திக்ருகளை தொடராக ஓதி வரும் போது உடலில் உற்சாகமும் பலமும் நிறைந்து, பணியாளர் ஒருவர் தேவையில்லை என்ற நிலையை அது உருவாக்கிவிடுகிறது

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :  ' காலை, மாலை திக்ருகள், சந்தர்ப்ப துஆக்கள் என்பவை உடலுக்கு பலத்தையும் உற்சாகத்தையும் தருவதோடு, சிந்தனையிலும் பேச்சிலும் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துகின்றன. 

நான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களது நடை, பேச்சு, எழுத்து என்பவற்றிலுள்ள வேகம், தெளிவு, உறுதி என்பவற்றை நேரடியாக கண்டிருக்கிறேன். ஒருவர் ஒரு வாரத்தில் எழுத வேண்டியதை இமாம் அவர்கள் ஒரு நாளில் எழுதி முடித்துவிடும் அந்த வேகம் பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாக இருக்கும். யுத்த களத்திலும் இமாம் அவர்களது பலத்தையும் வேகத்தையும் கண்டு இராணுவ வீரர்களே ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.

நபிகளார் கூட தனது மகள் பாதிமா (றழி) அவர்கள் தனது உடல் களைப்பை முறையிட்டு, தனக்கு ஒரு வீட்டு பணியாளரை வழங்குமாறு வேண்டிய போது,  ஒவ்வோர் இரவும் படுக்கைக்கு செல்ல முன் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவைகள், அல்ஹம்து லில்லாஹ் 33 தடவைகள், அல்லாஹு அக்பர் 34 தடவைகள் கூறிவிட்டு உறங்குமாறும், அது பணியாளரை விட மிகச் சிறந்த பயனை தரும் எனவும் வழிகாட்டினார்கள்.

திக்ருகளை தொடராக ஓதி வரும் போது உடலில் உற்சாகமும் பலமும் நிறைந்து, பணியாளர் ஒருவர் தேவையில்லை என்ற நிலையை அது உருவாக்கிவிடுகிறது'.

நூல் : 'அல்வாபிலுஸ் ஸய்யிப்' , பக் : 185

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم