இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

- மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி

நுழைவாயில்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும் நமது தூதரும், வழிகாட்டியுமான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், மற்றும் நல்லடியார் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

வழிகெட்ட பிரிவுகளின் வருகை:

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் சீர்குலைக்கும் அனைத்து வழிகெட்ட பிரிவுகளின் தோற்றம், வருகை பற்றி ஆய்வு செய்தால் அவை ஒவ்வொன்றும் குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் தமது சித்தாந்தங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் ஆதாரங்களாக சித்தரித்துக் கொண்டு முளைத்திருப்பதையும், பிரச்சாரம் செய்திருப்பதையும் பார்க்கின்றோம். இவற்றின் பின்னணியில் யூதக்கும்பலின் மறைமுகமான சதி இருந்தே வந்திருக்கின்றது என்பது வெள்ளிடை மலை.

‘இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்’ என்ற தலைப்பில் இந்த நூலில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகளில் ‘அஸ்மா, வஸ்ஸிபாத்தை’ திரித்தும், பொருள் மாற்றம் செய்தும் மறுத்தும் கூறும் ‘ஜஹ்மிய்யா’ சிந்தனைத் தாக்கம் பெற்ற அஷ்அரிய்யா என்ற பிரிவினர், கப்ரு வணங்கிகள், ஹவாரிஜ்கள், ஷீஆக்கள், காதியானிகள், போராக்கள், ஆகிய பிரிவுகள் பற்றியும், இஸ்லாமியக் கொள்கையில் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் கூற இருக்கின்றோம்.

இஸ்லாமிய வரலாற்றின் வழிகெட்ட பிரிவுகளின் தரப்படுத்தல் வரிசையில் ‘முதலாவதாக ஹவாரிஜ்கள், அதன் பின்னர் ராபிழாக்கள் எனப்படும் ஷீஆக்கள், பின்னர் அலி (ரழி) அவர்களைக் குறைகாணும் ‘நவாஸிப்கள்’, அதன் பின்னர் ‘கத்ரிய்யா’, ஜப்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, ஆகிய பிரிவுகள் இஸ்லாமிய ஆய்வாளர்கள் மூலம் தரப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. நாம் மேற் சொன்ன இந்தப்பிரிவுகளுடன் கப்று வணங்கிகளை நமது நூலின் முதல் பிரிவாக இனம் காட்டியுள்ளோம்.

இவர்களை காரசாரமாக விமர்சனம் செய்த அறிஞர் பெருமக்கள், நபி (ஸல்) அவர்களின் இறுதிக் காலத்தில் நபித்துவத்தை வாதாடிய பொய்யன் முஸைலமாவின் நபித்துவ வாதம் பற்றி பேசாமல் விட்டுவைத்துள்ளனர் என்பதை அறிவீர்கள்.

மாவீரர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களால் முளையிலேயே அவர்கள் கிள்ளி எறியப்பட்டு, அவர்களின் கொட்டம் அடக்கப்பட்டதால் பொய் நபித்துவம் பற்றி அக்கால அறிஞர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே தெரிகின்றது. குப்பையை மீண்டும் கிளறுவதா? என்ற பாணியில் விட்டுவைத்துள்ளார்கள் போலும். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).

எனினும், காதியானிகள் என்ற நவீன முஸைலமாக்களது வாரசுகளின் ஊடுருவல் நமது நாட்டில் பரவலாகக் காணப்படுவதாலும், மார்க்க அடிப்படை தெரியாத, படித்த மக்கள் பலர் அவர்களின் வலையில் சிக்கிக் கொள்வதாலும் காதியானிகளைப் பற்றிய ஆய்வும் நமது இந்த நூலில் இடம் பெறுகின்றது. இந்த நூலைப்படிக்கும் நீங்கள் இதைத் தொகுத்து எழுதிய எனக்காகவும், எனது குடும்பத்திற்காகவும், சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ் நமது பணியை அங்கீகரித்து அருள் செய்வானாக!

வழிகெட்ட பிரிவுகள் பற்றி:

இஸ்லாத்தின் பெயரால் பல நூறு பிரிவுகள் தோன்றி இஸ்லாமிய மார்க்கத்தைச் சீரழித்திருக்கின்றன என்பதை அவற்றின் வரலாறுகளைப் பற்றிப்படிக்கின்ற போது அறிய முடிகின்றது.

அவற்றில் சில மார்க்கத்தில் புதிய, புதிய திக்ர்கள், தொழுகைகள், அவ்ராதுகள், வாளாயிப்கள் எனப்படும் மார்க்க அம்சங்களை தோற்றுவித்து மக்களை வழிகெடுத்திருக்கின்றன.

திஜானிய்யா, சூபிய்யா, கப்றுவணங்கிகள், ஷீஆ, பஹாயிய்யா, போரா, பாபிய்யா போன்ற பிரிவுகள் இதில் குறிப்பிட முடியும். இவற்றில் மற்றும் சில பிரிவுகள் சிந்தனை ரீதியாக மக்களைத் தூண்டி வழி கெடுத்திருக்கின்றன. ஹவாரிஜ், முஃதஸிலா, கத்ரிய்யா, ஜப்ரிய்யா, ஜஹ்மிய்யா போன்ற பிரிவுகளை இதில் குறிப்பிட்டுக்காட்ட முடியும்.

இந்தப் பிரிவுகளில் சிலது பலவீனமான, ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு தமது வழியை தேர்வு செய்திருக்கின்றன. மற்றும் சிலது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை வழி கெடுத்திருக்கின்றன.

இவை பற்றிய தகவல்களை அந்தந்த காலத்து அறிஞர்கள் எதிர்த்துப் போர்க் கொடி தொடுத்துள்ளனர். இந்தப்பிரிவுகளின் வழிகேட்டின் வகைகள் பற்றிய விபரங்களை தமது நூல்களிலும் பதிவு செய்துள்ளனர். ஒரு சில அறிஞர் பெருமக்கள் தனித்தொகுப்பாக நூல்கள் எழுதியுள்ளனர்.

ஹதீஸ் கலை அறிஞர்களின் கூற்றுக்கள் அறிவிப்பாளர் பற்றிய தகவல்களைத் தரும் நூல்களிலும், ஹதீஸ்களுக்கு விளக்கமளிக்கின்ற அறிஞர்களின் நூல்களிலும் மடைதிறந்த வெள்ளம் போல் காணப்படுகின்றன.

இமாம்களான இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிஹாயா, இமாம் ஸஹபி அவர்களின் ஸியர் அஃலாமின்னுபலா, இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்களின் பத்ஹுல்பாரி, இமாம் நவவி அவர்களின் ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் போன்ற நூல்களை இதற்கு ஆதாரமாகக் கூற முடியும். தவறான கொள்கைகளை இனம் காட்டிய நூற்றுக்கணக்கான நூல்களில் முக்கிய சில நூல்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பார்த்துப் பயன் பெறலாம்.

இமாம் அப்துல் காதிர் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் ‘அல்பிரக் பைனல் பிரக் என்ற நூலையும், ஷஹ்ருஸ்தானி என்பவர் ‘அல்மிலல் வன்னிஹல்’ என்ற தனியான நூலையும் ஆரம் காலத்தில் எழுதி இவ்வாறான பிரிவுகள் பற்றித் தெளிவாக அடையாளம் காட்டி இருக்கின்றனர்.

அதே போன்று மற்றும் இப்னு தைமிய்யா அவர்கள் ‘மின்ஹாஜுஸ்ஸுன்னா’ ‘ஷரஹ்அகீதத்தில் அஸ்ஃபஹானிய்யா’ ‘ரிஸாலா அத்ததம்முரிய்யா’ போன்ற பல தொகுப்புக்களை எழுதி இருக்கின்றார்கள். ‘இஜ்திமாவுல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா’ என்ற தலைப்பில் அவரது மாணவரான இப்னுல் கைய்யூம் அவர்கள் பெறுமதிமிக்கதோர் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதுபோன்ற அறிஞர்களின் நூற்களையும், மற்றும் பல அறிஞர்களின் ஆய்வுகளில் இருந்து வழி தவறிய பிரிவுகளில் மிக முக்கியமானது என நாம் தெரிவு செய்தவற்றின் பெயர்களை மாத்திரம் இங்கு தரப்படுகின்றோம்.
அவற்றில் சில அழிந்து விட்டன, மற்றும் சில வேறு பிரிவுகளுடன் இணைந்து கொண்டன. மற்றும் சிலவற்றின் சிந்தனைப் பரிணாமம் தற்போதும் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவிக்காணப்படுகின்றன. அவற்றையும் நாம் அடையாளம் காட்டி விபரித்துள்ளோம்.

வழி கெட்ட பிரிவுகள் தோன்றிய போதெல்லாம் நபித்தோழர்களினதும், தாபியீன்களினது நிலைப்பாடு பற்றியும், இமாம்களின் பங்களிப்புக்கள் பற்றியும், அவர்களின் நூல்கள் பற்றியும் நாம் பின் வரும் தொடர்களில் சுருக்கமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.


முக்கிய பிரிவுகளின் பெயர்கள்:

பொய் நபித்துவத்தை வாதிட்ட (முஸைலமாக்கள்) தற்போதைய காதியானிகள், ஹவாரிஜ், முர்ஜிய்யா, கத்ரிய்யா, ஷீஆ (ராபிழா), முஃதஸிலா, ஜஹ்மிய்யா, அஷாயிரா (அஷ்அரிய்யா), மாத்ரூதிய்யா, கர்ராமிய்யா, முஷப்பிஹா, முஅத்திலா, புகைரிய்யா, ளராவிய்யா, ஹர்பிய்யா, அத்திஜானிய்யா,அல்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் உள், மற்றும் வெளி அர்த்தங்கள் உண்டு என வாதிடும் பாதினிய்யா.

இவற்றில் ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, ஹவாரிஜ், முஃதஸிலா ஆகிய பிரிவுகள் இவை அனைத்துக்கும் தலையான பிரிவுகள் என இமாம் இப்னு (ரஹ்) அவர்களால் வர்ணிக்கட்டுள்ளது.

பாதினிய்யாக்கள் ஷீஆக்களில் இருந்து பிரிந்த ஒரு பிரிவாகும். இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான பல சித்தாந்தங்களை தோற்றுவிக்க அது வழிகோலியது. இமாமத்தைப் பிரதிபலித்தே இவர்களின் செயற்பாடுகள் அமைந்தன. இவர்கள் இஸ்மாயீலிய்யா, கராமித்தா, இஹ்வானுஸ்ஸபா, ஹஷ்ஷாஷுன், சுலைஹிய்யூன், பாதிமிய்யா, அல்லது பாதிமிய்யூன், நுஸைரிய்யா, துரூஸ் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.இஸ்லாமிய உலகில் தமெக்கென உறுப்பினர்ளைக் கொண்ட இந்தப்பிரிவுகள் முஸ்லிம் உலகை திகில் கொள்ளச் செய்கின்ற நிகழ்வுகளை உண்டு பண்ணியுள்ளனர்.

இந்தப் பிரிவில் இருந்தே பாபிய்யா, பஹாயிய்யா, காதியானி, போரா போன்ற பிரிவுகள் உண்டாகின. இவர்கள் இன்தோனேஸியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றனர். இந்தப்பிரிவினர் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஆனால் பாதினிய்யா என்பது இந்தப் பிரிவுகளின் மொத்தமான பெயராகும்.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகளில் ஷீஆக்களில் விபரமற்றவர்கள் அதிகம் காணப்படுவதால் ஷீஆ இஸ்லாத்தில் உள்ள இமாமத்தைக் காரணம் காட்டியே இவ்வளவு பல பிரிவுகள் அதற்குள்ளிருந்தே தோன்றியுள்ளதாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவை ஒவ்வொரு பிரிவும் பல பிரிவுகளாயின. எனினும் இவைகள் அனைத்தும் இப்போது இல்லை. என்றாலும் இவற்றின் கோட்பாடுகள் ஏனைய பிரிவுகள் மத்தியில் ஊடுருவிக் காணப்படுவதைப் பார்க்கின்றோம்.

உதாரணமாக ஒரு மனிதன் முக்தி நிலையை அடைகின்ற போது கடமைகள் கடமையற்றவனாக மாறுவான் என்ற கற்பனைக் கோட்பாட்டை உருவாக்கிய பாதினிய்யாக்களுக்கும், சூபிகள், அல்லது தப்லீக் இயக்கத்தினர் ஆகிய பிரிவுகளுக்கும் மத்தியில் காணப்படும் நெருங்கிய உறவுகளையும், ஷீஆக்களுக்கும், கப்று வணங்கிகளுக்கும் இடையில் காணப்படும் கருத்தொற்றுமைகளையும், முஃதஸிலா, ஹவாரிஜ் ஆகியோருக்கும், இரு எழுத்து அழைப்பாளரைப் பின்பற்றும் தவ்ஹீத்வாதிகளுக்கும் இடையில் காணப்படும் உறவையும் பொய்யன் பின் முஸைலமாவுக்கு வால்பிடித்தவர்களுக்கும், காதியானிகளுக்கும் இடையில் காணப்படும் உடன்பாட்டையும் குறிப்பிடலாம்.

இவற்றில் இஸ்லாத்தை சீர் குலைக்கின்ற முக்கிய பிரிவுகளாக நாம் கருதியவைகளை மாத்திரம் இனம் கண்டு இங்கு எடுத்தெழுகின்றோம். சுன்னத் ஜமாத் பெயரில் வழிகெட்ட கப்று வணங்கிகள், காதியானிகள், ஷீஆக்கள், ஹவாரிஜ், முஃதஸிலா, அஷ்அரிய்யா, ஜஹ்மிய்யா, போரா ஆகிய முக்கிய சில பிரிவுகள் பற்றி மாத்திரம் இங்கு எடுத்தெழுதப்படுகின்றன.

நமது நாட்டு அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் கல்விப் பொதுத்தராதர உயர் தர முஸ்லிம் மாணவர்களையும், முஸ்லிம் சமூகத்தினையும் இணைத்த ஒரு நூலாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இவ்வாறு செய்யக்காரணமாகும். அல்லாஹ் அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைப்பானாக!

