மத்ஹபுகள் அவசியமா?


இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத பாமர முஸ்லிம்கள் மட்டுமல்ல, இஸ்லாமியக் கொள்கைகளில் நன்கு கற்றுத் தேறிய உலமாக்களும் கண்மூடித்தனமான வகையில், ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த உலமாப் பெருமக்கள் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை அதாவது ஹனபி அல்லது ஷாஃபி அல்லது மாலிக்கி அல்லது ஹம்பலி என்று ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.  இது ஒரு தவறான கருத்து அல்லது தவறான பரிந்துரை மட்டுமல்ல, இவர்கள் இஸ்லாத்தின் உண்மையான அடிப்டைக் கொள்கைகளையே அறிந்து கொள்ளாத, அதைப் பற்றியே சிந்தனையே இல்லாத அவர்களின் அறியாமையையே காட்டுகின்றது.


குறிப்பிட்ட மத்ஹப்புகளை பின்பற்றுவது:

ஒவ்வொரு மத்ஹப்பும் அவற்றைப் பின்பற்றி இருக்கும் அந்தந்த மத்ஹப்பைச் சார்ந்த அறிஞர்களின் தனிப்பட்ட மற்றும் சொந்த அபிப்ராயங்களையும், தீர்ப்புகளையும், சட்டம் சார்ந்த வகையில் அவர்களின் மொழிபெயர்ப்புக்கள் மற்றும் அதன் தீர்வுகள் ஆகியவற்றில்,   அவரவர்களுக்கென தனித்தனித் தீர்வுகளையும், அபிப்ராயங்களையும் கொண்டவைகளாக இருக்கின்றன. அல்லாஹ்வும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் இத்தகைய பல்வேறுபட்ட கருத்துக்களையும், தீர்வுகளையும் கொண்ட சட்டங்களை  பின்பற்றி நடக்கச் சொல்லவில்லை. பல்வேறுபட்ட பிரச்னைகளில் அதற்கான தீர்வுகளில் ஒவ்வொரு இமாமும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தையும், அதற்கான தனிப்பட்ட காரணங்களையும் தந்து பல்வேறு தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்கள். ஆனால் தான் வழங்கியுள்ள அத்தகைய தன்னுடைய தீர்ப்புக்களில் உண்மை இல்லை என்று அவர்கள் அறியும்படி நேர்ந்தால், தங்களுடைய சொந்த அபிப்ராயங்களை மறந்து, அவர்களுடைய தீர்ப்புக்களை மறு ஆய்வு செய்திருக்கின்றார்கள், உண்மைகளை ஒப்புக் கொண்டும் இருக்கின்றார்கள். அவர்களுடைய பார்வைக்கு உண்மையான ஆதாரங்கள் வந்தபின்பு, தன்னுடைய கருத்தை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்ற தயக்கம் எந்த நேரத்திலும் அவர்களிடமிருந்து வந்ததில்லை. இது தான் இமாம்களின் உண்மையான நிலையாக இருந்திருக்கின்றது. இது அவர்களுடைய ஈமானின் வெளிச்சத்தைப் பிரதிபலிப்பது போல் உள்ளது.

ஒருவர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார் என்றால் அவர், அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும், 5 வேளைத் தொழுகையையும், ஜக்காத் வழங்குவதையும், ரமலான் மாதம் நோன்பிருப்பதையும், இயன்றால் ஹஜ் செய்வதையும் ஆகிய இஸ்லாத்தின் இந்த முக்கிய பர்ளான கடமைகளை மட்டும் ஏற்று அவற்றைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளார். இவ்வாறு இருக்கும் போது, ஈமானின் முக்கிய இந்தக் கடமைகளில் சிறிதும் சம்பந்தம் இல்லாத இந்த மத்ஹப்புகளை (அதாவது ஹனபி, ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று) பின்பற்ற வேண்டும் என்பது தேவையற்றதும் மற்றும் அவசியமில்லாததும் ஆகும். மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ளபடி அல்லாமல் ஒருவர் தன்னுடைய மன இச்சையை மட்டும் பின்பற்றி உண்மை இன்னது தான் எனத் தெரிந்தும் அவர் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட மத்ஹபுகளைப் பின்பற்றுவார் எனில், இஸ்லாத்தின் பார்வையில் அவர் தீமைகளைச் செய்து கொண்டிருப்பவராகவும், தவறிழைப்பவராகவும், பாவங்களைச் செய்து கொண்டிருப்பவராகவும் கருதப்பட்டு, யார் இஸ்லாத்தைக் கூறு போட்டு பல்வேறு பிரிவுகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்களோ அத்தகையவர்களில் ஒருவராக இவர் நடத்தப்படுவார். இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனிலே தன்னுடைய மார்க்கத்தை பல்வேறு பிரிவுகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றவர்கள் பற்றி கடுமையான முறையில் எச்சரிக்கையும் செய்துள்ளான். இதைப்பற்றி  இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும் போது,

{إن الذين فرقوا دينهم وكانوا شيعاً لست منهم في شيْءٍ }(الأنعام:159)
நிச்சயமாக தங்கள் மார்க்கத்தை(ப் பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரே அத்தகையோர் - அவர்களின் எக்காரியத்திலும் நீர் இல்லை: (அல் அன்ஆம் : 159).

மேலும் திருமறையில் வேரொரு இடத்தில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :
{ولا تكونوا من المشركين .  من الذين فرقوا دينهم وكانوا شيعا، كل حزب بما لديهم فرحون}
மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்து, (பல) பரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிட வேண்டாம் அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர். (அர் ரூம் : 31,32).

மேலே நாம் பார்த்த வசனங்களிலிருந்து, இஸ்லாத்தில் பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அல்லது இன்று நடைமுறையில் இருப்பது போல, ஏதாவது ஒரு மத்ஹபை ஏற்றுச் செயல்பட்டுக் கொள்வதற்கும் சிறிதும் இடமில்லை என இறைவனால் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.  இந்த மத்ஹபுகளை விட்டு விட்டு, தெளிவான நடைமுறைகளைக் கொண்ட முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவது எந்தளவு மதிப்பு மிக்கது என்பதைப் பற்றித் திருமறை இவ்வாறு கூறுகின்றது:

{قل هذه سبيلي أدعوا إلى اللهِஇ على بصيرةٍ أناْ ومَنِ اتبعنى இ وسبحن الله وما أناْ من المشركين}
(நபியே!) நீர் கூறுவீராக: இதுவே எனது (நேரான) வழியாகும்: நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்: தெளிவான ஆதாரத்தின் மீதே நானும், என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம்: அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்: நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (யூஸுஃப் : 108).

மேலும், ஒவ்வொரு மத்ஹபையும் நாம் ஆராய்வோமானால், எல்லா மத்ஹபுகளிலும் ஏற்றத் தாழ்வுகளும், மற்றும் மத்ஹப்புகளுக்குள் பல்வேறு முரண்பாடுகளும் காணப்படுகின்றன. அந்த ஏற்றத்தாழ்வுகளிலும், முரண்பாடுகளிலும் கருத்துவேறுபாடு கொண்டவர்களாக, முஸ்லிம்களில் ஒவ்வொரு மத்ஹபைச் சார்ந்தவரும் தன்னுடைய மத்ஹப்பினுடைய கருத்துத்தான் சிறந்தது என்று கூறி, விவாதங்களுக்குள் இறங்கி, ஒவ்வொருவரும் தான் ஒரு முஸ்லிம் என்பதை மறந்து, தான் ஒரு உடல் போலச் செயல்படவேண்டும் என்பதை மறந்து, சகோதரத்துவத்துடன் வாழ இயலாமல் பல்வேறு அணியாகப் பிரிந்து வாழ்கின்றார்கள். இவ்வாறு பல்வேறு பிரிவுகளாகச் செயல்படுவதனால் அடையப் போகும் தீமைகள் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையில் கூறும் போது :

{ولا تنـزعوا فَتَــفشلوا وتذهب ريحكمஇ واصبـرُوا இ إن الله مع ا لصـبرين}
அன்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள் : மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள்: மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்: ஆகவே நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ், பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் அன்ஃபால் : 46).

மேலும், பல்வேறுபட்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் இறைவன் நபி முஹம்மது (ஸல்) அவர்களது வழி முறைகளை மட்டும் பின்பற்றி வாழச் சொல்லி, நமக்கு அறிவுறுத்தி இருக்கும் போது, இறைவனும் அவனது தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களும் காட்டித் தராத வழியைப் பின்பற்றுவது என்பது ஒரு வழிகேடேயாகும். அத்தகைய வழிகேட்டில் செல்லாது முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்து வாழுமாறு இறைவன் தன்னுடைய திருமறையிலே முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றான்.

{واعتصموا بـحـبـل الله بِـجَـمِـْيعًا وَلا تَفَرَقُوْ}
மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: (உங்களுக்குள் கருத்து வேறுபட்டுப்,) பிரிந்து விட வேண்டாம்: (ஆலு இம்ரான் : 103).

இஸ்லாத்தின் உண்மையான அடிப்படைக் கொள்கை.

;இயற்கையான உண்மையான இஸ்லாமானது எதன்பால் அமைந்திருக்கின்றதென்றால், இறைவன் அருளிய குர்ஆனின் மீதும், அவனது தூதர் நபி முஹம்மது (ஸல்)  அவர்களது வாழ்வியல் நடைமுறைகளான ஹதீஸுகளின் (சுன்னா) மீதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டும் தான் முஸ்லிம்களாகிய நாம் நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டிய ஆதார அடிப்படைகளாகும். முஸ்லிம்களுக்கிடையே ஏதாவது ஒரு பிரச்னையில் பிணக்கு அல்லது கருத்துக்களில் முரண்பாடுகள் ஏற்பட்டால், அந்த முரண்பாட்டைக் கலைவதற்கு நாம் மேற்கண்ட இரண்டிலும் இருந்து தான் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட இந்த கருத்துக்களில் இருந்து எவர் மாறுபாடு கொண்டு, இறைவன் அருளிய குர்ஆனின் மீதும், அவனது தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களது வாழ்வியல் நடைமுறைகளான ஹதீஸுகளில் (சுன்னா) இருந்தும் தன்னுடைய கருத்துமாறுபாடுகளுக்கு வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர், உண்மையான முஸ்லிமாக இருக்க மாட்டார்.

{فلا وربك لا يومنون حتى يحـكموك فـبما شجـر بينهم ثم لا يجـدوا في أنفـسهم حرجاً مما قضيت ويسلموا تسلماً}
ஆனால், உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (அன்னிஸா : 65)

மேலும் எந்த இமாமும் என்னுடைய மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. மாறாக அனைத்து இமாம்களும், நாங்கள் எங்கிருந்து இந்த கருத்துக்களை (உங்களுக்கு எடுத்துத் தந்துள்ளோமோ) பெற்றோமோ அதிலிருந்தே நீங்களும் (உங்களது வழிகாட்டுதல்களை) எடுத்துக் கொள்ளுங்கள் என்றே கூறியுள்ளனர்.

خذوا من حيث أخذنا
“எங்கிருந்து நாங்கள் பெற்றோமோ அங்கிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்”.

இதையே வேறுமாதிரியாகச் சொல்வதாக இருந்தால் குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றுங்கள் என்பதுதான் இதன் பொருளாகும்.  இமாம்களின் பெயரால் கூறப்படுபவைகளும், அவர்களின் பெயரால்  பின்பற்றப்படுகின்ற நடைமுறையில் இருக்கும் மத்ஹபுகளும் சரியான இஸ்லாமியக் கொள்கைகளை அல்லாது மாற்றுக் கருத்துக்களை ஏராளமாகக் கொண்டுள்ளன என்பது, இமாம்களுக்குப் பின்னர் வந்த ஏராளமான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களாகும்.  இன்று அவர்களின் பெயரால் கூறப்படுபவைகளும், நாம் பார்க்கக்கூடியவைகளும் அவர்களது நடைமுறைகளோ அவர்களது சொந்தக் கருத்துக்களோ அல்ல என்பது மட்டுமல்ல மேற்கண்ட இமாம்களால் கடுமையாக மறுக்கப்பட்ட செயல்களும், நடைமுறைகளும் ஆகும்.

கடந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் யாவரும், மார்க்கத்தில் தீராத பற்றும் அதன் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றவர்களாகத் திகழ்தவர்களாக இருந்தார்கள். மேலும் தாங்கள் அறிந்து கொண்ட அந்த ஞானத்தின் மூலம், ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும் வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது, மக்களையும் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்கள். மேலும் கீழ்கண்ட புகழ்பெற்ற இமாம்களும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுமான இமாம் ஹனீஃபா, இமாம் மாலிக். இமாம் ஷாஃபிஇ, இமாம் அஹ்மத், சுஃப்யான் அத்தௌரி, சுஃப்யான் பின் உயய்னா, ஹஸன் பஸரி, காதி அபூ யூசுஃப், முஹம்மது பின் ஹஸன் ஸய்பானி, இமாம் அவ்ஸாய், அப்துல்லா பின் முபாரக், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இன்னும் ஏராளமான மார்க்க அறிஞர்களும் இஸ்லாத்தில் அதன் விவகாரங்களில் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராக நூதனங்கள் அல்லது வழிகேடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு எதிராக மக்களை எச்சரிக்கை செய்தே வந்துள்ளார்கள் என்பது மிகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மேலும், மனிதர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து, மற்ற மனிதர்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே: அது போல் நாம் இன்று பின்பற்றக் கூடிய இமாம்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் தங்கள் கருத்துக்களில் பிழையானவற்றை தாங்களே அறியாத வண்ணம் செய்திட வாய்ப்பும் உண்டு. முன்னரே நாம் பார்த்தோம், மனிதர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து, மற்ற மனிதர்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே, என்ற நிலையில் பாவமே செய்யாத, இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் நேர்வழியைப் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்களது வழியை விடுத்து ஒருவர் பாவங்கள் செய்து விடக் கூடிய, தங்களையும் அறியாமல் தவறிழைத்து விடக் கூடிய மனிதர்களைப் பின்பற்றுவது குறித்து மேலே நாம் கண்ட இமாம்கள் அனைவரும் மக்களை எச்சரிக்கை செய்தே வந்துள்ளனர். ஆனால் இறைவனுக்குப் பயந்து, நல்லொழுக்கங்களைப் பேணும் மார்க்க அறிஞர்கள் வழங்கும் குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமில்லாத கருத்துக்களைப் பேணுவதில் தவறில்லை.

எனவே, எதுவானாலும் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமில்லாமல் இருக்குமானால் அவற்றை ஏற்றுக் கொள்வதும், மேற்கண்ட இரண்டுக்கும் மாற்றமான வகையில் இருக்கக்கூடிய எதுவானாலும் அவற்றைப் புறக்கணிப்பதும் தான் உண்மையான ஈமானுக்கு அடையாளமாகும்.

இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள், மண்ணறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றாரே அவருடைய கருத்தைத் தவிர, மற்ற  எல்லோருடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்யலாம். இதைக்கூறும் போது இமாம் மாலிக் அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மண்ணறையைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும், இவர் மட்டுமல்ல எல்லா இமாம்களும் மற்றும் மார்க்க அறிஞர்களும், சுயஅறிவு இல்லாமல் கண்மூடித்தனமாக ஒருவரைப் பின்பற்றுவதைப் பற்றி மக்களை எச்சரிக்கை செய்தே வந்துள்ளனர். மேலும் இறைவனும் தன் திருமறையில் நெடுகிலும் கண்மூடித்தனமாக ஒருவரைப் பின்பற்றுவதையும், அவ்வாறு செய்யக் கூடியவர்களையும் கடுமையாக எச்சரிக்கை செய்தும் இருக்கின்றான். மார்க்க அறிஞர்களையோ அல்லது முன்னோர்களையோ எந்தவித சிந்தனையும் இன்றி, குருட்டுத்தனமாகப் பின்பற்றிய எத்தனையோ சமுதாயங்கள் என்ன நிலமையை அடைந்தன என்பதை வரலாறு தன்னுள் அவற்றை எல்லாம் பதிவு செய்து வைத்து, அவற்றை இன்றும் சாட்சியமாக்கியும் வைத்துள்ளது.

எங்களின் மார்க்க சம்பந்தமான சொல் அல்லது செயல் மற்றும் அது சார்ந்த தீர்ப்புக்கள் யாவும் ஏற்று நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டதோ அல்லது அதைக் கொண்டு நியாயத் தீர்ப்புக்கள் வழங்க முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடியதும் அல்ல, அந்த சொல்லும், செயலும் நல்ல முறையில் புரிந்து கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகள் இருந்தாலன்றி, அவற்றை எடுத்துச் செயல்படக் கூடாது என்றே நான்கு இமாம்களும் கூறியுள்ளனர். மேலும் கீழ்க்கண்டவாறு தெளிவாகவும் கூறியுள்ளனர் : அதாவது,

إذ  صح الحديث فهو مذهبي
உங்களுக்கு ஒரு ஆதாரமான ஹதீஸ் கிடைத்து விட்டால்,  அதுவே என்னுடைய மத்ஹபுமாகும்.

அதாவது, சரியான ஒரு ஹதீஸ் கிடைத்து விட்டால், இமாம்களின் கருத்தானது அந்த மாத்திரத்திலேயே செயல் இழந்து விடுகின்றது, அந்த ஹதீஸுகளின் முன்னால் இமாம்களின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது என்பது மட்டுமல்ல அந்த இமாம்களும் அதை ஏற்றுச் செயல்படும் விதத்தில் அவர்களது ஈமானும் அமைந்திருந்தது என்பதை கீழே அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களே சாட்சியங்களாக அமைந்துள்ளன.

{إذا قلت قولاً فاعرضوه على الكتب والسنة فإن وافقهما فاقبلوه وما خالفهما فردوه}
“நாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை குர்ஆன் மற்றும் சுன்னாவின் துணை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துங்கள், எங்கள் கருத்துக்கள் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையதாக இருந்தால் அவற்றை ஏற்றுச் செயல்படுங்கள், மாறாக மாற்றங்கள் ஏதும் இருப்பின் எங்களது கருத்துக்களை ஒதுக்கித் தள்ளி விடுங்கள்”,

என்று அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்க இன்று நமது முஸ்லிம் சமுதாயம் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக மத்ஹபுச் சட்டங்கள் இருந்தாலும், அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருவது மிகவும் வெறுக்கத்தக்க வழிகேடாகும் என்பதில் ஐயமில்லை.

கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் : மேற்கண்ட இமாம்களை முட்டாள்களாக ஆக்கும் செயல்

இமாம்களுக்குப் பின்னர் வந்தவர்களான மார்க்க அறிஞர்கள், சிந்தனையாளர்கள,;    இஸ்லாத்தைப் பற்றி தங்களுக்கிருந்த குறைவான அறிவைப் பயன்படுத்தி, அதன் சட்ட திட்டங்கள் பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை எழுதிக் குவித்திருப்பதின் மூலம்,  குறைவான அறிவைக் கொண்டு அவர்கள் எழுதிக் குவித்திருக்கும் புத்தகங்களைப் பற்றி அறியாத பாமர மக்கள், இவர்கள் எழுதிக் குவித்திருக்கும் மலை போன்ற புத்தகங்களே இவர்களது அறிவின் உச்சத்திற்கு சாட்சி என நினைத்து, இந்த எழுத்தாளர்களை தங்களது மார்க்க விசயங்களில் தீர்ப்புச் சொல்லக் கூடிய தனித்துவம் வாய்ந்தவர்களாக மக்கள் நினைக்கத் துவங்கினர். எனவே இந்தக் குருட்டு நம்பிக்கையின் காரணமாக மக்கள் ஏதாவது ஒரு மத்ஹபைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தங்கள் மார்கக் கடமைகளை நிறைவேற்றும் அதே வேளையில் மற்ற மத்ஹபுகளில் கூறப்பட்டிருக்கும் விசயங்கள் இஸ்லாத்திற்கு ஏற்புடையதாக இருப்பினும் அவற்றை வெறுத்து ஒதுக்கி விடுகின்றனர். அவ்வாறு ஒரு மத்ஹபில் இருந்து கொண்டு இன்னொரு மத்ஹபைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டதாகவும் ஆக்கி வைத்துள்ளனர். சுருங்கச் சொல்லப் போனால், யாருக்கு இந்தத் திருமறை அருள் செய்யப்பட்டதோ, அத்தகையவரை இமாமாக ஏற்று, அவரது சொல் மற்றும் செயலை வரிக்கு வரி பின்பற்ற வேண்டுமோ அந்த இமாமமை (முஹம்மது நபி (ஸல்) அவர்களை)ப் பின்பற்றாமல், மேற்கண்ட குறைவான இஸ்லாமிய அறிவு பெற்ற இமாம்களையும், அறிஞர்களையும் பின்பற்றி, அவர்களை நபிமார்களுக்கு சமமாக தூக்கி வைத்திருக்கின்றார்கள். தங்களை மத்ஹபுகளின் அறிஞர்கள் என்று பீற்றிக் கொண்டு திரிபவர்கள், அந்த இமாம்கள் எடுத்து  வைத்த கருத்துக்களின் தன்மை பற்றி அறிவார்களா? அல்ல! இவர்கள் அந்த இமாம்களின் பெயரை விடுத்து வேரொன்றையும் இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதில் மிகவும் கொடுமையான செயல் என்னவென்றால், சில அறிஞர்கள் மார்க்க விசயங்களிலே ஏதாவது ஒரு கருத்துச் சொல்லும் போது, அந்தக் கருத்தைத் தாங்கள் இமாம்களின் தீர்ப்புக்களிலிருந்து பெற்றதாக அறிவித்து விடுகின்றார்கள். இவர்களைப் பின்பற்றக் கூடிய மக்களும், இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட அந்தச் செய்தியை அதன் ஆதாரங்களைத் தேடி அதை ஒப்பிட்டுப்பார்க்காமல், அந்தக் கருத்து இமாம்களின் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றதா அல்லது இமாமுக்கும் அந்தக் கருத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? என்பதைக் கூட ஆராயாமல், இமாம்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அந்தச் சட்டத் தீர்ப்புக்களை கண்மூடித் தனமாகவும், அவை யாவும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட இடைச் செறுகல்கள், வழிகேடுகள் என்பதைக் கூட அறியாமல் மக்களால் காலம்காலமாக இமாம்களின் பெயரால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இத்தகைய வழிகேடுகளிலிருந்து இமாம்கள் அப்பாற்பட்டவர்கள் என்பது தான் உண்மை. இத்தகைய இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபாடான செயல்கள் யாவும் முஸ்லிம் உம்மத்தினுடைய ஒற்றுமையைச் சீர்குலைத்து, அவர்களுக்குள் ஒற்றுமையின்மையால் அவர்கள் வாழும் சமூகத்தின் முன்பு இழிவானவர்களாகவும், சமூகச் சூழலில் தரமிழந்து, வளர்ச்சி என்பது இல்லாமல் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பொடுபோக்குத்தனமான செயலானது முஸ்லிம்களை ஓரணியில் திரளவிடாமல், ஒருவருக்கொருவர் பகையாளிகளாகவும், வெறுப்புடன் நோக்கக் கூடியவர்களாகவும், தங்களுக்கிடையே கெட்ட எண்ணங்களை வளர்த்துக் கொணடவர்களாகவும், பகைமை பாராட்டுபவர்களாகவும்  மட்டுமல்லாது, பல்வேறு பிரிவுகளாகவும் அவர்களை ஆக்கியும் வைத்துள்ளது. ஒவ்வொருவரும் இன்னொரு நபரைப் பார்த்து மத விவகாரங்களில் புதினங்களை அல்லது வழிகேடுகளை உருவாக்குபவர்களாகக் குற்றம் சாட்டிக் கொண்டு, மிகச் சின்னச்சின்ன விவகாரங்களில் கூட ஒருவர் இன்னொருவரை குற்றம் சாட்டி எதிர்த்துக் கொண்டு, இதில் விவகாரம் முற்றிய நிலையில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பார்த்துச்  சொல்லக் கூடாத வழிகேடன், நிராகரிப்பாளன் என்பன போன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் காண்கின்றோம். இந்த பிரிவு மனப்பான்மை அங்கு இங்கு என இல்லாமல் எல்லா நிலைகளிலும் நன்கு வேர் விட்டு வளர்ந்துள்ளது. முஸ்லிம்களிடம் புகுந்து வளர்ந்து விட்ட இந்த மாதிரியான பிரிவு மனப்பான்மையானது, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்து சென்ற ஒரு பொன்மொழியை மெய்ப்பிப்பதாக உள்ளது. அதாவது,

{ستفترق أمتي ثلآثاً وسبعين فرقة كلكها في النارٍ إلا واحدة} قيل من هم يارسول الله؟ قال: (الذين على ما أنا عليهِ وأصحابي)
என்னுடைய உம்மத்தவர்கள் 73 பிரிவாகப் பிரிவார்கள். இவர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள், ஒரு பிரிவாரைத் தவிர என்று முஹம்மது (ஸல்) கூறினார்கள். அப்பொழுது ஒருவர்,  “யார் அந்த (ஒரு) பிரிவினர், யா! ரசூலுல்லாஹ்?” என்று கேட்க,   யார் என்னுடைய வழிமுறையையும், என்னுடைய தோழர்களின் வழிமுறையையும் பின்பற்றினார்களோ அவர்களைத் தவிர என்று,  முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்று முழு முஸ்லிம் உம்மத்தும் பல்வேறு பிரிவுகளாகி நிற்கின்றது. ஒருவர் தன்னை ரஃப்தி என்றும், காரிஜி என்றும் அழைத்துக் கொள்கின்றனர். மேலும், சிலர் தங்களை ஷியாக்கள் என்றும் செய்யிதி என்றும், ஸகரி என்றும், மேலும் சிலர் பட்டானி மற்றும் இஸ்மாயிலி என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களைப் போல சிலர் தங்களை சுன்னி ஜமாத் என்றும், மாதுரிதி, அஷாரி என்றும், ஷாஃபி என்றும், மாலிக்கி. ஹம்பலி, ஹனஃபி என்றும் இன்னும் பல வகைகளிலும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். இவற்றையும் தாண்டி இன்னும் ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் ஒருவருக்கொருவர் தங்களை முட்டாள்தனமாகவும், கெட்ட வார்த்தைகளைக் கொண்டும் பரிகசித்துக் கொண்டு, தான் பின்பற்றக்கூடிய மத்ஹபு தான் சிறந்தது, மற்ற அனைத்து மத்ஹபுகளும் கேடு கெட்டவைகள், வழிதவறிவிட்டவைகள் என்ற எண்ணம் கொண்டு, ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டிருக்கும் செயலை எல்லா பிரிவினரும் செய்து கொண்டு, இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டுப் பல பிரிவினராகப் பிரிந்து விடாதீர்கள் என்ற அறிவுரையையும், முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த எச்சரிக்கையையும் மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உதாரணமாக, ஹனபி மத்ஹபுக்காரர்களும் ஷாபியாக்களும் ஒருவருக்கொருவர் தங்களைப் பொது  எதிரியாகப் பாவித்துக் கொண்டிருப்பதை எங்கும் காணலாம். இவர்கள் தங்களுக்குள் ஒருவர் இன்னொருவரை முஸ்லிம் அல்லாதவர்களைப் போலக் கருதி, தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும், ஹனபி மத்ஹபுக்குள்ளேயே ஹனபி பெரல்வி மற்றும் ஹனபி தேவ்பந்தி என்ற இரு பிரிவு உண்டு. இத்தகைய பல்வேறு பிரிவுகள் இஸ்லாத்தில் இல்லாதவைகளாகும். இவை யாவும் மாற்று மத மற்றும் பிற நாட்டுக் கலாச்சாரம் மற்றும் தத்துவங்களின் தாக்கத்தினால் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டவைகளாகும். இவை பெரும்பாலும் கிரேக்க, ஜுடாயிஸம், பௌத்தம், சிலை வணங்கிகள் மற்றும் இந்து மதக் கலாச்சாரம் மற்றும் தத்துவங்களிலிருந்தும் அதில் நட்சத்திரங்களை வைத்து குறி சொல்லக் கூடியவர்களாலும் இஸ்லாத்துக்குள் நுழைக்கப்பட்டவைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவைகளில் உதாரணமாக கெட்ட ஆவிகளின் மீது நம்பிக்கை கொள்வது, தன் மீது ஆவி வருவதாகவும் கூறிக் கொள்வது, மேலும் இந்தக் கெட்ட ஆவிகளின் தீங்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவைகளுக்காக கட்டடங்கள் கட்டுவதும், அவைகள் கூறக் கூடியவைகளைப் பின்பற்றுவதும் அல்லது அவைகளுக்காக கல்லறைகள் அல்லது கப்றுகளை ஏற்படுத்துவதும், அந்தக் கல்லறைகளை வணங்குவதும், அவற்றை வலம் வருவதும், அவற்றிடம் தங்களது தேவைகளைக் கேட்பதும், இன்னும் அவற்றின் பெயர் சொல்லப்பட்டு மந்திரித்த தாயத்து, தகடு ஆகியவற்றை அணிவதும் அல்லது வீட்டில் மாட்டி வைத்திருப்பதும், இன்னும் இது போன்ற எண்ணற்ற மௌட்டீகப் பழக்கங்கள், இந்த பல்வேறு பிரிவுகளினால் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளன என்பது அவர்கள் எத்தகைய வழிகேடுகளில் உள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.

இந்த பிற மதக் கலாச்சாரங்கள் யாவும் புதிதாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டவர்களால் இஸ்லாமியக் கோட்டைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களால் இந்தக் கருத்துக்கள் செல்வாக்குப் பெற்று வளர ஆரம்பித்தன. அவர்கள் இஸ்லாம் என்னும் கோட்டைக்குள் நுழைந்தார்களே ஒழிய, இஸ்லாம் வெறுக்கும் மௌட்டீகப் பழக்கவழக்கங்களை தங்களிடமிருந்து அப்புறப்படுத்தி விடவில்லை. இவர்கள் தங்களை இஸ்லாமிய ஆன்மீகவாதிகளாக தங்களைக் காட்டிக் கொண்டும், தங்கள் மீது இஸ்லாமியப் போர்வையைப் போர்த்திக் கொண்டும், இஸ்லாத்தைக் களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல், தங்களது கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும், இஸ்லாத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தி வந்தனர். இஸ்லாமானது தன்னுடைய ஆரம்ப நாட்களில் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளை தன்னுடைய கொள்கையின் மூலம் வெற்றி கொண்டிருந்த போது, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தினுள் இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு இஸ்லாத்தின் கொள்கையினால் கவரப்பட்டு இஸ்லாத்தினுள் தங்களை இணைத்துக் கொணடவர்களுடன்,   தங்களது வெறும் வாய் வார்த்தைகளைக் கொண்டு பலரும், பல கலாச்சாரம் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் வேறு வழியில்லாது தங்களை இஸ்லாத்தினுள் இணைத்துக் கொண்டனர். இவ்வாறு முனாஃபிக்குகளாக இஸ்லாத்திற்குள் வந்தவர்கள் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தியதன் மூலம் தங்களுடைய தீய எண்ணங்களையும் சாதித்துக் கொண்டார்கள். ஏனெனில் இஸ்லாத்திற்கு வெளியே இருப்பது கூட அவர்களுக்கு அன்றைய நாளில் மிகவும் சிரமமானதொன்றாகவே இருந்தது. இவர்கள் தங்களது நோக்கத்தில் வெற்றி பெறும் வரை தங்களை இஸ்லாத்தின் ஆதரவாளராகவே காட்டிக் கொண்டார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகச் செய்துவிட்ட துரோகங்கள் மக்களால் புரிந்து கொள்ளப்படாமல், இவர்களின் வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே வேளையில் இஸ்லாமும் அதன் கொள்கைகளும் மக்களது மனங்களிலிருந்தும், அன்றாட வாழ்க்கையிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக இஸ்லாத்திற்கு எதிரான கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் மக்களின் செயல்களில் பரிணமிக்க ஆரம்பித்தன. இஸ்லாத்தின் வெற்றியானது ஒரு நிலையை அடைந்த போது, தமது அன்றாட வாழ்வில் கடைபிடித்து வர வேண்டிய இறைமறைக் குர்ஆனின் போதனைகள் மக்களிடம் இருந்து விடை பெற்று, முக்கியமான சந்தர்ப்பங்களில், விசேஷமான நாட்களில் மட்டும் குர்ஆனை எடுத்து வைத்து ஓதக் கூடிய சடங்கு முறையில் அமைந்த ஒன்றாக மாறிவிட்டன.


சாட்சி சொல்லும் வரலாறு

;இஸ்லாத்தை முஸ்லிம்கள் அதன் தூய வடிவில் தங்களுடைய வாழ்க்கையின்  அனைத்து நிலைகளிலும் கடைபிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் இந்த முஸ்லிம் உம்மத்தானது இந்த உலகின் தலைமைப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் பெற்று, அவர்கள் எங்கெங்கெல்லாம் தங்கள் கால்களைப் பதித்தார்களோ அங்கெல்லாம் வெற்றியானது அவர்களது கால்களில் வந்து முத்தமிட்டது. ஏனென்றால் அவர்கள் தங்கள் சொல், செயல் என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் மனங்களில் இறைமறைக் குர்ஆனும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் ஆட்சி செய்து வந்தன. இன்னும் சொல்லப் போனால் அவர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் இஸ்லாம் ஓடிக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் அவர்கள் ஏக இறையோனாகிய அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டு, தங்களது வாழ்வில் அவற்றை முழுமையாகப் பின்பற்றி, அதன் தூதை எங்கெல்லாம் எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்தத் தூதை ஏற்றுக் கொண்டு, தங்களது மனங்களிலும், உலக நடைமுறைகளிலும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை இஸ்லாத்திற்கு வழங்கினார்கள். தங்களது அனைத்து செயல்களிலும் அவர்கள் இறைவனையும், அவனது தூதரையும் கண்டார்கள். எனவே, ஏக இறையோனாகிய அல்லாஹ்வும் அந்த சென்று போன உம்மத்திற்கு வெற்றிகளைக் குவித்துத் தந்தான். அந்த வெற்றியானது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் மட்டும் நின்று விடவில்லை. மாறாக, நேர்வழி காட்டப்பட்ட நான்கு கலீபாக்களின் ஆட்சியிலும் இது தொடர்ந்தது.

என்றைக்கு இந்த முஸ்லிம்கள் அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் புறக்கணித்து விட்டு, திருமறைக் குர்ஆனையும், முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளையும், கட்டளைகளையும் மறந்து தங்கள் வாழ்வில் வழிகாட்ட இஸ்லாம் தவிர்த்து ஏனைய கொள்கைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்து, தங்களை வழிகேட்டிற்குள் இட்டுச் சென்று விட்டார்களோ அன்றைக்கே இறைவனும் இந்த சமுதாயத்திற்கு வழங்கி வந்த வெற்றியையும் நிறுத்திக் கொண்டான். ஆட்சியும், அதிகாரமும், கௌரவமும் முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  இஸ்லாத்திற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன, அந்த மாற்றங்களில் ஒன்றாக இந்த மத்ஹபுகள் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்பட்டு, அவை யாவும் இஸ்லாத்தின் விரோதிகளாலும், இஸ்லாத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு முனாஃபிக்குகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களாலும் மிகவும் ஆதரிக்கப்பட்டு, ஒவ்வொரு முஸ்லிமும் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்த சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது.  இந்த மத்ஹபுகள் யாவும் மிக முக்கியமான மூன்று தலைமுறைகளின் போது ஏற்படவில்லை. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களின் இறப்பிற்குப் பிந்தைய அவர்களின் தோழர்களாகிய நான்கு கலிபாக்களின் ஆட்சிக் காலத்திலோ அல்லது அந்தத் தோழர்களைப் பின்பற்றிய தாபியீன்களின் காலத்திலோ உண்டாகவில்லை. ஏனெனில் இவர்கள் யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்றவர்களும், அப்படிப் பாடம் பயின்றவர்களிடம் நேரடியாக இஸ்லாத்தை கேட்டுத் தெரிந்து கொண்டவர்களுமாகிய மேற்கண்ட மூன்று தலைமுறைகளும் இருந்தனர். இவர்களுக்குப் பின் வந்தவர்கள் இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு செயலுக்கும் மறுமை நாளிலே இறைவனால் நற்கூலி வழங்கப்படுகின்றது என்ற கொள்கையைக் கொண்டவர்களாக, உண்மையிலேயே இவர்கள் நல்அமல்கள் செய்வதற்குப் பதிலாக தங்களை வழிகேட்டிற்கு இட்டுச் சென்று விட்டார்கள். நேர்வழிபெற்ற உலமாக்களும், ஏனைய முஸ்லிம்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் இன்றும் குர்ஆனையும், சுன்னாவையும் பற்றிப் பிடித்தவர்களாக வாழ்ந்தும், தங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்னைகளைக் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையதாக அமையக் கூடிய தீர்வு (இஜ்மா)களை எடுத்து அதன்படி உண்மையான இஸ்லாமிய வாழ்க்கையின் அடிப்படையில் வாழ்ந்து, இறைவனுக்குப் பயந்த முஸ்லிம்களாக இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாத்தில் இந்த மத்ஹபு போன்ற வழிகேடுகள் நுழைக்கப்பட்டவுடன், ஏகப்பட்ட தீமைகள் பெருகி, அந்தத் தீமைகளைச் செய்பவர்களும் பெருகி விட்டனர். இதன் காரணமாக ஒற்றுமையின்மையும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டி பிறரை குற்றப்பரம்பரையினராக பார்க்கும் செயல் நம்மில் மலிந்து விட்டது. ஒவ்வொரு மத்ஹபுக்காரரும் பிற மத்ஹபைச் சேர்ந்தவர்களை வழிகேடர்கள் என்றும் வர்ணிக்கத் துவங்கி விட்டனர். இதை ஹனஃபி மத்ஹபில் ஃபத்வாவாக அவர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் யாரும் கடமையான ஃபர்ளுத் தொழுகையை ஷாஃபி இமாமைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் இந்த நான்கு மத்ஹபைச் சேர்ந்தவர்கள் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்றும், அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்றும் கூறியும் வருகின்றனர். இதன் உச்சகட்டமாக புனித இறையில்லமான மக்காவில் உள்ள கஃபா பள்ளியில், நான்கு மத்ஹபைச் சேர்ந்தவர்களும், தனித்தனி இமாமைப் பின்பற்றி, உதாரணமாக ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர் ஹனஃபி இமாமைப் பின்பற்றுவது, ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர் ஷாஃபி இமாமைப் பின்பற்றுவது இப்படியாக நான்கு மத்ஹபுக்காரர்களும் நான்கு மத்ஹபைப் பின்பற்றி, ஒரே நேரத்தில் நான்கு கூட்டுத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன. ஒரே நேரத்தில் ஒரு இமாமைப் பின்பற்றி அனைத்து முஸ்லிம்களும் தங்களுடைய கடமையான தொழுகைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, புனித இறையில்லத்தில் கூட தங்களது பிரிவு மனப்பான்மையைக் கைவிடாமல், ஒவ்வொரு மத்ஹபுக்காரரும் தங்கள் தங்கள் இமாமுக்காகக் காத்து நிற்க ஆரம்பித்தார்கள். (எல்லாப் புகழும் இறைவனுக்கே இன்று இந்தப் பழக்கம் முற்றிலுமாக, மக்காவிலும், சௌதியின் அனைத்து இடங்களிலும் ஒழிக்கப்பட்டு விட்டது). இத்தகைய பிரிவு மனப்பான்மையானது முஸ்லிம்களிடையே கபட எண்ணத்தையும், விஷத்தையும் வளர்த்து, அந்தச் செயலானது ஷைத்தான் நம்மிடையே  எதை எதிர்பார்த்தானோ, இறைவனிடம் எந்த சபதத்தைச் செய்து கொண்டானோ அந்த அவனது குறிக்கோளான, மனிதர்கள் அனைவரையும் நான் வழிகெடுப்பேன் என்ற சபதத்தை இலகுவாக அவன் நிறைவேற்றிக் கொண்டான். இன்று முஸ்லிம் உம்மத், ஒற்றுமையாக இருந்து இந்த உலகத்தை வழி நடத்த வேண்டிய சமுதாயம் மாற்றான் கைப்பாவையாக மாறி விட்டது என்பது இறைவன் நம்மீது சுமத்திய தண்டனையே அன்றி வேறென்னவாக இருக்க முடியும். (இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்).

