ஜஸாக்கல்லாஹு கைரன்

உங்களில் ஒருவர் 'ஜஸாக்கல்லாஹு கைரன்' என்று சொல்வதால் தமக்குக் கிடைக்கக்கூடிய நன்மையை அறிவார் என்றால்..

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

 "ஒருவர் தனது சகோதரரிடம் 'ஜஸாக்கல்லாஹு கைரன்' (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக) என்று கூறினால், அவர் அந்தப் புகழில் மிகச்சிறந்த ஒன்றைச் சொல்லிவிட்டார்." (ஆதாரம்: ஜாமிவுத் திர்மிதி)

 விளக்கம் :

ஒருவர் தனது சகோதரருக்கு இந்த வார்த்தையைக் கொண்டு துஆச் செய்வது, அவருக்குச் செய்ய வேண்டிய நன்றியை முழுமையாகச் செய்துவிட்டதைக் குறிக்கும். ஏனெனில், அவருக்குத் தகுதியான நன்றியைத் தான் செய்ய இயலாது என்பதை ஒப்புக்கொண்டு, அந்தப் பிரதிபலனை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறார். அல்லாஹ்வே அவருக்கு மிகச் சிறந்த கூலியை வழங்க வேண்டும் என்று வேண்டுகிறார்.

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் 'ஜஸாக்கல்லாஹு கைரன்' என்று சொல்வதால் தமக்குக் கிடைக்கக்கூடிய நன்மையை அறிவீர்களானால், நீங்கள் ஒருவருக்கொருவர் இந்த வார்த்தையை அதிகமாகச் சொல்லிக்கொள்வீர்கள்." 

ஆதாரம்: அல்-அதப் - இப்னு அபீ ஷைபா
Previous Post Next Post