நமது இந்த தொடரில் பைஅத் (உமர் அலி) ஜமாத், அஹ்லுல் குர்ஆன், வஹ்தததுல் உஜுத், அஹ்லுல் ஹுலூல், வல் இத்திஹாத், சூபிய்யா, தரீக்காக்கள் போன்ற வழிகெட்ட பிரிவுகள் பற்றிய எவ்வித பேச்சும் இன்றி அவை சுதந்திரமாக விட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தப்லீக் ஜமாத்தும் இணைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இரண்டாவது பகுதியில் வெளிவர இருக்கின்றன. அதில் நீங்கள் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்

பெயர்கள் வரக்காரணம்:

இந்தப் பிரிவுகளுக்கான பெயர்கள் அந்த சிந்தனையை முதல் முதலில் பிரதிபலித்தவர், அல்லது அவரது கருத்தைப்பிரதி பலித்த பிரபல்யமிக்க மாணவர், அல்லது அந்தக்கருத்தின் அடிப்படையில் பெயர்கள் சூடப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக கத்ரிய்யா என்ற பிரிவனர் ‘விதி’ கத்ரை மறுத்ததனால் வந்ததாகும். அந்த சிந்தனையை முதன் முதல் முதலில் கைலான் அத்திமஷ்கி என்பவனே முன்வைத்தவன். அவனது பெயரில் அந்தப் பிரிவின் பெயர் இடம் பெறவில்லை.

அவ்வாறே, இமாமிய்யாவிப் பிரிவான ஷீஆக்களை எடுத்துக் கொண்டால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அலி (ரழி) அவர்களே ஆட்சிக்குத் தகுதியானவர் என்ற கருத்தை முன்வைக்கின்ற காரணத்தால் ‘இமாமிய்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஹவாரிஜ்களின் பெயருக்கான காரணமும் அதே போன்றுதான். இவ்வாறு ஒவ்வொரு பிரிவும் ஒரு காரணப் பெயர் அல்லது அதை தோற்றுவித்தவரின் பெயரில் அழைக்கப்படும். இதன் விளக்கம் பற்றி அதன் தொடர்களில் காண்க.

நேர்வழியைப் பின்பற்றுவதன் அவசியம்

மனிதன் சிந்தனையுடையவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஆனால் அது குறுகியதாகவே உள்ளது. அதனால் அவனால் இயற்றப்படும் சட்டங்களும், ஒழுங்குகளும் குறைவுள்ளதாகவே காணப்படும். ஆகவே அவன் எவ்வித குறைவுமற்ற, சகலதையும் அறிந்த ஒரு வழிகாட்டல் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றான்.

அந்த அடிப்படையில் இந்த உலகை சீராக நிர்வகிக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டலைத்தவிர வேறு எந்த வழிகாட்டலாலும் இக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது.

‘நீங்கள் இருவரும் ஒன்றாக இங்கிருந்து இறங்குங்கள், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். எனவே எவர் எனது நேர்வழியைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் மீது எவ்வித பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள்’ (அத்: அல்பகரா: வச: 38), (தாஹா வசனம்.123)

எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவறிவிடவோ, துர்ப்பாக்கியவானாகவோ ஆகிவிடமாட்டார். (ஆலு இம்ரான் 202-ல்)

‘எவர் அல்லாஹ்வைப் பற்றிக் கொள்கின்றாரோ நிச்சயமாக அவர் நேரான வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்’ என்றும் கூறப்பட்டுள்ளதை அவதானித்தால் மனித வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

வழிகேடுகளை வரவழைப்பவை:

மனோ இச்சை:
நேர்வழிக்கு பிரதான தடைக்கல்லாக உள்ளதும், உலகில் வழி கெட்ட கொள்கைகள் விரிவடைவதற்கும் மனோ இச்சைகளும் ஒரு காரணமாகும். வழிகேடுகளும், சீரழிவுகளும் நிகழ பெரிதும் பங்காற்றும் இந்த ‘மனோ இச்சை’ பற்றிய தெளிவும், எச்சரிக்கையும் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும்.

நபியே நீர் அவர்களது மனோ இச்சைகளைப்பின்பற்ற வேண்டாம். நாம் உங்கள் ஒவ்வொருவருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் ஏற்படுத்தியுள்ளோம்.
(அல்மாயிதா. வச: 48)

உமக்கு அறிவு ஞானம் வந்த பின்னரும் நீர் அவர்களது மனோ இச்சைகளைப் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியாளனோ, பாதுகாவலனோ உமக்கில்லை.
(அத்: அர்ரஃத். வச: 37).

சத்தியம் அவர்களது மனோ இச்சைகளைப் பின்பற்றினால் வானங்களும், பூமியும், அவற்றில் இருப்பவையும் கெட்டிருக்கும்.
(அத்: அல்முஃமினூன். வச: 71)

அவை நீங்களும், உங்கள் மூதாதையரும் சூட்டிக் கொண்ட பெயர்களே அன்றி வேறில்லை. அல்லாஹ் இதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. அவர்கள் வெறும் யூகங்களையும், மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர்.(எனினும்) இவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி இவர்களுக்கு வந்தேயுள்ளது. (அத்: அந்நஜ்ம். வச:23)

மனோ இச்சையில் இருந்து தூர விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இது போன்ற பொருளில் அமைந்த பல வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெறுவதைப்பார்க்கின்றோம்.

இஸ்லாத்தில் தோன்றிய குழுக்களை எடுத்துக் கொண்டால் மனோ இச்சை முதன்மைக்காரணிகளில் ஒன்றாக இருப்பதை அவதானிக்கலாம். மனோ இச்சை காரணமாகவே ஹவாரிஜ்கள், ராபிழாக்கள், (ஷீஆக்கள்) தோன்றினர். ஜஹ்மிய்யாக்கள் முளைத்தனர், முஃதஸிலாக்கள் வெளிப்பட்டனர். முர்ஜியாக்கள், (ஈமான் மட்டும் போதும் என்போர்) கத்ரிய்யாக்கள், (கத்ரை மறுப்போர்); பரவினர். ஜப்ரிய்யாக்கள் (அடியானுக்கு சுய தெரிவு இல்லை என்போர்) வழிகெட்டனர். சமுதாயம் பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் மாறியது. ஒவ்வொரு குழுவும் தான் கொண்டதைக் கொண்டு மகிழ்ச்சியுறுகின்றனர். மனோ இச்சையினால் எத்தனை மார்க்கங்கள்தான் திரிபுபடுத்தப்பட்டும், மாற்றப்பட்டும், மனிதனை வழிகேட்டில் தள்ளியும் விட்டன!

அல்குர்ஆனைத் தவறாகப் புரிதல்:
இந்தப்பிரிகள் அல்குர்ஆனையும், ஹதீஸையும் தவறாகப்புரிந்தோ, அல்லது வியாக்கியானம் செய்தோ, அல்லது தமது வழிகேட்டுக்கு ஏதுவாக அவற்றை வளைத்துக் கூறியோ வழிகெட்ட தோற்றம் பெற்றிருக்கின்றன. 

 இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை கோட்பாட்டை தகர்க்கக் கூடியதாக இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேற்றக் கூடியதாக கொள்ளப்படும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்ற பொய்யன் “ஒரு நபி, உறுதி வரும் வரை வணங்கினால் போதும்” எனக் கூறி இஸ்லாமிய சட்டங்களை பாழடித்தல், அல்லாஹ் எங்கும் உள்ளான், எல்லாமாக உள்ளான், அனைத்தும் அவனே, அவன் சுத்த சூனியம், அல்குர்ஆனில் குறைவு இருக்கின்றது, அது அவனது யதார்த்தபூர்வமான பேச்சல்ல, அவன் மனிதன் போன்றவன் போன்ற சித்தாந்தங்களைக் குறிப்பிட முடியும்.

அவர்களின் பொருட்களில் இருந்து ஸதகாவை (ஸகாத்தை) எடுப்பீராக! அது அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, தூய்மைப்படுத்தும். இன்னும் அவர்களுக்காக ‘ஸலவாத்’ பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு அமைதியாகும். அல்லாஹ் நன்கு செவியேற்பவன். யாவற்றையும் அறிந்தவன். (அத்தவ்பா. வச: 103)

என்ற வசனத்தில் இடம் பெறும் வசனத்தில் நபியின் பிரார்த்தனைதான் அமைதியைக் கொண்டுவரும். அதனால் அவர்கள் மரணித்த பின் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. என்ற ஒரு தலைப்பட்சமான முடிவிற்கு ஸகாத் கொடுக்க மறுத்தமை,

ஈஸாவே நிச்சயமாக நான் உன்னைக் கைப்பற்றி, உன்னை என்னளவில் உயர்த்திக் கொள்வேன், நிராகரித்தோரை விட்டும் உன்னை தூய்மைப்படுத்தி, மறுமை நாளில் உன்னைப் பின்பற்றியோரை நிராகரித்தோரைவிட உயர்வாக்குவேன். (3: 55) என்ற வசனத்தில் இடம் பெறும் ‘ தவப்பா’ என்ற மரணிக்கச் செய்தல் என்ற பொருள் பொருத்தமற்றதாக இருந்தும் மரணிக்கச் செய்வேன். எனப் பொருள் கொடுப்பதுடன் தமது கூற்றுக்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை முன்வைத்தல்.

‘எனது இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் எனக் கூறிட நீ எனக்கு எனது கட்டளையிட்டதையே நான் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். என்னைக் கைப்பற்றிய போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய். நீ யாவற்றையும் பார்ப்பவன். (அல்மாயிதா. வச:117) என்ற வசனத்தில் மூஸா நபி உலகுக்கு மீண்டு வந்து உயிர்வாழ்ந்த பின் மரணிப்பதை எடுத்துக் கூறும் வசனத்தை ஈஸா நபி ‘மரணித்து விட்டார்கள்’ எனப்பிரச்சாரம் செய்தல். போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

தனது அறிவுக்கு முக்கியத்துவம் வழங்குதல்:
ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜுத் செய்யுமாறு அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட சைத்தான் சுஜுத் செய்ய மறுத்ததான். அவனிடம் அதன் காரணம் பற்றி கேட்கப்பட்டது, நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய், ஆதமை களிமண்ணால் படைத்துள்ளாய். களிமண்ணால் படைக்கப்பட்ட ஒருவனுக்கு நான் சுஜுத் செய்வதா என்ன! என அல்லாஹ்விடம் சைத்தான் கூறியதைக் கவனித்தால் தனதறிவிற்கு முக்கியத்துவம் அளித்து, நரகத்திற்கு இடத்தை அவனே தேடிக்கொண்டதைப் பார்க்கின்றோம்

பிடிவாதமும், பரம்பரை வாதமும்:
பிடிவாதம் ஒரு பயங்கரவாதம் போன்ற நோயாகும். பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை நம்ப மறுத்தற்கும், காரூன் இஸ்லாத்தின் இணைய மறுத்ததற்கும், அபூஜஹ்ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கவும், யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கவும், மக்காவாழ் காபிர்கள் இஸ்லாத்தில் இணைய மறுத்ததற்கும் இவைதானம் காரணமான இருந்தன என்பதை அல்குர்ஆனை படிக்கின்ற போது அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றல்:
இது காஃபிர்களிடம் அடிப்படையில் காணப்பட்டதால்தான் நபிமார்களை அவர்கள் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இணைய மறுத்தார்கள். அல்லாஹ்வின் அழிவை சந்தித்தார்கள்.

இந்தப்பண்பு அவர்களிடம் காணப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால் இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டு ஊர்வழமை, பரம்பரைப் பழக்கம், சாக்குப் போக்கு, மதிப்பை இழக்க நேரிடும் போன்ற அற்ப காணங்களைக் கூறிக் கொண்டு நேர்வழியை விட்டும் விலகி வாழும் ஒரு சாராரைப் பார்க்கின்றோம். குர்ஆன், ஹதீஸ் பேசும் ஒரு கூட்டத்திடம் கூட இந்த நிலை காணப்படுவதுதான் ஆச்சரியத்திலும், ஆச்சரியம்.

முன்னோர்களின் (ஸலபுக்களின்) அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகுதல்:
அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் அதிமதிகம் அறிந்தவர்கள் ஸஹாபாக்களும், அவர்களின் வழி வந்தவர்களுமே!

அவர்களின் விளக்கத்துடன் குறிப்பாக அகீதாவுடன் தொடர்புடைய விளக்கத்தோடு நமது விளக்கம் முரண்படுகின்ற போது நாம் அவர்களின் விளக்கத்தையே முன்னிலைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ், அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகின்றான் என ஸஹாபாக்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

வஹியின் காலத்தில் வாழ்ந்த சிறந்த மக்களால் அறிவிக்கப்படும் இது போன்ற ஹதீஸ்கள் அவர்களின் வட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்டால் மாத்திரம் நாமும் ஒதுக்க வேண்டும். இல்லை என்றால் நமது அறிவில் குறைவு இருப்பதாக நம்பி அவர்கள் போன்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

மத்ஹபைப் புனிதப்படுத்த முயற்சித்தல்:
இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகேட்டை இறக்குமதி செய்ய தனித்த ஒரு இமாமைப் முக்கியத்துவப் படுத்தியதும் ஒரு காரணமாகும். இதில் ஹனபி மத்ஹப் பெரும் பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது. ‘அல்ஹிதாயா’ என்ற முன்னுரையில் இடம் பெறும் ஒரு கருத்தைப்பாருங்கள்.