மண்ணறையின் கேள்விகள் மத்ஹபுக்கு சாவு மணிகள்
ஓ!! என்னருமை முஸ்லிம் சமுதாயமே!! நீ மரணித்த பின் உன்னை அனைவரும் சேர்ந்து மண்ணறையிலே வைத்த பின், மண்ணறை மலக்குகள் உன்னிடம் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும், மறுமை நாளிலே என்ன என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் ஒளிவு மறைவு இல்லாமல், இறைவனின் திருப் பெயரைக் கொண்டு சொல்வீர்களா !? அன்றைய தினம்  எந்த மத்ஹபைப் பற்றியும் விசாரிக்கப்பட மாட்டாது, நீ எந்த மத்ஹபைப் பின்பற்றி வாழ்ந்தாய் என்றும் விசாரிக்கப்பட மாட்டாது. ஆனால், கண்டிப்பாக நீ ஏன் குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றினாய், உன்னை ஏன் ஒரு மத்ஹபுக்குள் உன்னை இணைத்துக் கொண்டாய்? என்ற கேள்விகள் கண்டிப்பாக அவனிடம் கேட்கப்படும். எந்தவித இஸ்லாமிய அடிப்படையோ அல்லது சரியான ஆதாரங்களின் அடிப்படையோ, இதில் எதுவுமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு மத்ஹபை ஒருவர் பின்பற்றுவது என்பது கண்மூடித்தனமானது. இது யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுடைய மார்க்க விவகாரங்களில் இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதை விடுத்து, தங்களுடைய மத குருமார்களை பின்பற்றுவதற்கும், அவற்றில் தீர்ப்புச் சொல்வதற்கும் அவர்களையே முழுமையாக நம்புவதற்கு ஒப்பாகும். இத்தகைய கண்மூடித்தனமான செய்கைகள் ஒருவரை வழிகேட்டிற்குத் தான் அழைத்துச் செல்லுமே தவிர அவ்வாறு பின்பற்றுபவரை இறைவனின் உவப்பிற்கு உரியவராக ஆக்காது.

ஒவ்வொருவருடைய இறப்பிற்குப் பின்னும், அவர் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வுலகில் வாழ்ந்தார் என்று தான் கேட்கப்படுமே ஒழிய இந்த உலகில் எந்த இமாமமைப் பின்பற்றி தன்னுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தார் என்று கேட்கப்பட மாட்டாது.  இங்கே  இஸ்லாமிய நம்பிக்கை என்பது அவர் தன்னுடைய மார்க்க விசயங்களில் எந்தளவு அறிவுடையவராக இருந்தார் என்பதும், அந்த அறிவின் துணை கொண்டு எந்தளவு தன்னுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தார் என்பதும் பொருளாகும். ஒருவருக்கு தன்னுடைய மார்க்கத்தின் அடிப்படை விசயங்கள் பற்றி சரியான அறிவு இல்லை எனில், அவர் எவ்வாறு தனக்கு ஏற்படும் பிரச்னைகளில் சந்தேகமானவற்றைத் தீர்த்துக் கொள்ள இயலும். தன்னால் அந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இயலவில்லை எனில், அதற்குரிய அறிஞர்களிடம் அவற்றைக் குறித்து விளக்கம் பெற்றுக் கொள்வதும், அவர் தந்த விளக்கம் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைந்தது தானா என்று ஆராய்வதும், குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைந்திருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்வதும், என்பன போன்ற இத்தகைய  செயல்பாடுகள் யாவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த  உண்மையான எளிமையான, இலகுவாகப் பின்பற்றத்தக்க இஸ்லாமிய வழிமுறைகளாகும்.

என்னுடைய அன்பார்ந்த சகோதரர்களே !! மத்ஹபுகளின் மாயையில் தங்களுடைய உண்மையான ஈமானைத் தொலைத்து விட்டு வெகுதூரம் சென்று விட்டவர்களே!! இஸ்லாம் நேர்வழியின் பால் இன்னும் உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த உண்மையான வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களை மட்டுமல்ல உங்கள் மார்க்கத்தையும் புதுப்பித்துக் கொள்வதோடு, இது வரை உங்களாலும், உங்கள் மூதாதையர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த தூய இஸ்லாத்தை மக்களது மனங்களில் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், இஸ்லாம் இரு கரம் கொண்டு உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஒரு வழி முறை மட்டுமே உங்களை அழிவிலிருந்து காப்பாற்றி, வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லக் கூடியது. எனவே இஸ்லாத்தின் வழிவந்த மக்களே !! ஓரிறைக் கொள்கையான தவ்ஹீதைப் பின்பற்ற வாருங்கள் !! இறைவனுக்கு இணைவைக்காமல் தனித்தவனான அவனை மட்டுமே வணங்குங்கள், அவன் ஒருவனே நாம் எல்லோரும் வணங்கத்தக்கவன், அவனிடம் மட்டுமே உங்களது தேவைகளைக் கேளுங்கள், அவனிடம் மட்டுமே உதவிகளைக் கேளுங்கள், அவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். ஒவ்வொரு முஸ்லிமையும் உங்களது சகோதரர்களாகக் கருதுங்கள், உங்களுக்கு நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அவற்றையே உங்கள் சகோதரருக்கும் விரும்புங்கள்.

கீழே உள்ள ஹதீஸானது, இமாம் திர்மிதி அவர்கள் தனது சுனன் திர்மிதியில், இப்ரத் பின் சரிய்யா என்பவர் அறிவித்த ஒரு ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸானது நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.
((وعظنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاةِ الغداةِ  موعظة بليغةً ذرفت منها العيون ووجلتْ منها القلوبُ فقال رجل : إن هذه موعظة مودِع فماذا تعهد إلينا يارسول الله؟  قال : أُوصيكم بتقوى الله، والسمع والطاعةِ وإن عبد حبشي فإنه من يعش منكم يرى اختلافاً كثيراً وإياكم
 ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاءِ الراشدين المهديين، عضوا عليها بالنواجذ))
ஒரு நாள் காலைத் தொழுகைக்குப் பின்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு மிக நீண்டதொரு அறிவுரையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையானது எங்களது இதயங்களில் அச்சத்தை உண்டுபண்ணி கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒருவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது தங்களுடைய இறுதி உரையைப் போன்றல்லவா இருக்கின்றது? என்று கேட்டார். அதன்பின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்,  அல்லாஹ்வுக்குப் பயப்படும்படி உங்களை அறிவுறுத்துகின்றேன். உங்களுக்கு ஒரு (கருப்பு நிறமுள்ள) அபீஸீனிய அடிமையைத் தலைவராக நியமித்தாலும், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அவரது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் நிறைய மாறுபாடுகளைச் சந்திப்பீர்கள். என்னுடைய சுன்னாவையும், என்னுடைய தோழர்களும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுங்கள். அவற்றை கட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில் புதிதாக உண்டாக்கப்படும்) புதினங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவை யாவும் வழிகேடுகளும், தவறானவையும் ஆகும்.

இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று தன்னுடைய சுனன் திர்மிதியில் பதிவு செய்துள்ளார்கள். மேலும், சுனன் அபுதாவூது-லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகளையும், அவர்களது தோழர்களும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றி, இன்று நடைமுறையில் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இமாம்களையும், அவர்களின் பெயரால் இருந்து கொண்டிருக்கின்ற மத்ஹபுகளிலிருந்தும் விலகுவதும் தான் ஒரு முஸ்லிமினதும், நேர்வழியை விரும்பக் கூடியவர்களதும் கடமையுமாகும். இதுவல்லாமல் நேர்வழி இன்னதென்று தெரிந்த பின்னரும் ஒருவர் மீண்டும் இந்த மத்ஹபுகளையே பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் எனில், அவர் மேற்கண்ட ஹதீஸுக்க முரணாக நடக்கின்றார் என்றே நினைக்க முடியும். இது அவர்களின் ஈமானின் பலவீனத்தையே காட்டுகின்றது. ஹனஃபி மத்ஹபில் புலமை பெற்ற ஏராளமான அறிஞர்கள், குறிப்பிட்ட ஒரு மத்ஹபைப் பின்பற்றுவது கூடாது என அறிவித்தும் இன்னும் மக்கள் அவற்றைப் புறக்கணித்த நிலையிலேயே தங்கள் மார்க்கக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹனஃபி மத்ஹபின் பிரபல அறிஞர்களான கமால் பின் ஹமாம் என்பவர் தன்னுடைய அத்-தஹ்ரீர் என்னும் நூலிலும், இப்னு ஆபிதீன் அஷ்ஷாமீ  என்பவர் தன்னுடைய அவாயில் ரத்துல் முக்தார் என்னும் நூலிலும், ஒரு குறிப்பிட்ட மத்ஹபைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று சொல்லப்படும் அறிக்கையின் உண்மைத்துவமானது சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றுவதன் ரகசியம்:

ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று மக்களை சில அறிஞர்கள் வற்புறுத்துவதில் ஒரு ரகசியமும் உண்டு. அதாவது, ஆட்சியாளர்களும், அதிகாரம் பெற்றவர்களும், சில அறிஞர்களும் மக்களை எப்பொழுதுமே தங்களைச் சார்ந்து இருக்கும்படி செய்திட வேண்டும் என்ற அவர்களது நோக்கத்தை நிறைவேற்றக் கண்டுபிடிக்கப்பட்டது தான். வரலாற்றுப் பூர்வமாக இது எப்படி சாத்தியமானது என்பதை பின்வரும் பக்கங்களில் நாம் பார்க்க இருக்கின்றோம். இதில் உண்மை என்ன என்பதை நாம் ஆராய்ந்து எந்த வழி உண்மையிலேயே பின்பற்றத் தக்கது என்பதை கண்டுபிடித்து அதன் வழி நடப்பதே உண்மையான ஈமான் உள்ளவருக்கு ஏற்றதாகும். நாம் உண்மையிலேயே பின்பற்ற வேண்டியது, இறைவன் தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தூதைத் தானே தவிர, மற்ற எந்த வழிமுறைகளும் நாம் பின்பற்றக் கூடிய தகுதி வாய்ந்ததல்ல. அவர், அதாவது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் நமக்கு இமாமாக இருக்கத் தகுதி வாய்ந்தவர். இதனையடுத்து, நம் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த, நாம் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு வழிமுறை யாதெனில், அவரது நேர்வழி பெற்ற தோழர்களின் வழிமுறையாகும்.  அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மனித சமுதாயத்திற்கு இவ்வாறு கட்டளையிட்டுள்ளான்:

{وما ءاتكم الرسول فخذوه وما نهكم عنه فانتهو} (الحشر:07)
(நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (59:07)

இமாம் அபூ ஹனீஃபா அவர்களோ அல்லது இமாம் மாலிக் அவர்களோ அல்லது ஏனைய இமாம்களோ தங்களையும், தாங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ள சட்டதிட்டங்களின்படியும் தான் தங்களது மார்க்கத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்று எப்பொழுதும் குறிப்பிட்டுக் கூறவுமில்லை. யாரையும் கட்டாயப்படுத்தவும் இல்லை. மேலும், ஒரு நல்ல தரமான ஹதீஸ் கிடைக்கப் பெற்றால், அந்த நிமிடமே எங்களுடைய கருத்துக்கள் செயலிழந்து விடுகின்றன, எங்களுடைய கருத்துக்களைப் புறந்தள்ளி விட்டு அந்த ஸஹீஹான ஹதீஸையே பின்பற்றவும் என்றே கூறியுள்ளனர்.

மேலும், நேர்வழிபெற்ற நபித்தோழர்களும் முதல் இரண்டு கலீபாக்களுமான அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்கள் கூட தங்களுடைய கருத்துக்களின்படி தான் நடக்க வேண்டும் என்று கூடக் கூறவில்லை. மாறாக, தாங்கள் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக நடப்போமேயானால், மக்கள் எங்களது தவற்றைச் சுட்டிக் காட்டி எங்களை நேர்வழி நடத்தட்டும் என்றும், எங்களது கருத்துக்கள் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக இருக்குமேயானால் மக்கள் அதைப் பின்பற்றாது புறக்கணித்து விடட்டும் என்றே கூறியுள்ளனர். உண்மை இவ்வாறிருக்க நம்மில் இத்தனை பிரிவுகள் எவ்வாறு தோன்றின? இன்றும் மக்கள் மனங்களில் இந்த மத்ஹபுப் பேய் சுற்றி வரக் காரணம் என்ன? இந்த முஸ்லிம் சமுதாயத்தினரின் கால்களில் இந்த மத்ஹபு என்னும் விலங்கை மாட்டி அவர்கள் அல்லல்படுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் யார்? இஸ்லாத்தில் இல்லாத பல்வேறு பிரிவுகளை இஸ்லாத்திற்குள் விதைத்து விட்டது யார்?

இஸ்லாத்திற்குள் ஊடுறுவி விட்ட இந்த பல்வேறு பிரிவுகளும், அதிகாரப்பசி கொண்ட ஆட்சியாளர்களாலும், மோசடிக்கார அறிஞர்களாலும் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்பட்டு, மக்கள் அனைவரும் இவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று பொய்ப் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இது தான் இந்த மத்ஹபுகள் இஸ்லாத்திற்குள் ஊடுருவக் காரணமானதும், பதவி வெறிபிடித்த ஆட்சியாளர்கள் தான் இவற்றை ஆரம்பித்து வைத்துத் தங்கள் சுய லாபத்திற்காகப் போற்றி வளர்த்து வந்தார்கள் என்பதும் தான் உண்மையாகும்.

கண்மூடித்தனமான கொள்கை பற்றிய ஆய்வு:

இஸ்லாத்தின் ஆரம்ப காலமான ஹிஜ்ரி வருடத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில், மக்கள் மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை, மாறாக, அவை அந்தக் காலத்தில் தோன்றியும் இருக்கவில்லை. எனவே தான் அந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்கள் மத்ஹபுகளைப் பற்றி சிறிதும் அறிந்திருக்காமல், இறைவனுடைய வேதத்தையும், அவனது தூதரை (ஸல்) யும் விடுத்து வேறு எதனையும் அவர்கள் பின்பற்றவில்லை. இறைத்தூதருடன் ஒன்றாக வாழ்ந்த அவர்களது தோழர்களும், அந்தத் தோழர்களைப் பின்பற்றிய தாபியீன்களும், அந்தத் தாபியீன்களுக்குப் பின்னர் வந்தவர்களும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது போதனைகளையும், மற்றும் அவர்களது தோழர்களால் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு (இஜ்மா) களையும் பின்பற்றினார்களே ஒழிய, அவர்களில் தனிப்பட்ட எந்த நபரையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தின் ஆரம்ப கால மக்கள், அன்று தங்களது பிரச்னைகளுக்கு எவ்வாறு கலந்தாலோசித்து ஒரு முடிவுகளை எடுத்தார்களோ அதை எல்லாம் மறந்து விட்டு, இன்று பின்பற்றப்படும் இந்த இமாம்களின் பெயரால் கூறப்படும் அவர்களது விளக்கங்கள், ஃபத்தவாக்கள், குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றிய அவர்களது கருத்துக்கள் ஆகியவற்றை, குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையவைகள் தானா என்று ஆராயாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது என்பது, அவர் கொண்டுள்ள இறை நம்பிக்கைக்கு முரணாக நடக்கின்றார் என்பதே பொருளாகும். இத்தகைய நபர்கள் இஸ்லாம் என்னும் நேர்வழியிலிருந்து திசை மாறி, அவர் வழிகேட்டுக்குச் சென்று கொண்டிருக்கின்றார் என்பதே பொருளாகும்.

மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களும் அவர்களது ஆதரவாளர்களும், இவர்கள் யாவரும் ஒரே ஒரு கொள்கையின் அடிப்படையில் தான் மத்ஹபில் ஒட்டிக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் நாங்கள் ஏன் மத்ஹபுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம் அல்லது அவற்றுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதற்கு அவர்கள் கூறும் காரணமானது, தர்க்கவாதத்தின் அடிப்படையிலும் மற்றும் அதற்குக் கூறப்படும் காரணங்களின் அடிப்படையிலும் உண்மைக்கு மிகவும் முரணானதாகும். அவர்கள் தங்கள் இமாம்களை இறைத்தூதரைப் பின்பற்றுவது போல பின்பற்றி, அவர்களை இறைத்தூதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த நினைப்பு உண்மைக்கும், சத்தியத்திற்கும் முற்றிலும் மாறுபட்டது. இத்தகையவர்கள் எந்தவித மாற்றங்களுக்கும் இடம்கொடாமல், தங்களது இமாம்களை அப்படியே பின்பற்றி வருவது தெளிவான முறையில் நன்றாகவே பலமுறை நிரூபணமும் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இவர்கள் தங்களது இமாம்கள் எந்தவித தவறுகளையும் செய்யாதவர்கள் என்று உறுதியாக நம்புவதும், அவர்கள் எதைப் பற்றி என்ன சொன்னாலும் அவை அனைத்தும் உண்மையே என நம்புவதும் தான் இதன் காரணமாகும். மேலும், இமாம்களுடைய கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக இருந்தாலும் அவர்கள், இமாம்களின் கருத்துக்களை சிறிதும் நழுவவிடாது மிகவும் கவனமாகப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இமாம்களின் கருத்துக்கள் தவறானவை என்பதற்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தாலும், அதன் மீது எந்தவித விவாதத்திற்கும் அவர்கள் தயாராகவும் இருப்பதில்லை. இத்தகைய நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழி ஒன்று, இவர்கள் நடந்து கொள்ளும் இத்தகைய பின்பற்றுதல்கள் தவறானவை என்பதை நிரூபணம் செய்கின்றது. இமாம் திர்மிதி அவர்களால் பதிவு செய்யப்பட்டு, அதி பின் ஹாதிம் என்பவர் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பாக கிறிஸ்த்துவ மதத்தில் இருந்தவர் என்பதும், மேலும் இவர் கீழ்க்கண்ட திருமறைக் குர்ஆனின் வசனத்தை ஓதி விட்டு,

{إتخذوا أحبارهم ورهبنهم أرباباً من دون الله}
(இவ்வாறே)  அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும், மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். (அல் குர்ஆன்  09-31).

இறைத்தூதர் (ஸல்) அவர்களே, ஆனால் அவர்கள் அவ்வாறு அவர்களைத் தங்களது கடவுள்களாக, தெய்வங்களாக ஏற்று வணங்கவில்லையே, என்று கேட்கின்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூறினார்கள் :

{إنهم إذا أحلوا شيْاً استحلوه وإذا حرموا عليهم شيأً حرموه فذلك عبادتهم}
நிச்சயமாக, அவர்கள்  (அவர்களது குருமார்கள், சந்நியாசிகள்) ஒன்றை ஆகுமானது என்றால் இவர்கள் அவற்றை ஆகுமானதாக்கிக் கொள்கின்றனர், மற்றும் ஒன்றை தடுக்கப்பட்டது என அறிவித்தால், தங்களுக்கு அவைகள் தடுக்கப்பட்டவைகளாகக் கருதி, இதற்கு இவர்கள் கட்டுப்பட்டு நடக்கின்றார்கள் அல்லவா, இவ்வாறு செயல்படக் கூடிய இதுவும் ஒரு வழிபாடே! என்று, இறைத்தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள்.

எனதருமை இஸ்லாமியச் சகோதரர்களே!! யாருடைய வழிமுறைகளை நாம் பின்பற்றுவது கட்டாயமோ, அத்தகைய முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறைகளைப் பின்பற்றாது அவற்றை உதாசினம் செய்து விட்டு, நமக்கென ஒரு மத்ஹபைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பின்பற்றுவோமானால், நம்மை விட வழிகேடர்கள் யாராவது இருக்க முடியுமா? அல்லது நம்மை விட அநியாயக் காரர்கள் யாராவது இருக்க முடியுமா? இது மூடர்களின் செயல்களாக அன்றி வேரென்னவாக இருக்க முடியும்?!! நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் அந்த மறுமை நாளிலே ஒவ்வொரு உயிரும் தன்னுடைய நல்லவைகளைக் காட்டியும் அல்லது தீயவைகளைக் காட்டியும், தன்னந்தனியாக சாட்சி சொல்லக் காத்திருக்கும் அந்த நேரத்தில், இந்த உலகத்தில் அவனது மார்க்கத்தைப் பின்பற்றாது நாம் ஏதோ ஒன்றைப் பின்பற்றிய காரணத்திற்காக நாம் தண்டிக்கப்பட இருக்கின்ற வேளையில், அந்தத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக நாம் என்ன காரணத்தை அல்லது நியாயத்தை அவன் முன் நாம் எடுத்துச் சொல்ல இருக்கின்றோம்? அந்த நேரத்தில், முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறைகளைப் பின்பற்றாது அவற்றை உதாசினம் செய்து விட்டவர்களுக்கு அன்றைய தினமானது கெட்ட தினமேயாகும். யாராவது என்னுடைய இமாமைத் தவிர்த்து மற்ற அனைவரும் சரியான மார்க்கத்தைப் பின்பற்றாதவர்கள் என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, அதிலேயே நிலைத்தும் விட்டார்களோ அவர்களும், அத்தகைய இமாமை முழுமையாகப் பின்பற்றுபவர்களும், கட்டுப்படுபவர்களும் தான் தவறான மார்க்கத்தில் உள்ளனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றுவது பற்றி நாம் இறுதியாகக் குறிப்பிடுவது என்னவென்றால் மத்ஹபுகளை கல்வி அறிவு இல்லாதவர்களும், பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்களும் தான், ஒரே இமாமைக் குறிப்பிட்டு அந்த இமாமை மட்டுமே பின்பற்றுவார்கள். ஆனால் ஈமானில் முழு உறுதியும், உண்மையான தக்வாவையும் கொண்டவர்கள் எல்லா இமாம்களையும் ஒரே தகுதியில் வைத்து அவர்கள் அனைவரையும் மதிப்பதோடு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் அவர்கள் அனைவரது கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களில் எவருடைய கருத்து குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மிக நெருக்கமாக உள்ளதோ அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன்படி செயல்படுவார்ளோ அத்தகையவர்கள் தான் உண்மையான ஈமானை நிரம்பப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறையாகும். முஹம்மது (ஸல்) அவர்களதும் மற்றும் அவர்களது தோழர்கள் மற்றும் தாபியீன்கள் ஆகியோர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றாது அவற்றை உதாசினம் செய்து விட்டு, ஒரே இமாமை மட்டும் யார் பின்பற்றுவார்கள் என்றால் ஷியாக்களும் மற்றும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவர்களுமாகிய காரிஜிய்யாக்களும் தான் என்பது நாம் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். இது ஒரு கண்மூடித்தனமானதொரு கொள்கையாகும். இத்தகைய கொள்கைகளை குர்ஆனும், சுன்னாவும், அறிஞர்களின் கருத்துக்களடங்கிய இஜ்மாவும் வழிகேடுகள் என்றே குறிப்பிட்டுள்ளன.

ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது ஃபத்தவா மிஸ்ரிய்யாவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் :

ஒருவர் நான்கு இமாம்களான இமாம் அபூ ஹனிஃபா, இமாம்  ஷாஃபிஇ, இமாம் மாலிக், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இவர்களில் யாராவது ஒருவரைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பொழுது தனக்கு ஏற்படும் பிரச்னையில், அதற்கான தீர்வுக்காக வேண்டி இந்த நான்கு பேர்களுடைய கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து, தான் பின்பற்றிக் கொண்டிருக்கும் இமாமினுடைய கருத்தானது, மேற்படி அந்தத் தீர்வுக்கான கருத்துடன் மாறுபட்டு இருந்து, தன்னுடைய இமாமினுடைய கருத்தை விட தான் பின்பற்றாத வேறு ஒரு இமாமினுடைய கருத்து ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், தான் அந்த இமாமைப் பின்பற்றாவிட்டாலும் அவருடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றார் எனில், இத்தகைய அணுகு முறை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இத்தகைய அணுகு முறை அத்தகைய நபரின் ஈமானில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு மிக நெருக்கமானவராகவும், தான் விரும்பிப் பின்பற்றிக் கொண்டிருக்கும் இமாமின் நெருக்கத்தைக் காட்டிலும், கண்மூடித்தனமாக ஒருவரைப் பின்பற்றிக் கொண்டும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளை உதாசினம் செய்து கொண்டிருப்பவரைக் காட்டிலும் இவர் உண்மைக்கு மிக நெருக்கமானவராக இருக்கின்றார் என்றே கருதத் தோன்றுகின்றது. மேலும், ஒருவர் இமாம் அபூ ஹனிஃபா அவர்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய இமாம் கூறுவது தான் சரியானது, மற்ற இமாம்கள் கூறுவதெல்லாம் நம்முடைய இமாமினுடைய கருத்துக்களை விட உயர்ந்ததல்ல என்றும், அவற்றை ஏற்றுக் கொள்வது அறியாமையானது என்றும் நினைத்துக் கொண்டு ஒருவர் இருப்பாரேயானால் அத்தகைய நினைப்பு அவரை வழிகேட்டிற்குத் தான் இட்டுச் செல்லும். இத்தகைய செயல்களிலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாக்க பிரார்த்திப்போமாக!

அல் இக்னா என்ற விரிவுரை நூலில், மத்ஹபுகளைப் பின்பற்றுவது என்பது அவசியமற்றது, அதே போல ஒரு மத்ஹபிலிருந்து இன்னொரு மத்ஹபுக்கு மாறிக் கொள்வதும் தேவையற்றது. அதே போல, ஏதாவது ஒரு மத்ஹபைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கருத்தைப் பல இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முஸ்லிமினுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையைக் கொண்டே தீர்ப்புச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றான். இந்த இரண்டுக்கும் மோதக் கூடிய எந்தக் கருத்தையும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் உதாசினம் செய்யவும் கடமைப்பட்டிருக்கின்றான். எல்லா நிலைகளிலும் குர்ஆன் மற்றும் சுன்னாவை வழுவாது கடைபிடிக்குமாறு இறைவன் நம்மீது கடமையாக்கியுள்ளான் என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் இன்ஸாஃப் என்பவர் எழுதிய கிதாப் அல்-கதா என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பைச் சுட்டிக் காட்டி இப்னு தைமிய்யா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் :

யாராவது ஒருவர் கண்மூடித்தனமாக ஒரு இமாமைப் பின்பற்றுவாரேயானால், அவரை கண்டிப்பாக அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும், அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருமாறும் கட்டளையிட வேண்டும், அவர் மேற்கண்டவைகளை ஏற்று நிறைவேற்றவில்லை எனில் அவரை சிரச்சேதம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் ஏக இறைவனான அல்லாஹ்வின் தனித்தன்மை வாய்ந்த உரிமையில் தலையிட்டு, இறைவனுக்கு இணை வைத்த பாவத்தைச் செய்ததோடு, ஷரியத் சட்டத்தையும் அவர் குழி தோண்டிப் புதைத்தும் விட்டார்.

கமால் பின் ஹமாம் ஹனஃபி என்பவர் தனது நூலான ஃபிக்ஹு அத் தஹ்ரீர் வத் தக்ரீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :

ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது, அவ்வாறு பின்பற்றுமாறு யாரும் அதற்காக வாதிடவும் இல்லை. இறைவனாலும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாலும் அனுமதிக்கப்பட்டதைத் தான் நாம் பின்பற்றத் தகுதிவாய்ந்ததாகக் கடமையாக்கப்பட்டுள்ளது. தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய மற்றும் அவர்களுடைய தோழர்களுடைய அந்தப் பொன்னான நாட்கள் நம்மை விட்டுச் சென்று விட்டன, அவர்கள் கூட குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றவோ அல்லது குறிப்பிட்ட நபரைப் பின்பற்றவோ நமக்குக் கற்றுத் தரவில்லை. நாங்கள் ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றுகின்றோம் அல்லது நாங்கள் ஷாபி மத்ஹபைப் பின்பற்றுகின்றோம் என்று பலர் கூறிக் கொண்டு திரிவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இவர்கள் கூறுவது உண்மைக்கு மிகவும் மாற்றமானது. இவ்வாறு தங்களை ஹனஃபி என்றும் ஷாபியாக்கள் என்றும் கூறிக் கொண்டு திரிபவர்கள், இமாம்கள் கூறிச் சென்றவைகளுக்கு மிகவும் மாற்றமானதொன்றைச் செய்து கொண்டு, அறியாமையில் இருப்பவர்களாவார்கள். தங்களை மார்க்க அறிஞர்கள் என்றும் பிரபல எழுத்தாளர்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கக் கூடியவர்கள், ஒருவர் மத்ஹபைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டுமா என்பது பற்றி அவர் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு உண்மையைக் கொண்டு அவரால் நிரூபிக்க இயலவில்லை எனில், அவர் தன்னை மார்க்க அறிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் அவர் கூறிக் கொண்டு திரிவது போலித்தனமானதாகும். இதே போலத் தான் இமாம்களை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூறித் திரிபவர்கள் நிலையும், அதாவது இந்த இமாம்கள் என்ன கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள் என்பதையோ மற்றும் அவர்களது போதனைகளில் உள்ள அறிவுரைகள் பற்றியோ எந்தவித அறிவும் இல்லாமல் இவர்கள் இமாம்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவார்களேயானால், அத்தகையவர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், நாங்கள் மத்ஹபைப் பின்பற்றுவர்கள் என்று அவர்கள் நியாயப்படுத்தித் திரிவதும் எத்தகையதாக இருக்கும்? என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஷேக் ஸாலிஹ்  அல்-ஃபுலானி என்பவர் தனது இகாஸ் ஹமம்  உலுல் அப்ஸார் என்னும் நூலில்,
கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுபவருக்கும், ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்கத்தைப் பின்பற்றுபவருக்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது கண்மூடித்தனமாக பின்பற்றுபவர், மார்க்கம் சம்பந்தமாக தனக்கு ஏற்படும் பிரச்னையில் அவர் இறைவன் தன்னுடைய திருமறையில் என்ன கூறுகின்றான் என்றோ அல்லது அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என்றோ ஆராய்வதில்லை, மாறாக அவர் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இமாம் என்ன கூறியிருக்கின்றார் என்றே தான் தன் ஆய்வைத் தொடர்வார். அவருடைய இமாம் கூறியிருக்கின்ற கருத்தானது குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக இருப்பினும் அவர் தன்னுடைய இமாமையே பின்பற்றுபவராக இருப்பார். ஆனால், உண்மையாக தன்னுடைய மார்க்த்தை விசுவாசிக்கக் கூடியவர், முதலில் தன்னுடைய இறைவனும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று தான் அவரது கேள்வி அமைந்திருக்குமே ஒழிய, இமாம் என்ன கூறியிருக்கின்றார் என்று அவரது கேள்வி அமையாது. உண்மையின் அடிப்படையில் தன்னுடைய மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய ஒருவர், இஸ்லாத்தின் அனைத்து அறிஞர்களிடமிருந்தும் தனக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்கின்றார். ஆனால் மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றவர், அவரது இமாமிடருந்து மட்டுமே கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார். இது தான் உண்மையாக மார்க்கத்தைப் பின்பற்றுபவருக்கும், மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடியவருக்கும் உள்ள வித்தியாசங்களை அளவிடக் கூடிய அளவுகோளாகும். ஏனெனில் உண்மையைப் பின்பற்றக் கூடியவர் எங்கு உண்மையிருக்கின்றதோ அதில் தன்னுடைய வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ள நாடுகின்றார், ஆனால், தன்னை மத்ஹபு வாதி எனக் கூறிக் கொள்பவர், உண்மை இன்னதென்று தெளிவாகத் தெரிந்தாலும், தன்னுடைய இமாமினுடைய கருத்து உண்மைக்கு மாற்றமாக இருந்தாலும் அந்த இமாமுடைய கருத்தையே பின்பற்றும், கண்மூடித்தனமான கொள்கையைக் கொண்டவராக இருக்கின்றார்.

ஷரியத் சட்டப்படி, ஒருவர் தான் சம்மதப்பட்டு ஏற்றுக் கொண்ட கருத்தை உண்மை என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் எதுவும் இல்லாதிருப்பினும், அந்தக் கருத்தை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளுவதற்கு தக்லீத் (கண்மூடித் தனமாகப் பின்பற்றுதல்) என்று கூறப்படும். இத்தகைய முறையில் அமைந்த கொள்கையைப் பெற்று ஒருவரைப் பின்பற்றுவதை ஷரியத் சட்டங்கள் முற்றிலுமாகத் தடை செய்துள்ளன. அடுத்து ஷரியத் சட்டப்படியும், வாத விவாதங்கள் அடிப்படையிலும் நாம் பின்பற்றத்தக்கதொரு நடைமுறை ஒன்றையும் அல்லது கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு பின்பற்றுவதற்கு, இத்திபா என்று கூறப்படும். இறைமறைக் குர்ஆனைப் பின்பற்றுவதும், சுன்னாவைப் பின்பற்றுவதும் இந்த இத்திபாவில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூறப்பட்ட தக்லீத் என்பது இஸ்லாத்தில் ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்டதும், பிந்தைய இத்திபா- வானது நாம் கண்டிப்பாக ஏற்றுப் பின்பற்றக் கடமையானதாகவும் இருக்கின்றது. மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழ்ந்து விடக் கூடிய இஸ்லாமிய அறிஞர்களின் ஃபத்வாக்கள் அல்லது கருத்துக்கள் உண்மைக்கு மாற்றமாக இருப்பினும், அவற்றை கல்வியறிவு இல்லாத, படித்தறியத் தெரியாத இந்த மக்கள் அப்படியே பின்பற்ற வேண்டும் என்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகளின் அடிப்படையில் அவரையும் நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பொருள் என்னவாக இருக்கும். ஒரு சரியான ஸஹீஹான ஹதீஸ் கிடைத்து விட்டால் அதன் அடிப்படையில் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று இருக்கும் பொழுது, நான் இந்த இந்த மனிதர் இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றாரே என்று கூறி முடக்கு வாதம் செய்து கொண்டு, சரியான நடைமுறைகளை ஏற்றுச் செயல்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, பின்பு அவற்றை ஏற்றுக் கொள்வதாகச் சொல்வதும் சரியில்லை. சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்வதும் அடிப்படையே இல்லாததொரு மோசமான தவறாகும். மேலும் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளான சுன்னாவைப் பின்பற்றி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். யார் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளான ஹதீஸுகளை விளங்க முடியுமோ அவர்கள் தான், இஸ்லாமிய விசயங்களில் கருத்துக்களைக் கூற வேண்டும். யாருக்கு குர்ஆனையும், ஹதீஸுகளையும் விளங்க முடியவில்லையோ அவர்கள், இவற்றை நன்கு விளங்கி அதன் மூலம் தீர்ப்புச் சொல்லக் கூடியவர்களை அணுகி, தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இறைவன் தன் திருமறையிலே கூறுகின்றான் :

{فسـئلو أهل الذكر إن كنتم لا تعلمون}
(இவர்களிடம் நீர் கூறுவீராக: இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 21 -07).

ஒருவர் ஒரு விசயம் பற்றி தெரிந்து கொள்வதற்காக முஃப்தியையோ அல்லது உலமாக்களையோ அணுகுகின்றார். தான் தெரிந்து கொள்ள வேண்டிய விசயத்திற்கான பதிலைப் பெற்றுக் கொண்டதோடல்லாமல், அதே விசயத்திற்கு ஸஹீஹான முறையில் அறிவிக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களது பொன் மொழிகளையும் அவர் சேர்த்தே எடுத்துக் கொண்டு, அந்த முஃப்தி அல்லது உலமாக்களின் கருத்துக்களோடு இந்த ஹதீஸுகளையும் பின்பற்ற வேண்டும். முஃப்தி அல்லது உலமாக்களின் கருத்துக்கள் விரிவாக இருப்பதால் அவற்றைப் புரிந்து கொண்டது போல, ஹதீஸுகளையும் புரிந்து கொண்டதாக பாசாங்கு செய்தல் கூடாது. அந்த ஹதீஸுகளின் விளக்கம் பற்றி, அவற்றை நல்ல முறையில் ஆராய்ந்து சொல்லக் கூடியவர்களை அணுகி அதற்கான விளக்கத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும். அறிஞர்கள் கூறி இருக்கும் கருத்துக்களை விட ஹதீஸானது தெளிவான ஆதாரங்களைப் பெற்றிருப்பின், அறிஞர்களின் கருத்துக்களை (கியாஸ், இஜ்திஹாத்)ப் பின்பற்றுவதை விட ஹதீஸுகளைப் பின்பற்றுவதற்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இப்னு நஜீம் என்பவர் தனது அல்-பகர் அர்ரயீக் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக நன்கு புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் அமைந்துள்ள ஹதீஸைப் பின்பற்றுவதானது, உலமாக்களின்  தீர்ப்புகளிலிருந்து பெறப்பட்ட கியாஸைப் பின்பற்றுவதை விடச் சிறந்தது. ஹதீஸைப் பின்பற்றுவதானது ஒருவரின் மேல் கடமையாக்கப்பட்டுள்ளது போல, கியாஸைப் பின்பற்றுவதைக்  கடமையாக்கப்படவில்லை. ஹதீஸுகளின் அடிப்படையில் ஒருவர் தன்னுடைய விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு, அதனடிப்படையில் அவற்றை விளங்கிச் செயல்பட வேண்டும் என்பதையே அனைத்து இமாம்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். ஸஹ்ரானி என்பவர் இமாம் அபூ ஹனிபா அவர்கள் கூறியதாக தன்னுடைய தன்பிஹ் அல்-முகத்தரின் என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த என்னுடைய விளக்கமானது எனது அதிகப்பட்சமான முழு முயற்சியில் இருந்து பெறப்பட்டது, இருப்பினும் இதை விடத் தெளிவான, புரிந்து கொள்ளக் கூடியவிதத்தில் ஒரு தீர்ப்பு உங்களுக்குக் கிடைக்கப் பெற்றால், என்னுடைய தீர்ப்பைப் பின்பற்றுவதை விட ஹதீஸைப் பின்பற்றுவதும், அதன்படிச் செயல்படுவதும் மிகச் சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லா அலி காரி ஹனஃபி என்பவரும் மேற்கண்ட கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். இஸ்லாமியனாக இருக்கின்ற ஒவ்வொருவரும் ஹனஃபியாகவோ அல்லது ஷாஃபியாகவோ அல்லது ஹம்பலியாகவோ அல்லது மாலிக்கியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே போல ஒவ்வொருவரும் அறிஞராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதற்கான அறிவைப் பெற்றவராக இல்லை எனில் அவர் தனக்கேற்படும் சந்தேகமான விசயங்களில், அதற்கான அறிவைப் பெற்ற உலமாக்களை அணுகி, தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறிஞர்களிடம் இருந்து பெறப்பட்ட மார்க்கத் தீர்ப்புக்கள் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமில்லாத வகையில் இருக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும். யார் இறைவனைப் பின்பற்றுகின்றாரோ அவரது இறுதி முடிவு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். அத்துடன் முஸ்லிமாக இருக்கக் கூடிய ஒவ்வொருவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் பின்பற்றுவதும் கடமையாகவும் இருக்கின்றது.

மிகவும் புகழ் பெற்ற அறிஞராகிய அப்துல் ஹக் தஹ்லவி என்பவர் தனது அஸ் ஸிராத்துல் முஸ்தக்கீம் என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் பின்பற்றுவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவரைத் தவிர்த்து வேறு யாரைப் பின்பற்றுவதையும் யார் மீதும் கடமையாக்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையாவது பின்பற்றினால் அத்தகைய செயலானது பாவமானதும், வழிதவறிய செயலுமாகும். முன்னர் நாம் பார்த்த எல்லா அறிஞர்களும் மற்றும் நேர்வழி பெற்ற முஸ்லிம்களும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் பின்பற்றினார்கள்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(மார்க்க விசயங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களில்) யார் ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது ஹதீஸை  (அந்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள போதுமானதாக அதை) எடுத்துக் கொள்ளாமல், அதற்குப் பதிலாக வேறு ஒருவரைப் பின்பற்றுவது என்பது சட்டத்திற்குப் புறம்பானதுமாகும். அவ்வாறு செய்வது பாவமானதும், தவறானதுமாகும்.

