இமாம் கஸ்ஸாலி அவர்களின் வாழ்க்கை கட்டங்கள்

இமாம் கஸ்ஸாலி அவர்களின் வாழ்க்கையை நான்கு காலகட்டங்களாக பிரிக்கலாம்:

முதல் கால கட்டம்:
இவர்கள் சமூகத்தில் ஒரு பிக்ஹு கலை மேதையாகவே அறிமுகமானார்கள் ஷாஃபி மத்ஹபுடைய பல பிக்ஹு நூற்களை இவ்வுலகிற்க்கு தந்துள்ளார்கள் அதில் பஸீத், வஸீத், வஜீத் போன்ற நூற்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இரண்டாவது கால கட்டம்:
இவர்களது மத்திய காலத்தில் இல்முல் கலாம் எனும் பகுத்தறிவு வாதம் பிரபல்யம் பெற்றயிருந்தது அதாவது கிரேக்க, யுனானிய மொழியுள்ள தத்துவ நூற்கள் அரபியில் மொழிபெயர்க்க தொடங்கின. தொடர்ந்து மக்கள் மத்தியில் இந்த தத்துவக் கருத்துக்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தின இதனைத் தடுத்திடுவதெற்கென்றே இமாமவர்கள் இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம் (பாமர்கள் தத்துவக்கலை கற்கக் கூடாது) எனும் பெயரில் ஒரு நூலை எழுதி மக்களின் ஈமானை பாதுகாத்தவர்கள்.
ஆனால் என்ன காரணமோ எதைவிட்டும் பிறரைத்தடுத்தார்களோ அக்கலையில் (இமாம் கஸ்ஸாலி) தாமே ஒரு கட்டத்தில் நாட்டம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பகுத்தறிவு வாதத்தால் சற்று தடுமாறிய இமாமவர்கள் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வும் படைப்புக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தவைதானோ என்று சந்தேகம் கொள்ள தொடங்கினார்கள். இதன் விளைவே பின்னர் இவர்கள் மேற்படி ‘அல்லாஹ் என்னும் மாபெரும் சக்திலிருந்து தோன்றியவைதான் அனைத்தும்’ எனும் சூபித்துவத் தத்துவத்தால் கவரப்பட்டார்கள். இக்கால கட்டத்தில் இவர்கள் எழுதியதே இஹ்யாஉலூமுத்தீன் என்னும் நூலாகும்.

இந்நூல் இவர்களுடையதான் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. இதன் விரிவுரையான இத்திஹாபுல் மஹாளா எனும் (இராக்கி) நூலிலும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்நூலில் பல்வேறு இடங்களில் ரப்பும்-கலக்கும் ஒன்றுதான் என்பதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இவர்களால் எடுத்துகாட்டப்படுகின்றது. அதில் சிலவற்றை மாத்திரமே எனது நூலில் எடுத்துக்காட்டினேன்.

மூன்றாம் கட்டம்:
இதற்கு சிலகாலங்களின் பின்னர் இவர்கள் குல்லாபிய்யா எனும் ஒரு பிரிவினருடன் சேர்ந்து ஆதரவு தந்தார்கள், இவர்கள் முல்கஸிலாவிலிருந்து பிரிந்தவர்கள். இதன் பின்னர் அஷ்அரிய்யா எனும் பிரிவினரின் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள்.
இவர்கள் மேற்படி ஷீயாக்கள் கொள்கைக்கு மாற்றமானவர்கள் அல்லாஹ்-வின் பண்புகளில் சிலவற்றை தவிர ஏனையவற்றிக்கு தஃவீல்-மாற்று அர்த்தம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள். இன்றும் கூட நிறைய அரபு மதரஸக்களில் அஸ்ஸரியா கொள்கைளை தழுவிய நூற்களை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

நான்காம் கட்டம்:
மேற்படி அனைத்துக்கொள்கையிலிருந்து விலகி தவ்பா செய்து மீண்டும் ஸுன்னத்துல்வல்ஜமா-வின் கொள்கைக்கு மீண்டுவந்தார்கள். அதாவது ஸஹாபாக்கள், தாபியீன்களின் அகீதாவிற்க்கு மீண்டார்கள். தன் மரண வேளையில் குர்ஆனையும் புஹாரி ஷரீப்பையும் நெஞசில் வைத்துக்கொண்டு எதை எதையெல்லாமோ படித்தேன் இந்த குர்ஆன் மற்றும் ஹதீஸிலும் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கவலைப்பட்டார்கள் இது தான் இமாம் கஸ்ஸலி அவர்களின் சுருக்கமான வாழ்க்கை. 

சத்தியம் எங்கிருந்து வந்தாலும் அதனை ஏற்று நடைமுறைபடுத்தும் எண்ணமும் முயற்சியும் இருக்க வேண்டும். அதற்காக வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்தவனாக

அன்புடன்
முஹம்மத் ஜலீல் – அல்-ஜுபைல்
أحدث أقدم