முஆவியா (ரழி) சிறப்புக்கள்

1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு
 
قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم علم معاوية الحساب وقِهِ العذاب ) .

யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையில் இருந்து அவரை பாதுகாப்பாயாக.

இப்னு அஸாகீர்-16/684,686, தஹபீ(ரஹ்) அவர்களது “ஸியர் அலாமின் நுபுலா”-8/38, முஸ்னத் ஷமீன்- 190

இமாம் அல்பானி (ரஹ்) கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பாளர் தொடர் சரியானது.

என்னுடைய பார்வையில் இந்த தொடர் வலுவானது. இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் இவர்களில் இப்னு அபி உமைர் என்பவரை தவிர மற்றவர்கள்  ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற கூடியவர்கள். இப்னு அபி உமைர் நபி ﷺ அவர்களின் தோழராவார். மற்றோரு அறிவிப்பில்

யா அல்லாஹ் முஆவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக.

ஸில்ஸிலாத்து ஸஹீஹா-3227

மற்றோரு ஆதாரபூர்வமான செய்தி இமாம் அஹ்மத்(ரஹ்) தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள் “ஃபதாயீல் ஸஹாபா-1748”

“யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையிலிருந்து அவரை பாதுகாப்பாயாக” என்று  நபி ﷺ அவர்கள் துஆ செய்ததாக அல் இர்பாத் இப்னு ஸாரியாஹ் அஸ் ஸுலைமீ(رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஃபதாயீல் ஸஹாபாவை ஆய்வு செய்த அறிஞர்கள் இது ஹஸன் லிகைரிஹி என்று கூறியுள்ளார்கள்.

இமாம் தஹபீ இது முந்தைய ஹதீஸுக்கு வலுவான ஆதாரம் என்று கூறியுள்ளார்கள்

ஸியர் அலாமின் நுபுலா-3/124

இப்னு ஹிப்பான்(ரஹ்) தனது “அல் இஹ்ஸான் மனாகிப் அஸ் ஸஹாபா-16/191 பதிவு செய்துள்ளார்கள்.

இப்னு குஜைமா(ரஹ்) தனது ஸஹீஹ் இப்னு குஜைமாவில்- 3/214 பதிவு செய்துள்ளார்கள்

ஸஹீஹ் இப்னு குஜைமாவை ஆய்வு செய்த முஹம்மத் முஸ்தபா அல் அஃஜமீ(ரஹ்) இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் ஆகும். ஏனெனில் அல் ஹாரித் என்பவர் இடம் பெறுகிறார் இவர் மஜ்ஹூல்(யாரென அறியப்படாதவர்) ஆனால்  இர்பாத் இப்னு ஸாரியாஹ்(رضي الله عنه) அவர்கள் வழியாக வேறு அறிவிப்பாளர் தொடர் வருவதால் இது ஆதாரபூர்வமான செய்தி.

ஷேக் ஜூபைர் அலி(ரஹ்) ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

மஜல்லாஹ் அல் ஹதீஸ் : பக்கம்-62

இமாம் அல்பானி(ரஹ்) இந்த அறிவிப்பாளர் தொடர் ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

அஸ் ஸஹீஹா-7/688

இந்த ஹதீஸுக்கு வலுவூட்டும் முர்ஸலான ஹதீஸ்

حدثنا أبو المغيرة ، ثنا صفوان قال : حدثني شريح بن عبيد أن رسول الله – صلى الله عليه وسلم – دعا لمعاوية بن أبي سفيان : ( اللهم علمه الكتاب والحساب وقه العذاب ) .

யா அல்லாஹ் முஆவியாவிற்கு கணிப்புமுறையை கற்பிப்பாயாக மற்றும் தண்டனையில் இருந்து அவரை பாதுகாப்பாயாக ஷரிஹ் இப்னு  உபைத்(ரஹ்) அறிவிக்கிறார்கள்

இமாம் அஹ்மத்(ரஹ்) உடைய ஃபதாயீல் ஸஹாபா-1749.

