இவர்களைக் கண்டு அல்லாஹு வியப்படைகிறான்

நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒருகூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் 
நூல்:ஸஹீஹுல் புஹாரி
 3010சுனன்அபீதாவூத் 2677, முஸ்னத்அஹ்மத் 8013

விளக்கம்:

மறுமையில் முஃமினுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய மகத்தான பாக்கியம் தான் சொர்க்கம் என்பது அதில் நுழையக் கூடியவர்கள் பல படித்தரங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.

 கேள்விக் கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்களும் விசாரணைக்கு பின் சொர்க்கம் செல்பவர்கள் இன்னும் தண்டனைக்கு பின் சொர்க்கம் செல்பவர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

 அதில் மேற்கூறப்பட்ட ஹதீஸில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சொர்க்கம் செல்லக் கூடிய மக்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

 இதன் விளக்கம் தொடர்பாக இரு கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது.

இமாம் இப்னுஹஜர் அஸ்கலானிرحمه الله  அவர்கள் கூறினார்கள்:
 சங்கிலியால் பிணைக்கப்பட்வர் என்பது உலகத்தில் இருக்கும் நிலையாகும் ஆனாலும் அதை எதார்த்த பொருளிலேயே எடுத்துக் கொள்வதிலும் தவறில்லை என்றாலும் இதன் பொருள் இஸ்லாமை ஏற்பதற்கு முன் அவர்கள் கைதிகளாக இருந்தார்கள் அவர்களும் சொர்க்கம் செல்வார்கள் என்பதாகும் .நூல்:ஃபத்ஹுல் பாரி 6/145

இமாம் இப்னுல் ஜவ்ஸி رحمه اللهஅவர்கள் கூறினார்கள்: 
இவர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்டு விலங்குகளால் பிணைக்கப் பட்டிருந்தவர்கள் இஸ்லாமின் உண்மையை அறிந்தபோது விருப்பத்துடனே இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்தார்கள் அதன் காரணமாக சொர்க்கத்திலும் நுழைவார்கள். நூல்:ஃபத்ஹுல் பாரி 6/145

வேறு சில உலமாக்கள் இதன் கருத்து இவ் வுலகில் நிராகரிப்பாளர்களிடம் கைதிகளாக இருந்த முஸ்லிம்கள் அதே நிலையில் மரணிக்கவோ, கொல்லப்படுவோ செய்யப்பட்டவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பதாகும்.

அல்லாஹ் வியப்படைகிறான் என்றால் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு நன்மைகளை அளிக்கயிருக்கிறான் என்பதாகும்.

-உஸ்தாத்  பஷீர் ஃபிர்தௌஸி
Previous Post Next Post