قال الشامي: وأما سلمان الفارسي، فهو وإن كان أفضل من أبي حنيفة من حيث الصحبة، لكنه لم يكن في العلم، والاجتهاد، ونشر الدين، وتدوين أحكامه كأبي حنيفة. وقد يوجد في المفضول ما لا يوجد في الفاضل.
ஸல்மான் பாரிஸி (ரழி) அவர்கள் நபித்தோழமையைக் கொண்டு அபூஹனீபாவை விட சிறந்து விளங்கினாலும், அறிவு, சட்டத்தை அகழ்ந்தெடுத்தல் (இஜ்திஹாத்), மார்க்கத்தைப் பரப்புதல், சட்டங்களைப் ஆணவப்படுத்துதல் போன்ற விஷயத்தில் அபூஹனீபாவைப் போன்றில்லை. சிலவேளை, சிறப்புக்குரியவரிடம் காணப்படாதது, சிறப்புக் குறைந்தவரிடம் காணப்படலாம். (பாக்க: ஹிதாயாவின் முன்னுரை. பக்கம். 6)

இது ஒரு மத்ஹபு நூலின் முன்னுரையில் பதியப்பட்டுள்ள வாசகங்களாகும். மற்றொரு வாசகத்தைக் கவனியுங்கள்.
لا يجوزتقليد ما عدا المذاهب الأربعة ولو وافق قول الصحابة والحديث الصحيح ، والآية. فالخارج عن المذاهب الأربعة ضال مضل. ربما أداه ذلك إلى الكفر.لأن الأخذ بظواهر الكتاب ، والسنة من أصول الكفر . (حاشية الصاوي على تفسير الجلالين .3ஃ10 ط. إحياء التراث العربي.
‘நான்கு மத்ஹப் அல்லாத எந்த ஒரு வழிமுறையையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. அது ஸஹபாக்களின் தீர்ப்பையும், ஸஹீஹான நபிவழியையும், குர்ஆன் வசனத்தையும் ஒத்ததாக இருந்தாலும் சரியே! (மத்ஹபையே பற்றிக் கொள்ள வேண்டும்). ஏனெனில் நான்கு மத்ஹபுகளுக்கும் அப்பாற்பட்டவன் வழிகெட்டவனும், வழிகெடுப்பவனுமாவான். அது சிலவேளை இறை மறுப்பின் பக்கம் இட்டுச்செல்லலாம். குர்ஆன், மற்றும் ஹதீஸில் வெளிப்படையாக தெரிவதை எடுப்பது (அமுல் செய்வது) குஃப்ரின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. (ஆதார நூல்: ஹாஷியத்துஸ்ஸாவி அலல்ஜலாலைன். பாக: 3- பக்கம். 10).

குர்ஆனையும், நபிவழியையும், நபித்தோழர்களின் தீர்ப்பையும் அவமதிக்குமாறு போதனை செய்யும் மத்ஹபுகளின் சித்தாந்தங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் இன்றும் இந்த தீர்ப்பே மேலோங்கி இருப்பதைக் காணுகிறோம் .


மார்க்கத்தைப் புரிந்து கொள்ள சில அடிப்படைகள்:

மார்க்கத்தில் மனித விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை:

இஸ்லாம் பரிபூரணமான வாழ்க்கை நெறியாகும். மலசலம் கழிப்பது முதல் அரசியல் விவகாரம் வரையுள்ள சகலவிதமான அம்சங்களையும் அது தெளிவுபடுத்தி விட்டது. அதில் கூடுதல், குறைவு செய்யவோ, அல்லது அதை மூதாதையர் மயமாக்கல் செய்யவோ எவருக்கும் அதிகாரம் கிடையாது. இதை அல்லாஹ்வின் திருமறை வசனங்களும், அவனது இறுதித்தூதரின் போதனைகளும் உறுதி செய்கின்றன.

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
(நபியாகிய) இவர் நம்மீது சில வார்த்தைகளையேனும் இட்டுக்கட்டிக் கூறுவாரானால் அவரை நாம் வலக்கரத்தினால் பிடிப்போம், பின்னர் அவரது நாடி நரம்பை தறிப்போம். (அத்: 69. வசனங்கள் : 44 – 46)

َ
 أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
ي
ا
நபியே அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? உமது மனைவியரின் பொருத்தங்களை விரும்புகின்றீரோ? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், நிகரற்ற அன்புடையோனமாவான். (66: வச: 01)

நபி (ஸல்) அவர்களுக்குக்கூட அல்லாஹ்வின் அனுமதியின்றி அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மார்க்கத்தில் இல்லாததைக் கூறவோ, ஒரு ஹராத்தை ஹலாலாக்கவோ உரிமை தரப்படவில்லை என்றால் நமது நிலை எப்படி! என்பதை சிந்திக்க வேண்டும். மேற்படி வசனங்களின் கருத்தில் அமைந்த பல வசனங்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன.

மரணித்தவர்களும், மார்க்கமும்:
மனிதனாக படைக்கப்பட்ட அனைவரும் ஒருநாள் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். அகிலங்களின் அதிபதியும், அர்ஷின் இரட்சகனுமாகிய அல்லாஹ் மாத்திரமே என்றும் நிலையானவன், நித்தியஜீவன்.

இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவிற்கு என்ன கடமைகள் செய்யப்பட வேண்டும் என கட்டளையிட்டார்களோ, அது விஷயத்தில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ, மேலும் எவற்றை எல்லாம் அவர்கள் செய்யாது மௌனமாக இருந்தார்களோ அவை அனைத்தையும் நாமும் அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வகையில் மரணித்த மனிதர்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? நல்லடியார்களுக்காக கப்ர்களில் கட்டடம் கட்டுதல், அவர்களிடம் தேவைகளை வேண்டுதல், அவர்களுக்காக கந்தூரி நடத்துதல் கூடுமானதுதானா? என்பன போன்ற பல அம்சங்கள் பற்றி இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்மாகவும் பொருந்திக் கொண்டேன். (அல்மாயிதா: வச:3)

இந்த வசனத்தை அறிந்திருந்த ஒரு யூதன் உமர் (ரழி) அவர்களிடம், “அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதி வருகின்றீர்கள். அது யூதர்களாகிய எம்மீது இறக்கப்பட்டிருக்குமானால் அந்த நாளை பெருநாள் தினமாக எடுத்திருப்போம்” என்றார். அது என்ன வசனம் என உமர் (ரழி) அவர்கள் கேட்ட போது இன்றைய தினம் உங்களது மார்க்கத்தைப்பூரணப்படுத்தி எனது அருட் கொடையை முழுமைப்படுத்தி இஸ்லாத்தை மார்க்கமாப் பொருந்திக் கொண்டேன். (5:3)

என்ற பொருளுடைய வசனம் எனக் கூறினார். அதற்கு அந்த நாளையும் அது இறக்கப்படட்ட இடத்தையும் நாம் அறிவோம் எனக் கூறிய உமர் (ரழி) அவர்கள் ‘அரஃபாத் திடலில் ஒரு ஜும்ஆத்தினத்தில் அவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறங்கியது’ எனப் பதிலளித்தார்கள். (புகாரி)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ.
எவர் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை தோற்றுவிக்கின்றாரோ அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: ஹதீஸ் இல:2697).

இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.


 மக்காவாழ் காஃபிர்களின் நம்பிக்கையும், நபி (ஸல்) அவர்களும்:

இஸ்லாம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு பணிக்கின்ற மார்க்கமாகும். அதற்காகவே மனித, மற்றும் ஜின் இனத்தினர் படைக்கப்பட்டுள்ளனர், உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (இப்னு கஸீர்).

இந்தக்காலமும் கடந்து, அக்கால மக்களும் மரணித்த பின்னால் அவர்களின் வழித்தோன்றல்களாக வந்த மனிதர்கள் அவர்களிலுள்ள ‘வத்து’ ‘சுவா’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ போன்ற நல்லடியார்களின் உருவங்களை தீட்டி தமது தேவைகளை நிறைவேற்றும் கடவுள்களாக எண்ணி வணங்கி, வழிபட எப்போது ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அதிலிருந்து அம்மக்களைத்தடுத்து நிறுத்துவதற்காக உலகில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் இப்பூமியில் அல்லாஹ்வால் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு மனிதர்கள் ஒவ்வொரு காலத்திலும் தத்தமது கற்பனைகளில் உதிக்கின்றவற்றை தாமாக வணங்கி, வழிபட தலைப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வானவர்களையும், மற்றும் சிலர் நபிமார்களையும், நல்லடியார்களையும், வேறு சிலர் ஜின்களையும், இன்னும் சிலர் மாட்டையும் வணங்கி வந்தனர்.

மக்கா வாழ் காஃபிர்கள், அல்லாஹ்தான் இவ்வுலகைப் படைத்தவன், வானங்களில் இருந்து மழை பொழிவிப்பவன், அதிலிருந்து உணவளிப்பவன் என்று ஏற்றுக் கொண்டாலும் தமது வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை காஃபிர்களே! எனக் கூறி அழைக்கின்றான்.
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என (முஹம்மதே) நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக அல்லாஹ்தான் என்பார்கள். (லுக்மான். வச: 25)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ

அவர்களைப் படைத்தவன் யார் என (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக ‘அல்லாஹ்’ எனப் பதிலளிப்பார்கள். (அஸ்ஸுக்ருஃப். வச: 87)
இவர்களை நோக்கி அல்லாஹ்வை நீங்கள் நேரடியாக அழைத்தால் என்ன? அவனுக்கும் உங்களுக்கும் இடையில் தரகர்களை ஏன் ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்? மரணித்த மனிதர்களுக்காக ஏன் நேர்ச்சை செய்கின்றீர்கள்? சிலைகளை மரம் மட்டைகளை ஏன் வணங்குகின்றீர்கள் ? அவற்றை ஏன் பூஜிக்கின்றீர்கள் ? நன்மை தீமைகளை அவைகளிடம் ஏன் ஆதரவு வைக்கின்றீர்கள்? எனக் கேட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى

அவனை (அல்லாஹ்வை) அன்றி பாதுகாவலர்களை எடுத்துக்கோண்டோர், (இணைதெய்வங்களான) அவர்கள் எம்மை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர நாம் அவர்களை வணங்கவில்லை (எனக் கூறுகின்றனர்) (அஸ்ஸுமர்: வச:3)
قَالُوا وَجَدْنَا آَبَاءَنَا لَهَا عَابِدِينَ

எமது முன்னோர்கள் அவைகளை வணங்கக் கண்டோம் (அல்அன்பியா. வச :53)
إِنَّا وَجَدْنَا آَبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آَثَارِهِمْ مُقْتَدُونَ

‘எமது முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம் நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்கள் என்றும், கூறுவர். (அல்ஸுக்ருஃப். வச: 23)
இதன் மூலம் ‘தவ்ஹீத் அல் உலூஹிய்யா’ வில் இவர்கள் இணை கற்பித்துள்ளதை அறியலாம். அது பற்றி இப்போது நோக்குவோம்.
இவை அனைத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்குமாறு சகல தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினரை ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற வாசகத்தைக் கொண்டு இஸ்லாத்தின் பக்கம் அழைத்தது போல முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் சமுதாயத்தவரை அழைத்தார்கள்.

‘உண்மையாக வணங்கி, வழிபட அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்ற அடிப்படையில் அமைந்த சத்தியப் பிரச்சாரத்தை இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவர்களிடம் கொண்டு சென்றபோது அவர்கள் அதை ஆச்சரியமாக நோக்கினார்கள், புதிய கொள்கையை நபி (ஸல்) அவர்கள் போதிப்பதாக மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரமும் செய்தார்கள்.
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهاً وَاحِداً إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ  ما سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ

இவர் ‘பல கடவுளர்களை ஒரு கடவுளாக்கிவிட்டாரா ? இது ஆச்சரியமான விஷயம்தான்! இது பற்றி நாம் நமது முன்னோர்களின் மார்க்கத்திலும் கேள்விப்பட்டதில்லையே! இது ஒரு புதிய கண்டுபிடிப்பே அன்றி வேறில்லை. (அத்தியாயம் 38: வசனங்கள்: 5-7 வது வசனங்கள்).
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ

அவர்களுக்கு தீங்கிழைக்காததையும், (எவ்விதப்) பயன்தராததையும் அவர்கள் வணங்குகின்றனர். மேலும், இவர்கள் அல்லாஹ்விடம் நமது பரிந்துரையாளர்கள் என்றும் கூறிக் கொள்கின்றன்றனர். வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதிருப்பதைப் பற்றி (அவனுக்கு) நீங்கள் அறிவிக்கின்றீர்களா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன். (யூனுஸ்: வச: 18)
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُواْ لَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ

அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் அழைப்போர் உங்களைப் போன்ற அடியார்களே அன்றி வேறில்லை, எனவே அவர்களை நீங்கள் அழையுங்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் உங்களுக்கு பதில் கூறட்டும். (அஃராப் 7. வச: 194)
وَالَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِهِ مَا يَمْلِكُونَ مِنْ قِطْمِيرٍ
إِنْ تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءَكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

அல்லாஹ்வை அன்றி, நீங்கள் அழைப்பவர்கள் (வித்தின்மீதிருக்கும்) தொலியைக் கூட சொந்தமாக்கிக் கொள்ளாதவர்கள். நீங்கள் அவர்களை அழைப்பீர்களாயின் அவர்கள் உங்கள் அழைப்பை செவியேற்மாட்டார்கள், (வாதத்திற்கு) அவ்வாறு அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு (எந்தவிதமான பதிலும்) தரமாட்டார்கள். மறுமையில் உங்களது இணைவைப்பை மறுத்துரைப்பார்கள். நன்கறிந்தவனை (அல்லாஹ்வைப்) போல உமக்கு (வேறு எவரும்) அறிவித்துத்தரமாட்டார்கள். (ஃபாதிர்: 13-14).
இவ்வாறு நூற்றுக்கணக்கான வசனங்கள் மரணித்தவர்களை நெருங்கி எதையும் கேட்காதே என்று சொல்வதுடன், அதைத்தடுப்பதற்காகவே நபிமார்கள் வந்தார்கள் எனக் குறிப்பிடுவதைப்பார்க்கலாம்.