இந்த நூலை ஆய்வு செய்தவர்கள் இது பலவீனமான செய்தி என்று கூறுகிறார்கள். ஆனால் இது முந்தைய செய்தியை பலப்படுத்துகிறது.  ஹஸன் லிஹைரிஹி என்று வலுவுட்டுகிறது.

 
2) முஆவியா(رضي الله عنه) சிறப்பு

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ عَبْدُ الأَعْلَى بْنُ مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ، وَكَانَ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ ‏”‏ اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.

யா அல்லாஹ் முஆவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் மூஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்களது “தாரீகுல் கபீர்-5/240, சுனன் திர்மிதீ-3842

இமாம் அல்பானி (ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று ஸஹீஹ் அல் திர்மிதீ- 3/236 என்ற தனது நூலில் கூறியுள்ளார்கள்.

ஷெய்க் முஹம்மத் ஆமீன் அஷ்ஷின்கீதி(ரஹ்) கூறுகிறார்கள்

இமாம் புகாரி தனது “தாரீகுல் கபீரில் 5/240 ஆதாரபூர்வமான செய்தியாக பதிவு செய்துள்ளார்கள்

அபு முஸ்ஹர்—>சயீத் இப்னு அப்துல் அஜிஸ்—>ரபீஆ இப்னு யஜீத்—-அப்துல் ரஹ்மான்(رضي الله عنه) அவர்கள் நபி ﷺ கூறியதாக அறிவிக்கிறார்கள்:

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக.அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் மூஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறினார்கள்

முஸ்னத் அஹ்மதில் வரும் ஆதாரபூர்வமான செய்தி.

17926 – حدثنا عبد الله حدثني أبي ثنا علي بن بحر ثنا الوليد بن مسلم ثنا سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة الأزدي عن النبي صلى الله عليه و سلم : انه ذكر معاوية وقال اللهم اجعله هاديا مهديا واهد به

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக.அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக என்று நபி ﷺ அவர்கள் முஆவியா(رضي الله عنه) அவர்களிடம் கூறினார்கள்

முஸ்னத் அஹ்மத்-17926

இமாம் ஷுஐப் அல்அர்னாவூத்(ரஹ்) இந்த ஹதீஸை குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்.

இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் இவர்கள் ஸஹீஹ் அல் புகாரியில் இடம் பெறுபவர்கள்.

இப்னு அஸாகீர்(ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று தாரீக் அல் திமீஸ்கீ-(59/106) கூறியுள்ளார்கள்

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று கூறுகிறார், மஜல்லாஹ் அல் ஹதீஸ்: பக்கம்-60 கூறியுள்ளார்கள்


3) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

முஆவியா(رضي الله عنه) ஃபகீஹ்(ஞானமுடையவர்) மற்றும் அவரது தொழுகை நபி ﷺ அவர்களை போன்று இருந்தது.

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

முஆவியா(رضي الله عنه), தம்மிடம் இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(رضي الله عنه) அவர்களிடம் சென்றார். (முஆவியா – رضي الله عنه – அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(رضي الله عنه), ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(صلى الله عليه وسلم) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி-3764

அபுதர்தா(رضي الله عنه) அவர்கள் கூறினார்கள்:

مَا رَأَيْتُ أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَشْبَهَ صَلاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مِنْ أَمِيرِكُمْ هَذَا ، يَعْنِي مُعَاوِيَةَ

முஆவியாவின் அளவிற்கு வேறு யாரும் நபி ﷺ அவர்களை போன்று தொழுது நான் கண்டதில்லை.

فوائد المنتقاة العوالي الحسان للسمرقندي-[67]


4) முஆவியா(رضي الله عنه) சிறப்புகள்

முஆவியாவை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்று நபி ﷺ அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதுவருக்காக அல்லாஹ்வின் வஹீயை அவர் எழுதி கொடுப்பவராக இருந்தார்  என்று இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்.

- முஸ்னத் அஹ்மத்-2651

இமாம் அல்பானி(ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று ஸில்ஸிலாத்து ஸஹீஹா-1/164 எனும் தனது நூலில் கூறியுள்ளார்கள்

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) இது ஆதாரபூர்வமான செய்தி என்று கூறினார்.