நேர்வழி கிடைக்கப் பெற்ற அனைவரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தங்களது அன்றாட வாழ்வில் ஒரு முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது. சந்தர்ப்பவசமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை மாற்றமாகச் செய்திருந்தாலும், இவர்களும் அவ்வாறே அவற்றைச் செயல்படுத்தினார்கள். அவர்கள் பல்வேறு நிலைகளில் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்தும், அதைப் போல நேர்வழிபெற்ற கலீபாக்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்டார்கள். இதையே இறைவன் தன்னுடைய திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

{ قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله }
(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக : நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்:(அல் குர்ஆன்:3-31)

மற்றோர் இடத்தில் இறைவன் கூறுகின்றான் :
{ وما ءاتكم الرسول فخذوه وما نهكم عنه فانتهوا }
அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன்:59-07)

மேற்கண்ட திருமறையின் வசனம் மட்டுமல்ல, இன்னும் ஏராளமான வசனங்கள் இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றுமாறும், தங்களது வாழ்வியல் நடைமுறைகளுக்கு அவர்களை ஒரு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் எடுத்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகின்றது.

ஒரு குறிப்பிட்ட விசயத்திற்கு முஹம்மது (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏராளமான ஹதீஸ்களை நாம் காண முடியும். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் இறங்கிய காரணத்தால், ஒரே மாதிரியான வார்த்தை அமைப்பை பெற்றிராமல், வெவ்வேறு வார்த்தை அமைப்புகளில் அமைந்து, அதன் கருத்துக்களில் ஏற்பட்டிருக்கு மாற்றங்களால், ஒரே பிரச்னைக்கு அவை பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்டு அமைந்திருக்கின்றதைக் கொண்டு, அவை அனைத்தையும் நாம் நமக்குரிய வழிகாட்டுதல்களாக எடுத்துக் கொண்டு அதன்படிச் செயல்பட வேண்டும். இதில் எதனையும் நாம் புறக்கணித்துவிடலாகாது. மேலும் இவற்றில் குறிப்பிட்ட ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஒதுக்கி விடுவதும் கூடாது. அவ்வாறு செய்வது நம்மையறியாமல் நாமே வழிகேட்டிற்கு நம்மை இட்டுச் செல்வதற்கு ஒப்பாகும், இவ்வாறு செய்வது நமக்கு தீங்கையே விளைவிக்கும். ஒரு முஸ்லிம் எவ்வாறு நல்ல தரத்தில் அமைந்த ஸஹீஹான ஹதீஸைப் புறக்கணிக்க முடியும்? இதற்கு குர்ஆன் இவ்வாறு சாட்சியம் கூறுகின்றது : அதாவது,
{ وما ينطق عن اهوى ، إن هو إلا وحى يوحى }

அவர் தன் மனஇச்சையின்படி (எதையும்) பேசுவதுமில்லை. இது அறிவிக்கப்படும் (வஹியாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை. (அல் குர்ஆன் 53--3,4)

அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸுகளில் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான ஹதீஸுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, மற்றவற்றை உதாசினம் செய்ததனால், முஸ்லிம்களிடையே பல்வேறு பிரிவுகள் தோன்றி விட்டன. அந்தப் பல்வேறு பிரிவுகளின் தோற்றமானது முஸ்லிம்களிடையே பிளவுகளையும், பகைமையையும் உண்டாக்கி, முஸ்லிம்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் தங்களை எதிரிகளாகப் பாவித்துக் கொண்டு, ஒருவர் வழி நேரான வழியில் இல்லாததை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும், அவற்றை ஏற்றுச் செவிமடுத்து அடுத்தவர் கூறுவதில் என்ன தான் இருக்கின்றது என்பதைக் கூட ஆராய விடாமல் அவர்களது இந்தப் பிரிவினைப் போக்கு அவர்களைத் தடுத்துக் கொண்டிருப்பதோடல்லாமல், உங்கள் மார்க்கம் உங்களுக்கு! எங்கள் மார்க்கம் எங்களுக்கு! என்று கூறி சகிப்புத் தன்மை, ஒருவர் கருத்தை இன்னொருவர் மதித்தல் ஆகிய தன்மைகளை முஸ்லிம்களிடம் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் ஒருவர் மற்றொருவரிடம் அன்பு செலுத்துதல், வாய்மையுடன் நடத்தல், சகோதரத்துவம் ஆகியவற்றைத் தொலைத்து விட்டு அதற்குப் பதிலாக பகைமை, பொறாமை, அதிகப்பிரசிங்கித்தனமாக நடத்தல், அவமரியாதை செய்தல் ஆகியவைகள் முஸ்லிம்களிடத்தில் மலிந்து விட்டன. இதன் காரணமாக ஓருடலாக இருக்க வேண்டிய முஸ்லிம் உம்மத்தானது பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து, தங்களது கண்ணியம், கௌரவம், சிறப்பு, மதிப்பு, புகழ் ஆகியவற்றை இழந்து விட்டது. இத்தகைய நம்மிடையே காணப்படும் பகையுணர்வைப் பயன்படுத்தி மேலை நாடுகள் நம்மை அடக்கி ஆண்டு வருகின்றன. என்ன கைதேசம் பார்த்தீர்களா?

நாம் நம்மை ஹதீஸைப் பின்பற்றுகின்றோம் என்றும் சுன்னாவைப் பின்பற்றுகின்றோம் என்று அழைத்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையில், நமக்கிடையே ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?  அனைத்து இமாம்களும் முஸ்லிம்கள், அவர்கள் நமக்குப் பொதுவானவர்கள், நம்மைச் சார்ந்தவர்கள். நாம் மேலும் மேலும் இந்த நான்கு மத்ஹபுகளையும் ஆராய்வோமானால், அவை நம்மைப் பிரிக்க எதிரிகளால் திட்டமிடப்பட்ட சதி வலைகள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டு நாம் ஆராய்வோமானால், எதிரிகள் வேண்டுமென்றே இஸ்லாத்தினுள் திட்டமிட்டு பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் இஸ்லாமியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அவர்களை நாம் இனம் பிரிப்பது கூட இயலாத அளவுக்கு அவர்கள் முஸ்லிம்களாக தங்களைக் காட்டிக் கொண்டே இஸ்லாத்தின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தனர் அவர்களுக்கு சரி என்ன என்பதும், தவறு என்ன என்பதும் கிடையாது, இஸ்லாத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாகவே இருந்தது. இஸ்லாத்தில் மத்ஹபுகளைப் புகுத்தியதன் மூலம் அவர்கள்  தங்களது நோக்கத்தில் வெற்றியும் பெற்றனர். இவர்களின் சதிகளை அறியாத முஸ்லிம்கள் இன்றும் அந்த நாசகார வலையில் வீழ்ந்து தங்களது மார்க்கம் சுட்டிக் காட்டும் ஒற்றுமையை மறந்து வாழ்ந்து கொண்டிருகின்றனர்.

இப்னு அல் பர் மற்றும் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துக் கொடுத்த ஒரு ஹதீஸ் கிடைக்கப் பெற்று, அந்த ஹதீஸ் சரியானது தான் எனச் சரிபார்க்கப்பட்டு விட்டால், அந்த ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டுமே ஒழிய, மற்றவர்களின் கருத்துக்கு அங்கே எந்த இடமுமில்லை. மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் இந்த சரிபார்க்கப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் தான் தங்கள் மார்கக் கடமைகளைப் பேண வேண்டுமே ஒழிய, அங்கே இமாம்களின் கருத்துக்களைப் பார்க்கக் கூடாது. திருமறைக் குர்ஆனும், சுன்னாவுமே அனைத்துக்கும், அனைத்து அறிஞர்களின் கருத்துக்கும் மேலானது. இவற்றுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் எவரது கருத்தும் அர்த்தமற்றது, அடிப்படையற்றது. உதாரணமாக, சரியான ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் கூறும் போது, நாங்கள் நடைமுறைப்படுத்தத்தானே எங்கள் இமாம் இந்தக் கருத்தைக் கூறி இருக்க வேண்டும்? அவர் தவறானதையா எங்களுக்குச் சொல்லப் போகின்றார்? எனவே தான் நாங்கள் ஹதீஸை விட்டு விட்டு எங்கள் இமாமைப் பின்பற்றுகின்றோம் எனச் சொல்லி, மேற்கண்ட விவாதத்தை முன் வைக்கின்றார்கள். இது அவர்கள் செய்யும் விவாதம் அல்ல விதண்டாவாதமாகும். இவர்கள் உண்மையை ஆராயாமல், மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இந்த விதண்டாவாதத்தின் அடிப்படைக் காரணமாகும்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
((السنة ما سنة الله ورسوله صلىالله عليه وسلم لا تجعلو ا خطأ الرأْي سنة للأمة))
சுன்னா என்பது இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதும் ஆகும். சுன்னாவில் உங்கள் சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி இந்த உம்மத்திற்கு தந்து விடாதீர்கள்.

உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட கருத்தானது தொலைநோக்குப் பார்வை கொண்டதும், நாளை வரக் கூடிய அறிஞர்களுக்கு அவர்களது மேற்கண்ட கருத்து ஒரு எச்சரிக்கையாகவும் காட்டிச் சென்றுள்ளார்கள். இன்று நாம் நடைமுறையில் முஸ்லிம்களிடம் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமாக ஏராளமான நடைமுறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இவை அனைத்தையும் அவர்கள் உண்மையான தீனைப் பின்பற்றுவது போல் நினைத்துக் கொண்டு பின்பற்றிக் கொண்டு, தாமும் உண்மையான தீனில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இது தான் இன்றைய முஸ்லிம் உம்மத்தானது நடைமுறையில் சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய கைசேதத்திற்குரிய செயலாகும்.

இமாம் அவ்சாய் அவர்கள் கூறினார்கள் :
நீ (இந்த மனிதக் கூட்டத்தில் இருந்து) தனித்து விடப்பட்டாலும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த அந்த நேர்மையான மக்களின் (ஸஹாபாக்களின்) வழியைப் பின்பற்றுங்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அனைத்தும் குர்ஆனின் பெயராலும், சுன்னாவின் பெயராலும் அழகுற அமைக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டு, அர்த்தங்கள் கொடுக்கப்பட்ட வரிகளேயன்றி வேறில்லை.

பிலால் பின் அப்துல்லா (ரலி) அவர்கள், தன்னுடைய தந்தை அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் , முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறு கூறினார்கள் :
(( لا تمنعوا النساءَ حضور هن من المساجد))
“உங்கள் பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுது) வருவதைத் தடை செய்யாதீர்கள்”.
நான் என்னுடைய மனைவியை பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை, யார் விரும்புகின்றார்களோ அவர்கள் அனுப்பிக் கொள்ளலாம் அல்லவா? என்றேன். எனது இந்த வார்த்தைகளைக் கேட்ட எனது தந்தை என் பக்கம் திரும்பி, இறைவனுடைய சாபம் உன் மீது இறங்குவதாக எனக் கூறி விட்டு, நான் இறைவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய கட்டளையைத் தான் உனக்கு அறிவித்தேன், அதை நீ மறுத்து விடுவதற்கு உனக்கு என்ன துணிச்சல்? என்று கூறினார்கள். அவர்கள் இவ்வாறு கூறும் போது, எனது தந்தை என்னைத் தாக்கக் கூடிய விதத்தில் மிகவும் கடுமையாகக் காணப்பட்டார்.

ஒரு ஹதீஸைப் பின்பற்றுவதில் அன்று இருந்த அந்த உம்மத் எந்த அளவுக்கு தெளிவுடனும் உறுதியுடனும் இருந்துள்ளது என்பதையும், இன்றைய உம்மத் தெளிவான ஹதீஸ் கிடைத்த பின்பும் எங்கள் இமாம் கூறுவதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று கண்மூடித்தனமாக மத்ஹபு மாயையில் சிக்கிக் கொண்டு, தங்களை வழிகேட்டிற்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதைக் காணும் போது, முஸ்லிம்களைப் பிரித்து, அவர்களது மார்க்கத்தை களங்கப்படுத்த நினைத்த எதிரிகளின் சதிகளை இந்த முஸ்லிம் உம்மத் என்றைக்கு உணர்ந்து திருந்துமோ?! என்ற வேதனை எழுகின்றது.

கண்ணியத்திற்குரிய இமாம்களின் நடைமுறைகள்

ஹனபி மத்ஹபின் முக்கிய நூலான அல்-ஹிதாயா - வை மேற்கோள் காட்டி, ரவ்தத்துல் - உலமா அல்-ஸன்த்வாசியா என்னும் நூலில், அபு ஹனிஃபா அவர்களிடம், உங்களுடைய கருத்துக்கள் குர்ஆனுக்கு மாற்றமாக அதனுடன் ஒத்துப்போகாதபட்சத்தில், நாங்கள் எவ்வாறு எதன்மீது செயல்படுவது? என்று கேட்கப்பட்டதற்கு, குர்ஆனின் கட்டளைப்படிச் செயல்படுங்கள், என்னுடைய கருத்துக்களை தூக்கி எறிந்து விடுங்கள் என்று இமாம் அபு ஹனிஃபா அவர்கள் பதில் கூறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும், உங்களுடைய கருத்துக்கள் ஹதீஸுக்கு மாற்றமாக இருப்பின் எவ்வாறு நாங்கள் செயல்படுவது? எனக் கேட்கப்பட்டதற்கு, என்னுடைய வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு, ஹதீஸின்படியே செயல்படுங்கள் என்று கூறினார்கள். மீண்டும், உங்களுடைய கருத்துக்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களின் கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின் எவ்வாறு நாங்கள் செயல்படுவது? எனக் கேட்கப்பட்டதற்கு, என்னுடைய வார்த்தைகளை தூக்கி எறிந்து விட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களின் கருத்துக்களையே பின்பற்றுங்கள் எனக் கூறினார்கள்.  மேலும் கிதாபுல் இம்தா என்னும் நூலில் இமாம் பைஹக்கி அவர்கள் தன்னுடைய சுனனில் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள் : அதாவது, நான் கூறியிருக்கும் கருத்துக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுடைய கருத்துக்கும் இடையே எதை விடுவது என்ற நிலை ஏற்படுமானால், என்னுடைய கருத்தை விட்டுத் தள்ளி விட்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய கருத்தை (ஹதீஸை)யே பின்பற்றுங்கள் என்று இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் ஹரமைன் அவர்கள் மேற்கண்ட கருத்தை மிகத் தெளிவாக இன்னுமொரு நூலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள் :

ஒரு பிரச்னையில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதியானவர் வழங்கிய தீர்ப்பானது முஹம்மது (ஸல்) அவர்களுடைய ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பின், அந்த நீதிபதியின் தீர்ப்பை விட்டு விட்டு ஹதீஸையே இறுதித் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நீதிபதியின் தீர்ப்பை விட ஹதீஸின் தரமானது மிக உயர்ந்தது என்பதனாலேயாகும். பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கிடைய நீதிபதியின் தீர்ப்பை ஒரு சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பட்ட ஹதீஸை எந்த வாத பிரதி வாதங்களும் இல்லாமல் ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்னு கைய்யிம் அவர்கள் தன்னுடைய ஆலம் அல்-முவக்கியீன் என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் :

சில நேரங்களில் நம்முடைய கருத்துக்கள், ஆலோசனை மூலம் பெறப்பட்ட தீர்ப்புகள் ஆகியவைகளை விட தகுதியற்ற அறிவிப்பாளர் அறிவித்த ஹதீஸானது சிறப்பாக இருந்து விடும் என்று அனைத்து ஹனபி மத்ஹபைப் பின்பற்றும் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஹனபி மத்ஹபானது மேற்கண்ட கொள்கையை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறிருக்கும் போது ஒருவர் ஹதீஸின் அடிப்படையில் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்று ஹதீஸை ஒதுக்குவாரானால், அவர் உண்மையிலேயே ஒரு நல்ல உண்மையான முஸ்விமாக இருக்க மாட்டார், அவர் தன்னுடைய இச்சையைத் தான் அவர் பின்பற்றுகின்றார் என்பதாகத் தான் எண்ண வேண்டி இருக்கும்.  மேலும் யாராவது ஒருவர் ஹதீஸுகளை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலாது எனக் கூறினால், அவ்வாறு அவர் கூறுவது யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாததொரு   அர்த்தமற்ற வாதமாகும். இறைவன் தன்னுடைய திருமறையை மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், திருமறையின் அர்த்தங்களைச் சாதாரண மனிதர்களும் புரிந்து கொண்டு, அவற்றைத் தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காக எளிதாக்கியும் இருக்கும் போது, குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்துள்ள ஹதீஸுகளைப் புரிந்து கொள்ள இயலாது என்ற இவர்களின் வாதம் எந்தளவு அர்த்தமற்றது? என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலும். இறைவன் தன்னுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு திருமறைக் குர்ஆனை வழங்கி, மக்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்லுமாறு தன் திருமறையிலேயே நபியவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான் : அதாவது,

{ بالبينت ولزبر، وأنزلنا إليك الذكر لتبين للنس ما نزل إليهمْ ولعلهم بتفكرون }
தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (அத்தூதர்களுக்கு நாம் கொடுத்தனுப்பினோம்). மேலும், மனிதர்களுக்கு அவர் பால் இறக்கி வைக்கப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக மற்றும் அவர்கள் சிந்திப்பவர்களாக ஆகிவிடலாம் என்பதற்காகவும் உம்பால் இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்தோம். (அல் குர்ஆன் 16:44).

ஹதீஸானது அடிப்படையிலேயே குர்ஆனைத் தெளிவுபடுத்துவதாகவே இருக்கும் போது, ஒருவர் ஒரே இமாமின் பின்னால் நின்று கொண்டு, அவரை மட்டும் தான் நான் பின்பற்றுவேன் என்று கூறி ஹதீஸுகளைப் புறக்கணிப்பது எவ்வாறு? மேலும் இவர்கள், இன்று குர்ஆனையும் ஹதீஸுகளையும் தீர ஆய்வு செய்து (இஜ்மா) சட்டங்களை வழங்கக் கூடிய அளவில் யாரும் அறிவாளிகளாக யாரும் இல்லை என்றதொரு வாதத்தை இந்த மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடியவர்கள் நம் முன் வைக்கின்றார்கள். இவர்களின் இந்த வாதமானது தங்களது மன இச்சைகளைப் பின்பற்றி, மத்ஹபுகளின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அந்த கண்மூடித்தனமான நம்பிக்கைக்குப் பங்கம் வராமல் காப்பதற்காகவும், அவற்றின் தவறுகளை மூடி மறைப்பதற்காகவும், இவர்கள் கூறும் இந்தக் காரணங்கள் யாவும் அர்த்தமே இல்லாத நிரூபிக்க இயலாத, தங்களது மனஇச்சைகளைப் பின்பற்றிக் கூறப்படும் வறட்டுப் பிடிவாதமேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் !? குர்ஆனையும் ஹதீஸையும் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியாது. இவற்றை இஸ்லாமிய உலமாப் பெருமக்களாலும் அல்லது இமாம்களாலும் தான் விளங்கிக் கொள்ள முடியும் என்ற முதல்வாதத்தை எடுத்து வைத்துப் பின்னர், இன்றுள்ள உலமாப் பெருமக்களின் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல என்றும் கூறி சாதாரண மக்களை இவர்கள் குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர். உலமாக்களால் அறிவிக்கப்பட்ட சில கருத்துக்களைச் சில நேரங்களில் சில மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவற்றுக்கு எதிரான சில கருத்துக்களைக் கூறுவதுண்டு. அவர்களின் இந்த எதிர் கருத்தானது நேர்மையானதாகவும், ஒருவரால் கூறப்பட்ட கருத்தில் ஏற்பட்ட பிழைகளைச் சரி செய்வதற்காகவும் தான் இருந்திருக்குமே ஒழிய, இவ்வாறு ஒரு உலமாப் பெருந்தகை தவறிழைத்து விட்டார் என்று காரணத்திற்காக மேற்படி மத்ஹபு அபிமானிகள் சொல்வது போல அனைத்து உலமாக்களின் கருத்தையும் உதறித் தள்ளி விட்டு, ஒரு குறிப்பிட்ட இமாமையோ அல்லது அறிஞரையோ சார்ந்திருந்து, தன்னுடைய மார்கக்கடமையை நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்து மட்டுமே வழிகாட்டுதலை எடுத்துக் கொள்வேன் என்று கூறுவது, முற்றிலும் தவறானதும், குர்ஆனையும், ஸஹீஹான முறையில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸுகளைப் புறக்கணிப்பதுமாகும் என்பதைச் சாதாரண மக்களுக்கும் உணர்தத்தான் அவர்கள் இவ்வாறு மாற்றுக் கருத்தைக் கூறி இருக்க வேண்டும். மேலும் சிலர் தான் பின்பற்றிக் கொண்டிருக்கும் மத்ஹபு சரியில்லை எனச் சொல்லி, இன்னொரு மத்ஹபைப் பின்பற்றுவதும், ஒரே நேரத்தில் எல்லா மத்ஹபுகளையும் பின்பற்றுவதும் தடை செய்யப்பட்டதும் மற்றும் சட்டத்திற்கு விரோதமானதுமாகும். இவ்வாறு அனைத்து மத்ஹபுகளையும் பின்பற்றும் போது யாரும் குறை சொல்ல வழியில்லையே எனச் சிலர் நினைப்பதும் தவறானதாகும். இத்தகைய செயல்களுக்க இஸ்லாத்தில் எந்தவித அனுமதியும் கிடையாது. இன்னும்; ஒரு மத்ஹபை மட்டும் சார்ந்திருந்து அவற்றைப் பின்பற்றுவது என்ற கருத்தை,  தெளிவான கொள்கையைக் கொண்ட மார்க்க அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் சில அறிஞர்கள் ஒரே மத்ஹபை மட்டும் பின்பற்றிக் கொண்டு, இந்த ஹதீஸுகள் யாவும் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து பெறப்பட்டவை என்று அறிந்திருந்தும், ஹதீஸுகளைப் புறந்தள்ளி விடுகின்றனர். ஸஹீஹான ஹதீஸை எடுத்துக் கொண்டு, அதன்படிச் செயல்படுவதென்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது என்பதை இவர்கள் தெளிவாக அறிந்திருந்தும் இவர்கள் ஆதாரமே இல்லாத மத்ஹபுகள் கூறக் கூடிய கருத்துக்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள். குர்ஆனும், ஹதீஸும் ஆகிய இரண்டுமே, மற்ற அனைத்துக் கருத்துக்களையும் தடை செய்யப் போதுமானதாக இருக்கின்றது. குர்ஆனையும்  சுன்னாவையும் விட்டு விட்டு, ஒருவர் அதற்குப் பதிலாக இமாம்களைப் பின்பற்றுவாரானால் அவர் இஸ்லாத்தின் மீது நம்பிக்கையற்றவர், அவருடைய சமயப் பார்வையானது குருட்டுத்தனமானதுமாகும்.

இறைநம்பிக்கையாளர்களின் வழிமுறைகள்

;இறைநம்பிக்கையாளர்கள் யார் எனில் அவர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் தங்கள் வாழ்வினிலே முழுமையாகக் கடைபிடிப்பவர்களாவார்கள். அதாவது முஸ்லிமான ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் அவர்கள் குர்ஆனுக்கு அடுத்ததாக தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறைகளான ஹதீஸுகளையும் பின்பற்றுவது என்பது இறைவனால் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஹதீஸுக்கு மாற்றமாக யார் நடந்தாலும் அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதாகும். இது பற்றித் தன் திருமறையில் இறைவன் கூறுகின்றான் :

{ فليحذر الذين يخالفون عن أمرهِ أن تصيبهم فتنة أوْ يصيبهم عذاب أليم }
ஆகவே (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும். (அல் குர்ஆன் 24:63).

நல்லதொரு ஹதீஸ் கிடைக்கப் பெற்றிருக்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பவர் அதனை விட்டு விட்டு, கண்மூடித்தனமாக மத்ஹபைப் பின்பற்றுவது என்பது ஒரு நல்ல முஸ்லிமிற்கு ஏற்புடையதல்ல. அவர் தன்னுடைய நடைமுறையை குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் ஏற்புடையதாக மாற்றிக் கொள்ளவில்லையானால், கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்  குறிப்பிட்டுக் கூறியுள்ளவர்களும், இவர்களும் சமமானவர்களேயாவர், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் என்பது கிடையாது.

{ ولءِنْ أتيـت الذين أوتـو الكـتب بكل ءايةٍ ما تبعوا قبلتك }
(ஆகவே, நபியே!) வேதங்கொடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு (விதமான) சான்றையும் நீர் கொண்டு வந்தாலும், அவர்கள் உம்முடைய கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2:145)

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனையும், சுன்னாவையும்  மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற இறைவனின் கட்டளையை மதிக்கின்றார்கள். அதனைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொள்கின்றார்கள். ஆனால் இதற்கிடையே மத்ஹபுகள் வந்து குறுக்கிடும் போது, இறைக்கட்டளையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தில் தடையொன்று ஏற்படுகின்றது. மத்ஹபுகள் குறுக்கிடாத வரை அவர்களது நோக்கத்தில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. மத்ஹபின் கொள்கைகளோ அல்லது அதை ஏற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிமோ தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் குர்ஆனில் இருந்தும் சுன்னாவில் இருந்தும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வதில், அவர்களது மனதில் எந்தவித இடையூரோ அல்லது சங்கடங்களோ எழக் கூடாது. இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :

{ فإن تنزعتم في شىءٍ فردوهُ إلى الله والرسول إن كنتم تؤْمنون بالله واليوم الأخر }
யாதொரு விசயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்விடமும், (அவனுடைய) தூதரிடமும் திருப்பி (ஒப்படைத்து) விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்.) மெய்யாகவே நீங்கள்  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால்,. (அல் குர்ஆன் : 4:59)

ஒரு விசயத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், உடனே அவர் தன்னுடைய கவனத்தை ஹதீஸின் பக்கம் செலுத்த வேண்டும். அதிலிருந்து தனக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். ஒரே விதமான  பிரச்னைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை இமாம்கள் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், வாழ்வியல் நடைமுறைகளான முஹம்மது (ஸல்) அவர்களுடைய ஹதீஸுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மத்ஹபுகளை அறிவித்த இமாம்களும், இன்றுள்ள உலமாப் பெருமக்களும் நம்மைப் போல, தவறிழைத்து விடக் கூடிய, தவறான கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ வெளியிட்டு விடக் கூடிய சாதாரண மனிதர்களேயாவார்கள். ஆனால், முஹம்மது (ஸல்) அவர்களோ எல்லாவித தவறுகளுக்கும் அப்பாற்பட்டவர்களும், இறைவனால் பாதுகாக்கப்பட்டவர்களும் ஆவார்கள். இவ்வளவு உண்மைகளைத் தெரிந்திருந்தும் ஒருவர் மீண்டும்,  தான் ஏற்றுக் கொண்டுள்ள இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைக் கொண்ட மத்ஹபுக் கொள்கைகளையும், அதன் இமாம்களையும், அதில் உள்ள உலமாக்களையும் தான்  நான் பின்பற்றுவேன் எனச் சொன்னால், அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறைகளைக் கொண்ட ஹதீஸுகளை மதிக்கவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது.

ஏராளமான நபர்கள் இஸ்லாத்தில் தீவிரப்பற்றுடையவர்களாக இருப்பினும், அவர்கள் அனைவரும் ஹதீஸுகளின் மீது தங்களது கவனத்தைத் திருப்பாமல், தங்களது முழு நேரத்தையும் ஒன்றுமில்லாத மத்ஹபுச் சட்ட நூல்களை ஆராய்வதிலேயே தங்களது பொன்னான நேரங்களை வீண்விரையமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய இவர்களின் செயல்பாடுகள் உண்மையையும், சத்தியத்தையும் ஒதுக்கி விட்டு, அசத்தியத்திலும், உண்மைக்கு மாற்றமானவைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வழிகேட்டில் உழன்றுகொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தான் காட்டுகின்றது.

முஹம்மது ஹயாத் சிந்தி என்பவர் கூறுகின்றார் :
குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொண்டு, அவற்றின் உள்அர்த்தங்களை விளங்கிச் செயல்படுவது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். மேலும், இவற்றிலிருந்து எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக் கூடாது என்பதையும் தெளிவாகக் கற்றுணர்ந்து செயல்பட வேண்டும். மேற்கண்டவற்றை ஒருவர் தன்னால் செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பாரேயானால், அவர் அவற்றை விளக்கிச் சொல்லக் கூடிய உலமாக்களை அணுகி, அவற்றை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உள்ள மனிதர் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே பின்பற்றி, அவரது கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பளிப்பேன், செயல்படுத்துவேன் எனக் கூற இயலாது. இவ்வாறு செய்வதால் அந்த இமாமை நபிமார்களுக்கு சமமாகக் கருதிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். மேலும், அத்தகைய நிலையில் இமாமாக இருப்பவர்,  ஒருவருக்கு வேண்டிய அனைத்துச் சட்டங்களையும் இயற்றித் தருவதனால், அவர் கடவுள் தன்மைக்கு ஒப்பானவராகவும் ஆகி விடக் கூடிய படுபாதக விளைவும் ஏற்பட்டு விடும் என்பதற்கு, அதி பின் ஹாத்திம் என்பவர் ஒரு குர்ஆனின் வசனத்திற்கு அவர் வழங்கிய விளக்கமே சாட்சியமாக அமைந்திருக்கின்றது.

{ إتخذواْ أحبارهم ورهبنهم أرباباً مندون الله }
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிமார்களையும், தங்கள் சந்நியாசிகளையும், மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். (அல் குர்ஆன் : 9:31)

ஒருவர் ஒரு வழிமுறையைப் பின்பற்ற நாடினால், அவர் எல்லா மத்ஹபுகளும் ஒப்புக் கொண்டிருக்கின்ற கருத்துக்களைத் தான் ஏற்றுப் பின்பற்ற வேண்டும். அதிகபட்ச வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்ற நேரத்தில், அனைத்து இமாம்களும் அல்லது மத்ஹபுகளும் அனுமதி வழங்கியுள்ளவைகளை மட்டுமே ஏற்றுப் பின்பற்ற வேண்டும், மேலும், அங்கு அதிகபட்சத் தேவையில்லாத பட்சத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளவற்றின் மீது செயல்பட்டுக் கொள்ளலாம். நமது கருத்து என்னவென்றால், முஸ்லிம்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டவர்கள் என்றில்லாமல், ஒரே வழிமுறையைப் பின்பற்றுபவர்கள் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதேயாகும். அல்லது இந்த மத்ஹபு சரியில்லை, அதனால் இதை விட்டு விட்டு வேறு மத்ஹபுக்கு மாற்றிக் கொள்வதோ அல்லது இன்னும் பல்வேறு பிரிவுகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தங்களுடன் இணைத்துக் கொள்வதோ சரியான வழிமுறையல்ல. கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் ஏன்? எதற்கு? என்ற காரணங்களை அறியாமல், அறிவுக்கு வேலை கொடுக்காமல், சந்தேகத்திற்கிடமான வழிகளில் நகைப்புக்கிடமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

இமாம் ஷாஃபிஈ அவர்கள் கூறுகின்றார்கள் :
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவற்றிற்கும், அனுமதி மறுக்கப்பட்டவற்றிற்கும் ஆன ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் கிடைக்கப் பெற்றிருக்கும் போது, அவற்றை ஏற்று உண்மையான, தூய்மையான வடிவில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட்டு விட்டு, குறிப்பிட்ட இமாமை (அவரையும் சேர்த்தே) பின்பற்றுகின்ற காரணத்தினால்,இந்த கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுவதனால் ஏற்படும் சூழ்நிலைத் தாக்கங்கள் ஆதாரப்பூர்வமான அந்த ஹதீஸை ஏற்பதிலிருந்து, இவரைத் தடுக்கின்றன. அந்த இமாம், எதனைத் தனக்குத் தடைசெய்திருக்கின்றாரோ அவற்றைத் தடுத்துக் கொள்வதும். எதனைத் தனக்கு ஆகுமானதாக ஆக்கியிருக்கின்றாரோ அவற்றை ஆகுமாக்கிக் கொள்வதும் ஆகியவற்றை தன்வாழ்வில் நடைமுறைப்படுத்திக் கொண்டு, அத்தகையவர்கள் தங்களுடைய இமாம்களை இறைவனுக்கு நிகராக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்களாக இருக்கின்றோம், அவனிடமே நம்முடைய திரும்புதலும் இருக்கின்றது).

சந்தர்ப்பவசமாக, இந்த மத்ஹபைப் பின்பற்றும்  ஒருவர், ஒரு நபித்தோழர் செய்து காட்டிய சொல் அல்லது செயல் ஆகியவை ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸிற்கு முரண்படும் வகையில் இருப்பதை அறிந்து கொண்டால், உடனே அவர் இந்த நபித் தோழர், முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸைக்  கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதனால், உடனே அந்த ஹதீஸைத் தள்ளுபடி செய்து விடுகின்றார். அவர் தள்ளுபடி செய்தது உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். அதே நேரத்தில் தான் பின்பற்றிக் கொண்டிருக்கும் இமாமுடைய நடைமுறையானது அல்லது கருத்தானது ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு முரண்பாடாக இருப்பதை அறிய நேர்ந்து விட்டால், மேலே கண்டவாறு அந்த நபித் தோழரின் ஹதீஸை எந்தக் காரணத்தைச் சொல்லி அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமற்றது என்று ஒதுக்கினார்களோ, அதே நடைமுறையைப் பயன்படுத்தி, இமாமினுடைய ஆதாரப்பூர்வமற்ற கருத்துக்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, மேற்படி ஹதீஸை ஏற்றுக் கொண்டு செயல்படாமல் , தான் பின்பற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய இமாமினுடைய கருத்துக்களை ஆதரிப்பவராக மாறிவிடுகின்றார். உடனே அந்த ஹதீஸிற்கு பல்வேறு தவறான விளக்கங்கள், அர்த்தங்கள் கொடுக்க ஆரம்பித்து அதன் கருத்தையே மாற்ற முயற்சி செய்கின்றார்கள். இல்லை, மிக இலகுவாக எங்களது இமாமுக்கு அந்த ஹதீஸானது கிடைக்கப் பெறவில்லை என்று நாகூசாமல் கூறிவிடுகின்றார்கள். இவர்களது இமாம்களுக்கு மட்டும் அந்த ஹதீஸ் கிடைக்கப் பெறவில்லை என்று கூறுபவர்கள், இதே அளவு கோளை அந்த நபித் தோழர் அறிவித்த ஹதீஸிற்கும் கொடுக்காமல், உடனே அவற்றை ஆராயமல், எடுத்த எடுப்பிலேயே கண்மூடித்தனமாக ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். ஏனென்றால் இவர்கள் அனைவரைக் காட்டிலும் தங்களது இமாம்களை உயர்வாகக் கருதுவது தான் காரணமாகும். மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் ஹதீஸுகளைக் கற்றும், பிறருக்குப் போதித்தும் வருகின்றார்களே ஒழிய, அதன் அர்த்தங்களையும், கருத்துக்களையும் விளங்கிச் செயல்படுகின்றார்களில்லை. ஒரு ஹதீஸானது அவர்களது நம்பிக்கைகளுக்கு மாற்றமாக இருக்கின்றது எனச் சொன்னால், அந்த ஹதீஸிற்குப் பல்வேறு விளக்கங்களும், அர்த்தங்களையும் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அவற்றிற்கு வேறு எந்த விளக்கங்களும் கொடுக்க இயலவில்லை எனில், எங்களது இமாம் இவ்வாறு கூறியிருக்கின்றார், அவர் குர்ஆனிய மற்றும் ஹதீஸ் கலைகளில் வல்லவர், மிகவும் நிபுணத்துவம் பெற்றவர், அவர் நம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்.

ஆகையால், அவரது செயலைக் கவனிக்காது, அவரைப் பின்பற்றுவது ஒன்று தான் நமது கடமை என்று கூறிவிடுகின்றனர். ஆனால், இமாம்களுடைய கருத்தானது இவர்களது இந்த செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாற்றமானதாக இருக்கின்றது. அதாவது, எங்களது கருத்துக்கள் மற்றும் தீர்ப்புக்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ளவற்றை, அதாவது அவை குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் முரண்படாதவைகளாக இருக்கின்றன என்பதை அறியாத வரையிலும், எங்களுடைய கருத்துக்களை மற்றும் தீர்ப்புக்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கின்றனர் என்பதைச் சிந்தித்துப் பார்க்க மறந்து விடுகின்றனர்.

மேலும், நமது ஒவ்வொரு தவறான செயல்பாடுகளுக்கும் நாம் மறுமையில் இறைவனது நீதி மன்றத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதே போல தீர்ப்புக் கூறப்பட்டவற்றில் கருத்து முரண்பாடு செய்வது கூடாது என்பதையும் நாம் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும். இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

{ فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدواْ في أنفسهم حرجاً مما قضيت ويسلمواْ تسليماً }
ஆனால், உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்;ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (அல் குர்ஆன் 4:65).

