இறை பாக்கியம் பெற்ற இமாம் புகாரியும், வியப்பில் ஆழ்த்தும் அவர்களின் ஜாமிவுஸ்ஸஹீஹ் கிரந்தமும்.

இறையச்சம், வணக்கம், துறவறம், பேணுதல், தியாகம், ஹதீஸ் அறிவிப்பு, ஹதீஸ் விமர்சனம், வரலாறு என  அனைத்து துறைகளிலும்  முன்மாதிரியாக வாழ்ந்து ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் ஹதீஸ்துறையில் தனக்கென தனித் தடம் பதித்த  அறிவுச் சமுத்திரமான ஹதீஸ்கலை மாமைதை ஒருவரின்  வரலாற்றுத் துளிகள் பற்றி எழுதும் எனக்கும் அது ஒரு பாடமாக இருக்கட்டும்.

புகாரி ரஹி வாழ்வியல் குறிப்பு

பெயர்:
முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்புகாரி.

பிறப்பும் வாழ்வும்:

ஸமர்கந்து மாகாண நகரங்களில் அறிவியலுக்கு பெயர் போன "புகாரா" தற்போதைய உஸ்பகிஸ்தானில் ஹி: 194- ல் இமாம் பிறந்ததார்கள்.
அதனாலேயே அவர்கள் முஹம்மத் என அழைக்கப்படாமல் புகாரி என அழைக்கப்படுகின்றார்கள்.

சிறுவயதில் ஆலிமான தனது தந்தையை இழந்தும் தாய், மற்றும் உறவினர் பராமரிப்பில் வாழ்ந்து சிறு வயதிலேயே குர்ஆனை மணனம் செய்து அக்காலத்தில் இஸ்லாமிய அறிவுத் தேடல் தேசங்களாக அறியப்பட்ட மக்கா, மதீனா, ஹிஜாஸ், பக்தாத் எனப் பல்வேறுபட்ட பிரதேசங்கள்வரை சென்று ஹதீஸ், ஃபிக்ஹ், மொழி என எல்லாத் துறைகளிலும் அறிவு தேடி, பல அறிவுப் பொக்கிஷங்களை முஸ்லிம் உலகுக்குத் தந்து தனது 62 வயதில் ஹி: 256)ல் (கி.பி.810-870) மரணித்தவரே நமது இமாம் புகாரி ரஹி அவர்கள். 

சாதாரண அரபிக் கல்லூரிகள் முதல் உலகின் பல்கலைக்கழங்கள் வரை பல் லட்சம் மாணவ மாணவியர் படிக்கும் நூலான புகாரி பலநூறு ஆய்வாளர்களுக்குச் சமமானது என்ற ஒரு பெருமை மாத்திரம் புகாரியின் அறிவின் ஆழத்தை  உணர்த்தப் போதுமானதாகும்.

رحمه الله رحمة واسعة وأسكنه الفردوس الأعلى. اللهم اغفر له وارحمه وأسكنه فسيح جناتك يارب العالمين. 
என்ற பிரார்த்தனை வரிகளே நமது உள்ளத்தின் பிரார்த்தனைகளாகும்.

புகாரியைத் தனியாக தொகுப்பதற்கான காரணம்?

மதீனாவின் இமாம் என்ற சிறப்பு பெயருக்குரிய இமாம் மாலிக் (ரஹி) அவர்களின் "அல்முவத்தா" கிரந்தம் ஹதீஸ், .மற்றும் ஃபிக்ஹ் ஆகிய துறைகளை உள்ளடக்கிய முதல்  நூலாக இருந்தாலும் அதில் ஹதீஸ்கஸ்களோடு, நபித்தோழர்களின் கூற்றுக்கள் மற்றும் சனத் - அறிப்பாளர் இல்லாத, பலவீனமான கருத்துக்களும் உள்ளடங்கி இருந்தன. 