மஜல்லாஹ் அல் ஹதீஸ்: பக்கம்-5

இமாம் இப்னு தைய்மிய்யா(ரஹ்) தனது மஜ்முஉ ஃபதாவா-4/288 கூறுகிறார்:

நபி ﷺ அவர்களது நம்பிக்கைக்குரிய நபித்தோழர்  மூஆவியா(رضي الله عنه) அவர்கள்  அல்லாஹ்வின் வஹீயை எழுதினார் என்பது பலரால் உறுதிபடுத்தபட்டுள்ளது.  மேலும் கலீஃபாவாக இருந்த உமர் இப்னு அல் கத்தாப் (رضي الله عنه) மக்களை அறிவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். உமர்(رضي الله عنه) முஆவியா(رضي الله عنه) அவர்களை ஷாமிற்கு (அது சிரியா, பலஸ்தீன், ஜோர்டன், லெபனான் ஆகிய பகுதியும் அடங்கும்) தனது மரணம் வரை அவரை ஆளுநராக வைத்து இருந்தார்கள். பிறகு கலீஃபாவாக வந்த உஸ்மான் இப்னு அஃப்பான்(رضي الله عنه) முஆவியா(رضي الله عنه)ஆளுநராக இருந்த அதே பகுதியில் மீண்டும் அவரை நியமித்தார்கள். அவர்களில் யாரும் முஆவியா(رضي الله عنه) ஆளுநராக இருந்த போது அவரை குற்றம் சாட்டவில்லை.

இப்னு அஸாகீர் (ரஹ்) கூறுகிறார்கள்

خال المومنين وكاتب وحى رب العالمين

முஆவியா(رضي الله عنه) அவர்கள் முஃமின்களுக்கு தாய் மாமன் ஆவார்கள் மேலும் இறைவனின் வஹீ எழுதக் கூடியவராக இருந்தார்கள்

தாரீக் அல் திமீஸ்கீ-62/38


5) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்புகள்

உம்மு அல்கமா அறிவிக்கிறார்கள். முஆவியா(رضي الله عنه) அவர்கள் மதீனாவிற்கு வந்து ஆயிஷா(رضي الله عنها) அவர்களிடம் நபி ﷺ அவர்களின் போர்வையும், முடியையும் கேட்டார்கள் பிறகு போர்வையை தங்களது உடம்பில் போர்த்திக் கொண்டு அந்த முடியை தண்ணீரில் முழுக்கி எடுத்து குடித்துவிட்டு தங்களின் உடம்பில் போட்டு ஊற்றினார்கள்

தாரீக் அல் திமீஸ்கீ-62/106

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) அது ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

மஜல்லாஹ் அல் ஹதீஸ்:பக்கம்-60

குறிப்பு:

இந்த செய்தியின் மூலம் முஆவியா(رضي الله عنه) அவர்கள் நபி ﷺ அவர்கள் எவ்வளவு நேசித்து இருப்பார்கள் என்பது அறிய முடிகிறது. மேலும் நபி ﷺ அவர்கள் விட்டுச் சென்றவற்றை கொண்டு பரக்கத் தேடுவது ஆகுமானது என்பதையும் உணர்த்துகின்றது


6) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

இப்னு அப்பாஸ்(رضي الله عنه) கூறுகிறார்கள்

ما رأيت رجلا كان أخلق يعنى للملك من معاوية

(நான்கு கலீஃபாக்களின் கிலாஃப்த்திற்கு பிறகு) ஆட்சி செய்வதில் முஆவியா(رضي الله عنه) அவர்களை விட வேறு சிறந்த மனிதரை நான் கண்டதில்லை.

