நோன்பு சமந்தமான சில நபிமொழிகள்

தொகுப்பு: -அப்துல்லாஹ்


1.நற்செயல்களில் சிறந்தது 

قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه
الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2222 | خلاصة حكم المحدث : صحيح

நான் நபி ஸல் அவர்களிடம் " நற்செயல்களில் சிறந்தது எது "? என்று வினாவினேன் அதற்க்கு நபி ஸல் அவர்கள் நோன்பு நோற்பதைக் கடைபிடி ஏனெனில் அதற்கு நிகர் கிடையாது என்று கூறினார்கள் இதை அபு உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2222 தரம் : ஸஹீஹ்

2.நரகம் தூரமாக்கப்படும்

من صامَ يومًا فى سبيلِ اللَّهِ باعدَ اللَّهُ بينَهُ وبينَ النَّارِ بذلِكَ اليومِ سبعينَ خريفًا.
الراوي : أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2244 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் பாதையில் எவர் ஒருநாள் நோன்பு நோற்பாரோ, அந்த ஒரு நாள் நோன்புக்குப் பகரமாக அவருக்கும், நரகத்திற்குமிடையே அல்லாஹ் எழுபது வருட தொலை தூரத்தை ஏற்படுத்தி விடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2244 தரம் : ஸஹீஹ்

3.நோன்பும் குர் ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும்

الصِّيامُ والقرآنُ يشفَعانِ للعبدِ يومَ القيامةِ يقولُ الصِّيامُ أي ربِّ منعتُهُ الطَّعامَ والشَّهواتِ بالنَّهارِ فشفِّعني فيهِ ويقولُ القرآنُ منعتُهُ النَّومَ باللَّيلِ فشفِّعني فيهِ قالَ فَيشفَّعانِ

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/118 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : அஹ்மத் 10/118 தரம் : ஸஹீஹ்

4.நோன்பை நபி ஸல் விரும்பி வந்தார்கள்

عن عائشةَ قالَت : كانَ أحبَّ الشُّهورِ إلى رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ أن يَصومَهُ: شعبانُ، ثمَّ يصلُهُ برمضانَ
الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2431 | خلاصة حكم المحدث : صحيح

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2431 தரம் : ஸஹீஹ்

5.சாட்சியங்கள் அடிப்படையில் நோன்பு வைப்பது

عن ابنِ عمرَ قال : تراءَى النَّاسُ الهلالَ فأخبرتُ رسولَ اللهِ صلَّى اللهُ علَيهِ وسلَّمَ أنِّي رأيتُه فَصامَه وأمر النَّاسَ بصيامِهِ .

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2342 | خلاصة حكم المحدث : صحيح

மக்கள் பிறையைப் பார்க்க முயற்சித்தார்கள் நிச்சயமாக நான் அதைப் பார்த்தேன் என்று நபி ஸல் அவர்களிடம் அறிவித்தேன். ஆகவே அவர்களும் அன்று நோன்பு நோற்றார்கள் அன்று நோன்பு வைக்கும் படி மக்களுக்கும் அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று இப்னு உமர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2342 தரம் : ஸஹீஹ்

6.பிறையை காண்பதற்கான இரு ஆண்களின் சாட்சியங்கள்...

أنَّ أميرَ مَكَّةَ خطبَ ، ثمَّ قالَ : عَهِدَ إلينا رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ أن ننسُكَ للرُّؤيةِ ، فإن لم نرَهُ ، وشَهِدَ شاهدا عَدلٍ نسَكْنا بشَهادتِهِما.....

الراوي : حسين بن الحارث الجدلي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2338 | خلاصة حكم المحدث : صحيح

ஒருமுறை மக்காவின் ஆளுநர் உரை நிகழ்த்தினார் அப்போது அவர் ஹஜ் வழிபாடுகளைப் பிறையைப் பார்த்த பின்னரே நிறைவேற்ற வேண்டும்.
பிறையை நாங்கள் பார்க்கவில்லையென்றால் நீதமான இரு ஆண்கள் பிறை கண்டதாக சாட்சி சொல்ல வேண்டும் அவ்விருவரின் சாட்சியை வைத்து ஹஜ் வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எங்களிடம் உடன்படிக்கை செய்தார்கள்.