அதில் இருந்து வேறுபட்ட ஒரு நூலின் தேவை உணரப்பட்ட நேரத்தில் இமாம் புகாரி (ரஹி) அவர்கள் தனது (ஷேக்) ஆசிரியர்களில் ஒருவரான இஸ்ஹாக் பின் ராஹோயா ரஹி அவர்கள் இறைத் தூதரைத் தொட்டும் இடம் பெறும் ஸஹீஹான சுன்னாக்களை உள்ளடக்கிய தனித்துவமான, சுருக்காமான தொகுப்பொன்று எழுதப்பட்டால் சமூகம் பயன் பெறுமே" என ஒரு மஜ்லிஸில் கூறிய கருத்தை தனது அடிமனதில் உறுதியாக எடுத்து, தனது அறிவியல் பயணத்தொடரில் கிட்டத்தட்ட 16, வருடங்கள் சிரமப்பட்டு பல பயணங்களின் விளைவாக  பல ஆசிரியர்களை சந்தித்து கிட்டத்தட்ட 
600. 000 ஆறுலெட்சம் வழிகள் ஊடாக இறைத் தூதரின் ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்ட அதி உயர் தரத்தில் உள்ள ஹதீஸ்கள் என தனது  ஆசிரியர்களால் சுட்டிக்காட்ட நபிமொழிகளில் இருந்து ஹதீஸ் மனனம், தனது அறிவுப்பார்வையில்  மிகச்சிறந்து விளங்கிய அறிவிப்பாளர்களைக் கொண்டு இடம் பெற்றுள்ள தனது நூலை தொகுத்தளித்த இமாம் அவர்கள் தனது நூலுக்கு 
الجامع المسند الصحيح المختصر من أُمور رسول الله صلى الله عليه وسلّم وسننه وأيامه».
"அறிவிப்பாளர் வரிசை
இறைத் தூதர்வரை தங்குதடையின்றி முடிவடைந்த இறைத்தூதரின் செயற்பாடுகள் நடைமுறைகள்,  தினக்குறிப்புக்கள் உள்ளடக்கிய சுருக்காமான நூல்" எனப் பெயர் வைத்தார்கள்.

நாம் சுருக்கம் என்பது எதை ? என்ற கேள்வியும் இங்கு முக்கியமாகும்.

ஹதீஸ்களின் எண்ணிக்கை:

இவ்வாறான அறிவிப்ளாளர் மூலம் அறிவித்த தனது நூலில் மொத்தமாக 7563 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அவற்றில் திரும்பவும் மீண்டும் இடம் பெற்றறவை நீங்கலாக 4000 ஹதீஸ்கள் வரை அதில் இடம் பெற்றுள்ளன.

சனத்- அறிவிப்பாளர் அகற்றி நபித்தோழர்களின் கூற்றுக்கள், தீர்ப்புக்கள் அறிவிப்பாளர் குறைக்கப்பட்ட செய்திகள் - (முஅல்லகாத்) நீங்கலாக அதன் எண்ணிக்கை 2600 ஹதீஸ்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜாமிஃ என்பதன் பொருள்:
ஹதீஸ் நூல்கள் ஜாமிஃ, சுனன், முஸ்னத், முஃஜம், அஜ்ஸாஃ, மஷீஹாத், அமாலீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுவது  அதன் உள்ளடக்கத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களையும் பாட அமைப்பில் உள்ள பொருளடக்கங்களையும் பொறுத்து வைக்கப்பட்ட பெயர்களாகும்.

புகாரி ரஹி தனது கிரந்தத்திற்கு الجامع எனத் தொடங்கி முன்னர் சுட்டிக்காட்ட நீண்ட பெயர் சூட்டி உள்ளார்கள்.

அதாவது மார்க்க விவகாரங்களில் ஃபிக்ஹ் பாட தலைப்புக்கள் அடிப்படையில்  கட்டமைக்கப்பட்ட இபாதாத், முஆமலாத், முனாகஹாத், ஜினாயாத்,
அகாயித் என வாழ்வின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதான நூல்களை ஜாமிஃ அல்லது ஜவாமிஃ  எனக் குறிப்பார்கள்.

