சோதனையான காலகட்டத்தில் ஆட்சி புரிந்த இருவர்

بسم الله الرحمن الرحیم

அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவு நபி (ﷺ) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), "(மேலே) பாருங்கள்! வானில் ஏதேனும் விண்மீன் தெரிகிறதா?" என்று வினவினார்கள். நான், "ஆம் (தெரிகிறது)" என்றேன். "என்ன விண்மீன் தெரிகிறது?" என்று வினவினார்கள்.

"கிருத்திகை (ஸுரைய்யா) விண்மீன் குழுமம் தெரிகிறது" என்றேன். அப்போது அவர்கள், "இதோ பாருங்கள்! உங்கள் வழித்தோன்றல்களில் இந்த விண்மீன் குழுமத்தில் உள்ள எண்ணிக்கைக்கு நிகரான நபர்கள் இந்தச் சமுதாயத்தை ஆள்வார்கள். அவர்களில் இருவர் சோதனையான காலகட்டத்தில் ஆள்வார்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்னது அஹ்மத் - 1690

அப்பாஸ் (رضی الله عنه) அவர்களின் வழித்தோன்றல்களான அப்பாசியா ஆட்சியாளர்கள் 37 பேர் ஆவர். இவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 750 முதல் கி.பி. 1258 வரை 500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இவர்களில் மஃமூன் அப்துல்லாஹ் பின் ஹாரூன் அர்ரஷீத் (ஹிஜ்ரீ 170-218; கி.பி. 786-833) மற்றும் அவருடைய சகோதரர் முஅதஸிம் பில்லாஹ் முஹம்மத் பின் ஹாரூன் அர்ரஷீத் (ஹிஜ்ரீ 218-227; கி.பி. 833-842) ஆகிய இருவருடைய ஆட்சியில்தான் குழப்பங்கள் தலைவிரித்தாடின.

ஆதாரம்: இத்ஹாஃபுல் ஜமாஆ
أحدث أقدم