( அப்துல்லாஹ் பின் உமர் தன்னுடைய உரையில் இதை அறிவித்தார்கள் ) என ஹுஸைன் பின் அல்ஹாரிஸ்  அல்ஜதலி ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 2338 தரம் : ஸஹீஹ்

7.ஒரு சமுதாயம் பிறையில் பிழைவிட்டால்

وفِطرُكم يومَ تفطرونَ وأَضحاكم يومَ تضحُّونَ وَكلُّ عرفةَ موقفٌ وَكلُّ منًى منحَرٌ وَكلُّ فجاجِ مَكَّةَ منحرٌ وَكلُّ جَمعٍ موقفٌ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2324 | خلاصة حكم المحدث : صحيح |

உங்கள் பெரு நாள் என்பது நீங்கள் பெரு நாள் கொண்டாடும் நாளாகும் உளுஹிய்யா என்பது நீங்கள் உளுஹிய்யா கொடுக்கும் நாளாகும். அரஃபாவில் நீங்கள் எங்கு நின்றாலும் அது நிற்குமிடம் தான். மினாவில் நீங்கள் எங்கு அறுத்தாலும் அறுக்கலாம்.
மக்காவில் அனைத்து இடங்களிலும் அறுக்கக் கூடிய இடங்களே எந்த இடங்களிலும் நீங்கள் நிற்கலாம் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2324 தரம் : ஸஹீஹ்

8.ரமளான் நோன்பின் சிறப்பு

إذا كانَت أوَّلُ ليلةٍ من رمَضانَ صُفِّدتِ الشَّياطينُ ومَردةُ الجِنِّ وغلِّقت أبَوابُ النَّارِ فلم يُفتَحْ منها بابٌ وفُتِحت أبوابُ الجنَّةِ فلم يُغلَقْ منها بابٌ ونادى منادٍ يا باغيَ الخيرِ أقبِلْ ويا باغيَ الشَّرِّ أقصِر وللَّهِ عتقاءُ منَ النَّارِ وذلِك في كلِّ ليلةٍ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1339 | خلاصة حكم المحدث : صحيح 

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீன்களுக்கும் விலங்கிடப்படும்.

நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது மேலும் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும் அதில் எந்த கதவும் மூடப்படாது.

ஒரு இறை அழைப்பாளர் நன்மை செய்பவர்களே ! முன் வாருங்கள் 

பாவம் செய்பவர்களே ! நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு இரவும் உரக்கச் சொல்வார் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1339 தரம் : ஸஹீஹ்

9.மன்னிப்பு வழங்கப்படும்

مَن لَقي اللهَ لا يُشرِكُ به شيئًا ، يُصلِّي الصلواتِ الخمسَ ، ويصومُ رمضانَ غُفِر له ....
الراوي : معاذ بن جبل | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1315 | خلاصة حكم المحدث : إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين

அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காமலும், ஐவேளை தொழுதும், ரமழான் மாத நோன்பும் வைத்த நிலையில், எம்மனிதர் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1315 தரம் : ஸஹீஹ்

10. சிறந்த ஸஹர் உணவு..

نِعمَ سحورُ المؤمنِ التَّمرُ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2345 | خلاصة حكم المحدث : صحيح

பேரீச்சம் பழம் இறை நம்பிக்கையாளரின் ஸஹர் உணவில் மிக நல்லதாகும் என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2345 தரம் : ஸஹீஹ்

11.நோன்பாளி பிரயாணியாக இருந்தால் நோன்பு பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம்

كُنَّا نُسَافِرُ مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَلَمْ يَعِبِ الصَّائِمُ علَى المُفْطِرِ، ولَا المُفْطِرُ علَى الصَّائِمِ.

الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 1947 | خلاصة حكم المحدث : [صحيح] 

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் பிரயாணம் செய்தோம் அப்போது நோன்பு பிடித்தவர் பிடிக்காதவரை குறை சொல்லவுமில்லை ,நோன்பு பிடிக்காதவர் பிடித்தவரைக் குறை சொல்லவுமில்லை என்று அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் புஹாரி 1947 தரம் : ஸஹீஹ்

12.சிரமமான நாட்களில் நோன்பு இருப்பது

كُنَّا نَغْزُو مع رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ في رَمَضَانَ، فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا المُفْطِرُ، فلا يَجِدُ الصَّائِمُ علَى المُفْطِرِ، وَلَا المُفْطِرُ علَى الصَّائِمِ، يَرَوْنَ أنَّ مَن وَجَدَ قُوَّةً فَصَامَ، فإنَّ ذلكَ حَسَنٌ وَيَرَوْنَ أنَّ مَن وَجَدَ ضَعْفًا، فأفْطَرَ فإنَّ ذلكَ حَسَنٌ.

الراوي : أبو سعيد الخدري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1116 | خلاصة حكم المحدث : [صحيح] |

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் யுத்தத்திற்குச் செல்வோம். அப்பொழுது எங்களில் சிலர் நோன்பு நோற்பார்கள், சிலர் நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பாளி நோன்பில்லாதவர் மீது வெறுப்படைய மாட்டார், அதேபோல், நோன்பில்லாதவர் நோன்பாளி மீது வெறுப்படைய மாட்டார், தனக்கு பலம் இருக்கிறதென்று நினைப்பவர் நோன்பு நோற்றுக் கொள்வார். இவ்வாறு அவர் செய்தது அவருக்குச் சரிதான், தன்னுள் பலவீனத்தை உணர்ந்தவர் நோன்பு வைக்கமாட்டார், இவர் செய்ததும் சரியே!'' என்று எங்களில் அனைவரும் கருதுவார்கள்.என அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1116 தரம் : ஸஹீஹ்

13.நோன்பின் போது தாகம் மற்றும் வெப்பத்தை தணிக்க குளித்துகொள்வது

قالَ أبو بكرٍ قالَ الَّذي حدَّثني لقد رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ بالعَرْجِ يصبُّ على رأسِهِ الماءَ وهوَ صائمٌ منَ العطشِ أو منَ الحرِّ .

الراوي : بعض أصحاب النبي صلى الله عليه وسلم | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1472 | خلاصة حكم المحدث : صحيح على شرط الشيخين

நபி  ஸல் அவர்களை நோன்பு வைத்த நிலையில் தாகம் மற்றும் வெப்பத்தினை தணிக்க தனது தலையின் மீது தண்ணீர் ஊற்றுவதை நான் பார்த்தேன் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார் என அபூபக்கர் பின் அப்துர் ரஹ்மான் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 1472 தரம் : ஸஹீஹ்

14.நோன்பு திறப்பதை முற்படுத்துதல்

لا تَزَالُ أُمَّتِي على سُنَّتِي مالم تَنْتَظِرْ بفِطْرِها النجومَ . قال : وكان النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم إذا كان صائمًا أمر رجلًا ، فأَوْفَى على شيءٍ ، فإذا قال : غابَتِ الشمسُ أَفْطَرَ .

الراوي : سهل بن سعد الساعدي | المحدث : الألباني | المصدر : صحيح ابن خزيمة | الصفحة أو الرقم : 2061 | خلاصة حكم المحدث : إسناده صحيح

என்னுடைய உம்மத் சுன்னத்திலேயே இருந்து கொண்டிருக்கும் நோன்பு திறப்பதற்கு நட்சத்திரங்களை எதிர்ப்பார்க்காத காலம் வரை மேலும் நபி ஸல் அவர்கள் நோன்பாளியாக இருந்தால் ஒரு மனிதனுக்கு கட்டளையிடுவார்கள் எதிலாவது ஏறிப்பார்த்து சூரியன் மறைந்து விட்டதென்று அறிவித்தால் நோன்பை திறப்பார்கள் என்று சஹல் இப்னு சஹத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா 2061 தரம் : ஸஹீஹ்

15.பிறர் நமக்கு உணவு அளித்தால்

كان إذا أفطرَ عندَ قومٍ قال : أَفْطَرَ عندَكُمُ الصَّائِمُونَ ، و أكلَ طَعَامَكُمُ الأَبْرَارُ ، و تنزلَتْ عَلَيْكُمُ الملائكةُ
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 4677 | خلاصة حكم المحدث : صحيح

உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறக்கட்டும் நல்லோர்கள் உங்களது உணவுகளை சாப்பிடட்டும் வானவர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி ஸல் சஅத் பின் உபைதுல்லாஹ் ( ரலி ) வீட்டில் தமக்கு விருந்து அளித்த போது அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள் என்று அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 4677 தரம் : ஸஹீஹ்

16.வயோதிகளும் ரமளானில் இறைவழிப்பாடு செய்யவேண்டும்

أنَّ رجلًا أتى النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فقال : يا نبيَّ اللهِ إني شيخٌ كبيرٌ عليلٌ يشُقُّ عليَّ القيامُ فأْمُرْني بليلةٍ لعل اللهَ يوفِّقُني فيها ليلةَ القدرِ قال : عليكَ بالسابعةِ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 2149 | خلاصة حكم 
المحدث : إسناده صحيح

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ! நான் பெரும் முதியவன் ; உடல் நிலை சரியில்லாமல் நோயுற்றிருக்கிறேன் ( ரமளானில் எல்லா இரவுகளிலும் ) நின்று வழிபடுவது எனக்கு பாரமாக இருக்கிறது எனவே ( ஏதேனும் குறிப்பிட்ட ) ஒர் இரவில் நின்று வழிபடுமாறு எனக்கு உத்தரவிடுங்கள் அந்த இரவில் ( நின்று வழிபட்டு) மகத்துவமிக்க இரவினைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பளிக்கட்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நபி ஸல் ( ரமளானில் கடைசிப் பத்தில் ) ஏழாம் இரவைப் பற்றிக்கொள்வீராக என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : முஸ்னத் அஹ்மத் 2149 தரம் : ஸஹீஹ்

17.நோன்பிருக்கும் நிலையில் ஒருவர் மரணித்தால்

مَن مَاتَ وعليه صِيَامٌ صَامَ عنْه ولِيُّهُ.

الراوي : عائشة أم المؤمنين | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 1952 | خلاصة حكم المحدث : [صحيح]

யாரொருவர் நோன்பிருக்கும் நிலையில் மரணிக்கிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளியாக இருப்பவர் நோன்பு பிடிக்கவேண்டும் என்று நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் புஹாரி 1952 தரம் : ஸஹீஹ்

18.நோன்பு பெருநாள் தர்மம்

زَكاةَ الفطرِ طُهرةً للصَّائمِ منَ اللَّغوِ والرَّفثِ وطعمةً للمساكينِ من أدَّاها قبلَ الصَّلاةِ فَهيَ زَكاةٌ مقبولةٌ ومن أدَّاها بعدَ الصَّلاةِ فَهيَ صدقةٌ منَ الصَّدقاتِ 

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1609 | خلاصة حكم المحدث : حسن 

ஸதகத்துல் பித்ரு( நோன்பு பெரு நாள் தர்மம் ) வீண் பேச்சுகள்,கெட்ட பேச்சுகள் ஆகியவற்றை விட்டு நோன்பாளியைப் தூய்மைப்படுத்த கூடியதாகும். யார் அதனை தொழுகைக்கு ( பெரு நாள் ) முந்தி நிறைவேற்றுகிறாரோ அது ஒப்பு கொள்ளப்பட்ட ஜகாத் தர்மமாக இருக்கும். யார் அதனை ( பெரு நாள் ) தொழுகைக்கு பிந்தி நிறைவேற்றுகிறாரோ அது சார்தான தர்மமாகவே கணக்கி எடுக்கப்படும் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1609 தரம் : ஹசன்
19.ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைப்பது

من صامَ ستَّةَ أيَّامٍ بَعدَ الفطرِ كانَ تَمامَ السَّنةِ { مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا }

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1402 | خلاصة حكم المحدث : صحيح

யார் ரமலானின் ஈதுப் பெரு நாளுக்குப் பிறகு ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் ஆண்டு முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவர் அது போன்று பத்து நன்மைகளைப் பெறுவார் என நபி ஸல் கூறியதாக தவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1402 தரம் : ஸஹீஹ்
أحدث أقدم