ஸனத் இப்னு அனான் என்பவர் மாதவ்வனாஹ் என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
அதாவது, அறிவுள்ள, எதையும் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களை ஒரு இமாமின் கருத்தை மட்டும் பின்பற்றுபவராக நிலைநிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்த விதியானது எல்லோருக்கும் பொருந்தும் என்றும் கூறவில்லை. ஒரு படிக்கத் தெரியாத, கல்வியறிவற்ற ஒரு முஸ்லிம் வேண்டுமானால், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய நிலையில் உள்ளவர், தான் பெற்றுக் கொண்ட கருத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள, சிந்திக்க வேண்டியவராகவும் உள்ளார். யாருடைய கருத்தையும், அது எதற்காகக் கூறப்பட்டது, ஏன் கூறப்பட்டது எனச் சிந்திக்காமல், கண்மூடித்தனமாக அதை ஆதரிப்பது அல்லது அதன்படிச் செயல்படுவது என்பது குருட்டுத்தனமான நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கையானது ஒருவரை சிந்திக்க விடாமல் செய்து அவரை அறிவுக் குருடராக ஆக்கி வைக்குமே ஒழிய, நேர்வழிபெற்றவராக ஆக்கிவிடுவதில்லை. மாறாக அவரை வழிகேட்டிற்கே இட்டுச் செல்லும். இத்தகைய வழிகேடுகள் எல்லாம் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் உருவாகவில்லை. அவர்களின் தோழர்களின் காலத்திலும் உருவாகவில்லை. அந்த உத்தம நபித் தோழர்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைக் குர்ஆனில் இருந்தும், ஹதீஸீகளில் இருந்தும் பெற்றுக் கொண்டனர். அவர்களது பிரச்னைக்குக் குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும் வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றால், அனைவரும் ஒன்று கூடி அது பற்றி ஆய்வு செய்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் முடிவுகளைக் கண்டு, அதன்படித் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்கள். நபித்தோழர்களை அடுத்து வந்த இரண்டாம் தலைமுறையும் இதே நிலையைத் தான் மேற்கொண்டது. இதற்கு அடுத்து வந்த மூன்றாம் தலைமுறையில் வந்தவர்களான, இமாம் அபு ஹனிபா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஇ, இமாம் அஹ்மத் போன்றோர்களும் மேற்கண்ட நபித்தோழர்களின் வழிமுறையைப் பின்பற்றி ஒருமித்த கருத்தை எடுத்துச் செயல்பட்டனர், அதன்படிச் செயல்படவும் கற்றுக் கொடுத்தனர். இவர்களுடைய காலத்தில் ஒரே இமாமையோ அல்லது ஒரே நபரையோ பின்பற்றும் மோசமான பழக்கம் காணப்படவில்லை. அதிலும் இந்த இமாம்களைப் பின்பற்றிய அவர்களது மாணாவர்களின் காலத்தில் கூட இந்தப் மூடப்பழக்கம் காணப்படவில்லை, தங்களுக்கு வழிகாட்டுதல்களாக குர்ஆனும், சுன்னாவும் கிடைக்கப் பெற்ற போதெல்லாம் அவற்றைத் தவற விடாது, மறுக்காமல் ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். இமாம் அபு ஹனிபா மற்றும் இமாம் மாலிக் அவர்களின் மாணவர்கள் பலர், இவ்வாறு ஒருவரையே சார்ந்து பின்பற்றுவதை பல இடங்களில் கண்டித்தும் உள்ளனர். இமாம்களும், அவர்களது மாணவர்களும் குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றக் கூடிய அந்த பழைய முறையைத் தான் பின்பற்றினார்கள் என்பதற்கு நாம் அதிகம் ஒன்றும் விளக்கமளிக்கத் தேவையில்லாமல், அவர்களது கருத்து தெளிவாக இருந்துள்ளது. ஆனால், இந்த மத்ஹபு என்னும் மூடப்பழக்கமானது, உத்தம நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு வழிகாட்டிவிட்டுச் சென்ற அந்த பொன்னான நாட்களுக்குப் பின், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியது தான் இந்த மத்ஹபு என்னும் மூடப் பழக்கம். இந்தப் பழக்கம் அதற்கு முன் இருந்ததில்லை என்பதை மத்ஹபிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூட ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு உலமாப் பெருந்தகையான சிந்தி என்பவரும் குறிப்பிட்ட ஒரு இமாமைப் பின்பற்றி வருவது தடைசெய்யப்பட்டதும், கண்மூடித்தனமாகதுமாகும் என்று  குறிப்பிட்டுள்ள அவரது கருத்தானது குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் ஏற்புடைய கருத்தாகும் என்பதில் ஐயமில்லை. சந்தேகமில்லாமல் இது ஒரு மூடப்பழக்கமேயாகும். இந்த மூடப்பழக்கமானது முஸ்லிம் என்ற ஒரே உம்மத்தைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டி ஷைத்தான் எடுத்த அசத்திய வேலையாகும். இந்த மத்ஹபு அபிமானிகள் நபி முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்களை விட இமாம்களை மிகவும் மதிப்புமிக்கவர்களாகவும், கண்ணியமானவர்களாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களது இமாம்களின் கூற்றுக்கு நெருக்கமாக ஒரு ஹதீஸ் கிடைக்கப் பெற்று விட்டால், அந்த ஹதீஸைக் காட்டி தங்களது இமாம்களின் கருத்துக்கு வலுச் சேர்க்கினறனர். அதே போல் ஒரு ஹதீஸ் இன்னுமொரு இமாமின் கருத்துக்கு மிக நெருக்கமாக இருக்குமேயானால், அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். எந்தவொரு ஹதீஸ் அவர்களது இமாம்களின் கருத்தை ஆதரிக்கவில்லையோ அந்த ஹதீஸை உதாசினம் செய்து விடுகின்றனர், தேவையற்றது என்று ஒதுக்கி விடுகின்றனர். ஆதரப்பூர்வமான அந்த ஹதீஸை ஏற்றுச் செயல்படுவதை விட்டு விட்டு, தங்களது இமாம்களின் கூற்றுத் தான் சிறந்தது எனக் கூறி, அவர்களது இமாம்களுக்கு ஆதரவாக வாதாடவும் ஆரம்பித்து விடுகின்றனர். சில வேளைகளில் தங்களது இமாம்களின் கூற்றுக்கு ஆதரவாக ஹதீஸுகளின் அர்த்தங்களை மாற்றியும், இமாம்களின் கூற்றுக்கு ஏற்ப வளைக்கவும் முயற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்ய இயலவில்லை எனில், எந்த வித வாதபிரதி வாதங்களுக்கும் அந்த ஹதீஸை உட்படுத்தாமல், அவற்றை ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யாமல், அவற்றைத் தள்ளுபடி செய்வதற்குண்டான எந்த வித ஆதாரமும் இல்லாத நிலையிலேயே தள்ளுபடி செய்து விடுகின்றனர். கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றும் இத்தகையவர்கள் தங்கள் இமாம்களுக்கெதிராக கூறப்படும் எந்தவித வித கருத்தையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அவற்றை நிராகரிக்கவோ சம்மதிப்பதில்லை. இந்த மத்ஹபுகளின் கருத்துக்கு எதிராக குர்ஆனில் இருந்தும், ஹதீஸுகளில் இருந்தும், மறுக்க முடியாத வகையில் அமைந்த தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தாலும், அந்த ஆதாரங்களை அவர்கள் ஏற்க மனமில்லாமல், அதைவிட்டும் அவர்கள் வெருண்டு தான் ஓடுகின்றார்கள். இதையே திருமறை இவ்வாறு கூறுகின்றது :

{  كأنهم حمرُ مستنفرةٌ . فرتْ من قسورة  }
அவர்கள் வெருண்டோடுகின்ற (காட்டுக்) கழுதைகளைப் போல் (இருக்கின்றனர்). (காட்டுக் கழுதைகளான) அவை சிங்கத்தை விட்டும் வெருண்டோடின.(அல் குர்ஆன் 74 : 50 - 51).

அந்தக் காட்டுக் கழுதைகள் சிங்கத்தை விட்டே வெருண்டோடுவது போல், இவர்கள் உண்மையைக் கண்டு வெருண்டோடுகினறனர். இங்கு அதாவது, புனிதமிக்க பள்ளிகளான மக்கா மற்றும் மதினாவில் வசிக்கும் இந்தியா மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் தான், அதிகமான அளவில் உண்மையைக் கண்டு வெருண்டோடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களை வழிநடத்தக் கூடிய உலமாக்கள் இஸ்லாமிய அங்க அடையாளங்களோடு காட்சி தருகின்றார்களே ஒழிய, ஆனால் உண்மையிலேயே அவர்கள் தான் வழிகெடுப்பாளர்கள். 

அபுல் காசிம் அல் குஷைரி என்ற அறிஞர் கூறுகின்றார் :
உண்மையிலேயே உண்மையைத் தேடுகின்ற முஸ்லிமானவன் செய்ய வேண்டியது என்னவென்றால், அவன் எப்பொழுது தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவைகளையும், தவறே ஏற்படாத சந்தேகங்களிலிருந்து அப்பாற்பட்டவைகளிலிருந்தும் தான் தன்னுடைய வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மேலும், தவறிழைத்து விடக் கூடியவைகளிலிருந்தும், நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடியவைகளிலிருந்தும் நாம் நம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இமாம்களின் கருத்துக்களிலிருந்து நமக்கு எது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையோ மற்றும் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமாக இல்லாமல், இவற்றின் கொள்கைகளுக்கு மாறுபடாமல் இருக்கின்றதோ அவற்றைப் எடுத்துச் செயல்படுத்துவதும், இவற்றிற்கு மாறுபட்டவைகளைப் புறக்கணித்து விடுவதும் தான் உண்மையான முஸ்லிமிற்கும், சத்தியத்தைத் தேடக் கூடியவனுக்கும் உள்ள நல்ல அடையாளங்களாகும். குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் மாற்றமான வகையில் எந்த அறிஞரோ அல்லது சூபியோ அல்லது நீதிபதியோ சொன்னாலும், அதை யார் சொன்னார்கள் எனப் பார்க்காமல், அது தவறானது என்று அறிந்து கொண்ட மாத்திரத்திலேயே அவற்றைப் புறக்கணித்து விடவேண்டும். யார் இந்த அளவு கோள்களை எல்லாம் புறக்கணித்து விடுகின்றார்களோ அவர்கள், மிகப் பெரியதொரு நஷ்டத்திலே இருக்கின்றார்கள் என்பதும், அவர்கள் பின்பற்றக் கூடிய மத்ஹபுகளும், இஸ்லாத்திற்கு முரணான கருத்தைக் கூறக் கூடியவர்களும் இஸ்லாத்தினால் தடை செய்யப் பட்டவர்களும் ஆவார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். சத்தியத்தைத் தேடக் கூடியவர்கள் எப்பொழுதும் தங்களது வணக்க வழிபாடுகள் மற்றும் நடைமுறைகளில் தவறுகள் ஏற்பட்டு விடாதவாறும், தவறுகளை ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்துவதிலிருந்தும் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். இமாம்களைப் பின்பற்றக் கூடியவர்கள், இமாம்கள் கூறக்கூடிய கருத்துக்கள், குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும், அறிஞர்கள் கூடி எடுக்கக் கூடிய அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவைகளான இஜ்மா மற்றும் கியாஸ் ஆகியவற்றுக்கும் ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை கவனமுடன் ஆராய்ந்து, இவைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில் இமாம்களின் கருத்துக்களைப் பின்பற்றுவதில் தவறில்லை.  இதுவல்லாமல், மேற்கண்ட இஸ்லாமிய சட்ட முடிவுகளுக்கும் அதன் வரையறைகளையும் மீறக் கூடிய அளவில்  இமாம்களின் கருத்துக்கள் இருந்தாலும். அவற்றை விட்டு நீங்காமல் ஒருவர் மீண்டும் அந்தத் தவறான கொள்கைகளின் வழியே தன்னுடைய அமல்களை செயல்படுத்தி வருவாரேயானால், அவரது அணுகு முறை முற்றிலும் தவறானதும், அவர் வழிகேட்டில் இருக்கின்றார் என்றும் கருதப்படும். அவர் இமாம்களைப் பின்பற்றுகின்றார் என்று கூறுவதை விட அவர் தன்னுடைய மன இச்சையின் பிரகாரம் தன்னுடைய அமல்களைச் செயல்படுத்திக் கொள்கின்றார் என்றே கருதப்படும். இவர்களின் இத்தகைய தவறான செயல்களுக்காக இமாம்கள் பொருப்பேற்கக் கூடியவர்களல்லர். அவர்கள், குர்ஆனையும், சுன்னாவையும், இரண்டுக்கும் முரண்படாத தெளிவான இஸ்லாமியச் சட்டங்களையும் தான் வழுவாது பின்பற்ற வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கூறிச் சென்றுள்ளார்கள். எனவே, இந்த வழிகேடர்கள், இமாம்களின் பெயரைச் சொல்லி தங்களை வழிகேட்டில் தங்களைத் தாங்களே இட்டுச் சென்று கொண்டிருப்பதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாளிகள் அல்லர். இந்த வழிகேடர்கள் தங்களையும் வழிகேட்டில் தள்ளிக் கொண்டு, பிறரையும் வழிகேட்டில் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.; இறைவனால் நமக்கு அனுப்பி வைக்ககப்பட்ட நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்)  அவர்கள் மூலம் பெறப்பட்டவைகள் மட்டும் தான் உண்மையும், சத்தியமும், நேர்வழியும் ஆகும். இந்த உண்மைகளுக்கு மாற்றமாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்கும் எந்த இமாமைப் பின்பற்றினாலும் சரி, அது சுத்தமான முட்டாள்தனமான செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்து இமாம்களும் தங்களையும், தங்களைப் போன்றவர்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் கடுமையான முறையில் கண்டனம் செய்திருக்கின்றார்கள். இவர்கள் நாங்கள் எந்த இமாமைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்களோ அந்த இமாம்கள் குர்ஆனையும், சுன்னாவையும் தான் பின்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குர்ஆனில் இருந்தும், ஹதீஸுகளில் இருந்தும் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற பின்பும், என்னுடைய இமாம் கூறிய கருத்தைத் தான் பின்பற்றுவேன் என்று கூறி ஒருவர் மத்ஹபையே பின்பற்றுவாரானால், அவர் தவறிழைக்கின்றார் என்பதை விட அவர் எந்த மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த மத்ஹபை விட்டு வெளியேறியவராகவும், எந்த இமாமைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அந்த இமாமினுடைய கருத்திற்கு மாறு செய்தவராகவும் ஆகிவிடுகின்றார். இவருடைய நிலையில் இன்று இவர் பின்பற்றக் கூடிய இமாம் உயிருடன் இருக்கும் பட்சத்தில், அவர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிடைத்த மாத்திரத்தில், அவருடைய கருத்ததை மாற்றிக் கொண்டு, அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையே பின்பற்றுவாரே ஒழிய, இவரைப் போல் கண்மூடித்தனமான குருட்டுத்தனமான வகையில் மத்ஹபு மாயையில் உழன்று கொண்டிருக்க மாட்டார்.  இத்தகைய நிலையில், உண்மையை அறிந்த பின்பும் ஒருவர், இஸ்லாத்திற்கு மாற்றமான வகையில் இருக்கும் மத்ஹபு மாயையில் தன்னை உட்படுத்திக் கொள்வாரேயானால், அவர் தன்னுடைய இறைவனுக்கும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிராக போர் தொடுக்கின்றான் என்றே பொருளாகும். அவன் ஒரு சுயநலவாதி, தன்னுடைய மனஇச்சைகளைப் பின்பற்றுபவன், அவன் ஈமானில்லாதவனும் ஆவான். அவன் ஷைத்தானிற்கு தன்னை அற்பணித்துக் கொண்டவனும், அவனுடைய மாணவனும் ஆவான்.

இறைவன் இதைத் தன்னுடைய திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :
{  أفرءيت منِ اتخد إلهه وأضله الله على علمِ وختم على سمعه  وقلبه  وجعل على بصره  غشوةً فمن يهديه من بعد الله ، أفلا تذكرون  }
(நபியே!) தன்னுடைய (மனோ) இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்டானே அவனை நீர் பார்த்தீரா? (அவன் வழிகெடுவதற்கு உரியவன் என்ற தன்) அறிவினால் அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அன்றியும், அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை ஆக்கி விட்டான். அல்லாஹ்வுக்குப் பிறகு, அவனுக்கு நேர் வழி காட்டுபவர் யார்? நீங்கள் நினைவு கூ(ர்ந்து உண)ர மாட்டீர்களா? (அல் குர்ஆன் 45 : 23 ).

(தவறான வழியில் செல்வதில் இருந்தும் இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக! நாம் நேர்வழி பெறுவதற்கு இறைவன் வழிகாட்டுவானாக!) ஆமீன்!

ரபிஃ பின் சுலைமான் ஜய்ஷி என்பவர் கூறியதாவது, ஒரு மனிதர் இமாம் ஷாபிஇ அவர்களிடம் அவர் கூறியிருந்த கருத்து பற்றிக் கேட்டார். அப்பொழுது இமாம் ஷாபிஇ அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறையும் இவ்வாறு தான் இருந்தது என்று பதில் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர், நீங்கள் அதே வழிமுறையைக் கொண்டிருக்கின்றீர்களா? என மீண்டும் கேட்கவும், அந்தக் கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே இமாம் ஷாபிஇ அவர்கள் நடுநடுங்கி, பயந்தவர்களாக அவர்களது முகம் வெளிறிய நிலையில், நீ நாசமாகப் போவாயாக!  முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறையை நான் புறக்கணித்தேனென்றால், இந்தப் பூமியிலும் எனக்கு இடம் கிடையாது, சொர்க்கத்திலும் எனக்கு இடம் கிடையாது, இறைவனின் கோபத்திற்கு ஆளானவாவேன் என்று பயந்தபடியே திரும்பத்திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு கருத்துத் தெரிவித்தேன் என்றால், அந்த என்னுடைய கருத்தும் ஹதிஸும் ஒத்துப்போகாமல் இருக்காது என்றும் கூறினார்களாம். நான் முஹம்மது (ஸல்) அவர்களது ஹதீஸுகளை ஏற்று நடப்பவனாகவும், அதன் அடிப்படையில் கருத்தைக் கூறுபவனாகவும், அவற்றை மதிப்பவனாகவும் இருக்கின்றேன் என்று, இறைவனின் மீது உள்ள பயத்தால் அவர்கள் இதைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். ஹுமைதி என்ற அறிஞரும் இந்த சம்பவத்தை அறிவித்துள்ளார்.

ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினராகிய நம்மில் பலர் துரதிருஷ்ட வசமானவர்களாகவும், நஷ்டமடைந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். நம்மில் சிலர் தான் அதிர்ஷ்டமுடையவர்களாகவும், வெற்றியடைந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். நம்மில் யாராக இருந்தாலும், தன்னைத் தானே எடைபோட்டுக் கொள்பவராகவும், அதற்கு அளவு கோளாக நன்மையையும், தீமையையும் கொண்டு, தன்னை நேர் வழியில் அல்லது தீய வழியில் இருக்கின்றாரா? என்பதை ஆய்ந்தறிய முற்பட வேண்டும். இதற்கு அவர் குர்ஆனையும், சுன்னாவையும் உரைகல்லாகப் பயன்படுத்தி தான் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதையும் அவர் தீர்ப்புச் செய்து கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்புக்குப் பின் தான் எந்த வழியைக் கடைபிடித்தால் வெற்றியடைவோம் என்பதையும் உறுதி செய்து கொண்டு, அந்த வழிமுறையின் பிரகாரம் செயல்பட வேண்டும்.

சூரா அல் அஸ்ர் என்னும் அத்தியாயத்தில் மனிதனின் நிலைபற்றி இறைவன் தன் திருமறையில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளான் :
காலத்தின் மீது சத்தியமாக !  நிச்சயமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர.  (அல் குர்ஆன் 103 : 1-3)

இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான், மேற்கண்ட நான்கு தன்மைகளைக் கொண்டவர்களைத் தவிர ஏனைய அனைவரும் நஷ்டத்தில் இருப்பதாகக் கூறுகின்றான். இதனையடுத்து, கீழ்க்கண்டவாறு, அதீத தன்மைகளைக் கொண்டவர்களும், அதாவது பறப்பதும், தண்ணீரின் மேற்பகுதியில் நடப்பவர்களும், வருங்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களும், எந்தவித ஆதாரமுமில்லாமல் அல்லது முகாந்திரமும் இல்லாமல்,  அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணிப்பவர்களும், எந்தவித பாவத்திற்கும் பழிக்கும் அஞ்சாமல் பாவங்களைச் செய்யக் கூடியவர்களும் எந்தக் காலத்தில் உண்மையான ஆன்மீகவாதிகளாகவோ அல்லது தூய்மையான நற்சான்றோர்களாகவோ ஆக முடியாது. நிச்சயமாக இத்தகைய தன்மைகளை உடையவர்கள், யாரைக் கொண்டு இறைவன் மனிதர்கள் அனைவரையும் நான் சோதனைக்கு உட்படுத்துவேன் எனக் கூறினானோ, அத்தகையவனான ஷைத்தானை நண்பனாக ஏற்றுப் பின்பற்றும் இவர்கள் தான், மனிதனின் உருவத்தில் இருக்கும் ஷைத்தானின் தோழர்கள் ஆவார்கள். எத்தகைய உருவத்தையும் எடுத்துக் கொள்ளும் வல்லமையை இறைவன் அந்த ஷைத்தானிற்கு வழங்கி இருப்பதன் மூலம், அவன் மனிதன் போன்றும் இன்னும் ஏனைய வழிகளிலும் பலப்பல உருவங்களை எடுத்து. மனிதனின் நாடி நரம்புகள், மற்றும் இரத்த நாளங்கள் வழியாகவும் ஓடி, மனிதனை வழிகேட்டில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றான். இந்த ஷைத்தான் என்பவன் மனிதர்களை வழிகெடுப்பதற்காகவே, இரவும். பகலும் மிகவும் சுறுப்சுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றான்.

மறுமை நாள் நெருக்கத்தில் இருக்கும் போது, தஜ்ஜால் என்பவன் தோன்றுவான்.   உயிர்களை உயிர்ப்பிக்கவும், மரணிக்கச் செய்யவும், மழை பொழியச் செய்வதற்கும், இறைவன் தன் புறத்திலிருந்து அவனுக்கு ஆற்றலை வழங்குவான். தஜ்ஜாலினுடைய இத்தகைய அதீத செயல்கள் மூலம் இறைவன் மனித வர்க்கத்தின் ஈமானைச் சோதனைக்கு உட்படுத்த இருக்கின்றான். இவ்வாறு இறைவன் தன்னுடைய அடியார்களை பல்வேறு வழிகளில் சோதனைக்கு உட்படுத்துகின்றான்.

அல் மீஸான் என்னும் தன்னுடைய நூலில் ஸஹ்ரானி என்பவர் கூறுவதாவது, இமாம் அபு தாவூது அவர்கள் இமாம் அஹ்மது அவர்களைப் பார்த்து, இமாம் அவ்ஸாய் மற்றும் இமாம் மாலிக் இருவரில் நான் யாரைப் பின்பற்றுவது? என்று கேட்கின்றார்கள். இதற்கு இமாம் அஹ்மது அவர்கள், நீங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் அவர்களில் ஒருவரை மட்டும் சார்ந்து பின்பற்றாதீர்கள். ஆனால், குர்ஆனிலும், சுன்னாவிலும் உறுதி செய்யப்பட்வற்றை மட்டும் பின்பற்றுங்கள். மேலும், முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் பின்பற்றுங்கள், அதற்கு மேல் அந்தத் தோழர்களைப் பின்பற்றியவர்களாகிய தாபியீன்களையும் விரும்பினால் பின்பற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பிரிதொரு இடத்தில் இமாம் மாலிக் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள் : அதாவது, இமாம் மாலிக், இமாம் ஷாபிஇ, இமாம் ஹனிபா, இமாம் அவ்ஸாய், இமாம் சுஃப்யான் அத்தவ்ரி, இவர்களில் யாரையுமோ அல்லது என்னையோ பின்பற்ற வேண்டாம். மேற்கண்ட அத்தனை பேறும் எங்கிருந்து எங்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டோமோ, மற்றும் இஸ்லாத்தின் மூலமும் அடிப்படைக் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்ற குர்ஆனில் இருந்தும் மற்றும் சுன்னாவில் இருந்தும் நீங்கள் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள் என்று கூறியிருக்கின்றார். இறைவனுடைய மற்றும், அவனது தூதருடைய வார்த்தைகளை ஈமான் கொள்கின்ற இடத்தில், மற்றவர்களுடைய கருத்துக்களையும் அதில் சேர்த்துக் கொண்டு அதிலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றாரே, இத்தகையவருடைய செயல் முட்டாள்தனமானது ஆகும்.

இப்னு ஜவ்ஸி என்பவர் தன்னுடைய தப்லீஸ் இப்லீஸ் என்னும் நூலில் கூறியிருப்பதாவது :
கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுவது ஒருவருடைய அறிவுக்கூர்மையை மழுங்கடித்து விடக் கூடியது.; ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற தனிப்பெரும் சொத்தான இந்த அறிவை, இறைவன் மனிதனுக்கு வழங்கியதன் நோக்கமே  தனது சிந்தனையை வளப்படுத்திக் கொள்வதற்கும்,  ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கும், அவற்றில் உள்ள நிறை குறைகளை கண்டறிவதற்கும், அதில் புதைந்துள்ள கருத்துக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும், அதிலிருந்து முக்கியமான கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தான். சிந்திப்பது என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய ஒளி போன்றதாகும். இந்த சிந்தனை ஆற்றலை இறைவன் அனைத்து மனிதனுக்கும் வழங்கியுள்ளான். ஆனால் மிகச் சிலரே அவற்றைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அநேக மனிதர்கள் இறைவன் வழங்கிய அந்த சிந்தனை என்னும் ஒளியைப் பயன்படுத்தாமல், தங்கள் வாழ்க்கையில் ஒளியை அகற்றி விட்டு, இருளிலே நடைபோடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
மத்ஹபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும், அதன் அபிமானிகளும் தங்கள் சிந்தனைச் சக்தியைப் பயன்படுத்தாமல், அறிவு மழுங்கியவர்களாகவும், அறிவுக் குருடர்களாகவும், எது நேர் வழி என்பதை அறிந்த பின்பும், அவற்றை அவர்களுக்கு உணர்த்திய பின்பும், எது சிறந்த வழி, எது தவறான வழி என்பதை அறிந்த கொள்ள இயலாமல், அதற்கான முயற்சிகளைச் செய்யாமல் இருக்கக் கூடிய இவர்களது போக்கு, உண்மையிலேயே ஒளியை அகற்றி விட்டு இருளிலே நடக்கக் கூடியவர்களுக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது

எதிர்பாராத புதுமையான நோக்கம்

;அறிஞர் பெருமக்கள் (முஜ்தஹித்) பல்வேறு பிரச்னைகளுக்காக, அவர்கள் பல்வேறு நூல்களை ஆய்ந்தறிந்து,; அவற்றைப் பற்றி ஒரு சபை கூடி ஆலோசனை செய்து, பல்வேறு பிரச்னைகளில் அவர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் யாவும், இறைவனது கட்டளைகள் அல்ல என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் கவனத்தில் கொள்ள வேண்டும். அபு யூசுப் அவர்களும் மற்றும் இமாம் முஹம்மது அவர்களும், இமாம் அபு ஹனிபா அவர்களின் பல்வேறு கருத்துக்களுடன் முரண்படுகின்றனர், ஏனெனில் அபு ஹனிபா அவர்களும் நம்மைப் போல தவறிழைத்து விடக் கூடிய மனிதர் தான், அவர் கூறக் கூடிய அனைத்தும் இறைக்கட்டளை போன்றதல்ல. இமாம் அபு ஹனிபா அவாகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

நான் கூறியிருக்கக் கூடிய இந்தக் கருத்து என்னுடைய சொந்தக் கருத்து, இதை விடச் சிறந்ததொன்று கிடைக்கப் பெற்றால், அதை நான் எந்த வித வெறுப்பும் இல்லாமல் தயங்கால் ஏற்றுக் கொள்வேன்.

அநேக இமாம்களுடைய கருத்தும் அபு ஹனிபா அவர்களுடைய கருத்தை ஒத்துத் தான் இருந்தது.
நான் கூறியிருக்கின்ற கருத்துக்கள் என்னுடைய சொந்தக் கருத்துக்கள். இந்தக் கருத்தைத் தான் ஏற்றுக் கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. யார் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களோ, அவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். யார் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்கள் விட்டுத் தள்ளுங்கள்.

மத்ஹபுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே அவர்களை நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் இமாமினுடைய எந்த சிறப்புத் தன்மை உங்களைப் பின்பற்றுமாறு தூண்டியது, நீங்கள் எவ்வாறு ஒரு இமாமைக் காட்டிலும் இன்னொரு இமாம் சிறந்தவர் என்பதைக் கண்டு கொண்டீர்கள்? இதற்கு இவர்கள், எங்கள் இமாம் மிகச் சிறந்த அறிவாளியாகவும், அவருடன் வாழ்ந்த அவரது சம கால அறிஞர்களை விடவும், அவருக்குப் பின்னால் வந்த அறிஞர்களை விடவும், மிகக் கூர்மையான அறிவுடையவராகவும், பிரச்னைகளில் மிகத் தெளிவான தீர்ப்புக்களை வழங்கக் கூடியவராகவும் இருந்தார் என்று கூறுகின்றார்கள். இவர்களை நான் மீண்டும் ஒரு கேள்வி கேட்கின்றேன். இவர்கள் எவ்வாறு தங்கள் இமாம் தான் மிகச் சிறந்த அறிவாளி என்று தீர்மானித்தார்கள்? ஒரு விசயத்தில் ஒருவர் தலையிட்டு அந்த விசயத்திற்கான நீதிபதியாக அவரை நியமிக்கப்படும் போது, தான் தீர்ப்பு வழங்கப் போகும் விசயத்தைப் பற்றி அந்த நீதிபதி மிகத் தெளிந்த முறையில் அவற்றைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தங்கள் இமாம் தான் மிகச் சிறந்தவர் என்று தீர்ப்புக் கூறக் கூடியவர்கள், மார்க்க அறிவில் தெளிவில்லாதவர்கள் மட்டுமல்ல, தன்னுடைய மார்க்கத்தைப் பற்றி அரைகுறை அறிவுடையவர்கள் என்பதும், சாதாரணமானவர்கள் என்பதும், மார்க்கத்தைப் பற்றியும், இன்னும் இருக்கின்ற இமாம்களின் ஏனைய நூல்கள், அவர்களது கருத்துக்கள் பற்றி அறியாதவர்களும் தான் இந்தத் தீர்ப்பைக் கூறுகின்றார்கள் என்னும் போது, இவர்களது கூற்றை  நாம் எவ்வாறு ஏற்க இயலும்!? நம்மால் தெளிவாகக் கூற இயலும், இவ்வாறு தங்கள் இமாம் தான் மிகச் சிறந்தவர் என்று கூறுபவர்கள், ஏனைய எந்த இமாமைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்கள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும். மேற்கண்ட வாதத்தைக் காட்டிலும், இவர்கள் இமாம் தான் மிகச் சிறந்த அறிவாளி, எனவே அவர்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்றால், அந்த இமாமைக் காட்டிலும், அறிவிலும், மார்க்கத்தைப் பேணுவதிலும், தங்களை மார்க்கத்திற்காக அற்பணிப்பதிலும் சளைக்காதவர்களான, நான்கு கலீபாக்களாகிய அபுபக்கர், உமர், உதுமான், அலி ஆகியோரை அல்லவா நாம் பின்பற்றி இருக்க வேண்டும், அவர்களது உயர்ந்த பண்புகளில் இந்த முஸ்லிம் உம்மத்தானது எந்த வித சந்தேகமும் எழுப்பாது என்பதை எல்லோரும் அறிவார்கள் அல்லவா!?

இன்று மத்ஹபுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே அவர்களிடத்தில் நாம் ஒரு கேள்வியைக் கேட்கின்றோம். அதாவது, இன்று நீங்கள்  முஹம்மது (ஸல்) அவர்களுடைய அந்தஸ்திற்கு நிகராகவும், அவர்களுடைய வார்த்தைக்கு நிகராகவும் யாரை நீங்கள் மதிக்கின்றீர்கள்? இமாம்களுடைய பிறப்பிற்கு முன்பு இஸ்லாத்தைத் தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை எந்த முறைப்படி யாரைப் பின்பற்றி அமைத்துக் கொண்டார்கள் என்பதைக் கூற முடியுமா? நீங்கள் இன்று பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்களே இந்த மத்ஹபுக் கொள்கைகளுக்கு முன்னர் வாழ்நத முஸ்லிம்களின் நம்பிக்கை எவ்வாறு இருந்தது? அந்த சென்று போன உம்மத்தை வழிநடத்த எந்தவித வழிகாட்டுதலும் அன்று இல்லையா? கண்களை மூடிக் கொண்டு மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களே!, இமாம்களுக்கு முன்னர் நீங்கள் வாழ்நதிருப்பீர்கள் என்றால் நீங்கள் எந்த மத்ஹபைப் பின்பற்றி வாழ்ந்திருப்பீர்கள்? என்று சிறிதேனும் சிந்திக்க மாட்டீர்களா? முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட, இமாம்களைப் பின்பற்றுபவர்களே, உங்கள் மன இச்சையைப் பின்பற்றி நீங்கள் வரம்பு கடந்து விட்டீர்கள்.

இமாம்களின் வருகைக்கு முன்னர் வாழ்ந்த அந்த உம்மத் நேர்வழியின் பால் இருந்ததா? அல்லது வழிதவறியிருந்ததா? நிச்சயமாக அந்த உம்மத் வழி தவறியிருந்ததாக உங்களால் கூற இயலாது, அந்த உம்மத் நிச்சயமாக நேர்வழியின்பால் தான் இருந்தது என்றே கூற இயலும். அவர்கள் குர்ஆனைத் தவிர்த்து வேறு எதனையும் பின்பற்றினார்களா? அல்லது முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் பின்பற்றினார்களா? அல்லது முஹம்மது (ஸல்) அவர்களுடைய தோழர்களைத் தவிர்த்து வேறு யாரையும் பின்பற்றினார்களா? என்பதையும் உங்களால் கூற இயலுமா? அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் தவிர்த்து வேறு ஒன்றைப் பின்பற்றினார்கள் என்றோ, நேர்வழிபெற்ற கலீபாக்களைத் தவிர்த்து வேறு யாருடைய வழியையும் பின்பற்றினார்கள் என்றோ நம்மால் கூற முடியாதல்லவா!! அந்த உம்மத் ஏதாவது ஒரு விசயத்தில் தங்களுக்கிடையே முரண்படுமானால் அவர்கள் தங்களது வழிகாட்டலுக்குக் குர்ஆனையும், சுன்னாவையும் தான் எடுத்துக் கொண்டார்களே ஒழிய வேறு யாருடைய கருத்துக்கும் அவர்கள் முன்னுரிமை வழங்கியதாக உங்களால் கூற இயலுமா? அந்த அவர்களுடைய கொள்கை தான் இஸ்லாம் அங்கீகரித்த நேர்வழியாகும். அத்தகைய அவர்களின் நோக்கத்தைத் தவிர்த்து, இன்று நாம் பின்பற்றப்படும் அனைத்தும், நேர்வழியில் இருந்து பிரிந்து விட்ட சுத்தமான வழிகேடு தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

فماذا بعدالحق إلا الضلـل  } {
இந்த உண்மைக்குப் பின்னர், வழிகேட்டைத் தவிர வேறு (எஞ்சியிருப்பது) யாது? (அல்குர்ஆன் 10:32).
நாங்கள் மத்ஹபுவாதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் பின்பற்றும் இமாம்களை மட்டும் உயர்ந்த அந்தஸ்த்தையுடையவராக நினைப்பதுடன், ஏனைய முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்களையும், தாபியீன்களையும், மார்க்க அறிஞர்களையும், ஏனைய இமாம்களையும் இவர்கள் தகுதிக் குறைவானவர்களாக ஆக்கிவிடுகின்றார்கள். அவர்களது இமாம்களின் தகுதிக்கு முன்னே ஏனையோர்களை மிகத் தாழ்வானவர்களாக இவர்களது செயல்கள் காட்டிவிடுகின்றன, மேற்கண்டவர்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும், அவர்களது தீர்ப்புக்களுக்கும் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. எப்பொழுதாவது அதிகபட்சத் தேவை அல்லது தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே இவர்கள், மற்றவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள், அதுவல்லாத நிலைகளில் இவர்கள் தங்களது இமாம்களை முன்னிலைப்படுத்தத் தவறுவதில்லை. மேலும், இவர்கள் தங்களது இமாம்களின் கூற்றுக்கு நிகராக குர்ஆனையும், சுன்னாவையும் வளைக்கக் கூடத் தயங்குவதில்லை.

குர்ஆனினுடைய வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் தங்களுடைய இமாம்களினுடைய கருத்துக்கு மாற்றமாக இருக்குமென்றால், அந்த குர்ஆனினுடைய வசனத்தையும், ஹதீஸையும் ஏற்கனவே தங்கள் இமாம்கள் கூறியுள்ள கருத்துக்கு தக்கவாறு அவற்றை மாற்றி, அதன் அர்த்தங்களை வளைக்கவும் இவர்கள் தயங்குவதில்லை.  இவர்களுடைய இமாம்களின் கருத்துக்கள் குர்ஆனுக்கும், ஹதீஸீக்கும் மாற்றமாக இருப்பினும், தங்களுடைய இமாம்களின் கருத்துக்களை சாதகமாக ஆக்குவதற்கும், முன்னிலைப்படுத்துவதற்கும், ஷரீஅத் சட்டத்தின் வரம்புகளைக் கூட அவர்கள் மீறத் தயங்குவதில்லை. இவர்கள் இத்தகைய நிலையில் வரம்பு மீறி நடந்து கொண்டாலும், அது பற்றி நாம் உணர்த்தினாலும், அவற்றை அவர்கள் கேட்டுத் திருந்துவதாக இல்லை. இவர்கள் இஸ்லாத்தில் புதினங்களை அல்லது பித்அத்துக்களை உண்டாக்கி, இறைவனுக்கும், அவனது மார்க்கத்திற்கும் எதிராக இவர்கள் முட்டாள்தனமாகவும், களங்கம் ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பதனால், நாம் இவர்களை இறைவனிடமே முறையிட்டு, இவர்களது செயல்களை அவனிடமே பொறுப்புச் சாட்டி விட்டு, இவர்களது விவகாரத்தில் அவனையே தீர்ப்புச் சொல்ல நாம் விட்டு விட வேண்டியது தான்.

இஸ்லாம் என்னும் இந்தப் புனித மார்க்கத்தை இறைவன் தான் பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்துள்ளதோடு, இந்த மார்க்கத்தின் மீது களங்கம் ஏற்பட்டு விடாமல் அதன் தூய வடிவில் பாதுகாப்பதற்காக, அதற்கென பிரத்யேகமானதொரு வகை நல்லவர்களையும் உருவாக்கி அவர்களை இந்தப் பூமியில் இஸ்லாத்திற்கு எதிராக ஏற்படுத்தப்படும் புதினங்களிலிருந்து மக்களைத் தடுப்பதற்கும், அவற்றை அவர்களுக்கு விளக்கி எச்சரிப்பதற்கும், அவர்களை இறைவன் பயன்படுத்திக் கொள்கின்றான். இத்தகையவர்களை இறைவன் உருவாக்கியிருக்கவில்லை எனில், இஸ்லாம் எப்பொழுதோ இந்த உலகை விட்டே துடைத்தெறியப்பட்டிருக்கும். முஹம்மது (ஸல்) அவர்களது தோழர்களுக்கும், அவர்களைப் பின்பற்றிய தாபியீன்களுக்கும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்கின்ற உலமாப் பெருமக்களுக்கும், மரியாதைக் குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் நடப்பவர்கள் யார் எனத் தெரியுமா? மேலும், இஸ்லாத்தின் அதன் தனித்துவத்தை விட்டு விட்டு, அதன் மாற்று வழிகளைத் தேடி அதன் வழி நடப்பவர்கள், அந்தத் தவறைச் செய்து கொண்டிருப்பவர்கள் யார் எனத் தெரியுமா?  அந்த நல்லவர்களையும் விட்டு விட்டு, தங்கள் இமாம்களையே முழுவதும் சார்ந்து இருப்பவர்களாகவும், தனக்கு ஏற்படும் மார்க்க மற்றும் பொது விசயங்களில் குர்ஆனையும், சுன்னாவையும் விட்டு விட்டு, இறைவன் யாரை, எதனை மட்டும் பின்பற்றச் சொன்னானோ அவற்றை எல்லாம் விட தங்களுடைய அனைத்து துறைக்கும் வழிகாட்டியாக ஒரே இமாமை மட்டும் பின்பற்றுபவர்களாகிய அந்த மத்ஹபுவாதிகள் தான்.

ஒவ்வொரு மத்ஹபும் இறைவனதும் அவனது தூதரது கட்டளைகளை விட்டும், அவற்றிற்கு   எதிரான கொள்கைகைளைத் தான் கொண்டிருக்கின்றன. அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றிய அவர்களின் தோழர்களின் வழிமுறைக்கு எதிரான தவறான வழிகளைக் கடை பிடிப்பவர்களாகவும், இஸ்லாத்தை விட்டும் அதன் தூதுத்துவத்தை விட்டும் மிகத் தூரத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் சென்று கொண்டிருக்கின்ற வழியானது தூயவர்கள், நல்லவர்கள் கடைபிடித்த வழியன்று. இஸ்லாத்திலும், குர்ஆனினுடைய போதனைகளிலும், முஹம்மது (ஸல்) அவர்களது செயல்முறைகளிலும், அவர்களைப் பின்பற்றிய தோழர்களது வழிமுறைகளிலும், களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்ற இஸ்லாமிய எதிரிகளும், அரைகுறை இஸ்லாமிய அறிவைப் பெற்றவர்களையும் தான் இந்த மத்ஹபுவாதிகள் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே ஒழிய, இவர்களுக்கு மேற்சொன்ன குர்ஆனினுடைய போதனைகளோ, ஹதீஸுகளோ, குலஃபாயே ராஷிதூன்களாகிய நான்கு கலீபாக்களின் செயல்முறைகளோ, மேலும் ஏனைய தோழர்களோ அவர்களுடைய சொல் மற்றும் செயல்முறைகளோ இந்த மத்ஹபுவாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. மேற்சொன்ன நல்லோர்களது சொல் மற்றும் செயலைத் தங்களுடைய இமாம்களுடைய கூற்றுக்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்கின்றனர், இமாம்களுடைய கூற்றுக்கு மாற்றமாக இருப்பின் அவற்றை புறக்கணித்து விட்டு, அவற்றில் உண்மையிருப்பினும், இவற்றைப் புறக்கணிக்க எங்களிடம் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்ள எங்களிடம் காரணங்கள் இல்லை என்று மிகச் சாதாரணமாகக் கூறி விடுகின்றனர். அந்த மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் அவர்களின் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் அளவில் மேற்சொன்ன நல்லவர்களின் வழிமுறைகளையும் மாற்றி விடுகின்றனர்.

