ஒரு முஸ்லிமான ஆண் மீசையை ஒட்ட நறுக்குவதும் தாடியை முழுமையாக வளர்ப்பதும் அவன் மீது கடமையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவர் இல்லை''
இதனை ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதீ : 2685, நஸாயீ : 13 அஹ்மத் : 19263 (ஸஹீஹ்)
இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.........
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.
[அன்ஹகூ ஷ்ஷவாரிப வஅவ்புல் லிஹா) "மீசையை நன்கு ஓட்டக் கத்தரியுங்கள், தாடியை அப்படியே முழுமையாக வளரவிடுங்கள். -புஹாரி 5893
இந்த ஹதீஸில் வரும் "அவ்புல் லிஹா" என்ற சொல் தாடியை அப்படியே அதன்பாட்டில் விட்டுவிடுவதைக் குறிக்கிறது.
அல் குர்ஆன் 7:95 ஆம் வசனத்திலுள்ள "அபவ்" எனும் சொல் 'பல்கிப் பெருகுதல்' எனும் அர்த்தம் கொண்டது.
"மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். "
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(நூல் : முஸ்லிம் 435)
"இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்."
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(நூல் : புகாரி 5892 )
மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
5893. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book : 77
بَابُ إِعْفَاءِ اللِّحَى
{عَفَوْا} [النساء: 43]: «كَثُرُوا وَكَثُرَتْ أَمْوَالُهُمْ»
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»
இந்தக் கருத்தில் வரும் செய்திகள் மேலும் பார்க்க : அஹ்மத்-4654 .
"யார் எனது வழிமுறையைப் புறக்கணிப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்"(முஸ்லிம்)
என்னைப் பின்பற்றுபவர் அனைவரும் சுவர்க்கம் நுழைவர், எனக்கு மாறுசெய்தோர் மறுத்தோராவர் அவர்கள் நரகவாதிகள்
(ஸ.புஹாரி)
اللحية وهي نور الوجه
முகத்தின் ஒளி
இஸ்லாத்தின் அடையாளச்சின்னம் நபியின் சுன்னா
ஆண்மையின் அழகு எது?
தாடி என்ற இஸ்லாத்தின் இந்த வெளிப்புற அடையாளத்தை வளர்ப்பதின், மற்றும் கண்ணியப்படுத்துவதின் மூலம் அல்லாஹ்வை நெருங்கிறோம்
{ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ }
அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்களை யார் மகத்துவப்படுத்துகிறாரோ அதுவே (அவரது) உள்ளங்களிலுள்ள இறையச்சமாகும்.(அல் -குர்ஆன் 23:32)
இது அடையாளச்சின்னம் மட்டுமல்ல இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாக்களில் ஒன்றாகும்,
தாடியை பணத்திற்கு வாங்கலாமா?
கைஸ் பின் ஸஃத் (ரழி ) அவர்கள் "முகத்தில் தாடி இன்னும் வளராத ஒரு வலிபராக இருந்தார். இவரது அன்ஸாரிக் கூட்டத்தினர் கூறினார்கள்: ஸஃத் நல்ல தலைவர் ஆனால் அவரது வீரத்திற்கும் அவரது பெருந்தன்மைக்கும், மதிப்புக்கும் அவருக்கு ''தாடி இல்லையே "!அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாடியை திர்ஹம் கொடுத்து வாங்க முடியுமாக இருந்தால் நாங்கள் அவருக்கு தாடியை வாங்கிகொடுத்திருப்போம் !!