நபி (ஸல்) அவர்களின் தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் பின்வரும் செய்தி இடம்பெற்றிருக்கிறது:
*"நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். பின்னர் ஸைzனப் (ரலி) -தனது மனைவி-அவர்களிடம் சென்று தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டார்கள். மேலும், 'பெண் ஷைத்தானின் உருவத்துடன் வருகிறாள், ஷைத்தானின் உருவத்துடன் திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவர் ஒரு பெண்ணைப் பார்த்து அவள்மீது கவரப்பட்டால், அவர் தனது மனைவியிடம் சென்று தேவையை நிறைவேற்றிக் கொள்ளட்டும். ஏனெனில், அது அவரது உள்ளத்தில் உள்ளதை அகற்றிவிடும்' என்று கூறினார்கள்."*
நூல்: ஸஹீஹு முஸ்லிம், இலக்கம் 1403
*இந்த ஹதீஸில் பல வழிகாட்டல்கள் உள்ளன:*
1. தேவையை அதே வகையான மற்றொன்றால் தணித்துக் கொள்ள அறிவுறுத்தல்: உணவுக்குப் பதிலாக உணவு, ஆடைக்குப் பதிலாக ஆடை போன்று, ஒரு தேவையை அதே வகையான மற்றொன்றால் தணித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
2. பெண்ணின் கவர்ச்சி மூலம் உணர்வு தூண்டப்பட்டு அவள் மீது ஏற்படும் ஆசையை சரியான முறையில் கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல்: பெண்ணின் கவர்ச்சியின் விளைவாக உண்டாகும் ஆசையை, மிகவும் பயனுள்ள சிகிட்சையாகிய தனது மனைவியிடம் சென்று தேவையை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது அந்தப் பெண்ணின் மீதுள்ள ஆசையைக் குறைக்கும்.
*இதுவே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் போது திருமணத்தை அறிவுறுத்தியதைப் போன்றது. இப்னு மாஜாவின் ஹதீஸில் வருகிறது: "ஒருவரை ஒருவர் விரும்புவோருக்கு திருமணத்தைப் போன்றது எதுவும் இல்லை."
*எனவே, விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்வது காதலுக்கு அல்லாஹ் விதித்த சட்டப்பூர்வமான மருந்தாகும்.*
இப்னுல் கையிம் (ரஹ்)
அத்-தாஉ வத்-தவா (பக்கம் : 237)
- Ahsan Asman Muhajiri