கப்று வணங்கிகள் பற்றிய முன்னறிவிப்பு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரணத்தின் பின்னர் தோன்றவிருக்கும் வழிகெட்ட பிரிவுகள் பற்றியும், குழப்பங்கள் பற்றியும் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள். அந்தப்பிரிவில் ஹவாரிஜ்கள் எனப்படும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வோர் பற்றித் தெளிவாகவும், ஏனைய பிரிவுகளும் சூசகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் வெறுத்ததைச் செய்து கொண்டு, இமாம்களின் தீர்ப்புக்களையும் புறந்தள்ளிவிட்டு, தான் தோன்றித்தனமாக மார்க்கத்தில் கப்று வணக்கத்தை உருவாக்கி, அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்து மதிப்பிடும் சுன்னத் ஜமாஅத் பெயர் தாங்கிகள் இந்தப்பிரிவில் உட்படுத்தப்பட வேண்டியவர்களே.
ஹுதைபா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நரக அழைப்பாளர்கள் பற்றிய நீண்ட ஹதீஸில் …
فَقُلْتُ هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا قَالَ نَعَمْ قَوْمٌ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا

அல்லாஹ்வின் தூதரே! இந்த நன்மைக்குப்பின் தீமை ஏற்படுமா எனக் கேட்டேன்? ஆம். நரகத்தின் வாயிலில் நின்று கொண்டு அழைக்கும் அழைப்பாளர்கள். அவர்களுக்கு யார் பதில் தருகின்றானோ அவனை அவர்கள் அதில் (நரகில்) தூக்கிப் போட்டுவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப்பற்றி எமக்கு வர்ணியுங்கள் எனக் கேட்டேன். ஆம். அவர்கள் நமது இனத்திலுள்ள ஒரு கூட்டம்தான். நமது மொழியே பேசுவார்கள், எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும், குழப்பங்கள் அங்கிருந்துதான் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ‘கிழக்கை நோக்கி சைகை செய்ததை ஈராக்கையும், அதைச்சூழவுள்ள பிரதேசத்தையுமே தெளிபடுத்துவதாக புகாரியின் விளக்கவுரை நூற்களான பத்ஹுல்பாரி, ஷரஹுல்பத்தால் ஆகிய நூற்களில் முறையே இமாம்களான இப்னுஹஜர் அல்அஸ்கலானி, இமாம் இப்னு பத்தால் ஆகியோர் தமது விரிவுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜமல், சிப்பீன் போர், ஹவாரிஜ்களின் தோற்றம், இப்பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளது. அங்குதான் ஜஹ்மிய்யாக்கள், கத்ரிய்யாக்கள், ஜப்ரியாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவுகளும் தோற்றம் பெற்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஷீஆக்கள், இந்த சமுதாயத்தில் இஸ்லாம் என்ற பெயரால் கப்று வணக்கக் குப்ரை முதல் முதலில் அரங்கேற்றியவர்கள் என்பதை கப்று வணங்கிகள் அறிந்திருப்பார்களோ, என்னவோ தெரியவில்லை.

கப்று வணங்கிகள் என்போர் யார்?

சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும் இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப் பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற கூட்டத்தினரை கப்று வணங்கிகள் என அழைக்கலாம்.

அடையாளங்கள்:

ஒருவர் கப்று வணங்கிதான் என்பதன் அளவு கோலாக நாம் மேலே சொன்ன அமசங்களுடன் அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், அவர்களின் மண்ணறையில் அறுத்துப்பலியிடுதல், அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் தேவைகளை வேண்டுதல், அவர்களின் பெயரால் விழா எடுத்தல், கந்தூரி கொடுத்தல், அவர்களின் மண்ணறைகளுக்கு பயனம் செய்தல், அவற்றைப் புனிதமாக்குதல், அங்கு தலையைத் தாழ்த்தி மரியாதை செய்தல், அல்லது சுஜுத் செய்தல், போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களை அரங்கேற்றுவோரை கப்று வணங்கிகள் என நாம் அடையாளப்படுத்த முடியும்.

மரணித்தவர்கள் செவிமடுப்பார்களா?

மரணித்தவர்கள் செவிமடுப்பதாக நம்பிக்கை கொள்ளும் இவர்கள் தமது தேவைகளை அந்த மாகான்கள் நிறைவேற்றி வைப்பதாகவும் நம்புகின்றனர். இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணான இறை நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையாகும். மரணித்தவர்களுக்கும் இவ்வுலகிற்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையே காணப்படும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறியமாட்டார்கள்.
وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

‘அவர்களுக்கு முன்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை ஒரு திரை இருக்கும்’. (அத்தியாயம்: 25. வச: 100).
إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ

(மரணித்த) அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை செவியேற்கமாட்டார்கள், அப்படித்தான் செவியேற்றாலும் அவர்கள் உங்களுக்கு பதில்தரமாட்டார்கள், இன்னும் மறுமைநாளில் உங்களின் இணைவைப்பைக் கொண்டு அவர்கள் நிராகரிப்பார்கள், அறிந்தவனை (அல்லாஹ்வை)ப்போல் உமக்கு யாரும் (இது பற்றி) உணர்த்தமாட்டார்கள். (அத்தியாயம் : பாதிர். வச: 14)
إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ

செவியேற்பவர்கள்தாம் பதில் தருவார்கள். (அத்: அல்அன்ஆம். வச: 36)
மரணித்தவர்களிடம் கேள்விகேட்டும் இரு வானவர்களிடமும் நல்லமுறையில் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்ட மனிதன் தனது மகிழ்ச்சியான இந்தச் செய்தியை தனது குடும்பத்தவர்களிடம் சொல்லிவிட்டு வருவதற்கு அனுமதி வேண்டுகின்ற போது அந்த வானவர்கள்
نَمْ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ -سنن الترمذي

புதியமாப்பிள்ளையை அவனுக்கு நெருக்கமான அவனது குடும்பத்தவர்கள்தாம் அவனை எழுப்புவார்கள். அவன் உறங்குவது போன்று நீயும் அந்தப்படுக்ககையில் இருந்து அல்லாஹ் எழுப்புகின்றவரை உறங்கிக்கொள் எனக் கூறுவார்கள் என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை மரணித்தவர்களிடம் தமது தேவையை வேண்டலாம் என கூப்பாடு போடுகின்றனர் சில கோமாளிகள்.
كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ

ஆதமின் மகனை (மனிதனை) முழுமையாக மண் அரித்துவிடும், அவனில் இருக்கும் ‘அஜ்புஸ்ஸஜப்’ என்ற முள்ளம் தண்டைத்தவிர. அதிலிருந்துதான் அவன் (ஆரம்பமாக) படைக்கப்பட்டான், (மறுமைக்காக) அதிலிருந்துதான் (மீண்டும்) அவன் உருவாக்கப்படுவான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அவனை (அல்லாஹ்வை) அன்றி அவ்லியாக்களை எடுத்துக் கொண்டனரா? அல்லாஹ்வாகிய அவனே (உண்மையான) வலி. மரணித்தவர்களை அவனே உயிர்ப்பிக்கின்றான். அவன் யாவற்றின் மீது ஆற்றல் உடையவன். (அஷ்ஷுரா. வச:09)
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا

(அவன்) கிழக்கு, மற்றும் மேற்குத் திசைகளின் இரட்சகன். அவனை அன்றி வணங்கி வழிபடத்தகுதியானவர் யாருமில்லை. அவனைப் பொறுப்பாளனாக எடுத்துக் கொள். (அல்முஸ்ஸம்மில். வச: 09).

இவர்கள் குறிப்பிடுகின்ற அவ்லியாக்கள், நாதாக்கள், ஷேக்குகள், சாதாத்துக்கள் அனைவரும் மண்ணில் மக்கிப்போவார்கள் என்பதையே இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது. அவ்வாறு மக்கிப்போன பின்னால் இவர்கள் பிரார்த்திப்பது யாரிடம்? மண்ணிடமா? இவர்களின் நம்பிக்கையில் சாகாவரம் பெற்ற மகான்களிடமா?

கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்:

வாதம்: 1) ‘எமது இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நிதர்சனமாகவே நாம் பெற்றுக் கொண்டோம், உங்கள் இரட்சகன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா? என ‘பத்ர்’ போரில் கொல்லப்பட்டுக் கிடந்த குரைஷிக் காஃபிர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் பேசியுள்ளார்களே! இது மரணித்தவர்கள் செவிமடுப்பார்கள் என்பதைத்தானே காட்டுகின்றது.

மறுப்பு: இது புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஆதாரபூர்வமான நிகழ்வு என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. எனினும் இது மரணித்தவர்களிடம் தேவைகளை வேண்டலாம் என்பதற்கு எந்தவகையிலும் பொருத்தமற்ற ஆதாரமாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பத்ரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த கொடிய காஃபிர்களை நோக்கி தமது தேவைகளைக் கேட்கவில்லை, மாற்றமாக இவர்கள் கொலை செய்யப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டதன் பின்னணியைக் கருத்தில் கொண்டு அதை உணர்த்தவே இவ்வாறு கூறினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கும் பத்ரில் கொல்லப்பட்ட காஃபிர்களுடக்கும் தொடர்பான விஷேடமான நிகழ்வாகும்.

அது மாத்திரமின்றி, மரணித்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் நிலைப்பாடும், ஸஹாபாக்களின் உறுதியான நம்பிக்கையுமாகும். அதனால்தான் ‘அல்லாஹ்வின் தூதரே! உயிர்கள் அற்ற வெறும்பிணங்களாகி விட்ட, முண்டங்களுடனா நீங்கள் பேசுகின்றீர்கள்? என உமர் (ரழி) அவர்கள் கேட்டார்கள் ‘ நான் போதித்தது உண்மைதான் என்பதை அவர்கள் இப்போது அறிகிறார்கள்’ என அல்லாஹ்வின் தூதர் விளக்கமளித்தார்கள். (புகாரி)

காஃபிரானவர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சியை மகான்கள் எனப்படுவோருடன் பொருத்திப் பார்க்கலாமா? சிந்தியுங்கள்.

வாதம் 2: நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடன் இருக்கின்றனர். எனவே அவர்களிடமும், அவ்லியாக்களிடமும் தேவைகளை வேண்டிப் பிரார்த்திக்கலாம். மிஃராஜின் போது நபி மூஸா (அலை) அவர்கள் தொழுகையை குறைத்து வரும்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதால், அதை அவர்கள் குறைத்துக் கொண்டு வந்தது மரணித்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதைக் காட்டவில்லையா?

மறுப்பு : மனிதர்கள் அனைவருக்கும் மரணம் பொதுவான விதியாகும். அதிலிருந்து நபிமார்கள், அவ்லியாக்கள் விலக்கப்பட்டவர்கள் அல்லர். அதையும் மீறி ஒருவன் கருத்துக் கூற முற்பட்டால் அவனை இஸ்லாமிய வரையறைக்குட்பட்டவனாக கருதவே முடியாது.

மிஃராஜ் என்பது அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய விஷேஷ நிகழ்வாகும். அதில் அவனது பல அத்தாட்சிகளை அவருக்கு காண்பித்தான். வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதில் ஒன்றாகும்.

தொழுகையைக் குறைத்து கேட்கும்படி மூஸா (அலை) அவர்கள் கூறியதை நபி (ஸல்) அவர்கள் கூறியதால்தான் நம்புகின்றோம். அதே போல் அவ்லியாக்களின் உடல்களை மண் திண்ணாது என்றும், அவர்கள் மண்ணறையில் இருந்தவாறு உலகில் நடப்பதை அறிவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் எங்கேனும் கூறியுள்ளார்களா?

அடுத்ததாக, கப்ரில் இருந்தவாறு நபி (ஸல்) அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். மறுமையிலேயே சிபாரிசு செய்வார்கள் என்பதை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண முடிகின்றது. இமாம் புகாரியின் கிரந்தத்தத்தில் சிபாரிசு பற்றி செய்தி பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

அவர்கள் (நபிமார்கள்), “முஹம்மதிடம் செல்லுங்கள்” எனக் கூறுவார்கள். உடனே அம்மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதர், நபிமார்களில் இறுதியானவர், முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் உமக்காக மன்னித்து விட்டான். உமது இரட்சகனிடம் எமக்காக சிபாரிசு வேண்டுவீராக! எமது நிலையினை நீர் கவனிக்க வேண்டாமா? எனக் கூறுவர். இதைக் கூறும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ
أخرجه البخاري من أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

உடன் அர்ஷின் கீழ் வந்து, மகத்துவமிக்க எனது இரட்சகனுக்கு நான் சுஜுதில் விழுந்து விடுவேன். பின்பு அல்லாஹ் அவனது புகழாரங்களில் இருந்தும், அவனுக்குரிய அழகிய துதியையும் எனக்கு திறந்து தருவான் (மற்றொரு அறிவிப்பின்படி உதிப்பாக்குவான்). எனக்கு முன்னர் அவன் அதை யாருக்கும் திறந்து கொடுத்ததில்லை. பின்னர் முஹம்மதே! உமது தலையை உயர்த்தி, கேளும் கொடுக்கப்படும், பரிந்துரை செய்யும். உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்’, எனக் கூறப்படும். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்) போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படும் செய்திகளைப்பார்த்தால் சிபாரிசு என்பது மறுமை நாளில் எல்லாமனிதர்களின் கண் எதிரே நடக்கும் நிகழ்வுதான் என்பதையும், கப்ரு வாழ்க்கைக்கும், ஷஃபாஅத்திற்கும் இடையில் கடுகு அளவுகூட சம்மந்தம் இல்லை என்பதையும் அறியலாம்.

ஒவ்வொரு நபிக்கும் பதிலளிக்கப்படும் ஓர் அழைப்பிருந்தது. அதைக் கொண்டு அவரகள், அவசரமாக (உலக வாழ்க்கையிலேயே அதனை) அழைத்துவிட்டனர். எனது பிரார்த்தனையை எனது சமுதாயத்தின் மறுமை (ஷபாஅத்திற்காக) மன்றாட்டத்திற்காக நான் ஒதுக்கி வைத்துள்ளேன் (புகாரி), என நபி (ஸல்) அவர்கள் கூறியதை சரியாக சிந்திப்போர் மண்ணறைகளில் மன்றாட்டம் நடத்துவார்களா?

அல்லாஹ்வின் தூதர் தனது இறுதி நேர உரைகளில், “நான் உங்களை ‘ஹவ்ழுல் கௌஸர்’ நீர் தடாகத்தில் (ஏற்பாட்டாளன் போன்று) எதிர்பார்த்தவனாக இருப்பேன். (புகாரி, முஸ்லிம்) உங்களுக்குள் சர்ச்சைகள் தலைதூக்கும் போதெல்லாம் அந்த ‘ஹவ்ழ்’ நீர் தடாகத்தில் என்னை நீங்கள் சந்திக்கின்றவரை பொறுமையாக இருங்கள். (புகாரி, முஸ்லிம்) என தனது தோழர்களிடம் கூறியது மண்ணறையில் இருந்து கொண்டு உலகில் நடப்பதை தன்னால் அவதானிக்க முடியாது என்பதற்காக அன்றி வேறு எதற்காகக் கூறினார்கள் ?

அது மாத்திரமின்றி, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உலகில் உயிர்வாழ்கின்ற போதே மறைவான செய்திகளை அறிய முடியாதிருந்திருக்கிறார்கள் என்பதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் தபூக் பயணத்தில் இருந்து திரும்பியதும் வராமல் இருந்தவர்களை விசாரணை நடத்திய போது அவர்கள் நடந்து கொண்ட முறையையும் ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.

அப்போருக்குச் செல்லாது தங்கிவிட்ட முனாஃபிக்குகள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல சாக்குப் போக்குகளைக் கூறி, சத்தியமும் செய்தனர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்டோராக இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.
فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَانِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ

அவர்களின் வெளிப்படையான காரணத்தை ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களுடன் உறுதி மொழியும் செய்து கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் வேண்டினார்கள். (அதே நேரம்) அவர்களின் அந்தரங்க விஷயங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள். (புகாரி)

இந்த நிகழ்வு கப்ரில் நடப்பதை அல்ல, உலகில் ஒரு மனிதனுடன் தொடர்புடைய மறைவானவற்றையே நபி (ஸல்) அவர்கள் அறிய முடியாதவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டவில்லையா?

இதைப் புரியாத பலர் பெரியார்கள் சுயநினைவிழந்த நிலையில், மரணிப்பவர்கள், மண்ணறையில் வைக்கப்பட்டதும் விழித்துக்கொள்வார்கள், உலகில் நடப்பதை அறிவார்கள் என்றெல்லாம் உளருவதைப் பார்க்கின்றோம். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத புதிய சித்தாந்தமாகும்.

வாதம் 3:
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. அவர்கள் தமக்கு அநீதி இழைத்ததும் உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவதுடன், இத்தூதரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கண்டு கொள்வார்கள். (அந்நிஸா. வச:64) என்ற வசனத்தையும் ஆதாரமாகக் கொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது!

மறுப்பு: இவர்கள் எடுத்து வைக்கின்ற குர்ஆன் வசனம் முனாபிக்குகள் விசயத்தில் இறங்கியதாகும். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு வார்த்தைகளால் தொல்லை தந்த நயவஞ்சகர்கள் திருந்தி வாழ விரும்பினால் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிடுகின்றானே தவிர மரணித்த நபியிடம் மன்றாடும் படி கூறவில்லை. நபித்தோழர்கள் இந்த வசனத்தை இப்படித்தான் புரிந்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், துன்பங்களின் போது அவர்களின் மண்ணறையில் தமது தேவைகளையும், கஷ்டங்களையும் நிவர்த்தி செய்யுமாறு வேண்டாதிருந்தது மாபெரும் சான்றாகும்;.

உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி, 18ல் ஏற்பட்ட ‘ஆமுர்ரமாதா’ எனப்படும் மாபெரும் வறட்சி ஆண்டு பற்றியும், சிரியாவில் ஏற்பட்ட “தாவூன்” என்ற தொழு நோய் பற்றியும் அறிவீர்கள். இவற்றிற்கெல்லாம் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறைக்கு வந்து அவர்கள் மன்றாடவில்லை, கலீபா உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சியில் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்த போது பயன்படுத்திய வாசகம் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்துப் பாருங்கள்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ
-صحيح البخاري-

மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட போது, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரழி) அவர்களைக் கொண்டு மழைவேண்டுபவர்களாக உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். அல்லாஹ்வே! நமது நபியைக் கொண்டு (முன்றிறுத்தி) நாம் மழை வேண்டுபவர்களாக இருந்தோம். அதனால் நீ எமக்கு மழையைப் பொழிவிப்பாய், நாம் உன்னிடம் நமது நபியின் சிறிய தந்தையை முன்நிறுத்தி (மழைவேண்டி) உதவிதேடுகின்றோம். ஆகவே எமக்கு மழையைத் தருவாயாக! எனக் கூறுவார்கள். அதற்காக மழையும் பெற்றிருக்கின்றார்கள் என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).

கப்று வணங்கிகள் இந்த ஹதீஸை பொது மக்களிடம் தவறாகவே விளக்குவார்கள். அல்லாஹ்வின் தூதரிடம் ஸஹாபாக்கள் கூட வஸீலா வேண்டி இருப்பதாக உளருவார்கள்.

உண்மையில் ஸஹாபாக்கள், அல்லாஹ்வுடைய தூதரிடம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வஸீலா வேண்டி இருந்தால், அல்லாஹ்வின் தூதரே! எமக்கேற்பட்ட வரட்சிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாது, அல்லாஹ்வுடைய தூதர் உயிருடன் இருக்கின்ற போது நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி ‘அல்லாஹ்வே’ என அல்லாஹ்வை அழைத்து நடந்ததைக் கூறிய பின்னர், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரில் ஒருவரை முன் நிறுத்தி மழை வேண்டி பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள்.

மார்க்க அறிவில் உயர் நிலையில் காணப்பட்ட ஸஹாபாக்கள், இவ்வாறு பிரார்த்தித்தது நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர், அவர்களிடம் எந்தவிதமான கோரிக்கைளையும் முன்வைக்கக்கூடாது என்று அவர்கள் புரிந்ததனால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியின் மண்ணறைக்குச் சென்று பாவமன்னிப்புக்கோரலாம், தேவைகளைக் கேட்கலாம் என்பதை மறுத்துரைக்கும் பின்வரும் நபி மொழியைக் கவனியுங்கள். ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தலைவலி, தலைவலி எனக்கதறி அழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
…ذَاكِ، لَوْ كَانَ وَأَنَا حَيٌّ فَأَسْتَغْفِرَ لَكِ وَأَدْعُوَ لَكِ
-صحيح البخاري-

நான் உயிருடன் இருக்கும் நிலையில் நீ எனக்கு முன்னர் மரணித்தால் உன்னைக் குளிப்பாட்டி, கபனிட்டு, உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், உனக்காக பிரார்த்தனையும் செய்வேன் எனக் கூறினார்கள். (புகாரி).

இந்த செய்தியை சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதுதான் நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல் சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு நடைபெற்ற உஹத் போரில் (இஸ்லாத்தில் இணையுமுன்) காபிர்களின் அணி சார்பாக தலைமை தாங்கி வந்த அபூசுப்யான் (ரழி) அவர்கள்,
قال أبو سفيان يوم أحد . لنا العزى ولا عزى لكم . فقال رسول الله صلى الله عليه وسلم – :
قولوا : الله مولانا ولا مولى لكم

‘எங்களுக்கு (கண்ணிமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இருக்கின்றது, உங்களுக்கு ‘உஸ்ஸா (கண்ணியமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இல்லையே! என்று கூறியபோது ‘அல்லாஹ் எங்கள் (மௌலானா) பாதுகாவலன், உங்களுக்கு (மௌலா) பாதுகாப்பளிப்பவன் இல்லை எனக் கூறிவிடுங்கள் எனப்பணித்தார்கள். (புகாரி).

நபி (ஸல்) அவர்களின் போதனை முறையைக் கவனித்தால் அவர்கள் உயிருடன் இருக்கின்ற போது கஷ்டமான நிலையிலும் அல்லாஹ்வையே பாதுகாவலாக எடுத்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் இருக்கின்றார்கள், மரணிக்கவில்லை என்ற குருட்டு வாதத்தை முன்வைப்போரின் கூற்றை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்பையோ, தேவைகளையோ இப்போதும் வேண்டமுடியாது. ஏனெனில் பத்ர், உஹத் போன்ற போர்க்களங்களில் வானவர்கள்தாம் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

வாதம் 04: ஆதம் நபி (அலை) அவர்கள் தவறு செய்த போது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் வஸீலாக் கேட்கவில்லையா? அது மாத்திரம் இவர்களுக்கு போதுமான ஆதரமாக இல்லையா ?

மறுப்பு: இந்தச் செய்தி ஆதராமற்ற செய்தியாகும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவாகச் சொல்லிவிட்டார்கள். இதை பெரிய ஆதராம் என்ற பெயரால் கூறி தொடர்ந்தும் மக்கள் மத்தியில் உளம்புவது ஒரு வகை நோயாகும்.

முல்லா அலிஅல்காரி (ரஹ்) என்ற அறிஞர் தனது ‘அல்மவ்ழூஆத்’ (நபியின் புனையப்பட்டவைகள்) என்ற நூலில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். கஸஸுல் அன்பியா என்ற நூலில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் இது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தி என்று கூறியுள்ளார்கள். ஹதீஸ் கலையில் பூரண அறிவில்லாதவர்களே இதை ஒரு ஆதராமாகக் கொள்வார்கள்.

வாதத்திற்கு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டாலும், ஒரு நபி மற்றொரு நபியின் பொருட்டால் கேட்டார்கள் என்பதை மகான்களுக்குப் பொருத்திக் கூறலாமா? என்று சிந்தியுங்கள்.

வாதம் 5: நாங்கள் இறைநேசர்களை வணங்கவில்லையே! நாம் பாவிகளாக இருப்பதால் இவர்கள் மூலமாக அல்லாஹ்விடம் நெருங்குகின்றோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

மறுப்பு: இதே வார்த்தையைத்தான் மக்காவாழ் காபிர்களும் கூறினார்கள். (பார்க்க: அத்தியாயம் அஸ்ஸுமர்: வச: 03.) (யூனுஸ்: வச: 18).(ஸாத்: வச:05) இந்த வசனங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள்.

தொழுது, நோன்பு நோற்று, அல்லாஹ்வை வணங்குகின்றவர்களைப் பார்த்து இதைக் கூறலாமா என்ற ஆதங்கம் பலர் மனதில் தோன்றவே செய்யும். இதைவிட அல்லாஹ்வின் வசனம் ஆயிரம் மடங்கு உண்மை என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்.

இணைவைப்பாளர்கள் உம்ராச் செய்கின்ற போது, இறைவா! உனக்கு கட்டுப்பட்டுவிட்டேன்’ எனக் கூறும் வார்த்தையைச் செவிமடுக்கும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள்
فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْلَكُمْ قَدْ قَدْ فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ

போதும்! போதும்! (இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்) எனக் கூறுவார்கள். (அவர்கள் அதையும் மீறி) நீ உனக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஒரு இணைதெய்வத்தையும், அது சொந்தமாக்கியுள்ளதையும் தவிர என அல்லாஹ்வின் அந்த இல்லத்தை தவாப் செய்து கொண்டே (இந்த இணைவைப்பு வார்த்தையைக்) கூறுவார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்).

ஒருவர் வணக்கம் செய்வதால் அவர் முஸ்லிமாகிவடுவதில்லை. மாற்றமாக அந்த வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளையும் அந்த வணக்கம் பொதிந்திருக்க வேண்டும்.

வாதம் 6: உத்தம நபியின் மண்ணறையில் மன்றாடிய ‘உத்பி’ என்ற கிராம வாசிக்கு மன்னிப்புக் கிடைத்ததாக ‘இப்னு கஸீர்’ என்ற தப்ஸீருடைய இமாம் கூறி இருக்கிறார்களே! அவரை விட நீங்கள் பெரிய அறிஞரா?

பதில்: மண்ணறையில் அடங்கப்பட்டவர்களிடம் மன்றாடுவது கூடும் என நியாயப்படுத்துவோர் இந்த உத்பி என்ற விலாசமற்ற கிராமப்புற ஒரு மனிதன் பேரில் புனையப்பட்ட சம்வத்தையும் ஆதாரமாகக் கொள்வது மிகப் பெரும் தவறாகும். கற்பனையான ஒன்றை ஆதாரமாக சித்தரித்துக் கூறுவது எந்த வகையிலும் ஏற்க முடியாதாகும். கப்று வணங்கிகளுக்கு வேண்டுமானால் அது ஒரு பெரிய ஆதாரமாகத் தோன்றலாம். ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற பொய்களை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

‘உத்பி’ என்ற கிராமவாசி யார் என்று அறியப்படாதவர். விலாசமற்ற ஒருவர் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை ஆதாரத்திற்கு கொள்ள முடியாது என ஹதீஸ்கலை இமாம்கள் முடிவு செய்வார்கள். அந்த விதியின்படி அப்படையில் இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களது தப்ஸீரில் ஆதாரத்திற்கு கொள்ள முடியாத பல செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை நீங்கள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் கூறுவது அனைத்தும் சரியானது என அவர்கள் உத்தரவாதம் தரவில்லை. அரபு நூலில் வந்துவிட்டது என்பதற்காக அது ஆதாரமாகிவிடாது.

இரண்டாவதாக: குறித்த அந்தச் செய்தியில் ‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற உறுதியற்ற வாசகத்தொடரே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதியற்ற வாசக அமைப்பு எனப் பொருள் கொள்வார்கள்.

மூன்றாவதாக: கவிதையால் மார்க்கத்தை நிலை நிறுத்த முடியாது என்று குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கின்றோம்.
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ

கவிஞர்களை வீணர்கள்தாம் பின்பற்றுவார்கள். (அஷ்ஷுஅரா.வச:224)
என்ற வசனத்தையும்,
وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

நாம் அவருக்கு கவிதையைக் கற்றுக்கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமும் இல்லை. அது இறை நினைவும், தெளிவான அல்குர்ஆனுமே அன்றி வேறில்லை. (யாசீன்: 69)

என்ற வசனத்தை சிந்தித்தால் கவிதையால் மார்க்கத்தை நிலைப்படுத்த அல்லாஹ்வே விரும்பவில்லை என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அவரது மண்ணறையில் கவிதை பாடி பாவமன்னிப்பு வேண்டியவருக்கு மன்னிப்புக்கிடைத்ததாக நம்புவது எவ்வாளவு பெரும் முட்டாள்தனம் என்பதை பார்க்க வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபி ஒருவரால் பாடல் பாடப்பட்டு நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்படட ஒரு கனவு போல் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

நான்காவதாக: கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?

பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே நிர்வாகிகளாகும்.

மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை. எனது அத்தா (தந்தை) என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறண் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன் மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாஃபி மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.
قال النووي رحمه الله: …… لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِ
مقدمة شرح النووي على مسلم
50/1

உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான ஒழுங்கமைப்பில் இல்லாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது. ஒருவரின் சாட்சியம் ஏற்க்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும், அபாரமறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம் தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருக்க வேண்டும். (இவரதுசாட்சியமே ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருமுத்தி கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ்முஸ்லிம்).

அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி நபி (ஸல்) அவர்களின் மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாக் குறிப்பிடும் கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே சிந்தியுங்கள்.

வாதம்‌ 7) அல்லாஹ்வின்‌ நேசர்களுக்கு எவ்வித அச்சமும்‌ இல்லை. அவர்கள்‌ கவலை கொள்ளவும்மாட்டார்கள்‌. (யூனுஸ் ‌62) 
என்ற குர்ஷன்‌ வசனம்‌ அவ்லியாக்களின்‌
சிறப்பை பறைசாட்டவில்லையா?

மறுப்பு: பொதுவாக அல்லாஹ்வின்‌ நல்லடியார்கள்‌ பற்றி இடம்‌ பெறும்‌ குர்ஆன்‌ வசனங்களையும்‌, ஹதீஸ்களையும்‌ எடுத்துக்‌ கொண்டு அவர்களிடம்‌ தேவைகளை வேண்டலாம்‌ என சம்மந்தமில்லாமல்‌ ஆதாரம்‌ காட்டுகின்றனர்‌. அவற்றில்‌ மேலே
உள்ள வசனமும்‌ ஒன்று. அனைத்து தர்ஹாக்களிலும்‌ நீங்கள்‌ இந்த வசனங்களை பார்க்க முடியும்‌. இந்த
வசனத்தை வைத்தும்‌ மக்கள்‌ அவ்லியா வணக்கத்தில்‌ தீத ஆர்வம்‌ காட்டுகின்றனர்‌.

செப்டம்பர்‌ 11 தாக்குதலில்‌ அமெரிக்காவின்‌ இரட்டைக்‌ கோபுரங்கள்‌ பற்றி எரிந்தன. சவூதி அரேபியாவைச்‌ சேர்ந்த உஸாமா பின்லேடன்‌ என்பவரே ஒந்த உலக சாதனையை நிகழ்த்திவிட்டார்‌ என்று மார்க்க அறிவு மருந்துக்கும்‌ இல்லாத முஸ்லிம்கள்‌ ஆராவாரம்‌ போட்டனர்‌.

அது மட்டுமா! போதக்குறைக்கு திருமறை குர்ஆனில்‌ (9-109ல்‌) இடம்‌ பெறும்‌ வசனத்தை ஆதாரமாகவும்‌ உளரினர்‌. அந்த வசனத்தில்‌ மாடியின்‌ எண்ணிக்கை
இத்தனைதான்‌ என வந்துள்ளதால்‌ இவ்வாறு கூறத்‌ தலைப்பட்டனர்‌ போலும்‌.

ஈராக்கின்‌ பெட்ரோலைக்‌ கொள்யைடிக்க அது யூதக்கும்பலின்‌ சதியின்‌ பின்னணியில்‌ நடத்தப்பட்ட யூத நாடகம்‌ என்பதை உலகம்‌ அறிந்து கொள்கின்றது. ஆனால்‌ நமது அறிவிலிகளோ மகிழ்ச்சிப்‌ பெருக்கில்‌ உறைந்து போனார்கள்‌. தங்களை அறியாமலே இந்தக்‌ கொடுமையை இஸ்லாம்‌ அங்கீகரிப்பதாகவே நம்புகின்றனர்‌ என்பது
ஒருபுறம்‌ இருக்கட்டுமே.

இதே போன்றதுதான்‌ அவ்லியாக்கள்‌ பற்றி கப்று வணங்கிகள்‌ ஆதராமாக எடுத்து வைக்கின்ற அல்குர்ஆன்  வசனங்களும்‌ என்பதைப்‌ புரிந்து கொள்ளுங்கள்‌. அதாவது சம்மந்தமில்லாவற்றை சம்மந்தமில்லாதவற்றுக்கு ஆதாரமாகக்‌ கொள்கின்றனர்‌.

கப்று வணங்கிகளின்‌ ஏமாற்று மாயையில்‌ ஒருந்து விடுதலைபெற நீங்கள்‌ விரும்பினால்‌ பின்வரும்‌ அல்குர்ஆன் வசனங்களையும்‌ கூர்ந்து படியுங்கள்‌. (அல்பகரா. 88, 62) 112, 202, 264, 274, 277) . அவை நேர்வழி நடக்கின்ற நன்மைகள்‌ செய்கின்ற, தொழுது, ஸகாத்‌ கொடுக்கின்ற; நல்லமல்கள்‌ செய்கின்றவர்களுக்கும்‌ பயம்‌ அச்சம்‌' இல்லை என்றே கூறுகின்றன. அப்படியான பண்புடையவர்களை ஏன்‌
அவ்லியாக்கள்‌ எனக்‌ கூறக்கூடாது.

வாதம்‌: 08) ஆதம்‌ நபிக்கு வானவர்கள்‌ சுஜுத்‌ செய்துள்ளனர்‌ என்பது அவ்லியாக்களின்‌ கப்றுகளின்‌ மீது சுஜுத்‌ செய்யலாம்‌ என்பற்கு ஆதாரம்‌
இல்லையா?

மறுப்பு: கப்று வணக்கம்‌ புரிவோர்‌ மற்றொரு கொடிய பாவத்தை அரங்கேற்றுகின்றனர்‌. அதுதான்‌. நல்லடியார்கள்‌ என்று சொல்லப்படுபவர்களின்‌
மண்ணறைகளில்‌ சுஜுத் செய்தல்‌. அதற்கு ஆதாரம்‌ இருக்கின்றதா என்றால்‌ ஆமாம்‌. இருக்கின்றதே. ஆதம்‌ நபி (அலை) அவர்களுக்கு வானவர்கள்‌ சுஜுத்‌
செய்யவில்லையா? அதே பெரிய ஆதாரமில்லையா? இதுதான்‌ இந்தப்பாவத்திற்கு இவர்கள்‌ காட்டுகின்ற ஆதாரம்‌.

வானவர்களையும்‌, ஒப்லீஸையும்‌ ஆதம்‌ நபிக்கு சுஜுத்‌ செய்யும்படி சொன்னது படைத்தவனின்‌ கட்டளை. அதை இப்லீஸ்‌ நிறைவேற்றவில்லை. ஆனால்‌ வானவர்கள்‌ நிறைவேற்றினார்கள்‌. அவன்‌ மறுத்தது பற்றி அல்லாஹ்‌ விசாரிக்கின்ற போது அவன்‌ அது
பற்றிக்குறிப்பிடுகின்றான்‌. ((பார்க்க: (அல்பகரா: 84) (அகராப்‌: 11, 12), (அல்ஹிஜர்‌. 30,31), (அல்‌ இஸ்ரா. 61), அல்கஹஃப்‌. 50) (தாஹா:116), (ஸாத்‌:78, 75).

இதை நாம்‌ எடுத்துக்‌ கூறியதும்‌, மற்றொரு ஆதாரமாக யூசுப்‌ நபி (அலை) அவர்களுக்கு அவர்களின்‌ பெற்றோர்கள்‌ சுஜுதில்‌ விழுந்தது என்பார்கள்‌.

மார்க்கத்தில்‌ ஆரம்ப கால மக்களுக்கு வழங்கப்பட்ட சட்டம்‌, பின்னர்‌ நமது மார்க்கத்தில்‌ தடை செய்யப்பட்ட சட்டம்‌ என இரு வகை சட்டங்கள்‌ உண்டு. உதாரணமாக, நூஹ்‌ நபி, லூத்‌ நபி (அலை) ஆகிய இருவரின்‌ மனைவிகளும்‌ நரகவாதிகள்‌, ஆனால்‌ கணவன்மார்களோ சுவனத்துக்கு நன்மாராயம்‌ பெற்ற நபிமார்கள்‌. அதே போன்று, பிர்‌அவ்னின்‌ மனைவி ஆசியா அம்மையார்‌ அவர்கள்‌
சுவனத்துப்‌ பெண்களில்‌ ஒருவர்‌. ஆனால்‌ அந்தக்‌ கொடியவன்‌ பிர்வ்ன்‌ நரகவாதி. (பார்க்க: அத்தஷ்ரீம்‌. 10.11) )

இந்த வசனத்தை ஆதாரமாகக்‌ காட்டி காபிரான பெண்களை மனைவியராக ஏற்றுக்‌ கொள்ளலாம்‌ என்பதா? அதே போன்றதுதான்‌ இந்த சுஜுத் விவகாரமும்‌. இது போன்று ஆரம்பத்தில்‌ அனுமதிக்கப்பட்டிருந்த பல சட்டங்கள்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ வருகைக்குப்‌ பின்னால்‌ மாற்றப்பட்டன. அல்லது தடை செய்யப்பட்ட
சட்டங்களாகிவிட்டன. அதில்‌ பிறருக்கு சுஜுத்‌ செய்வதும்‌ ஒன்றாகும்‌. இந்த அடிப்படை அறிவு அற்றுப்போனதால்‌ பெரும்‌ பாவத்தற்காக மக்களை
அழைக்கின்றார்கள்‌.

வாதம்‌:09) கப்று கட்ட குர்ஆனில்‌ இடம்‌ பெறும்‌ குகைவாசிகள்‌ பற்றிய செய்தியில்‌ ஆதாரம்‌ உண்டு.

மறுப்பு: செத்தவர்களுக்கு எப்படியாவது மரியாதையை உருவாக்கி, அவர்களின்‌ மண்ணறைகள்‌ வணங்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ அக்கறையாக இருப்பவர்களே கப்று வணங்கிகள்‌.

கப்று வணக்கத்தை தாம்‌ சார்ந்திருக்கும்‌ ஷாபி மத்ஹப்‌ ஹராமாக்கி இருப்பதைக்‌ கூட ஒருவர்‌ ஆகுமாக்க முயல்கின்றார்‌. கப்று வணக்கத்தை நியாயப்படுத்திட அற்புத்மான விளக்கங்களைக்‌ கூறி மக்களை கலிமா சொன்ன அபூஜஹ்ல்களாக
மாற்றிவருகின்றார்‌.

இவர்கள்‌ முன்வைக்கும்‌ ஆதாரங்கள்‌ அமெரிக்கா உலக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்‌ ஆதாரங்களை ஒத்தவையாகும்‌. அவற்றில்‌ பின்வரும்‌
திருமறை வசனமும்‌ ஒன்றாகும்‌.
 
அவர்கள்‌ மீது கட்டத்தை எழுப்புங்கள்‌, அவர்கள்‌ பற்றி அவர்களது இரட்சகள்‌ நன்கறிந்தவனாக இருக்கின்றான்‌. என்று அவர்கள்‌ (குகைவாசிகள்‌ பற்றிக்‌) கூறிக்‌ கொண்டனர்‌. அவர்களின்‌ விஷயத்தில்‌
எல்லை மீறியோர்‌ நாம்‌ அவர்கள்‌ மீது ஒரு பள்ளியைக்கட்டிக்‌ கொள்வோம்‌ எனக்‌ கூறினர்‌. (அல்கஹ்ப்‌. வச: 21).

இது ஆரம்ப காலத்தில்‌ மரணித்த குகைவாசிகள்‌ விசயத்தில்‌ அக்காலத்தில்‌ வாழ்ந்த மனிதர்கள்‌ பேசிக்கொண்டதைக்‌ கூறும்‌ செய்திகளில்‌ ஒன்றாகும்‌. பிர்‌அவ்ன்‌ ‘நானே உங்களின்‌ உயர்ந்த இரட்சகன்’‌ எனக்‌ கூறினான்‌. என்பதற்காக நான்‌ உங்கள்‌ இரட்சகன்‌ என்று கூறுவதற்கு குர்ஆனில்‌ ஆதாரம்‌ இருக்கின்றது என வாதிடுவது எவ்வளவு அறிவீனமோ அதை விட இது மிகப்பெரிய அறிவீனாமாகும்‌.

இந்த வசனத்தைப்‌ புரிந்த விதத்தில்‌ மரணிப்பவர்கள்‌ செவியேற்கமாட்டார்கள்‌, அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும்‌ போன்ற வசனங்களை இவர்கள்‌ புரிந்து கொள்ளாமல்‌ இருப்பது ஏனோ!

இந்த வழிகேட்டுத்‌ தத்துவங்களை கலிமாச்‌ சொன்ன அபூஜஹ்லின்‌ பரம்பரையான இந்த கப்றுவணங்கிகள்‌ மாத்திரம்தான்‌ புதிதாக முன்மொழிந்திருக்கின்றார்கள்‌. அல்குர்ஆன்‌ விரிவுரையாளர்களோ, இமாம்களோ இதை
இவ்வாறு விளங்கியேதோ; விளக்கியதோ கிடையாது. உதாரணத்திற்கு குர்துபி என்ற தப்ஸீர்‌ ஆசிரியர்‌ அவர்கள்‌ குறிப்பிடுவதைப்‌ பாருங்கள்‌. (3391 /1)

(மார்க்கத்தில்‌) அனுமதிக்கப்பட்டதும்‌, அனுமதிக்கப்படாததுமான பல மார்க்க சட்டங்கள்‌ இங்கே உருவாகுகின்றன. கப்றுகள்‌ மீது பள்ளிகள்‌ அமைத்தல்‌, அவற்றில்‌ தொழுதல்‌, அவற்றின்‌ மீது கட்டடம்‌ கட்டுதல்‌ போன்ற சுன்னாவில்‌
தடுக்கப்பட்டிருக்கன்றவை. அவை ஆகுமானதல்ல எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. கப்றுகள்‌ கட்டப்படுவதைத்‌ தடை செய்யும்‌ பல நபிமொழிகளை அங்கு ஆதாரமாகக்‌ காட்டியுள்ளார்கள்‌ என்பதை நீங்கள்‌ படித்து தெரிந்து கொள்ளலாம்‌.

