குர்’ஆனிய அரபி இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை

(குறிப்பு: அரபி இலக்கண மாணவர்களுக்கு தான் இந்த கட்டுரை முழுதாக புரியும்)

அரபி மொழி தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கு, மிகவும் கடினமான பாடம் இரண்டாம் வேற்றுமை [accusative case (mansub)]யின் பல்வகையான உபயோகங்கள் தான். அதை எளிதாகப் புரிந்து கொள்வதற்காக, குர்’ஆனிலுள்ள உதாரணங்களுடன் உங்களுக்காக, கீழே ஒரு சுருக்கமான அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

1. அல் மஃப்’ஊல் ஃபீஹி

இது தர்ஃப் என்றும் அறியப்படுகிறது. இது அநேகமாக வினையுரிச்சொல்லை (‘adverb’) ஒத்ததாக இருக்கிறது. இரண்டு வகைகள் உள்ளன: 
1. காலத்தின் வினையுரிச்சொல் 
2. இடத்தின் வினையுரிச்சொல்.

தர்ஃப் ஸமன்- காலத்தின் வினையுரிச்சொல் [Dharf Zaman (Adverb of Time)]

وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ
இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள். [12:16]

قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۚ
“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; [18:19] தர்ஃப் மகான் –இடம் சார்ந்த வினையுரிச்சொல் 

[Dharf Makan (Adverb of Place)]

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ
அவனே தன் அடியார்களின் மீது அடக்கியாள்பவன், … [6:18]

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَىٰ
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. [20:6]

2. அல் மஃபூல் அல் முத்லக் – இணைச்சொற்களின் இரண்டாம் வேற்றுமை – Al Maf’ool al Mutlaq (cognate accusative)

இது ஒரு வினைச்சொல்லுக்கு அடுத்து வரக்கூடிய தொழிற்பெயர் (verbal noun), அது உருவில் அல்லது சில சமயங்களில் கருத்தில் வினைச்சொல்லை ஒத்திருக்கிறது. 

அதில் மூன்று வகைகள் இருக்கின்றன:

1. வலியுறுத்துவதற்க்காக:

وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا
இன்னும் அல்லாஹ் மூஸாவுடன் ஒரு உரையாடலில் பேசியிருக்கிறான். [4:164]

فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை ஏராளமாக பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- [80:24-26]

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,. [89:21]

2. எண்ணிக்கையை குறிப்பது:

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ
விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; [24:2]

3. அறிவிக்கும் வகை:

وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! [17:23] 

3. மஃப்’வூல் லி அஜிலிஹி – ஒரு காரணத்துக்கான இரண்டாம் வேற்றுமை (The Accusative of Purpose)
இது ‘மஃப்’ஊல் லஹு’ என்றும் அழைக்கப்படுகிறது. வினைச்சொல்லின் செயலுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிவிக்கக் கூடிய தொழிற்பெயர் இது. ஒரு ‘மஃப்’வூல் லஹு’இடத்தில் ‘லி’ என்ற முன்னிடைச் சொல்லைக் கொண்டு நிரப்பினாலும், பொருள் மாறாமல் இருக்கும்.
உதாரணம்:

ضَرَبْتُهُ تَأديباً.
ضَرَبْتُهُ للتَّأديب.
மேலேயுள்ள இரு வாக்கியங்களுக்கும், ‘நான் அவனை ஒழுங்கு படுத்துவதற்காக அடிக்கிறேன்.’ என்பது தான் பொருள்.

குர்’ஆனிலிருந்து உதாரணங்கள்:
وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. [2:207]

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;. [17:31]

يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ
மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; . [2:19]

4. அத்தம்யீஸ் (At Tamyeez)

இது, பொதுவானதைக் குறிப்பிட பயன்படுத்தப்படும், அல்லது, தெளிவின்மையை விலக்கும் ஒரு காலவரையற்ற சொல். உதாரணம்:

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَىٰ بِهِ ۗ
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. . [3:91]

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். [99:7-8]

وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.” [18:34]

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து….. அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” … [41:33]

5. அல் ஹால் – (சூழ்நிலை)

இது யாரைப்பற்றி பேசப்படுகிறதோ அவருடைய மனப்பாங்கு, நிலை அல்லது சூழலை விவரிக்கும் ஒரு கூடுதல் உரிச்சொல் (adjective) (அல்லது ஒரு வாக்கியத்தின் உட்பிரிவாகவும் இருக்கலாம்). ‘எப்படி?’ என்ற கேள்விக்கு பதிலளித்தால், அது ‘ஹால்’ என்பதை அறிந்து கொள்ளலாம்.
உதாரணம்:

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. [89-27-28]

وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. [44:38]

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், [71:28]

أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ
உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? [49:12]
أحدث أقدم