புகாரியில்
 العقائد و الأحكام ، والسير، والآداب ، والتفسير ، والفتن ، وأشراط الساعة ، والمناقب
ஆகிய தலைப்புக்கள் பிரதான இடம் பெறுவதால் அது ஜாமிஃ என்ற பெயருக்குள்  முதல் தர நூலாக உள்வாங்கப்பட்டுள்ளது.

பாட அத்தியங்கள்:

புகாரியின் மொத்த பாட அத்தியாயங்களின் எண்ணிக்கை 97 ஆகும். அதன் தனித் தனியான சிறிய பாடங்கள் 3450 பாடங்களாகும்.

முதல் அத்தியாயம் 
كتاب الوحي
இறைச் செய்தி எனத் தொடங்கி , அதன் இறுதி அத்தியாயம்:
كتاب التوحيد 
அத்தவ்ஹீத் - ஓரிறைக் கோட்பாடு என முடிந்துள்ளது.

அதாவது புகாரி ரஹி அவர்கள் ஷிர்க் பித்ஆ செய்து கொண்டு இஸ்லாம் பேசும் பாரம்பரிய பேசும் முஸ்லிம் இல்லை எனக் கூறி தன்னை கப்ரு வணங்கிகளின், அகீதாவில் வழிதவறியோரின் எதிரி என்றும் , முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழி நடக்கும் தூய முஸ்லிம் என்றும் முடிவாகக் கூறி விட்டார்கள்.

இமாம் புகாரி ரஹி அவர்களின் நூல் பற்றி ஆய்வு செய்துள்ள அறிஞர்கள் புகாரி நூலானது :
  السنة
அஸ்ஸுன்னா
 التفسير
அத்தஃப்ஸீர்,
 السيرة
சீரா,
 الزهد والرقائق 
அஸ்ஸுஹ்- துறவறம் நெகிழ்ஊட்டும் அறிவுரைகள் ஆகிய முக்கிய  நான்கு துறைகளை ஆகிய நான்கு கலைகளின் கலவைகள் சரியான அறிவிப்பாளர் வரிசையில் புகாரியில் உள்ளடங்கி இருக்கின்றது என்று சுட்டிக் காட்டி உள்ளதை  இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பாட அமைப்புக்கள்:

புகாரியில் இடம் பெறும் ஹதீஸ்கள்  இமாம் புகாரி ரஹி அவர்கள் தனது இஜ்திஹாதின்  பிரகாரம் தேவையான இடங்களில் பதிவிட்டவைகளாகும்.

அதில் முதவாதிர், ஆஹாத் என்ற வித்தியாசம் இன்றி பதிவிட்டிருப்பது அஷ்அரிய்யாக் கொள்கை பேசுவோருக்கு உள்ளார்ந்த ஒரு மறுப்பு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக அதன் இறுதி அத்தியாயமான "கிதாபுத் தவ்ஹீத்"

அந்த வகையில் பின்வரும் அமைப்புக்களில் அவை இடம் பெற்றுள்ளன .

(1) ஒரு ஹதீஸைப் பல இடங்களில் கலைத்து, ஆதாரமாகக் கொண்டு வருதல் உதாரணமாக :
«إنما الأعمال بالنيّات»
என்ற ஹதீஸை ஏழு இடங்களில் சில சொல்கள், வசனங்கள் மாற்றத்தோடு பதவி செய்துள்ளமை.

(2) அவ்வாறே, மழை வேண்டித் தொழுவது பற்றி கிராமப் புற மனிதரோடு தொடர்படுத்தி வரும் ஹதீஸில் 11 பாடங்கள் தலைப்பிட்டு கூறிய விளக்கங்களை கொண்டு அந்த அத்தியாயத்தை அலங்கரித்துள்ளார்கள்.

(3) ஒரு இடத்தில்  மூடலாகவும் மற்றோர் இடத்தில் விபரமாகவும் கொண்டுவருதல்.
இன்னும் பல...

