உஸ்மான் ரழி அவர்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நிலைகுலைந்த அலி ரழி அவர்கள்


قال الإمام الذهبي رحمه الله: (وبلغ علياً وطلحة الزبير الخبر، فخرجوا وقد ذهبت عقولهم، ودخلوا فرأوه مذبوحاً، وقال علي: كيف قتل وأنتم على الباب؟!! ولطم الحسن، وضرب صدر الحسين، وشتم ابن الزبير، وابن طلحة، وخرج غضبان إلى منزله) سير أعلام النبلاء سيرة الخلفاء الراشدين: ص: 20

அலீ, தல்ஹா, ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோருக்கு உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் தங்களின் அறிவை இழந்தவர்களாக புறப்பட்டுச் சென்று (உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்) வீட்டுக்குள் நுழைந்தார்கள். 

உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அறுக்கப்பட்ட நிலையில் கண்டார்கள். அப்போது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நீங்கள் வாசலில் இருக்கும் போது உஸ்மான் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்று கூறி ஹசன் (ரழியல்லாஹு அன்ஹு) முகத்தில் அடித்தார்கள். ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய நெஞ்சிலும் அடித்தார்கள். இப்னு ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரைத் திட்டினார்கள். பிறகு கோபத்துடன் தன் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

ஆதாரம் : சியரு அஃலாமின் நுபலா (பக்கம் 20)
أحدث أقدم