பயனுள்ள கல்வியை ஸுன்னாஹ்வின் அறிஞர்களிடம் இருந்து படித்து அதன்படி அமல்செய்வதற்கு பதிலாக, பயனற்ற கல்வியை(INTERNET)கொண்டு வீணான விவாதங்களில் இன்றைய இளையஞர்கள் அதிகமாக ஈடுபட்டுகொண்டு இருக்கிறார்கள், SOCIAL MEDIAமுழுவதுமாக இதை காணமுடிகிறது! இவர்களிடத்தில் அகீதா மற்றும் மன்ஹஜ் ரீதியான எந்த ஒரு கல்வியும் இல்லை! இவர்கள் மார்க்க அறிஞர்களை மக்களிடத்தில் அடையாளப்படுத்த மாட்டார்கள் மாறாக தங்களை மார்க்க அறிஞர்களாகவும், மார்கத்தை தேடும் மாணவர்களாகவும், இன்னும் தாயீகளாகவும் தங்களை மக்களிடத்திலும், வலைத்தளங்களிலும் அடையாளப்படுத்தி கொள்கின்றனர்! ஸுன்னாஹ்வின் மூத்த மார்க்க அறிஞர்களின் கல்விச்சபைக்கு இவர்கள் வருவதில்லை காரணம் இது போன்ற இளைஞர்களுக்கு ஸுன்னாஹ்வின் அறிஞர்கள் யாரு?என்றுகூட தெரியாது! கீழுள்ள மூத்த மார்க்க அறிஞரின் உபதேசம் நான் ஏற்கனவே பகிர்ந்த ஒன்றுதான் ஆனாலும் இந்த வீணானவற்றை பார்க்கும்பொழுது திரும்பவும் பகிராமல் என்னால் கடந்து செல்லமுடியவில்லை!
இளைஞர்களே முதலில் ஸூன்னாஹ்வின் கல்வியை கற்று கொள்ளுங்கள்! பிறகு தஃவா செய்ய வாருங்கள்!குறிப்பாக மக்கள் மத்தியிலும் பொதுத்தளங்களிலும் தங்களை அறிஞர்களாகவும்,கல்வியாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் கல்வியற்ற இளைஞர்களின் கவனத்திற்கு.!
அஷ்ஷைக் ஸாலிஹ் இப்ன் ஸஃத் அஸ் ஸுஹைமீ(حفظه الله) கூறுகிறார்கள்-
"சில இளைஞர்கள் உங்களிடத்தில் பேசுவார்கள் அவர்கள் தங்களை யஹ்யா இப்ன் மயீன் அல்லது அஹ்மத் இப்னு ஹன்பல் போன்று நினைத்து கொள்கிறார்கள்! ஆனால் உண்மையில் அவர்களுக்கு ஸூன்னாஹ்வின் படி "ஒது" செய்வது எப்படி என்று கூட தெரியாது! நாம் சில இளைஞர்களையும், மாணவர்களையும் பார்க்கிறோம் அவர்களிடத்தில் இருக்கும் பழகினமான இறையச்சத்தின் காரணமாக அவர்கள் ஸலப் மன்ஹஜ்ஜை பின்பற்றும் (மக்களையும்,கல்வியை உண்மையாக தேடும் மாணவர்களையும்,மற்றும் உலமாக்களை) பற்றியும் பேசுகிறார்கள்! அவர்களுக்கு இருக்கும் சிறு கல்வியை கொண்டு அவர்கள் தங்களை தானே (ஜர்ஹ் வத் தஃதீலின்) மார்க்க அறிஞர்களாக நினைத்து கொள்கிறார்கள்! ஆனால் உண்மையில் அவர்கள் குப்பைகளை(இணையதளம்)
சுமக்கிறார்கள்!
(அஷ்ஷைக் ஸாலிஹ் இப்ன் ஸஃத் அஸ் ஸுஹைமீ(حفظه الله) | மதீனாவின் முப்தி மஸ்ஜித் அந் நபவியின் மூத்த ஆசிரியர் | ஷைக் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து தொகுக்கப்பட்டது)
-அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்