தாரீக் அல் திமீஸ்கீ-62/161 , முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்-20985

ஷேக் ஜூபைர் அலி (ரஹ்) அது ஹஸன் என்று கூறியுள்ளார்கள்

மஜல்லாஹ் அல் ஹதீஸ்: பக்கம்-62


7) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

முஆவியா(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமன்

அபுதாலிஃப்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடத்தில் “முஆவியா(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமனா அல்லது இப்னு உமர்(رضي الله عنه) முஃமின்களுக்கு தாய் மாமனா? என்று கேட்டேன் அதற்கு ஆம் முஆவியா(رضي الله عنه) உம்மு ஹபீபா பின்த் அபு சுஃபியான்(رضي الله عنها) அவர்களது சகோதரர். உம்மு ஹபீபா(رضي الله عنها) நபி ﷺ அவர்களின் மனைவியாவார் மற்றும் இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் ஹஃப்ஸா(رضي الله عنها)அவர்களின் சகோதரர். ஹஃப்ஸா(رضي الله عنه) நபி ﷺ அவர்களின் மனைவியாவார்  என்று கூறினார்கள். நான் “முஆவியா(رضي الله عنه) அவர்களை முஃமின்களுக்கு தாய் மாமன் என்று கூறலாமா?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அல் ஸுன்னா-2/433

ஹாரூன் இப்னு அப்துல்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடத்தில் எனக்கு அல் ரக்காஹ் என்னும் இடத்தில் சில மக்களிடம் இருந்து கடிதம் வந்துள்ளது அதில் அவர்கள் முஆவியா(رضي الله عنه) அவர்களை நாங்கள் முஃமின்களுக்கு தாய் மாமன் என்று கூறமாட்டோம் என்று கூறியுள்ளார்கள் அதற்கு அஹ்மத்(ரஹ்) கோபமடைந்து இந்த விஷயத்தில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மனந்திரும்பும் வரை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்

அல் ஸுன்னா-2/434

அப்துல் ஹாரித் அவர்கள் கூறுகிளார்கள்,

நாங்கள் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினோம் அதில்

முஆவியாவை வஹியின் எழுத்தாளர் என்று நான் கூறமாட்டேன். மற்றும் அவர் முஃமின்களுக்கு தாய் மாமன் என்றும் கூறமாட்டேன் ஏனெனில் அவர்கள் கிலாஃப்ததை வாள் மற்றும் படை கொண்டு பெற்றார்கள் என்று கூறுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அதற்கு “இவை கெட்ட வார்த்தைகள், இந்த நபர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள், மேலும் அவர்களைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்” என்று அஹ்மத்(ரஹ்) அவர்கள் பதில் அளித்தார்கள்.

அல் ஸுன்னா-2/434

அபுபக்கர் அல் மர்வதீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நான் முஆவியா சிறந்தவரா அல்லது உமர் இப்னு அப்துல் அஜிஸ் சிறந்தவரா? என்று அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு முஆவியா(رضي الله عنه) அவர்களே சிறந்தவர்கள் ஏனெனில் நாங்கள் நபி ﷺ அவர்களின் தோழர்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்கமாட்டோம். நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள், மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். என்று அஹ்மத்(ரஹ்) பதில் அளித்தார்கள்

அல் ஸுன்னா-2/434


8) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

ما زال بي ما رأيت من امر الناس فى الفتنة حتى اني لأتمنى ان يزيد الله عزوجل معاوية من عمري في عمره

மக்களுடைய விசயங்களில் குழப்பங்கள் அதிகரிக்க கூடிய நேரங்களை நான் பார்க்கும் போது, என் ஆயுளை கொண்டு முஆவியா(رضي الله عنه) அவர்களுடைய ஆயுளை அல்லாஹ் அதிகரிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று அன்னை ஆயிஷா(رضي الله عنها) கூறுகிறார்கள்.

அல் தபகாத் இப்னு அரபல்ஹரானி : பக்கம்-41


9) முஆவியா(رضي الله عنه) சிறப்புகள்

ச’அத் இப்னு அபீ வாக்காஸ் கூறினார்கள் : உஸ்மான்(رضي الله عنه) அவர்களுக்கு பிறகு முஆவியா(رضي الله عنه)அவர்களை விட சத்தியத்தின்படி ஆட்சி செய்தவர்கள் வேறு யாரையும் நான் கண்டதில்லை

இப்னு அஸாகீர் (ரஹ்) அவர்களது தாரீக் அல் திமீஸ்கீ-59/161

ஹாஃபீழ் அபு யஹ்யா நூர்புரி(ரஹ்) ஆதாரபூர்வமான செய்தி என்று கூறியுள்ளார்கள்.


10) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

அபுதர்தா(رضي الله عنه) கூறுகிறார்கள்

நபி ﷺ அவர்கள் மரணத்திற்கு பிறகு, முஆவியாவைத் தவிர வேறு யாரும் நபி ﷺ அவர்களை போன்று தொழுதவர்களை நான் கண்டதில்லை.

அல் பவாயீத் அல் முன்தகாத் ஸமர்கந்தி : பக்கம்-67


11) முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான்:

யாரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பழிவாங்கக் கோரும் உரிமையை அவருடைய பொறுப்பாளருக்கு நாம் அளித்திருக்கின்றோம்.

சூரா பனீ இஸ்ராயீல்-17:33

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) விளக்கம் அளிப்பதாவது:

பேரறிஞர் இப்னு அப்பாஸ் (رضي الله عنه) இந்த ஆயத்தின் பொதுவான பொருளிலிருந்து முஆவியா அவர்கள் ஆட்சிக்கு தகுதியானவர் என்று புரிந்து கொண்டார், மேலும் சீக்கிரம் முஆவியா ஆட்சியை அடைவார் என்றும் கருதினார். ஏனென்றால் அவர் உஸ்மானின் பொறுப்பாளராக  இருந்தார், மேலும் உஸ்மான் அநியாயமாக கொல்லப்பட்டார்.  முஆவியா அலியிடம் உஸ்மானின் கொலையாளர்களை ஒப்படைக்குமாறு கேட்டார். அலி முஆவியாவிடம் தன் அதிகாரம் நிலையாகும் வரை அவகாசம்  கேட்டார், மேலும் ஷாம் பகுதியை ஒப்படைக்குமாறு அலி முஆவியாவிடம்  கேட்டார், கொலையாளிகளை ஒப்படைக்கும் வரை செய்ய மாட்டோம் என்று அவர் அதை மறுத்தார். மேலும் முஆவியாவும் ஷாம் பகுதி மக்களும் அலி  அவர்களுக்கு பையத் செய்ய மறுத்தார்கள்.  பின்னர் காலம் கழிந்த பின்பு, இப்னு அப்பாஸ் இந்த ஆயத்திலிருந்து புரிந்ததைப்  போல்  முஆவியாவிடம் பதவி வந்தது.  இது ஆச்சரியமான விடயம்

தப்ரானி அல்முஃஜமுல் கபீர்-10/320


12)முஆவியா(رضي الله عنه) அவர்களின் சிறப்பு

ஆயிஷா(ارضي الله عنها) அவர்களிடம் இருந்து நபி ﷺ ஹதீஸ் மூலம் முஆவியா(رضي الله عنه) அறிவுரை பெற்றார்கள்.

முஆவியா(رضي الله عنه) அவர்கள் ‘எனக்கு அறிவுரை கூற ஒரு கடிதம் எழுதுங்கள், மேலும் என் மீது அதிக சுமைகளை சுமத்தாதீர்கள்’ என்று ஆயிஷா(رضي الله عانها) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:

அதற்கு நபி ﷺ அவர்கள் கூற நான் கேட்டேன் “எவர் மக்களின் கோபத்தால் அல்லாஹ்வின் திருப்தியை நாடுகிறாரோ, அவரை அல்லாஹ் மக்களிடமிருந்து போதுமானதாக ஆக்கிவிடுவான். அல்லாஹ்வின் கோபத்தால் எவர் மக்களின் திருப்தியை நாடுகிறாரோ அவரை அல்லாஹ் மக்களிடம் ஒப்படைப்பான்”

அஸ்ஸலாமு அலைக்கும். என்று பதில் கடிதத்தில் ஆயிஷா(رضي الله عنها) கூறினார்கள்

ஜாமி உத் திர்மிதீ-2414

ஆயிஷா(رضي الله عنها), முஆவியா(رضي الله عنه) இருவரும் நபி ﷺ  அவர்களின் ஹதீஸ்கள் மீது கொண்ட  நேசத்திற்கு இந்த செய்தி சான்றாகும்.
أحدث أقدم