ஹவாரிஜ்களின் வழிமுறை


‍‍‍‍‍‍ உஸ்மான் (ரலி அல்லாஹி அன்ஹு) அவர்களுடைய தலையை வெட்டியதன் பின்னர் தனது வாளின் முனையால் தலையை உருட்டிவிட்டு "இதை விட ஒரு அழகான காபிரின் முகத்தை நான் பார்த்ததில்லை" என்று சொன்னான் (நஊதுபில்லாஹ்)
‍‍‍‍‍‍ ‍‍
சுவர்க்கம் செல்வார் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை, வானவர்கள் அவரை பார்த்து வெட்கப்படுகிறார்கள், நபியவர்கள் தனது இரண்டு பெண் மக்களை ஒன்றன்பின் ஒன்றாக அவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார்கள் "என்னிடம் இன்னுமொரு மகள் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு திருமணம் முடித்து தந்திருப்பேன்" என்று நபியவர்கள் சொன்னார்கள், அப்படிப்பட்ட அந்த உஸ்மான் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்களை கொலை செய்வதற்கும் இப்படி சொல்வதற்கும் எப்படி மனம் வந்தது?
‍‍‍‍‍‍ ‍‍
அலி (ரலி அல்லாஹு அன்ஹு) ஹசன் (ரலி அல்லாஹு அன்ஹு) போன்ற இந்த உம்மத்தின் சிறந்தவர்களை கொலை செய்யும் நிலைக்கு எவ்வாறு மனம் வந்தது?
‍‍‍‍‍‍ ‍‍
அவர்களுக்கு எதிரான ஒரு ஹதீஸை சொன்னதற்காக அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் அவர்களை ஒரு ஆற்றுக்கு அருகில் கொண்டு சென்ற அவரது தலையை வெட்டிவிட்டு, கர்பிணியாக இருந்த அவரது மனைவியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே எடுத்தார்கள், இந்த செயல் கொடூரமானது என்று கூட அவர்கள் உணர முடியாமல் போனது எப்படி? இந்த கொடூரத்தை அரங்கேற்றும் போது ஒரு பூனையை கட்டி வைத்து உணவு கொடுக்காமல் இருந்ததற்கே நரகம் நுழைந்தார் என்ற நபி மொழி உணர்வுகளில் ஓடாமல் மறக்கடிக்க செய்தது எப்படி?
‍‍‍‍‍‍ ‍‍
வயிற்றில் வெடிகுண்டை கட்டி கொண்டு சிறுவர்கள், பெண்கள், பலகீனமானவர்கள் என்று பார்க்காமல் தனது உயிரையும் அழித்து கொண்டு அவர்களையும் கொலை செய்ய எவ்வாறு துணிகிறார்கள்? முஸ்லிம்களை கொலை செய்வதை ஒரு சிறந்த அமலாக கருதும் நிலையை எவ்வாறு மனம் எட்டியது?
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
வெறுமனே ஒருவன் தொழ ஆரம்பித்ததும் எந்த தூண்டுதலும் இல்லாமல் தன்னை வெடிக்க செய்துகொள்வதில்லை, மாறாக அதற்கு முன் ஒரு சிந்தனை மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது, இவர்களுடைய இந்த மூளைச்சலவை முறையை அறிஞ்சர்கள் மூன்று படித்தரங்களாக விளக்குவார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
1 – தன்fபீர் - வெறுப்பூட்டல்/
தனிமைப்படுத்தல்
2 – தக்fபீர் - காபிர் என்று தீர்ப்புவழங்குதல்
3 - தfப்ஜீர் - வெடிக்க செய்தல்/அழிவு ஏற்படுத்தல்
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*1- தன்fபீர் - வெறுப்பூட்டல்/தனிமைப்படுத்தல்*

முதலில் வெறுப்பூட்டி தனிமைப்படுத்துவார்கள்,
பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் இஹ்வான்கள், ஹவாரிஜ்கள் மற்றும் ஷீஆக்களும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை செய்வார்கள்.
ஆட்சியாளர்கள் அநீதி இழைக்கிறார்கள், நல்லவர்களை சிறையில் அடைக்கிறார்கள், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள், மேற்கத்தைய நாடுகளின் பணத்திற்காக சமுதாயாத்தை விற்கிறார்கள், யூதர்களின் கைக்கூலிகள், இஸ்ரேலின் கைக்கூலிகள், அவர்களோடு இருப்பவர்கள், அவர்களுடைய ஆட்சிக்கு ஆதரவானவர்கள் அனைவர் மீதும் வெறுப்பூட்டுவார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
இப்னு பாஸ், இப்னு உஸைமீன், அல்பானி, சுதைஸ் போன்றவர்களை நம்ப முடியாது, அவர்கள் ஆட்சியாளர்களுக்கு விலைபோனவர்கள், ஆட்சியாளர்களுக்
கு பயந்து சத்தியத்தை மறைக்கிறார்கள், அவர்கள் ஆட்சியாளரால் நிர்ப்பந்திக்கப்பட்ட பத்வா வழங்குகிறார்கள், ரியாளுக்காகவும் டொலருக்காகவும் பத்வா வழங்குகிறார்கள், இப்னு பாஸ் அல்பானி போன்றவர்களுக்கு ஜிஹாதை புரிந்துகொள்ள முடியாது, பின் லாதின், அன்வர் அல்அவ்லாக்கி போன்று காலத்தில் இருப்பவர்களிடம் இருந்து தான் நாம் ஜிஹாதை புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் உலமாக்கள் மீது உள்ள நம்பிக்கை இழக்கவைப்பதற்காக உலமாக்களுக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்தை செய்வார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
இப்படி வெறுப்பூட்டி, சமூக தலைவர்களை விட்டும், உண்மையான உலமாக்களை விட்டும் தூரமாக்கி மனதளவில் தனிமைப்படுத்தி விடுவார்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*2- தக்fபீர் - காபிர் என்று தீர்ப்புவழங்குதல்*
‍‍‍‍‍‍ ‍‍
ஏதோ ஒரு அடிப்படையில் வரம்பு மீறி காபிர் என்ற தீர்ப்பை வழங்கிவிடுவார்கள், அதன் அடிப்படையில் அவர்களை கொலை செய்வதை ஹலால் என்று உணர்த்துவார்.
‍‍‍‍‍‍ ‍‍
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹவாரிகளின் பண்பை பற்றி சொல்லும் பொது சொன்னார்கள் "அவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்வார்கள் ....."
‍‍‍‍‍‍ ‍‍
அதாவது, முஸ்லிம்கள் மீது வரம்பு மீறி தக்fபீர் செய்து, காஃபிர்களாக கருதுவதால் அவர்களை கொலை செய்வதை ஹலாலாக கருதுவார்கள், இந்த கருத்தையே இமாம் இப்னு தைமிய்யாஹ் சொல்லியிருக்கிறார்.
‍‍‍‍‍‍ ‍‍
‍‍‍‍‍‍ ‍‍
*3- தfப்ஜீர் - வெடிக்க செய்தல்/ அழிவு ஏற்படுத்தல்*
‍‍‍‍‍‍ ‍‍
வெறுப்பூட்டப்பட்ட பின்னர் ஜிஹாத் என்ற பேயரில் அழிவை ஏற்படுத்துவார்கள், தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் தங்களது உயிர்களையும் அழித்துக்கொள்வா
ர்கள்.
‍‍‍‍‍‍ ‍‍
இது ஒரு போதும் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது நேசம் வைத்து, இஸ்லாமிய சமுதாயத்திற்கு நல்லவை நாடி செய்யப்படும் செயல் அல்ல. மாறாக முழுவதுமாக ஒரு வெறுப்பூட்டும் பிரச்சாரத்தின் அடிப்படையிலையே இந்த கொடூரமான செயல்கள் அரங்கேற்றப்படுகிறது.
‍‍‍‍‍‍ ‍‍
ஹவாரிஜ்களுடைய தீங்கில் இருந்து முஸ்லீம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக
‍‍‍‍‍‍ ‍‍
- Hamdhan Hyrullah, Paragahadeniya
أحدث أقدم