தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான் (அல்குர்ஆன் 2:208)

இமாம் பகவி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

نزلت هذه الآية في مؤمني أهل الكتاب عبد الله بن سلام النضيري وأصحابه وذلك أنهم كانوا يعظمون السبت ويكرهون لحمان الإبل وألبانها بعدما أسلموا وقالوا : يا رسول الله إن التوراة كتاب الله فدعنا فلنقم بها في صلاتنا بالليل فأنزل الله تعالى ( يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ) أي في الإسلام قال مجاهد في أحكام أهل الإسلام وأعمالهم ) ( كافة ) أي جميعا وقيل : ادخلوا في الإسلام إلى منتهى شرائعه كافين عن المجاوزة إلى غيره وأصل السلم من الاستسلام والانقياد ولذلك قيل للصلح سلم قال حذيفة بن اليمان في هذه الآية : الإسلام ثمانية أسهم فعد الصلاة والزكاة والصوم والحج والعمرة ، والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر وقال : قد خاب من لا سهم له . ـ

இவ்வசனமானது வேதம் கொடுக்கப்பட்டோரிலுள்ள அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அல்-நதீரி மற்றும் அவரைப் பின்பற்றிய சில முஃமீன்கள் குறித்து இறக்கியருளப்பட்டதாகும். 

ஏனெனில், அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் ‘ஸப்பாத்’ நாளைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும், ஒட்டக இறைச்சியையும் அதன் பாலையும் (தவிர்ப்பது கொண்டு) வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். மேலும் அவர்கள், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே, தவ்ராத் அல்லாஹ்வின் வேத நூலாகும், எனவே அதை நமது இரவுத் தொழுகையில் ஓதுவோம்” எனவும் கூறினார்கள். இவர்களுக்குப் பதிலளிக்கும் பொருட்டே அல்லாஹ் மேற்குறித்த ஆயத்தை இறக்கி வைத்தான்.

அல்லாஹ் அருளினான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்

முஜாஹித் கூறுகிறார்: இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள் என்பதன் விளக்கமாவது, "(ஜாஹிலியத் மற்றும் முந்தைய வேத நடைமுறைகளை விட்டுவிட்டு) இஸ்லாமிய மக்களின் சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்குள் நுழையுங்கள்." என்பதாகும்.


كَافَّةً
முழுமையாக..

சிலர் கூறுகிறார்கள் ‘முழுமையாக’ என்பதன் விளக்கமாவது “இஸ்லாத்தினுள்ளும் அதன் (ஷரீஅத்) சட்டதிட்டங்களினுள்ளும் பரிபூரணமாக நுழைந்துவிடுங்கள், வேறு (மார்க்கங்களிலிருந்தோ அல்லது புதிதாகவோ) எதையும் தேடுவதை விட்டுவிடுங்கள்.

السِّلْمِ (அல்-ஸில்ம்) என்ற சொல்லானது ‘விருப்பத்துடன் கீழ்படிதலைக்’ குறிக்கும் வேர்ச்சொல்லிலிருந்தானது ஆகும். அத்துடன் உடன்படிக்கையும் சிலவேளைகளில் السِّلْمِ என்று அழைக்கப்படுகிறது

இவ்வசனம் குறித்து ஹுதைபா இப்னு அல் யமன் கூறுகிறார்: 
“இஸ்லாம் எட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது அவையாவன தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், உம்ரா, ஜிஹாத், நன்மையை ஏவுவது, மற்றும் தீமையைத் தடுப்பது என்பனவாகும். யாரொருவர் இவற்றில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையோ அவர் வெற்றி பெற மாட்டார்.

ـ ( ولا تتبعوا خطوات الشيطان ) أي آثاره فيما زين لكم من تحريم السبت ولحوم الإبل وغيره ( إنه لكم عدو مبين ) ـ

وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ
..தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்..

அதாவது ஸப்பாதைக் கடைப்பிடிப்பதையும் ஒட்டக இறைச்சியை தவிர்ப்பதையும் இன்னும் இதுபோன்றவைகளையும் நல்லாதாகக் காண்பிப்பதன் மூலம் எம்மில் அவன்(ஷைத்தான்) சொல்வாக்குச் செலுத்துவது.

إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்.

[தஃப்ஸீர் அல்-பகவி 1/241]
Previous Post Next Post