அல்லாஹ்வின் படைப்பு, நாட்டம், விருப்பம்

யாருடைய செயல்கள்?

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் அல்லாஹ்வின் படைப்புகளே. அல்லாஹ்தான் மனிதர்களின் செயல்களைப் படைத்திருக்கின்றான். யதார்த்தத்தில் அவர்கள் அதைச் செய்கின்றார்கள். 
                                                
மனிதன் தன்னிச்சையாக எதனையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாறாக அவனையும் அவனது செயல்களையும் அல்லாஹ் தான் படைத்துள்ளான். 
                                                
 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ لَّهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ 

 அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைத்தவன். அவனே எல்லாப் பொருட்களின் பொறுப்பாளன். 

 வானங்கள், பூமியிலுள்ளவைகளின் சாவி அவனிடமே இருக்கிறது. 

 (அல்குர்ஆன் : 39:62,63) 
                                                
 எனவே அல்லாஹ்வின் படைப்புகளிடமிருந்து நிகழும் சகல செயல்களும் அவனது படைப்பாகும். அடியார்களின் சொல், செயல் சார்ந்த சகல நடவடிக்கைகளும் அல்லாஹ் அறிந்தவை, அவனின் ஏட்டில் எழுதப்பட்டவை, அவன் நாடியவை, அவன் படைத்தவை என்பதே நமது நிலைப்பாடு. 
                                                
 இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 
                                                
 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَ وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ 

 ஆகவே உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ, அவன் (இந்த வேதத்தைக் கொண்டு நல்லுணர்ச்சிப் பெறுவான்). 

 எனினும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் விரும்ப மாட்டீர்கள். 

 (அல்குர்ஆன் : 81:28,29) 
                                                
 وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ 

 "அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ், தான் நாடியவைகளையே செய்வான்". 

 (அல்குர்ஆன் : 2:253) 
                                                
 وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ 

 "அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் அவர்களையும், அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டு விடுங்கள்". 

 (அல்குர்ஆன் : 6:137) 
                                                
 وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ 

 “உங்களையும், நீங்கள் செய்பவற்றையும் (உங்கள் செயல்களையும்) அல்லாஹ்வே படைத்தான்". 

 (அல்குர்ஆன் : 37:96)
                                                

அல்லாஹ் நாடுவோருக்கு நேர்வழி காட்டுகிறான்:

நேர்வழியும், வழிகேடும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஒருவன் நேர்வழி அடைவது அல்லாஹ்வின் அருளின் காரணத்தால் தான். அதே போல் ஒருவன் வழி கெடுவது, நீதத்தின் அடிப்படையில் அல்லாஹ் செய்யக் கூடிய காரியமாகும். 
                                                
 அல்லாஹ்வின் நாட்டமின்றி உலகில் எதுவும் நடக்காது. 
                                                
 اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ 

 நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். 

 (அல்குர்ஆன் : 11:107) 
                                                
 அல்லாஹ்வின் நாட்டத்தின் வகைகள்: (1) 
                                                
 அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தவரையில் இரண்டு வகையாக உள்ளன. ஒன்று அல்லாஹ் விரும்பி நாடுவது மற்றொன்று அல்லாஹ் நாடுகிறான்; ஆனால் அதனை அல்லாஹ் விரும்பவில்லை. 
                                                
 இது தொடர்பாக ஷெய்க். உஸைமின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 
                                                
 அல்லாஹ்வின் நாட்டம் (إرادة) இரு வகைப்படும். ஒன்று ஆக்கல் நாட்டம் (ارادةكونية) இராதா கெளனியா அதாவது உருவாக்கல் பற்றிய நாட்டம் அல்லது எண்ணம். 
                                                
 இரண்டாவது, நீதி அல்லது நன்னெறி பற்றிய நாட்டம் (ارادة شرعية) இராதா ஷரயிய்யா என்பது ஷரியத்தின் அடிப்படையிலான நாட்டம். 