இவர்கள் தான் இஸ்லாமிய உம்மத்தைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தவர்கள், இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது கொள்கைகளில்  உறுதியாக நின்று கொண்டு, தத்தமது கொள்கைகளைச் சரி எனக் காண்பதற்கும், அவற்றின் உண்மைத் தன்மையை மெய்ப்பிப்பதற்குமே முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இவர்களில் உள்ள அனல்பறக்கும் அளவில் பேசக் கூடிய பேச்சாளர்கள் தங்களுடைய மத்ஹபைப் பற்றியும் அதன் உண்மைத்துவம் பற்றியும் மிகவும் எடுப்பாகப் பேசி, தாங்கள் தான் உண்மையாளர்கள் என்றும், மற்ற அனைவரும் வழிகேட்டில் இருப்பதாகவும் ஆணித்தரமாகப் பேசி, மக்களிடையே கடுமையான பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும், ஒரு மத்ஹபில் உள்ளவர் அடுத்து மத்ஹபில் கூறப்பட்டிருக்கும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வேறு ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகக் கருதப்பட்டு, அவ்வாறு வரம்பு மீறுபவர்கள் அந்த மத்ஹபை விட்டே ஒதுக்கி வைக்கப்படுவர். இவ்வாறு பல்வேறு பிரிவுகளாக இருப்பதை விட்டு விட்டு, அனைவரும் ஒன்று கூடி ஒரே அமைப்பின் கீழ், ஒரே கொள்கையின் கீழ் நம்முடைய மார்க்கத்தைப் பின்பற்றினால் என்ன? அவ்வாறு ஓர் அணிதிரள்பவர்கள் அனைவரும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டும், அவர்களைத் தவிர்த்து வேறு எவருடைய கருத்தையும் ஏற்காது, அவர்களது தலைமையையும் நிராகரித்து விட வேண்டும்.

குர்ஆனையும், முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையையும் தவிர்த்து ஏனையோருடைய வழிமுறையை ஏற்பதானது, தண்ணீர் இல்லாத போது தயம்மம் செய்வதைப் போலாகும். அதாவது, மேற்சொன்ன இரண்டிலிருந்தும் நம்மால் நமது வாழ்வியலுக்கான வழிகாட்;தல்களை எடுத்துக் கொள்ள இயலாத போது, பல்வேறு அறிஞர்கள் பெருமக்களின் வழிமுறைகளை எடுத்துக் கொண்டு, அவை குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் முரணில்லாத வகையில் இருந்தால் அவற்றைப் பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் குர்ஆனையும், சுன்னாவையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கும்பட்சத்தில், அவற்றை மட்டுமே பின்பற்றவும், அந்த நிலையில் இமாம்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடாது என்ற நிலையை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் இன்றைய மத்ஹபுவாதிகளின் நிலை எவ்வாறு இருக்கின்றது எனில், தண்ணீர் இருக்கும் போதே தயம்மம் செய்யக் கூடியவர்களாக, இஸ்லாமிய வரையறைகளை மீறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இதில் சில மத்ஹபுவாதிகள் தங்களது இமாம்களுக்குப் பின்னர் வந்தவர்களின் கருத்துக்களை ஏற்று அவற்றைப் பின்பற்றும் அதே நேரத்தில், எல்லா மார்க்க அறிஞர்களாலும் மதிக்கப்படக் கூடிய இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த புகழ் பெற்ற அறிஞர்களான இமாம் புகாரி, அப்துல்லா பின் முபாரக், இமாம் அவ்சாய், இமாம் சுப்யான் அத் தவ்ரி ஆகியோர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை. இன்னும் சில நேரங்களில் இஸ்லாத்திற்கு பல்வேறு நிலைகளில் நல்வழி காட்டிச் சென்ற இமாம்களும், நாங்கள் யாரைப் பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்றார்களோ அத்தகைய அறிஞர்களுமான ஹஸன் பஸரி, சயீத் பின் முஸைப், இமாம் அபு ஹனிஃபா ஆகியோரது கருத்துக்களைக் கூட இவர்கள் ஏற்பதில்லை. உதாசினம் செய்து விடுகின்றனர். ஆனால் இவர்கள்; மேலே நாம் சொன்ன மார்க்க அறிஞர்களுக்கும், உலமாக்களுக்கும் பின்வந்தவர்களைத் தான் பின்பற்றுகின்றார்களே அல்லாது, தம்முடைய இமாம்களைக் கூட அவர்கள் பின்பற்றவில்லை. மேலும் இவர்கள் நல்வழி காட்டப் பெற்ற நான்கு கலிபாக்கள் மற்றும் அப்துல்லா பின் மஸ்ஊது (ரலி) ஆகியோரது கருத்துக்களைக் காட்டிலும், அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவற்றைப் பின்பற்றுவதைக் காண முடியும்.

மேலும், நேர்வழிபெற்ற நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்களை இந்த மத்ஹபைச் சார்ந்தவர்கள் பின்பற்றிக் கொண்டு, அந்த நபித்தோழர்களுக்கு இணையாக இவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இன்று ஒரு கொடுமையான நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்னவெனில், அந்த நேர்வழிபெற்ற நபித்தோழர்களின் கருத்துக்களை உதாசினம் செய்து விட்டு, அவர்களுக்குப் பின் வந்தவர்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்று இந்த மத்ஹபுவாதிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். இறைவன் யாருக்கு நன்மை எது, தீமை எது என்று பிரித்தறியக் கூடிய ஞானத்தை வழங்கினானோ அத்தகைய நபித்தோழர்களை இவர்கள் புறக்கணிக்கும் அவல நிலை இன்று மத்ஹபுவாதிகளிடம் காணப்படுவது தான் மிகப் பெரும் கொடுமையாகும்.

இஸ்லாத்தின் இறுதிக் கட்டத்தில் இன்றுள்ள வழிகேடுகள் எல்லாம் நீக்கப்பட்டு இஸ்லாம் புனரமைக்கப்படும். எவ்வாறு அன்றைய ஆரம்ப கால கட்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை எத்தகைய தூய நிலையில் கண்டு கொண்டார்களோ அத்தகைய நிலைக்கு இஸ்லாம் திருப்பி மீட்டுக் கொண்டு வரப்படும் என்று இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும் மற்றும்; அதனையடுத்து, கலந்தாலோசனையின்படி இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்த இஜ்மாக்களை (ஷரியத் சட்டங்களை)யும் பின்பற்றி அதன் மூலம்,   தங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டார்கள.; இதனையடுத்து இன்றுள்ள மக்கள் மேற்கண்டவைகளிலிருந்து தங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கினார்களோ அன்றிலிருந்து இமாம்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, இமாம்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நிகரானவர்களாகக் கொண்டு வந்து விட்டார்கள். இன்று முஸ்லிம் உம்மத்தானது வெற்றியைக் கை நழுவ விட்டு விட்டு, தோல்வியின் படுகுழியில் இருப்பதற்கும், நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு என்னுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவீர்களானால் உங்களுக்கு என்புறத்திலிருந்து வெற்றியைத் தருவேன் என்று இறைவன் அளித்த வாக்குறுதி நிறைவேற்றாமல் இருப்பதற்கும் காரணம், தூய்மையான வடிவில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட்டு விட்டு அவற்றைப் புறக்கணித்ததே இதன் காரணமாகும். இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர் உண்மையான முஸ்லிம்கள் இல்லை. இஸ்லாத்தின் ஆரம்ப கால இரண்டு நூற்றாண்டுகளில் இத்தகைய கண்மூடித்தனமாக மத்ஹபுக் கொள்கைகள் இல்லை, இன்று இருக்கும் இஸ்லாத்திற்கெதிரான இந்த மத்ஹபுக் கொள்கைகள் அந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றியவைகள் தான். இன்று உலகமானது பல்வேறு வகைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. தனிப்பட்ட வகையில் படித்தவர்களும், உலகில் முன்னேறிய பல்வேறு நாடுகளும் இன்று இஸ்லாத்தை நோக்கித் திரும்ப ஆரம்பித்துள்ளன. இன்றைய நிலையில் இந்த தனிப்பட்டவர்கள் முன்பும் மற்றும் இந்த தேசங்களின் பார்வையிலும் இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைப் புறந்தள்ளி விட்டு, இஸ்லாத்திற்கு ஊடுறுவி இருக்கும் இந்த பல்வேறு பிரிவுக் கொள்கைகள் அவர்களின் முன்பாக நின்று கொண்டு, அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உணர்ந்து கொள்ளும் முன்பே ஒரு தடைக் கல்லை ஏற்படுத்தி, அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது. அவர்கள் எந்த வழியின்பால் நாம் சென்றால், வெற்றிபெற முடியும் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியாமலும் ஆகிவிடுகின்றது. நாம் ஒரே மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக வருபவர்களை நாம் எந்த மத்ஹபைக் காட்டி நம்பிக்கை கொள்ளச் செய்வது, குறிப்பிட்ட மத்ஹபு தான் உண்மையான இஸ்லாம் என்று சொல்லி அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமா? அல்லது இந்த அனைத்து பிரிவுகளில் உள்ள வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு ஈமான் கொள்ளச் சொல்ல இயலுமா? என்பதை இந்த மத்ஹபு அபிமானிகள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது நல்லது. இந்தக் குழப்பங்கள் தான் அந்த ஜப்பான் நாட்டுக்கார புதிய முஸ்லிம்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் என்ற ஒரே உம்மத்தாக இருக்கின்ற நாம், இந்த குழப்பங்களுக்கெல்லாம் விடை கண்டு பிடிக்க வேண்டும் எனில், குர்ஆனையும், முஹம்மது (ஸல்) அவர்களையும் மட்டுமே பின்பற்றுவதால் மட்டுமே சாத்தியமாகும். அதுவே யாராலும் மறுக்க முடியாத உண்மையுமாகும். அதுவே எல்லோரும் மிக எளிதாகவும், உண்மையாகவும், அதன் தூய வடிவிலும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.

பல்வேறு அறிஞர்களின் தீர்ப்புக்களை நாம் எடுத்துக் கொள்வோமானால், அந்தத் தீர்ப்புக்களில் வித்தியாசங்கள் இருப்பதையும், அவர்கள் மறுத்துரைத்த வாதங்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் நாம் ஆழ்ந்து சிந்திப்போமானால், மிகப் பெரும் ஆச்சரியங்கள் வந்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. அவர்களுக்கிடையே இருக்கக் கூடிய அந்த பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு, மிகச் சிறந்த ஆதாரத்தைக் குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும் கொண்டு வந்து காட்டினாலும், அவர்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பால் இட்டுச் செல்ல முயற்சி செய்தாலும், அவர்கள் மிகச் சாதாரணமாக எங்களது மத்ஹபுப்படி இந்த இந்த இமாம் இப்படிச் செய்யும்படி எங்களுக்கு கூறவில்லை என்றும், இது எங்களது இமாமினுடைய கருத்துக்கு மாற்றமாக இருக்கின்றது என்றும் கூறிகின்றனர். இவ்வாறு இவர்கள் சுட்டிக்காட்டக் கூடிய அந்த இமாமின் கருத்தில், அதை அறிவித்த ஹதீஸ் பொய்யாவோ அல்லது இட்டுக்கட்டப்பட்டதாகவோ அல்லது அறிவிப்பாளர் வரிசை தொடர்பறுந்து இருப்பினும் சரியே. இவர்களுக்கு இவர்களின் ஆதாரமற்ற ஹதீஸே ஆதாரமுள்ள ஹதீஸைத் தள்ளுபடி செய்யப் போதுமானதாக இருக்கின்றது.

இவர்களது இந்தச் செயல்கள் யாவும் உண்மையை விட்டும், அசலான வழிகாட்டுதல்களிலிருந்தும் அவர்களை தூரமாக்குவதுடன், முஸ்லிம் உம்மத்தின் தோற்றத்தையும், அதன் மூல வேரையும் அதன் உண்மையான வழிகாட்டுதல்களிலிருந்தும் துண்டித்து விடுகின்றது. உண்மையிலேயே குர்ஆன் மற்றும் சுன்னாவைத் தவிர வேறு எதில் இருந்தும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள இறைவன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடவில்லை. அவர்கள் தன்னைப் படைத்த இறைவனுக்கும், அவன் அனுப்பிய தூதருக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்றே தவிர வேறு யாருக்கும் கட்டுப்பட பேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. யார் அந்த இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படவில்லையோ அவர்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் பல தெய்வ வணக்கக்காரர்களாகவே கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அழிவைத்தவிர வேறு எதனையும் சந்திக்க மாட்டார்கள். (இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!)  இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :

{  إذْ تبرأ الذين اتبعواْ من الذين اتبعواْ ورأوُاْ العذاب وتقطعت بهم الأسباب  }
(இத்தவறான வழயைக் காட்டிய) பின்பற்றப்பட்டவர்கள், பின்பற்றியவர்களிலிருந்து நீங்கிக் கொண்டு, வேதனையையும் இவர்கள் கண்டு, அவர்களுக்கு மத்தியிலிருந்து தொடர்புகளும் அளுபட்டு விடும் சமயத்தில் (கடும் துன்பத்தை அடைவார்கள்). (அல் குர்ஆன் 2:166)

{  وقال الذين اتبعوأ لوْ أن لنا كرةً فنتبرأ منهم كما تبرءواْ منا ، كذلك بريهم الله أعملهم حسرتٍ عليهم ، وما هم بخرجين من النار  }
மேலும், நிச்சயமாக ஒரு மீட்சி (உலகிற்குத் திரும்பிச் செல்லுதல்) நமக்கு இருக்குமானால் நம்மிலிருந்து அவர்கள் நீங்கிக் கொண்டது போன்று நாமும் நீங்கிக் கொள்வோம் என்று கூறுவார்கள்: இவ்வாறே அல்லாஹ், அவர்களின் (தீய) செயல்களை அவர்கள் மீது கைசேதப்பட்டு துக்கமளி;ப்பவையாக அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான். அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர். (அல் குர்ஆன் 2:167).

கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்களது நம்பிக்கையைத் தகர்த்து, அவர்களது மனங்களைத் திகிலடையச் செய்வதற்கு மேலே நாம் சுட்டிக்காட்டியிருக்கும் இரண்டு இறைவசனங்களுமே போதுமானதாக இருக்கும். இஸ்லாத்தைப் பொருத்தமட்டில், அதனுடைய ஈமான் சம்பந்தப்பட்ட விவகாரமாயினும் சரி அல்லது அதன் வணக்க வழிபாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஆயினும் சரியே மற்றும் ஆகுமானது (ஹலால்) அல்லது ஹராம் (ஹராம்) சம்பந்தப்பட்டதாயினும் சரியே, ஒரே இமாமினுடைய கருத்தை மட்டும் சார்ந்து கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை, மாறாக அத்தகைய செயல்பாட்டைத் தடை செய்துள்ளது எனலாம். இஸ்லாம் குர்ஆனையும், சுன்னாவையும் தவிர்த்து வேரொன்றைப் பின்பற்றுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை. மேலே உள்ள வசனமானது, அத்தகைய கண்மூடித்தனமான வகையில் பின்பற்றுமாறு கூறும் இமாம்களுக்கெதிராக அமைந்துள்ளது, ஆனால் இவர்களின் மத்ஹபுகளுக்குப் பெயர்களைச் சூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ள அந்த இமாம்கள் இவர்கள் செய்யும் இந்தத் தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் என்பதும், அவர்கள் இத்தகைய கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்கு எதிர்ப்பாகவே தங்களுடைய கருத்தைக் கூறியிருக்கின்றார்கள் என்பதும், அவ்வாறு செய்வதை எச்சரிக்கை செய்தே வந்துள்ளனர் என்பதும், இத்தகைய பாவங்களை இவர்கள் செய்வதிலிருந்தும் அவர்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைமார்க்கத்தை விட்டு விட்டு, பல்வேறு பிரிவுகளையும், மதங்களையும் பின்பற்றுபவர்களைப் பார்த்து இறைவன் விடுக்கின்ற எச்சரிக்கைகள் யாவும், முஸ்லிம்களை நோக்கி அவைகள் கூறப்படவில்லை என்றும், இது பற்றி குர்ஆனில் வரக் கூடிய வசனங்களை மொழிபெயர்த்த சில விரிவுரையாளர்களின் கருத்தைச் சுட்டிக் காட்டி,  அந்த வசனங்கள் யாவும் மத நம்பிக்கையற்றவர்களையும், பல தெய்வ வணக்கக்காரர்களையும் பார்த்துத் தான் இறைவன் எச்சரிக்கை செய்கின்றான் என்று இந்த மத்ஹபுவாதிகள் கூறுகின்றனர். உண்மையும் அது தான். ஆனால் இந்த வசனங்களை நாம் மிகப் பரந்த அளவில் அதன் பொருள் பற்றி ஆராய முற்படுவோமானால், அதன் அர்த்தங்களும், அதன் எச்சரிக்கைகளும் முஸ்லிம்களை நோக்கியும் அந்த வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்த வசனங்களை கிறிஸ்த்தவர்களுக்கும், யூதர்களுக்கு மட்டும் பொருத்திப் பார்ப்போமேயானால், குர்ஆனின் பொருள் பொதிந்த அந்த வசனங்களின் உள்அர்த்தங்களை குறைத்து மதிப்பிட்டும், அதன் அனைவருக்கும் பொதுவான அதன் தூதுத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என்றே கருத வேண்டி இருக்கின்றது. இன்று முஸ்லிம்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மட்டும் மொழிந்து விட்டால் போதும், நாம் மறுமையின் பேற்றை அடைந்து விட்டோம் என்று கருதிக் கொண்டு, இறைமறைக் குர்ஆனில் இருந்து எந்தவித எச்சரிக்கையையும் செவிமடுக்காமல்,  இறைவன் இந்த உம்மத்தின் மீது சுமத்திய கடமைகளையும், பொறுப்புக்களையும் மறந்து மனம் போன போக்கில் தன் வாழ்க்கையையும், தன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக எதனை, யாரை இறைவன் பின்பற்றுமாறு கட்டளையிட்டானோ அவற்றை எல்லாம் விட்டு விட்டு பல்வேறு பிரிவுகளில் நின்று தன் உண்மையான நிலையை மறந்து திரிகின்றது. இத்தகைய இவர்களின் செயல்களும், நினைப்பும் தவறானது. இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நயவஞ்சகக்காரர்கள் பலரும் இதே கலிமாவை மொழிந்தே வந்திருக்கின்றனர் என்பதையும் நாம் உணர்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் பல்வேறு வகையான பல தெய்வ வழிபாட்டுக் கொள்கைகளையும், அதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் விளக்கி, அவற்றை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலும், அவற்றில் இருந்து படிப்பினை மற்றும் எச்சரிக்கைகளைப் பெற்றுக் கொள்ளவும்,  அந்த வசனங்களை ஒரு உதாரணமாக ஆக்கி, அவர்கள் எவ்வாறு தங்களுக்கிடையே பல்வேறு பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டு அழிவைத் தேடிக் கொண்டார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி, அதன் மூலம் முஸ்லிம்கள் படிப்பினை பெற்றுக் கொள்ள, தன்னுடைய திருமறையில் அதைப் பற்றி தெளிவாக்கியுள்ளான்.

குர்ஆனில் இருந்து நேரடியாகப் பாடம் பயின்ற, அவற்றில் இருந்து தங்களது வழிகாட்டலைப் பெற்றுக் கொண்ட அந்த சமூகம் சென்று விட்டது, அவர்களைப் போல குர்ஆனில் இருந்து நேரடியாக வழிகாட்டுதலை வழங்கக் கூடியவர்கள் இன்று இல்லை, ஏனெனில் இந்தப் பணியைச் செய்வதற்குண்டான சிறப்புத் தகுதிளும், திறமைகளும் தேவைப்படுவதால், திருமறைக் குர்ஆனில் இருந்து அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒன்றுதிரட்டி விட தனிப்பட்ட ஒரு மனிதனால் இயலாது என்று இந்த மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களும், மற்றும் மத்ஹபுகளைப் பின்பற்றச் சொல்லும் இவர்களின் உலமாக்களும் முரட்டுத்தனமானதொரு வாதத்தை வைக்கின்றார்கள். எனவே  கடந்து போன அந்த குர்ஆனில் இருந்து நேரடியான வழிகாட்டலைப் பெற்றுக் கொண்ட நபித் தோழர்கள், அவர்களைப் பின்பற்றிய தாபியீன்கள், மற்றும் நான்கு இமாம்கள், நேர்வழிபெற்ற உலமாப் பெருந்தகைகளும், இஸ்லாத்தைப் பற்றி ஒருவர் கூறுகின்ற கருத்தையும், அதன் பின்னணியில் இருக்கின்ற அர்த்தங்கள், விவாதங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளாது, அத்தகைய தனிப்பட்ட ஒருவருடைய கருத்தை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கூறி இருக்கும் போது, இந்த மத்ஹபைப் பின்பற்றக் கூடியவர்கள் குர்ஆனில் இருந்து வழிகாட்டலை இப்பொழுது உள்ளவர்களால் பெற்றுக் கொள்ள இயலாது என்பதால் தான், எங்கள் இமாம்கள் எங்களுக்குத் தொகுத்து வழங்கியுள்ளவற்றை நாங்கள் பின்பற்றுகின்றோம் என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த மத்ஹபுகளில் ஒட்டிக் கொண்டு தங்களை அந்தந்த மத்ஹபுகளின் அறிஞர்கள் என்று கூறிக் கொண்டிருக்கக் கூடியவர்கள், சாதாரண பாமரான் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் இந்த அறிஞர்களுடைய மார்க்கத் தீர்ப்புக்களை எந்தவித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாது அப்படியே அவற்றைப் பின்பற்றுவது கூடும் என்று கூட தன்னிச்சையானதொரு பொருப்பற்ற முறையில் தீர்ப்புக்களை வழங்கியுள்ளனர். இவர்களுக்குப் பின்னர் வந்த நாங்கள் இந்தந்த மத்ஹபுகளைச் சேர்ந்தவர்கள் தான் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், குர்ஆனில் இருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வதையும், அவற்றை ஆராய்ச்சி செய்து அவற்றில் இருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வதையும் தடை செய்யப்பட்டது என்றும் அறிவித்துள்ளனர். இதையும் மீறி யாராவது குர்ஆனைக் கையில் எடுப்பார்களேயானால் அத்தகைய நபர், வழிகேட்டில் இருப்பவராகவும், இஸ்லாத்தை விட்டே வெளியேறியவராகவும் இவர்களால் அறிவிக்கப்பட்டார். இவை யாவும்; இஸ்லாத்திற்கு எதிராக இவர்கள் தொடுக்கும் பலவீனமான, நகைப்புக்கிடமான செயல்களாகும். இதில் கொடுமை என்னவென்றால், படித்த நல்ல கல்வி ஞானம் உள்ளவர்களும், இந்த அறிவிலிகளின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஒரு விவாதத்திற்கு இதை நாம் சொல்வதென்றால், இவர்கள் தங்கள் இமாம்களை, அந்த ஏக இறையோனாகிய அந்த அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதி, தங்கள் மார்க்க விசயங்களில் தங்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல்களை தன்னுடைய இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இவர்கள் தங்கள் இமாம்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்கள் என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது. ஏனெனில், இவர்கள் குர்ஆனில் இருந்தும், முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸுகளில் இருந்தும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தங்கள் மத்ஹபு அறிஞர்களது கருத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதால் தான் நாம் இந்த விவாதத்தை வைக்கின்றோம், அதுவே உண்மையுமாகும். மேலும், இவர்கள் அனைவரும் தங்களை வழிகெடுத்தவர்கள் இவர்கள் தான் என, ஒருவர் மற்றவரைப் பார்த்து குற்றம் சொல்லக் கூடிய நாள், அந்த மறுமை நாள் மிக விரைவிலேயே வரவிருக்கின்றது என்பதையும், அந்த நேரத்தில் இதற்கு முன் நாம் சுட்டிக் காட்டிய இறைவசனம் 2:167 ஆனது மிகத் தெளிவான பதிலையும் தரும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கின்றது!!? (இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும். ஆமீன்.)

உணர்ச்சிவசப்படுபவர்களே! உங்களுக்கோர் அறிவுறை

;இதற்கு முன் பார்த்த தலைப்புகளில், இந்த மத்ஹபுக் கொள்கையானது ஒரு முட்டாள்தனமான, கண்மூடித்தனமானதொரு கொள்கை என்பதையும், அது இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்பதையும், அது சமீபத்திய நூற்றாண்டுகளில் தான் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டது என்பதையும், அது எவ்வாறு குர்ஆனில் இருந்தும், சுன்னாவில் இருந்தும், நேர்வழி பெற்ற கலீபாக்களின் கொள்கையில் இருந்தும் மக்களைப் பாராமுகமாக்கியிருக்கின்றது என்பதையும் நாம் உங்களுக்கு தெளிவாக்கியிருந்தோம். மேலும், குர்ஆனினுடைய வசனங்களைத் தங்களுக்குத் தகுந்தவாறு அவர்கள் மாற்றிக் கொண்டதையும், ஹதீஸுகளுக்கு தங்களுக்குத் தகுந்தவாறு விளக்கமளித்துக் கொண்டதையும் நாம் உங்களுக்குத் தெளிவாக்கியிருந்தோம்.

இறைமறையாம் திருமறைக் குர்ஆன் கூறுகின்றது :
{  اتخذوا أحبارهم ورهبنهم أربابا من دون الله  }
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும், மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். (அல் குர்ஆன் : 9:31).

இமாம் ஃபக்ருத்தீன் அல் ராஸி (ஹிஜ்ரி 606) என்பவர், தன்னுடைய மஃபாத்தீஹ் அல் கைப் என்னும் நூலில், ஒரு முறை நான், ஒரு மார்க்க அறிஞரை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவைச் சந்தித்தேன். அவர்களின் மார்க்க அறிஞர் கொடுத்துள்ள மார்க்கத் தீர்;பபுகளின் அடிப்படையில், அது சம்பந்தமான சில குர்ஆனினுடைய வசனங்களை ஆய்வு செய்தேன். அந்த அறிஞருடைய மார்க்கம் சம்பந்தமான தீர்ப்புகள் யாவும் குர்ஆனினுடைய வசனங்களுக்கு மாற்றமாக இருந்தன. இருப்பினும், அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்கள் எதையும் விளங்கிக் கொள்ள இயலாதவர்களாகவும், அந்தக் குர்ஆனிய வசனங்களினுடைய அர்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகவும் இருந்தனர். மேலும், ஆச்சரியப்படத்தக்கதொரு விசயம் என்னவெனில், இப்படிப்பட்டவர்களுக்கு இவர்களது மார்க்க அறிஞர்கள் மற்றும் முன்னோர்கள் மார்க்கம் சம்பந்தமாக வழங்கிய தீர்ப்புக்கள்,  குர்ஆனிய வசனங்களுக்கு எதிராக இருக்கும் போது, அவற்றை பின்பற்றுவது என்பது, எப்படி இவர்களுக்கு சாத்தியமாகும்? இன்று நடைமுறையில் இருக்கும் அம்சங்கள் குறித்து சிந்தித்தோமானால், இத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்டோர் நம்மில் ஏராளமாக உள்ளனர் என்றும் கூறலாம். இத்தகைய நிலையில் உள்ள குருட்டுத்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடியவர்களும் மற்றும் தத்தமது அறிஞர்களைப் பின்பற்றக் கூடியவர்களும், கூடு விட்டுக் கூடு பாய்தல் அல்லது மறு பிறவிக் கொள்கை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் மற்றும், இறைவனையும் அவனது தூதரையும் பின்பற்றுவதற்குப் பதிலாக தத்தமது அறிஞர்களைப் பின்பற்றுவது மூலம், ஏக இறைவனுக்கு இவர்கள் இணைகற்பித்தவர்களாக இருக்கின்றார்கள்.

இதே போல ஒரு கருத்தை, மொஹ்இ அஸ் ஸுன்னா அல்லாமா பாக்வி என்பவர் தன்னுடைய தஃப்ஸீர் மஆலம் அத் தன்ஸீல் என்னும் நூலில் :
இன்று நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள், தங்களுடைய ஈமான் சம்பந்தப்பட்ட வகையிலும், வணக்கம் சம்பந்தப்பட்ட வகையிலும் : இவை இஸ்லாத்தில் ஹலாலா? அல்லது ஹராமா? என்ற வகையிலும், எந்த வித எச்சரிக்கையையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படாமலும், தங்களது இமாம்களின் கருத்துக்களை தீவிரமாக ஆராய்ந்து பார்க்காமலும், கண்மூடித்தனமான வகையில் இமாம்களைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக் கொண்டு,;, தங்களது வழிவழியாக வந்து கொண்டிருக்கக் கூடிய சந்ததிகளை அந்த இமாம்களின் கருத்துக்களைப் பின்பற்றியே  இட்டுச் சென்று கொண்டும், அதன் மீதே அவர்களை நிலைத்திருக்கவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய இத்தகைய செயலை இறைவனும், அவனது திருமறைக் குர்ஆனும், அவனுடைய தூதரும் அனுமதியளிக்கவில்லை., அத்தகைய செயல்களுக்கு எந்தவித முன் மாதிரியோ அல்லது, அதற்கு ஆதாரமான தொடர்ச்சியான நிகழ்வுகளோ எதுவும் இதுவரை கிடையாது. இவர்களது இத்தகைய செயல்களுக்கு ஆதரவாக எந்த ஸஹீஹான ஹதீஸுகளும் கூடக் கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், குர்ஆனும், சுன்னாவும், இமாம்களுடைய கருத்துக்களும், இந்த மத்ஹபுக் கொள்கைகளுக்கு முரண்பட்டவைகளாகவும், அவற்றுக்கு எதிராகவுமே அமைந்துள்ளன. இதற்கு முன் இமாம் ராஸி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதை விட இன்றைய முஸ்லிம் சமுதாயமானது, இந்த மத்ஹபுக் கொள்கைகளில் உழன்று கொண்டு,   பாவத்தையே சம்பாதிக் கொண்டிருக்கக் கூடிய, வழிதவறி விட்ட சமுதாயமாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே, இந்த இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து கெட்ட கொள்கைகளையும் விட்டொழித்து, ஒரு உயிரோட்டமுள்ள சமுதாயமாக மாற, அனைவரும் இது பற்றிச் சிந்திக்க வேண்டியது கடமையாக இருக்கின்றது.

ஷேக் ரஷித் ரிழா என்பவரும் தன்னுடைய தஃபஸீர் அல் மனார் என்னும் நூலில், இந்த மத்ஹபுக் கொள்கைகள் பற்றியும், அவற்றைப் பின்பற்றுவது பற்றியும் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். இந்த நூலின் மூல ஆசிரியர் ஷேக் முஹம்மது சுல்த்தான் அல் மஃசூமி அல் கஜ்னாதி அவர்களும், சூரா அல் ஃபாத்திஹாவுக்கான தன்னுடைய விளக்கவுரை நூலான, அவ்துல் புர்ஹான் ஃபீ தஃப்ஸீர் உம்முல் குர்ஆன்-ல், இந்த மத்ஹபுக் கொள்கைகளைப் பற்றி விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.

அல்லாமா முர்த்தஸா சுபைதி என்ற அறிஞர் தன்னுடைய, இஹ்யா உல் உலூம் என்னும் நூலில், முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை மட்டுமே,ஒரு மனிதன் பின்பற்றுவதற்கு ஏற்ற சிறந்த வழிமுறையாகும் : அவருடைய கட்டளைகளை மட்டுமே ஒரு மனிதன் ஏற்று கீழ்ப்படியக் கூடியதாக இருக்கின்றது. நாம் இறைத் தூதருடைய தோழர்களையும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால், அவர்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்றவர்கள் என்பதும், அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எதனைப் பயின்று நமக்கு அறிவித்தார்களோ அவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றோமே தவிர வேறெதனையும் நாம் பின்பற்றவில்லை. இதன் விளக்கமாக அப்துல்லா பின் அப்பாஸ் அறிவிக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய அறிவுரை அல்லது ஞானத்தைத் தவிர, ஒரு மனிதனுடைய கல்வி ஞானம் அல்லது அறிவின் ஒரு பகுதி ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் இருக்கின்றது மற்றும் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

இராக்கி என்ற அறிஞர் கூறியதாக, தபரானி அவர்கள் தன்னுடைய அல்-கபீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த விளக்கம் குவ்வத்துல் குலூப் என்னும் நூலிலும் இடம் பெற்றுள்ளது.

பிரிவுகளின் அடிப்படையில் பிரிந்து நின்று மார்க்கத்தைப் பின்பற்றுவது என்பது, ஒரு நோயைப் போன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய உம்மத்திற்குள் ஊடுறுவி, இன்று அந்த நோய் புரையோடிப் போய் குணமாக்க முடியாத அளவில் மிகவும் முற்றிய நிலையில் உள்ளது. இதனிடையே எண்ணிக்கையில் மிகவும் சிறிய சமூகம் ஒன்று இன்றும் தங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தைப் தூய முறையில் பின்பற்றிக் கொண்டு, தமது வழிகாட்டலுக்குக் குர்ஆனையும் சுன்னாவையும் மட்டுமே கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இத்தகைய தூய வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தான், இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு போராடக் கூடியவர்களாகவும், தங்கள் பல்வேறு அலுவல்களுக்கிடையே, எதிர்ப்புகளுக்கிடையே இஸ்லாத்தை அதன் தூய வடிவிலும் மற்றும் ஓர் இறைக் கொள்கையையும் மக்களிடையே பிரச்சாரம் செய்து வரக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களுக்கிடையே பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துக் கொண்டு இந்த இறை மார்க்கம் அதன் தூய வடிவில் உயிர் பெறுவதற்குப் போராடியும் வருகின்றார்கள். இத்தகையதொரு விழிப்புணர்வுடன் கூடிய பிரச்சாரம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும், சௌதி அரேபியா, துருக்கி, எகிப்து, பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா இன்னும் எண்ணற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிக்கின்றது. நாம் வாழும் இந்திய நாட்டிலும், குறிப்பாகத் தமிழகத்தில் இத்தகைய மறுமலர்ச்சி அதிகமாகவே காணப்படுகின்றது. அல்ஹம்துலில்லாஹ். (ஆசிரியர்)

நவாப் சித்தீக் ஹஸன் கான் என்பவர், ஃபத்ஹுல் பயான் என்ற தன்னுடைய திருமறைக்கான தஃப்ஸீர்- ல் , திருமறையின் 9:31 என்ற வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுகின்றார் :

மேற்கண்ட குர்ஆன் வசனம் 9:31 ஆனது, அறிவுடைய சிந்திக்கும் திறனுடைய மற்றும் மத்ஹபு விவகாரங்களில் தர்க்கம் செய்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும், தனிப்பட்ட வகையில் மார்க்க விவகாரங்களில் குறிப்பிட்ட இமாம்களைத் தான் பின்பற்றுவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும், குர்ஆனை விடவும், சுன்னாவை விடவும் தங்களுடைய இமாம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த வசனம் போதுமானதாக இருந்து,  உணர்ச்சி வசப்படக் கூடிய அத்தகையவர்ளை எச்சரிக்கை செய்து, கண்மூடித்தனமாக இமாம்களைப் பின்பற்றுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானதாக இருக்கின்றது. தெளிவான வகையில் வழிகாட்டுவதற்கு குர்ஆனும், சுன்னாவும் இருக்கின்ற போது, அதற்கும் மேலானதொன்றாக இந்த மத்ஹபுகளைப் பின்பற்றுவது என்பது, இவர்கள் கிறிஸ்த்தவர்களும், யூதர்களும் தங்களுடைய குருமார்களை இறைவனுக்குச் சமமாக ஆக்கி வைத்திருப்பதற்கு ஒப்பாக இருக்கின்றது. அதாவது, இவர்கள் தங்களது குருமார்களை வணங்கவில்லை, மாறாக இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களை வகுத்துத் தரக்கூடியவர்களாக தங்கள் குருமார்களைக் கருதியது தான் இதன் காரணமாகும். எவ்வாரெனில், தங்களுடைய குருமார்கள் எதனை விட்டும் இவர்களைத் தடுத்தார்களோ அவற்றைத் தடுத்துக் கொண்டும், எதனை அனுமதித்துக் கொண்டார்களோ அவற்றை ஏற்று செயல்படுத்தி வந்ததும் தான் இதற்கு முக்கிய காரணமாகும். கண்மூடித்தனமாக மத்ஹபுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே அவர்களும் இதையே தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனதருமை அல்லாஹ்வின் அடியார்களே ! நீங்கள் குர்ஆனையும், சுன்னாவையும் விட்டு விட்டு, பிறருடைய கருத்துக்களைப் பின்பற்றிக் கொண்டு, நானும் இந்த முஸ்லிம் உம்மத்தில் ஒருவன் தான் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வது மிகவும் தவறானதாகும். நீங்கள் யாரை நம்பிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்களோ அத்தகையவர்கள் நம்மைப் போன்ற, தவறுகள் செய்து விடக் கூடிய, சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் தவறிழைத்து விடக் கூடியவர்களும், தவறாகச் சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். மனிதனுக்கு உள்ள அனைத்து பலகீனங்களையும் பெற்றவர்ளாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்களோ அந்த மத்ஹபு சார்ந்த நூல்கள் யாவும், மேற்கண்ட பலகீனங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவராக முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று சாட்சியம் கூறியும், அவற்றை ஒப்புக் கொண்டும் உள்ளன. அத்தகைய இறைத் தூதரைத் தவிர்த்து வேறு யாரையும் பின்பற்றுவது சட்டபடி தடுக்கப்பட்டதாகும்.

எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே !!

தவறுகள் செய்து விடக்கூடிய, தனிப்பட்ட நபர்கள் எழுதிய அந்தப் புத்தகங்களை விட்டுத் தள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். இறைவனுடைய அந்தக் குர்ஆனின் பக்கம் உங்களது முகங்களைத் திருப்புங்கள். அது தான் எல்லாவித தவறுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டதாக இருக்கின்றது. மேலும், சுன்னாவின் பக்கம் உங்களது கவனத்தைச் செலுத்துங்கள். அது தான் நமது வாழ்க்கைக்குத் தேவையான உண்மையான வழிகாட்டுதல்களைப் பெற்றிருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும் தான் நாம் பின்பற்றக் கூடிய மதிப்புமிக்க இமாமாக இருக்கின்றார். அத்தகையவரை ஏன் நீங்கள் பின்பற்ற மறுக்கின்றீர்கள்? அவரது வழிகாட்டுதல்களை ஏன் பின்பற்றாமல் புறக்கணிக்கின்றீர்கள்? அனைத்து இமாம்களும் அந்த நேர்வழிபெற்ற தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் தான் பின்பற்றியிருக்கின்றார்கள், அவரது வழிகாட்டுதல்கள் மட்டுமே நம்மை வெற்றிடையச் செய்யக் கூடியதாக இருக்கின்றது. அவருடைய வழிகாட்டுதல்களைத் தவிர்த்து, ஏனைய அனைத்து வழிகாட்டுதல்களும் உங்களை வழிகேட்டுக்கு இழுத்துச் சென்று, இறைவனை மறுக்கக் கூடியவர்களாக ஆக்கி, மறுமையிலே உங்களை நஷ்டவாளிகளாகவும், தோல்வியைச் சுவைக்க வைக்கக் கூடியவர்களாகவும் ஆக்கி விடக்கூடியதாக இருக்கின்றது. இறைவன் நம் அனைவரையும், முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களாக ஆக்கி வைப்பானாக ! ஆமீன்!!

