நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் ஒவ்வொரு கட்டாயத் தொழுகைக்குப் பின்னரும் 'ஆயத்துல் குர்ஸியை' ஓதுகிறாரோ, அவரைச் சொர்க்கத்தில் நுழைவதைத் தடுப்பது மரணம் மட்டுமே (அதாவது, அவர் மரணித்தவுடன் சொர்க்கம் செல்வார்)."
(ஆதாரம்: அன்-நஸாயீ, சரிபார்த்தவர்: அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ்)
ஹாஃபிழ் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"எனது ஆசிரியர் அபூ அல்-அப்பாஸ் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், 'ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதை (ஆயத்துல் குர்ஸியை) ஓதுவதை நான் ஒருபோதும் விட்டதில்லை' என்று கூறியதாக எனக்கு எட்டியது."
(ஆதாரம்: ஸாதுல் மஆத்)
ஷேக் இப்னு உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஒருவர் அதன் நன்மையையும் கூலியையும் அல்லாஹ்விடத்தில் எதிர்பார்த்து, தனது நாவினால் அதை ஓதினால், அதற்குரிய பலனை அவர் அடைந்து கொள்வார். அவர் மனப்பாடமாக ஓதினாலும் சரி, அல்லது ஒரு காகிதம் அல்லது, திருக்குர்ஆனைப் பார்த்து ஓதினாலும் சரி; ஏனெனில், இந்த ஹதீஸ் பொதுவானதாகவே வந்துள்ளது (எந்த முறையிலும் ஓதலாம்)."
(நூல்: ஃபதாவா நூர் அலத் தர்ப்)