இமாம் ஷாஃபிஈ ரஹி வின் மாணவரான இமாம் முஸனியின் ஷரஹுஸ்ஸுன்னா நூலில் இருந்து.

இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் நேரடி மாணவரும் அதி சிரேஷ்டமானவருமே இமாம் முஸனி ரஹி அவர்கள். 

ناصر مذهبي 
எனது கருத்துக்கு உதவுபவர், வலுச்சேர்ப்பவர்
لو ناظر الشيطان لغلبه / الأعلام للزركلي
அவருடன் ஷைத்தான் வாதிட்டாலும் அவன் அவரிடம் தோல்வி அடைவான் என இமாம் ஷாஃபிஈ (ரஹி) மூலம் சிலாகித்து புகழ்ந்துரைக்கப்பட்ட இமாம் முஸனி ரஹி அவர்கள் அவர்கள் எகிப்திய மண் பெற்றெடுத்த அதி சிறந்த அறிஞரும் இமாம் ஷாஃபிஈ ரஹி வின் மாணவரும் நபிகாலத்தில் வாழ்ந்த முஸைனா கோத்திரத்தைச் சேர்ந்த மிகப் பெரிய அறிஞரும் ஆவார்.

நூல்கள்
---
شرح السنة 
ஷரஹுஸ் ஸுன்னா, இது  ஷாஃபிஈ மத்ஹப் சார்ந்த இலங்கை இந்திய மௌலவிகள் கேள்விப்படாத அல்லது கேள்விப்பட்டும் அது பற்றி பெரிதாக அறிய விரும்பாத அகீதா தொகுப்பு நூலாகக் கூட இருக்கலாம். 

مختصر المزني 
இது ஃபிக்ஹ் சார்ந்த நூலாகும். இது இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் الأم என்ற நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
الجامع الكبير 
الجامع الصغير 
الترغيب في العلم 

போன்ற பல நூல்களுக்கும் தொகுப்புக்களுக்கும் சொந்தக்காரராகும்.

இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் அறிவு மற்றும் விளக்கங்களின் மறுபிரதி என அறிஞர்களால் புகழ்ந்துரைக்கப்படும் இமாம் முஸனி ரஹி அவர்கள் தனது 
شرح السنة 
என்ற நூலில் இருபது சிறு தலைப்புக்களில் அகீதா தொடர்பான விஷயங்களை பேசி உள்ளார்கள். விபரம் கீழே .

அதில் முதலாவது அம்சமாக العلو என்ற இறை உயர்ச்சி அல்லாஹ் தனது அர்ஷின் மீது உயர்ந்திருப்பது பற்றியதும் அவர்களின் நிலைப்பாடு தொடர்பானதுமாகும்.

ஷாஃபிஈ இமாம் பெயரில் மத்ஹபு வியாபாரம் செய்வோர் சிந்திக்கின்ற தனது நிலைப்பாட்டை பின்வருமாறு தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
العلو:
١- عال على عرشه في مجده وهو دانٍ بعلمه من خلقه أحاط علمه بالأمور ...
அவன் தனது மகிமை கீர்த்தியுடன் தனது அர்ஷ் மீது உயர்ந்துள்ளான். 

அவன் தனது அறிவால் தனது படைப்புக்களோடு மிக நெருக்கமாக உள்ளான். அவனது அறிவு அனைத்து விவாகாரங்களையும் சூழ்ந்துள்ளது... (இமாம் முஸனி ரஹி ஷரஹுஸ்ஸுன்னா) என தனது கருத்தை மிகத் தெளிவாக  வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கை ஷாஃபிக்கள் தமது அகீதா வாதத்தில் பொய்யர்கள்
---
இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்களின் ஃபிக்ஹ் சார்ந்த கருத்துக்கள் தெளிவான ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருந்தாலும் அவற்றை இறை வேதம் போல போதிக்கின்ற இலங்கை ஷாஃபிஈ மத்ஹபினர் இமாம் ஷாஃபிஈ அவர்கள், மற்றும் அவர்களின்  மாணவர்கள் போதித்த தெளிவான ஸலஃப் - நபித்தோழர்களின்-  அகீதாவைப் பாதிப்பதில்லை என்பதற்கு இந்த விஷயமும் ஒன்றாகும்.

استوى على العرش 
அல்லாஹ் அர்ஷின் மீதானான்/ நிலை பெற்றான் என்பதை இப்படித் தான் என்ற முறையின்றி பொருள் தராமல் விளக்குவதற்கு மாற்றமாக
அல்லாஹ் அர்ஷை ஆக்கிரமித்தான் என்ற  மறுத்துரைக்கப்பட வேண்டிய ஒரு கருத்தை முன்வைத்து குர்ஆனுக்கும் தமது இமாமுக்கும் மாறு செய்வோராகே இருக்கின்றனர்.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم