இறை நம்பிக்கையாளர்க்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய வழிகாட்டி


﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (31) قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ (32) ﴾ [آل عمران: 31-33] 

    “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் .அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு மிக்கவன் நிகரிலா அன்பாளன் என்று (நபியே) கூறுவீராக!”
“அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் இறைமறுப்பாளர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்” என்று கூறுவீராக! (3:31,32)

«الأخلاق والسير في مداواة النفوس» (ص24):
«‌من ‌أَرَادَ ‌خير ‌الْآخِرَة ‌وَحِكْمَة ‌الدُّنْيَا وَعدل السِّيرَة والاحتواء على محَاسِن الْأَخْلَاق كلهَا وَاسْتِحْقَاق الْفَضَائِل بأسرها فليقتد بِمُحَمد رَسُول الله صلى الله عليه وسلم وليستعمل أخلاقه وسيره مَا أمكنه أعاننا الله على الإتساء بِهِ بمنه آمين»

இப்னு ஹஸ்ம்  (ரஹ்)  அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

 “மறுமையின்  நலனையும், இம்மையின் அறிவையும், நேர்மையான வரலாற்றையும் நற்குணங்கள் யாவற்றையும் பின்தொடர்வதையும் சிறப்புகள் யாவற்றிற்கும் தகுதி பெறுவதையும்  விரும்புகின்ற ஒருவர், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்)  அவர்களைப்  பின்பற்றட்டும்! அன்னாரின் நற்பண்புகளையும் நடைமுறைகளையும் இயன்றவரையில் கடைப்பிடிக்கட்டும்! அன்னாரின் அடிச்சுவடைப்  பின்பற்றி வாழும்  பாக்கியத்தை  நமக்கு  அல்லாஹ் வழங்கி உதவிடுவானாக! ஆமீன்.” (அல் அக்லாக்கு வஸ்ஸியறு ஃபீ முதாவாத்திந் நூஃபூஸ்,  பக்: 24)

«مدارج السالكين» (3/ 251 ط الكتاب العربي):

«‌فَإِذَا ‌صَدَقَ ‌فِي ‌ذَلِكَ ‌رُزِقَ ‌مَحَبَّةَ ‌الرَّسُولِ صلى الله عليه وسلم، وَاسْتَوْلَتْ رُوحَانِيَّتُهُ عَلَى قَلْبِهِ، فَجَعَلَهُ إِمَامَهُ وَمُعَلِّمَهُ، وَأُسْتَاذَهُ وَشَيْخَهُ وَقُدْوَتَهُ، كَمَا جَعَلَهُ اللَّهُ نَبِيَّهُ وَرَسُولَهُ وَهَادِيًا إِلَيْهِ، فَيُطَالِعُ سِيرَتَهُ وَمَبَادِئَ أَمْرِهِ، وَكَيْفِيَّةَ نُزُولِ الْوَحْيِ عَلَيْهِ، وَيَعْرِفُ صِفَاتِهُ وَأَخْلَاقَهُ، وَآدَابَهُ فِي حَرَكَاتِهِ وَسُكُونِهِ وَيَقَظَتِهِ وَمَنَامِهِ، وَعِبَادَتِهِ وَمُعَاشَرَتِهِ لِأَهْلِهِ وَأَصْحَابِهِ، حَتَّى يَصِيرَ كَأَنَّهُ مَعَهُ مِنْ بَعْضِ أَصْحَابِهِ.»

இப்னுல் கையிம் அவர்கள் 'மதாரிஜீஸ் ஸாலிகீன்'எனும் நூலில் (3/252) குறிப்பிடுகிறார்கள்:

   "அல்லாஹ்வை அறிந்துகொள்வதிலும் அவனைச் சென்றடையும் வழியைத் தெரிந்துகொள்வதிலும் ஒருவர் உண்மையாக நடந்து கொண்டால்,
   அவர் இறைத்தூதர் மீது அன்பும் நேசமும்  வழங்கப் பட்டுவிடுவார். 

அவரது உள்ளத்தை அவருடைய ஆன்மா ஆளத் தொடங்கிவிடும். பிறகு அவர் நபிகளாரை தனது வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் உஸ்தாதாகவும் ஷைக்காகவும் முன்மாதிரியாகவும் ஆக்கிக்கொள்வார். அன்னாரை அல்லாஹ் தனது நபியாகவும் ரசூலாகவும் தன்னளவில் வழிகாட்டியாகவும் ஆக்கி இருப்பதை போன்று (அவரும் ஆக்கிக்கொள்வார்). பிறகு நபிகளாரின் வரலாற்றையும் அன்னார் உடைய (நபித்துவ) விவகாரத்தின் தொடக்கத்தையும் பற்றி வாசிக்க ஆரம்பிப்பார். 

நபிகளாருக்கு இறைச்செய்தி (வஹீ) அருளப்பெற்ற விதத்தையும் அறிந்துகொள்வார்.

மேலும் நபிகளாரின் தன்மைகளையும் நற்பண்புகளையும் அறிந்து, அவர்களின் அசைவிலும் அமைதியிலும்  விழிப்பிலும் உறக்கத்திலும் வழிபாட்டிலும் அவர்தம் குடும்பத்தார்களிடமும் தோழர்களிடமும் உறவாடிய விதத்திலும் இருந்த ஒழுக்க விழுமியங்களை அறிந்துகொண்டு, தம் தோழர்களிடையே நபியவர்களும் இருப்பதைப் போன்று (உணர்பவராய்) அவர் மாறிவிடுவார்."
Previous Post Next Post