பாவத்தின் இன்பமும் நன்மையின் கஷ்டமும்

ஹராமான இன்பம், அதை செய்யும் போது அசிங்கத்துடன் கலக்கப்பட்டிருக்கும். அது முடிவடைந்த பின்பும் நோவினையையே தரும். அதில் உனக்கு கடுமையான ஆசை ஏற்பட்டால், அது முடிவடைந்து, அதன் அசிங்கமும், நோவினையும் மாத்திரம் எஞ்சியிருப்பதை சிந்தித்து, அவ்விரண்டுக்கும் மத்தியில் ஒப்புநோக்கிப் பார். அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ள ஏற்றத்தாழ்வைப் பார்.

நன்மையின் கஷ்டம் அழகினால் கலக்கப்பட்டிருக்கும். பின்னர் இன்பத்தையும், மனநிம்மதியையும் தரும். நன்மை புரிவது உள்ளத்திற்குப் பாரமாக இருந்தால், அதன் கஷ்டம் நீங்குவதையும், அதன் அழகும், இன்பமும், சந்தோசமும் நிலைத்து நிற்பதையும் சிந்தித்து, அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒப்புநோக்கிப் பார். ஏற்றமானதை தோந்தெடுத்து மற்றையதை விட்டுவிடு. ஒரு செயலை செய்வதில் நீ கஷ்டத்தை உணர்ந்தால் அந்த செயலின் பயன்களில் உள்ள இன்பத்தையும் சந்தோசத்தையும் நினைத்துப் பார். அதை செய்வது உனக்கு இழகுவாகிவிடும். ஹராமான இன்பத்தைத் தவிர்ப்பது உனக்கு கஷ்டமாக இருந்தால், அது ஏற்படுத்தும் நோவினையைப் பார்த்து, அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒப்புநோக்கிப்பார்.

புத்தியின் சிறப்பம்சம் இரு நலவுகளில் முக்கியமானதை அடைய முக்கியமற்றதை கைவிடுவதாகும். மேலும், இரு துன்பங்களில், கடினமானதைத் தவிர்க்க இலகுவானதைத் தாங்கிக் கொள்வதாகும்.

இதற்கு செயற்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவும், அவற்றில் மிகப் பயனுள்ளதை, பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் புத்தியும் அவசியமாகும். யாரிடம் பூரண அறிவும், புத்தியும் உள்ளதோ, அவர் மிகச் சிறந்ததையே தேர்ந்தெடுப்பார். அவ்விரண்டில், அல்லது ஒன்றில் யாருக்கு குறைபாடு உள்ளதோ, அவர் ஏனையவற்றைத் தேர்ந்தெடுப்பார். உலகையும் மறுமையையும் பற்றிச் சிந்திக்கும் ஒருவர், அவ்விரண்டில் எதனையும் கஷ;டப்படாமல் அடைய முயாது என்பதை உறுதியாக அறிந்துகொள்வார். அப்படியாயின், அவ்விரண்டில் பயனுள்ள மற்றும் நிரந்தரமானதை அடைவதற்கான கஷ;டத்தை சுமக்கட்டும்.

-இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)
أحدث أقدم