இந்தப் பூமியில் வாழும் இந்த மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் வகுத்துத் தரக் கூடிய தன்மையைப் பெற்ற ஒருவன், அந்த வல்லோனாம் அல்லாஹ் ஒருவனே: முஹம்மது (ஸல்) அவர்கள் தான் அவனுடைய உண்மைத் தூதரும், இறைவனுடைய சட்டங்களை எடுத்து அறிவிப்பவராகவும் உள்ளார், என்று திருமறை நெடுகிலும், இந்த உண்மை மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதையே இறைவன் தன் திருமறையில் கூறும் போது :

{  إنْ عليك إلاالبلغُ  }
(நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர (வேறெதுவும்) உம்மீதில்லை. (அல் குர்ஆன் : 42:48)

மேலும், இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் :

{  ما على الرسول إلا البلغ  }
(நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. (அல் குர்ஆன் : 5:99)

{  فإنما عليك البلغ  }
உம்மீதுள்ள கடமையெல்லாம் (நம்முடைய தூதை) எத்தி வைப்பது தான்.(அல் குர்ஆன் : 3:20).

மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளதாவது, இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மனித வர்க்கத்திற்கு வழிகாட்டியாகவும், தன் இறைவனுடைய தூதை இந்த மக்களுக்கு எத்தி வைப்பவராகவும் இருக்கின்றார் என்பதையும், இதன் மூலம் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பேற்படுத்துபவராகவும் இருக்கின்றார் என்பதையும் நமக்கு தெளிவாக எடுத்துரைப்பதுடன், இந்த மனித இனத்திற்குத் தேவையான சட்டங்களை வகுத்துத் தரக்கூடியவன் அந்த ஏக இறையோனாம் அல்லாஹ் ஒருவனே என்பதையும், அவன் வகுத்துத் தந்த அந்தச் சட்டங்களை தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக நமக்கு வழங்கியிருக்கின்றான் என்பதையும், மறுக்கமுடியாத ஆதார சாட்சியங்களுடன் மேற்கண்ட இறைமறை வசனம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் வகுத்துத் தந்த சட்டங்களையும், அந்தச் சட்டங்களைப் பெற்றுத் தந்த இறைத்தூதருடைய வழிகாட்டுதல்களையும் ஏற்று மதித்து அவற்றைப் பின்பற்றுவதற்கு மட்டுமே நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் இறைவன் வழங்கிய திருமறைக் குர்ஆனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அதனுடைய தெளிவுகளுக்கும் மற்றும் விளக்கங்களுக்கும், முஹம்மது (ஸல்) அவர்கள் அளித்த விளக்கங்கள் மூன்று வகைப்படும். 1) ஈமான் மற்றும் உறுதி 2) வணக்கங்களும் அதன் அனைத்து வகைகளும், நேரம் சார்ந்த வணக்ககங்கள், அதற்கான கணக்கிடப்பட்ட சரியான நேரங்கள், அதன் கால அளவுகள், வணக்கங்களின் தரங்கள், அதன் அளவுகள், 3) தடைகள் (ஏவலும், விலக்கலும்) ஆகியவைகளாகும், இன்னும் இது சாராத, இவற்றிற்கு மேற்பட்ட அனைத்தும் ஷரியத் சட்டங்கள் எனப்படும். அதாவது குர்ஆனின் விளக்கங்களில் இருந்தும், முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறைகளில் இருந்தும், பிரச்னைகளில் நமக்குத் தேவையான சரியான இஸ்லாமிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனில், உலமாப் பெருமக்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சட்டவரையறைகளை மீறாத வகையில் எடுக்கப்பட்ட இஜ்திஹாத் (உலமாக்களின் சட்ட ஆலோசனை முடிவு) களை ஏற்றுக் கொண்டு செயல்படலாம். இத்தகைய முறையில் எடுக்கப்பட்ட இஸ்லாமியத் தீர்வுகள், சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் தீமைகளைக் களைந்து, அமைதியை சுபிட்சத்தை ஏற்படுத்தும். நாம் நமது இஸ்லாமிய மார்க்த்தைப் பற்றி இது வரை தெளிவாக அறிந்து கொள்ளவில்லை எனில், இதுவரை நாம் கேள்விப்பட்டவைகளிலிருந்து ஒதுங்கி, உண்மையான இஸ்லாமியக் கொள்கைகளை அறிந்து கொள்வதற்குத் தடையாக இருக்கும் பொடுபோக்குத் தனத்திலிருந்தும், கவனமின்மையிலிருந்தும் நம்மைத் தவிர்த்துக் கொண்டு, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். இன்றைக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூற்களின் தமிழாக்கங்களும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்நத ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றிய தாபியீன்கள் ஆகியோரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தாங்கி ஏராளமான புத்தகங்களும் வெளிவந்து விட்டன. அவற்றை நமது வழிகாட்டலுக்கு எடுத்துக் கொண்டு, உண்மையான தீனை அறிந்து கொள்ள நாம் உடனே தாமதம் செய்யாது முயற்சி செய்ய வேண்டும்.

இங்கே நான் விளக்கியிருக்கும் என்னுடைய கருத்துக்களுக்கும் மற்றும் விளக்கங்களுக்கும் ஆதரவாகப் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை ஆதரமாக எடுத்துக் காண்பித்துள்ளேன். இதிருந்து இந்த முஸ்லிம் உம்மத்தானது நல்லதொரு பாடத்தைப் பெற்றுக் கொண்டு, குர்ஆன் மற்றும் சுன்னாவினுடைய உண்மையான நோக்கத்தை அறிந்து, எந்தவித இடைச்செறுகல் மற்றும் சுய விளக்கங்களின் அடிப்படையில் அவற்றைப் பின்பற்றாமல், அவற்றின் உண்மையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அதாவது, இந்த மனித குலத்திற்கு எதற்காக குர்ஆனும், அந்த ஏகனின் தூதரும் அனுப்பி வைக்கப்பட்டார்களோ அந்த உயரிய நோக்கத்தைப் புரிந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

குர்ஆனில் இருந்தும், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்தும் மட்டுமே வழிகாட்டுதல்களையும், அவற்றினுடைய விளக்கங்களிலிருந்து அறிவுரைகளையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றீர்கள். வணக்க வழிபாடுகள் மற்றும் இன்னபிற வாழ்வியல் அடிப்படைகளுக்கு மேற்கண்டவற்றிலிருந்து மட்டுமே ஒரு முஸ்லிம் தன்னுடைய வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொண்டு, ஏனையவற்றில் இருந்து தவிர்ந்து கொள்வதானால் மட்டுமே, அவன் தன்னுடைய ஈமானில் திருப்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனில் இருந்தும் சுன்னாவில் இருந்தும் படிப்பினையைப் பெற்றுக் கொண்டு, அதில் நம்மை உறுதியாக நிலைத்திருக்கச் செய்வதற்கு இறைவனிடம் துஆச் செய்து கொள்வதோடு, வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அந்த வழிகேடுகளை எதிர்த்து இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பாதுகாத்துக் கொள்வதற்கும் நாம் மிகவும் கண்காணிப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். இஸ்லாத்திற்குள் வழிகேடுகளை யார் புகுத்தினாலும் சரி, அவர்கள் முஸ்லிம்களாயினும் சரி அல்லது முஸ்லிம் அல்லாதவர்களாயினும் சரி, இத்தகையவர்களை எல்லாவித வலிமைகளைக் கொண்டும் எதிர்த்து, இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையையும், அதன் வலிமையையும் கட்டிக் காக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது.

நேர் வழி

;அழிந்து விடக் கூடிய நிலையில்லாத இந்த உலகில், நேர்வழியைப் பின்பற்றி அதன் வழி நடக்குமாறு, இறைவன் இந்த மனித சமுதாயத்திற்கு கட்டளையிட்டுள்ளான். இந்த நேர்வழியைப் பின்பற்றி மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவனால் அருளப்பட்டதும், மனிதன் அந்த வழியில் இருந்து பிறழாது வாழ வேண்டும் என்பதும் இறைவனுடைய விருப்பமாகும்.  இந்த காரணத்திற்காகவே அனைத்துத் தூதர்களும் அனுப்பப்பட்டனர், வேதங்களும் அனுப்பப்பட்டன. மேலும், தன்னுடைய அந்த்த தூதர்கள் மூலமும், தன்னுடைய வேதங்கள் மூலமும், மனிதன் நேர்வழியை பின்பற்றி நடந்தால் மட்டுமே சொர்க்கத்தை அடைய முடியும் என்று அறிவுறித்தியுள்ளான். இந்த உலக வாழ்க்கையில் யார் மிகவும் அதிக பயபக்தியுடனும், தன்னால் இயன்ற வரையிலும், இறைக்கட்டளையை ஏற்று நேர்வழியைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அத்தகையவர்கள் மட்டுமே, மறுமை நாளிலே நரகத்தை விட்டு, சொர்க்கத்தை அடைவதற்கும், மண்ணறையின் கேள்விகளுக்கு மிக எளிதாக பதில்களைத் தந்து, தான் இந்த உலக வாழ்க்கையில் சிராத்தல் முஸ்தக்கீம் என்ற நேரான பாதையில் வாழ்ந்ததற்கான பயனை மிக எளிதாக அடைய முடியும்.

{  وإن هذا صرطى مستقيماً فاتبعوه ،  ولا تتبعوا ألسبل فتفرق بكم عن سبيله ، ذالكم وصكم به لعلكم تتقون  }
இன்னும் நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். ஆகவே இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்து விடும். (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாவதற்காக இவற்றை (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு ஏவுகின்றான் (என்று கூறுவீராக!). (அல் குர்ஆன்-6:153).

அழிந்து விடக் கூடிய இந்த அற்பமான உலகில் நேர்வழியைப் பின்பற்றி வாழக் கூடிய ஒரு நல்லடியார், அவர் ஒரு பயணியைப் போன்றே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் இருப்பதால், இந்த உலக வாழ்க்கையின் மோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் அத்தகைய நல்லடியார்களைப் பரிகாசம் செய்து, அவர்களை உதாசினம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இத்தகைய உதாசினங்கள் மற்றும் சமூகத்திலிருந்து தான் ஒதுக்கப்பட்டு விட்டதால் தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்று அந்த நல்லடியார் எண்ணிக் கொள்ளாமல், தான் இறைவனுடைய பாதுகாப்பிலும், மற்றும் நபிமார்களும், உண்மையான ஈமான் கொண்டவர்களும், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்த ஷஹீதுகளும், மற்றும் நேர்வழி பெற்றவர்களும், இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய அந்த நேர்வழிக்குத் துணையாளர்களாக இருக்கின்றார்கள் என்று நல்லடியார்களுக்கு இறைவன் அறிவித்திருக்கின்றான். இத்தகையவர்கள் தான் இறைவனின் அருட்கொடையைப் பெற்றவர்கள். இத்தகைய உண்மையான தோழர்களை விடச் சிறந்தவர்கள் வேறு யார் இருக்க முடியும்?  இத்தகைய நல்ல தோழர்களை வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் பெற்றவர்கள் எதற்காகக் கவலைப்படவேண்டும், தான் தனித்து விடப்பட்டு விட்டோம் என்று கவலைப்பட வேண்டும். அதை விட அவர்கள் தான் இறைவனுக்கு மிக நெருக்கத்தில் இருக்கின்றோம் என்பதையும், அவனது அருட்கொடைகளைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் நினைத்து சந்தோசப்பட வேண்டும்.

இன்று நேர்வழியைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றவர்களை விட வழிகேட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டு மனந்தளர்ந்து விட வேண்டாம். அவர்களின் எண்ணிக்கை இந்த உலகத்தில் வேண்டுமென்றால் நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆனால் இறைவனின் முன்னர் அவர்கள் அற்பமான தூசியைப் போன்றவர்கள். நாம் எண்ணிக்கையில் மிகவும் அற்பமாக இருக்கின்றோம் என்றும், நாம் தனிமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டு, நேரான வழியைப் பின்பற்றாது ஒதுங்கி விட வேண்டாம் என்று நமக்கு முன் சென்று விட்ட நல்லடியார்களும், நேர் வழிபெற்றவர்களும் நமக்கு அறிவுறுத்திச் சென்றுள்ளனர். வழிகேட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றார்கள் மற்றும் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டு, நேரான வழியை விட்டு விட்டு, வழிதவறியவர்களின் வழிகேட்டைத் தேர்ந்தெடுக்க முற்பட வேண்டாம், நிச்சயமாக அந்த வழிகெட்டவர்கள் அழிவைத் தான் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்களே ஒழிய, இறைவனின் வெற்றியை நோக்கி அவர்கள் செயல்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்தகையவர்களிடமிருந்து ஒதுங்கி அல்லது விலகி இருந்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் நீங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கின்றீர்களோ, அப்பொழுதெல்லாம், இறைவன் யார் யாருக்கெல்லாம் தன்னுடைய அருட்கொடையைப் பற்றி நன்மாரயங் கூறியிருக்கின்றானோ அத்தகைய நல்லடியார்களையும், அவர்கள் இந்த மார்க்கத்திற்காகச் செய்த தியாகங்களையும் நினைத்து, ஆறுதல் அடைவதுடன் அந்த நல்வழியில் ஏற்படும் சிரமங்களை சகித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

உங்களைத் தங்களுடைய வழிகேட்டின் பால் இட்டுச் செல்வதற்கு அவர்கள் எத்தகைய உத்திகளைக் கையாண்டாளும், அவற்றிற்கு எந்தவித மதிப்பும் அளிக்காமல், அவற்றைப் புறக்கணித்து விட்டு, உங்களது நேர்வழியிலேயே நிலைத்திருக்கப் பாடுபடுங்கள். இதையே தான் நாம் ஓதும் துஆ குனூத்தில் இவ்வாறு இறைவனிடம் கேட்கின்றோம் :

((  اللهم اهدني فيمن هديت  ))
யா அல்லாஹ்!! யார் யாருக்கெல்லாம் உன்னுடைய அருட்கொடையைச் சொறிந்து, அவர்களுக்கு நேர்வழியைக் காட்டினாயோ, அத்தகையவர்களின் வழியில் என்னை ஆக்கி அருள்வாயாக!!

ஒவ்வொருவரும் அல்லாஹ்வினுடைய கோபத்தை யார்யாரெல்லாம் பெற்றுக் கொண்டார்களோ (المغضوب عليهم) மற்றும் வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ(الضالين) அத்தகையவர்களின் வழியில் இருந்து தன்னை தூரமாக்கிக் கொள்ள வேண்டும்.

நல்லடியார்கள் என்பவர்கள் எப்பொழுதுமே மேற்கண்ட வழிகேட்டிலிருந்து தன்னைத் தூரமாக்கியே வைத்திருப்பார்கள். நேர்வழி என்பது நபி முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களுடைய உத்தம தோழர்களும், இன்னும் நேர்வழிபெற்ற நல்லோர்களும் பின்பற்றிய வழியுமாகும், ஏனைய அனைத்தும் வழிகேடுகளாகும்.

இப்னு கைய்யிம் அவர்கள் தன்னுடைய மதாரிஜி அஸ் ஸாலிஹீன் என்னும் நூலில், எவை முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அல்லது அவர்களுடைய தொடர்புடையதாக இருக்கின்றதோ அவை அனைத்தும் நேர்வழியின் பால் இட்டுச் செல்லக் கூடியவைகள், மற்றும் எவை எல்லாம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவில்லையோ அல்லது அவர்களின் தொடர்பைப் பெற்றதாக இல்லையோ அவை அனைத்தும் வழிகேட்டிற்கே இட்டுச் செல்லக் கூடியவைகள். வழிகேடானது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கின்றது, என்று நேர்வழியையும், வழிகேட்டையும் ஒரு முஸ்லிம் எவ்வாறு பிரித்தறிவது என்று தெளிவுபடக் கூறியிருக்கின்றார்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் முஹம்மது (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்ற ஸஹாபாக்கள் இஸ்லாமிய சட்டங்களான ஷரியத்தைப் பற்றி மிகத் தெளிவாக அறிந்தவர்களாக இருந்தார்கள் என்பது, சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்றாகும். அந்த ஷரியத் சட்டங்களின் பின்னணியில் இருந்த ஒவ்வொரு இறைக்கட்டளையையும், உண்மைகளையும், அதன் தத்துவங்களையும் பற்றி அவர்கள் மிகத் தெளிவான முறையில் அறிந்தவர்களாகவும், அவற்றில் விழிப்புணர்வுடனும் இருந்தார்கள். இன்று இஸ்லாம் மார்க்கத்தில் பல்வேறு புதினங்களைப் புகுத்தியவர்களையும், அந்த நேர்வழி பெற்றுச் சென்ற ஸஹாபாக்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால், இவர்களுக்கிடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். அந்த உத்தம ஸஹாபாக்கள் தாங்கள் எங்கெங்கெல்லாம் சென்றார்களோ, அதாவது நிராகரிப்பாளர்களின் நாடுகளையும், இறை மறுப்புக் கொள்கையையுடையவர்களின் நாடுகளையும் வெற்றி கொண்ட போது, தங்களது நன்னடத்தைகள் மூலமாக அந்த நாடுகளில் வாழ்ந்த அந்த மக்களின் மனங்களையும் சேர்த்தே வெற்றி கொண்டார்கள். இது அவர்கள் நேர்வழியின்பால் தங்களை இணைத்துக் கொண்டதனால், இறைவன் அவர்களுக்கு அருளிய வெற்றியாகும் என்பதற்கான சாட்சியங்களாகும். அதே நேரத்தில் இஸ்லாத்தில் வழிகேடுகளைப் புகுத்தியவர்களும், ஷியாக்களும் எங்கெங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மக்களின் எதிர்ப்பைத் தான் சம்பாதிக்க முடிந்தது.

மத்ஹபுகளும் - ஃபிர்அவ்னின் வழிமுறையும்

{  إن فرعون علا فى الأرض وجعل أهلها شيعاً يستضعف طاءِفةَ منهم  }
நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் (மிகவும்) பெருமை கொண்டு, அதிலுள்ளவர்களைப் பல பிரிவினர்களாக்கி, அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனப்படுத்தினான். (அல் குர்ஆன்  28-4).

இந்த உலகில் வாழும் மனிதர்களை பலவாறாகப் பிரித்து, அவர்களுக்கிடையே இருந்த பிரிவினையைப் பயன்படுத்தி, அதன் மூலம் தன்னுடைய ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்த பெருமை, மனித வரலாற்றில் முதன்முதலாக ஃபிர்அவ்னையே சேரும் என்பதை மேற்கண்ட வசனம் நமக்கு தௌ;ளத் தெளிவாக உணர்த்துகின்றது.

மேலும் திருமறைக் குர்ஆனில் இன்னொரு இடத்தில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

{  ولا تكونوا من المشركين ،  من الذين فرقوا دينهم وكانوا شيعاً ،  كل حزب بما لديهم فرحون  }
மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகி விடாதீர்கள். தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே, அத்தகையோரில் (நீங்கள் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக  இருக்கின்றனர். (அல் குர்ஆன் 30- 31,32).

மேலும் மேற்கண்ட இறைவனின் கூற்றுப்படி இன்று முஸ்லிம் சமுதாயம் தன்னைப் பலவாறாகப் பிரித்துக் கொண்டு, இறைவனின் எச்சரிக்கையை மீறி நடந்து வருவதால், தங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை குறைந்து, இன்று வலுவற்ற சமுதாயமாக இருந்து வருகின்றது. மேற்கண்ட ஃபிர்அவ்னின் உத்தியைப் பயன்படுத்தி, முஸ்லிம்களைப் பலவாறாகப் பிரித்து, அந்தப் பரிரிவினை மூலம், மேற்கத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளை அடக்கி ஆண்டு வருகின்றன. இந்த மேற்கத்திய நாடுகளின் தாரக மந்திரமே, பிரித்து வை, ஆட்சி செய் என்பதில் தான் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, இவர்கள் அன்றைய முஸ்லிம்களின் கிலாபத் தலைமைப் பீடமாக இருந்த, துருக்கியின் அதிபர் கமால் அத்தாதுர்க் அவர்களிடம் இந்தக் கைக்கூலிகளான பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் சென்று, அரபுக்கள் உங்களுக்கெதிராக திரண்டிருக்கின்றார்கள், எனவே நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, அரபுக்களிடம் சென்று அரபுக்கள் அஜமிகளிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதா? அதாவது அரபுக்கள் அரபு அல்லாதவர்களான துருக்கியக் கிலாபத்திற்கு அடிமைப்பட்டு, அவர்கள் சொல்படி கேட்பதா என்று கூறி, முஸ்லிம்களாக ஓருடலாக இருந்தவர்களிடம், பிரிவினையைத் தூண்டி விட்டு, அந்தப் பிரிவினை மூலம், அரபு நாடுகளை ஆட்சி செலுத்தி வந்தனர். இன்று அரபு நாடுகள் சுதந்திர நாடுகளாகப் பரிணமித்தாலும், முந்தைய கிலாபத் வீழ்ச்சியடைந்து, தனித்தனித் தலைமை உருவாகி, பழைய மதிப்பு மரியாதைகளை முஸ்லிம் நாடுகள் இழந்து விட்டன என்பது தான் உண்மை.

இறைவன் இந்த பூமியில் உள்ள மக்களுக்கு வழிகாட்ட தன்னுடைய திருமறைக் குர்ஆனையும், அவற்றைத் தெளிவுபடுத்த ஏராளமான நபிமார்களையும் அனுப்பி வைத்தான். இறைவன் அனுப்பிய அந்த வேதத்தையும், அதனைக் கொண்டு வந்த நபிமார்களையும் பூரணமாக ஏற்று நம்பிக்கை கொள்வதோடு, அந்த நபிமார்களுக்கிடையே வேறுபாடுகளைக் காட்டி ஒருவரை உயர்வாகக் கருதுவதும், மற்றவரைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்களுக்கடையே வேற்றுமை பாராட்டுவதும் கூடாது என்பதில் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, அவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இப்படி இருக்கும் போது, அந்தத் தூதர்களை நம்பி அந்த தூதரையும், அவர்கள் கொண்டு வந்த திருமறைக் குர்ஆனையும் முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த அவர்களது தோழர்களான ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், உலமாப் பெருமக்கள், இஸ்லாமியச் சட்ட நிபுணர்கள் ஆகிய அனைவரையும் நாம் ஒரே தரத்தில் வைத்து, அவர்கள் அனைவரையும் வேறுபடுத்திப் பார்க்காது, அவர்களுக்கு மரியாதை செய்வது தானே ஒரு முஸ்லிமிற்கு உகந்ததாக இருக்கும். இதை விட்டு விட்டு இவர்களில் யாராவது ஒருவரை மட்டும் பின்பற்றிக் கொண்டு, மற்றவர்களை உதாசிணம் செய்வது எந்த வகையில் இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன் ஒத்துப் போகும் என்பதை இந்த முஸ்லிம் சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இவர்களில் யார் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையதாக தங்கள் கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்களோ அவற்றை ஏற்றுக் கொள்வதும், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதிப்பதும், அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் தான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற நினைக்கின்ற ஒரு முஸ்லிமிற்கு அழகாக இருக்கும். இதை விட்டு விட்டு ஒருவரை மட்டும் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள், தங்களது இமாம் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களைக் கூறினாலும் ஏற்றுக் கொள்வதும், இன்னொருவர் இஸ்லாத்திற்கு ஏற்புடைய கருத்துக்களைக் கூறியிருக்கும் பட்சத்திலும் அவற்றை எங்கள் இமாம் கூறவில்லையாதலால் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனப் பிடிவாதம் பிடிப்பதும் வழிகேடாகும். இத்தகைய நிலைப்பாடு நம்மிடையே வேற்றுமைகளைத் தான் வளர்க்கும். இவ்வாறு ஒரு இமாமைப் பின்பற்றிக் கொண்டு தங்களது இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுபவர்கள், பிற இமாம்களின் தலைமையில் தங்கள் தொழுகைகளைக் கூட நிறைவேற்றுவதில்லை. இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் மூளையில்லாதவர்கள், அறிவு மழுங்கிப் போனவர்கள். இவர்கள் திருமறைக் குர்ஆனில் இறைவன் என்ன சொல்லியிருக்கின்றான் எனப் பார்ப்பதில்லை, மாறாக தன்னுடைய இமாம் என்ன சொல்லியிருக்கின்றார், தன்னுடைய மத்ஹப் எதை வலியுறுத்தியுள்ளது என்பதில் தான் தன் கவனத்தைச் செலுத்துகின்றார். அவரது மத்ஹபைத் தான் அவர் பின்பற்றுவதற்குண்டான அடித்தளமாக நினைக்கின்றார்.

எங்கெல்லாம் இவர்கள் தன்னுடைய மத்ஹபிற்கு மாற்றமான கருத்துக்களைத் திருமறைக் குர்ஆனில் காண்கின்றாரோ அங்கெல்லாம், அந்தத் திருமறை வசனங்களை தன்னுடைய மத்ஹபின் கருத்துக்களுக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொணடு அதன்படியே தன்னுடைய மார்கக் கடமைகளை பின்பற்ற முற்பட்டு விடுகின்றார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த முஸ்லிம் உம்மத் தன்னுடைய மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முதலில் குர்ஆனைத் தான் அடித்தளமாகக் கருதி, அதிலிருந்து தான் தனக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இந்த மத்ஹபுகளுடன் ஒப்பிடும் போது, இந்த மத்ஹபுகளுடைய கருத்துக்கள் எப்பொழுதெல்லாம் குர்ஆனின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றதோ அப்பொழுது மட்டும் அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும், குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கும்பட்சத்தில், அது எந்த இமாமினுடைய கருத்தாக இருந்தாலும், அவற்றை ஒதுக்கித் தள்ளுவதும் தான் உண்மையான மூஃமினுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

அல்லாஹ்வினுடைய கோபத்திற்குள்ளானவர்களின் வழிமுறை எவ்வாறு இருக்கும் என்றால், அவர்களுடைய கருத்துக்களுக்குத் தக்கவாறு குர்ஆனினுடைய வசனங்கள் வரும்போது அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது அந்த உண்மை இவர்களுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் உண்மையான முஸ்லிம் எவ்வாறு இருப்பானென்றால், எங்கெல்லாம் உண்மை தென்படுகின்றதோ அவற்றைத் தேடிப்பிடித்து ஏற்றுக் கொள்வான். ஏனெனில் உண்மை என்ற அந்தக் கல்வி ஞானம் முஸ்லிம்களிடம் இருந்து சென்று விட்டு ஒன்றல்லவா!!

ஒவ்வொரு மத்ஹபுக்காரரும் தன்னுடைய இமாமின் மீது தனிப்பட்ட பிரியம் வைத்துள்ளார். அதன் காரணமாக அவர் எதைச் சொன்னாலும், எந்த வித மறுதலிப்புமில்லாமல் அதன் மீது மட்டும் நம்பிக்கை கொள்கின்றார். இது சுத்தமான வழிகேடாகும் என்பதில் ஐயமில்லை. ஒருவர் என்ன சொல்கின்றார் என்பதைக் கவனிக்க வேண்டுமே ஒழிய, அதைச் சொன்னது யார் என்று பார்க்கக் கூடாது. அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் :

உண்மை என்ன என்பதை அடிப்படையாக வைத்து தீர்ப்புச் செய்யும் போது, அந்த உண்மை யாரிடம் இருந்து வந்தது என்று பார்க்கக் கூடாது. ஆனால் அந்த உண்மையயை அடிப்படையாக வைத்து, அந்த மனிதனைப் பற்றியும், அவனது நடத்தையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் உண்மையிலேயே தன்னுடைய மார்க்கத்தை உண்மையாகவும், முழுமையாகவும் பின்பற்ற முயல்கின்றார் எனில், அவர் இறைவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும், அவரது தோழர்களையும் தான் பின்பற்ற வேண்டும். தனிப்பட்ட பிரிவுகள், இயக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவது என்பது வழிகேடுகள் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த வழிகேடானது இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட நூதனமாகும். இந்த மத்ஹபுப் பிரிவுகளும், இயக்கங்களும் மன்னர்களாலும், ஆட்சியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும், இஸ்லாத்தினுள் புகுத்தப்பட்டு, மக்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, அதன் மூலம் மக்களது ஒற்றுமையைக் குலைத்து, தங்களது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர் என்பது தான் மத்ஹபுகள் வளர்ந்ததற்கான  முக்கியக் காரணங்களாகும்.

முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம்

;இன்றைய உலகத்தில் எல்லா இடங்களிலும் மக்கள் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றியே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவர் தான் இந்த உம்மத்திற்கு இமாமாக இருக்க முடியும் என்ற உண்மையை விட்டு விட்டு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இமாம்களைப் பின்பற்றிக் கொண்டு, தங்கள் இமாம் என்ன கட்டளையிட்டாரோ அதை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு, இன்னும் அவற்றில் எதனை மீறினாலும் அது ஒரு வகையான வழிகேடு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையிலேயே ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்ற வேண்டிய இமாமாக முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள், அது முஸ்லிம்கள் மீது உள்ள நீங்காக் கடமையாகவும் இருக்கின்றது. இஸ்லாமிய நூற்றாண்டின் ஹிஜ்ரியில் நான்கு நூற்றாண்டுகள் வரை இஸ்லாத்தில் மத்ஹபுகள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது, என்று ஷா வலியுல்லாஹ் தஹ்லவி என்பவர் தன்னுடைய அத் தஃப்ஹிமத்துல் அல் அஹ்லிய்யா என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்களைப் பிரித்து வைக்கக்கூடிய இந்த மத்ஹபுச் சட்டங்கள் அடங்கிய நூல்கள் மற்றும் அது சார்ந்த தொகுப்புக்கள் யாவும் இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்து இருந்து வரக் கூடியவைகள் அல்ல, இவை யாவும் முஹம்மது (ஸல்) அவர்களது மறைவுக்குப் பின் பன்னெடுங்காலம் கழித்து வந்தவைகளே.

இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் வாழ்ந்த அந்த மக்கள் எந்த தனிப்பட்ட நபரையும் அல்லது இமாமையும் பின்பற்றி தங்கள் மார்கக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கவில்லை. அந்த மக்கள் எந்த நபராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து தங்களுக்குத் தேவையான இஸ்லாமிய அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இதில் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்துக் கொடுத்த ஹதீஸுகளை, தங்களுடைய பிரச்னைகளுக்கு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்பற்றிக் கொண்டார்கள். அந்த தங்களுடைய பிரச்னைகளுக்கான தீர்வுக்கு ஒன்றுக்கு அதிகமான பல்வேறு தீர்ப்புக்களைத் தரக் கூடிய ஹதீஸ்கள் கிடைக்கப் பெற்றால், அவற்றில் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்க அறிஞர்களின் தீர்ப்பில் எது ஏற்புடையதாக இருக்கின்றதோ அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றிக் கொண்டார்கள் என்று அபு தாலிப் மக்காய் என்பவர் தன்னுடைய குவ்வத்துல் குலூப் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மத்ஹபுகள் அனைத்தும் அடிப்படை ரீதியாக அவை யாவும் ஒரே குறிக்கோளை மையமாகக் கொண்டவைகள் தான். எனவே அவற்றில் எதனைப் பின்பற்றினாலும், அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றே என்று ஷேக் இப்னு அரபி என்பவர் குறிப்பிடுகின்றார். சில உலமாக்கள் ஒரே மத்ஹபை மட்டும் சார்ந்தும், அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களும் இந்த அறிஞர்களுடைய கருத்திற்கு வேறுபடாமல், அவர்களை மட்டும் சார்ந்து செல்லக் கூடிய நிலை தான் இன்று காணப்படுகின்றது. இது அத்தகைய நிலையில் இருக்கும் அறிஞர்களுடைய தவறான அணுகுமுறையையே காட்டுகின்றது. மிகப் பெரும் உலமாப் பெருந்தகையான முஹம்மது ஜுவைனி என்பவர் அவருடைய வாழ்க்கையில் எந்த மத்ஹபையும் பின்பற்றாது வாழ்ந்தும், எந்த மத்ஹபைச் சார்ந்தும் கூட தீர்ப்பு வழங்காமலும் இருந்துள்ளார். அவர் தன்னுடைய அல் முஹீத் என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்: அதாவது, நான் எந்த மத்ஹபைச் சார்ந்தும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் கொள்கைகளைப் பற்றி சரிவர அறிந்து கொள்ள இயலாத இந்த மத்ஹபுவாதிகளுக்கும், உண்மையை எடுத்துச் சொல்கின்ற மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தப்பெண்ணம், தவறான கருத்துக்கள் ஆகியவை இன்று முஸ்லிம் உம்மத்தைப் பல்வேறு கூறுகளாக ஆக்கி வைத்துள்ளன. இன்று இவர்கள் தங்கள் மத்ஹபுக் கொள்கையின் கவர்ச்சியினால், ஓருயிர் ஓருடலாக இருக்க வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று பல்வேறு பிரிவுகளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. முஹம்மது (ஸல்) இவர்கள் இத்தகையதொரு சமூகத்தை உருவாக்க இறைவனால் அனுப்பப்படவில்லை, அவர்களும் இப்படித்தான் ஒரே இமாமைப் பின்பற்றி தங்கள் மார்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நமக்குக் காட்டித் தரவில்லை. இவ்வாறு முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தராத இந்த மத்ஹபு வழிமுறைகளையோ அல்லது ஒரு தனி நபரையோ பின்பற்றி தன்னுடைய மார்கக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சுன்னாவை மறுப்பதற்கு ஒப்பான செயலாகும், இந்தத் தவறை இறைவன் மன்னிக்கவே மாட்டான், ஆனால் யார் இந்த சுன்னாவின் அவசியத்தை உணர்ந்து அவற்றை பின்பற்றி நடக்கின்றார்களோ, அவர்கள் தான் இறைவனுடைய மன்னிப்பைப் பெற்றவர்களாவார்கள். நிராகிரிப்பாளர்களின் தவறானவைகளை விட்டு விட்டு, சரியானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவது என்பது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமையாகும். முஹம்மது (ஸல்) அவர்களது ஹதீஸின்படி நடந்து அவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், இல்லை நாங்கள் எங்கள் இமாம் கூறியவற்றின் பிரகாரமே நாங்கள் நடப்போம் என்று கூறுவது ஒரு பாவமான செயலாகும். இத்தகையவர்களைத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் வழிகேடர்கள் என்றும் இஸ்லாத்திற்குள் நூதனங்களைப் புகுத்தக் கூடியவர்கள் என்றும் அறிவித்துள்ளார்கள்.

ஹதீஸில் கூறப்பட்டவைகளைக் கவனித்து, அவற்றைப் பின்பற்றி அவற்றின்படி வாழ்ந்து, இதுவல்லாத வேறு எவற்றின் மீதும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தாமல் தன்னுடைய மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இது தான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்குக் காட்டித் தந்த நேரான வழியாகும். இந்த நேரான வழியிலிருந்து யார் தவறுகின்றார்களோ, அவர்கள் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றார்கள்.

முத்தா திருமணம் செய்வதை சட்டப்படி ஆகுமானது என்று அறிவித்தல், மதுவின் மயக்கம் ஏற்படாத அளவு குறைந்த அளவு மது அருந்துதல் ஆகுமானது, கழுதையின் இறைச்சியை உண்பது ஆகுமானது, லுஹர் தொழுகையைப் பிற்படுத்தி தன்னுடைய நிழல் தன்னை விட இரண்டு மடங்கு ஆகும் வரை தொழுவது கூடும் என்று அறிவித்தல் ஆகியவை யாவும் இந்த மத்ஹபுகளில் காணப்படும் வழிகேடுகளில் ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும். ஏனென்றால் மேலே கூறப்பட்டவைகள் யாவும், முஹம்மது (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட எந்த ஹதீஸினாலும் நிரூபிக்கப்படாதவைகளாகும்.

இஸ்லாமியச் சகோதரர்களே

;அறிவைப் பெற்றுக் கொள்வது என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது. நீங்கள் அத்தகைய அறிவைப் பெற்றுக் கொள்ள விருப்பமுடையவர்களாகவும், ஆவல் கொண்டவர்களாகவும் இருப்பின், முதலில் குர்ஆனையும், சுன்னாவையும் நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதற்கு இஸ்லாத்தின் ஆரம்ப கால அறிஞர்கள் மற்றும் நேர்வழி பெற்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றி அந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் பெற்றுக் கொண்ட அறிவின் மூலம் இஸ்லாத்திற்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், ஃபத்வாக்கள் மற்றும் அது சார்ந்த ஏனைய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, நேர்னையானதை உண்மையானதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். ஹதீஸ்களில் ஸஹீஹ், ஹஸன் ஆகிய தரத்தில் அமைந்த ஹதீஸ்களை அறிந்து அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். ஒரு பிரச்னை சம்பந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட சரியான ஹதீஸ்கள் கிடைக்கப் பெற்றால், அவற்றில் எது அதிகமாக ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றதோ மற்றும் எது வாத விவாதங்களின் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றதோ, மற்றும் அறிஞர்களின் பார்வையில் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மிக நெருக்கமாக அமைந்திருக்கின்றதோ அவற்றைப் பின்பற்றுங்கள். இன்று ஹதீஸ்களைப் பின்பற்றுவது மிக எளிதான ஒன்றாக இருக்கின்றது. ஸஹீஹ் புகாரி மற்றம் ஸஹீஹ் முஸ்லிம், இமாம் மாலிக் அவர்களிம் முஅத்தா, சுனன் அபுதாவூது, திர்மிதி, மற்றும் நஸயீ ஆகிய ஹதீஸ் நூல்கள் இன்று பல்வேறு மொழிகளில் வந்து விட்டன. அவற்றை ஆய்வு செய்து நமக்குத் தேவையான அனைத்து வித பிரச்னைகளுக்குமான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த ஹதீஸ்களைச் சரியான முறையில் புரிந்து கொள்ள இயலவில்லை எனில், அதற்கான அறிஞர்களை அணுகி அவர்கள் மூலம் சரியான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸஹீஹான தரத்தில் அமைந்த ஹதீஸைப் பெற்றுக் கொண்டால், அந்த ஹதீஸை உலமாக்களும், ஹதீஸ் கலை வல்லுநர்களும், மார்க்க அறிஞர்களும், சரியானது என்று ஒப்புக் கொண்டும், மேற்படி ஹதீஸை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற அந்தப் பெருமக்கள் பின்பற்றியும் இருக்கின்றார்கள் என்றும் உறுதிபட அறிய நேர்ந்தால், இந்த இமாம்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் எந்தவித மறுப்பும் இல்லாமல் அவற்றைப் பின்பற்ற வேண்டும். ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தன்னுடைய இமாம் சுட்டிக் காட்டவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை ஏற்க மறுப்பாரேயானால், அந்த ஹதீஸின்படி செயல்பட முயற்சி செய்யாமல் இருப்பாரேயானால், அந்த நபர் உண்மையிலேயே வரம்பு மீறியவராகவும், இஸ்லாத்தை விட்டு அதன் நேரான பாதையை விட்டு விட்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றார் என்றே கணிக்கப்படுகின்றார். இத்தகைய நபர்கள் அனைவரும் இஸ்லாத்தை மறுப்பவர்களும், இஸ்லாத்திற்கெதிராக செயல்படுபவர்களுமாவார்கள்.

