மூடப்பட்டிருப்பதெல்லாம்...

ஒரு தடவை உமய்யா ஆட்சி தளபதிகளுள் ஒருவரான  ஹஜ்ஜாஜ் பின் யூஸுபிடம் பாரசீக பேரரசன் கிஸ்ராவின் பொக்கிஷங்களில் ஒன்றான பெட்டியொன்று கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது. அதன் பூட்டை உடைத்து திறந்து பார்த்த போது அதனுள் மற்றொரு சிறு பெட்டி இருந்தது.

'இதை விலை கொடுத்து வாங்குபவர் யாரும் இருக்கிறீர்களா?' என ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் அருகில் இருந்தோரிடம் வினவியதும், ஒருவர் முன்வந்து ஐயாயிரம் தீனாரை கொடுத்து அதை பெற்றுக்கொண்டார். 

பெரும் எதிர்பார்ப்புடன் உள்பெட்டியை அவர் திறந்து பார்த்தபோது உள்ளே ஒரு சிறு காகிதம் மாத்திரம் மடிக்கப்பட்டுக் கிடந்தது. வேறு  எதுவும் இருக்கவில்லை. பெருத்த ஏமாற்றத்துடன்  காகிதத்தை பிரித்துப் பார்த்தபோது  பின்வரும் வாசகம்  எழுதப்பட்டிருந்தது.

'தாடி நீளமாக வளர வேண்டுமென விரும்புபவர் தாடியின் கீழ்ப்பகுதியிலிருந்து சீப்பினால் சீவி விடவும்'

படிப்பினை :

'மூடப்பட்டிருப்பதெல்லாம் பெறுமதிக்குரியதல்ல'

நூல் : 'அல்இக்துல் பரீத்' : இமாம் இப்னு அப்தி றப்பிஹீ.

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم