பிறர் நலன் நாடுதல் ( من جَبرجُبر)

மகிழ்ச்சியானவர் என்று மக்கள் கருதும் விதத்தில், உள்ளத்தில் கவலையை நிரப்பிக் கொண்ட பலர் வெளியரங்கமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்,

பிறருக்கு உதவி செய்வதில் மும்முறமாக இருப்பவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள் !!

அவருடைய உள்ளமோ உடைந்த நிலையில் கவலையுடன் காட்சி அளிக்கும் !!

யார் பிறரின் கவலையை அகற்றுவாரோ அவருடைய கவலையும் மறைந்து போகும் !!

பிறருக்கு யார் உதவி செய்வாரோ அதன் பலன் அவரை வந்து அடையும் !!

( من جَبرجُبر)

"ஜப்பார் ", கவலைகளை நீக்கக்கூடியவன் என்ற அல்லாஹ்வின் திருநாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து தான் பிறரது கவலையை போக்குதல் என்ற ஓர் இபாதத் 

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள் 
"ஒருவர் பிறருக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் காலமெல்லாம்  அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்"

நூல் - இப்னு ஹிப்பான்
ஹதீஸ் எண்-534
தரம்- ஸஹீஹ் 
அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு 

-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி 

كم باسم والحزن يملَأُ قلبه
والناس تحسب أنه مسرور
وتراه في جبر الخَواطر ساعياً
وفؤاده مُتصدع مكسورٌ!

من جَبَرَ جُبِر!

إحسان المسلم لغيره راجع إليه،
وجبر الآخرين عبادة مستمدة من اسم الله الجبار؛ الذي يجبر كسر الإنسان وعثرته.
أحدث أقدم