உண்மையாக சத்தியமான இந்த இஸ்லாம் மார்க்கம் மிகவும் தெளிவானது, அதில் எந்த குழப்பங்களுக்கும் இடமில்லை, அதில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது, எந்தவித நீக்குப் போக்குகளும் கிடையாது. இறைவன் மிகப் பெரியவன், அவனது படைப்புகளும் மிகத் தெளிவானவைகளே. அவன் படைத்த படைப்பினங்களில் மிக மேலான படைப்பினமான இந்த மனிதன் என்ற இனம் உலகம் அழியும் காலம் வரை பின்பற்றக் கூடிய வகையில் வழிகாட்டக் கூடிய திருமறைக் குர்ஆனையும் வழங்கியிருக்கின்றான். அந்தத் திருமறையில் மனிதன் ஏற்று நடக்கக் கூடியதையும், அதனின்றும் தவிர்ந்து கொள்ளக் கூடியவைகளையும் தெளிவுபடுத்தியும் இருக்கின்றான். இந்த நிலையில் இந்த மனிதன் தன்னுடைய மன இச்சையைப் பயன்படுத்திக் கொண்டு, இறைவன் வழங்கியுள்ள நேர்வழியைப் பின்பற்றாமல், வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இறைவன் அருளியுள்ள திருமறைக் குர்ஆன் நெடுகிலும் இறைவன் சத்தியத்தையும், உண்மையையும் விளக்கமாக இந்த மனித இனத்திற்கு எடுத்துக் கூறியுள்ளான். மேலும், இறைவன் தன்னுடைய திருமறையை தானே பாதுகாப்பதான உறுதியும் அளித்து, எல்லா வித அடித்தல், சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தும் வந்து கொண்டிருக்கின்றான். இறைவன் தன்னுடைய சத்திய மறையை மக்களிடம் விளக்குவதற்கும், அவற்றை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களிடையே நடைமுறைப்படுத்துவதற்கும் நபிமார்களையம் அனுப்பி, இறுதி நபியாக முஹம்மது (ஸல்) அவர்களையும் அனுப்பி வைத்தான். அந்த இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களிடையே இஸ்லாத்தைப் போதித்தும், மக்களிடையே நேர்மையாக வாழ்ந்தும், உண்மையைக் கொண்டு உபதேசம் செய்தும் வந்ததும் ஆன அவர்களின் நடைமுறைகள் யாவும் ஹதீஸ்களாகத் தொகுக்கப்பட்டு, பல்வேறு அறிஞர் பெருமக்களால் அந்த ஹதீஸ்கள் யாவும் தரம் பிரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, இன்றுள்ள மக்கள் எளிதாகப் புரிந்து, பின்பற்றக் கூடிய அளவில், பல்வேறு மொழிகளில் இன்று ஹதீஸுத் தொகுப்புகளாக எளிதில் எங்கும் கிடைக்கின்றன. எனவே இன்றுள்ள யாரும் எனக்கு ஹதீஸ்கள் கிடைக்கவில்லை, ஹதீஸ்களைப் பற்றி எனக்குத் தெரியாது என்ற குற்றச்சாட்டைக் கூறி மனிதன் தன்னுடைய பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி விட முடியாது. இன்று நம் மீது சுமத்தப்பட்டதெல்லாம், ஹதீஸ் நூல்களை ஆராய்ந்து நமக்குத் தேவையான ஹதீஸ்களைப் பெற்றுக் கொண்டு, அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான்.

மேலும், ஷா வலியுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அத் தஃப்ஹீமத் என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் (1ஃ211):
இறைவன் ஒருவன் தான் இந்த உலகத்தின் முழு முதல் அதிகாரி என்றும், அவனது சட்ட திட்டங்களுக்கு மட்டுமே நான் கீழ்ப்படிவேன் என்றும், அத்தகையவனான அந்த அல்லாஹ்வையே சாட்சியாக வைத்துக் கூறுகின்றேன், அவன் தன்னுடைய அர்ஷில் அமர்ந்து கொண்டு, கடமையானவைகளையும், அனுமதிக்கப்பட்டவைகளையும், தடுக்கப்பட்டவைகளையும் தீர்மானித்திருக்கின்றான். அவற்றைத் தன்னுடைய மலக்குகள் மூலம் நிரூபிக்கவும் செய்து, அவற்றைத் தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கியுமுள்ளான். ஆகையால், இத்தகைய விசயங்களில் தலையிட்டு, எந்தவித ஆதாரங்களும், அடிப்படைகளும் இல்லாத நிலையில் ஒருவர் தான் தோன்றித்தனமாக இவை அனுமதிக்கப்பட்டது (ஹலால்), இவை அனுமதிக்கப்படாதது (ஹராம்) என்று கூறுவாரானால், அவர் இறைவனுடைய அந்தத் தனித்தன்மையில் தலையிட்டு விட்டவர், இறைவனுடைய பார்வையில் வரம்பு மீறியவராவார். எவன் ஒருவனால் மட்டுமே தீர்ப்புச் செய்ய முடியுமோ அத்தகைய விசயத்தில் தலையிட்டு விட்டவர், அல்லாஹ் ஒருவனுக்கே உரிய அந்த இறைத் தன்மையில் தனக்கும் பங்குண்டு என்ற வாதிடுகின்ற  பெரும் பாவத்தைச் செய்தவராகவும் அவர் ஆகி விடுகின்றார்.

{ ولا تقو لوا لما تصف ألسنتكم الكذب هذا حلل وهذا حرام لتفترواْ على الله الكذب ، إن الذين يفترون على الله الكذب لا يفلحون }
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை, (சில பிராணிகள் பற்றி) இது (ஹலால்) ஆகும், இது (ஹராம்) ஆகாது என்று கூறாதீர்கள் ; நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களே அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல் குர்ஆன் 16:116).

மேலும், ஏக இறைவனான அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கின்றேன், இந்த உம்மத்தில் யாரையாவது ஒருவரைப் பின்பற்றிக் கொண்டு, அவரின் மீது நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அத்தகையவரைப் பின்பற்றுமாறு பணித்துள்ளதாக எண்ணி, அந்த நபரைப் பின்பற்றுவது கடமையானது என்றும், அவரது சொல் மட்டுமே பின்பற்றத்  தகுதியானது என்றும் நம்பிக்கை கொள்வது என்பது, மிகவும் வழிகேடானது, அத்தகைய நம்பிக்கையைப் பெற்றவர் உண்மையிலேயே நிராகரிப்பாளரேயாவார். அவர்கள் யாரைத் தன்னுடைய ஷரியத் சட்டங்களை தொகுத்து வழங்கியவர் என்று எண்ணிக் கொண்டுள்ளார்களோ அத்தகையவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே இந்த ஷரியத் சட்டங்களை இறைவன் இந்த மனித குலத்திற்கு வழங்கி விட்டான். அந்தச் ஷரியத் சட்டங்களைச் செவிமடுத்தவர்கள் தங்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளார்கள். அந்த அறிவிப்புக்களைச் செவிமடுத்தவர்கள் அவற்றைப் பதிவும் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களான அறிஞர் பெருமக்கள், உலமாக்கள், பிக்ஹு கலை வல்லுநர்கள் ஆகியோர்கள், அவற்றை சரி பார்த்து பாதுகாத்தும், அவற்றை அவற்றின் பொருளின் அடிப்படையில் நாம் இலகுவாக அறிந்து கொள்ள முறையாகத் தொகுத்தும் வழங்கிச் சென்றுள்ளார்கள். மேற்கண்ட அறிஞர் பெருமக்களை, அவர்கள் ஷரியத் சட்டத்தைப் பற்றி அறிந்தவர்கள் என்ற காரணத்தால் சாதாரணமாக மக்கள் இந்த அறிஞர்கள் எடுத்துக் காட்டக் கூடிய ஷரியத் சட்டங்களை ஒரளவு பின்பற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நல்ல தரமான ஸஹீஹான ஹதீஸ் கிடைத்து விட்டால், அந்த ஹதீஸின் தரம் பற்றி, அதன் நம்பகத்தன்மை பற்றி அறிஞர்கள் தெளிவான முறையில் தங்களது சாட்சியங்களை வழங்கியிருந்தால், அந்த ஸஹீஹான ஹதீஸின் அடிப்படையில் தான் ஒரு முஸ்லிம் கண்டிப்பாகச் செயல்பட வேண்டும், அதுவல்லாமல், மேற்படி ஹதீஸ் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இமாமினுடைய கருத்திற்கு மாற்றமாக இருக்கின்றது என்ற காரணத்தைக் காட்டி, அந்த ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் செயல்பட மறுப்பாரேயானால் அவர் நேர்வழியைப் புறந்தள்ளி விட்டு, வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றார் என்றே கருதப்படும்.

மேலும் ஷா வலியுல்லாஹ் அவர்கள் கூறும்போது:
இறைவனைச் சாட்சியாக வைத்துச் சொல்கின்றேன், ஷரியத் சட்டங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ஒரு முஸ்லிம் என்பவன் மீது இறைவன் கட்டாயக் கடமையாக்கி இருப்பவற்றின் மீது செயல்படுவது. இதில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. அவர் ஏழையாக இருந்தாலும் அல்லது பணக்காரனாக இருந்தாலும் சரி : அல்லது சுதந்திரமானவன் அல்லது அடியாக இருப்பினும் : அரசன் அல்லது ஆண்டி ; தொழிலாளி அல்லது முதலாளி ; அவன் எந்த நிலையில் இருப்பினும் இந்த கட்டாயக் கடமைகளை ஒரு முஸ்லிம் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். இறைவனது அந்தக் கட்டளைகளுக்குப் பணிந்தே ஆக வேண்டும்.

அடுத்து இரண்டாவது அந்தக் கட்டளைகளை மிகவும் தெளிவான முறையில் எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாமல் பின்பற்றுவது. இந்த இரண்டாவது நிலையில் தான் ஒருவர் குர்ஆனையும், சுன்னாவையும் தெளிவாக உணர்ந்து அவற்றின்படி தன்னுடைய வணக்கத்தையும், வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளக் கூடியவராகின்றார். இவர் தான் முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய தோழர்களின் வழிமுறையையும், அவர்களது நன்னடத்தைகளையும் ஒருங்கே அமையப் பெற்றதாக அமைந்துள்ள வழிமுறையைச் செயல்படுத்தக் கூடியவராகின்றார். இந்த இரண்டு நிலைகளுக்கும் மிகப் பெரியதொரு வித்தியாசம் இருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் யாரும் இருந்து விடலாகாது. மேற்கண்ட இரண்டு நிலைகளையும் சரிவரப் புரிந்து கொள்ள இயலாமல் போனதால் தான், அறிஞர்களிடம் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அலையும் மக்களைக் கொண்ட இந்த உலகில், முஸ்லிம்கள் முதல் நிலை மட்டும் தங்களுக்குப் போதுமானது என்று இருந்து விடுகின்றார்கள். ஆனால் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட நல்லோர்கள் இந்த இரண்டாவது நிலையையும் தெளிவாக உணர்ந்து அவற்றை அதன் வடிவிலேயே எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாமல் பின்பற்ற ஆர்வம் கொள்கின்றார்கள். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே ஊசலாடுபவர்களும் இருக்கின்றார்கள். சாதாரண மனிதனை முதல் நிலைக்கு அடுத்த நிலையையும் அவன் செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பது அல்லது எதிர்பார்ப்பது, ஒருவேளை வெறுப்புக் கொண்டு, இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் கூட அவன் விட்டு விட நேர்ந்து விடலாம். அனைத்து முஸ்லிம்களும் குர்ஆனையும், சுன்னாவையும் மட்டுமே பின்பற்றப் பணிக்கப்பட்டிருக்கின்றார்கள், இந்த இரண்டும் உறுதி செய்யாத எந்த வழிமுறையையும் ஒரு முஸ்லிம் பின்பற்றலாகாது, அவற்றைத் தள்ளுபடி செய்து விடவேண்டும். ஒரு முஸ்லிமிற்கு குர்ஆனை அடுத்து, முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறைகள் மட்டுமே போதுமானது, இதனைத் தவிர்த்து வேறு யாரையும் அவன் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

நம்மில் சில முட்டாள்களும் உள்ளனர். இவர்கள் கிரேக்க இலக்கியங்களிலும், கதைகள், கட்டுரைத் தொடர்கள் எழுதுவதிலும், பாடல்கள் புனைவதிலும் தமக்கிருக்கும் சில புலமைகளை வைத்து, தங்களை மிகப் பெரிய அறிஞர்களாக மக்களிடம் காட்டிக் கொண்டார்கள். இவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் இஸ்லாமிய ஃபத்வாக்களையும், அவர்களது கருத்துக்களையும் அறிந்து கொள்வதில் குழப்படைந்தவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் குர்ஆனையும், ஹதீஸுகளையும் அறிவார்கள். ஆனால் இவர்கள் முன் குர்ஆனையும், ஹதீஸையும் கொண்டு வந்து காட்டி, இதன்படி உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்றால், நாங்கள் இன்ன இன்ன மத்ஹபைச் சார்ந்தவர்கள், எங்களது இமாம் இவ்வாறு செய்வதிலிருந்து எங்களைத் தடுத்துள்ளார்கள் என்று கூறுகின்றார்கள். மேலும் அந்த இமாம்கள் நம்மைக் காட்டிலும் மிகவும் அறிவுடையவர்களாக இருந்தார்கள். எனவே நீங்கள் கூறும் இந்த ஹதீஸை ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அல்லது அது பலவீனமான, தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஹதீஸாக இருந்திருக்க வேண்டும், எனவே எங்கள் இமாம், நாங்கள் அதைப் பின்பற்றுவதிலிருந்தும் எங்களைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். இது ஒரு முஸ்லிமாக இருப்பவன் கூறக் கூடிய வார்த்தைகள் அல்ல. இவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை முழு மனதுடன் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றால், இந்த மாதிரியான கருத்துக்களைத் தெரிவித்திருக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்த வந்தது என்ற மாத்திரத்திலேயே, எந்தவித தயக்கங்களுக்கும் இடம் கொடாமல், இமாம்கள் கூறிய கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதன்படி செயல்பட ஆரம்பித்திருப்பார்கள். அது தான் ஒரு முஸ்லிம் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் தர வேண்டிய முதல் கண்ணியமும், மரியாதையும் ஆகும். அத்தகைய மரியாதை மிக்க குர்ஆனையும், சுன்னாவையும் நீங்கள் நேரடியாகவே அவற்றில் காணப்படும் அர்த்தங்களையும், கருத்துக்களையும் விளங்கிக் கொள்ள இயலுமெனில், எந்த அறிஞரையும் நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை. குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் எவை எல்லாம் சரியானதாக இருக்கின்றதோ, அவற்றை ஏற்று அதன்படி செயல்பட்டுக் கொள்ளுங்கள். குர்ஆனையும், சுன்னாவையும் புரிந்து கொள்ள அறிஞர்களும், உலமாப் பெருமக்களும் பயன்படுத்தும் வழிமுறைகள் யாவும், அவற்றை அறிந்து கொள்வதற்காக வேண்டித் தானே ஒழிய, அவர்கள் பயன்படுத்திய வழிமுறை எத்தகையது என்பது நமக்குத் தேவையில்லை, இறுதியில் பெறப்பட்ட கருத்து எத்தகையது, அது குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடையது தானா? அல்லது ஏற்புடையதானதாக இல்லையா? என்பது தான் நமக்கு முக்கியமானது. அவர்கள் பயன்படுத்திய வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் ஏற்புடைய கருத்தை மட்டும் பின்பற்ற வேண்டியது ஒன்று தான், ஒரு உண்மையான முஸ்லிம் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

ஒருவர் ஒரு பிரச்னை சம்பந்தமாக ஒரு ஹதீஸ் கிடைக்கப் பெற்ற பின்னர், இவர் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இமாம் இந்த ஹதீஸிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள் என்றால், சரியான ஹதீஸ் கிடைக்கப் பெற்ற பின்னர் அந்த இமாமைப் பின்பற்றுவது கூடாது, இவ்வாறு அல்லாமல் அந்த இமாமையே பின்பற்றுவாரானால் அவர் தன்னுடைய இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறிய முனாஃபிக்காகவே கருதப்படுவார். மேலும், நம்மில் பலர் இதனினும் கொடுமையான செயல்களைச் செய்து வருகின்றார்கள். இவர்கள் மண்ணறையில் இருக்கும் தங்கள் இமாம்களின் கப்ருகளைத் தேடிப் போய் அங்கு முகம் குப்புற மண்டியிட்டு விழுந்து கிடக்கின்றார்கள். (இவர்களை இப்படிச் செய்யுமாறு எந்த இமாமும் கூறவில்லை). உணவளிப்பவனும், பாதுகாவலனும், பரிபக்குவப்படுத்தவனுமான அல்லாஹ் ஒருவனை நிராகரித்த யூதர்களையும், கிறிஸ்த்தவர்களையும் போல இவர்கள் செயல்படுகின்றார்கள். சிலர் நேரடியாகவே ஹதீஸ்களைத் திரித்து, அந்த ஹதீஸுகளுக்கு முற்றிலும் மாற்றமான பொருள்களையும், கருத்துக்களையும் கூறுபவர்களாக இருக்கின்றார்கள். இன்று எல்லா மத்ஹபுகளிலும் இந்த பாவகரமான செயல்பாடுகள் காணப்படுகின்றன. சூபியாக்கள் எனப்படுவோர் தான் இந்த மாதிரியான பாவகரமான செயல்களில் அதிகமாக ஈடுபடக் கூடியவர்களாகவும், இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான, வித்தியாசமான, எளிதில் நடக்கவியலாத சம்பவங்களை இஸ்லாத்தின் பெயரால் இட்டுக்கட்டி, இத்தகைய செயல்கள் தான் உண்மையான இஸ்லாமிய நடைமுறை என்று பாமரர்களிடமும், படித்தவர்களிடமும் பரப்பிவிட்டுள்ளனர். இவர்கள் மக்களை இத்தகைய வழிகேட்டில் இழுத்துவிட்டு, உண்மையான இறைவனை வணங்குவதனின்றும் அவர்களைத் தடுத்து, இறைவன் மன்னிக்காத பாவத்தைச் செய்தவர்களாகவும் அவர்களை ஆக்கிவிடுகின்றார்கள். இத்தகையவர்கள் தான் இறந்தவர்களின் கபுறுகளை அலங்கரிப்பதிலும், அவற்றைப் புனிதமாகக் கருதுவதிலும், அவற்றில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் மற்றும் வைபவங்களுக்கு ஏற்பாடு செய்வதிலும் ஈடுபடுவது தான் உண்மையான இஸ்லாம் என்று நம்ப வைத்து, அந்தப் பாமர மக்களை தற்குரிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். இன்று இத்தகைய செயல்படுகளைத் தான் மக்கள் மிகவும் பயபக்தியாகப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே ஒழிய, இஸ்லாம் கூறுகின்ற கடமையான தொழுகைகள், நோன்பு, ஜக்காத் போன்றவைகளும், ஏனைய வணக்க முறைகளும், வாழ்வியல் நடைமுறைகளும் முஸ்லிம்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்பது தான் இன்றுள்ள நிதர்சனமான உண்மைகளாகும்.

அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பற்றி சரியான அளவில் கற்றுணர முடியாத ஒருவர் மத்ஹபுகளைப் பின்பற்றிக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, இப்னு அல் கைய்யிம் அவர்கள் தன்னுடைய இலாம் அல்-முஅக்கியீன் (2:476) என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். அதாவது, முதலும், இறுதியுமாக, சரியான பதிலை இதற்குச் சொல்ல வேண்டும் எனில், கூடாது என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும். அவன் எந்த தனிப்பட்ட மனிதனையும், யாரையும் பின்பற்றுவது என்பது அவசியமில்லாதது. அந்த ஏகனான அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்ற ஒரே கட்டளையைத் தவிர, வேறு யாரையும் அல்லது இந்த உம்மத்தில் இருக்கின்ற எவரையும் சுட்டிக் காட்டி இன்னாரைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும், அத்தகையவரது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும், எந்த முஸ்லிமின் மீதும் கடமையாக்கப்படவில்லை.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி தோழர்கள் மற்றும் அந்தத் தோழர்களைப் பின்பற்றி தாபியீன்கள் ஆகியோர்களுடைய காலம் சென்று விட்டது. ஆனால் இந்தத் தாபியீன்கள் கூட தங்களுக்கு முன் வாழ்ந்த, பாடம் பயின்ற அந்த நபித்தோழர்களைத் தனிப்பட்ட முறையில், இந்த மத்ஹபுவாதிகள் பின்பற்றுவது போல் பின்பற்றியது கிடையாது எனும் போது, இந்த இமாம்களின் பெயரால் இன்று நடைமுறையில் இருக்கும் இந்த மத்ஹபுகளைப் பின்பற்றுவது எவ்வாறு சாத்தியமானதும், இஸ்லாத்தினால் அங்கீகரிப்பட்டதுமாகும்.

இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை எளிதில் அவனால் புரிந்து கொள்ள இயலாது என்ற காரணத்திற்காக ஒருவன், இந்த மத்ஹபுகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று கூறி விட முடியாது. அதே போல ஒருவன் நான் ஹனபி மத்ஹப், ஷாபி மத்ஹப், மாலிக்கி மத்ஹப், ஹம்பலி மத்ஹப் என்று தன்னை அழைத்துக் கொள்வது இயலாது. முதலில் இந்த மத்ஹபு இமாம்களின் கருத்துக்களுக்குப் பின்னால் இருக்கும், அவர்களது தர்க்கங்களையும், தத்துவங்களையும் புரிந்து கொண்டு, அவர்கள் என்ன காரணத்திற்காக அத்தகைய கருத்தைச் சொன்னார்கள் என்பதை இவன் புரிந்து கொண்டு அதன்படிச் செயல்படும் போது தான், மேற்படி இமாமினுடைய வழிமுறையைப் பின்பற்றுகின்றவன் என்று தன்னை அழைத்துக் கொள்ள இயலும், இவர்கள் கூறுவது போல எதையும் விளங்கிக் கொள்ள இயலாதவன் எவ்வாறு நாம் மேற்சொன்னவாறு இமாம்கள் சொன்னவற்றின் பின்னணியைப் புரிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முடியும்? அவற்றைப் புரிந்து கொள்ளவே இயலாதவன், தான் இன்ன மத்ஹபைப் பின்பற்றுபவன் என எவ்வாறு தன்னை அழைத்துக் கொள்ள இயலும்? மேலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் தனிப்பட்ட எந்த மனிதனையும் பின்பற்றி தன்னுடைய மார்கக் கடமைகளை நிறைவேற்றும்படி யாரையும் பணிக்கவில்லை. இறைவன் தன்னுடைய திருமறையில் கூறப்பட்டவைகளையும், தன் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் வெளிப்படுத்தி இருப்பவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமையும் பணித்துள்ளான்.

இந்த மத்ஹபுகள் யாவும் இஸ்லாத்தைக் கூறு போட வந்தவைகள் தானே ஒழிய, வேரெதற்காவும் இல்லை. இது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும், அதன் சட்ட திட்டங்களுக்கும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய நடைமுறையாகும். எந்த இமாமும் தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த நிலையிலும், யாருக்கும் அவர்கள் கட்டளையிடவில்லை. யார் இந்த உண்மைகளை எல்லாம் மறுத்து, மீண்டும் மத்ஹபு வழியிலேயே தன்னுடைய மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுகின்றார்களோ, அவர்கள் சத்தியப் பாதையைத் தொலைத்து விட்டு, வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டவர்களாவார்கள். உண்மையான தங்களுடைய தீனையும், குர்ஆனையும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய போதனைகளையும், நபித் தோழர்களது வழிமுறைகளையும், அவர்களைப் பின்பற்றிய தாபியீன்களது வழிமுறைகளையும் முஸ்லிம்கள் மறந்து விட வேண்டும் என்பதற்காகவும், அவற்றிலிருந்து ஒதுங்கி விட வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகளால் இஸ்லாத்தினுள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டு, அதற்காகவே இந்தப் மத்ஹபுக் கொள்கைகளை இன்றும் அவர்கள் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும். இன்று இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் எந்த இமாமும் தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எப்பொழுதும் கூறியதில்லை. அவ்வாறு கூறியிருப்பதற்கு எந்த ஆதாரத்தையம், இந்த மத்ஹபுவாதிகள் கொண்டு வரவும் இயலாது. மறுமை நாள் வரைக்கும் இந்த முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு கடமையாக்கப்பட்ட ஒன்று உண்டு என்றால், அது இறைவேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறைகளும், அவர்களைப் பின்பற்றிய தோழர்களது அறிவுரைகளுமேயன்றி வேரெதும் நாம் பின்பற்றுவதற்கு கடமையாக்கப்பட்டதல்ல. நம் மீது கடமையாக்கப்பட்டவைகளன்றி வேறு எதனையும் நம் மீது கடமையாக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்வதற்கும், கடமையாக்கப்பட்டவைகளை மாற்றி அமைத்துக் கொள்வதற்கும் நமக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

இஸ்லாத்தையும், அதன் தூதுத்துவத்தையும் தங்களால் விளங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கக் கூடியவர்கள், அவைகளை விளங்கிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் பொருள்களை விளக்கிச் சொல்லக் கூடிய இமாம்கள், உலமாப் பெருமக்களை அணுகி அவற்றின் விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே தவிர, அவர்களிடம் சென்று நான் இன்ன மத்ஹப் என்று கூறி, என்னுடைய இமாம் என்ன கூறியிருக்கின்றார்         என்று கேட்டு தன்னுடைய இமாமிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்வது கூடாத செயலாகும். விளக்கம் கொடுக்க் கூடிய அந்த இமாமோ அல்லது அறிஞரோ சுட்டிக் காட்டக் கூடிய, ஸஹீஹான ஹதீஸின்படி தான் அவர் செயல்பட வேண்டுமே தவிர, இவர் சார்ந்திருகக் கூடிய மத்ஹபுப் பிரகாரம் அல்ல. மார்க்கத்தைப் பின்பற்றிக் கொள்வதற்கு மத்ஹபுகள் தான் மிகவும் இலகுவான வழி என்று யாரேனும் நினைப்பார்களேயானால், அத்தகைய வழிமுறை இஸ்லாத்தினால் தடை செய்யப்பட்டதாகும். முஸ்லிம்களாகிய ஒவ்வொருவரும் உண்மையைத் தேடி, அவற்றை அடைவதற்கு கடின முயற்சிகளையும் மேற்கொள்ளவது மிகவும் அவசியமாகும்.

முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவும், மரியாதைக்குரிய இமாம்களும்

;அனைத்து இமாம்களும் முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னாவிற்கே முதலிடம் கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸ் கிடைத்து விட்டால், அந்த ஹதீஸிற்கே முதலிடம் கொடுக்கச் சொல்லியிருக்கும் அதே வேளையில், தங்களுடைய கருத்துக்களை ஒதுக்கித் தள்ளி விடும்படிக் கூறியிருக்கின்றார்கள் என்பதை கீழ்க்கண்ட அவர்களின் ஆதாரப்பூர்வமான நூற்களில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களது கருத்துக்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும் :

سـئل عن أبي حنيفة رحمه الله تعالى إذا قلت قولاً وكتاب الله يخلفه قال أتركوا بكتاب الله فقيل إذا كان خير الرسول يخلفه؟  قال أتركوا قولي بخبر رسول الله صلى الله عليه وسلم فقيل إذا كان قول الصحابة يخالفه؟ قال أتركوا قولي بقول الصحابة ذكره في عقد الجيد .
இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது :
உங்களுடைய கருத்துக்களுக்கு மாற்றமாக குர்ஆனினுடைய கருத்துக்களை இருந்தால், நாங்கள் என்ன செய்து கொள்ள வேண்டும்? அதற்கு இமாம் அபூ ஹனிஃபா அவர்கள் கூறினார்கள், என்னுடைய கருத்துக்கள் குர்ஆனினுடைய கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின் என்னுடைய கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள் என்றார்கள். உங்களுடைய கருத்துக்கள் முஹம்மது (ஸல்) அவர்களது கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின் என்னசெய்து கொள்ள வேண்டும்? என்று கேட்கப்பட்டதற்கு, என்னுடைய கருத்துக்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடைய கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின், என்னுடைய கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள் என்று கூறினார்கள்.

மீண்டும், உங்களுடைய கருத்துக்கள் நபித்தோழர்களது கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின் என்ன செய்து கொள்ள வேண்டும்? என்று கேட்கப்பட்ட போது, என்னுடைய கருத்துக்கள் நபித்தோழர்களது கருத்துக்களுக்கு மாற்றமாக இருப்பின், என்னுடைய கருத்துக்களைத் தூக்கி எறியுங்கள் என்று கூறினார்கள்.
ஆதாரம் : ஹக்கீகத்துல் ஃபிக்ஹு, முஹம்மது யூசுப் ஜெய்ப்பூரி, இதாரா தாவத்துல் இஸ்லாம் வெளியீடு, பம்பாய், பக்கம், 69, ((The Book of following the Prophet’s path, Darussalam publishers, Riyadh)

இமாம் மாலிக் பின் (ரஹ்) அனஸ் கூறியதாவது :-
قل مالك بن انس رحمة الله إنما أنا بشر أخطىء وأصيب فانظروْا في رأْييْ فكـل ماوافق الكتاب والسنة فخذوه وكل مالم يوافق فاتركوه إبن عبد البر في الجامع .
எந்தவித சந்தேகமுமில்லாமல் நானும் ஒரு மனிதன் தான். நான் கூறுவது சரியாகவும் இருக்க முடியும் அல்லது தவறாகவும் இருக்க முடியும். எனவே நான் கூறுவதை நீங்கள் சிநதித்துப் பாருங்கள். நான் கூறியதில் எவை எல்லாம் குர்ஆனையும், முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளதோ அவற்றைப் பின்பற்றிக் கொள்ளுங்கள், எவை எல்லாம் இவற்றிற்கு முரணாக இருக்கின்றதோ அவற்றைப் புறக்கணித்து விடுங்கள்.
(Mentioned in Hadith Hujjatu bi Nafsi’hi Lilbani, (Published by : Dar-us-Salafia, Kuwait, 1st Edi., 1986),p.79.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது :-
عن اشافعي رحمة الله إنه كان يقول إذا وجدتم في كتابي خلاف سنة رسول الله صلى الله عليه وسلم فقولوا بسنة رسول الله صلى الله عليه وسلم ودعوا ما قلت وفي رواية فاتبعو ها ولا تلتفتوا إلى قول أحد ذكره ابن عساكر والنووى وابن القيم  .
நான் கூறி இருக்கும் கருத்துக்கள் குர்ஆனுக்கும், முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவுக்கும் எதிராக இருக்குமானால், என்னுடைய கருத்தை விட்டு விட்டு, குர்ஆனின் படியும், சுன்னாவின்படியும் செயல்படுங்கள் என்றும், இன்னொரு அறிவிப்பில் : முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவை மட்டும் பின்பற்றுங்கள், மற்ற யாருடைய கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டாம், என்று கூறியிருக்கின்றார்கள்.
Mentioned in Haqeeeatul Fiqa by Muhammed Yusuf Jaipuri, p.75.

இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் கூறியதாவது :-
قل الإمام أحمد رحمة الله بعالى لا تقلدوني ولا تقلدوا مالكا ولا الشافعى ولا الأوزاغي ولا الثورى وخذ من حيث اخذ ذكره الفلاني
(நீங்கள்) என்னையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டாம், இமாம் மாலிக்கையோ அல்லது இமாம் ஷாபிஈ-யையோ அல்லது இமாம் அவ்ஸாயியையோ அல்லது இமாம் அத்தவ்ரியையோ (ரஹ்) பின்பற்ற வேண்டாம். ஆனால், இவர்கள் அனைவரும் எங்கிருந்து இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான தங்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார்களோ, அங்கிருந்து நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள். (அதாவது, குர்ஆனில் இருந்தும், சுன்னா-விலிருந்தும் பெற்றுக்கொள்ளுங்கள், என்பதாகும்.)
(Mentioned in Haqeeqatul Hujjatu bi Nafsi’hi Lilbani , p.80.)

இமாம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது :-
عن أبي حنيفة رحمه الله تعالى إنه كان يقل إياكم والقول في دين الله تعالى بالرأْى وعليكم باتباع السنة فمن خرج عنها ضل  ذكره في الميزان .
மக்களே, உங்கள் புத்திசாலித்தனத்திலிருந்து நீங்கள் மார்க்கத்தைப் பற்றிப் பேசுபவைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள், மேலும் முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னாவிற்கும் கீழ்ப்படிந்து நடங்கள். யார் சுன்னா காட்டிய பாதையினின்றும் மாறுகின்றாரோ அவர் வழிகேட்டில் பக்கம் சென்று விட்டார்
Mentioned in Haqeeeatul Fiqa by Muhammed Yusuf Jaipuri, p.75.

இமாம் அபூ ஹனிஃபா அவர்கள் மேலும் ஒரு முறை கூறும் போது ,
عن أبي حنيفة رحمه الله تعالى إنه كان يقول لم يزل الناس في صلاح مادام فيهم من يطلب الحديث فإذا طلبوا العلم بلا حديث فسدوا ذكره الشعراني في الميزان
மக்கள்  சுன்னாவைப் பின்பற்றி அதன் மூலம் தங்களுக்கு நிலையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்கின்றார்களோ அதுவரை அவர்கள் சுன்னாவைப் பின்பற்றும் மாணவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாமிய மார்க்கத்திற்கான அறிவை சுன்னாவிலிருந்து தேடிப் பெற்றுக் கொள்ளாத பொழுது, மார்க்கத்தின் சட்டங்களை விடுவதும், அவற்றை மீறிச் செயல்படுவதும் மக்களிடையே மலிந்து விட ஆரம்பிக்கின்றது.
Mentioned in Haqeeeatul Fiqa by Muhammed Yusuf Jaipuri, p.75.

இமாம் மாலிக் அவர்கள் கூறியதாவது :
جاء رجل إلى مالك رحمه الله تعالى عن مسألة فقال له : قال رسول الله صلى الله عليه وسلم كذا وكذا فقال الرجل : أرأيت؟ قال مالك : فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم {63:24} – رواه في شرح السنة
ஒரு முறை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார், ஒரு விசயம் சம்பந்தமாக அவர் அவருடைய அறிவுரையைக் கேட்டுக் கொண்ட போது, இதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னா இருக்கின்றது என்று சுட்டிக் காட்டினார்கள். மேலும் அவர்கள் இது பற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்ட பொழுது, கீழ்க்கண்ட இறைவசனத்தை அவருக்கு ஓதிக் காண்பித்தார்கள். ஆகவே (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களே அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும். (அல் குர்ஆன் : 24-63)
Reported in Shar;h Sunna (Arabic), (Published by : Maktabul Islami, Beirut, 2nd Ed., (1403) 1983), vol.1, p.216, No.nil.

இமாம் ஷாபிஈ அவர்கள் சுன்னாவைப் பற்றி மேலும் கூறும் போது :
أجمع المسلمون على أن من استبان له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يحل له أن يدعها لقول أحد .  ذكره إبن قيم وافلاني
யார் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்துக் கொடுத்த ஒரு ஹதீஸைப் பற்றி அறிந்திருக்கின்றாரோ, அந்த ஹதீஸை விட்டு விட்டு அதற்குப் பதிலாக ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தைப் பின்பற்றுவது கூடாது என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். Reported in Hadith Hujjatu bi Nafsi’hi Lilbani, p.80.

إذا رأيتموني أقول قولاً وقد صح عن النبي صلى الله عليه وسلم خلافه فاعلموا أن عقلي قد ذهب .  ذكره إبن أبي حاتم وإبن عساكر .
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
நான் முஹம்மது (ஸல்) அவர்களுடைய ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசுவதை நீங்கள் செவியுற்றால், என்னைப் பைத்தியக்காரன் என்று கருதிக் கொள்ளுங்கள்.
Reported in Wujoob ul Amal bi Sunnati Rasool by Sheik Abdul Aziz bin Baz, p.24.

عن الشفعي رحمه الله تعلى أنه كان يقول إذا صح الحديث فهو مذهبي وفي رواية رأيتم كلامي بخالف الحديث فاعملوا بالحديث واضربوا بكلامي الحاءط ذكره في عقدالجيد .
ஒரு தரமான ஹதீஸ் உங்களுக்குக் கிடைத்து விட்டால், அது தான் என்னுடைய மார்க்கமுமாகும். மேலும், சுன்னாவுக்கு மாற்றமாக என்னுடைய சொற்கள் இருந்தால், சுன்னாவைப் பின்பற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்து, நான் கூறியவற்றை சுவற்றை நோக்கி தூக்கி எறிந்து விடுங்கள், என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். Reported in Haqeeqatul Fiqa by Muhammed Yusuf Jaipur, p.74.

சுன்னாவைப் பற்றி அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள்:
முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னாவைத் தவிர்த்து ஒருவர் எவருடைய சொல்லைப் பின்பற்றினாலும், அப்படிப் பின்பற்றுபவர் அழிவில் இருக்கின்றார் என்று அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள் :
قال الإمام أحمد رحمه الله تعالى : من رد حديث رسول الله فهو على شفا هلكة ذكره
إبن الجوزيْ
முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் அழிவின் கரையில் நின்று கொண்டிருக்கின்றார்கள் என்று அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
وقال : وأْىُ الأوزاعي ورأى مالك ورأى أبي حنيفة كله رأى وهو عندى سواء وإنما الحجة في الأثر . ذكره إبن عبد البر في الجامع
இமாம் அவ்ஸாய், இமாம் மாலிக், இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) ஆகியோர்கள் கூறியிருக்கின்றவைகள் அனைத்தும் அவர்களது சொந்தக் கருத்துக்களாகும். இவர்கள் அனைவரது கருத்துக்களும் ஒரே தரமுடையவைகளே. முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னாவானது ஒன்று மட்டுமே முழு அதிகாரத்தைப் பெற்றதாகவும் - அவற்றை மறுத்து எதுவும் பேச முடியாத தன்மையையும் பெற்றதாகவும் இருக்கின்றது.

Reported by Ibne Abdul Barr in Jaame.
வழிகேட்டில் செல்வதிலிருந்தும் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவானது ஒருவரைப் பாதுகாக்க வல்லது என்று அனைத்து இமாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
قال شريح رحمه الله تعالى إن السنة قد سبقت قياسكم فاتبع ولا تبتدع فإنك لن تضل ما أخذت با لأثر . ذكره في شرح السنة
முஹம்மது (ஸல்) அவர்களது சுன்னாவானது அனைவருடைய கருத்தையும் மிஞ்சக் கூடிய தன்மை கொண்டது.  சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு, நூதனங்களைப் பின்பற்றாமல் எந்தளவுக்கு  சுன்னாவை உறுதியாகப் பின்பற்றிக் கொண்டு அதில் நிலைத்திருக்கின்றீர்களோ, அது வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று இமாம் ஷரீஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். Reported in Shar’h Sunnah  (Arabic), Vol. 1, p.216.

புதினங்கள் பற்றி முஹம்மது (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்

;இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்படுபவைகள் அனைத்தும் நூதனங்களே. அனைத்து நூதனங்களும் வழிகேடுகளாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும். (நஸயீ).

நன்மை என்று கருதி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புதிதாக இஸ்லாமியச் சட்டத்தில் நுழைப்பது என்பது, இத்தகைய செயல்கள் சுன்னாவினால் அங்கீகரிக்கப்பட்டதாக காணப்படவில்லை.

عن جابر بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم : أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة (رواه مسلم)
ஜாபிர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறியது : நிச்சயமாக எல்லாவற்றையும் விட மிகவும் உண்மையான வார்த்தை அல்லாஹ்வின் வேதமாகும். அனைத்து வழிகாட்டுதல்களையும் விட மிகச் சிறந்தது இறைவனின் தூதரது வழிகாட்டுல்களாகும். மேலும், இஸ்லாத்தில் புதிதாக எதையொன்றை நுழைப்பதும் மிகவும் மோசமான செயலாகும், ஒவ்வொரு புதினமும் வழிகேட்டில் இட்டுச் செல்லும். Collected by Muslim (Sahih Muslim (English Trans.) Vol.2, p.410, No.1885 (part).

عن العرباض بن سارية قال قال رسول الله صلى الله عليه وسلم : وإياكم والأمور المحدثات فإن كل بدعة ضلالة (رواه ابن ماجه)
இர்பாத் பின் சாரியா (ரலி) என்பவர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அறிப்பதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள், இஸ்லாத்தில் புதிதாக எதையும் நுழைப்பதில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு புதியவைகளும் உங்களை வழிகேட்டில்  (நரகத்தில்) கொண்டு சேர்க்கும், என்று கூறினார்கள்.
Collected by Ibne Maaja (Sunan Ibne Maaja (Arabic-English), Vol. 1 , p.22, No.42 (part) and authenticated (Sahih) by Albani in Sahih Sunan Ibne Maaja Lil Albani, Vol.1, p. 13, No.40. 

