திருமண வீடு போன்று மாறி வரும் ஜனாஸா வீடுகள்

ஜனாஸாவை அடக்கம் செய்த பின் ஜனாஸாவை பார்க்க, அல்லது அதில் கலந்து கொள்ள வந்த மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் வழக்கம் ஓவ்வொரு ஊர்களிலும் நடந்து வருகிறது. இப்போது எந்தளவுக் கெனில் ஜனாஸா நலன்புரி சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாகவும் இவ்வுணவு வழங்கப்படுகிறது.

அண்மையில் பல ஜனாஸாக்கள் எமது ஊர்  மற்றும் அதனை சூழ உள்ள  ஊர்களில்  ஏற்பட்ட போது. அவதானித்த ஒரு விடயம் தான், ஜனாஸா வீட்டில் 150 சகன்,200 சகன் சாப்பாடு கொடுத்தது.. அடு... தாருங்கள் என்று கேட்டு சாப்பிடும் அளவுக்கு உணவு பரிமாறப்பட்டது... இது எந்தளவு மார்க்க அடிப்படையில் சரியானது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

யார் மரணிக்கிறாரோ அவரின் குடும்பத்திற்கு மரணித்தவர் பற்றி கவலை இருக்கும். எனவே அவர்களுக்கு அன்றய தினம் சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஒரு சாந்தோம் இருக்காது. எனவே ஊறார்களோ அல்லது பக்கத்து வீட்டானோ ஜனாஸாவின் குடும்பத்திற்கு   மூன்று நாளைக்கு உணவு சமைத்துக் கொடுப்பது அனுமதிக்கப்பட்ட செயலாகும்.(ஏனனில் மூன்று நாளைக்கு தூக்கம் அனுஷ்டிக்கலாம்.)

 இது தவிர ஜனாஸாவுக்கு வந்தவர்களுக்கு எல்லாம் உணவு சமைதுக் கொடுப்பது அனுமதிக்கப்பட்ட  செயல் இல்லை.

பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு போதிய சான்றாகும்.
1-أنه لما جاء خبرُ جعفرِ بنِ أبي طالبٍ رضي الله عنه أنه تُوفِّيَ يومَ مؤتةَ أمر أهلَه أن يصنعوا لآلِ جعفرٍ طعامًا فقال: اصنعوا لآلِ جعفرٍ طعامًا فقد أتاهم ما يشغَلُهم.
 ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு “ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்”ஏனில்  அவர்களைப் பாதிக்கும் ஒரு செய்தி ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டது என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
  நூல் : அபூதாவூத் 2725, அஹ்மத் 1660,

இந்த ஹதீஸ் இல் ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்” ஏனில்  அவர்களைப் பாதிக்கும் ஒரு செய்தி ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டது(ஒரு தூக்கமான ஒரு காரியம் ஏற்பட்டுள்ளது) என்று தான் நபி ஸல் கூறினார்களே தவிர வந்தவன் போனவன் எல்லோருக்கும் உணவு வழங்கும் படி கூற வில்லை.

2- - عن جريرِ بنِ عبدِ اللهِ البجَليِّ قال: كنا نعدُّ الاجتماعَ إلى أهلِ الميتِ وصناعةَ الطعامِ بعدَ الدفنِ من النياحةِ

ஜனாஸாவை அடக்கம் செய்த பின் இறந்தவர்களின் குடும்பத்தினரிடத்தில் ஒன்று கூடி இருப்பதையும் உணவு தயாரிப்பதையும் ஒப்பாரி வைப்பதற்கு சாமனாக கருதினோம்.என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்

மேலும் ஆயிஷா ரழி அவர்கள் அடக்கம் செய்த பின் " நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள் அதன் பின் ஜனாசாவின் குடும்பத்தினருக்கு உணவு வழங்கினார்கள் எனக் கூறுகிறார்கள்.
 
، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ الْمَيِّتُ مِنْ أَهْلِهَا فَاجْتَمَعَ لِذَلِكَ النِّسَاءُ، ثُمَّ تَفَرَّقْنَ، إِلاَّ أَهْلَهَا وَخَاصَّتَهَا، أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ، ثُمَّ صُنِعَ ثَرِيدٌ فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا ثُمَّ قَالَتْ كُلْنَ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" التَّلْبِينَةُ مَجَمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ، تَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ "".
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் 
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு 'ஸரீத்' (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் 'தல்பீனா' ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) 'இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், 'தல்பீனா' (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்' என்று சொல்வார்கள். 
ஸஹீஹ் புகாரி : 5417.

எனவே ஜனாஸா வீட்டில் ஜனாஸாவின் குடும்பத்தினருக்கு மட்டுமே உணவு கொடுக்க வேண்டும்.. மற்றவர்களுக்கு அல்ல..

(அல்லாஹ் மிக அறிந்தவன் )
أحدث أقدم