புகாரி கிரந்தத்தின் இடம் பெறும் المعلقات
வகைகள்:

அதாவது அறிவிப்பாளர் பூரணப்படுத்தப்படாமலோ,
 அல்லது ஓரிரு அறிப்பாளரைக் கொண்டதாகவோ இடம் பெறும் அறிவிப்புக்கள் முஅல்லகாத் எனக் கூறப்படும்.

இவை அளிவிப்பாளர் பூரணமான வழமையான ஹதீஸ் அறிவிப்புக்களைப் போல் 
حدثنا
أخبرنا 
أنبأنا 
போன்ற செவியுற்றதை உறுதி செய்கின்ற வார்த்தைகள் மூலம் இடம் பெறாத, ஓரிரு அறிவிப்பாளர், சில போது நபித்தோழரோடு மாத்திரம் தொடர்புபடுத்தி மீதி அறிவிப்பாளர் நீக்கப்பட்டு அறிவிக்கப்படும் அறிவிப்புக்களாகும்.

இமாம் புகாரி ரஹி அவர்கள் தனது முடிவின் படி தான் செவிமடுக்காத, அல்லது செவியேற்பில் சந்தேகம் எனப்பட்ட அறிவிப்புக்களாகக் கண்ட முறையான காரணங்களுக்காக அறிவிக்கப்படும் செய்திகள் என்றும் விளங்கலாம்.

அவை குறித்த ஹதீஸின் சுருக்காமாகவோ, அல்லது
நபித்தோழர்களின் கூற்றுக்களாகவோ அறிஞர்களின்  கூற்றுக்களாகவோ  இருக்கும்.

முஅல்லகாத் இருவகைப்படும்:

இந்த வகை அறிவிப்புக்களை அறிஞர்கள் இரு வகையாக பிரித்து நோக்குவர்.

(1) ஒன்று 
ما روي بصيغة الجزم 
சனத்- ஸஹீஹ், ஹஸன், ஸாலிஹ் என்ற மூன்று தரத்தில் இடம் பெறுகின்ற அறிவிப்பாளர் சரியான அடிப்படையில் இடம் பெறும் அறிவிப்புக்கள். 
அவை :
قال ، ذكر ، حكى،
போன்ற உறுதியைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு இடம் பெறும்.
உதாரணமாக 
٣٢٧٥ - وقالَ عُثْمانُ بْنُ الهيْثَم: حَدَّثَنا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أبِي هُرَيْرَةَ - ﵁ -، قالَ: وكَّلَنِي رَسُولُ اللهِ - ﷺ - بِحِفْظِ زكاةِ رَمَضانَ
என்பதில் வழமைக்கு மாறாக 
وقالَ عُثْمانُ بْنُ الهيْثَم
என்ற செய்தியில் 
حَدَّثَنا
என்ற சொற்பிரோயகம் இன்றி இடம் பெற்றுள்ளது.

(2) இரண்டாவதாக 
ما روي بصيغة التمريض 
பலவீனமான, உறியற்ற நிலைப்பாட்டைக்  குறிக்கும் சொற்களான
 قيل، حكي
சொல்லப்பட்டது, எடுத்துக் கூறப்பட்டுள்ளது, போன்ற பலம் குன்றிய சொற்பிரயோகங்கள்  மூலம் இடம் பெறும் அறிவிப்புக்கள்.

இவை செயப்படு பொருள்களில் வரும் சொற்பிரயோகங்களில்  இடம் பெறும்.

இவ்வாறான செய்திகள் அடிப்படையான பாடங்களில் இடம் பெறமாட்டாது . மாறாக அவற்றற்கு துணை சேர்க்கும் வகையிலும் ஷாஹித் மேலதிக ஆதாரங்களாகவும் ஹதீஸ் துறையின் மறைவான ஏதோ ஒரு பயனையும், வரலாற்றையும் நோக்கமாகக் இடம் பெறும். அவை ஹதீஸ்கள் அல்ல. மாறாக நபித்தோழர்கள், தாபியீன்கள் போன்றோரின் கூற்றுக்களாகும்.

அதனை அடிப்படையான அத்தியாய ஹதீஸ்களைப் போல் எண்ணி புகாரியில் இடம் பெறும் அறிவிப்பாளர் முழுமையான ஹதீஸ் போன்று  ஆதாரமாகக் கூறுவதை தவிர்க்க வேண்டும். 

புகாரியில்  மொத்தமாக 1300 முஅல்லகாத் معلقات வகை ஹதீஸ்கள் இடம் பெறுகின்றன. 

அவற்றில் 1140 ஹதீஸ்கள் புகாரியில் வேறு இடங்களில் (சனத்) அறிவிக்கப்பட்டு முழுமையாக சேர்க்கப்பட்டு இடம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நாம் தாராளமாக ஆதாரமாக எடுத்துக் கூறலாம்.

மீதி 160 செய்திகள் புகாரியின் வேறு இடங்களில் சனத் சேர்க்கப்படாது  இடம் பெற்றுள்ளன.

அவற்றை இமாம் இப்னு இப்னு ஹஜர் (ரஹி) அவர்கள் تغليق التعليق என்ற பெறுமதிமிக்க   தனியான நூலில்  தெளிவு படுத்தி உள்ளார்கள். அதன் தரத்தை உறுதிப்படுத்தி பின் எடுத்துக் கூறலாம்.

புகாரி கிரந்தம் தொடர்பான விமர்சனம்:

புகாரியின் அறிவிப்பாளர்கள்தொடர்பாக ஆரம்பகால இமாம்களில் ஒருவரான இமாம் தாரகுத்னியால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்துக்குமான  பதில்களை இப்னு ஹஜர் ரஹி அவர்கள் 
فتح الباري 
யின் முன்னுரையில் பதிலளித்து தெளிவுபடுத்தி உள்ளார்கள். 

அவை ஹதீஸ் மறுப்பு கொள்கையாளர்களின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுப் போன்றல்லாத (ராவி) அறிவிப்பாளரின் நினைவாற்றல், மணனம் போன்ற விஷயமாக அறிவுப் பூர்வமான குற்றச்சாட்டுக்களாக இருந்ததனால் அது பற்றிய தெளிவு இமாம் அவர்கள் மூலம்
هدي الساري
என்ற பத்ஹுல் பாரியின் முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது . 
ஹதீஸ் தொடர்பான அடிப்படை  அறிவற்ற நவீனகால அறிவிலிகளின் புகாரி தொடர்பான குற்றச்சாட்டானது கணக்கில் கொள்ளத்தேவை இல்லாத முஃதஸிலாக்களின் குற்றச்சாட்டுக்களை ஒத்ததாகும்.

இருந்தாலும் அவற்றிற்கும் அரபுலகில் பதிலளிக்கப்பட்டுள்ளன.
விபரம்:
تخليص الرسالة :
1 - شيوخ البخاري الذين وُجِّه لهم نوع نقد أو طعن هم ثمانون شيخاً .
عشرون منهم تُكلِم فيهم من ناحية العدالة
ثلاثة وأربعون تُكلِم فيهم من ناحية الضبط .
أربعة تُكِلم فيهم بسبب طُرُق تحمل الحديث
أربعة عشر تكلم فيهم بلا وجه صحيح

2 - كيفية الرواية عن الشيوخ المتكلم فيهم
- انتقى البخاري أحاديث شيوخه المتكلم فيهم إنتقاءً يُظهر بجلاء سعة علم البخاري في علم الجرح والتعديل وعلل الحديث
- أساس اختياره لرواية المتكلم فيهم هو موافقتهم للثقات أو أن أصل الحديث معروف مشهور .
- احتج البخاري بشيوخ تُكُلِم فيهم أكثر من الرواية عنهم، وهذا يعني أنه لم يَرَ صحة الطعن الموجه له أو أن هذا الطعن لا يؤثر في عدالة الراوي وضبطه .
- قد ينتقي البخاري من رواية المُتكلم فيهم ويخرج لهم أحاديث بضد ما اتُهِموا به حتى يدفع عنهم التهمة، أما لأنها غير صحيحة في حقهم، أو أنها لا تأثير لها على صدقهم في الحديث وأمانتهم.