பித்அத் - களுக்கு எதிரான கண்டனங்களும், எச்சரிக்கைகளும்.
1) ஒவ்வொரு பித்அத் - களும் நரக நெருப்பில் கொண்டு சேர்க்கும் :
عن جبر بن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته بحمد الله وبثني عليه بما 
هو أهله ثم يقول : من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار (رواه النساءى)
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் ,  முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனைப் புகழ்ந்து விட்டுக் கூறினார்கள்,  அல்லாஹ்வினால் நேர்வழி பெற்ற ஒருவரை யாரும் வழிகேட்டில் கொண்டு செல்ல இயலாது, அல்லாஹ்வினால் வழிகேட்டில் விடப்பட்ட ஒருவரை யாராலும் நேர்வழியில் செலுத்தி விட இயலாது. நிச்சயமாக, மிகவும் உண்மையான வாக்காக இறைவனுடைய வேதம் இருக்கின்றது மற்றும் மிகவும் நேரான வழிகாட்டுதல்களாக அவனுடைய தூதருடைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இஸ்லாத்தில் புதியவைகளை நுழைப்பது வெறுக்கத்தக்க செயலாகும். இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்டுபவைகள் அனைத்தும் புதினங்களாகும், ஒவ்வொரு புதினங்களும் வழிகேடுகளாகும். ஒவ்வொரு வழிகேடும் நரக நெருப்பில் நுழைவிப்பதாக இருக்கும்.

2) அனைத்து பித்அத் - களும் வழிகேடுகளே!
عن جابر بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم : أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة (رواه مسلم)
ஜாபிர் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறியது : நிச்சயமாக எல்லாவற்றையும் விட மிகவும் உண்மையான வார்த்தை அல்லாஹ்வின் வேதமாகும். அனைத்து வழிகாட்டுதல்களையும் விட மிகச் சிறந்தது இறைவனின் தூதரது வழிகாட்டுல்களாகும். மேலும், இஸ்லாத்தில் புதிதாக எதையொன்றை நுழைப்பதும் மிகவும் மோசமான செயலாகும், ஒவ்வொரு புதினமும் வழிகேட்டில் இட்டுச் செல்லும். Collected by Muslim (Sahih Muslim (English Trans.) Vol.2, p.410, No.1885 (part).

عن العرباض بن سارية قال قال رسول الله صلى الله عليه وسلم : وإياكم والأمور المحدثات فإن كل بدعة ضلالة (رواه ابن ماجه)            
இர்பாத் பின் சாரியா (ரலி) என்பவர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அறிப்பதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள், இஸ்லாத்தில் புதிதாக எதையும் நுழைப்பதில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு புதியவைகளும் உங்களை வழிகேட்டில்  (நரகத்தில்) கொண்டு சேர்க்கும், என்று கூறினார்கள்.
Collected by Ibne Maaja (Sunan Ibne Maaja (Arabic-English), Vol. 1 , p.22, No.42 (part) and authenticated (Sahih) by Albani in Sahih Sunan Ibne Maaja Lil Albani, Vol.1, p. 13, No.40.

3) பித்அத்களை உருவாக்குபவர்களுக்கு யார் உதவி புரிந்தார்களோ அவர்கள் மீது இறைவனது சாபம் இறங்குகின்றது :
عن علي قال قال رسول الله  صلى الله عليه وسلم : لعن الله من ذبح لغير الله ولعن الله من سرق منار الأرض ولعن الله من لعن والده ولعن الله من اوى  محدثا (رواه مسلم )
அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  யார் அல்லாஹ்வை விட்டு விட்டு பிறருக்கு தங்களது நேர்ச்சைப் பிராணிகளை பலியிடுகின்றார்களோ அவர்களையும் : எல்லைக் கற்களை யார் மாற்றி வைக்கின்றார்களோ அவர்களையும் : தன்னுடைய சொந்தத் தந்தையை யார் சபிக்கின்றார்களோ அவர்களையும்  மற்றும் இஸ்லாத்தில் புதினங்களை உண்டாக்குபவர் யாரோ அவரைப் பாதுகாப்பவரையும் இறைவன் சபிக்கின்றான், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். Collected by Muslim (Sahih Muslim (English Trans.), Vol.3,p.1094, No.4878 (part)

4) அனைத்துப் பித்அத் - களும் இறைவனால் நிராகரிக்கப்படுகின்றது :
عن عاءشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم : من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد (متفق عليه)
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் ஒருவர் செய்தாலும், அவரது அந்தச் செயல் இறைவனால் நிராகரிக்கப்படுகின்றது, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Collected by Bukhari and Muslim (Al-Lu’lu’wal-Marjaan )Arabic-English), Vol.2, p.83, No.1120 and (Sahih Muslim (English Trans.), Vol.3, p.931, No.4266.

5) பித்அத் - களைச் செய்து கொண்டிருப்பவர், அதிலிருந்து அவர் ஒதுங்காதவரை அவரது பாவ இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை :
عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع تدعته ( رواه اطبراني)
(மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை) யார் புகுத்தினாரோ அவரது அந்தச் செயலிலிருந்து அவர் விடுபடாதவரை அவரது பாவ இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Collected by At-Tabaraani (At-Tabaraani (Arabic) and authenticated (Hasan) by Albani in Sahih Targheeb wa Tarheeb Lil Albani, Vol.1, p.26, No.52

6) பித்அத் - களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் :
عن العرباض رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : إياكم والبدع (رواه إبن أبي عاصم في كتاب اسنة)
மக்களே! (இஸ்லாத்தில் நுழைக்கப்படுபவைகளில் இருந்து) புதினங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று, இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக இர்பாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Collected by Ibne Abi Aasim and authenticated (Hasan) in Kitab-us-Sunnah Lil Albani, Vol.1, p.20, No.34.

7)இஸ்லாத்தில் பித்அத் - களை உண்டாக்குபவர்களுக்கு, நியாயத் தீர்ப்பு நாளன்று கவ்தர் தடாகத்தில் நீர் அருந்துவதற்கு தடை செய்யப்படுவார்கள்.

8) இஸ்லாத்தில் பித்அத் - களை உண்டாக்கியவர்களை நோக்கி முஹம்மது (ஸல்) அவர்கள் மிகுந்த வெறுப்பைக் காட்டுவார்கள்.
عن سهل ابن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم : إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم بظمأْ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال  بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدرى ما أحدك فأقول سحقاً سحقاً لمن غير بعدي 
(متفق عليه)
கவ்தர் தடாகத்தின் முன்பாக நான் தான் முதல் ஆளாக நின்று கொண்டிருப்பேன். யார் யாரெல்லாம் அங்கு வருகை தருகின்றார்களோ அவர்களெல்லாம் அதில் நீர் அருந்துவார்கள்,  யாரெல்லாம் அங்கு ஒரு முறை வந்து நீர் அருந்தினார்களோ அவர்களுக்கு இனி  எப்பொழுதும் தாகம் எடுப்பதை உணரவே மாட்டார்கள். அப்பொழுது சில பேர் அங்கு வருவார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றியவர்கள் என்பதையும் நான் கண்டு கொள்வேன். அவர்களும் என்னை (நபி என) க் கண்டு கொள்வார்கள். ஆனால் அவர்கள் என்னை நெருங்கி வருவதனின்றும் (மலக்குகளால்)  தடுக்கப்படுவார்கள். அப்பொழுது நான் அவர்கள் என்னுடைய சமுதாயத்தவர்கள் அல்லவா! என்னைப் பின்பற்றியவர்கள் அல்லவா! எனக் கூறுவேன். நபி முஹம்மது (ஸல்) அவர்களே உங்களுக்குப் (மரணித்த) பின்பு இவர்கள் என்னென்ன புதினங்களை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், என்று எனக்கு அறிவித்துக் கொடுக்கப்படும். அதன் பிறகு நான் கூறுவேன், தூரப் போய் விடுங்கள் !! எனக்குப் பின்பு மார்க்கத்தில் புதினங்களைப் புகுத்தியவர்களுக்கும் எனக்கும் தூரம் இருப்பதே சிறந்தது எனக் கூறுவேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சாத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Collected by Bukhari & Muslim (Al-Lu’lu’wal-Marjaan (Arabic-English), Vol.2, p.260, No.1476 & 1477 and (Sahih Al-Bukhari (Arabic-English), Vol.8, p.381-382, No.585.

9) பித்அத்களை உருவாக்குபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபமும் இறங்குகின்றது :
عن عاصم قال قلت لأنس أحرم تسول الله صلى الله عليه وسلم المدينة قال نعم ما بين كذا إلى كذا لا يقطع شجرها من أحدث فيها حدثا فعليه لعنة الله والملإكة والناس أجمعين
(متفق عليه)
ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவைப் புனிதமிக்க நகரமாக ஆக்கியிருக்கின்றார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ஆம் எனக் கூறிவிட்டு, குறிப்பிட்ட இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை மரங்களை வெட்டக் கூடாது என்று தெரிவித்து விட்டு, மேலும் முஹம்மது (ஸல்) கூறியதாக (கீழ் உள்ள) இவற்றையும் கூறியதாக, என்னிடம் தெரிவித்தார்கள். அதாவது, இங்கு யார் யாரெல்லாம் புதினங்களைப் புகுத்துகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வும், மலக்குகளும் மற்றும் அனைத்து மனிதர்களது சாபமும் இறங்குகின்றது என்று கூறினார்கள்.
Collected by Bukhari & Muslim (Al-Lu’lu’wal-Marjaan (Arabic-English), Vol.1, p.435-436, No.865 and (Sahih Al-Bukhari (Arabic-English), Vol.9, p.304-305, No.409.

10. பித்அத் - களைப் புகுத்தியவரது பாவங்களுக்கு தண்டனை பெறுவதுடன், அவரைப் பின்பற்றியவர்களின் பாவத்திற்கும் சேர்த்தே மறுமையில் தண்டனையைப் பெற்றுக் கொள்வார் :
عن كثير بن عبد الله  بن عمر بن عوف المزني حدثني أبي عن جدى أن رسول الله صلى الله عليه وسلم قال : من أحيا سنة من سنتي فعمل بها الناس كان مثل أجر من عمل بها لا ينقص من أجورهم شليأ ومن ابتدع بدعة فعمل بها كان عليه أوزار من عمل بها لا بنقص من أوزار من  عمل بها شيأ (رواه إبن ماجه)   صحـيح
கதீர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அவ்ஃப் அல் முஸ்னி என்பவர் கூறியதாவது :  முஹம்முத (ஸல்) அவர்கள் கூறியதாக என்னுடைய பாட்டனார் என்னுடைய தந்தைக்குக் கூறியதை, என்னுடைய தந்தை எனக்கு அறிவித்ததாவது:  யார் என்னுடைய ஓர சுன்னாவை உயிர்ப்பித்து, அந்த சுன்னாவின் படி நடப்பார்களேயானால், சுன்னாவை உயிர்ப்பித்தவருக்கு அதற்கான நன்மையும், அதைப் பின்பற்றுகின்ற அனைவரது நன்மையும் அவருக்குச் சேர்த்தே வழங்கப்படும். ஆனால் அந்த சுன்னாவைப் பின்பற்றுபவர்களின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப் பட மாட்டாது. ஒருவர் புதினங்களைப் புகுத்தி, அதன் பின் அந்தப் புதினங்களின்படி நடப்பாரேயானால், அந்தப் புதினங்களைப் புகுத்திய  பாவமும், யார் யாரெல்லாம் அந்தப் புதினங்களின்படி நடந்தார்களோ அவர்களது பாவமும் சேர்த்தே, புதினங்களைப் புகுத்தியவருக்கு வழங்கப்படும். அந்தப் புதினங்களைப் பின்பற்றிய மக்களின் பாவங்கள் சிறிதளவும் குறைக்கப்பட மாட்டாது.
Collected by Ibne Maaja (Sunan Ibn Maaja (Arabic-English), Vol.1, p.118, No.209 and authenticated (Sahih) by Albani in Sahih Sunan Ibne Maaja Lil Albani, Vol.1, p.41, No.173.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم : قال : من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شـيأ  ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل اثام من تبعه لا ينقص ذلك من اثامهم شيأ  (رواه مسلم)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் நேர்வழியைப் பற்றி பிறருக்கு அறிவுறுத்துவாரேயானால், அதன்படி செயல்பட்ட அனைவரது நன்மையையும் இவருக்கு வழங்கப்படும். இவரைப் பின்பற்றியவர்களின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது. அதே போல ஒருவர் வழிகேட்டின் பக்கம் அழைப்பாரேயானால், அந்த வழிகேட்டைப் பின்பற்றிய அனைவரது பாவங்களும் இவர் மீது சுமத்தப்படும், (அதற்கான தண்டனையும் வழங்கப்படும்) அதைப் பின்பற்றியவர்களின் பாவங்களில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது.
collected by Muslim (Sahih Muslim (English Trans.), Vol.4, p.1406, No.6470

11. இஸ்லாத்தில் புதினங்களைப் புகுத்துபவர்களின் ஸலாமிற்கு அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பதில் ஸலாம் கூற மாட்டார்கள் :
عن نافع أن ابن عمر رضى الله عنهما جاءهُ رجل فقال إن فلانا يقرأُ عليك السلام فقال له إنه بلغني أنه قد أحدث فإن كان قدْ أحدث فلا تقرءْهُ مني السلام  (رواه الترمذيى)
நாபிஊ என்பவர் அறிவிக்கும் இந்த ஹதீஸில் அவர் கூறுவதாவது  நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இன்னார் உங்களுக்கு ஸலாம் தெரிவித்தார்கள் என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அவர் மார்க்கத்தில் புதினங்களை உண்டாக்குவதாக நான் கேள்விப்படுகின்றேன். அது உண்மையாக இருக்குமானால் என்னுடைய பதில் ஸலாத்தை அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டாம் , என்று என்னிடம் கூறினார்கள்.
Collected by At-Tirmidhi (Sunan At-Tirmidhi (Arabic) and reported in Mishkat-ul-Masabih (Arabic-Eng;ish), Vol.1, p.74, No.116.

12. யார் புதினங்களி (பித் அத்) - ன் படி நடக்கின்றார்களோ, அவர்கள் பின்பற்றும் புதினங்களின் அளவுக்கு அவர்களிடம் இருந்து இறைவன் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவைத் தூரமாக்கி விடுவான்.
عن حسان بن عطية رحمه الله قال ما ابتدع قوم بدعة في دينهم ألا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة ( رواه الدارمي)
ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள,;  மார்க்கத்தில் யார் புதினங்களைப் (பித்அத்களை) புகுத்துகின்றார்களோ, அவர்கள் புகுத்தி அளவு சுன்னாவை, மறுமை நாள் வரையில் அவர்களுக்கு திரும்பக் கிடைக்காமல் இறைவன் செய்து விடுவான்.
Collected by Ad-Daarmi (Sunan Ad-Daarami (Arabic) and reported in Mishkat-ul-Masabih (Arabic-English), Vol.1, p.117, No.188.

13. மற்ற பாவங்களைக் காட்டிலும் மார்க்கத்தில் ஃபித் அத் நிறைந்திருப்பதை ஷைத்தான் மிகவும் விரும்புகின்றான்.
قال سفيان الثوري رحمه الله تعالى : البدعة احب إلى إبليس منالمعصية المعصية يتاب منها والبدعة لايتاب منها (رواه في شرح السنة)
சுஃப்யான் தவ்ரி (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது , ஷைத்தானானவன் மனிதர்கள் புரியும் பாவங்களைக் காட்டிலும், மார்க்கத்தில் பித்அத்-கள் அல்லது புதினங்கள் ஏற்படுவதை அதிகம் விரும்புகின்றான். ஏனென்றால், மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரிக் கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் பித்அதி-களுக்கு பாவமன்னிப்புக் கோருவதில்லை, என்பது தான்.
(ஏனெனில் பித்அத்-ஆனது மக்களால் நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்றே செயல்படுத்தப்படுவதாலும், அவர்கள் தாங்கள் செய்வது குற்றமல்ல என்றும் நினைப்பதாலும், அதற்காக அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதில்லை)
Reported in Shar’h Sunnah (Arabic), (Published by: Maktabul Islai, Beirut, 2nd Ed, 1983), Vol.1, p.216, No.nil.

14. அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பித் அத் (புதினங்கள்) செய்தவரை பள்ளிவாசலில் இருந்தே வெளியேற்றினார்கள்.
عن ابن مسعود رضى الله عنه سمع قوما إجتمعوا فى مسجد يهللون ويصلون على النبى صلى الله عليه وسلم جهراً فقام إليهم فقال ما عهدنا ذلك فى عهده صلى الله عليه وسلم وما اراكم الا متدعين وما زال يذكر ذلك حتى اخرجهم من المسجد  (رواه أبو نعيم)
பள்ளியில் சில பேர் கூட்டாக அமர்ந்து கொண்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருப்பதாக இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கேள்விப்பட்டதைத் தொடர்ந்து , அங்கு சென்று அங்குள்ளவர்களிடம், முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் இந்த மாதிரி மக்கள் உட்கார்ந்து அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருந்ததையோ அல்லது திக்ரு செய்து கொண்டிருந்ததையோ நாங்கள் கண்டதேயில்லை. எனவே நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பது பித்அத் ஆகும். இப்னு மஸ்ஊத் அவர்கள், அந்த திக்ரு ஓதிக் கொண்டிருந்த கூட்டம் பள்ளியை விட்டு அகலும் வரை இதைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். (அபூ நுஐம் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகின்றது).

15. சுன்னாவைப் பின்பற்றுபவர்கள், இந்த பித்அத் செய்கின்ற நபர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்ற ஹதீஸ்களைப் பின்பற்ற மாட்டார்கள்.
عن (محمد) ابن سيرين قال لم يكويوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخد حديثهم وينظر إلى أهل البدع فلا يؤخد حديثهم (رواه مسلم)
முஹம்மது பின் சிரீன் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் சுன்னாவைப் பற்றி எந்தக் கேள்விகளையும் கேட்காமல், சுன்னாவைப் பின்பற்றினார்கள். பிற்காலத்தில், சுன்னாவில் ஏகப்பட்ட பித்அத்-கள் புதிதாகப் பரவ ஆரம்பித்தவுடன் மக்கள், அந்த சுன்னாவின் அறிவிப்பாளர்களின் வரிசையைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் அந்த சுன்னாவை அறிவித்தவர் சுன்னாவைப் பின்பற்றக் கூடியவரா என்பதை அறிந்து கொண்ட பின்பு தான் அவர்கள் அந்த சுன்னாவைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். அதுவல்லாமல், அந்த அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் பித்அத் அல்லது புதினங்களைப் புகுத்துபவர் அல்லது அவற்றைப் பின்பற்றுபவர் எனத் தெரிந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவார்கள். Collected by Muslim (Sahih Muslim (Arabic) in Preface, Charpter: Bayan Al-Isnad Minal Deen and in (Sahih Muslim (Urdu) in Preface, Chapter: Narrating the Chain of Hadith, Vol.1-2, p.23, No. nil, (Published by: Tableeghe Kutub Khana, Urdu Bazaar, Lahore, Pakistan, Ist Ed., 1405H.).

16. பித் அத் அல்லது புதினங்களைப் புகுத்துவது தனக்குத் தானே தீங்குவிழைவிப்பதாகும் அல்லது கடுமையாக தண்டனையை வரவழைத்துக் கொள்வதாகும்.
سئل الإمام مالك رحمه الله تعالى : يا ابا عبد الله !  من اين أحرم؟  قال : من ذى الحليفة من حيث أحرم رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد أن أحرم من المسجد من عند القبر قال : لا تفعل وإني أخشى عليك الفتنة فقال :  وأي فتنة في هذه؟  إنما هى أميال أريدها قال :  واي فتنة أعظم من أن ترى أنك سبقت فضيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم؟  إني سمعت الله بقول :  فـليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب اليم.  (رواه  في الاعتصام الشاطبى)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார், ஓ!!! அபூ அப்துல்லாஹ்!! எந்த இடத்திலிருந்து நான் என்னுடைய இஹ்ராமைக் கட்ட வேண்டும் என்றார். அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், துல் ஹுலைஃபா என்னும் இடத்தில் இருந்து தான் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களது இஹ்ராமைக் கட்டினார்கள் என்று பதில் கூறினார்கள். அந்த மனிதர், முஹம்மது (ஸல்) அவர்களது பள்ளியிலிருந்தும், அவர்களின் அடக்கத்தலத்திற்கு அருகில் இருந்தும நான் இஹ்ராம் கட்ட விரும்புகின்றேன் எனக் கூறினார். இமாம் மாலிக் அவர்கள் அவரைப் பார்த்துக் கூறினார்கள், நீ அந்த மாதிரி செய்யக் கூடாது. நீ ஒரு தீங்கில் உன்னை உட்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றாய் என நான் அஞ்சுகின்றேன் எனக் கூறினார்கள். அந்த மனிதர் மீண்டும் சில மைல்களுக்கு அப்பால் நான் கட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன் என்று கூறினார். இமாம் அவர்கள் என்ன கைசேதம் உனக்கு! முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நன்மையின் அளவு குறைவாக இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டு அவரையே நீங்கள் மிஞ்சப் பார்க்கின்றீர்களா? அல்லாஹ் கூறியவற்றிலிருந்து நான் ஞாபகப்படுத்திக் கொண்டதைச் சொல்கின்றேன், இறைவன் கூறுகின்றான், யார் என்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது கட்டளைகளுக்குப் புறம்பாக நடக்கின்றார்களோ அவர்கள் தங்களுக்கு ஏற்படவிருக்கும் தீங்கைக் குறித்துப் பயந்து கொள்ளட்டும் அல்லது கடினமான வேதனையைப் பயந்து கொள்ளட்டும்.
Collected by Al-E’tesam (Iman Shatibi’s book) for Shatibi, Al-Qawlul Asma Fee Zammul Ibtadaa Li Abi Abdul Rehman Saleem Hamed Salim, p.21-22.,.

17. மார்க்கத்தின் அடிப்படையில் தான் சுயமாக அல்லது தன்னிச்சைக்குச் செயல்படுவதிலிருந்தும் பாதுகாக்கும்படி இறைவனிடம் பாதுகாவல் தேட   வேண்டும்.
عن أبي برزة الأسلمي رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مما أخشى عليكم بعدى بطونكم وفروجكم ومضلات الأهواء   (رواه إبن أبي عاصم في كتاب السنة)  (صحيح)
முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் கேட்டதாக அபூ பஸ்ரா அஸ்லமி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். எனது மரணத்திற்குப் பின்பு கீழ்க்கண்ட விசயங்களினால் நீங்கள் வழிதவறி விடுவீர்களோ என்று நான் பயப்படுகின்றேன் எனக் கூறி விட்டு,  பேராசை, வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது மற்றும் தவறான நோக்கங்கள் ஆகியவற்றினால் நீங்கள் வழி தவறி விடுவீர்களோ என்று தான் பயப்படுகின்றேன் என்றார்கள். இவற்றில் நீங்கள் ஈடுபடாதவரை வழி தவற மாட்டீர்கள்)
Collected by Ibne Abi Aasim (Kitab-us-Sunnah, (Arabic) and reported (sahih), (Published by : Maktabul Islami, Beirut, Ist Ed., 1985), Vol. 1, p.12, No.13.

18. பித்அத்-ல் ஈடுபடுபவரது நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
عن الفضيل بن عياض رحمه الله تعالى قال :  إذا رأبت مبتدعاً فى طريق فخذ في طريق اخر ولا يرفع لصاحب بدعة إلى الله عز وجل عمل ومن أعان صاحب بدعة فقد أعان على هدم ادين .  (رواه خصائص أهل السنة)
ஃபுதைல் பின் அய்யாழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது,  உங்களை நோக்கி ஒரு பித்அத்-தைப் பின்பற்றக் கூடியவன் வந்தால், அவன் வரும் வழியை விடுத்து நீங்கள் மாற்று வழியில் சென்று விடுங்கள். பித்அத் செய்யக் கூடியவரிடம் இருந்து இறைவன் எந்த வித நல்ல அமல்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். யார் ஒருவன் ஒரு பித்அத் செய்யக் கூடியவனுக்கு உதவுகின்றானோ அவன் தன்னுடைய மார்க்கத்தையே அழிக்க உதவிக் கொண்டிருக்கின்றான் என்பதாகும்.
Reported in Qasa’is Ahle Sunnah (Araboc), Published by: Moo’assasa Qurtuba, Cairo, Egypt, p.22.

இஸ்லாத்தில் மத்ஹபுகள் ஊடுறுவியதற்கான காரணங்கள்

இஸ்லாத்திற்குள் இந்த மத்ஹபுகள் நுழைந்ததற்குக் காரணமானவர்கள் அன்றைய ஆட்சியாளர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர்கள் தங்களுக்குப் பிடித்த, தங்களது ஆட்சிக்கு ஊறுவிளைவிக்காத, தங்களது நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்கின்ற சட்டங்களைத் தேடி, அவற்றின்படி தங்களது ஆட்சிகளை அமைத்துக் கொண்டனர். இதற்கு முன் உள்ள பக்கங்களில் இவற்றை நாம் விரிவாகவே பார்த்தோம். மேலும் அவர்கள் வாழ்நத காலத்தில் அவர்களுடன் இருந்த இமாம்களின் மீது ஏற்பட்ட தனிப்பட்ட மரியாதையும் முக்கிய காரணமாக அமைந்து, அந்த இமாம்கள் சொல்வதே சட்டம், அவர்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கு என அந்த இமாம்கள் கூறுகின்றவற்றை எந்தவித மறுப்பும் இல்லாது, அப்படியே பின்பற்றத் தலைப்பட்டார்கள் என்பதே மத்ஹபுகள் பரவியதன் முக்கிய காரணங்களாகும்.

அஹ்மது பின் முஹம்மது முக்ரி என்பவர் தன்னுடைய நஃபகுத் திப் மின் குஸ்னில்-அந்தலூஸிர் ரதீப் (2-158) என்னும் நூலில் இந்த மத்ஹபுகள் முஸ்லிம்களிடத்தில் எவ்வாறு ஊடுறுவியது என்ற காரணத்தை விளக்குகின்றார்.

அதாவது, மொராக்கோ, சிரியா மற்றும் அந்தலூசியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் முதன்முதலில் இமாம் அவ்ஸாய் அவர்களைத் தான் பின்பற்றி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்கள் வாழ்ந்த நாடுகளில் ஏற்பட்ட அரசியல் நிர்ப்பந்தங்களினால் இமாம் மாலிக் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். ஏனெனில், உமையாக்களின் ஆட்சியாளர்களின் வரிசையில் மூன்றாவதாக வந்த ஹக்கம் பின் ஹிஸாம் பின் அப்துர் ரஹ்மான் அல்-தஹ்லி என்பவர் அந்தலூஸை ஆண்டு கொண்டிருந்தார். இவர் தனது நாட்டுச் சட்டங்களையும், அதன் தீர்ப்புக்களையும் மதினா மக்களைப் பின்பற்றி, அதாவது மாலிக் இமாம் அவர்களது சட்டத் தீர்ப்புக்களின் அடிப்படையைப் பின்பற்றி தீர்ப்புக்களை வழங்குமாறு, தன் நாட்டு மார்க்க அறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் உத்தர விட்டார். மன்னர் ஹக்கம் அவர்களது இந்த உத்தரவு, அரசியல் அடிப்படையின் பொருட்டும், அதன் முக்கியத்துவம் கருதித் தான் செயல்படுத்தப்பட்டது. அரசியல் உள் நோக்கம் கருதி எடுக்கப்பட்டதால், அதில் பல்வேறு முரண்பாடுகளைத் தான் அவர்கள் கண்டார்கள்.

சிலர் இந்த மத்ஹபுகள் பரவியதன் காரணத்தை இவ்வாறும் விவரிக்கின்றார்கள் : அந்தலூசியாவிலிருந்து சில மார்க்க அறிஞர்கள் மதினா சென்றார்கள். அங்கு இமாம் மாலிக் அவர்களைச் சென்று சந்தித்த பொழுது, இமாம் மாலிக் அவர்களின் கல்வித் திறன் கண்டும், மார்க்க விசயங்களில் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அறிவைக் கண்டு பிரமித்தவர்களாகத் தங்கள் நாடு திரும்பியவர்கள், தங்கள் நாடுகளில் இமாம் மாலிக் அவர்களின் புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள். இவ்வாறு மக்களிடையேயும், அறிஞர்களிடையேயும் செல்வாக்குப் பெற்ற மாலிக் இமாம் அவர்கள், இந்த செல்வாக்குடன் அவர்களது கருத்துக்களும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தன.

அடுத்து, ஒரு முறை அந்தலூசியாவில் இருந்து வந்த ஒரு நபரிடம், அந்த நாட்டு ஆட்சியாளர் பற்றி இமாம் மாலிக் அவர்கள் விசாரிக்கும் பொழுது, அந்த நபர் தன்னுடைய ஆட்சியாளரைப் பற்றி மிகவும் புகழ்ந்து, அவருடைய நடத்தை பற்றியும், அவரது குணாதிசயங்கள் பற்றியும் விவரிக்கின்றார். இதனால் இமாம் அவர்களுக்கு, அந்த ஆட்சியாளரின் மீது நன்மதிப்பு உண்டாகியது. அந்த மன்னருக்காகத் துஆச் செய்தவர்களாக இமாம் அவர்கள் அந்த நபரிடம், உங்கள் மன்னர் இந்த ஹரமை (மக்காவை) நிர்வகித்தால் மிகவும் நல்லது, அதற்காக உங்கள் மன்னருக்கு இறைவன் தன்னுடைய அருளைப் பொழியட்டும்! என்று கூறினார்கள். அந்த நேரத்தில் மக்காவை ஆண்டு கொண்டிருந்த பனூ அப்பாஸ் கூட்டத்தினர் மிகவும் மோசமான முறையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாம் அவர்களைச் சந்தித்த அந்த அந்தலூசிய (இன்றைய ஸ்பெயின்) நபர் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பியவுடன், இமாம் அவர்களைச் சந்தித்த விபரத்தையும், அவர்கள் கூறியவற்றையும் மன்னரிடம் விவரிக்கின்றார். அதன் பின் அது வரை இமாம் அவ்ஸாய் அவர்களைப் பின்பற்றிக் கொண்டிருந்த அந்த நாட்டு மக்களை, இமாம் மாலிக் அவர்களைப் பின்பற்றுமாறு  அந்த மன்னர் ஊக்குவிக்க ஆரம்பித்தார். இதனிடையில், ஏற்கனவே இமாம் அவர்களைப் பற்றியும், அவரது கல்வி ஞானத்தைப் பற்றியும் அறிந்திருந்த அந்தலூஸிய மக்கள், முற்றிலுமாக இமாம் மாலிக் அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்களிடையே மத்ஹபுகள் தனிப்பட்ட நபரின் செல்வாக்கின் காரணமாக, அவர்களுடைய கருத்துக்களும் அவர்களது செல்வாக்குப் போலவே மக்களிடம் பரவவும், வளரவும் ஆரம்பித்தன.


அல்லாஹ் மிக அறிந்தவன்

இப்னு காஸிம் அவர்களின் கருத்துக்களால் மக்கள் கவரப்பட்டு, செல்வாக்குப் பெற்று வளர ஆரம்பித்தவுடன் மொரோக்கோ நாட்டு மக்கள் இவரது கருத்துக்களின் அடிப்படையை வைத்து தீர்ப்பு வழங்குவது என்று முடிவு செய்து, அதன்படியே தங்களது மார்க்கத்தைப் பின்பற்றியும், தீர்ப்புக்களைப் பெற்றும் வந்தார்கள். மேலும் இந்த மத்ஹபுகளைப் பின்பற்றுவது என்பது அரசுகள், ஆட்சியாளர்கள், தலைவர்கள் ஆகியோர்களது சுயநலம், கௌரவம் ஆகியவற்றோடு இணைந்து காணப்பட்டதாகவும் இருந்தது. இப்னு கல்தூன் என்பவர் இந்த அரசியல்வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், தலைவர்களாலும், இந்த மத்ஹபுப் பிரிவுகள் போட்டி போட்டுக் கொண்டு எவ்வாறு வளர்க்கப்பட்டன என்பதை மிகவும் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த மத்ஹபு அபிமானிகள் தங்களைப் பல்வேறு பிரிவுகளாக எவ்வாறு இனங்காட்டிக் கொண்டார்கள் என்பதை தன்னுடைய “இகாதத்துல் லஹ்ஃபான் மின் மஸாயிதிஷ் ஷைத்தான்” என்னும் நூலில், இப்னு அல் கைய்யிம் அவர்கள் விரிவாக விளக்கி இருக்கின்றார்கள். இந்த மத்ஹபு அபிமானிகள் தங்களுடைய நடத்தையிலும். உடையிலும், மக்களிடையே வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதும், இதன் மூலம் தங்களை இந்த முஸ்லிம் உம்மத்திலிருந்து வித்தியாசமானவர்களாக எவ்வாறு காட்டிக் கொண்டார்கள் என்பதையும் - இவை யாவும் ஷைத்தானுடைய பிரித்தாளும் தந்திரங்கள் தான் என்பதையும் அவர்கள் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள். ஷைத்தான் தான் இத்தகையவர்களது மனதில், குழப்பங்களை விதைத்து அவற்றை நீரூற்றி வளர்க்க ஆரம்பிக்கின்றான். அவனது வலையில் விழுந்து விட்ட இவர்கள் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல், சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தான் தங்களுடைய வழியைப் பின்பற்றாத ஏனையோர்களைப் பார்த்து திட்டவும், பழிக்கவும் ஆரம்பித்து விடுகின்றார்கள். சூபியாக்கள் வகைகளில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நக்ஷபந்திகள், காதிரியாக்கள், சஹர்வர்தீஸ்கள், சாதுலியாக்கள், மற்றும் திஜானைஸ் இன்னும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த இவர்கள் தாங்கள் அல்லாத அனைவரும் வழிகேடர்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.  இத்தகைய மற்றும் பல்வேறு பெயர்களின் கீழ் இருக்கும் மத்ஹபுகள் யாவும் இஸ்லாத்திற்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவைகளாகும். இவற்றில் இருந்து உண்மையான முஸ்லிம் தவிர்ந்து தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுவது அவசியமாகும். இவர்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதும், அவற்றை பரப்புவதும் ஒரு உண்மையான முஸ்லிம் செய்கின்ற வேலை அல்ல. மாறாக இவர்களின் தீங்குகளில் இருந்து மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கட்டாயக் கடமையாகும். இவர்களுடைய கொள்கைகளையும், முஹம்மது (ஸல்) அவர்களுடைய கொள்கை கோட்பாடுகளையும் ஆராய்கின்ற ஒருவருக்கு, இவற்றில் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பது தெளிவாகவே புரியும். முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்களும், அறிவுறுத்தல்களும், கட்டளைகளும் மிகவும் எளிமையானவையும், இறைவன் எவற்றை அவர்களுக்கு வழங்கினானோ அவற்றை மட்டுமே நாம் அவர்களுடைய வழிகாட்டுதல்களில் காண முடியும். ஆனால், இந்த அநியாயக்கார மக்களது வழிமுறைகளோ மிகவும் குழப்பமானதாகவும், இயற்கைக்கு மாற்றமானதாகவும், அல்லாஹ்வினதும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது பொன் மொழிகளில் இருந்து மிகவும் வித்தியாசமானவைகளாகவும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
இஸ்லாத்தில் எவ்வாறு மத்ஹபுகள் ஊடுறுவின என்பது பற்றி மிகவும் ஆராய்ந்து பார்க்க விரும்புகின்றவர்கள், இமாம் இப்னு-அல்-கைய்யிம் அவர்களது, “இகாதத்துல் லஹ்ஃபான் மின் மஸாயிதிஷ் ஷைத்தான்”  என்னும் நூலின் கடைசி அத்தியாத்தில் பார்க்கவும். இதில் இப்னு ஸினா மற்றும் நஸிருத்தீன் அத் தூஸி ஆகியோர்களது கருத்துக்களையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸிஹாபுத்தீன் அப்துர் ரஹ்மான் (அபு ஷாமா) என்பவர் தன்னுடைய நூலில் (2-10), மக்கள் குர்ஆனைத் தெளிவாகவும், அவற்றை ஓத வேண்டிய முறைப்படி ஓதவும் விருப்பப்படுகின்றார்களே ஒழிய, அந்தக் குர்ஆனுடன் இன்னும் தொடர்புடையவைகளான தஃப்ஸீர் (விளக்கவுரை), அருளப்பட்ட நோக்கம், அதன் படிப்பினைகள் பற்றி ஆராயாமல், அவற்றை ஒதுக்கியே வைத்து விடுகின்றார்கள்.

அதே போல ஹதீஸுகளையும் புறந்தள்ளி விட்டு, அவற்றைச் சுயமாக முயற்சி செய்து ஆராயாமல், அரைகுறையானவர்கள் தரும் விளக்கங்களே போதும் என்று இருந்து விடுகின்றார்கள். இதற்கும் மேலாக சிலர் தங்களுடைய இமாம்கள் கூறியவைகள் பற்றி சிந்திக்காமல், அவைகள் எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் இருந்தாலும், உண்மைக்குப் புறம்பாக இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு நல்ல கல்வி அறிவுள்ள ஒருவனிடம், இந்த கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கக் கூடியவர்களின் நிலை பற்றியும், அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற கண்மூடித்தனமான உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து, அதன் முடிவைத் தெரிவிக்கும்படிக் கூறினால், அவர்கள் பின்பற்றுவது இஸ்லாம் மார்க்கம் அல்ல, அது வேறு ஒரு மார்க்கம் என்று அந்த கல்வி அறிவு பெற்றவன் கண்டிப்பாகக் கூறுவான்.

இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான் :
{ ولا تكونوا من المشركين . من الذين فرقوا دينهم وكانوا شيعا }
மேலும் இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் ஆகி விடாதீர்கள். தங்கள் மார்க்கத்தைப் (பலவாறாக) ப் பிரித்து, (பல) பிரிவினராக ஆகி விட்டனரே  அத்தைகயோரில் (நீங்கள் ஆகி விட வேண்டாம்). ( அல் குர் ஆன் - சூரா அர் ரூம் -30ஃ31-32).

இந்த மத்ஹபுகளின் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, நாங்கள் மிகப் பெரிய அறிஞர்கள் என்று கூறித் திரிகின்றார்களே அவர்கள், இந்த முழுமையான தவ்ஹீதைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் அறிஞர்களின் முன்பாக இவர்கள் ஒன்றுமில்iலாத முட்டாள்கள் ஆவார்கள்.

இதே புத்தகத்தின் தொடரில் அபு ஷாமா அவர்கள் கூறியதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம் :

ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. இன்று அவை எல்லாம் அழிந்து போய், நான்கு மத்ஹபுகள் மட்டும் தான் இன்று நடைமுறையில் உள்ளன. இன்று இந்த நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களும் தங்களுடைய மத்ஹபுகளில் பிடிப்பற்றவர்களாகவும் தான் இருக்கின்றார்கள். மிகக் குறைந்த நபர்களே இந்த மத்ஹபுகளை இப்பொழுது பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றுவதை விட்டு விட்டு, மற்ற இமாம்களைப் பின்பற்றுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பதை இந்த மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடிய மத்ஹபுவாதிகள் மிக நன்றாகவே அறிவார்கள். இவர்களது இந்தக் கருத்து முரண்பாட்டில் இவர்களை எவ்வாறு நடத்துவது, என்பதை இறைவன் ஒருவனே மிக அறிந்தவனாக இருக்கின்றான். அவனே அவர்களுக்கு நேர்வழிகாட்டித் தரப் போதுமானவன். நாம் அறிந்த இந்த உண்மையை அவர்களும் பெற்றிட அவர்களுக்காக நாம் துஆ செய்து கொள்வோமாக!! ஆமீன்!!



Previous Post Next Post