் அடியொற்றி வாழ்ந்த மக்களே சுன்னத் வல் ஜமாத் என அழைக்கப்பட்டனர் எனினும் தற்காலத்தில் தமிழுலகில் அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் முரணாக கப்ருகளை (சமாதிகளை) வணங்கிவரும் வழிகேடர்களே தங்களின் வழிகெட்ட இயக்கத்திற்கு சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை சூட்டி தங்களை ஸுன்னத்துல் வல் ஜமாஅத் என அழைத்துவருகின்றனர்.
இந்த வழிகேடர்களின் வழிகெட்ட குப்ரான செயல்கள் சில:
1) ஒருவரை (சமுதாயத்தில் நல்லவராக தோற்றமளிப்பவரை) அல்லாஹ்வின் நேசத்தை பெற்றவர் என்று தீர்ப்பு (வஹீ?) வழங்குவது.
2) அவரது மரணத்துக்கு பின்னர் அவரது கப்ரை தரைமட்டத்துக்கு மேலாக உயர்த்துவது, பின்னர் தர்காஹ் எழுப்புவது.
3) அந்த நல்லவர் (!?) எழுதிய கவிதைகள், பாடல்கள் ஆகியவை களங்கம் இல்லாத புனிதமானவைகள் என்று சிறப்பிப்பது. (அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டுமே களங்கம் இல்லாதவைகள்!)
4) அந்த நல்லவருக்கு ஆண்டு விழா எடுத்து பெருநாளாக கொண்டாடுவது, அந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து சில இடங்களில் கலை நிகழ்சிகளிலும் பங்கெடுக்கின்றனர்!
5) கப்ரின் முன்னால் நின்று நமக்காக துவா செய்வது (துவா என்பது ஒரு வணக்கம்! அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது)
6) பிள்ளைவரம், நோய் நிவாரணம், குடும்ப பிரச்சினைக்கு தீர்வு, மனநோய்க்கு நிவாரணம், குறைகளுக்கு பரிகாரம், தொழிலில் பறக்கத், கல்வியில் வளம்பெற, வேலைவாய்ப்பு கிடைத்திட போன்றவைகளுக்கு அல்லாஹ்விடம் முறையிடுவதைப்போல் அவுலியாவின் சந்நிதியில் பக்திபரவசத்துடன் (!?!) முறையிடுவது
7) தம் வேண்டுதல்களுக்காக பழவகைகள், உணவுகள், மட்டும் ஆடுமாடுகளை அறுத்து பலியிடுவது போன்ற நேர்ச்சைகளை செய்வது (நேர்ச்சை என்பது ஒரு வணக்கம்! வணக்கம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது!)
8) கப்ரின் மீது சார்த்தப்படும் பூவை புனிதமாக கருதி பாதுகாப்பது.
9) கப்ரின் முன் எரிக்கப்படும் விளக்கின் எண்ணையை புனிதமாக கருதி குடிப்பது, தலையில் தடவுவது, கைகாலில் தடவுவது.
10) கப்ரின் முன் வைக்கப்படும் பழங்களை பிராசதமாக, புண்ணியமானதாக கருதி பவ்வியத்தோடு உண்பது
11) வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னர் அவுலியாவின் ஆசியை பெற (!?) பாஸ்போர்ட் மற்றும் பயணசீட்டை கப்ரின் முன் வைத்து (!?) எடுப்பது.
12) பிறந்த குழந்தையை சந்நிதானத்துக்கு (!?) கொண்டுவந்து ஆசி (!?) பெறுவது
13) திருமண தம்பதிகளை அழைத்து வந்து ஆசி பெறுவது.
14) சந்தனக்குடம், கொடிக்கெட்டு, உண்டியல் போன்றவைகள்
15) அனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற அல்லாஹ்வின் “புனித ஹரமை” நோக்கி பயணப்படுவதற்கு கூட அவுலியாவின் ஆசி (!?) பெறுவதும், திரும்பி வரும்போது நேராக சந்நிதானத்தில் வந்து "ஹஜ்ஜை நிறைவேற்றிட அருள் புரிந்த" (அஸ்தஹ்பிருல்லாஹ்) அவுலியாவுக்கு நன்றி செலுத்துவது.
16) மேலும் அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள்..
சுருக்கமாக சொல்வதானால் இவர்களிடம் வெறும் ஜமாத்து மட்டும்தான் உள்ளது.. சுன்னத்து இல்லை.