புகாரியின் ஹதீஸ் ஏற்பு நிபந்தனைகள்:

 أخرج الفتح بسنده إلى الحافظ أبي الفضل ابن طاهر المقدسي أنه قال: "شرط البخاري أن يخرّج الحديث المتفق على ثقة نقلته إلى الصحابي المشهور من غير اختلاف بين الثقات الأثبات ويكون إسناده متصلا غير مقطوع وإن كان للصحابي راويان فصاعدا فحسن وإن لم يكن إلا راو واحد وصح الطريق إليه كفى" انتهى.

இமாம் புகாரி ரஹி அவர்கள் ஒரு ஹதீஸை ஏற்பதற்கு   அறிவிப்பாளர்கள் ஹதீஸ் அறிவிப்பில் அதி நம்பகமானவர்களாக இருப்பதோடு, அறிவிப்பு வரிசை இடையறாது இறைத் தூதரை சென்றடைவதையும்  திபந்தனையாக விதித்துள்ளார்கள். 

ஒரு ஸஹாபியிடம் இருந்து  இரு ராவிகள்  அறிவித்தால் சிறப்பானதுதான். ஆனால் ஒரு ராவிதான் உண்டு என்றாலும் அதனையும் பதிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியை இமாம் அபுல் ஃபழ்ல் இப்னு தாஹிர் அல்மக்திஸீ மூலம் இப்னு ஹஜர் ரஹி அவர்கள் விளக்கி உள்ளார்கள்.

இமாம் புகாரியின் ஹதீஸ் ஏற்பு  நிபந்தனைகள் ஸஹீஹான ஹதீஸிற்குரிய ஐந்து நிமந்தனைகளோடு 
الملازمة وطول الصحبة 
ஆசிரியரோடுள்ள நீண்ட கால உறவும், பற்றுதலும்,
المعاصرة واللقيا
 சமகாலத்தில் வாழ்ததற்கான சான்றும் என்பதோடு, ஆசிரியரை சந்தித்து பாடம் படித்தலும் என்ற கூடுதல் நிபந்தனைகள் இட்டுள்ளார்கள். அதிகபடியான  இந்த நிபந்தனைகளே  முஸ்லிம் கிரந்தத்தை இரண்டாம் நிலைக்கு கொண்டு செல்லக் காரணமானது.
மேலும் படிக்க:
https://hadeethshareef.com/b/%D8%B4%D8%B1%D9%88%D8%B7-%D9%82%D8%A8%D9%88%D9%84-%D8%A7%D9%84%D8%A8%D8%AE%D8%A7%D8%B1%D9%8A-%D9%84%D9%84%D8%AD%D8%AF%D9%8A%D8%AB

புகாரி கிரந்த விரிவுரைகளின் எண்ணிக்கை:

புகாரி கிரந்தத்தின் விரிவுரைகள் 170 தாண்டி விட்டன. அதில் ஃபத்ஹுல் பாரி விரிவான நூலாகும்.
ஃபத்ஹுல் பாரி என்ற பெயரில் இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலீ ரஹி அவர்கள் எழுதி முடிவடைதற்கு முன்னால் மரணமானார்கள். ஆனால் அதே பெயரில் இமாம்  இப்னு ஹஜர் ரஹி அவர்கள் எழுதி முடித்தார்கள்.

