வரலாற்று முதுசங்களில் பதியப்பட்டுள்ள சம்பவங்கள், நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் கூறப்பட வேண்டும்..
இல்லையேல் நினைத்தவர்கள் நினைத்ததை நினைத்த இமாம்களோடு இணைத்துச் சொல்லிவிடுவார்கள்.
கடைசியில் சரக்குகளெல்லாம் குப்பைத் தொட்டிலாகி அனைத்தும் நிராகரிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும். இதனால் ஹதீஸ்களில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உருவானதைப் போன்றும் ஸூபிய்யாக்களின் கஞ்சா கதைகள், சுருட்டு அவ்லிய்யாக்களின் கராமத்து கதைகள் போன்று எமது முன் சென்ற இமாம்களின் வாழ்க்கைச் சரிதையும் மாறிவிடும் அபாயம் உண்டு.. ஸஹீஹ் முஸ்லிமின் முன்னுரையில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் கூறுவது போல் இந்த உம்மத்தின் சிறப்பம்சமே ஆதாரங்களும் அதனை உறுதிப்படுத்தும் ஸனதுகளுமே, அது மார்க்கத்தில் உள்ள விடயமே.. அது இல்லையென்றால் நினைத்தவர்கள் நினைத்ததைக் கூறிவிடுவார்கள்.
- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.