துன்பங்களும் சோதனைகளும் அதிகரித்துச் செல்கின்றன என்றால் விடிவும் மகிழ்ச்சியும் விரைவில் நம்மை சூழ்ந்துகொள்ளப் போகிறது என்பது அர்த்தமாகும்.

துன்பங்களும் சோதனைகளும் அதிகரித்துச் செல்கின்றன என்றால் விடிவும் மகிழ்ச்சியும் விரைவில் நம்மை சூழ்ந்துகொள்ளப் போகிறது என்பது அர்த்தமாகும்.

அல்குர்ஆன் கூறுகிறது :

'இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் எனக் கருதி, நம்பிக்கை இழந்து போன தருணத்தில் நமது உதவி அவர்களை வந்தடைந்தது' (12:110).

யஃகூப் நபியவர்கள் தன் இரு புதல்வர்களை பறிகொடுத்து தவித்த வேளையிலும் அவர்களை மீளப் பெறலாம் என திடமான நம்பிக்கையோடு இருந்தார்கள். தனது ஏனைய மக்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள் : 'என் மக்களே! (மீண்டும்) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்;  அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் இறைநிராகரிப்பாளர்களை தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்' என்று கூறினார் (12:87).

சோதனைகள் அதிகரிக்கும் போது அல்லாஹ் விடிவையும் அதனுடன் இனணத்து வைத்திருப்பதற்கான ரகசியம் யாதெனில், ஓர் இறையடியான் தான் சந்திக்கும் சோதனைகளுக்கான தீர்வை படைப்புகளிடம் பெற முயற்சித்து முடியாற் போகையில் முழுமையாக அவன் படைப்பாளனை நோக்கி திரும்புகிறான். படைப்பாளனின் அருளில் முழு நம்பிக்கை கொண்டு, அவனையே சார்ந்திருந்து விடிவைத் தேடி தொடராக பிரார்த்திக்கும் போது படைப்பாளன் அவனது பிரார்த்தனையை ஏற்று விடிவை வழங்கிவிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான் : 'யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனையே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்' (65:3)

- இமாம் இப்னு றஜப் (ரஹிமஹுல்லாஹ்)
நூல் : 'மஜ்மூஃ றஸாஇல்' , 3/17).
أحدث أقدم