பின் வரும் இணைப்பில் தேடுங்கள். 
https://ujeeb.com/%D9%83%D9%85-%D8%B9%D8%AF%D8%AF-%D8%B4%D8%B1%D9%88%D8%AD%D8%A7%D8%AA-%D8%B5%D8%AD%D9%8A%D8%AD-%D8%A7%D9%84%D8%A8%D8%AE%D8%A7%D8%B1%D9%8A-%D9%88%D9%85%D8%A7-%D9%87%D9%88-%D8%A3%D8%AF%D9%82%D9%87%D8%A7-%D9%88%D8%A3%D8%A8%D8%B3%D8%B7%D9%87%D8%A7

புகாரி இமாமின் ஏனைய நூல்கள்:
---
ஒழுக்கம் , பண்பாடுகள் தொடர்பாக 
١) الأدب المفرد " 
தொழுகை தொடர்பாக 
٢) رفع اليدين في الصلاة
٣) " القراءة خلف الإمام " 
அறிவிப்பாளர் தொடர்பாக
٤) " التاريخ الكبير ،
٥) والأوسط (٦)والصغير " 
٧)  "الضعفاء " 
 அகீதாவில்
 ٧) خلق أفعال العباد "
எனப் பல நூல்கள் எழுதியதோடு மேலும் பல நூல்கள் காணாமலும் போயுள்ளன.

புகாரியின் தரத்தை உயர்த்திடும்  ثلاثيات 
இமாம் புகாரிக்கும் நபி ஸல் அவர்களுக்கும் இடையில் மூவர் மாத்திரம் இடம் பெறும் அறிவிப்புக்கள் துலாதிய்யாத் எனக் கூறப்படும்.
وهي الأحاديث التي رواها الإمام البخاري وبينه وبين رسول الله ﷺ ثلاثة أشخاص
அதாவது தாபியீ, தபவுத் தாபியீ, ஸஹாபி இடம் பெறும் அறிவிப்புக்கள். 

இது ஆகக் குறைந்த ராவிகளைகளின் எண்ணிக்கை அறிவுப்புக்களாக இருப்பதால் சிறப்பான அறிவிப்புக்களாகக் கொள்ளப்படும். இது புகாரியில் 22 அறிவிப்புக்களில் 16 வேறு இடங்களில் இடம் பெறாதவைகளாக உள்ளன.

இமாம் புகாரிக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒன்பது அறிவிப்பாளர் கொண்டும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது புகாரியில் மூன்று முதல் ஒன்பது அறிவிப்பாளர்கள் வரை இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும். ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறப்புடன் இந்த அறிப்பாளர் முறையும்  புகாரிக்கு பெருமை சேர்த்த விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர்கள்:
இமாம் புகாரி ரஹி அவர்கள் பாடம் படித்த 
ஆசிரியர்களின் எண்ணிக்கை 1080 விட தாண்டும் என மதிப்பிட்டுள்ளனர். 

புகாரியில்  இடம் பெறும் அறிவிப்பாளர்களான 287 ஆசிரியர்களை தரம் பிரித்து அதிஉயர்தரம், உயர் தரம், மூன்றாம் நிலை என வகுத்து ஹதீஸ்களைப் பதிவு செய்திருப்பதாக இமாம் இப்னு ஹஜர் ரஹி அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

புகாரி ரஹி அவர்களின் ஸஹீஹ் புகாரியையும் மற்ற நூல்களையும் படித்த மாணவர்கள் அண்ணளவாக 90.000 ம் அதிகமாக இருக்கும் என அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அதன் காரணமாகவே இமாம் புகாரி ரஹி அவர்கள் :
أمير المؤمنين في الحديث/ جبل في الحديث
போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்கள் .

இமாம் புகாரியின் வரலாற்றைப் படிக்கின்ற போது நாம் அங்கோ, அவர் எங்கோ என சுன்னா படிக்கும் ஒரு மாணவன் சிந்திப்பான். 

ஆனால் புகாரியின் தரத்தை அடையமுடியாத, அவரது வரலாற்றைப் படிப்பதற்குக்  கூட தகுதியற்ற அறிவிலி ஒருவன், காழ்ப்புணர்ச்சி கொண்டு தனது அரைகுறை அறிவோடு விமர்சனம் செய்து அழிந்து சாவான்.

- எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி
أحدث أقدم