இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் இழப்புக்குள்ளாகிட வேண்டாம்

பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்-ஜவ்ஸிய்யஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கிற ஹதீஸ் புஹாரியில் பதிவாகியிருக்கிறது:

'மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்:

1. உடல் ஆரோக்கியம் 
2. ஓய்வு நேரம்'

'உடல் ஆரோக்கியம்' என்பது அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் மீது பொழியக்கூடிய மிகப் பெறுமதியான அருளாகும், மிகப் பொன்னான பரிசும்கூட. எவரொருவருக்கு இந்த அருட்கொடை வழங்கப்பட்டிருக்கிறதோ, அவர் அதனை நல்ல முறையில் பயன்படுத்துட்டும், பேணிப் பாதுகாத்துப் பயன் அனுபவிக்கட்டும். 

- நூல்: ஸா(Z)த் அல்-மஆத் (4/196)

أحدث أقدم