நபியவர்கள் தங்க மோதிரம்அணிந்ததாக கூறப்படும் ஹதீஸ்

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச்செய்து, அதன் குமிழைத் தம்உள்ளங்கைப் பக்கமாக வைத்துஅணிந்தார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒருநாள்) நபி(ஸல்)அவர்கள் சொற்பொழிவு மேடையில்(மின்பரில்) ஏறி அல்லாஹ்வைப்போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச்செய்திருந்தேன். ஆனால் அதை நான்இனி அணியமாட்மேடன்'' என்றுகூறிவிட்டு அதை(க் கழற்றி)எறிந்துவிட்டார்கள், மக்களும்எறிந்துவிட்டனர்.

                (அறிவிப்பாளர்களில்ஒருவரான) ஜுவைரிய்யா(ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள்: 

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் மோதிரத்தை) தம்வலக் கையில் அணிந்து கொண்டார்கள்என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்.

                (நூல் : புகாரி 5876 முஸ்லிம்)இந்த ஹதீஸில் எழக்கூடிய ஒரு

கேள்வி : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மஅசூம் - பாவம்செய்வதிலிருந்துபாதுகாக்கப்பட்டவர்கள் - எனும் போதுஎப்படி அவர்கள் தங்க மோதிரம்அணிந்திருப்பார்கள்? இதுதான் அந்தக்கேள்வி .

                இதற்கான பதில் : நபி(ஸல்) அவர்கள் தங்க மோதிரம்செய்து அதைஅணிந்திருக்கிறார்கள். அதைப் பார்த்துநபித்தோழர்களும் தங்க மோதிரம்செய்து அணிந்துள்ளார்கள் என்பதுஇந்த ஹதீஸின் செய்தி. அப்படியானால்இதற்கு முன்பு வரை ஆண்களும் தங்கம்அணியலாம் என்கிற அனுமதிமார்க்கத்தில் இருந்திருக்கிறது என்பதுதெரிகிறது. இந்த ஹதீஸில்சொல்லப்படும் நிகழ்வுகளுக்குப்பிறகுதான் ஆண்கள் தங்கம்அணியக்கூடாது என்ற தடைமார்க்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் தடைசெய்யப்பட்ட ஒரு தவறை செய்தார்கள்என்ற நிலை ஏற்படாது.

                ஆண்களுக்கும் இஸ்லாத்தின்ஆரம்ப காலத்தில் தங்கம்அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதைஉணர்த்தும் வேறு ஹதீஸ் ஆதாரங்களும்உள்ளன.

                அவற்றில் ஒன்று : அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் தமது இடதுகரத்தில் பட்டுத் துணியையும் தமதுவலது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக்கொண்டார்கள். பின்னர்அவ்விரண்டுடனும் தம்மிரு கைகளைஉயர்த்திக் காட்டி, "நிச்சயமாகஇவையிரண்டும் என் சமுதாயத்திலுள்ளஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகவும் பெண்களுக்குஅனுமதிக்கப்பட்டதாகவும் உள்ளன'' என்று கூறினார்கள். (இப்னு மாஜா 3595 - ஷாமிலா பதிப்பு - இதன் கருத்து அபூதாவூத், திர்மிதி, நஸாயி உள்ளிட்டநூல்களிலும் இடம் பெறுகிறது.)

                அபூமூஸா(ரலி) அவர்கள்கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் என்சமுதாயத்தின் பெண்களுக்கு பட்டையும்தங்கத்தையும் ஆகுமாக்கியிருக்கிறான்.அவற்றை என் சமுதாயத்தின்ஆண்களுக்கு தடை செய்துவிட்டான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(நஸாயி 5265 - ஷாமிலா பதிப்பு - இதன் கருத்து திர்மிதி, அஹ்மத்உள்ளிட்ட நூல்களிலும்இடம்பெறுகிறது.)

                இந்த இரண்டு ஹதீஸ்களையும்அப்துல்லா பின் உமர்(ரலி)அறிவித்துள்ள முதல் ஹதீசுடன்இணைத்துப் பார்க்கும் போதுஇஸ்லாத்தின் துவக்கத்தில் தடைசெய்யப்படாமல் இருந்த தங்கம்பிற்காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தடை செய்யப்பட்டுள்ளது என்பதைபுரிந்து கொள்ளலாம். இதன்படியும்நபி(ஸல்) அவர்கள் தடை செய்யப்பட்டஒரு பாவத்தை செய்யவில்லை என்பதுஉறுதியாகிறது.        

                அடுத்து, நபி(ஸல்) அவர்கள்வெள்ளி மோதிரம் அணிந்துவிட்டு அதைஎறிந்ததாகவும் ஒரு அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது. அது வருமாறு :

                அனஸ்(ரலி) அவர்கள்அறிவித்தாக இப்னு ஷிஹாப் ஜீஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறுவது : ஒரு நாள்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கையில்வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளிமோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள். அப்போதுஇறைத்தூதர்(ஸல்) தம் மோதிரத்தை(கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும்தம் மோதிரங்களை (கழற்றி) எறிந்துவிட்டார்கள். (நூல் : புகாரி 5868, முஸ்-ம் 4250)

                இந்த ஹதீஸ் குறித்து அல்காளீ இயாள் கூறுவது : தங்க மோதிரம்என்று சொல்ல வேண்டியதை வெள்ளிமோதிரம் என்று அறிவிப்பாளர் இப்னுஷிஹாப் கவனக் குறைவாக கூறிவிட்டார்என்று அனைத்து ஹதீஸ் கலைஅறிஞர்களும் கூறியுள்ளனர். இப்னுஷிஹாப் தவிர்த்த மற்றவர்களின்அறிவிப்புகளில் நபியவர்கள் வெள்ளிமோதிரத்தை தொடர்ந்துஅணிந்திருந்ததாகத்தான் உள்ளது. கழற்றி எறிந்ததாக இல்லை. முஸ்லிம்நூலின் மற்ற அறிவிப்புக்களில் உள்ளதுபோல் நபியவர்கள் தங்க மோதிரத்தைத்தான் கழற்றி எறிந்தார்கள். (நூல் : ஷரஹ்ஸஹீஹ் முஸ்லிம்)

                மேலும் இந்த ஹதீஸில்,அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் கவனக்குறைவினால் நபியவர்கள் வெள்ளிமோதிரத்தை கழற்றி எறிந்ததாககூறியிருக்கிறார் என்பதை இமாம்இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களும்விளக்கியுள்ளார்கள்.

                பார்க்க : தஹ்தீபுஸ் சுனன்.அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ்களைசரியாக புரிந்து கொள்ளவும் முறையாகசெயல்படுத்தவும் வல்ல அல்லாஹ் நமக்குநல்லுதவி செய்வானாக.

-அபூ அக்மல்
أحدث أقدم