இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களது மாணவரான இமாம் அர்ரபீஃ அல் முஸனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இமாம் ஷாபிஈ அவர்களின் ரிஸாலாவை ஐம்பது வருடங்களாக திரும்பத்திரும்ப வாசித்து வருகிறேன், எப்போது அதனை வாசிக்க கையில் எடுத்தாலும் அதிலிருந்து ஏதாவது புதிய ஒரு விடயத்தை கற்றுக்கொள்ளாமல் இருந்ததில்லை. இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி ரஹிமஹுல்லாஹ் நூல் - தபகாதுஷ் ஷாபிஇய்யா - 2/99.
இமாம் இப்னுல் ஜௌஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது வாசிப்புப் பற்றி தாமே இவ்வாறு எழுதியுள்ளார்கள்:
நான் நூல்களை வாசிக்கும் போது எனக்கு கிடைக்கும் இன்பத்தைப் போல் வேறு எந்த விடயத்திலும் அந்த இன்பத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
நான் எனது வாழ்நாள் முழுவதிலும் இருபதாயிரம் வால்யூம்களை வாசித்து முடித்திருப்பேன் என்று கூறினாலும் அது மிகையாகாது. நூல் - ஸைதுல் ஹாதிர் - 557 ஆவது பக்கம்.
*தமிழில் - Shk TM Mufaris Rashadi.*