தூய உள்ளம் - قلب سليم
~~~~~~~~~~~~~~~~~
இன்றைய எந்திர உலகத்திலே மனிதன் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம் என்று சொன்னால் நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்காகவும் அதற்குரிய அனைத்து வழிமுறைகளையும் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது 24 மணி நேரத்தையும் அதை அடைவதற்குரிய பாதைகளைச் செப்பனிட்டு கொண்டிருக்கிறான்,
ஒரு முஸ்லிமின் இறுதியான நோக்கம் அகிராவாக (மறுமை நாளாக) இருக்க வேண்டும் அந்த மறுமை நாளின் பயணத்தின் இறுதி தான் அவன் இவ்வுலகத்தில் மன நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக வேண்டி போராட தொடங்கிய ஆரம்பங்கள் ,அதுதான் இறுதி கட்டமாக தூய உள்ளத்தோடு மறுமை பயணத்தை இலகுவாக முடிப்பதற்கு வழிவகுக்கிறது,
இறைவன் திருமறையில் உண்மையான வெற்றியை பற்றிச் சொல்லும் பொழுது இறைவனிடத்தில் தூய உள்ளத்தோடு போய் சேருவது என்று குறிப்பிடுகிறான்
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ
அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது.
(அல்குர்ஆன் : 26:88)
اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
(அல்குர்ஆன் : 26:89)
عن النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ». متفق عليه
صلاح العمل مرتبط بصلاح القلب، وفساده مرتبط بفساده، يقول الحافظ ابن رجب رحمه الله تعالى: "القوم إذا صلحت قلوبهم فلم يبقَ فيها إرادة لغير الله عز وجل صلحت جوارحهم فلم تتحرك إلا لله عز وجل، وبما فيه رضاه".
أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ، وَأَعْمَالِكُمْ». رواه مسلم
وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ
( الحجر 15:47)
يضغن الحقد و البغض و العداوة والشحناء و و و
مدارج السالكين
இங்கு இறைவன் சொல்லி இருக்கக்கூடிய தூய உள்ளம் என்பது என்ன என்பதை அறிஞர் பெருமக்கள் நமக்கு தரக்கூடிய தகவலைப் பார்ப்போம் வாருங்கள்!!
அல்லாமா இப்னு கசீர் இதற்கு விளக்கம் கூறும் பொழுது உள்ளத்தில் இருக்கும் அழுக்கு இணை வைத்தலை முற்றிலுமாக துறந்தவன் தான் தூய உள்ளம் உடையவன் என்று கூறுகிறார்.
அல்லாஹ் சத்தியமானவன், மறுமை நாள் வந்தே தீரும் ,அல்லாஹ் தான் நாடியவர்களை அப்பொழுது எழுப்புவான் என்ற எண்ணத்தோடு இருப்பவன்தான் தூய உள்ளம் உடையவர் என்று இப்னு சீரின் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் " இலாயிலாஹ இல்லல்லாஹ் ",என்று சாட்சி பகர்வது
முஜாஹித், ஹசன் போன்ற தாபியீன்கள் ஷிர்க் வைக்காமல் இருப்பது,
சயீப் பின் முஸ்அப் சரியான உள்ளம்
கொண்டிருக்கும் இறை நம்பிக்கையாளர் காரணம் நயவஞ்சக இறைமறுப்பாளர்களின் உள்ளம் நோய்வாய் பட்டிருக்கும் , இறைவன் திருமறையில் அவர்கள் உள்ளத்தில் நோய் இருக்கிறது என்று குறிப்பிடுகிறான்.
அபூ உஸ்மான் நைஸா பூரி ரஹிமஹுல்லாஹ்
இறை தூதுவர் காட்டித்தராத பித்அதுகளை விட்டு சிந்தனை தெளிவைப் பெற்று நபிவழியை கடைபிடிப்பது தூய உள்ளத்தை கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்கள்
அல்லாஹ் நம் அனைவருக்கும் தூய உள்ளத்தை வழங்கி மறுமை வாழ்க்கையை அடைவதற்குரிய பாக்கியத்தை தருவானாக
(ஆதாரம்-தப்ஸீர் இப்னு கதீர்
அல்குர்ஆன் : 26:89)
-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி