இமாம் நாஸிருத்தீன் அல்பானி (றஹ்) கூறுகின்றார்கள்..
யூதர்கள் கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ளார்கள். எனினும் நிச்சயம் அவர்கள் அங்கிருந்து வெளியேறும் நாள் வரும். இதை நான் வெறும் அபிலாஷையில் கூறவில்லை.மாறாக ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொண்ட தெளிவின் அடிப்படையிலேயே கூறுகின்றேன்.
ஏனெனில் ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் முஸ்னத் அஹ்மத் கிரந்தங்களிலுள்ள ஸஹீஹான ஹதீஸ்களில் பின்வரும் வாசகம் இவ்வாறு இடம்பெறுகின்றது .. தஜ்ஜால் குராஸான் பகுதியிலிருந்து(தற்போதைய ஈரானின் ஒரு மாகாணம்) வெளிப்படுவான். அவனுடன் எழுபதாயிரம் கூராஸான்பகுதி யூதர்கள் கோடிடப்பட்ட மேலங்கியை அணிந்தநிலையில் தஜ்ஜாலைப் பின்தொடர்வார்கள். அவர்கள் பலஸ்தீனை நோக்கிச் செல்வார்கள். அப்போது பலஸ்தீனத்தில் ஈஸா(அலை) யும் முஸ்லிம்களும் இருப்பார்கள். தஜ்ஜாலும் யூதர்களும் பலஸ்தீனத்தை முற்றுகையிடுவார்கள். ஈஸா (அலை) அங்கு வந்து ஈட்டியால் தாக்குவார்கள். இருதரப்புக்குமிடையில் போர்மூளும். ஈற்றில் ஈஸா அம்பினால் எறிந்து தஜ்ஜாலைக் கொல்வார்கள். ஈஸாவைக் கண்ட மாத்திரத்தில் தஜ்ஜால் நீரில் விழுந்த உப்பைப்போல் உருகிக் கரைந்து சிறுத்துப் போய்விடுவான். முஸ்லிம், அஹ்மத் .
இந்த ஹதீஸில் "முஸ்லிம்களும் ஈஸா (அலை)யும் பலஸ்தீனில் இருக்கும்போது யூதர்கள் தஜ்ஜாலின் தலைமையில் குராஸான் (ஈரான்) பகுதியிலிருந்து புறப்படுவான்" என்ற வாசகமே அன்று பலஸ்தீன் முஸ்லிம்களின் பிரதேசமாகவும் குராஸான் யூதர்களின் பிரதேசமாகவும் இருக்கும் என்பதைப் புலப்படுத்துகின்றது.
எனவே நம்பிக்கையுடன் மனந்தளராது முயற்சிப்போம், பிரார்த்திப்போம். முஸ்லிம்கள் மகிழ்ச்சியடையும் அந்நாள் வரும்வரை...
இன்ஷா அல்லாஹ் அது வெகுதூரத்திலில்லை...