உங்கள் கவலைகள் மற்றும், துக்கங்கள் நீண்டுவிட்டால்...

அல்லாஹ் கூறுகிறான்:

{நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது (தொழுகை) பணிவுள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.}
[அல்-பகரா: 45]

ஷேக் இப்னு உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த வசனத்தின் பயன்களில் ஒன்று:

உங்கள் கவலைகள் மற்றும், துக்கங்கள் நீண்டுவிட்டால், நீங்கள் பொறுமையையும் தொழுகையையும் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பணிவு இல்லாதவர்களுக்கு நல்ல அமல்கள் செய்வது கடினமானதாக இருக்கும். குறிப்பாக தொழுகை அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

மேலும், அல்லாஹ்வுக்கு முழுமையாக பணிவுடன் வணக்கத்தை நிறைவேற்றுவது, அந்த வணக்கங்களை அடியார்களுக்கு இலகுவாக்குகிறது. ஆகவே, யார் அல்லாஹ்வுக்கு அதிகமாக பணிவுடையவராக இருக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக கீழ்ப்படிபவராக இருப்பார்.

[தஃப்ஸீர் அல்-குர்ஆன் அல்-கரீம் (1/165)]
أحدث أقدم