பதில் (சுருக்கம்)
ஒலி பெருக்கி மூலம் இமாமின் கிராஅத்தை மக்களுக்கு கேட்கச் செய்வது கூடாது.
காரணம் பள்ளியின் அண்டை வீட்டாருக்கு தொல்லை தரும். வீட்டில் உள்ள நோயாளிகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நபியவர்கள் கிராஅத்தின் மூலம் ஒருவொருக்கொருவர் இடையூறு அளிக்க வேண்டாம் என்று தடுத்திருக்கிறார்கள்.
மேலும் கிராஅத் பள்ளியில் தொழக் கூடியவர்களுக்குத்தான் வெளியே உள்ளவர்களுக்கு அல்ல.
எனவே ஒளிபெருக்கி மூலம் கிராஅத்தை மக்களுக்கு கேட்கச் செய்யக்கூடாது.
இகாமத்தை மட்டும் கேட்கச் செய்யலாம்.
பத்வா வழங்கியவர்
ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்).
மேலும் இது போன்ற பத்வாவை திருநெல்வேலி டீ.ஜே.எம் ஸலாஹுத்தீன் ஹழ்ரத் வழங்கியிருந்தார்கள்.
இது அல்லாமல் கூடுதலாக நாம் சொல்வது என்னவென்றால் ஒலி பெருக்கி மூலம் கிராஅத்தை கேட்கச் செய்வதின் மூலம் வேறு சில பிரச்சனைகளும் இருக்கிறது.
அதாவது சிலர் பாத்ரூமில் இருக்கிறார்கள். அந்நேரத்தில் இச் சப்தத்தை பாத்ரூமில் இருக்கும் போது கேட்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.
இப்படி ஒவ்வொருவரும் ஒரு சில காரியங்களில் இருப்பார்கள். இதனால் அவரை அறியாமல் கிராஅத்தையும் தொழுகையையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் ஒலி பெருக்கினால் காற்று மாசும் ஏற்படுகிறது.
எனவே ஜமாத்தார்களும் உலமாக்களும் பெரியவர்களும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
இப்படிக்கு
எஸ்.யூசுப் பைஜி