இதில் முந்தியது இவ்வுலகில் அல்லாஹ் உருவாக்க நினைக்கும் சகல காரியங்களும் அடங்கும். அதில் நல்லது, தீயது என்ற பாகுபாடில்லாமல் இறைவனின் எண்ணத்தின் பிரகாரம் அவை அனைத்தும் கட்டாயமாக நடந்தேறும். ஆனால் அவை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவனாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. அவற்றில் அல்லாஹ்வுக்கு விருப்பமானவையும் இருக்கலாம், விருப்பமற்றவையும் இருக்கலாம். 
                                                
 ارادة شرعية இராதா ஷரயிய்யா என்பது சமூக நீதியுடனும் நன்னெறியுடனும் சம்பந்தப்பட்டவை. இவை அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. உதாரணமாக தொழுகை, நோன்பு மற்றுமுண்டான நற்காரியங்கள். 
                                                
 இவற்றை அல்லாஹ் நாடுகிறான் என்றால் அதன் பொருள் அதனை அவன் விரும்புகிறான் என்பதாகும். எனினும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய ارادة شرعية வை அவன் விரும்பிய போதிலும் அது செயல் வடிவம் பெற வேண்டுமென்ற கட்டாயமில்லை என்றும் நம்பிக்கை கொள்வதும் அவசியம். இதனை தெளிவுபடுத்தும் சில வசனங்கள் வருமாறு: 
                                                
 இராதா கெளனியாவுக்கு உதாரணம்:
                                                
 وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ 

 அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள்  சண்டையிட்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவைகளையே செய்வான். 

 (அல்குர்ஆன் : 2:253) 
                                                
 اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ‌ هُوَ رَبُّكُمْ 

 "உங்களை வழிகேட்டிலேயே விட்டு விட வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்துக் காப்பவன்". 

 (அல்குர்ஆன் : 11:34) 
                                                
 இராதா ஷரஈய்யாவுக்கு உதாரணம்:
                                                
 وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ 

 அல்லாஹ்வோ நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே விரும்புகிறான்; 

 (அல்குர்ஆன் : 4:27) 
                                                
 மேலும் அல்லாஹ்வின் (இராதாவை) நாட்டத்தை நாம் அறிந்து கொண்டாலும், அறியாமல் இருந்தாலும் அல்லது அதனைப் புரிந்து கொள்வதில் நம் சிந்தனையில் குறைபாடுகள் இருந்தாலும் அல்லாஹ்வின் இரண்டு வகை இராதாவும் அவனின் நுட்பமான அறிவின் பிரகாரம் நடைபெறுகின்றன என்று நாம் ஈமான் கொள்வது அவசியம். 
                                                
 اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ 

 அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா? 

 (அல்குர்ஆன் : 95:8) 
                                                
 மேலும் அல்லாஹ் தன் நேசர்களை விரும்புகிறான், அவர்களும் அவனை நேசிக்கின்றனர். மேலும் தான் கூறிய நற்செயல்களையும், நல்ல வாக்குகளையும் அவன் விரும்புகிறான். மற்றும் தான் தடை செய்துள்ள காரியங்களை அவன் வெறுக்கிறான். மற்றும் விசுவாசிகளையும் நற்காரியங்கள் புரிவோரையும் அவன் ஏற்றுக் கொள்கிறான். 

 நூல்: அகீதத்து அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ பக்கம் - 10,11 
                                                
 எனவே நேர்வழியில் நடப்போரை அல்லாஹ் விரும்புகிறான். அத்தகையோர்கள் அவனது அருளின் காரணமாக நேர்வழியில் இருக்கின்றார்கள். வழிகேட்டில் செல்வோரை அல்லாஹ் விரும்பவில்லை. 
                                                
 اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنْكُمْ‌ وَلَا يَرْضٰى لِعِبَادِهِ الْـكُفْرَ‌  وَاِنْ تَشْكُرُوْا يَرْضَهُ لَـكُمْ‌  وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌  ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‌  اِنَّهٗ عَلِيْمٌ بِذَاتِ الصُّدُوْرِ 

 (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன். 

 (அல்குர்ஆன் : 39:7) 
                                                
 இணைவைப்பு, அநியாயம் செய்வது, மானக்கேடான செயல்கள் செய்வது, பெருமையடிப்பது போன்ற செயல்களை விலக்கியதைத் தொடர்ந்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 
                                                
 كُلُّ ذٰ لِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا 

 இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது. 

 (அல்குர்ஆன் : 17:38) 
                                                
 اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا 

 நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான். 

 (அல்குர்ஆன் : 76:3) 
                                                
 மனிதன் நேர்வழி அடைவதற்கான வாய்ப்பை அல்லாஹ் வழங்கிய பின்னரும் ஒருவன் அவனுக்கு வழங்கப்பட்ட தேர்வு உரிமையின் அடிப்படையில் வழிகேட்டை தேர்ந்தெடுப்பானேயானால் அவன் விஷயத்தில் அல்லாஹ் நீதமாகவே நடந்துகொண்டான். 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
أحدث أقدم