முஸ்லிமான ஒருவர்‌ மரணித்து விட்டால்‌ அவரைக்‌ குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்திய பின்னர்‌, அடக்கம்‌ செய்வதுடன்‌, ஜனாஸாவிற்கு சமுகம்‌ தந்த
ஒவ்வொருவரும்‌ தனியாக அவருக்காக பிரார்த்திக்க வேண்டும்‌ எனவும்‌ இஸ்லாம்‌ வழிகாட்டி இருக்கின்றது.

அத்துடன்‌ கப்றுகளை எல்லைமீறி உயர்த்துவது, கல்லால்‌ கட்டுவது, பூசுவது, வணக்கஸ்தலங்காளாக மாற்றுவது, விளக்கேற்றி அலங்கரிப்பது ஆகிய அவனைத்தையும்‌ இஸ்லாம்‌ ஹராமாக்கி இருப்பதுடன்‌ அவை யூத, கிரிஸ்தவ கலாச்சாரம்‌ எனவும்‌
பறைசாற்றுகின்றது.

குர்ஆனில்‌ குறைகண்டு ஸஹபாக்களும்‌, ஏனைய முஸ்லிம்களும்‌ மதம்மாறிய முர்தத்துகள்‌, காபிர்கள்‌ என வாதிடும்‌ “ஷீயா” என்ற வழிகடட்ட பிரிவினரே ஹிஜ்ரி முன்றாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியில்‌ அப்பாசியர்‌ ஆட்சி பலவீனமடைந்து, பாதிமிய்ய ஷீஆக்களின்‌ ஆட்சி ஸ்திரம் பெற்ற போது நபி (ஸல்‌) அவர்களால்‌ குழிதோண்டி‌ புதைக்கப்பட்ட இந்தக்‌ கொடிய பாவத்தைத்‌ தோற்றுவித்தனர்‌. அதனை கப்று
வணங்கிகளான சூபிகள்‌ பின்‌ தொடர்ந்தனர்‌, இன்றும்‌ அவர்களே அதற்கு புத்துயிரூட்டுகின்றனர்‌.

வாதம்‌:10). இறை நேசர்களான அவ்லியாக்களிடம்‌ உதவி தேடலாம்‌ என்பதற்குப்‌ பின்வரும்‌ நபிமொழியே ஆதாரமாகும்‌.

எனக்குரிய நேசரை யார்‌ விரோதிக்கின்றானோ நிச்சயமாக நான்‌ அவனுக்கெதிராகப்‌ போர்ப்பிரகடனம்‌ செய்துவிட்டேன்‌, நான்‌ கடமையாக்கிய ஒன்றை விட வேறு எந்த ஒன்றினாலும்‌ எனது அடியான்‌ என்னை நெருங்குவதில்லை. எனது
அடியானை நான்‌ நேசிக்கும்‌ வரை மேலதிகமான (நபிலான) வணக்கங்கள்‌ முலம்‌ அவன்‌ என்னை நெருங்கிக்‌ கெண்டே இருப்பான்‌, நான்‌ அவனை நேசித்துவிட்டால்‌ அவன்‌ கேட்கின்ற அவனது செவிப்புலனாகவும்‌, அவன்‌ பார்க்கின்ற அவனது
பார்வையாகவும்‌, அவன்‌ பிடிக்கின்ற அவனது கரமாகவும்‌, அவன்‌ நடக்கின்ற அவனது
காலாகவும்‌ நான்‌ ஆகிவிடுவேன்‌. அவன்‌ என்னிடம்‌ கேட்டால்‌ நிச்சயம்‌ நான்‌ அவனுக்குக்‌ கொடுப்னே; அவன்‌ என்னிடம்‌ பாதுகாப்பு வேண்டினால்‌ நிச்சயம்‌ நான்‌ அவனுக்கு பாதுகாப்பளிப்பேன்‌, (புகாரி) 
என்கிறது அந்த ஹதீஸ்‌.

இதில்‌ அவ்லியாக்களிடம்‌ உதவி வேண்டலாம்‌ என்பதற்கான எவ்வித ஆதாரமும்‌ கிடையாது. மாத்திரமின்றி, ஒருவர்‌ அல்லாஹ்வின்‌ நேசராக (வலியாவாக) விரும்பினால்‌ கடமைகளை கட்டாயம்‌ பேணிக்‌ கொள்வதுடன்‌, உபரியான வணக்கங்களையும்‌ செய்ய வேண்டும்‌ என்றே கூறுகின்றது.

உண்மை விசுவாசிகள்‌ எவரும்‌ இந்த நிலையை அடையலாம்‌. அப்படி வலி நிலையை அடைந்த ஒருவர்‌ அல்லாஹ்விடமே பாகதுகாப்புத்தேடவும்‌ வேண்டும்‌ அவனிமே தேவைகளைக்‌ கேட்கவும்‌ வேண்டும்‌ என்ற மற்றொரு பகுதியையும்‌ இந்த ஹதீஸ்‌ கூறுவதை மண்ணறை வணங்கிகள்‌ மறந்தது ஏனோ!

கப்றுகளை வணக்கஸ்தலங்களாக்குவது மாபெரும்‌ குற்றமாகும்‌:

நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமான நோயில்‌ தங்களது நபிமார்களின்‌ மண்ணறைகளை பள்ளியாக எடுத்துக்‌ கொண்ட யூதர்களையும்‌, கிரிஸ்தவர்களையும்‌
அல்லாஹ்‌ சபிப்பானாக! என எச்சரித்ததாக குறிப்பிடும்‌ என்னை ஆயிஷா (ரலி) அவர்கள்‌ இந்த எச்சரிக்கை இல்லாதிருப்பின்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ கப்றை உயர்த்தி இருப்பார்கள்‌, இருந்தும்‌ அது பள்ளியாக மாற்றப்படுவதை நான்‌ அஞ்சுகிறேன்‌” எனக்‌
குறிப்பிடுகிறார்கள்‌. (புகாரி, முஸ்லிம்‌) .

அன்னையரான உம்மு ஹபீபா (ரழி) அவர்களும்‌, உம்மு ஸலமா (ரழி) ஆகிய இருவரும்‌ ஹபஷாவில்‌ தாம்‌ அவதானித்த உருவப்படங்களுடன்‌ காணப்பட்ட ஒரு
கோவிலைப்பற்றி அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ எடுத்துக்‌ கூறியபோது அவர்கள்‌ தங்களில்‌ உள்ள ஒரு நல்லடியார்‌ மரணித்தால்‌ அவரது மண்ணறையின்‌ மீது ஒரு பள்ளியைக்‌ கட்டுவார்கள்‌ அவர்களின்‌ ஒந்த உருவங்களை அதில்‌ வரைந்து விடுவார்கள்‌,
இவர்கள்தாம்‌ மறுமையில்‌ அல்லாஹ்விடத்தில்‌ மிகக்கெட்ட படைப்பினமாகும்‌”? என நபி
(ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ வறிவிக்கிறார்கள்‌. (புகாரி, முஸ்லிம்‌).

தங்கள்மார்‌, பெரியார்கள்‌, நாதாக்கள்‌ என்போரின்‌ உருவப்படங்களை இல்லங்களில்‌ தொங்கவிடுவதும்‌, அவற்றை நினைவு கூர்வதும்‌ இதில்‌ அடங்கும்‌.
உலகில்‌ பிறந்து மரணிக்கும்‌ எந்த மனிதனும்‌ எந்த நிலையிலும்‌ கடவுள்‌ நிலையை அடைய முடியாது, அவர்‌ அல்லாஹ்விடம்‌ நெருக்கமான வானவராகவோ, அல்லது அவனால்‌ அனுப்பப்பட்ட தூதராகவோ, அல்லது நல்லடியாராகவோ இருக்கலாம்‌. இதை
முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தனது இறுதி வேளையிலும்‌ எச்சரித்திருக்கின்றார்கள்‌.

கட்டப்பட்ட கப்றுகள்‌ தகர்க்கப்பட வேண்டும்‌:

நபிமார்கள்‌, நல்லடியார்கள்‌ பேரில்‌ எழுப்பப்படும்‌ கப்றுகள்‌ தகர்க்கப்பட்டு அவை மண்ணோடு மண்ணாக சேர்க்கப்பட வேண்டும்‌ என்பதே இஸ்லாத்தின்‌ உறுதியான நிலைப்பாடாகும்‌.

“என்னை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ எதற்காக அனுப்பினார்களோ அதற்காக உன்னையும்‌ நான்‌ அனுப்பிவைக்கட்டுமா? என “அபுல்ஹய்யாஜ்‌ அல்‌ அஸதீ (ரழி) அவர்களிடம்‌ அலி (ரழி) அவர்கள்‌ கேட்டுவிட்டு, “நீ எந்த ஒரு உருவப்படத்தின்‌ தோற்றத்தை மாற்றாமலும்‌, மேலால்‌ தெரிகின்ற எந்த கப்ரையும்‌ தரைமட்டமாக்காமலும்‌ விட்டுவிடாதே” எனக்‌ கூறினார்கள்‌ (நூல்‌: முஸ்லிம்‌)

வாதம்‌: 11) கப்ரைத்‌ தரைமட்டமாக்குவதல்ல பொருள்‌, சீர்‌ செய்வது என்பதே சரியான பொருள்‌.

மறுப்பு : கப்றுகள்‌ கட்டுவது பெரும்‌ பாவம்‌, கட்டப்பட்ட கப்றுகள்‌ தகர்க்கப்பட வேண்டும்‌ என்று நாம்‌ பிரச்சாரம்‌ செய்கின்ற போது இந்த வாதத்தை முன்வைக்கும்‌ கப்று வணங்கிகள்‌ தமது வணக்கத்திற்கான ஆதாரமாக கப்ரை உடைப்பதல்ல,
சீர்செய்வதுதான்‌ அதன்‌ பொருள்‌ என தமது வாதத்தை முன்வைப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

கட்டப்பட்ட கப்றுகள்‌ தகர்க்கப்பட வேண்டும்‌ என்ற சிறு தலைப்பில்‌ நாம்‌ ஆதாரமாகக்‌ காட்டிய ஹதீஸில்‌ இடம்‌ பெறும்‌ அதைத்‌ தரைமட்டமாக்காது
விட்டுவிடாதே? என்பதை தவறான அர்த்தம்‌ என வாதிடும்‌ இவர்கள்‌  “அதை சீர்‌ செய்யாது விட்டுவிடாதே” என்பதுதான்‌ அதன்‌ சரியான அர்த்தம்‌ என விளக்கி, கப்று வணக்கத்தை தொடர்கின்றனர்‌.

இக்கூற்றிற்கு ஆதாரமாக “சீரமைத்தல்‌” என்பதைக்‌ குறிக்க அல்குர்‌ஆனில்‌ இடம்‌ பெறும்‌ “ஸவ்வைத்துஹு” நான்‌ அவனை சீர்‌ படுத்தினேன்‌? என்ற பொருளில்‌ மைந்த வசனத்தை ஆதாரமாகக்‌ கூறுகின்றனர்‌.

அல்குர்ஆனிலும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளிலும்‌ “ஸவ்வா” என்ற வார்த்தை சீர்‌ செய்தல்‌? “சமப்படுத்துதல்‌” “மட்டப்படுத்துதல்‌” போன்ற பொருள்களில்‌ ஆளப்பட்டுள்ளது.

அரபுமொழியியல்‌ துறைசார்ந்த அறிஞர்களும்‌ ஹதீஸ்கலை வல்லுனர்களும்‌ அது இடம்பெறும்‌ இடத்தையும்‌ நிலையையும்‌ கவனத்தில்‌ கொண்டே அதற்குரிய பொருத்தமான பொருளை முடிவு செய்வர்‌.

கப்று வணங்கிகள்‌ வாதிடுவது போன்று, கட்டப்பட்ட கப்ரை சீர்‌ செய்தல்‌ என்ற பொருளை அவர்கள்‌ சார்ந்துள்ள மத்ஹபு கூட விளக்கவில்லை. அவர்கள்‌
சார்ந்திருக்கும்‌ மத்ஹபு அறிஞர்கள்‌ தரும்‌ விளக்கம்‌ இவர்களின்‌ விளக்கத்திற்கு நேர்‌ முரணானதாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

“ஸவ்வா” என்ற சொல்லுக்கும்‌, அதன்‌ கிளைச்‌ சொற்களுக்கும்‌ இந்த அர்த்தம்‌ மாத்திரம்‌ இருப்பதாக அவர்களாகவே கற்பனை செய்து கப்று கட்டலாம்‌, அங்கு அடங்கப்பட்டுள்ள மகான்களை(?) அவ்லியாக்களை (?) அழைக்கலாம்‌, வணங்கலாம்‌,
அவர்களுக்காக நேர்ச்சை செய்யலாம்‌ என்றெல்லாம்‌ உளறி பாமரமக்களை படைத்திவனிடம்‌ நேரடியாக பிரார்த்திக்க விடாது மரணித்தவர்களிடம்‌ வேண்டுமாறு
கூறி வழிகெடுப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

“ஸவ்வா” என்ற அரபிச்‌ சொல்லின்‌ விளக்கம்‌:

சத்தியமாக உங்களை அகிலத்தாரின்‌ இரட்சகனுடன்‌ உங்களை நாம்‌ சமப்படுத்திக்‌ கூறுவோராக இருந்த காரணத்தால்‌ தெளிவான வழிகேட்டிலேயே இருந்தோம்‌ (அத்‌ அஷ்ஷு அரா. வச: 97-98).

மேற்படி வசனத்தில்‌ “அகிலத்தாரின்‌ இரட்சகனை சீர்‌ செய்வோராக இருந்தோம்”‌ என பொருள்‌ கொண்டால்‌ எப்படி இருக்கும்‌! அகிலத்தாரின்‌ இரட்சகனாகிய
அல்லாஹ்வுக்கு சமமாக பெரியார்களை, சாதாத்துக்களை மதிப்போர்‌ பற்றியே இந்த
வசனம்‌ பேசுகின்றது, அவர்கள்‌ மறுமையில்‌ நரகத்தில்‌ போடப்படும்‌ பொழுது இந்த வார்த்தையைக்‌ கூறுவார்கள்‌ என்பதை கவனத்தில்‌ கொள்ளவும்‌.

“நிராகரித்தோரும்‌, இத்தாதருக்கு மாறுசெய்தோரும்‌ தம்மைக்‌ கொண்டு பூமி சமப்படுத்தப்படக்கூடாதா?
என (அந்நாளில்‌) ஆசைப்படுவர்‌ (அத்தியாயம்‌: 08. வச:42).

இங்கு “ஸவ்வா” என்ற இறந்த காலச்‌ சொல்லில்‌ இருந்து பிறந்த எதிர்கால செயற்பாட்டு வினையான
“துஸவ்வா” என்ற சொற்கள்‌ ஆளப்பட்டுள்ளன.

இவர்கள்‌ “ஸவ்வா” என்ற சொல்லிற்கு தரும்‌ சீர்‌ செய்தல்‌ என்ற பொருளை இந்த வசனத்திற்கும்‌ வழங்க முடியுமா? அரபு மொழியில்‌ பாண்டித்தியம்‌ பெற்ற பண்டிதர்கள்‌ போல தம்மை அடையாளப்படுத்திக்‌ கொள்ளும்‌ இவர்கள்‌ எவ்வளவு பெரும்‌ பொய்யர்கள்‌ என்பதை சிந்தித்துப்பாருங்கள்‌.

இவ்வாறே அஷ்ஷம்ஸ்‌ அத்தியாயம்‌, 14வது வசனத்தில்‌ ஸாலிஹ்‌ நபியைப்‌ பொய்ப்பித்த ஸமூத்‌ கூட்டத்தாரை தண்டித்து, தரைமட்டமாக்கியதைக்‌ குறிப்பிடுகின்ற
போது அவர்கள்‌ அவரைப்‌ பொய்ப்பித்தனர்‌. அதை (ஒட்டகத்தின்‌ கால்‌ நரம்பைத்‌ தறித்தனர்‌). அவர்களின்‌
இரட்சகன்‌ அவர்கள்‌ மீது தண்டடையை சரமாரியாக இறக்கினான்‌. அவர்களின்‌ பாவத்தின்‌ காரணமாக அவர்களைச்‌ தரைமட்டாக்கினான்‌. அங்கும்‌ “ஸவ்வா” என்ற வார்த்தையை அல்லாஹ்‌ பிரயோகித்துள்ளான்‌.

அந்த வசனத்தில்‌ இடம்‌ பெறும்‌ “ஸவ்வா” என்ற வார்த்தைக்கு சீர்படுத்தினான்‌ என பொருள்‌ கொள்வது மிகப்பெரும்‌ முட்டாள்தனமாகும்‌.

கப்ரைப்‌ பூசுவதையும்‌, அதைக்கட்டுவதையும்‌, அதன்‌ மீது அமர்வதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்துள்ளார்கள்‌. (முஸ்லிம்‌). என்ற செய்தியில்‌ கப்ரை‌ சீர்படுத்துவதற்கு முன்‌ அதைக்‌ கட்டுவது என்பது அடிப்படையிலே தவறான ஒரு செயலாயிற்றே! இந்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு மழுங்கடிக்கப்பட்டுள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

மஸ்ஜிதுன்‌ நபவியை நிறுவுவதற்கு முன்‌ அதன்‌ நிலம்‌ பள்ளமும்‌, குழியும்‌, குன்றும்‌, கிடங்குமாகக்‌ காணப்பட்டது. நபி (ஸல்‌) அவர்களின்‌ கட்டளைக்கு
அமைவாக அது கூர்த்து சமப்படுத்தப்பட்டது என்பதைக்‌ குறிக்க “பின்னர்‌ பாழடைந்த குழிகளைக்‌ கொண்டு (ஏவினார்கள்‌) அது மட்டப்படுத்தப்பட்டது”
(புகாரி) என நபிமொழியில்‌ பிரயோகிக்கப்பட்டுள்ள வாசகத்தை அவதானித்தால்‌ “ஸவ்வா” என்ற வார்த்தைக்கு தரைமட்டமாக்குவது, சமப்படூத்துவது எனப்‌ பொருள்‌ கொள்வதே பொருத்தமானதாகும்‌.

“ஸவ்வா” என்ற வார்த்தைக்கு சீர்‌ செய்தல்‌ என வாதத்திற்காக வைத்துகொண்டால்‌ “சீர்‌ செய்தல்‌” என்பது அதைக்‌ கட்டி, அது பாழ்போன
பின்னர்தானே சாத்தியப்படும்‌. கப்ரைக்‌ கட்டுவதைத்தான்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ தடை
செய்துவிட்டார்களே! தடுத்த ஒன்றை மார்க்கமாக்கி புதிய வியாக்கியானம்‌ செய்ய இவர்களுக்கு அனுமதி வழங்கியவன்‌ யார்‌?

வாதம்‌ 12) அல்லாஹ்வின்‌ தூதரின்‌ கப்று அவர்களின்‌ பள்ளிக்குள்யேயே அமைந்திருப்பது தர்ஹாகக்கள்‌ எழுப்புவதற்கான ஆதாரமாக இல்லையா?

மறுப்பு பள்ளிக்குள்‌ கப்றுகள்‌ வைத்துக்‌ கொண்டு அல்லாஹ்வையும்‌ வணங்க, அவ்லியாக்களையும்‌ கைவிட முடியாத இப்படி ஒரு சிலர்‌ கேள்வி எழுப்புவதுண்டு. தாம்‌ சார்ந்திருக்கும்‌ மத்ஹப்‌ அறிஞரான இமாம்‌ நவவி (ரஹ்‌) அவர்கள்‌ இது பற்றித்‌ தரும்‌ விளக்கம்‌ இதற்கு பொருத்தமானதானகும்‌.

“மண்ணறையை எல்லைமீறி கண்ணியப்படுத்துதல்‌, அதனால்‌ ஏற்படும்‌ குழப்பம்‌ போன்றதை அஞ்சியே அல்லாஷஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தனது கப்ரையும்‌, பிறரின்‌ கப்ரையும்‌ பள்ளியாக எடுக்கக்‌ கூடாது என தடுத்திருக்கிறார்கள்‌, சென்ற
சமுதாயத்தவரில்‌ ஏற்பட்டது போல்‌ சிலவேளை “குஃப்ர்‌” நிராகரிப்பின்‌ பக்கமும்‌ அது இட்டுச்செல்லாம்‌, முஸ்லிம்கள்‌ அதிகமான போது (மதிப்புக்குரிய) ஸஹாபாக்களும்‌, தாபியீன்களும்‌ (சங்கைமிக்க) அல்லாஹ்வின்‌ தூதரின்‌ பள்ளியை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது உம்முஹாத்துல்‌ முஃகமினீன்களின்‌ அறைகளும்‌ அந்த
விஸ்தரிப்பில்‌ உள்ளடங்கியது. அதில்‌ அல்லாஹ்வின்‌ தூதரின்‌ (புனித) அடக்கஸ்தலமும்‌, அவர்களின்‌ ஒருதோழர்களான அபூபக்கர்‌ (ரழி) உமர்‌ (ரழி)
ஆகியோரின்‌ அடக்கஸ்தலங்களும்‌ அமைந்திருக்கும்‌ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின்‌ அறையும்‌ ஒன்றாகும்‌. நபி (ஸல்‌) அவர்களின்‌ அடக்கஸ்தலத்தை சூழ வட்டவடிவில்‌ பள்ளிக்கு தென்படாதவிதமாக நீண்ட சுவர்‌ எழுப்பப்பட்டது, அங்கு பொது மக்கள்‌
தொழுவார்கள்‌ (இருப்பினும்‌) மார்க்கத்தில்‌ எச்சரிக்கப்பட்டது தவிர்க்கப்பட்டு விடும்‌.
இதன்‌ பின்னரும்‌ அதன்‌ இரு வடமுனைகளிலும்‌ இரு சுவர்களை எழுப்பினார்கள்‌, கப்ரை முன்னோக்காதிருக்க அவற்றின்‌ இரு முனையும்‌ (ஒன்றுடன்‌ ஒன்று) படும்படியாக அவ்விரு சுவர்களையும்‌ திருப்பியும்‌ வைத்தனர்‌, இதற்காகத்தான்‌ ஹதீஸில்‌ அந்த
எச்சரிக்கை இல்லாதிருப்பின்‌ அவர்களின்‌ கப்று வெளிப்பட்டுத்தப்பட்டிருக்கும்‌ எனினும்‌ அது பள்ளியாக மாற்றப்பட்டுவிடுமோ என அவர்கள்‌ அஞ்சியுள்ளார்கள்‌ இவ்வாறு அறிஞர்கள்‌ கூறியுள்ளார்கள்‌. (அல்லாஹ்வே சரியானது பற்றி நன்கு அறிந்தவன்‌). என இமாம்‌ நவவி (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. (ஷரஹ்‌ ஸஸஹீஸஷ்‌ முஸ்லிம்‌. பாகம்‌: 2- பக்கம்‌ 225)

அல்லாஹ்வின்‌ தூதரின்‌ அடக்கஸ்தலம்‌ அவர்களின்‌ பள்ளியின்‌ விஸ்தரிப்பின்‌ போதே உள்வாங்கப்பட்டிருக்கின்றது, அதே வேளை அவர்கள்‌ எதை எச்சரித்தார்களோ அது நடக்காமல்‌ இருப்பதற்காக அல்லாஹ்‌ அவர்களின்‌ மண்ணறையை இவ்வாறான வழிமுறை முலம்‌ பாதுகாத்துள்ளான்‌ என்றே இமாம்‌ நவவி (ரஹ்‌) அவர்களின்‌ தீர்ப்பு
தெளிவுபடுத்துகின்றது. 

இந்த எச்சரிக்கை இல்லாதிருப்பின்‌ அவர்களின்‌ கப்று உயர்த்தப்பட்டிருக்கும்‌ என்பதை விளக்கும்‌ இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌ அஸ்கலானீ (ரஹ்‌) அவர்கள்‌
நபி (ஸல்‌) அவர்கள்‌ அடக்கஸ்தலம்‌ வெளிப்படுத்தப்பட்டிருக்கும்‌ அதற்கென
திரை ஏற்படுத்திக்‌ கொள்ளப்பட்டிருக்காது வீட்டிற்கு வெளியில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டிருப்பார்கள்‌ என்துபதான்‌ இதன்‌ அர்த்தமாகும்‌ இதனை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்‌ “மஸ்ஜிதுன்‌ நபவீ” விஸ்தரிக்கப்படுவதற்கு முன்னர்‌ கூறியுள்ளார்கள்‌,
இதனால்தான்‌ அந்தப்பள்ளி விஸ்தரிக்கப்பட்ட போது (தொழும்‌) ஒருவர்‌ கிப்லாவை முன்னோக்குவதுடன்‌, கப்ரை முன்னோக்காதவாறு அன்னை அவர்களின்‌ அறை முக்கோண வடிவில்‌ அமைக்கப்பட்டிருந்தது” என விளக்குகிறார்கள்‌. (ஃபத்ஹு ல்பாரி. பாகம்‌ 4. பக்கம்‌: 890)

இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மஸ்ஜிதுன்‌ நபவியின்‌ விஸ்தரிப்பு பற்றி விளக்குகின்றபோது அல்லாஹ்வின்‌ தூதரின்‌ பள்ளியை அவர்களின்‌ மரணத்தின்‌ பின்‌ இரண்டாம்‌ கலீஃபா உமர்‌ (ரழி) அவர்களும்‌, முன்றாம்‌ கலீஃபா உஸ்மான்‌ (ரழி)
அவர்களும்‌, பின்னர்‌ அப்துல்‌ மலிகின்‌ மகன்‌ வலீத்‌ அவர்கள் அவரது ஆட்சியிலும்‌ விஸ்தரிப்பு செய்தார்கள்‌. இதற்கு முன்னர்‌ பள்ளியை விட்டும்‌ பிரிக்கப்பட்டிருந்த உம்முஹாத்துல்‌ முஃகமினீன்களின்‌ அறைகள்‌ பள்ளியுடன்‌ இணைக்கப்பட்டன, இது
இவரது சிறிய தந்தையின்‌ மகன்‌ உமர்‌ பின்‌ அப்தில்‌ அஸீஸ்‌ (ரஷ்‌) அவர்கள்‌ மதீனாவின்‌ கவர்னராக ஒருந்த போது நடந்தது.

இமாம்‌ இப்னு கஸீரின்‌ மற்றொரு கூற்றை சிந்தித்தால்‌ இரண்டு கலீபாக்களும்‌ தமது காலத்தில்‌ வேறுபடுத்தி வைத்திருந்த அன்னையரின்‌ இல்லங்கள்‌ ஹிஜ்ரி 86ற்குப்‌ பின்னரே பள்ளியுடன்‌ இணைக்கப்பட்டுள்ளன என்பதையும்‌, அதற்கு முன்னர்‌ அது பிரிக்கப்பட்டே இருந்து வந்துள்ளன என்பதையும்‌ அறியலாம்‌. (பார்க்க: அல்பிதாயா வன்னிஹாயா. பாகம்‌: 1- பக்கம்‌ 216. பாகம்‌ 3- பக்கம்‌: 273)

 

தொடர்ச்சி.. கீழே உள்ள சுட்டியை அழுத்துக..


Previous Post Next Post